தைவானில் நாய் உணவை சாப்பிட்ட 300 தெரு நாய்கள் பலி

தைபே : கடந்த சில மாதங்களுக்கு முன், சீனாவில் விற்கப்பட்ட பாக்கெட் பாலில் மெலமைன் என்ற கெமிக்கல் கலந்திருந்ததால், அதை தெரியாமல் சாப்பிட்ட ஏராளமான குழந்தைகள் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.இப்போது தைவானில் விற்கப்பட்ட நாய்களுக்கான உணவை சாப்பிட்ட 300 தெரு நாய்கள் இறந்து விட்டதாக புகார் வந்துள்ளது. இந்த உணவை தயாரித்த ஜி – தை ஃபோரேஜ் கம்பெனியிடம் இது பற்றி விசாரித்ததில், தாங்கள் 1,500 டன் சோளத்தை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ததாகவும் அதில் 50 டன் சோளத்தை நாய்களுக்கான உணவை தயாரிக்க பயன்படுத்தியதாகவும், மீதி 1,450 டன் சோளத்தை பன்றிகளுக்கான உணவு தயாரிக்க பயன்படுத்தியதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அந்த உணவின் சேம்பிளை சோதித்து பார்த்ததில் அதில் 150 பிபிபி ( பார்ட்ஸ் பெர் பில்லியன் ) அஃப்ளாடாக்ஸின் என்ற கெமிக்கல் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது மிருகங்களின் கல்லீரலை பாதிக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாய்களுக்கான உணவில் 20 பிபிபி அளவு தான் அஃப்ளாடாக்ஸின் கலந்திருக்கலாம் என்று சர்வதேச அளவில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்போது இன்னும் விற்கப்படாமல் வைத்திருக்கும் நாயகளுக்கான உணவை அழிக்கும் பணி நடந்து வருகிறது

பெங்களூர் இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்சர், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு குண்டு மிரட்டல்

பெங்களூர்: பெங்களூரில் உள்ள இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்சர், கிரேன்ஸ் சாப்ட்வேர் உள்ளிட்ட 6 முக்கிய சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இ-மெயில்கள் மூலமும், தொலைபேசிகள் மூலமும் இந்த மிரட்டல்கள் வந்துள்ளதையடுத்து அந்த நிறுவன அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த கட்டடங்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக அந்த மெயில்களில் கூறப்பட்டுள்ளது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் வந்த இந்த மிரட்டல் குறித்து அந்த நிறுவனங்கள் உடனே காவல்துறையிடம் தகவல் தெரிவித்தாலும் வெளியில் சொல்லவில்லை.

இதனால் நேற்று தான் மாலை தான் இந்த மிரட்டல் வந்த விவரமே வெளியானது.

மொத்தத்தில் இந்த 6 நிறுவனங்களுக்கும் 15க்கும் மேற்பட்ட மெயில்கள் வந்துள்ளன. மேலும் தொலைபேசியில் பேசிய ஒரு நபரும் இதையே சொல்லி மிரட்டியுள்ளான்.

இதையடுத்து பெங்களூரில் காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அதில் இந்த மிரட்டல் குறித்து விவாதிக்கப்பட்டதோடு இந்த நிறுவன கட்டடங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த நிறுவனங்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மிரட்டல் வந்துள்ள ஒரு மெயிலில், நீங்கள் யு டியூப் இணையத் தளத்தை பிளாக் செய்துவிட்டால் மட்டும் எங்கள் தாக்குதலில் இருந்து தப்பிவிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எதற்காக யு டியூப்பை இதில் இழுத்தனர் என்று தெரியவில்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: