இன்னொரு அமெரிக்க வங்கி ஆல்ஃபா வும் வீழ்ந்தது : அரசாங்கம் எடுத்துக்கொண்டது

நியுயார்க் : அமெரிக்காவில் கடுமையான நிதி சிக்கலில் இருந்த ஆல்ஃபா பேங்க்கை அமெரிக்க அரசாங்கம் எடுத்துக்கொண்டது. இந்த வருடத்தில் மட்டும் அமெரிக்க அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட 16 வது பேங்க் ஆல்ஃபா பேங்க். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த ஆல்ஃபா பேங்க் அண்ட் டிரஸ்ட் மூடப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வங்கியில் செய்யப்பட்டிருக்கும் 2,50,000 டாலர் டெபாசிட் பணத்தை இன்சூர் செய்திருக்கும் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் இதனை தெரிவித்தது. அமெரிக்க அரசு எடுத்துக்கொண்டபின்பும் நாங்கள் தொடர்ந்து ஆல்ஃபா பேங்கின் டெபாசிட்களை இன்சூர் செய்வோம் என்று சொன்ன எஃப்.டி.ஐ.சி., அதிகாரிகள், இன்னொறு வங்கியான மின்னசோடாவை சேர்ந்த ஸ்டீம்ஸ் பேங்க்கும் கடும் நிதி சிக்கலில் இருக்கிறது என்றனர்

ஐஸ்லாந்திற்கு ஐ.எம்.எஃப்., 210 கோடி டாலர் உதவி

ரெய்க்ஜாவிக் : ஐஸ்லாந்திற்கு இன்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட் ( ஐ.எம்.எஃப்.) 21.1 பில்லியன் டாலர் ( 210 கோடி ) கடனுதவி அளிக்கிறது. 1976 க்குப்பின் மேலை நாடு ஒன்று ஐ.எம்.எஃப் இடம் கடன் வாங்குவது இதுவே முதல் முறை. உடனடியாக எங்களுக்கு 833 மில்லியன் டாலர் ( 83.30 கோடி ) தேவைப்படுகிறது என்று ஐஸ்லாந்து தெரிவித்திருந்தது. இந்த மாதத்தில் மட்டும் அந்த நாட்டில் உள்ள பிரபல வங்கிகள் மூன்றின் கடன் சுமையை ஐஸ்லாந்து அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விட்டது. இதன் காரணமாக அந்நாட்டில் கடும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கவே அது ஐ.எம்.எஃப் இடம் கடன் கேட்டது. ஐஸ்லாந்து பேங்க்களில் ஏற்பட்ட நிதி சிக்கல் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. ஐஸ்லாந்து வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பிரிட்டிஷ் மக்களால் அவர்களது பணத்தை எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஐஸ்லாந்தின் கரன்சியான குரோனாவின் மதிப்பும் பாதியாக குறைந்து விட்டதால் அதனால் மற்ற நாட்டு வங்கிகளுடனும் பணபரிமாற்றம் செய்து கொள்ள முடியாமல் போனது. ஐஸ்லாந்தின் பேங்கிங் சிஸ்டத்தை சரிசெய்யவே ஐ.எம்.எஃப்., சோதனை அடிப்படையில் கடன் வழங்கி இருக்கிறது என்று ஐ.எம்.எஃப்.,பின் மேலாண் இயக்குனர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் தெரிவித்தார். இது வெறுமனே பேங்கிங் சிஸ்டத்தை தற்காலிகமாக சரி செய்யவே உதவும்.மற்றபடி நாட்டின் மொத்த பொருளாதார நிலையை சரிசெய்ய அந்நாட்டு அரசாங்கம்தான் வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய வங்கிகளில் இருக்கும் 92.6 சதவீத டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்கிறது : மத்திய அமைச்சர் பவன்குமார்

புதுடில்லி : இந்திய வங்கிகளில் செய்யப்பட்டிருக்கும் 92.6 சதவீத டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார். டெபாசிட் அண்ட் இன்சூரன்ஸ் அண்ட் கிரிடிட் கியாரன்டி ஸ்கீம் படி இவைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். 2008 மார்ச் ல் எடுத்த கணக்கின்படி இந்திய வங்கிகளில் செய்யப்பட்டிருக்கும் 92.6 சதவீத டெபாசிட் பணம் இந்த திட்டப்படி பாதுகாப்பாக இருப்பதாக லோக் சபாவில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய வங்கிகளில் செய்யப்படும் சிறிய அளவிலான டெபாசிட்டை கூட, டெபாசிட் அண்ட் இன்சூரன்ஸ் அண்ட் கிரிடிட் கியாரன்டி கார்பரேஷன் பாதுகாக்கிறது என்றார் அவர். இந்தியாவில் இருக்கும் எல்லா வங்கிகளுமே அவர்களிடம் இருக்கும் மக்களின் டெபாசிட் பணத்தை கட்டாயமாக இன்சூர் செய்திருக்க வேண்டும் என்று சொன்ன அவர், இது எல்லா கமர்சியல் பேங்க், ரூரல் பேங்க், கோ – ஆப்பரேடிவ் பேங்க்குகள், தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும் என்றார்

ராம்கோ சிஸ்டத்தில் நிகர லாபம் குறைந்தது

சென்னை : சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவின் காரணமாக சென்னையை சேர்ந்த ராம்கோ சிஸ்டம் நிறுவனத்தில் நிகர லாபம் குறைந்திருக்கிறது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் அது பெற்ற நிகர லாபம் ரூ.17.51 கோடி மட்டுமே. இது, இதற்கு முந்தைய வருடத்தில் ரூ.52.28 கோடியாக இருந்தது.

பேங்க் ஆஃப் இங்கிலாந்து வட்டியை குறைக்கும் என நம்புகிறேன் : கார்டன் பிரவுன்

லண்டன் : இங்கிலாந்தும் இப்போது கடும் பொருளாதார சீர்கேட்டை சந்தித்து வருகிறது. அங்கும் கடும் நிதி நெருக்கடி. இந்நிலையை சமாளிக்க அங்கிருக்கும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து, வட்டியை குறைக்கும் என்று நம்புவதாக அந்நாட்டு பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்திருக்கிறார்.

கால்கேட் – பாமோலிவ்வின் நிகர லாபம் 16 சதவீதம் அதிகரிப்பு

மும்பை : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், இந்தியாவில் பல் பராமரிப்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் கால்கேட் – பாமோலிவ் ரூ.63.5 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய வருடத்தில் பெற்ற நிகர லாபம் ரூ.54.74 கோடியை விட 16 சதவீதம் அதிகம்.

Leave a comment