மைனாம்பதியே வெளியேறு!-சத்யம் ஊழியர்கள் ஆவேசம்

ஹைதராபாத்: உலக வங்கியிடம் சத்யம் நிறுவனம் பட்ட அவமானம் மற்றும் இன்றைய முறைகேடுகளுக்கு மூல காரணமான, சத்யம் நிறுவனத்தின் இன்றைய தலைமை நிர்வாக அதிகாரி ராம் மைனாம்பதி அந்தப் பொறுப்பிலிருந்தும், சத்யம் நிறுவனத்தை விட்டும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்’ என சத்யம் நிறுவன ஊழியர்கள் ஆவேசமாக கூறி வருகின்றனர்.

உலக வங்கியின் கணக்கு நிர்வாகத்தில் முறைகேடு செய்ததாக சத்யம் நிறுவனம் மீது சமீபத்தில் அந்த வங்கியே குற்றம் சாட்டியது. 8 ஆண்டுகள் வர்த்தகத் தடையும் விதித்தது.

இந் நிலையில், சத்யம் நிறுவன மோசடிகள் அம்பலமாகி, அதன் தலைவர் ராமலிங்க ராஜூவும் ராஜினாமா செய்துவிட்டார். தனக்கு பதில் ராம் மைனாம்பதியை தலைமை செயல் நிர்வாகியாக அவர் நியமித்துள்ளார்.

ஆனால் இந்த நியமனத்தை சத்யம் ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்

சத்யம் நிறுவனத்தில் பதவி வகிக்க எப்படி ராஜூ குடும்பத்துக்கு தார்மீக உரிமையில்லை. ராஜூவுக்கு இணையான குற்றத்தை மைனாம்பதியும் செய்துள்ளார். சொல்லப் போனால், உலக வங்கியுடன் ஒப்பந்தம் முறிந்து தடை, இந்த அளவு அவமானம் நேர்ந்ததற்கு இந் மைனாம்பதிதான் காரணம் என்று சத்யம் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேடாஸ் நிறுவனத்தை சத்யம் கையகப்படுத்த முயன்றதற்கு முழு காரணமாகத் திகழ்ந்தவர் மைனாம்பதிதானாம்.

இப்படிப்பட்டவரை தங்கள் இடைக்கால தலைமை நிர்வாகியாக ஏற்க முடியாது என ஊழியர்கள் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.

வெளிப்படையான போராட்டங்களுக்கும் தயார்படுத்தி வருகின்றனர்.

பொருளாதார பயங்கரவாதம்

சத்யம் நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது இப்போது பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது. இந்திய வணிக வரலாற்றில் இதுவே மிகப் பெரிய (பகிரங்கப் படுத்தப் பட்ட) மோசடி எனக் கருதப் படுகிறது. இந்த மோசடி குறித்து இங்கு விவாதிப்போம்.

சத்யம் நிறுவனம் 1987 இல் ராமலிங்கம் ராஜு அவர்களால் ஆந்திர மாநிலத்தில் துவங்கப் பட்டது. கடந்த இருபது வருடங்களில் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் முதல் நான்கு பெரிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் (66 நாடுகள்) சேவை செயல்பாடுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் மிக அதிக அளவில் வர்த்தகம் ஆகி வருவதும், இதன் பங்கு சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளில் முக்கிய மதிப்பீடு பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. அதே சமயத்தில், நிறுவனத்தின் தலைமை மிகக் குறைந்த அளவே பங்குகள் சொந்தமாக வைத்திருப்பதும் பெரும்பாலான பங்குகள் பொது மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களே கொண்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டிய விஷயம்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் தலைமை சத்யம் நிறுவனத்தில் உள்ள சுமார் 6000 கோடி ரூபாய் பணத்தை தலைவரின் மகனால் நடத்தப் படும் இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற சில முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் சத்யம் முதலீட்டாளர்களின் உடனடி முயற்சியால் அந்த மோசடி தடுக்கப் பட்டது. (இது குறித்து இன்னொரு பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது)

இப்போது , சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு புதிய குண்டை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை மீது மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தின் மீதும் வீசியுள்ளார். . அதாவது, நிறுவனக் கணக்கில் உள்ள சுமார் 7,000 கோடி ரூபாய் தவறாக அதாவது அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன் விவரம் கீழே.

௧. நிறுவனத்தின் ரொக்க கையிருப்பில் ரூ. 5040 கோடி குறைவாக உள்ளது.
௨. நிறுவனம் பெறப் பட வேண்டிய வட்டி கணக்கில் 376 கோடி குறைவாக உள்ளது.
௩. சத்யம் நிறுவனம் பெற்றுள்ள கடன் ரூ.1230 கோடி குறைவாக காட்டப் பட்டுள்ளது.
௪. சத்யம் நிறுவனம் கொடுத்துள்ள கடன் ரூ.490 கோடி அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது.

ஆக மொத்தம் ரூ.7136 கோடி நிறுவனத்தின் சொத்துத் தொகையில் அதிகமாக காட்டப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வித்தியாசம் பல வருடங்களாக லாபத் தொகை அதிகமாக காட்டப் பட்டதாலேயே என்று சொல்லப் பட்டாலும் அது மட்டுமே காரணமா என்பதில் மிகப் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை சுருட்ட மேற்கொண்ட முயற்சி பலிக்காத நிலையில், இது இரண்டாவது முயற்சியோ என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பே 2008 ஆம் ஆண்டு நிதி அறிக்கையின் படி சுமார் ரூ.7355 கோடி மட்டும்தான் எனும் பட்சத்தில் இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் காரணமாக, இந்த நிறுவனமே திவாலாகும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், இந்தியாவில் தவறான வணிக நடைமுறைகளால் திவாலாகும் முதல் பெரிய நிறுவனம் சத்யம் என்ற இழி பெயரை இந்த நிறுவனம் பெறும். இந்த நிறுவனத்தை தணிக்கை செய்து வந்த அமெரிக்க தணிக்கை நிறுவனமும் (Price Waterhouse), செபி போன்ற கண்காணிப்பு நிறுவனங்களும், இந்த நிறுவனத்தில் தனி இயக்குனர்களாக பணி புரிந்தவர்களும் பல வருடங்களாக நடைப் பெற்று வருவதாக சொல்லப் படும் இந்த மோசடியை ஏன் முன் கூட்டியே தடுக்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த தவறான நிகழ்வினால் கீழ்க்கண்ட இழப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

பல ஆயிரம் பேர் வேலை.
முதலீட்டாளர்களின் பணம்.
இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மை
புதிய வெளிநாட்டு முதலீடுகள்.

சத்யம் நிறுவனத்தில் மட்டுமா அல்லது வேறு சில நிறுவனங்களிலும் இது போன்ற தவறுகள் நடந்து வருகின்றனவா என்ற கேள்வியும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ள இவர்களைப் போன்ற பண வெறி பிடித்த பொருளாதார பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். இது போன்ற தவறுகள் இனியொரு முறை நடக்காத வண்ணம், வணிக நிதிமுறைகளை (Corporate Governance) வலுப் படுத்துதல், தணிக்கை விதிமுறைகளை கடுமைப் படுத்துதல் மற்றும் கண்காணிப்பு முறைகளை பலப் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார பயங்கரவாதம்

சத்யம் நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு சுமார் 7000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது இப்போது பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது. இந்திய வணிக வரலாற்றில் இதுவே மிகப் பெரிய (பகிரங்கப் படுத்தப் பட்ட) மோசடி எனக் கருதப் படுகிறது. இந்த மோசடி குறித்து இங்கு விவாதிப்போம்.

சத்யம் நிறுவனம் 1987 இல் ராமலிங்கம் ராஜு அவர்களால் ஆந்திர மாநிலத்தில் துவங்கப் பட்டது. கடந்த இருபது வருடங்களில் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் முதல் நான்கு பெரிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் உலகின் பல பகுதிகளிலும் (66 நாடுகள்) சேவை செயல்பாடுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் மிக அதிக அளவில் வர்த்தகம் ஆகி வருவதும், இதன் பங்கு சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளில் முக்கிய மதிப்பீடு பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. அதே சமயத்தில், நிறுவனத்தின் தலைமை மிகக் குறைந்த அளவே பங்குகள் சொந்தமாக வைத்திருப்பதும் பெரும்பாலான பங்குகள் பொது மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களே கொண்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டிய விஷயம்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் தலைமை சத்யம் நிறுவனத்தில் உள்ள சுமார் 6000 கோடி ரூபாய் பணத்தை தலைவரின் மகனால் நடத்தப் படும் இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற சில முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் சத்யம் முதலீட்டாளர்களின் உடனடி முயற்சியால் அந்த மோசடி தடுக்கப் பட்டது. (இது குறித்து இன்னொரு பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது)

இப்போது , சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு புதிய குண்டை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை மீது மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தின் மீதும் வீசியுள்ளார். . அதாவது, நிறுவனக் கணக்கில் உள்ள சுமார் 7,000 கோடி ரூபாய் தவறாக அதாவது அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன் விவரம் கீழே.

௧. நிறுவனத்தின் ரொக்க கையிருப்பில் ரூ. 5040 கோடி குறைவாக உள்ளது.
௨. நிறுவனம் பெறப் பட வேண்டிய வட்டி கணக்கில் 376 கோடி குறைவாக உள்ளது.
௩. சத்யம் நிறுவனம் பெற்றுள்ள கடன் ரூ.1230 கோடி குறைவாக காட்டப் பட்டுள்ளது.
௪. சத்யம் நிறுவனம் கொடுத்துள்ள கடன் ரூ.490 கோடி அதிகமாகக் காட்டப் பட்டுள்ளது.

ஆக மொத்தம் ரூ.7136 கோடி நிறுவனத்தின் சொத்துத் தொகையில் அதிகமாக காட்டப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வித்தியாசம் பல வருடங்களாக லாபத் தொகை அதிகமாக காட்டப் பட்டதாலேயே என்று சொல்லப் பட்டாலும் அது மட்டுமே காரணமா என்பதில் மிகப் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை சுருட்ட மேற்கொண்ட முயற்சி பலிக்காத நிலையில், இது இரண்டாவது முயற்சியோ என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பே 2008 ஆம் ஆண்டு நிதி அறிக்கையின் படி சுமார் ரூ.7355 கோடி மட்டும்தான் எனும் பட்சத்தில் இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் காரணமாக, இந்த நிறுவனமே திவாலாகும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், இந்தியாவில் தவறான வணிக நடைமுறைகளால் திவாலாகும் முதல் பெரிய நிறுவனம் சத்யம் என்ற இழி பெயரை இந்த நிறுவனம் பெறும். இந்த நிறுவனத்தை தணிக்கை செய்து வந்த அமெரிக்க தணிக்கை நிறுவனமும் (Price Waterhouse), செபி போன்ற கண்காணிப்பு நிறுவனங்களும், இந்த நிறுவனத்தில் தனி இயக்குனர்களாக பணி புரிந்தவர்களும் பல வருடங்களாக நடைப் பெற்று வருவதாக சொல்லப் படும் இந்த மோசடியை ஏன் முன் கூட்டியே தடுக்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த தவறான நிகழ்வினால் கீழ்க்கண்ட இழப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

பல ஆயிரம் பேர் வேலை.
முதலீட்டாளர்களின் பணம்.
இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மை
புதிய வெளிநாட்டு முதலீடுகள்.

சத்யம் நிறுவனத்தில் மட்டுமா அல்லது வேறு சில நிறுவனங்களிலும் இது போன்ற தவறுகள் நடந்து வருகின்றனவா என்ற கேள்வியும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ள இவர்களைப் போன்ற பண வெறி பிடித்த பொருளாதார பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். இது போன்ற தவறுகள் இனியொரு முறை நடக்காத வண்ணம், வணிக நிதிமுறைகளை (Corporate Governance) வலுப் படுத்துதல், தணிக்கை விதிமுறைகளை கடுமைப் படுத்துதல் மற்றும் கண்காணிப்பு முறைகளை பலப் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.post by

sandhainilavaram.blogspot.com

சத்யம்! ஒய்யாரக் கொண்டையாம்! உள்ளே ஆயிரம் ஈரும் பேனுமாம்! கிழிந்த முகமூடியின் பின்னே சிரிக்கும் முதலாளித்துவத்தின் கோரமுகம்!

சன்டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி நாடகத்தில் போஸ் சொந்தமாகத் தொழில் செய்ய ஆசைப்பட்டு ஒரு ஹோட்டலை வாங்க முயல்வார். அப்போது போஸிடம் அந்த ஹோட்டலின் உரிமையாளர் அந்த ஹோட்டல் பற்றிக் கூறும் போது,

ஹோட்டல் நல்ல லாபத்தில் இயங்குகிறது,

ஹோட்டலின் தினசரி வியாபாரம் நன்றாக இருக்கிறது,

ஹோட்டலுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது,

ஹோட்டலின் எதிர்காலம் மிக நன்றாக இருக்கும்,

இந்த ஹோட்டலை நீங்கள் கண்ணைமூடிக் கொண்டு வாங்கலாம்,

என்றெல்லாம் பலவாராக அந்த ஹோட்டலின் பெருமைகளை எடுத்துக் கூறி போசிற்கு அந்த ஹோட்டலை விற்று விடுவார். அந்த உரிமையாளர் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பிய போசும் உரிமையாளர் கேட்ட பணத்தைக் கொடுத்து ஹோட்டலை வாங்கி விடுவார்.

ஆனால் அந்த ஹோட்டலின் உண்மையான நிலையோ வேறு விதமாக இருக்கும்,

ஹோட்டலின் பேரில் அந்த உரிமையாளர் வங்கியில் கடன் பெற்று இருப்பார்,

ஹோட்டலுக்கு தேவையான மூலப் பொருட்கள் வழங்கும் கடைகளில் பெருமளவு கடன் நிலுவையில் இருக்கும்,

ஹோட்டலின் வியாபாரம் மிகக் குறைந்த அளவிலேயே நடை பெற்று வந்துஇருக்கும்,

ஹோட்டல் பெருத்த நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்து இருக்கும்,

ஹோட்டல் பற்றிய பல்வேறு கனவுகளுடன் வாங்கிய மெட்டி ஒலி போஸ் அந்த ஹோட்டலின் உண்மைநிலை அறிந்த போது – தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த போது – தனது முதலீட்டுப் பணம் மொத்தத்தையும் இழந்து விட்டதை அறிந்த போது – செய்வதறியாது குழம்பி, தனது முட்டாள்தனத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணி மனம் நொந்து, தற்கொலை செய்து கொள்ள முயல்வார் இல்லையா?

மெட்டி ஒலி போசைப் போன்ற ஒரு கையறு நிலையில்தான் சத்யம் நிறுவனப் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களும் உள்ளனர்.

இதே மோசடிதான் இப்போது சத்யம் கம்யூட்டர் நிறுவனத்திலும் நடந்து உள்ளது. இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக அறியப் பட்ட சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் உண்மைநிலை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து மறைக்கப் பட்டு வந்துள்ளது.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து பெரிய அளவிலான வருவாய் இழப்பை சந்தித்து வந்த சத்யம் நிறுவனத்தின் உண்மை நிலையை மறைத்து அந்த நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்குவதாக கணக்குக் காட்டி அந்த நிறுவனத்தின் பங்குகளை அப்பாவி முதலீட்டாளர்களின் தலையில் தொடர்ந்து கட்டி வந்து உள்ளனர்.

சத்யம் நிறுவனத்தின் உண்மை நிலையை உணர்ந்த அந்த நிறுவன உரிமையாளர் ராமலிங்க ராசு அதை மறைத்து,

சத்யம் நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்குவதாகப் பொய்யாகக் கணக்குகளை வெளியிட்டு உள்ளார்,

வந்த லாபப் பணம் எல்லாம் ரொக்கக் கையிருப்பாக உள்ளதாகவும் கணக்குகள் சொல்லப் பட்டன,

சத்யம் நிறுவனத்தின் ரொக்கக் கையிருப்பு 5040 கோடி ரூபாய் என்று அறிவிக்கப் பட்டது,

சத்யம் நிறுவனம் லாபத்தில் இயங்குவதாக வெளியிடப்பட்ட கணக்குகளை நம்பிய முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் குவித்தனர்,

முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால் சத்யம் பங்குகளின் விலை உச்சத்தில் இருந்தது,

இந்த சாதகமான சூழ்நிலையில் ராமலிங்க ராசு தன்னிடம் இருந்த சத்யம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை நல்ல விலையில் விற்று விட்டார்,

தனக்கு வேண்டிய பெரும் பண முதலைகளும் சத்யம் நிறுவனத்தில் இருந்த தங்கள் பங்குகளை விற்றுக் காசாக்கும் வரை இந்த நல்லவர் (ராமலிங்க ராசு) வாயைத் திறக்கவே இல்லை.

தன்னுடைய பெரும்பாலான பங்குகள், தன்னுடைய குடும்பத்தினரின் பங்குகள், தனக்கு வேண்டிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பங்குகள் போன்ற எல்லோருடைய பங்குகளையும் நல்ல விலையில் அப்பாவி முதலீட்டாளர்களின் தலையில் கட்டிய பின்னர்,

திடீரென ஞானோதயம் வந்தவர் போல நேற்று தனது மவுனம் கலைத்து சத்யம் நிறுவனத்தின் உண்மை நிலையை வெளியிட்டு உள்ளார்,

8000 கோடி மதிப்புள்ளதாகக் கணக்குக் காட்டப் பட்ட சத்யம் நிறுவனத்தின் உண்மையான ரொக்கக் கையிருப்பு 5040 கோடிகள் அல்ல வெறும் பூஜ்யம் தான் என்று உணமையைப் போட்டு உடைத்தார்.

அது போக சத்யம் நிறுவனத்திற்கு வாங்கிக் கடன் வேறு 1040 கோடி அளவிற்கு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த தகவல் வெளியான உடனே தாங்கள் முதலீடு செய்த நிறுவனத்தின் மோசடியை அறிந்து அதிர்ந்த மக்கள் சத்யம் நிறுவனத்தின் பங்குகளைத் தொடர்ந்து விற்க ஆரம்பித்தனர்,

சத்யம் நிறுவனத்தின் பங்குகளின் விலை கிட்டத் தட்ட 140 ரூபாயிலிருந்து சறுக்கி வெறும் முப்பது ரூபாய்க்கும் கீழே சென்றது.

ராமலிங்க ராசுவிற்கும் அவரது நண்பர்களான பணக்கார முதலாளி நண்பர்களுக்கும் அதைப் பற்றி என்ன கவலை? அந்த நிறுவனத்தின் பங்குகள் எந்த விலையில் விற்றால் என்ன? அந்த சத்யம் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படிச் சீரழிந்தால் என்ன?

இவர்கள் தான் அந்த சத்யம் நிறுவனத்தில் தங்களுக்கு இருந்த பெரும்பாலான பங்குகளை நல்ல விலையில் விற்றுப் பணமாக்கி விட்டனர் அல்லவா?

அதிர்ச்சி அடையாதீர்கள்! ராமலிங்க ராசுவிற்குத் தற்போது சத்யம் நிறுவனத்தில் இருக்கும் பங்குகள் வெறும் 5% மட்டுமே,

ராமலிங்க ராசு தனது பங்குகளை ஒரு நிறுவனத்திடம் அடமானமாக வைத்துப் பணம் கடனாகப் பெற்று இருந்தார்,

கடனைத் திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் தன்னிடம் அடமானம் வைக்கப் பட்டிருந்த சத்யம் நிறுவனப் பங்குகளை சில நாட்களுக்கு முன்னர் விற்று விட்டது,

ராமலிங்க ராசுவிற்கும் இழப்பு இல்லை, அந்த நிறுவனத்திற்கும் இழப்பு இல்லை,

ஏமாற்றப்பட்டது அப்பாவி முதலீட்டாளர்கள் தான்.

பங்கு சந்தையில் இணைந்துள்ள ஒரு நிறுவனம் வருடா வருடம் தனது கணக்குகளை முறையாக வெளியிட வேண்டும் , தனது முதலீட்டாளர்களுக்கு தணிக்கை செய்யப்பட வருடாந்திர வரவு செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும், அந்தக் கணக்குகள் சரியானவையா என்று கண்காணிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் பலவாறான விதிமுறைகள் உள்ளன.

விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் திட்டமிட்டு மக்களின் பணத்தை மிக எளிதாக மோசடி செய்துள்ளனர் இந்த முதலாளிகள், அப்பாவி மக்களும் தாங்கள் போராடி சம்பாதித்த பணத்தை எல்லாம் கொட்டிக் கொடுத்து வாங்கிய பங்குகளின் விலை இன்று பூஜ்யமானதைக் கண்டு கண்ணீருடன் நிற்கின்றனர்.

இந்தியாவில் அப்பாவி மக்களை யார் வேண்டுமானாலும் எளிதாக ஏமாற்றலாம்,
பினனர் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தியும் – மக்களிடம் மோசடி செய்து கொள்ளை அடித்த கோடிகளில் சிலவற்றை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வீசி எறிந்தும் – தண்டனைகளில் இருந்து எளிதில் தப்பி விடலாம் இல்லையா?

முகமூடி போட்டு மறைக்கப்பட்ட முதலாளித்துவத்தின் கோர முகம் ஒன்று இப்போது வெளிப்பட்டு உள்ளது, இன்னமும் வெளிப்படாமல் தகுந்த சமயத்தில் பாய்ந்து அப்பாவி முதலீட்டாளர்களை பாதாளத்தில் தள்ள காத்திருக்கும் போலிகள் எத்தனையோ?

மக்களையும் மக்களின் பணத்தையும் மக்களின் பொருளாதாரத்தையும் மக்களின் நன்மைகளையும் பாதுகாக்க வேண்டுய அரசு இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பொதுமக்களின் வாழ்வு இது போன்ற கொடிய மனம் படைத்த முதலாளிகளால் சூறையாடப் படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமோ தெரியவில்லை.

மக்களும் குறுக்கு வழிகளில் குறுகிய காலத்தில் உழைக்காமல் பெரும் பணம் ஈட்ட வேண்டும் என்று பேராசைப் பட்டு மொத்தப் பணத்தையும் இழந்து விட்டுப் பின்னர் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் நிலையும் என்று மாறுமோ தெரியவில்லை…….post by
arivili.blogspot.com

இந்தியாவின் ‘என்ரான்’: ‘சத்யம்’ என்ற ரூ.8000 கோடி பொய்!
சத்யம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராமலிங்க ராஜூ செய்துள்ள மோசடியின் அளவு ரூ.8000 கோடி!. இது அவரே, தன் கடிதத்தின் மூலம் ஒப்புக் கொண்டுள்ள தொகை.
அதேபோல ஒவ்வொரு காலாண்டிலும் கிடைத்த உண்மையான லாபத்தைச் சொல்லாமல், கூடுதலாக ஏற்றி வைத்து மீடியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவு, சத்யம் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு மேலும் மேலும் உயர்ந்தது.
இந்த விவகாரத்தி்ல் தேவையில்லாமல் சிக்கிக் கொண்டிருப்பது சதயம் நிறுவன ஊழியர்கள் தான். தங்கள் எதிர்காலம் குறித்து அதன் 53,000 ஊழியர்களும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விரைவில் விசாரணையை முடித்து, தவறு செய்தவர்களை எல்லாம் நீக்கிவிட்டு, நிறுவன நிர்வாகத்தையே மாற்றியமைத்து, இந்த நிறுவனத்தை இன்னொரு நிறுவனத்துடன் இணைப்பதே இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு என்கிறார்கள் பொருளாதாக நிபுணர்கள்.

ஆனால், சத்யத்துடன் இணையவோ அல்லது அதை வாங்கவோ வேறு நிறுவனம் தயாராக இருக்க வேண்டுமே..இன்னொன்று சத்யம் நிறுவனம் தனது அன்றாட பிஸினஸைக் கவனிக்கக் கூட பணமின்றி தடுமாறிய போது, தனிப்பட்ட முறையில் ரூ.1,236 கோடி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாகவும், அது நிர்வாகக் குழுவுக்கே தெரியாது என்றும் கூறியுள்ளார். ஆக இந்தத் தொகையை ராஜூவுக்கு திருப்பித் தர வேண்டும் சத்யம் நிறுவனம்!!

இவ்வளவு தொகை கையிருப்பில் உள்ளதாக, பொய்யான கணக்கேடுகள் தயாரித்து தனது பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், புரமோட்டர்கள், பங்குச் சந்தை என சகலரையும் ஏமாற்றி வந்திருக்கிறது சத்யம்… அதாவது இந்த நிறுவனத்தின் பெயரில் ராமலிங்க ராஜு.

பெட்டிக்கடை வியாபாரமல்ல!:

இந்த முறைகேடுகள் மற்றும் ராஜுவின் நடவடிக்கைகள் எதுவுமே எங்களுக்குத் தெரியாது என கூலாக சொல்லிவிட்டு தப்பிக்கப் பார்க்கின்றனர் சத்யம் இயக்குனர் குழு. ராஜுவும் அப்படித்தான் கடித்த்தில் கூறியுள்ளார். தன்னைத் தவிர யாருக்கும் இந்த மோசடிகள் எதிலும் துளியும் சம்பந்தமில்லை என்று கூறி மொத்தமாக அந்தக் கூட்டத்தையே இந்த சீனிலிருந்து அப்புறப்படுத்த முனைகிறார்.

எல்லாமே ஒரு தனி மனிதனுக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்லித் தப்பிக்க இது ஒன்றும் பெட்டிக் கடை வியாபாரமில்லை. இயக்குனர்கள் குழு, தலைமை நிர்வாகிகள் என பக்காவான கார்ப்பரேட் அமைப்பு இது.

தனது ஒவ்வொரு செயலுக்கும் இயக்குனர்கள் குழுவைக் கூட்டி விவாதித்து, ஒப்புதல் பெற்றுள்ளார் ராமலிங்கராஜூ. ஒவ்வொரு காலாண்டு ரிசல்ட் கூட்டத்திலும் இயக்குனர்கள் குழு கூட்டாகவே இந்தப் பொய்களை அறிவித்து வந்துள்ளது. பிறகெப்படி, ராஜுவின் மோசடிகளில் இந்தக் குழுவுக்கு பங்கில்லாமல் போகும்?

இந்த லட்சணத்தில் நிறுவனத்தின் ஒளிவு மறைவற்ற நேர்மை மற்றும் நிர்வாகத் திறமைக்காக சர்வதேச விருதுகளெல்லாம் வழங்கப்பட்டுள்ளன!.

ராஜூவின் இந்த தில்லுமுல்லுவை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது என கொதிப்புடன் கூறுகின்றனர் இந்திய பங்குச் சந்தை ஆய்வாளர்கள்.

‘சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்கள் அனைத்தின் மீதும் மிகப்பெரிய சந்தேகத்தை விதைக்க அவரது மோசடி காரணமாகிவிட்டது என்கிறார் நாஸ்கம் தலைவர் கணேஷ்.

ஒன்று ராமலிங்க ராஜு சொல்வதுதான் உண்மை என்றால், பல முன்னணி நிறுவனங்கள் லாபத்தைக் காட்டும் நடைமுறை இதுதானா? எல்லாமே சீட்டுக் கட்டு மாளிகைதானா? பெரிய அளவு முதலீடு, கையிருப்பு, லாபம் எனக் காட்டி அரசின் சலுகைகளையும், நிறுவனப் பணத்தையும் மொத்தமாக அனுபவிப்பதும், இந்தியாவின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெற்று பெரிய மனிதர்களாக உலா வர இப்படியும் வழியிருக்கிறதா…

அல்லது,

உண்மையிலேயே இவ்வளவு தொகை லாபமாகக் கிடைத்தாலும் அதை அப்படியே ‘லபக்கி’ விட்டு, இப்படியெரு கடிதம் எழுதிவிட்டால், ஏழு ஆண்டோ பத்தாண்டோ தண்டனையோடு முடிந்துவிடப் போகிறது. அதிலும் வாய்தா, ஜாமீன் என இழுத்தடிக்க எத்தனையோ ஓட்டைகள் இந்த நாட்டு கம்பெனிச் சட்டத்தில் உள்ளன. ஆனால் ரூ.8,000 கோடி ரூபாய் மிஞ்சுமல்லவா… எத்தனை ஆண்டுகள் முயன்றாலும் சம்பாதிக்க முடியாத பெரும் பணம் ஆயிற்றே…

சிக்கலில் ஆடிட்டர் நிறுவனம்:

ஆனால், இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கவனித்த பிரைஸ்வாட்டர் கூப்பர் ஆடிட்டிங் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இல்லாத பணத்தை ராஜூ கணக்கில் காட்ட இவர்களும் உதவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

செபியின் புலனாய்வுப் பிரிவும், மத்திய கம்பெனிகள் விவகாரத் துறையும், ஆந்திர மாநில அரசும் பல்வேறு கோணங்களில் விசாரணையை துவங்கியுள்ளன.

இன்னும் கிளறக் கிளற என்னென்ன பூதங்கள் கிளம்பி வரப்போகின்றனவோ தெரியவில்லை!.

பாவம் ஊழியர்கள்:

இந்தியாவில் இதுவரை எந்த நிறுவனத்திலும் நடக்காத பெரும் முறைகேடு இது. கிட்டத்தட்ட 2000ல் அமெரிக்காவின் வர்த்தக பூதம் என்ரானில் நடந்த முறைகேடுகளுக்கு சற்றும் சளைக்காத மோசடி இது என்று வர்ணிக்கிறது இந்திய தொழில் கூட்டமைப்பு.

பொய்யான கணக்கைக் காட்டிக் காட்டியே ஒரு வருடமல்ல… கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஏமாற்றி வந்திருக்கிறார் ராமலிங்க ராஜூ.

ராமலிங்க ராஜூவின் இருப்பு நிலைக் குறிப்பின்படி சத்யம் நிறுவனத்தின் கையிருப்பு ரொக்கம் ரூ.5,361 கோடிகள். ஆனால் நிஜத்தில் இவ்வளவு பணம் கையிருப்பில் இல்லையாம். ரூ. 5040 கோடிகள் செயற்கையாக கணக்கேடுகளில் உருவாக்கிக் காட்டப்பட்டுள்ளதே தவிர, நிஜத்தில் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.300 கோடிக்கும் குறைவு.

சத்யம் – ராமலிங்க ராஜு ராஜிநாமா

கடைத்தேங்காயை எடுத்து …. என்ற பதிவில் முன்கதை சுருக்கம் இருக்கு.

இன்று ராஜூ ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதம் இங்கே படிக்கலாம் இந்த கடித்ததில் பல முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார். இவருடைய குற்றம் நிருபிக்கபட்டால் இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்கிறது Timesnow.

நம் நாட்டு ஆடிட்டர்கள் மேல் இருக்கும் மதிப்பு இதனால் குறைந்துவிடும். ராஜூ தண்டிக்க பட வேண்டும் என்றால் இதற்கு உடந்தையாக இருந்த ஆடிட்டர்களும் தண்டிக்கபடவேண்டும். சத்யம் நிறுவனத்துக்கு ஆடிட்டர்களாக PricewaterhouseCoopers இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜூவின் விலகலைத் தொடர்ந்து இன்று பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனம் பங்குகள் கிடுகிடுவென வீழந்தன. எடுத்த எடுப்பிலேயே 16 சதவிகித சரிவுக்கு உள்ளாகிவிட்டன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: