2008ம் ஆண்டு பங்குச்சந்தை நிலவரம்: வரலாறு காணாத அளவு முதலீடுகளை புரட்டிப் போட்டது

கடந்த 2008ம் ஆண்டு பங்குச் சந்தை – வரலாறு காணாத உயர்வு – அதே சமயம் வரலாறு காணாத தாழ்வு. கச்சா எண்ணெய் – வரலாறு காணாத உயர்வு – அதே சமயம் வரலாறு காணாத தாழ்வு. உலகமெங்கும் தொடர் குண்டு வெடிப்புகள், ஏ.ஐ.ஐ., – சிட்டி வங்கி, லேமென் பிரதர்ஸ், பியர்ஸ் ஸ்டேர்ன்ஸ், கார் கம்பெனிகளான போர்டு, ஜெனரல் மோட்டார், கிரிஸ்லர் என்று பல பிரபல நிறுவனங்கள் சரிந்து, முதலீட்டாளர்களின் முதலீடுகளை பாதியாக்கிச் சென்றது. இந்திய சந்தையின் நிலை மட்டுமல்ல, ஜப்பானின் பங்குச் சந்தையும் கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. இது போல உலகின் அனைத்து பங்குச் சந்தைகளும் பெரும் அளவு கீழே இறங்கியுள்ளன. கடந்த 2008ல் பங்குச் சந்தை 53 சதவீதம் நஷ்டத்தை கொடுத்துள்ளது. உலகளவில் அதிகம் விழுந்த சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. கச்சா எண்ணெய் 50 சதவீத நஷ்டத்தை கொடுத்துள்ளது. தங்கம் லாபம், நஷ்டமில்லாமல் முடிந்துள்ளது. இது தவிர வங்கி டிபாசிட்டுகள் நிலையான வருமானத்தை கொடுத்துள்ளன.

இன்று பிறக்கும் 2009ம் ஆண்டு எப்படி இருக்கும்?

கச்சா எண்ணெய்: உலகில் அதிக கச்சா எண்ணெய் உபயோகிக்கும் நாடுகளில் முதன் மையானது அமெரிக்கா. 27 சதவீத உலக எண்ணெய் உற்பத்தியை அமெரிக்கா உபயோகிக்கிறது. அங்கு தற்போது உபயோகம் குறைந்து வருகிறது. வருங்காலத்திலும் குறையும் என எதிர்பார்க் கப்படுகிறது. மேலும், உலகளவிலும் கச்சா எண்ணெய் உபயோகம் குறைந்து வருகிறது. இதனால், விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. யாரும் எதிர்பார்க்காத அளவு உயரத் திற்கும் சென்றது, சென்ற வேகத் தில் கீழேயும் வந்தது. இருந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சரியான அளவு குறைக்கப்படவில்லை. எண்ணெய் தயாரிக்கும் நாடுகள் ஒன்று கூடி உற்பத்தியை குறைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளன. கச்சா எண்ணெய் பேரலுக்கு தற் போது 37 டாலர் வரை இருக்கிறது. அடுத்த ஆண்டு உபயோகம் கூடும் என எதிர்பார்ப்பதால் பேரல் 45 முதல் 50 டாலர் வரை செல்லலாம்.

மியூச்சுவல் பண்டுகள்: மியூச்சுவல் பண்டுகளில் பிடுங்கிய வரை லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக் கின்றனரோ என்னவோ? தொடர்ந்து முதலீடு செய்பவர்கள் கவலையடையத் தேவையில்லை. மியூச்சுவல் பண் டுகள் கைவசம் வைத்திருப்பவர்கள் ஆவரேஜ் செய்ய நல்ல நேரம் இது.

பொறுமையாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நல்ல வருமானம் தரும் இடம் மியூச்சுவல் பண்டு. மியூச்சுவல் பண்டுகளின் மதிப்பு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடும். பணவீக்கம் குறைந்து வருகிறது. இது சமீபத்தில் ஏறியிருந்த கடந்த 16 ஆண்டுகளின் அதிகபட்ச அளவான 12.91 சதவீதத்தை விட பல சதவீதம் குறைவு. கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அரசு இன்னும் பெட் ரோல், டீசல் விலையை சரியான அளவு குறைக்கவில்லை. அப்படிக் குறைக்கப்படுமானால் பணவீக்கம் இன்னும் குறையும். ஏனெனில் பல பொருட்கள், போக்குவரத்து கட்டணங்கள் அதைத் தொடர்ந்து குறைக்கப்படலாம். அது பணவீக்கத்தைக் குறைக்கும். அன்னிய முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாலும், கச்சா எண் ணெய் விலை குறைந்துள்ளதாலும், ஏற்றுமதியாளர்கள் தாங்கள் பெறும் அன்னியச் செலாவணியை மாற்றாமல் வைத்திருப்பதாலும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 2009ம் வருடம் 46லிருந்து 49க்குள் சுழலாம்.

தங்கம்: வீடு வாங்க ஓடிக் கொண் டிருந்தவர்கள் எல்லாம் தற்போது தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இது தங்கம் விலை கூடுவதற்கு ஒரு காரணம். இரண்டாவது, இப் போது இருக்கும் சூழ்நிலையில் இது ஒரு மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று பலரும் கருதுகின்றனர். தங் கம் உலகத்தின் பொதுவான நாணயமாயிற்றே. 2009ல் தங்கம் விலை கூடலாம். வீடுகளின் விலை இன்னும் குறைய வேண்டும் என்று வீடு வாங்க இருப்பவர்கள் காத்திருக்கின்றனர். வீடு வாங்குபவர்களுக்கு 2009 நிச்சயம் ஒரு பொன்னான வாய்ப்பு தான். ஏனெனில் 1998க்கு பிறகு கூட ஆரம்பித்த வீட்டு விலை, தற்போது குறைய ஆரம்பித்துள்ளது.

பங்குகள்: பங்குச் சந்தை தற்போது 9,700 புள்ளிகள் அளவில் இருக்கிறது. அதாவது, 2005ல் எந்த அளவு இருந்ததோ அந்த அளவு இருக்கிறது. சந்தையில் 21,000 புள்ளிகள் அளவில் பங்கு வாங்கியவர்களை வைத்துப் பார்க்கும் போது தற்போது வாங்குவது 50 சதவீதத்திற்கும் மேல் தள்ளுபடியில் பழுதில்லாத கம்பெனிகளை வாங்கலாம். இல்லாவிடினும் இரண்டு, மூன்று ஆண்டுகள் சந்தையில் இருப்பேன் என்று நினைத்து வாங்குபவர்கள் இந்த நிலையிலும் வாங்குவது உசிதம் தான். தற்போது இருக்கும் சூழ்நிலையில் யாரும் ஆடம்பர செலவுகள் செய்யமாட்டார்கள். ஆதலால், வங் கித்துறை, கட்டுமானத்துறை, மின் உற்பத்தி, வீட்டு உபயோகத்துறையைச் சேர்ந்த கம்பெனிகள் 2009ல் பரிணமிக்கக் கூடும். மெட்டல், ஆட் டோ மொபைல், தொழில் நுட்பத் துறை ஆகியவை பின் சீட்டுக்கு செல்லலாம்.எப்போதும் அதிக விலை விற்கும் காய்கறி கூட மலிவு விலையில் கிடைக்கும். அப்போது அந்தக் காய்கறியை நாம் வாங்கி ருசிபார்ப்பது இல்லையா அதுபோல சந்தையில் பல பங்குகள் மலிவாகக் கிடைக்கின் றன. மலிவாகக் கிடைக்கிறதே என்று வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. இது தங்கம் போல் இல்லை. தங்கம் விலை குறைந்ததும் பலர் வரிசையில் நின்று வாங்கினர். ஆனால், பங்குச் சந்தை குறைந்தால் வாங்குபவர்கள் சிலரும் காணாமல் போய்விடுவர். ஏனெனில் கடந்த ஆண்டில் எல் லாரும் குறைந்த காலத்தில் அதிகம் பங்குச் சந்தையில் சம்பாதித்தனர். அதுவே ரீபிட் ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அந்தக் காலம் திரும்பி வருமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும், பங்குச் சந்தையை நீண்ட காலம், அதாவது ஒரு தென் னம் கன்றையோ அல்லது ரப்பர் கன்றையோ நடும் போது சில ஆண்டுகளுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நட்டு பாதுகாப்போம் அல்லவா, அதுபோல பாதுகாத்தால் பங்குச் சந்தையும் நீண்டகாலத்தில் பலன் தரும். சந்தை சிறிது சிறிதாக மேலே செல்லும் என்பது உறுதி. காரணம், இந்தியாவில் பிரச்னைகள் குறைவு. மற்றபடி பெரிய சந்தை, ஆதலால் வாய்ப்புகள் அதிகம். இந்திய கம்பெனிகள் வலுவானவை. சந்தை மிகவும் மலிந்துள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிச்சயம் வருவர். வந்தால் சந்தை கூடும். சந்தை கூடினால் இந்திய முதலீட்டாளர்களும் வருவர். நான்கு ஆண்டுக்கு முன் படித்து முடித்தவுடன் ஒரு நபருக்கு இரண்டு வேலை வாய்ப்புகள் காத்து கிடந் தன. ஆதலால், மேலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. தற்போது அதற்கு தலைகீழ். வேலை வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக் குறியுடன் பலர் இருக்கின்றனர். இருக்கும் வேலை நிரந்தமானதா என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர். திறமைகளை வளர்த்துக் கொள் ளுங்கள், அது பந்தயத்தில் ஜெயிக்க உதவும். மேலும், பெரிய சம்பளம் எதிர்பார்க்காதீர்கள். உலக வர்த்தகம் 2009ல் 2 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தற்போதைய கோஷம், விலையை குறையுங்கள். விலை குறைந்தால் நிறைய மக்கள் வாங்க வருவர்; அது உற்பத்தியை கூட்டும்; தொழில் வளர்ச்சியைப் பெருக்கும்; அது கம்பெனிகளின் லாபத்தை கூட்டும்; கூடும் லாபம் சந்தையை கூட்டும். பொருளாதாரம் என்பதே சக்கரம் தானே. மார்ச் – ஏப்ரலில் தேர்தல் என்றால், அதற்காக தயாராக வேண்டிய நேரம் போதாது என்பதால் சீர்திருத்தங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை. அப்படி சீர்திருத்தங்கள் வரும்பட் சத்தில், சில்லரை விற்பனைத் துறையில் வெளிநாட்டு முதலீடுகள், வங்கி சீர்திருத்தங்கள், வெளிநாட்டு வங்கிகள் இந்திய வங்கிகளில் முதலீடு செய்யும் உச்சவரம்பை கூட்டுவது, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீடு அதிகரிப்பு செய்வது, தளர்த் தப்பட்ட ஊழியர் சட்டதிட்டங்கள்-அதாவது நிறுவனங்களை மூடுவது, ஆட்களை குறைப்பது சம்பந்தமாக அறிவிப்புகளை புதிய அரசிடம் எதிர்பார்க்கலாம். மேலும், அரசு கம்பெனிகளின் புதிய வெளியீடுகளையும் எதிர்பார்க் கலாம்.

9,647 புள்ளிகளுடன் முடிவு: ஆண் டின் கடைசி வாரம். கரடு, முரடான 2008 நம்மை விட்டு செல்கிறது. கடைசி வாரம் நல்லவிதமாகவே இருந்தது ஒரு விதமாக மகிழ்ச் சியான முடிவு என்றே கொள்ளலாம். நேற்று சந்தை மேலேயே துவங்கியது. எல்லாரும் எதிர்பார்த்தது சந்தை சென்டிமென்டாக 10,000 புள்ளிகளை 31ம் தேதி தொட்டு விடும் என்று தான். ஆனால், நடந்தது என்ன? நேற்று முழுவதும் சந்தை மிகவும் மேலும், கீழுமாகவே இருந்தது. காரணம், எதிர்பார்த்தபடி எந்த பேக்கேஜும் வரவில்லை. மேலும், லாப நோக் கில் விற்பவர்களும் இருந்தனர். ஆதலால், சந்தை சரியத் துவங்கியது. முதலீட்டாளர்களின் மனதும் சரியத் துவங்கியது. இறுதியாக மும்பை பங் குச் சந்தை 68 புள்ளிகள் குறைந்து 9,647 புள்ளிகளுடனும், தேசிய பங் குச் சந்தை 20 புள்ளிகள் குறைந்து 2,959 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

2009 எப்படி இருக்கும்?

* டிபாசிட் வட்டி விகிதம் குறையும்.

* கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.

* பங்குச் சந்தை 9,000 முதல் 12,500 புள்ளிகளுக்குள் நிலைபெற்றிருக்கும்.

* மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுக்கு உத்தரவாதம் என்ற ஸ்கீம்கள் அதிகம் வரும்.

* நிரந்தர வருமான திட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும்.

* தங்கம் அதிகம் விரும்பி வாங்கப்படும். ஆதலால், விலை கூடலாம்.

* பணவீக்கம் குறையும். 2 முதல் 3 சதவீதம் அளவில் இருக்கும்.

* வராக்கடன்கள் கூடலாம். 2009 சிறிது கரடு முரடான பாதையாகத்தான் இருக்கும். கவனித்துத் தான் பயணிக்க வேண்டும், வாழ்க்கைப் பயணம் அல்லவா?

சேதுராமன் சாத்தப்பன் by dinamalar

விமான நிறுவனங்கள் போட்டா போட்டி: ஒரு டிக்கெட் வாங்கினால் ஒன்று இலவசம்

சென்னை: உள்நாட்டு பயணிகளை கவருவதில் விமான நிறுவனங்கள் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஏர் இந்தியா நிறுவனம், ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம் என்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய பயணிகள் விமானத்துறை கடும் நெருக்கடியை சந்தித்து வந்தது. எரிபொருள் செலவு, விமான நிலைய கட்டணம் ஆகியவை அதிகரித்ததால் விமானங்களை இயக்க முடியாமல் பல நிறுவனங்கள் திண்டாடின. இதைத் தொடர்ந்து, சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய சிவில் விமான போக்குவரத்து மெல்ல சீரடைந் தது. தற்போது பயணிகளை கவர்வதற் காக அனைத்து நிறுவனங்களும் பல் வேறு சலுகைக் கட்டணங்களை அறிவித் துள்ளன. சென்னை, மும்பை, டில்லி, பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு இடையிலான கட்டணத்தை சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் அதிரடியாக குறைத்தது. இதைத் தொடர்ந்து, பல தனியார் விமான நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஆர்வம் காட்டின. இந்நிலையில், உள்நாட்டு பயணத்தின் போது உயர்வகுப்பில் பயணம் செய்வோர், இலவசமாக மற்றொரு டிக் கெட்டை பெறலாம் என்று ஏர் இந்தியா தற்போது அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஏர் இந்தியா விமானங்களில், எக்சிகியூடிவ் வகுப்பில் பயணிக்கும் ஒருவர், தன்னுடன் இலவசமாக ஒருவரை அழைத்துச் செல்லலாம். குறிப் பிட்ட சில வழித்தடங்களை தவிர மற்ற விமானங்களில் இந்த கட்டணச் சலுகை உண்டு. வரும் 7ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை இத்திட்டம் அமலில் இருக்கும்

எஸ்.எம்.எஸ்., மவுசு அதிகரிப்பு

புதுடில்லி: எஸ்.எம்.எஸ்., மவுசு அதிகரித்துள்ளதால், வாழ்த்து அட்டைகளின் தேவை குறைந்துள்ளது. விழாக்கள், பண்டிகைகள் மற்றும் முக்கிய தினங்களில், உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து கூறுவது வழக்கம். கடந்தாண்டு வரை, இதற்காக பலதரப்பட்ட டிசைன்களில் வாழ்த்து அட்டைகள் கடைகளில் விற்கப்பட்டன. தற் போது, மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்புவது எளிதாக உள்ளதால், வாழ்த்து அட்டைகளை பலரும் மறந்து விட்டனர். ‘புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் சீசனில் வாழ்த்து அட்டைகளின் விற்பனை, வழக்கத்தை விட இந்தாண்டு 20 முதல் 30 சதவீதம் குறைந் துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதல் நிகழ்வுகளால் மக்கள் மிக நுணுக்கமான வழியில் வாழ்த்து கூறுகின்றனர்’ என்று, டில்லியில் உள்ள வாழ்த்து அட்டை விற்பனையாளர் லத்தீஷ் கூறுகிறார். ‘பிறந்த நாள் மற்றும் பிரன்ட்ஷிப் கார்டுகளை தவிர, பலதரப்பட்ட நிகழ்வுகளுக்கான வாழ்த்து அட்டைகள் வாங்க, குறைவான வாடிக்கையாளர்களே வருகின்றனர்’ என்று, புகழ்பெற்ற ‘கன்னாட்’ நிறுவனத்தின் கேஷியர் கூறுகிறார். ‘இந்தாண்டு நடந்த வேதனையான சம்பவங் களால் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்ள விருப்பமில்லை’ என்று, மாணவி ஒருவர் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியால், 35 சதவீதம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ‘ஹெல்பேஜ் இந்தியா’வின் வாழ்த்து அட்டை பிரிவு மேலாளர் நந்திதா கூறுகிறார். இ-மெயில், எஸ்.எம்.எஸ்.,- எம்.எம்.எஸ்., வளர்ச்சியால் வாழ்த்து அட்டைகளின் விற்பனை, சரிவை சந்தித்துள்ளது.

பி..எஸ்.என்.எல்., ரீசார்ஜ் கூப்பன் கூடுதல் சலுகை

சென்னை: பி.எஸ்.என்.எல்., தொலைபேசி ரீசார்ஜ் கூப்பன்களுக்கு 25 சதவீதம் கூடுதல் பேசும் வசதியை அளித்துள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புத்தாண்டு, பொங்கல் விழாவை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி பிரிபெய்டு மொபைல் போன் வாடிக்கையாளர் களுக்கு ரீசார்ஜ் கூப்பன் சலுகைகளை அறிவித்துள்ளது. இதில், 1,000, 2,000, 3,000 ரூபாய் ரீசார்ஜ் கூப்பன்களுக்கான பேசும் அளவு 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5,000 ரூபாய் ரீசார்ஜ் கூப்பனுக்கு பேசும் அளவு 13 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1,000 ரூபாய்க்கு தற்போது பேசும் அளவு 900 ரூபாய்க்கு பதில் சலுகையாக 1,125 ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் கூப்பனுக்கு, 2,400லிருந்து 3,000 ரூபாயாகவும், 3,000 ரூபாய் கூப்பனுக்கு தற்போதுள்ள 3,000த்திலிருந்து 3,750 ரூபாயாகவும், 5,000 ரூபாய் கூப்பனுக்கு தற்போதுள்ள 6,700 லிருந்து 7,504 ரூபாயாகவும் பேசும் அளவு உயர்த் தப்பட்டுள்ளது. இந்த ரீசார்ஜ் கூப்பன்களுக்கான அதிகபட்ச வரையறை நாட்கள் 1,000 ரூபாய்க்கு 120 நாட்கள், 2,000 ரூபாய்க்கு 180 நாட்கள், 3,000 ரூபாய்க்கு 365 நாட்கள் மற்றும் 5,000 ரூபாய்க்கு 450 நாட்கள் ஆகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்யம் மீது நம்பிக்கை வையுங்கள் : ஊழியர்களிடம் சேர்மன் ராமலிங்க ராஜூ வேண்டுகோள்

ஹைதராபாத் : மேடாஸ் என்ற நிறுவனத்தை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வாங்க இருப்பதாக அறிவித்ததில் இருந்து, சத்யம் கடும் பிரச்னையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. சத்யத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் போர்டு மெம்பர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சத்யத்தில் பங்கு மதிப்பு வேகமாக சரிந்து விட்டது. இதனையடுத்து அங்கு நீண்ட காலமாக பணியாற்றி வந்த இன்டிபென்டன்ட் டைரக்டர் டாக்டர். மங்கலம் ஸ்ரீனிவாசன் ராஜினாமா செய்து விட்டார். அவரை தொடர்ந்து, நேற்றைக்கு முந்தின நாள் மேலும் மூன்று இன்டிபென்டன்ட் டைரக்டர்கள் விலகி விட்டார்கள். இதனால் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிலை மேலும் சிக்கலானது. இதனையடுத்து, அதன் சேர்மன் ராமலிங்க ராஜூ நேற்று அதன் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சத்யம் மீது நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த இக்கட்டான நேரத்தில் உங்களது ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது. நமது முதலீட்டாளர்களிடம் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூடிய விரைவில் நிலைமை சீராகி விடும் என்று நம்புகிறோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நேற்று அதன் இன்னொரு டைரக்டர் டி.ஆர்.பிரசாத், தான் டைரக்டர் பதவியில் இருந்து விலகப்போவதாக இல்லை என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே கம்பெனி பிரச்னையில் இருக்கும் போது நான் மேலும் அங்கு பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை என்றார். சத்யம் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வைத்திருக்கும், அதன் முக்கிய முதலீட்டு நிறுவனமான அபர்டீன் அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராஜூ மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக சொல்லியிருக்கிறது. இதனால் நேற்று சத்யத்தின் பங்கு மதிப்பு 8.33 சதவீதம் உயர்ந்திருக்கிறது

22 நாடுகளில் வெளியீடு: கோடிகளை அள்ளுது ‘கஜினி’

மும்பை: பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்து சமீபத்தில் வெளியான படம் கஜினி. அப்படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகளவில் 16 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகி உள்ளது. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின், ரிலையன்ஸ் பிக் என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்துக்கு உரிமையானது பிக் பிக்சர்ஸ். இந்த பிக் பிக்சர்ஸ் நிறுவனம், கஜினி படத்தை வெளிநாட்டில் வெளியிடும் உரிமத்தைப் பெற்று, 22 நாடுகளில் வெளியிட்டது. இது குறித்து பிக் பிக்சர்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: இப்படம் வெளியான முதல் வாரத்தில் வட அமெரிக்காவில் ஐந்து கோடியே 60 லட்ச ரூபாய் வசூலானது. அதற்கடுத்த படியாக மேற்கு ஆசியாவில் மூன்று கோடியே 68 லட்சம் ரூபாய் வசூலானது. ஆஸ்திரேலியாவில் படம் வெளியான முதல் வாரத்தில் 78 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் வசூலானது. இந்த கஜினி படத்தை, வரும் வாரங்களில் மியான்மர், உகாண்டா, மலேசியா மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நான்கு நாடுகளிலும் வெளியிட உள்ளோம். இவ்வாறு பிக் பிக்சர்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறின.

 

 

 

இஸ்ரேலில் கிளை திறக்கும் எச்.சி.எல்

ஜெருசலேம்: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல்.டெக்னாலஜிஸ் நிறுவனம், தனது கிளை ஒன்றை இஸ்ரேலில் திறக்கிறது.

இஸ்ரேலின் யோக்னீம் என்ற இடத்தில், 400 சதுர மீட்டர் பரப்பளவிலான இடத்தை எச்சிஎல் ஐந்து வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. அதன் பின்னர் மேலும் ஐந்து வருடங்களுக்கு குத்தகையை நீட்டித்துக் கொள்ளும் வசதியுடன் இந்த குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இடத்திற்கு மாதந்தோறும் 6700 அமெரிக்க டாலர்களை வாடகைப் பணமாக எச்.சி.எல். செலுத்தும்.

தற்போது எச்.சி.எல். வாடகைக்கு எடுத்துள்ள இடம் ஒரு ஹை டெக் பூங்காவாகும். இங்கு இஸ்ரேல் நாட்டு நிறுவனங்களும், பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் அலுவலகங்களை அமைத்துள்ளன

ஐடி நிறுவனங்களில் கட்டாய விடுப்பு, சம்பள குறைப்பு

சர்வதேச மந்தநிலை காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் மற்றும் செலவினங்களை குறைக்கும் முடிவில் இறங்கியுள்ளன. இவற்றில் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை குறைப்பது, கட்டாய விடுப்பு, போனஸ் குறைப்பு, நிறுவனத்தில் பல்வேறு சலுகைகள் நிறுத்தம் என்று பலவிதங்களில் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை என்றாலே பல்வேறு சலுகை, 6 மாதத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு, போனஸ், பார்ட்டி, டூர் என்று பல்வேறு  வசதிகளை இளைஞர்கள் அனுபவித்து வந்த நிலை இனி இருக்காது என்று நிலை உருவாகியுள்ளது. தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் கொடுத்த வந்த சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் ஊழியர்கள் பயன்படுத்தி வந்த போக்குவரத்து வசதிகளை குறைத்து மிக குறைந்த தூரத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே நிறுவனம் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஊழியர்களுக்கு ஆகும் செலவுகளை குறைத்து வருகின்றன. தற்போது பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாய விடுப்பில் செல்லும் படி வற்புத்துக்கின்றன. ஊழியர்களுக்கு கொடுக்கப்படிருக்கும் விடுப்பு நாட்களுக்கு குறைவாக ஊழியர் விடுப்பு எடுத்திருக்கும் பட்சத்தில் அந்த நாட்களுக்கு நிறுவனம் சம்பளம் கொடுக்க வேண்டும். அத்தகைய மீதியுள்ள நாட்களை கட்டாய விடுப்பு எடுக்கும் படி நிறுவனங்கள் தற்போது நிர்பந்தனை செய்கின்றன. 2008 ஆண்டு முடியும் நேரத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களை இரண்டு வார விடுப்பில் செல்லும் படி உத்தரவிட்டுள்ளது. இந்த விடுப்பு நாட்களுக்கு ஊதியம் கிடையாது. போனஸ், ஊதிய உயர்வு போன்றவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்கு பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளது.

 பெங்களூருவைச் சேர்ந்த அகிலண்ட் என்ற நிறுவனம் நாடு முழுவதும் 1800 ஊழியர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களையும் ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் கட்டாய விடுப்பில் செல்லும் படி உத்தரவிட்டுள்ளது. சென்னையிலும் பல ஐடி நிறுவனங்களில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 500 தாண்டியுள்ளது. இந்த பணி நீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வருகிறது. புதிதாக ப்ராஜக்ட் கிடைக்காத காரணத்தால் பல நிறுவனங்கள் ஆட்கள் சேர்ப்பதை தற்போது குறைத்துள்ளன. கட்டாய விடுப்பில் ஊழியர்கள் பலருக்கு விருப்பமில்லை என்றாலும், பலர் இதை எதிர்பார்த்து சந்தோசப்படுபவர்களும் உண்டு. குடும்பத்துடன் சில நாட்கள் சந்தோசமாக இருக்க முடியும் என்ற காரணமும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை நீக்காமல் கட்டாய விடுப்பு மூலம் சம்பள குறைப்பில் ஈடுபட்டால் ஊழியர்கள் ஏற்படும் பாதிப்பு அதிகபட்சம் குறையும் என்பதில் சந்தேகமில்லை.


 

ஏறிக்கொண்டே செல்லும் தங்கம் விலை

ஒரு புறம் பங்குச்சந்தையில் பலத்த சரிவு நிலை காணப்படுகிறது. மறுபுறம் தங்கத்தின் விலையோ கைக்கு எட்டா நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தையில் 770 புள்ளிகள் இழந்தது. இரண்டு வாரங்கள் தொடர்ந்து ஏறிய வர்த்தகம் கடந்த வாரம் இறக்கத்தில் முடிந்தது. இதனால் பங்கு வர்த்தகத்தில் தயக்கம் காட்டுபவர்கள் தங்கத்தின் பக்கம் திரும்ப தங்கத்தின் விலை கிடுகிடு வென்று உயர்ந்து கொண்டே செல்ல ஆரம்பித்துள்ளது. 
  செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ஆபரண‌த் த‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை ஒரு பவு‌ன் 10 ஆ‌யிர‌த்தை தா‌ண்டியது. த‌ங்க‌ம் சவரனு‌க்கு ரூ.128‌ம், பா‌ர் வெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.265ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. கட‌ந்‌த ‌சில மாத‌ங்களாகவே இற‌க்கு முகமாக இரு‌ந்த த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை இ‌ன்று ‌மிக‌ப்பெ‌ரிய மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள்ளது. நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ஒரு சரவ‌ன் ரூ.9,928‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌‌ன்று சவரனு‌க்கு ரூ.180 உய‌ர்‌ந்து ஒரு பவு‌ன் ரூ.10,056‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. 6 மாதங்களுக்கு பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ரூ.10000 தாண்டியுள்ளது. செப்டம்பர் மாத வாக்கில் குறைந்த பட்சமாக கிராமுக்கு ரூ.1033 வரை குறைந்து காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 தங்கம், வெள்ளி விலை விவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் –  ரூ.13,565 (நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ரூ.13,390)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் – ரூ.10,056 (ரூ.9,928)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் – ரூ.1,257 (ரூ.1,241)

வெள்‌ளி (பார்) கிலோ – ரூ.18,570 (ரூ.18,305)
வெள்‌ளி 1 கிரா‌ம் –  ரூ.19.85 (ரூ.19.6)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: