யுகே-6 லட்சம் ஊழியர் வேலைக்கு ஆபத்து

லண்டன்: பிரிட்டனில் மட்டும் 2009ம் ஆண்டு வேலை இழக்கப் போகிறவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்ற குண்டை வீசியிருக்கிறார்கள்.
புத்தாண்டு தினம் நெருங்கும் நேரத்தில், இந்த அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளவர்கள் பிரிட்டனைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு நிறுவனமான சார்ட்டட் இன்ஸ்டிட்யூட் ஆப் பர்சனல் அண்ட் டெவலப்மெண்ட் (CIPD).
இவர்களது அறிக்கைப்படி பிரிட்டனில் மட்டும் வரும் 2009ம் ஆண்டு முடிவில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை மட்டும் 3 மில்லியன் (30 லட்சம்) அளவுக்கு இருக்கும். குறிப்பாக இப்போது பிறக்கும் புத்தாண்டில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.
அதுவும் புத்தாண்டு தொடங்கி ஈஸ்டர் பண்டிகை வரையுள்ள 4 மாதங்களில் மிக அதிக அளவில் வேலை இழப்புகள் இருக்குமாம்.
 கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெருக்கடியை, வணிக நிறுவனங்களும் தனிநபர்களும் சந்திக்க வேண்டி வரும் என்கிறது.
இங்கிலாந்தின் பிரபல ஆடை விற்பனை நிறுவனமான ஆடம்ஸ் வீழ்ந்ததைத் தொடர்ந்து ஒரே நாளில் 2000 பேர் வேலை இழந்துள்ளனர்.
வரும் ஜனவரி 5ம் தேதி வுல்வொர்த்ஸ் நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் வேலை இழப்போர் மட்டும் 27,000 பேர்.
2009ல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் போனஸ் போன்ற எதுவும் தரப்படமாட்டாது என பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கவும் இல்லையாம். இருக்கிற வேலை நீடித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இந்த நிலை நிச்சயம் தனி நபர் உற்பத்தித் திறனை பாதிக்கும் என்பதால், நிறுவனங்கள் மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டும் அந்த மனித வள அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மனநிலையில் பணியாற்றும் ஊழியர்களால் உற்பத்தி பாதிக்கும். எனவே தகுந்த ஊக்கத் தொகை அளிப்பதே நல்ல பலன்களைத் தரும், என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

 2009 ம் வருடம் ரஷ்யாவில் 2.2 மில்லியன் பேர் வேலை இல்லாமல் இருப்பர்

மாஸ்கோ : ரஷ்யாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2009 ம் ஆண்டு அதிகரித்து விடும் என்று ரஷ்ய சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 2.1 மில்லியனில் இருந்து 2.2 மில்லியன் வரை வேலை இல்லாதோர் எண்ணிக்கை இருக்கும் என்று அது கணித்திருக்கிறது

பங்கு சந்தை சரிவால் 10 பிரபல நிறுவனங்கள் ஒரு வாரத்தில் இழந்தது ரூ.61,000 கோடி

மும்பை : இந்திய பங்கு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட சரிவால், 10 பிரபல நிறுவனங்கள் ரூ.61,000 கோடி வரை சந்தை மூலதனத்தை இழந்திருக்கின்றன. 6 பொதுத்துறை நிறுவனங்களும் 4 தனியார் நிறுவனங்களும் மொத்தமாக போன வாரத்தில் இழந்த சந்தை மூலதனம் ரூ. 60,872 கோடி. இந்தியாவின் மதிப்புமிக்க கம்பெனி என்று பெயர் பெற்றுள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் சந்தை மூலதனம் மட்டும் ரூ.21,600 கோடி குறைந்து ரூ.2,00,000 கோடிக்கும் கீழே சென்று விட்டது. கடந்த வெள்ளி அன்று முடிந்த பங்கு சந்தையுடன் கணக்கிட்டால், இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் என்று சொல்லப்படும் நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.11,02,154 கோடியில் இருந்து ரூ.10,41,283 கோடியாக குறைந்திருக்கிறது.முகேஷ் அம்பானியின் நிறுவன மதிப்பு ரூ. 2,12,345 கோடியில் இருந்து ரூ.1,90,745 கோடியாக குறைந்திருக்கிறது.இந்த சரிவிலிருந்து தப்பியது பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி., என்ற சுரங்க நிறுவனம் மட்டுமே. அதன் சந்தை மூலதனம் ரூ.8,278 கோடி உயர்ந்திருக்கிறது

 சத்யம்: என்ன தான் நடக்கிறது?

மும்பை: சத்யம் நிறுவனத்தின் 4 சுயேச்சையான இயக்குநர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் வரும் ஜனவரி 10ம் தேதி நடக்கும் இயக்குனர் குழு கூட்டத்தில், அந்நிறுவனப் பங்குகள் குறித்த எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக சத்யம் நிறுவனம் அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. முதல் சறுக்கல் மேடாஸ் இணைப்பு விவகாரத்தில் ஆரம்பித்தது.
இந்த நிறுவனம் சத்யம் சேர்மன் ராமலிங்க ராஜூவின் மகனால் நிர்வகிக்கப்படுகிறது. முதலீட்டாளர்களின் அனுமதியின்றி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மேடாஸை சத்யத்துடன் இணைக்க முற்பட்டார் ராஜூ. இதற்கு அனைத்து முதலீட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க, வேறு வழியின்றி பின்வாங்கினார். இதனால் சத்யம் பங்குகள் தடதடவென்று சரிந்தன.
அடுத்த அடி உலக வங்கியிடமிருந்து வந்து விழுந்தது. இந்த வங்கியின் கணக்கு வழக்குகளைத் திருடி விற்றதாக சத்யம் மீது குற்றம் சுமத்தப்பட்டதோடு, 8 ஆண்டுகள் தடை விதித்துவிட்டது உலக வங்கி. நீண்ட நாட்களாக சத்யம் இதை மறைத்து வந்தது. ஆனால் கடந்த வாரம் அதை அம்பலப்படுத்திவிட்டது பாக்ஸ் நியூஸ் நிறுவனம். இது நிறுவனத்தின் நம்பகத் தன்மை மற்றும் இமேஜை காலி செய்துவிட்டது.

 இதனால் சத்யம் தலைவர் ராமலிங்க ராஜூ பதவி விலகுவார் என்ரும் கூறப்பட்டது.

 ஆனால் நடந்ததோ வேறு…

ராஜூவால் நியமிக்கப்பட்ட சுயேச்சை இயக்குநர்கள் 4 பேர் பதவி விலகினார்கள்.

விலகல் ஏன்?:

பங்குச் சந்தை விதிகளின்படி, ஒரு சேர்மனின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பாதிக்குமேல் சுயேச்சை இயக்குநர்கள் இருக்க வேண்டும்.

சேர்மன் ராமலிங்க ராஜூ அவருக்கு கீழே இயங்கும் இயக்குநர் குழுவில் 9 பேர் இருந்தனர். 5 பேர் சுயேச்சை இயக்குநர்கள். இவர்களில் மங்களம் சீனிவாசன், ராம்மோகன் ராவ், கிருஷ்ணன் பாலேபு மற்றும் வினோத் தாம் ஆகிய 4 சுயேச்சை இயக்குநர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். மேடாஸ் நிறுவன இணைப்பு விவகாரத்தில் சேர்மன் ராமலிங்க ராஜூவுக்கு ஆதரவாக செயல்பட்டு, தோற்றுப்போனதால் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இயக்குநர்கள் குழு முதலில் சுயேச்சை இயக்குநர்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. இந்தப் பிரச்சினையை விரைவில் சத்யம் நிர்வாகம் தீர்த்துக் கொள்ளும் என்று நம்புவதாக நிறுவனங்களின் உள் விவகாரங்களைக் கவனிக்கும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் நிறுவனத்தில் இப்போது ஏற்பட்டுள்ள மாறுதல்களால், பங்குகள் விலக்கல் (dilution) மற்றும் விற்பனை தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜூ விலகல் இல்லை!:

இன்னொரு பக்கம், ராமலிங்க ராஜூவின் தலைமைக்கும் இப்போது ஆபத்தில்லை என்றே கூறப்படுகிறது. ஒருவேளை அவர் தனது பங்குகளில் ஒரு பகுதியை திரும்பக் கொடுத்துவிட்டாலும் கூட அவரே, தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்றும், முதலீட்டாளர்களும் அதையே விரும்புவதாகவும் இப்போது கூறப்படுகிறது.

10 சதவீத வாக்குரிமை கொண்ட பங்குதாரர்கள் முயன்று, ராமலிங்க ராஜூவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முடியும். அப்படி நடக்கும் பட்சத்தில், பங்குதாரர்கள் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் பொதுக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, மெஜாரிட்டியை நிரூபிக்கும் உரிமை ராஜூவுக்கு உள்ளதால், இப்போதைக்கு அந்த மாதிரி முயற்சிகள் எதுவும் நடக்காது என்றே கூறப்படுகிறது.

அல்லது, இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியும் ராஜூவை வெளியேற்ற முடியும். ஆனால் அனைத்து இயக்குநர்களுமே அவரால் நியமிக்கப்பட்டவர்கள்தான். எனவே அவர்கள் அப்படிச் செய்ய வாய்ப்பும் இல்லை. எனவே இப்போதைக்கு சத்யம் நிறுவன நிர்வாகக் குழுவில் சில பிரச்சினைகள் இருந்தாலும் ராமலிங்க ராஜூவின் பதவிக்கு ஆபத்து இல்லை என்பதே உண்மை!

இதற்கிடையே, மேடாஸ் இணைப்பு விவகாரத்தை மத்திய வர்த்தகத் துறையின் முறைகேடுகள் விசாரிப்புக் குழு (Serious Fraud Investigation Office) கையிலெடுத்துள்ளது.

மேலும் நிறுவனங்கள் பதிவு அலுவலகமும் இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

விருது பறிப்பு?:

கடந்த செப்டம்பர் மாதம், சிறந்த நிர்வாக்த் திறனுக்கான கோல்டன் பீக்காக் குளோபல் விருது இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் சிறந்த நிர்வாகத்துக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது இது. கார்பரேட் நிறுவன நிர்வாகத்துக்கான சர்வதேச கவுன்சில் வழங்கியது.

மேடாஸ் விவகாரத்தில் சத்யம் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பின்னடவு, நம்பிக்கை மோசடி என்ற பெயரில் உலக வங்கி விதித்துள்ள தடை, தற்போது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை போன்றவற்றைக் கவனித்து வரும் இந்த விருதுக் குழு, தாங்கள் வழங்கிய விருதினை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மக்கள் சக்தி
 
மக்கள் சக்தி மக்கள் சக்தி என்கிறார்களே, அது உண்மையாகவே எப்படிப்பட்டது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்திவிட்ட னர் திருவண்ணாமலை மக்கள்
திருவண்ணாமலையை அடுத்துள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலை எனப்படும் இரண்டு மலைகளையும் இரும்புத் தாது எடுப்பதற் காக வெடிவைத்து தகர்க்கும் திட்ட அனுமதிக்காக டிசம்பர் 27-ம் தேதி நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில்தான் இந்த மக்கள் சக்தி வெளிப்பட்டது
மகா தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலைக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த மலைகள் உள்ளன. இந்த இரு மலைகளிலும் 41 சதவீதம் அளவுக்கு இரும்புத் தாது இருப்பது உண்மையே. தமிழ் நாடு இரும்புத் தாது கனிமக் கழகம், தொழில்வளர்ச்சிக் கழகம், ஜே.எஸ். டபிள்யு ஸ்டீல் லிமிடெட் ஆகியன இணைந்து இந்த இரு மலைகளையும் தகர்த்து இரும்புத் தாது பெறும் திட்டத்துக்கு அரசுக்கு கருத்துரு கொடுத்துள்ளன
இந்த இரு மலைகளில் வேடியப்பன் மலையும் இப்பகுதி மக்க ளால் வழிபடப்படுகிறது. மலையில் உள்ள வேடியப்பன் கோயிலின் மூலிகைத் தீர்த்தம் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்ற நம் பிக்கை மக்களிடம் உள்ளது. தவிர, மகாதீபம் ஏற்றப்படும் திருவண் ணாமலையை ஆன்மிக உணர்வுடன் மாதம்தோறும் சுமார் 5 லட்சம் பேர் கிரிவலம் வருகின்றனர்
கிரிவலம் வருபவர்களின் வசதிக்காக மலையையொட்டி இன் னொரு சுற்றுப்பாதை அமைத்தால், கிரிவலப் பாதையின் தொலைவு குறையும், கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டபோது, “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி’ என்று அனுமதி மறுத்த வனத்துறைதான் இப்போது இந்த இரு மலைகளி லும் 325 ஹெக்டேர் பரப்பில் இரும்புத் தாது வெட்டி எடுக்கவும் 2 லட்சம் மரங்களை வெட்டவும் அனுமதிக்கிறது. இது எப்படி? இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால், ஆண்டுக்கு 10 லட்சம் டன் வீதம் 9.2 கோடி டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்படும்; மலையை தொடர்ந்து வெடிகள் வைத்து தகர்ப்பதும் வெட்டி எடுக்கப்படும் கனி மங்களைக் கொண்டு செல்ல தொடர்ந்து லாரிகள் இயக்கப்படுவதும் திருவண்ணாமலையின் சுற்றுச்சூழலை மோசமானதாக்கிவிடும் என் பது நிச்சயம்
தமிழக மக்களின் மிக முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகக் கரு தப்படும் திருவண்ணாமலை கோயிலை “பாரம்பரிய நகரமாக’ அறி விக்கச் செய்து, அந்த நகரத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளை செய்ய வேண்டிய அரசு, அந்த நகரின் சூழலை அடியோடு அழிக்கத் துணை நிற்பது எதனாலோ? திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கேட்பு கூட் டத்தில் சுமார் 800 பேர் திரண்டு ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரி வித்த நேரத்தில் அங்கே இந்த மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள்-எம்பி, எம்எல்ஏ-க்கள்- யாருமே இல்லை
திமுக பிரதிநிதிகள் கட்சிப் பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றுவிட் டார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பாமக-1, காங்கி ரஸ்-3, அதிமுக-1 எம்எல்ஏ-க்களும் இந்தக் கருத்துக்கேட்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த மாவட்ட மண்ணின் மைந்தரான உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு (தண்டராம்பட்டு), முன்னாள் அமைச் சர் கு.பிச்சாண்டி (திருவண்ணாமலை) திருவண்ணாமலை நகர்மன் றத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோருக்கு தெரியாமல் இந்தத் திட்டம் கருத்துக்கேட்பு வரை வந்துவிட்டது என்றால், யாரால் நம்ப முடியும்? அவர்கள் நினைத்திருந்தால் அரசுத் துறை அளவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா? “”இந்த மலைகளில் வெட்டப்படும் 2 லட்சம் மரங்களுக்கு ஈடாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இரு மடங்கு நிலம் வாங்கி 4 லட்சம் மரங்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் ஒப்பு தல் அளித்துள்ளன” என்று ஜே.எஸ்.டபிள்யு. ஸ்டீல் லிமிடெட் நிறுவ னத்தின் அலுவலர் சமாதானம் செய்தபோது ஒரு படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்மணி கொதிப்புடன் கேட்ட கேள்வி: “”நீங்க அம்பாச முத்திரத்துல மரம் நட்டா இங்க எனக்கு காத்தும் நெழலும் கெடைக் குமா?” அவள் ரத்தம் கொதிக்கிறது; ஏனென்றால், அவளால் வேறு நகரத் துக்கு நிலமோ, வீடோ வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விட முடியாது; தன் பிள்ளைக்கு பெரியபடிப்பு கொடுத்து, வெளியூரிலோ வெளிமாநி லத்திலோ “செட்டில்’ ஆகிவிட முடியாது; அவள் அந்த மண்ணில் தோன்றிய செடி, கொடி, மரம், விலங்குகள் போல மனுஷியாய் தோன்றி அதே மண்ணில் கலந்து கரைந்து போகப் போகிறவள் என்ப தால்தான் அந்தத் துடிப்பு.

 80% வரை கட்டண குறைப்பு ஏர் இந்தியா அதிரடி

 விமான பயணக்கட்டண குறைப்பை நீண்ட நாட்களாக தள்ளிப்போட்டு வந்த ஏர்வேஸ் நிறுவனங்கள் ஒன்றைத் தொடர்ந்து மன்றொன்று போட்டி போட்டிக்கொண்டு தற்போது கட்டணக்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 40% கட்டண குறைப்பு அறிவித்ததைத் தொடர்ந்து ஏர் இந்தியா 80% வரை கட்டண குறைப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் உள்நாட்டு விமான சேவையில் மட்டும் அதன் எக்கனாமி கிளாஸ் டிக்கெட்டில் 40% கட்டண குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று அறிவித்தது. இனி மும்பை – டில்லி விமான கட்டணம் ரூ.2,000 ஆகவும், மும்பை – கோல்கட்டாவுக்கு கட்டணம் ரூ. 4,065 ஆகவும், பெங்களுரு – மும்பை க்கு கட்டணம் சுமார் ரூ.1,220 ஆகவும் இருக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்தியாவில் 45 இடங்களுக்கு இயக்கப்படும் அவர்களது விமானத்தில் இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. டிக்கெட்டின் அடிப்படை கட்டணத்தில் தான் இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமான வரி மற்றும் சர்சார்ஜ் இல் மாற்றம் இல்லை.
 இதைத்தொடர்ந்து ஏர் இந்தியா முக்கிய மெட்ரோ வழித்தடங்களில் 80% கட்டண குறைப்பு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மிக முக்கிய 20 வழித்தடங்களில் இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இந்த கட்டண குறைப்பு செய்திருப்பதால் அதிக பயணிகளின் வருகை எதிர்பார்க்கலாம் என்று அந்நிறுவன செய்திகள் குறிப்பிடுகின்றன. ஜனவரி 1ம் தேதி கிங்ஃபிஷர் நிறுவனம் கட்டண குறைப்பு பற்றி அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை பறிப்பு இருக்காது-சம்பள உயர்வும் இருக்காது

புதுடில்லி: இந்தியாவில் சாப்ட்வேர் உட்பட எக்கச்சக்க சம்பளம் தந்து வந்த பல்வேறு தனியார் நிறு வனங்களில், நிதி நெருக்கடி காரணமாக, வேலை நீக்கம் இருக் காது; ஆனால், அடுத்த ஆண்டு சம்பள உயர்வு முடக்கப்படும்! சர்வதேச நிதி நெருக்கடியால், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்று பலதுறை நிறுவனங்கள் தவிக்கின்றன.

இதனால், இந்த நிறுவனங்களின் பணிகளை செய்து வரும் இந்திய சாப்ட்வேர் உட்பட பல் வேறு நிறுவனங்களுக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பல சாப்ட்வேர் நிறுவனங் களுக்கு, வெளிநாட்டு நிறுவனங் கள் அளித்துவந்த ‘ப்ராஜக்ட்’கள் பறிபோய் வருகின்றன; அதுபோல, பல கால் சென்டர் களுக்கு பணிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கி வைத் துள்ளன.

இதனால், இந்திய நிறுவனங் களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட் டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடந்து வருகிறது. ஆனால், இந்திய நிறுவனங்களில் இந்த அளவுக்கு ஆட்குறைப்பு இல்லை. ஆனால், சம்பள உயர்வை குறைக்கவோ, முடக்கி வைக் கவோ முடிவு செய்ய பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக, சர்வதேச சர்வே நிறுவனம்,’மெர்சர்’ சமீபத்தில் சர்வே நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்கள்: இந்திய நிறுவனங்களில் ஐந்தில் ஒரு கம்பெனி வீதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நடுத்தர அளவில் வர்த்தகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர் களை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்க தயா ரில்லை. ஆனால், அடுத்தாண்டுக் கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளன. வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களில் தான் ஆட்குறைப்பு இருக்கலாம்; ஆனால், அங்கும் முடிந்த அளவுக்கு ஊழியர்களை தக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

இந்தியாவில் 80 சதவீத சாப்ட்வேர் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ப்ராஜக்ட்கள் வராததால், இந்த நிறுவனங்கள் வருவாய் குறைந் துள்ளது.

முன்னணி நிறுவனங்களில் 83 சதவீத நிறுவனங்கள், தங்கள் வருவாய் இந்தாண்டு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே இருக்கும் என்று நினைக்கின்றன.

திறமைக்குறைவான ஊழியர் களை தக்க வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவர்களுக்கு வேறு பணிகள் அளிக்கப்படலாம். அப்படியும் முடியாதவர்களை மட்டும் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.

ஆயத்த ஆடை ஏற்றுமதி ‘டல்’

மும்பை: நகை ஏற்றுமதி தொழிலாளர்களை தொடர்ந்து, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் உள்ள இரண்டு லட்சம் பேர் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வைரம் உட்பட அரிய வகை கற்கள், நகைகள் போன்றவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப் பட்டதை அடுத்து, அந்த தொழிலில் ஈடுபட் டிருந்த ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனது. இந்த ஆபத்து, இப்போது ஆயத்த ஆடைகளுக்கும் ஏற்பட்டு வருகிறது. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் , ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த தொழிலில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் பிழைப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு தான் அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்கள் இறக்குமதி அளவை குறைத்துக்கொண்டதை அடுத்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதம் முதல், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இதனால், பல நகரங்களில் செயல்பட்டுவந்த ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர், சென்னை மற்றும் பெங்களூரு, ஜெய்ப்பூர், பிவாண்டி ஆகிய நகரங் களில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒன்றே கால் லட்சம் தொழிலாளர்கள் வேலை பறிபோகும் நிலை ஏற்படும் என்று அஞ்சுகிறோம்.

கடந்த ஜனவரி-செப்டம்பர் மாதங்கள் இடையே ஒன்பதாயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடந் துள்ளது; இதன் பின், நவம்பரில் 30 சதவீதம் ஏற்றுமதி சரிந்து விட்டது. இந்தாண்டு இறுதிக்குள் 50 சதவீதம் குறையும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை மட்டும் 4 சதவீதத்தை நிரப்பி வருகிறது. இப்போது இதில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இவ்வாறு கூட்டமைப்பு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இந்தாண்டு 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள நிலையில், அதற்கு நெருங்கவே வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது.

நகை தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் வேலையிழப்பு

சூரத் : உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட பின்னடைவால், விலையுயர்ந்த கற்கள் மற்றும் நகைத் தொழில் துறையைச் சேர்ந்த ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாக நகைத் தொழிலாளர்கள் சங்க தலைவர் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து கீதாஞ்சலி குழும மேலாண்மை இயக்குனர் மெகுல் சோக்சி கூறுகையில், ‘நாற்பது ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக தற்போது தான், வைரத் தொழில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், சமீபத்தில் ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்’ என்றார். இந்தியாவில், இரண்டு லட்சம் கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த கற்கள் மற்றும் நகைத் தொழிற்சாலைகளை நம்பி, 13 லட்சம் குடும்பங்கள் உள்ளன. மேலும், வைரங்கள், நகைகள் ஏற்றுமதி மற்றும் பட்டை தீட்டாத வைரங்கள் இறக்குமதி போன்றவை நேற்று முன்தினம் முதல் ஒரு மாத காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. இந்த இரண்டு லட்சம் கோடி மதிப்புள்ள தொழிற்சாலைகளில் இருந்து, 80 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி நடந்தது. உலகில் உற்பத்தி செய்யப்படும் வைரங்களில் 90 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது; அதில் குறிப்பாக சூரத்தில் மட்டும் 70 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டது. எனவே, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், 13 சதவீதம் பங்கு வகிக்கும் நகைகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் தொழிலுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி நிதியுதவி அளித்து ஆதரவளிக்க வேண்டும் என விலையுயர்ந்த கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி அதிகரிப்பு குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: