சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸின் சேவையை 8 வருடங்களுக்கு நிறுத்தி வைத்தது உலக வங்கி

மும்பை : சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸின் சேவையை 8 வருடங்களுக்கு உலக வங்கி நிறுத்தி வைத்திருக்கிறது. செப்டம்பர் 2008 இலிருந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் எங்களுக்காக எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் ‘ ஃபாக்ஸ் நியூஸ் ‘ வெளியிட்ட இந்த செய்தியை உலக வங்கியின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். டேட்டாக்கள் திருடப்பட்டதாக சத்யம் கம்பயூட்டர்ஸ் மீது உலக வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் உலக வங்கி ஊழியர்களுக்கு சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸசால் ஆதாயம் ஏதும் இல்லை என்றும், டாகுமென்ட்களை சரியாக ஓப்படைக்கவில்லை என்றும் உலக வங்கி குற்றஞ்சாட்டுகிறது. 2004 க்குப்பின் உலக வங்கி, வேறு எந்த கம்பெனி மீதும் இந்தமாதிரியான நடவடிக்கையை எடுத்தது இல்லை

புஷ் மீது வீசப்பட்டது போன்ற ஷூக்களுக்கு 3 லட்சம் ஆர்டர்கள்

லண்டன் : அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது பாக்தாத்தில் வீசப்பட்ட கருப்பு லெதர் ஷூக்கள் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டன. அந்த ஷூக்களை தயாரித்த துருக்கி ஷூ கம்பெனியின் ஷூக்கள் இப்போது அமோகமாக விற்பனை ஆகின்றன. வீசப்பட்ட ஷூக்களுக்கு சொந்தக்காரரான ஈராக் டி.வி.நிருபர் முந்தாஸர் அல் ஜெய்டி தற்போது சிறையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவர் வீசிய ஷூக்களை தயாரித்த ஷூ கம்பெனிக்கு சந்தையில் பெரிய அளவில் மதிப்பு கூடி விட்டது. துருக்கியை சேர்ந்த பேடன் ஷூ கம்பெனி தயாரித்த ஷூக்களை தான் ஜெய்டி புஷ் மீது வீசினார். அந்த கம்பெனி தயாரிப்பு ஷூக்கள் இப்போது உலகமெங்கிலும் அமோகமாக விற்பனை ஆகிறதாம். அவர்களால் சப்ளை செய்ய முடியாத படி ஆர்டர்கள் குவிந்து வருவதால், தயாரிப்பை அதிகரிக்கும் பொருட்டு 100 பேரை புதிதாக வேலைக்கு சேர்த்திருக்கிறார் அந்த கம்பெனியின் அதிபர் ரமஸான் பேடன். புஷ் மீது வீசப்பட்ட மாடல் 271 ஷூக்களுக்கு இப்போது அவரிடம் 3,00,000 ஆர்டர்கள் இருக்கின்றனவாம். இது வழக்கமான அவர்களின் விற்பனையை விட நான்கு மடங்கு அதிகம் என்கிறார் பேடன். பெரும்பாலான ஆர்டர்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அருகில் இருக்கும் முஸ்லிம் நாடுகளில் இருந்துதான் வந்திருக்கின்றன. ஈராக்கில் இருந்து மட்டும் 1,20,000 ஷூக்களுக்கு ஆர்டர் வந்திருக்கிறது. அமெரிக்க ஷூ கம்பெனி ஒன்று 18,000 ஷூக்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது. பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று, ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிற்கும் தங்களையே டிஸ்டிரிபூட்டராக நியமிக்குமாறு கேட்டு வருகிறது. 1999 ம் வருடத்தில் இருந்து சந்தையில் விற்பனைக்கு இருக்கும் பேடன் ஷூக்கள், துருக்கியில் 28 பவுண்டுக்கு ( சுமார் ரூ.2,016 ) விற்கப்படுகிறது. சிரியா, எகிப்து, ஈரான் போன்ற நாடுகளிலும் பிரபலமாகி இருக்கும் அந்த குறிப்பிட்ட மாடல் ஷூக்களுக்கு ‘ புஷ் ஷூ ‘ அல்லது ‘ பை – பை – புஷ் ‘ என்று பெயர் வைக்கலாமா என்றும் அந்த கம்பெனி யோசித்து வருகிறது. நாங்கள் பல வருடங்களாக ஷூ பிசினஸில் இருந்து வந்தாலும் இந்த அளவு விற்பனையை நாங்கள் ஒருபோதும் பார்த்தது இல்லை. எனவே புஷ்ஷூக்குத்றதான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார் ரமஸான் பேடன்.

டொயோட்டா காரின் விற்பனை 22 சதவீதம் குறைந்தது

டோக்கியோ : நவம்பர் மாதத்தில் சர்வதேச அளவில் டொயோட்டா காரின் விற்பனை பெருமளவு சரிந்திருக்கிறது. 71 ஆண்டுகளுக்குப்பின் இந்த நிதி ஆண்டில், முதன் முறையாக அது நஷ்டத்தை சந்திக்கும் என்ற தகவல் வெளிவந்த ஓரிரு நாளில், அதன் விற்பனை பெரிய அளவில் சரிந்திருக்கிற செய்தி வெளிவந்திருக்கிறது. நவம்பர் மாதத்தில் உலக அளவில் டொயோட்டா விற்ற கார்களின் எண்ணிக்கை 6,18,000 மட்டுமே. இது கடந்த நவம்பர் மாத விற்பனையில் இருந்து 21.8 சதவீதம் குறைவு. திங்கட்கிழமைதான், டொயோட்டா நிறுவனம் இந்த வருடத்தில் 1.7 பில்லியன் டாலர் நஷ்டமடையும் என்ற கணிப்பு வெளியானது. அமெரிக்காவில் இதன் விற்பனை, அதன் போட்டி நிறுவனங்களை ஓப்பிட்டால் அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் மொத்தத்தில் அதன் விற்பனை குறைந்து வருகிறது. ஜப்பான் கரன்சியான யென்னின் மதிப்பு அதிகரித்ததும் டொயோட்டாவின் நஷ்டத்தை அதிகரிக்கிறது

இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை

மும்பை : பங்கு சந்தை இன்றும் சரிவில்தான் முடிந்திருக்கிறது. அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டது இன்றைய சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், ஆட்டோ, ரியல் எஸ்டேட், டெலிகாம், மெட்டல், டெக்னாலஜி, கேப்பிடல் குட்ஸ் மற்றும் பவர் கம்பெனி பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. இன்று, இந்த மாதத்தின் பில்களை செட்டில் செய்ய வேண்டிய கடைசி நாளானதால், இன்றைய சந்தை சரிவில்தான் முடியும் என்பது எதிர்பார்த்ததுதான் என்கிறார்கள் நிபுணர்கள். இருந்தாலும் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பேங்க்களின் பங்குகள் உயர்ந்துதான் இருந்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 118.03 புள்ளிகள் ( 1.22 சதவீதம் ) குறைந்து 9,568.72 புள்ளிகளில் முடிந்திருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 51.80 புள்ளிகள் ( 1.74 சதவீதம் ) குறைந்து 2,916.85 புள்ளிகளில் முடிந்திருந்தது

தாஜ் ஹோட்டல்ஸ் சென்னையில் திறந்த புதிய ஹோட்டல் ‘ தாஜ் மவுன்ட் ரோடு ‘

சென்னை : தாஜ் ஹோட்டல்ஸ் ரிசாட்ஸ் அண்ட் பேலசஸ் நிறுவனம், சென்னையில் ‘ தாஜ் மவுன்ட் ரோடு ‘ என்ற புதிய நட்சத்திர ஹோட்டலை திறந்திருக்கிறது. சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியான மவுன்ட் ரோட்டுக்கு ( அண்ணா சாலை ) மிக அருகில் இருக்கும் கிளப் ஹவுஸ் ரோட்டில் இந்த புதிய ஹோட்டல் அமைந்திருக்கிறது. இப்போதுள்ள நவீன டிசைனில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய ஹோட்டலில் பாரம்பரிய விருந்தோம்பலுடன் கூடிய சேவை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முக்கியமாக சென்னை வரும் தொழில் அதிபர்களை கவரும் விதத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது. 45,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஹோட்டல், 7 மாடிகளை கொண்டதாகவும், புளு கலர் பெயின்ட் அடிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. ஒரு பிரசிடென்சியல் சூட், 16 சூட்கள் சேர்ந்து மொத்தம் 220 ரூம்கள் இந்த ஹோட்டலில் இருக்கின்றன. சர்வதேச அளவிலான பெரிய கம்பெனிகள் இப்போது சென்னையில் இருப்பதாலும், பல புதிய கம்பெனிகள் இங்கு வர இருப்பதாலும், சென்னையில் இருந்து உலகின் எந்த நாட்டுக்கும் எளிதாக பயணம் செய்ய வசதியாக விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாலும் நாங்கள் சென்னையை ஒரு முக்கிய நகரமாக கருதுகிறோம் என்றார் தாஜ் பிரீமியம் ஹோட்டல்ஸின் சி.இ.ஓ., ஜாம்ஷெட் தாபோ.

சிட்டி டெக்னாலஜியை 127 மில்லியன் டாலருக்கு வாங்குகிறது விப்ரோ

பெங்களுரு : சிட்டி குரூப்பை சேர்ந்த ஐ.டி., நிறுவனமான சிட்டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட்டை ( சி.டி.எஸ்.எல் ), விப்ரோ டெக்னாலஜிஸ் வாங்குகிறது. ரூ.615.8 கோடி யை ( 127 மில்லியன் டாலர் ) முழுவதும் பணமாக கொடுத்து அந்த நிறுவனத்தை விப்ரோ வாங்குவதாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிட்டி பேங்க்கிற்கு , அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அண்ட் மெய்ன்டனன்ஸ் ( ஏ.டி.எம்.) சர்வீசஸையும் ஆறு வருடங்களுக்கு விப்ரோ டெக்னாலஜிஸ் வழங்கும். இதன் மதிப்பு 50 கோடி டாலர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சி.டி.எஸ்.எல்., நிறுவனத்தில் 1,650 பேர் பணியாற்றுகிறார்கள். இதன் சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களில் 400 ஒப்பந்தக்காரர்களும் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் 32 சென்டர்களில் இருக்கும் 200 வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் சர்வீஸ் செய்கிறார்கள். சி.டி.எஸ்.எல்., நிறுவனத்தில் பணியாற்றும் எல்லா ஊழியர்களையும் விப்ரோ அப்படியே எடுத்துக்கொள்ள இருப்பதாக அதன் ஜாயின்ட் சி.இ.ஓ., கிரிஷ் பானர்ஜி தெரிவித்தார். 

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் 

சென்னை: அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதை எதிர்த்து இன்சூரன்ஸ் ஊழியர்கள், நாடு முழுவதும் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மத்திய அரசு, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை 26 லிருந்து 49 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இதை, அப்போது கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தன. இதனால், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் விலகின. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.,- ஜி.ஐ.சி.,யைச் சேர்ந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் துறையைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடின. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., நிறுவனத்திலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் அந்தந்த பகுதி முக்கிய அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சாலை எல்.ஐ.சி., முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

இத்தாலிய சமையலறை சாதனங்கள் அறிமுகம் 

பெங்களூரு: ஸ்டோவ்கிராப்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘கில்மா ஸ்பாக்னோ குசின்’ என்ற பெயரில் இத்தாலிய தயாரிப்பு சமையலறை சாதனங்களை, சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல் படும் ஸ்டோவ்கிராப்ட் நிறுவனம், ஏற்கனவே பீஜியான் மற்றும் கில்மா ஆகிய பெயர்களில், பல நவீன சமையலறை சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கில்மா, ஸ்பாக்னல் குசின் என்ற இத்தாலிய நிறுவனத்துடன் இணைந்து, பல புதிய சமையலறை சாதனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. கில்மா ஸ்பாக்னல் குசின் அறிமுகப் படுத்தியுள்ள ஓவன்கள், டிஷ்வாஷர்கள் உட்பட பல சாதனங்கள், சிறந்த இத்தாலிய வடிவமைப்புடன், இந்திய சமையலறை தேவைகளை பூர்த்தி செய் யும் வகையில் உள்ளன. இவை அனைத்தும் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டவை. இந்த சாதனங்களின் விலை 1.99 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை உள்ளன. 

பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது 

மும்பை : சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வரும் இந்த வேளையிலும் கூட, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று பிரபல பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலுவானது. எனவே அது, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கும் சுரேஷ் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் ஒருபோதும் வீழ்ச்சியை சந்தித்ததில்லை. மற்ற ஆசிய நாடுகள் வீழ்ச்சியை நோக்கி சென்றபோதும் அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கவில்லை என்றார். தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை, நமது வலிமையை சோதிக்கக்கூடியதாக இருக்கிறது என்றார் அவர்

71 ஆண்டுகளுக்குப்பின் நஷ்டத்தை சந்திக்கும் டொயோட்டா 

நகோயா ( ஜப்பான் ) : உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார் கம்பெனியான ஜப்பானின் டொயோட்டா, 71 ஆண்டுகளுக்குப்பின் இப்போது முதல் முறையாக பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கார்களுக்கான டிமாண்ட் குறைந்து, அதனால் விற்பனை பெருமளவில் பாதித்திருப்பதால், அது முதல் முறையாக ‘ ஆப்பரேட்டிங் லாஸ் ‘ஐ சந்திக்கிறது. இந்த வருடத்தில் 600 பில்லியன் யென் லாபம் சம்பாதிக்கும் என்று முதலில் சொல்லப்பட்டதை மீறி, இப்போது 150 பில்லியன் யென் ( 1.7 பில்லியன் டாலர் ) நஷ்டம் அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. டொயோட்டாவின் தலைவர் கட்சுவாகி வாடனாபே இதுகுறித்து பேசியபோது, நாங்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறோம் என்றார். அவசர கால உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் நாங்கள், இன்றும் பாதாளத்திற்கு செல்லாமல் இருக்கிறோம் என்றும் சொன்னார். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் டோயோட்டாவை காப்பாற்றும் நடவடிக்கையாக வாடனாபே, ஒப்பந்த ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கியிருக்கிறார். தயாரிப்பை குறைத்திருக்கிறார். <உயர் அதிகாரிகளின் சம்பளத்தை குறைத்திருக்கிறார்.கம்பெனி போர்டு மெம்பர்களின் போனஸை கூட நிறுத்திவிட்டார். கார்களுக்கான டிமாண்ட் குறைந்து போனதும் யென் ( ஜப்பான் கரன்சி ) னின் மதிப்பு உயர்ந்து விட்டதும்தான் இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். இதற்கு முன் டொயோட்டோவுக்கு 1938 மார்ச்சில்தான் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. 

 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்பவர்களால் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் : டெலிகாம் கமிஷன் 

புதுடில்லி : 3 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தவர்களால் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் என்று டெலிகாம் கமிஷன் மெம்பர் ( பைனான்ஸ் ) அசோக் தெரிவித்துள்ளார். 3 ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ( மூன்றாம் தலைமுறை ரேடியோ அலைவரிசை ) ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. 3 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தவர்களால் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியுமா என்ற குழப்பம் இருந்து வருகிறது. இதை தெளிவு படுத்திய டெலிகாம் கமிஷன் மெம்பர் அசோக், அவர்களாலும் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் என்றார். ஆனால் ஏற்கனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் கொடுத்த பின்னரே இவர்களுக்கு கொடுக்கப்படும் என்றார்

 தாய்லாந்தின் ஏற்றுமதி குறைந்துள்ளது

பாங்காக் : சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக, நவம்பர் மாதத்தில் தாய்லாந்தின் ஏற்றுமதி குறைந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் இப்போதுதான் அங்கு ஏற்றுமதியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்

பயோடார் இன்டஸ்டிரீஸில் மார்கன் ஸ்டான்லி ரூ.182 கோடி முதலீடு

மும்பை : விளக்கெண்ணெய் தயாரிப்பாளரான பயோடார் இன்டஸ்டிரீஸில் மார்கன் ஸ்டான்லி நிதி நிறுவனம் ரூ.182 கோடி முதலீடு செய்கிறது. இந்தியாவில் அது முதலீடு செய்யும் முதல் நிறுவனம் இது என்று சொல்லப்படுகிறது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: