அமெரிக்காவின் பிரபல கார் கம்பெனி கிரைஸ்லர் ஒரு மாதத்திற்கு மூடப்படுகிறது

டெட்ராய்ட் : கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய கார் கம்பெனியான கிரைஸ்லர், ஒரு மாதத்திற்கு அதன் தொழிற்சாலைகளை மூடுகிறது. அவர்களுக்கு இருக்கும் 30 தொழிற்சாலைகளும் டிசம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து ஒரு மாதத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்று கிரைஸ்லர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் கிரைஸ்லர் கம்பெனியை காப்பாற்ற அமெரிக்க அரசு ஏதாவது செய்யும்வரை அவர்கள் கொஞ்சம் பணத்தையாவது மிச்சப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். கிரைஸ்லருக்கு இருக்கும் 14 பில்லியன் டாலர் ( சுமார் 65,800 கோடி ரூபாய் ) கடனை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம் செனட் சபையில் தோல்வி அடைந்ததை அடுத்து, அந்த கம்பெனி மூடப்படலாம் என்றும் அதன் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் எதிர்பார்த்தார்கள். ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் சரிந்துள்ளதால் கார்கள் விற்பனை குறைந்து டீலர்களிடம் ஏராளமான கார்கள் ஸ்டாக் இருக்கிறது. எனவே தயாரிப்பை குறைக்கலாம் என்று ஏற்கனவே அவர்கள் நினைக்கத்தான் செய்தார்கள். இப்போது அமெரிக்காவில் கார் லோன் வாங்குவது அவ்வளவு எளிதான வேலை இல்லை என்பதால், கார்களை விற்பதற்கும் கார் கம்பெனிகள் கஷ்டப்படுகின்றன. ஒரு மாதத்திற்கு மூடப்படும் கிரைஸ்லர் தொழிற்சாலைகள், மீண்டும் ஜனவரி 19ம் தேதி திறக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு வேளை திறக்கும் தேதி இன்னும் தள்ளிப்போகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பணவீக்கம் 6.84 சதவீதமாக குறைந்தது

டிசம்பர் 18,2008,13:23

 
 
 

புதுடில்லி : டிசம்பர் 6ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.84 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம், இதற்கு முந்தைய வாரத்தில் 8 சதவீதமாக இருந்தது. ராய்ட்டர் செய்தி நிறுவனம் எடுத்த கணிப்பில் கூட பணவீக்கம் 7.49 சதவீதமாக இருக்கும் என்றுதான் சொல்லியிருந்தது. இப்போது அதைவிடவும் குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.84 சதவீதமாகத்தான் இருந்தது

சேன்யோவின் பங்குகளை பானாசோனிக்கிற்கு விற்க கோல்ட்மேன் சாக்ஸ் முடிவு

டோக்கியோ : பிரபல ஜப்பான் எலக்டக்ரானிக் நிறுவனமான சேன்யோவில் கோல்ட்மேல் சாக்ஸ் நிதி வங்கிக்கு இருக்கும் பங்குகளை, இன்னொரு பிரபல நிறுவனமான பானாசோனிக் வாங்கிக்கொள்வதற்கு கோல்ட்மேன் சாக்ஸ் ஒத்துக்கொண்டிருக்கிறது. 6.5 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொள்ள முன்வந்த இந்த ஒப்பந்தத்திற்கு இப்போது தடை எதுவும் இல்லை. ஏற்கனவே குறிப்பிட்ட விலையை விட இப்போது பங்கு ஒன்றுக்கு கூடுதலாக ஒரு யென் கொடுக்கவும் பானாசோனிக் ஒத்துக்கொண்டிருக்கிறது, இதன்படி, பங்கு ஒன்றிற்கு 131 யென்னை பானாசோனிக் கொடுக்கும். மொபைல் போன், கம்ப்யூட்டர், மியூசிக் பிளேயர் போன்றவைகளில் பயன்படுத்தும் ரீசார்ஜபிள் பேட்டரி தயாரிப்பில் சேன்யோ முன்னணியில் இருக்கிறது. எனவே அந்த கம்பெனியை வாங்கி விட வேண்டும் என்று ரொம்ப நாளாகவே பானாசோனிக்கிற்கு ஆசை இருக்கிறது. முதலில் சேன்யோவின் பங்குகளை வைத்திருக்கும் மூன்று முக்கிய முதலீட்டாளர்களிடம் பங்கு ஒன்றுக்கு 120 யென் கொடுக்க முன்வந்தது. பின்னர் பங்கு ஒன்றுக்கு 130 யென் கொடுப்பதாக சொல்லியது. இப்போது அதைவிடவும் ஒரு யென் க;ட்டி 131 யென் கொடுப்பதாக சொல்லியிருக்கிறது. சான்யோவின் முக்கிய மூன்று பங்குதாரர்களில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் அதன் பங்குகளை விற்க முன்வந்து விட்டது. இன்னும் இரண்டு முக்கிய பங்குதாரர்களான சுமிடோமோ மிட்சு பேங்கிங் மற்றும் தெய்வா செக்யூரிட்டீஸ் ஆகியவை, அவைகளின் பங்குகளை விற்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களும் அவர்களது பங்குகளை பானாசோனிக்கிற்கு விற்று விட்டால், சேன்யோ நிறுவனமே பானாசோனிக்கிடம் வந்து விடும்.

முன்னேறியது பங்கு சந்தை : சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது

மும்பை : எதிர்பார்த்ததற்கும் மேலாக பணவீக்கம் குறைந்திருந்தது, ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்கும் என்ற எதிர்பார்த்தது போன்ற காரணங்களால் இன்றைய பங்கு சந்தை நல்ல முன்னேற்றம் அடைந்தது. இன்ஃரா, டெக்னாலஜி, ஆயில் கம்பெனி பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டதால் சென்செக்ஸ் மேலே சென்றது. 24 வர்த்தக நாட்களுக்குப்பின் இன்று சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் மேலே சென்று முடிந்திருக்கிறது. நிப்டியும் 3,050 புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளது. டிசம்பர் 6ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.84 சதவீதமாக இருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் 8 சதவீதமாக இருந்த பணவீக்கம் இப்போது 6.84 சதவீதமாக குறைந்திருந்தது யாரும் எதிர்பார்க்காதது. கோடக் செக்யூரிட்டீஸின் தலைமை பொருளாதார நிபுணர் மிருதுல் சாகர், அடுத்த மார்ச் மாதத்தில் பணவீக்கம் 3 சதவீதமாக குறைந்து விடும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் அது 3 – 4 சதவீதமாகத்தான் இருக்கும் என்றும் சொல்கிறார். ஜனவரியில் ரிசர்வ் வங்கி, ரிபோ ரேட்டை ஒரு சதவீதமும், ரிவர்ஸ் ரிபோ ரேட்டை 0.25 – 0.5 சதவீதமும் குறைக்கும் என்று யெஸ் பேங்க் கருதுகிறது. றஇன்றைய வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 361.14 புள்ளிகள் ( 3.72 சதவீதம் ) உயர்ந்து 10,076.43 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 106.40 புள்ளிகள் ( 3.60 சதவீதம் ) உயர்ந்து 3,060.75 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடி: சிக்கனத்துக்கு மாறும் பிரிட்டிஷ் ராஜ குடும்பம்

லண்டன்: உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும், நிலையில் இங்கிலாந்து ராஜ குடும்பம் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. மீதமாகும் சாப்பாட்டைக் கூட வீணடிக்காமல் சாப்பிட வேண்டும் என சமையல்காரர்களுக்கு ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளாராம்.

உலகப் பொருளாதாரம் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத், அரண்மனையில் சிக்கண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

ஆடம்பர செலவுகளைக் குறைக்க வேண்டும் என அரச குடும்பத்தினருக்கு அவர் உத்தரவு போட்டுள்ளாராம்.

கிறிஸ்துமஸ் விருந்தின்போது சாப்பாடு மீதமானால் அதை தூக்கி வீசாமல் இல்லாதவர்களுக்குக் கொடுக்குமாறும், முடிந்தால் நீங்களே சாப்பிடுங்கள் என்றும் சமையல்காரர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.


மேலும், தனது பேரன்கள் வில்லியம், ஹாரி ஆகியோரிடம், கிறிஸ்துமஸ் விடுமுறையை ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக கொண்டாடுமாறும் உத்தரவிட்டுள்ளாராம்.
 

மேலும் கிறிஸ்துமஸுக்காக வாங்கவுள்ள பட்டாசுகளுக்கும் கிடுக்கிப்பிடி போட்டுள்ளாராம் ராணி.

அதிக பணத்தை பட்டாசுகளுக்காக செலவழிக்கக் கூடாது என்பது அரச குடும்பத்தினருக்கு அவர் போட்டுள்ள உத்தரவு.

அரச குடும்பத்தினரின் கொண்டாட்டங்களுக்காக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு தயாரித்து கொடுக்கும் நிறுவனமான டாம் ஸ்மித்திடம், விலை மலிவான பட்டாசுகளைத் தயாரித்துக் கொடுக்குமாறு அரண்மனையிலிருந்து உத்தரவு போயுள்ளதாம்.

இங்கிலாந்தும், பிற உலக நாடுகளும் பொருளாதார சிக்கலில் இருக்கும்போது அரச குடும்பத்தினர் மட்டும் ஆடம்பரமாக இருப்பதை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று கருதுகிறாராம் ராணி. அதனால்தான் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவுகள்.

இதுதவிர அரச குடும்பத்தினர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில், 50 பவுன்டுக்கு மேல் கிப்ட் பொருட்களை வாங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார் ராணி எலிசபெத்.

கிப்ட் பொருட்களை வைத்துக் கொடுக்கும் அட்டைப் பெட்டிகளை அப்படியே தூக்கி எறியாமல் தேவைப்படுபவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

ராணியின் இந்த உத்தரவுகள் இங்கிலாந்து மக்களிடையே இருவிதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. ராணி இப்படி உத்தரவு போட்டாலும், அரச குடும்பத்தினரின் இளைய வாரிசுகள் இன்னும் ஆடம்பரமாகத்தான் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். பார்ட்டிகளில் தடபுடலான ஏற்பாடுளை களை கட்டுகின்றன என்று சிலர் முனுமுனுக்கின்றனர்.

82 வயதாகும் ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு 475 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸுக்காக ராணியின் நார்போல்க் எஸ்டேட் அரண்மனையில் அரச குடும்பத்தினர் கூடி கொண்டாடவுள்ளனர்.

 தேசப் பொருளாதாரம் பாதுகாப்பாக உள்ளது – ரிசர்வ் வங்கி

 டெல்லி: இந்த மோசமான பொருளாதாரச் சூழலிலும் இந்தியா தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த ஆண்டு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது நாட்டின் தலைமை வங்கி.

இன்றைக்கு நாட்டில் கடன் தேவை அதிகரித்து வருகிறது. இந்தக் கடன் தேவையின் தன்மையைக் கவனித்து அதைப் பூர்த்தி செய்ய வேண்டியது வங்கிகளின் வேலைதான்.

வங்கிகள் எப்போதுமே தொலைநோக்குப் பார்வையுடன், பேரியல் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இன்றைய சூழலில் இந்திய நிதிச் சந்தை பாதுகாப்பாகவே உள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்தியப் பொருளாதாரம் அத்தனை சுலபத்தில் வீழ்ந்துவிட முடியாத அளவு பாதுகாக்கப்பட்டுள்ளது, என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: