ஆகஸ்ட் – அக்டோபரில் இந்தியாவில் 65,500 பேர் வேலை இழப்பு

புதுடில்லி : சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சீர்குழைவின் காரணமாக, இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் – அக்டோபரில் மட்டும் 65,500 பேர் தங்களது வேலையை இழந்திருக்கிறார்கள் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்னான்டஸ் தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் – அக்டோபர் காலத்தில் ரூ.1,792 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி ஆர்டரும் குறைந்திருக்கிறது என்று அவர் இன்று பார்லிமென்டில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். மத்திய வர்த்தகத்துறையினர் 121 ஏற்றுமதி நிறுவனங்களில் நடத்திய ஒரு கணக்கெடுப்பில் இது தெரிய வந்திருக்கிறது என்றும் அவர் சொன்னார். வேலைவாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்தி கொடுக்கும் டெக்ஸ்டைல், கார்மென்ட்ஸ், லெதர், இஞ்சினியரிங், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, உணவு, மினரல்ஸ் மற்றும் மரைன் போன்ற துறைகளில் எடுத்த கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளதாக பெர்னான்டஸ் தெரிவித்தார்

ஏறியது பங்கு சந்தை

மும்பை : கடந்த வெள்ளி அன்று சிறிதளவு உயர்ந்து முடிந்திருந்த பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே ஏற்ற நிலைதான் இருந்தது. ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள உயர்வும் இந்திய பங்கு சந்தையை உயர்த்தியது. மும்பை பங்கு சந்தையில், சென்சென்ஸ் 142.32 புள்ளிகள் ( 1.47 சதவீதம் ) உயர்ந்து 9,832.39 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 59.85 புள்ளிகள் ( 2.05 சதவீதம் ) உயர்ந்து 2,981.20 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஆயில், ரியல் எஸ்டேட், மெட்டல், கேப்பிடல் குட்ஸ், பவர் மற்றும் டெலிகாம் பங்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஆகியவை இன்று முழுவதும் உயர்ந்தே இருந்தது.

வீட்டு கடனுக்கு வட்டி குறைப்பு : பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

மும்பை : ரூ.5 லட்சம் வரை வாங்கும் வீட்டு கடனுக்கு அதிக பட்ச வட்டி 8.5 சதவீதம்தான் என்றும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையுள்ள வீட்டு கடனுக்கு வட்டி 9.25 சதவீதம்தான் என்றும் பொதுத்துறை வங்கிகள் இன்று அறிவித்திருக்கின்றன. ரூ.20 லட்சம் வரை வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு புராசசிங் கட்டணம், பிரீ-பேமன்ட் சார்ஜஸ் போன்றவை கிடையாது என்றும், இலவசமாக இன்சூரன்ஸ் செய்யப்படும் என்றும் இந்தியன் பேங்க்ஸ் அசோசியேஷன் ( ஐ.பி.ஏ.) இன்று அறிவித்திருக்கிறது. வீட்டு கடனில் மாற்றம் செய்வது குறித்து டிசம்பர் 7ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த மாற்றம் செய்யப்படுவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேர்மன் ஓ.பி.பாத் தெரிவித்தார். இந்த இரு திட்டங்களுக்கும் 5 வருட கால வீட்டு கடனுக்கு இந்த வட்டி வாங்கப்படும் என்றும் 8.5 மற்றும் 9.25 சதவீதத்திற்கு மேல் வட்டி உயராது என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த வருடம் ஜூன் 30ம் தேதி வரை இந்த வட்டி விகிதம் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ரூ.5 லட்சம் வரை பெறுபவர்கள் 10 சதவீத முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை கடன் பெறுபவர்கள் 15 சதவீத தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

இந்திய வங்கிகளுக்கு 14 பில்லியன் டாலர்கள் கடன் கொடுக்க உலக வங்கி முடிவு

வாஷிங்டன் : இந்திய வங்கிகளில் குறைந்து போயிருக்கும் பணப்புழக்கத்தை சரி செய்யவும், மற்ற நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை போக்கவும், உலக வங்கி 14 பில்லியன் டாலர்கள் கடன் அளிக்க முன் வந்துள்ளது. இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குனர் ரேசிட் பென்மசவுட் இதுகுறித்து பேசிய போது, சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் அதிக ம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய ஹவுசிங் பேங்குகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 3 பில்லியன் டாலர்கள் உடனடியாக கடன் கொடுக்கப்படும் என்றார். இந்திய முதலீட்டு சந்தை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்திய வங்கிகளால் நீண்டகால அடிப்படையில் இதனை சரிசெய்ய நிதி <உதவி செய்ய முடியவில்லை என்றார் பென்மசவுட். இந்திய நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருக்கும் கம்பெனிகளாளும் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. எனவே இன்னும் சில மாதங்களில் 27 இந்திய வங்கிகளுக்கு, அவர்களுக்கு தேவையான நிதியை உலக வங்கி அளிக்கும் என்றார். உலக வங்கி அளிக்கும் 14 பில்லியன் டாலர் கடனுதவி இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்திற்கு வந்து விடும் என்றார் அவர்.

புதிதாக 45 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: எல்.ஐ.சி., – வங்கிகள் அதிர 

மும்பை: உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை பாதிப்பால், லட்சக்கணக்கில் வேலையிழப்பு அறிவிக்கப்படும் போது, இந்தியாவில் 45 ஆயிரம் புது வேலை வாய்ப்பு இருக்கிறது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கும் (எல்.ஐ.சி.,), அரசுத்துறை வங்கிகளுக்கும் வரும் மார்ச் மாதத்திற்குள் புதிதாக ஆட்கள் தேர்வு நடக்கிறது. ஆயுள் காப்பீட்டுக் கழகம் தன் நிர்வாகத்தின் திறமையை அதிகரிக்க, மார்ச் மாதத்திற்குள் 10 ஆயிரம் பேரைத் தேர்வு செய்கிறது. இத்தகவலைத் தெரிவித்த எல்.ஐ.சி., நிர்வாக டைரக்டர் ஏ.கே.தாஸ்குப்தா மேலும் கூறியதாவது: உலகம் முழுவதும் ஏற்பட்ட மந்த நிலை, எல்.ஐ.சி.,க்கு தடையாக இருக்காது. நாங்கள் விரிவுபடுத்தும் சூழ்நிலையில் இருப்பதால், தொழில்நுட்ப திறமை தெரிந்தவர்கள் 10 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். அவர் களை வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்வு செய்வோம். இதில், மார்க்கெட்டிங்கில் 5,000 பேரும், மற்றவர்கள் நிர்வாகத் துறையிலும் பணியாற்றும் வகையில் தேர்வு செய்யப்படுவர். இன்சூரன்ஸ் துறையில் 78 சதவீத மார்க்கெட்டிங் பங்கு உடைய பிரமாண்ட நிறுவனம் என்பதால், மார்க்கெட்டிங் துறையை பலப்படுத்தியாக வேண்டும். இவ்வாறு தாஸ் குப்தா கூறினார். இதே போல முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆட்கள் தேடும் முயற்சியில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. கிளார்க் வேலைக்கு 20 ஆயிரம் பேரும், மேற்பார்வைப் பணியாளர் பணியில் 5,000 பேரும் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவித்திருக்கிறது. அதே போல யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆப் இந்தியா ஆகிய அரசு பொதுத்துறை வங்கிகளும் புதிதாக வேலைக்கு ஆட்களைச் சேர்க்க திட்டமிட்டிருக்கிறது. யூனியன் பாங்கில் 5,000 பேரும், மற்ற வங்கிகளில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரையும் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வு அடுத்த சில மாதங்களில் மும்முரமாக இருக்கும். வரும் மார்ச் மாதத்திற்குள் 1,950 பேரை நியமிக்கப் போவதாக பாங்க் ஆப் பரோடா அறிவித்திருக்கிறது. வீட்டுக்கடன் வட்டி: இன்று முக்கிய முடிவு: வீட்டுக்கடன் மீதான வட்டிவிகிதம் குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. அதிலும், 20 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெற்றவர்கள் கடன் மீதான வட்டி சதவீதக் குறைப்பு எவ்வளவு என்று இன்று தெரியும். பொதுத்துறை வங்கித் தலைவர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு, சலுகை வட்டி விகிதம் பற்றி ஒட்டுமொத்த முடிவு ஏற்பட்டது. அதிலும், ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெற்றவர்கள், அதற்கு அடுத்ததாக 20 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
 
 

 

 

பொருளாதார நெருக்கடி எதிரொலி: விமான போக்குவரத்து பாதிப்பு 

புதுடில்லி: சர்வதேச அளவிலான பொருளாதார மந்த நிலை காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கடும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு எதிரொலிக்க துவங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் உள்நாட்டு போக்குவரத்தில் 30.48 லட்சம் பேர் விமான பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே நவம்பர் மாதத்தில் விமான பயணம் செய்தவர்களின் எண்ணி க்கை 38.72 லட்சம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21.3 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விமான நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. எதிர்காலம் குறித்து கவலைப்படும் பலர், சிக்கன நடவடிக்கையை பின்பற்ற துவங்கியுள்ளனர். உள்நாட்டுக்குள் விமான பயணம் செய்வதை குறைப்பதே இவர்களது முதல் கட்ட சிக்கன நடவடிக்கை. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், பல விமான நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவது மிகவும் சிரமம். இவ்வாறு விமான நிறுவன வட்டாரங்கள் கூறின.  

மறைந்திருக்கும் ஆபத்து!
 
மும்பையில் நடந்தேறிய தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னணி யில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புக ளும், அந்த நாட்டு அரசின் ஓர் அங்கமான ஐ.எஸ்.ஐ. என்கிற புலனாய் வுத் துறையும் செயல்பட்டன என்பது ஆதாரபூர்வமாக வெளிப்பட்டி ருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குப் பயிற்சி அளித்தவர்கள், பின்னாலி ருந்து செயல்பட்டவர்கள், பயிற்சி அளிக்கப்பட்ட இடம், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களுக்கும் இடையிலான செய்திப் பரிமாற்றங் கள் போன்றவை தக்க ஆதாரத்துடன் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கி றது
இந்தத் தாக்குதலுக்கும் இதற்கு முன்னால் இந்தியாவின் வெவ் வேறு பகுதிகளில் நிகழ்ந்த பல பயங்கரவாதச் சம்பவங்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பு தான் காரணம் என்பதை உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியின் வாக்கு மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநி லத்தின் ஓக்காரா மாவட்டத்தைச் சேர்ந்த பரீத்கோட் கிராமத்துக்கார ரான முகம்மது அமீர் இமான் என்பவரின் மகன்தான் பிடிபட்டிருக்கும் தீவிரவாதியான முகம்மது அஜ்மல் அமீர் என்று தெரிய வந்துள்ளது
லஷ்கர் – இ – தொய்பாவும் அதன் தலைவரான ஹஃபீஸ் சையீ தும் மும்பைத் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டதற்கான ஆதா ரங்கள் இருந்தும் அவர்கள்மீது பாகிஸ்தான் அரசு எந்தவித நடவடிக் கையையும் முழு மனதுடன் எடுக்கத் தயாராக இல்லை என்பதில் ஆச் சரியப்பட ஒன்றுமில்லை. பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தெரியாமல் அந்த நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யும், ஐ.எஸ்.ஐ.யின் ஒப்பு தலும் ஆதரவும் இல்லாமல் லஷ்கர் – இ – தொய்பாவும் செயல்பட முடியாது என்பது உலகறிந்த ரகசியம்
கடந்த இரண்டு மூன்று நாள்களாக லஷ்கர் – இ – தொய்பா மற் றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய அமைப்புகளைச் சேர்ந்தவர்க ளைப் பாகிஸ்தான் அரசு கைது செய்வதாகக் கூறுகிறதே தவிர அந்த அமைப்புகளைப் பாகிஸ்தானை விட்டு ஒரேயடியாக ஒழிப்பதிலோ அழிப்பதிலோ தீவிரம் காட்டும் என்று நம்ப யாரும் முட்டாள்க ளில்லை. அரசின் பின்துணையுடனும் ராணுவத்தின் ஆசியுடனும் செயல்படும் இந்தத் தீவிரவாத அமைப்புகளை ஆரம்பம் முதலே பாகிஸ்தான் ஆதரித்து வந்திருப்பதால், அமெரிக்கா சொன்னது என்ப தற்காக அவர்களைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கைகழுவ முடி யாது
ஏற்கெனவே ஆப்கானிய எல்லையில் அல்-கொய்தா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அழிக் கும்படி அமெரிக்கா நெருக்குதல் அளித்து வருகிறது. இந்த நிலை யில், இந்தியாவுடன் ஒரு போர் மூளுமேயானால் அதைக் காரணம் காட்டி மேற்கு எல்லையில் உள்ள படைகளை கிழக்கு எல்லைக்குக் கொண்டு சென்று அல் – கொய்தாவுக்கு உதவ முடியும் என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் எதிர்பார்ப்பாக இருக்கக் கூடும். அதுமட்டு மல்ல, இந்தியாவுடன் போர் மூண்டால் அதையே சாக்காக வைத்து லஷ்கர் – இ – தொய்பா மற்றும் ஏனைய இந்தியாவுக்கு எதிரான தீவி ரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களைக் காப் பாற்றவும் முடியும்
இந்த நிலையில், மெக்கைன், பராக் ஒபாமா, காண்டலீசா ரைஸ் என்று அமெரிக்காவின் தலைவர்கள் ஒருவர் மாறி ஒருவர் பாகிஸ் தானை எச்சரிப்பதும், இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசுவதும் ஒருபுறம் நமக்குச் சாதகமாகத் தெரிந்தாலும் அதன் பின்னணியில் இருக்கும் ஆபத்தையும் நாம் உணர்ந்தாக வேண்டும். குரங்கு அப்பத்தைப் பிரித்துக் கொடுத்த கதையாக, இதைச் சாக்கிட்டு அமெரிக்கா நான் சமாதானம் ஏற்படுத்துகிறேன் என்று காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைத்து விடுகிற ஆபத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கி றது
காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையாக இருக்க வேண்டுமே தவிர அதில் மூன்றாவது நாடு நுழைவதை நாம் அனுமதிக்கக் கூடாது. காஷ் மீரை நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றதே தவறு. இப் போது அதற்கு முத்தரப்பு தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லாமல், காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லாமல் நமது வெளியுறவுக் கொள்கையில் துணிவு டன் செயல்பட்டே தீர வேண்டும்
மும்பை தீவிரவாதத் தாக்குதல்கள் என்பதை, அல் – கொய்தா வைக் காப்பாற்றுவதற்காகவும், காஷ்மீரை முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு உள்படுத்தவும், பாகிஸ்தானிய ராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் செய்த சதி யாக இருந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியாவுக்கு உண்மையிலேயே தர்மசங்கடமான ஒரு சூழ்நிலைதான். ஆனால், எதிர்ப்புகளை சாதகமாக்குவதுதானே வெற்றியின் ரகசியம்!

சிறைகளையும் ஊடுருவும் உரிமைகள்
 
 
 
1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனப்ப டுத்தப்பட்டது. 1914 – 18-ல் நடந்த முதல் உல கப் போர், தொடர்ந்து 1939 – 45-ல் நடந்த இரண்டாம் உலகப் போர் எண்ணில்லா மனித உயிர்களைப் பலி கொண்டன. இன வெறித் தாக்குதல் நடைபெற்றது. இம்மாதிரி கொடுமை மீண்டும் நிகழக் கூடாது என்ற அடிப்படையிலும், நாடுகளுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு மனித நேய அடிப்படை யில் வளரவும், 1945-ம் ஆண்டு ஐக்கிய நாடு கள் சபை உருவாக்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ் வெல்ட் தலைமையில் அடிப்படை மனித உரி மைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு மனித உரிமைகள் சாச னத்தை வரையறுக்க பல நாடுகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் 30 பிரிவுகள் கொண்ட அடிப்படை மனித உரிமைகள் தெரிவு செய் யப்பட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக் கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ம் ஆண்டு ஐக் கிய நாடுகளின் பொதுக்குழு பாரீஸ் மாநகரத் தில் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அங்கீ காரம் அளித்தது. அங்கீகாரம் அளித்த 58 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தப் புனித நாள் மனித உரிமைகள் தினமாக 1950-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகி றது
ஒவ்வோர் ஆண்டும் முக்கியமான மனித உரிமைகள் பிரச்னை முன்னிறுத்தப்பட்டு அதற்காக விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற் படுத்தப்படும். கடந்த ஆண்டுகளில் வறுமை ஒழிப்பு, மனித உரிமைக் கல்வி, குழந்தைக ளின் உரிமைகள், பெண்ணுரிமை, அகதிக ளின் உரிமைகள், விசாரணை கைதிகளின் உரி மைகள் என்று பல உரிமை பிரச்னைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. 60 ஆண்டுகள் பூர்த் தியாவதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சமநீதி, கண்ணியம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டு மென்ற உயரிய குறிக்கோளைச் செயலாக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது
பல நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடத் தப்பட்டன. பிப்ரவரி 2008-ல் மனித இழிதொ டர் வாணிபம் மூலம் மனிதர்கள் நாடு கடத் தப்பட்டு வியாபாரப் பொருளாக ஈடுபடுத்தப் படும் கொடிய செயல் பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐக் கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சிறைவாசிகள் மற்றும் காவலில் உள்ளவர்க ளின் உரிமைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள வர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டு மென்பதை வலியுறுத்தியும், சிறைவாசிகளுக் குரிய உரிமைகள் பற்றியும் கருத்தரங்கு நடத்தி யது. சிறையில் உள்ளவர்களை மனித நேயத் தோடு நடத்துவதில்லை என்பது சிறை நிர்வா கத்தின் மீது பொதுவாக தொடுக்கப்படும் குற் றச்சாட்டு. இதை மனதில் கொண்டுதான் மகாத்மா காந்தி மிக அழகாகச் சொன் னார் “”சிறைவாசிகள் அடிமைகள் அல்ல, அவர்கள் நாட்டின் உடைமை கள்”
உயிர், சுதந்திரம், சமத்துவம், கண்ணி யம் மனித உரிமைகளின் தூண்கள் என லாம். இந்திய அரசியல் சட்டம் பாகம் மூன்றில் இந்த அடிப்படை உரிமைக ளுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்பட் டிருக்கிறது. இவ்வுரிமைகளுக்கு சட் டப்படி சில வரைமுறைகள் வகுக்க லாமே தவிர எக்காரணம் கொண்டும் மறுக் கப்பட முடியாது. கலீல் ஜிப்ரான் பலம் படைத்தவர்களின் அடக்குமுறை போக்கை “”கல் உடைத்தோம் அதை வைத்து சிறை கட்டி னாய், நூல் நூற்றோம் அதை சாட்டையாக்கி பிரயோகித்தாய்” என்று விவரிக்கின்றார்
தொன்றுதொட்டு வரும் இம்மாதிரியான அடக்குமுறைகளால் சிறைச்சாலைகள் கொடூர மையங்கள் என்ற கணிப்புதான் மேலோங்கியுள்ளது
எந்த ஒரு குற்ற நிகழ்வும் ஒருவருடைய உரிமை மீறல் சம்பந்தப்பட்டது. இதை விசா ரிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையினு டையது. அந்த விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் மேற்கொள்ளப்பட வேண் டும். முறையற்ற விசாரணையால் காவல்து றையின் மீதே மனித உரிமை மீறல் குற்றச்சாட் டுகள் எழுவது வேதனைக்குரிய விஷயம். ஒரு வழக்கு விசாரணையின்பொழுது குற்றம் புரிந்தவரைக் கண்டுபிடித்து ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்து புலனாய்வு மேற்கொள்வது ஒரு முக்கிய கட்ட நடவ டிக்கை. ஆனால் இத்தகைய கைது சட்டத்திற் கும், விதிகளுக்கும் உள்பட்டு இருக்க வேண் டும். முறையற்ற கைதினால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது
மத்திய ஆவண காப்பகத்தின் அறிக்கை யின்படி 2006-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 26.53 லட்சம் குற்றவாளிக ளும், சமூக நல சட்டங்களின் கீழ் 35.54 லட் சம் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள் ளனர். இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுக ளில் கைது செய்யப்படுபவர்களின் எண் ணிக்கை 92.20 சதவிகிதம் உயர்ந்துள்ளது
தமிழகத்தில் 2007-ம் ஆண்டு 2.01 லட்சம் குற் றவாளிகள் இந்திய தண்டனை சட்ட வழக்கு களிலும், 5.31 லட்சம் குற்றவாளிகள் சமூக நல சட்ட வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள் ளனர். இவர்களில் 65,091 பெண் குற்றவாளி கள் அடங்குவர். கைது நடவடிக்கையின்பொ ழுது டி.கே. பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வரைமுறைப்படுத்தியுள்ள விதிமு றைகளைக் கடைப்பிடிக்க வேண் டும். முக்கியமாக கைது செய்த 24 மணி நேரத்திற்குள் பிரயாண நேரம் நீங்கலாக நீதிமன்றம் முன் ஆஜர்ப டுத்தப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் விளைவிக்கக் கூடிய வழக்குகள் தவிர்த்து மற்ற சாதாரண வழக்குகளில் கைது செய்தவரை காவல்துறையே ஜாமீனில் விடுவித்து மனித உரிமை மீறல் குற்றங்களைக் குறைக்கலாம்
இங்குதான் காவல்துறையின் மேலதிகாரிகள் முதிர்ச்சியான வழிகாட்டுதல் அளிக்க வேண் டும். மேலும் எதிர்மறைத் தாக்குதல் (என்க வுன்டர்) மிக அபாயகரமான நேர்வுகளில் மட்டும் மேற்கொள்ள வேண்டும். சாதாரண நிகழ்வுகளில் இத்தகைய அணுகுமுறை தவறா னது
சிறைவாசிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார் கள் என்பது அந்த நாட்டின் சமுதாய கலாசா ரத்தின் பிரதிபலிப்பு என்பது உண்மை. ஐக் கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் காவலில் உள்ளவர்களின் அடிப்படை உரி மைகளை எடுத்துரைக்கிறது
சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொது வானது. கைது நடவடிக்கை, காவலில் வைப் பது (சட்டத்தின் அடிப்படையில்) தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் எடுக்கப்பட வேண்டும். மனிதாபிமானம், கண்ணியம் பாதிக்கும் வகையில் ஒருவரும் நடத்தப்படக் கூடாது. காவலில் உள்ளவர்களை கொடு மைப்படுத்துதல் அறவே ஒழிக்கப்பட வேண் டும். காவலில் உள்ளவர்கள் கண்ணியமான முறையில், மனிதாபிமான முறையில் நடத்தப் பட வேண்டும். காவலில் வைக்கப்படுபவர்க ளுக்கு காவலுக்குள்ளான உரிமைகளைத்த விர மற்ற சிவில், பொருளாதார, கலாசார, சமு தாய உரிமைகள் அளிக்கப்பட வேண்டும்
அவர்களுக்குண்டான உரிமைகளை பாகுபா டின்றி அனுபவிக்க உரிய சூழலை உருவாக்க வேண்டும். உரிமைகள் பறிக்கப்படும் பட்சத் தில் அதைப் பற்றி புகார் கொடுக்க அவர்க ளுக்கு உரிமை உண்டு
தேசிய மனித உரிமைகள் ஆணையமும், காவலில் உள்ளவர்களின் உரிமைகள் பாது காக்கப்பட வேண்டியதை முக்கியமான மனித உரிமையாக அறிவித்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள இல்லவாசிகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா என்பது கண்கா ணிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள் உள்பட 134 சிறை வளாகங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 20,000 இல்லவாசிகள் தங்க வசதி உள் ளது. இல்லவாசிகளின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இன்றி பணிகள் நிறைவு செய்யப் படுகின்றன
சிறைச்சாலை நிர்வாகத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிய முயற்சிகள் பல எடுக்கப்பட் டுள்ளன
சிறைச்சாலை வளாகங்களில் அடைப்பில் உள்ள சிறைவாசிகளை “இல்லவாசிகள்’ என்று சுயமரியாதை பேணும் வகையில் அழைக்கும் முறை அமல்படுத்தல்; உணவுப் பண்டங்கள் கொள்முதல் செய்வதில் முறை கேடுகளைத் தவிர்க்க தரமான, அத்தியாவசிய மான அரிசி, பருப்பு, சர்க்கரை வகைகளை அரசு சிவில் சப்ளை நிறுவனம் மூலம் கொள் முதல் செய்ய பரிந்துரையின் பேரில் அரசு ஆணையிடல்; எய்ட்ஸ் நோய் தடுப்பதற்கு விசேஷ ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் எல்லா மத்திய சிறை வளாகங்களி லும் அமைத்தல்; எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்ட இல்லவாசிகளுக்கு சிறப்பு சிகிச்சை, உணவு வழங்கல்; 60 வயதுக்கு மேற்பட்ட இல் லவாசிகளுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் தனி பராமரிப்பு ஏற்பாடு; உடல் ஊன முற்ற இல்லவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ வசதி மற்றும் உணவு; இல்லவாசிகள் கல்வி பயில்வதற்கு முன்னுரிமை; வளர்கல்வி, ஆரம் பக் கல்வி, இடைநிலை, உயர்நிலை, மேல் நிலை மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங் கள் மூலம் இளநிலை கல்வி முறைகளுக்கு ஏற் பாடு; செயல்வழிக் கல்வித்திட்டம் அமல்ப டுத்தல்; தொழில்நுட்ப கல்வி பயிற்சி அளித் தல்; சிறைச்சாலைகளில் உள்ள தொழிற்சா லைகளை மேம்படுத்தி இல்லவாசிகளுக்கு சிறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தல்; தன் னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து உழைப்பதற்கு வாய்ப்பளித்து இல்லவாசிகள் பணம் ஈட்ட வழிவகுத்தல்
விடுதலையாகும் இல்லவாசிகளுக்கு புனர் வாழ்வு மற்றும் சமுதாயத்தோடு இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடு; யோகா, தியானம், வாழும்கலை பயிற்சிகள் மூலம் இல்லவாசிக ளுக்கிடையே மன அமைதி ஏற்படுத்தல்; தேச பக்திப் பாடல்கள் தினமும் சிறைச்சாலைக ளில் ஒலிக்க ஏற்பாடு; இதன்மூலம் அவர்க ளின் நாட்டுப்பற்றை வளர்த்தல்; எல்லா மத பண்டிகைகளையும் இல்லவாசிகளோடு கொண்டாடுதல்; சிறைச்சாலை நிர்வாகப் பணியாளர்கள் பணிகள் பரிமளிக்க விசேஷ பயிற்சி துவக்கம்
மனித உரிமைகள் புனிதமானவை. அவை மனிதனின் இதயத்தில் இயற்கை அன்னை யின் விரல்களால் எழுதப்பட்டவை. மனித நேயம் பேணுவோம். மனித உரிமைகள் காப் போம்
(இன்று மனித உரிமைகள் தினம்)

தேவை இன்னுமொரு இந்திரா
 
இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பயங்கரவா தத்தை ஒடுக்க வேண்டுமாம். ஆனால் இந்தியா கேட்கும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு உள்ளார்கள். திருடர்களை வீட்டிற்குள் வைத் துக்கொண்டு திருட்டை ஒழிக்க முடியுமா? இந்திராகாந்திபோல் திடமான முடிவு எடுக்கும் தைரிய மும் – துணிச்சலும் இந்தியத் தலைவர்களுக்கும், அரசுக் கும் இல்லை என்பதை பாகிஸ்தான் நன்கு புரிந்துகொண் டுதான் பயங்கரவாதச் செயல்களை நடத்திக் கொண்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும் கொடுத்து வருகிறது
இந்திய மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் ராணுவ நடவ டிக்கை எடுக்க முழு உரிமை உண்டு என்று பிரணாப் முகர்ஜி, பலமுறை கண்டனங்கள் தெரிவித்தாலும், நடக் கப்போவது ஏதும் இல்லை. ஏதாவது விபரீதங்கள் நடந்து பலர் பலியானாலும், அரசு அறிக்கை, கண்டனம், அமைச் சரவைக் கூட்டம், அதிகாரிகள் கூட்டம், கமிஷன் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்
மக்களும் சம்பவங்கள் நடந்த சில தினங்கள் பரபரப் பாக இருப்பார்கள். பின் எல்லாம் மறந்து போகும். இந்தியா விற்கு இந்திராகாந்திபோல் துணிச்சல் மிக்க தலைவர் தேவை
தி. சேஷாத்ரி, ஆழ்வார்திருநகரி

 
சபாஷ், சரியான தீர்ப்பு!
 
தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே, ஏன் வளர்ச்சி அடையும் நாடுகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி எலிப்பே தர்மராவுக்கும், நீதிபதி தமிழ்வாணனுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சமூகப்பிரக்ஞையுடன் கூடிய ஒரு தீர்ப்பை வழங்கி, வளரும் பொருளாதாரங்களின் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கி றது அவர்களது சமீபத்திய ஒரு தீர்ப்பு
இதற்கு முன்பு “நாம் என்ன குப்பைத் தொட்டியா?’ என்ற தலைப் பில் “தினமணி’ தனது தலையங்கத்தில் எழுப்பி இருந்த கேள்விக்குச் சரியான விடை பகர்ந்திருக்கிறது இந்த நீதிபதிகளின் தீர்ப்பு. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தூத்துக்குடி துறைமுகத்தின் சுற்றுச்சூழலைப் பாதித்து, நாற்றம் அடித்தபடி இருக்கும் நாற்பது கன்டெய்னர்களி லுள்ள குப்பைகளை உடனடியாகத் தனது சொந்தச் செலவில் திருப்பி அனுப்பும்படி இறக்குமதி செய்த ஐ.டி.சி. நிறுவனத்திற்கு உத் தரவு இட்டிருக்கிறது நீதிமன்றம்
சிகரெட்டுகள் மற்றும் புகையிலைப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் பிரபல பன்னாட்டு நிறுவனமான ஐ.டி.சி. நிறுவ னம் “காகிதக் கழிவுகள்’ என்கிற பெயரில் அமெரிக்காவிலுள்ள “எவர்க் ரீன் ஸ்பெஷாலிட்டீஸ்’ என்கிற ஏதோ ஒரு நிறுவனத்திடமிருந்து கடந்த ஆகஸ்ட் 2005-ல் 1000 கன்டெய்னர்களை இறக்குமதி செய் தது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்த சுங்க இலாகாவினர் அதைப் பரிசோதனை செய்தபோது திடுக்கிட்டனர்
25,000 டன் “காகிதக் கழிவுகள்’ என்று கூறி ஐ.டி.சி. நிறுவனம் இறக்குமதி செய்த கன்டெய்னர்களில் இருந்தவை பழைய பேப்பர்க ளும் காகிதக் குப்பைகளும் என்று நம்பி அந்தக் கன்டெய்னர்களை அனுமதித்த சுங்க இலாகாவினருக்கு அதிலிருந்து வெளிப்பட்ட துர் நாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்குள் பல “கன்டெய்னர்கள்’ வெளியேறிவிட்டன என்பது வேறு விஷயம். ஆனால் சுங்க இலாகா வினரிடம் நாற்பது கன்டெய்னர்கள் சிக்கின. பரிசோதித்துப் பார்த்த தும் அவர்கள் அதிர்ந்தனர்
அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி நகரத்தின் குப்பைக்கூளங்கள் இந்தக் கன்டெய்னர்களில் நிரப்பப்பட்டு, இந்தியாவில் கழிவுகளாகக் கொட்டுவதற்கு இதுபோல திருட்டுத்தனமாக அனுப்பப்பட்டிருந் தன. பிளாஸ்டிக் பைகள், பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்கள், உப யோகித்துத் தூக்கி எறிந்த பேட்டரிகள், கக்கூஸ் குப்பைகள், மிதியடி கள் என்று அந்தக் கன்டெய்னர்களில் குத்தி அடைக்கப்பட்டிருந்தன
அதாவது அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க இந்தியா போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளுக்கு இதுபோல நகராட் சிக் கழிவுகளைத் திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்வது வழக்கம் என் பதும், இதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் தொகை கூலியாகப் பேசப்படுகிறது என்பதும் திடுக்கிட வைத்த தகவல்கள்
இது கண்டுபிடிக்கப்பட்டதும் எதிர்பார்த்ததுபோல ஐ.டி.சி. நிறுவ னம் “எவர்கிரீன் ஸ்பெஷாலிட்டீஸ்’ நிறுவனத்தின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. அந்த 40 கன்டெய்னர்க ளும் அஜ்மான் நாட்டுக்கு அனுப்பப்பட்டன. அந்த அரசு எச்சரிக்கை செய்து கப்பலை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டது. மீண்டும் தூத் துக்குடி துறைமுகத்துக்குத் திரும்பி வந்த கன்டெய்னர்களை நியூ ஜெர்சிக்கே திருப்பி அனுப்பும்படி மத்திய மாசுக் கட்டுப்பாடு ஆணைய நிபுணர்கள் அறிக்கை அளித்ததும், அதைத் திருப்பி அனுப் பக்கூடாது என்று ஐ.டி.சி. நிறுவனம் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தது
அந்த மனுவின்மீது தீர்ப்பளித்த நீதிபதிகள் இருவரும் மிகவும் தெளிவாக சில விஷயங்களைக் கூறி இருக்கிறார்கள். “”தங்களுக்குத் தெரியாமலோ, கேட்காமலோ “எவர்கிரீன் ஸ்பெஷாலிட்டீஸ்’ நிறுவ னம் அந்தக் குப்பைக் கழிவுகளை அனுப்பி இருக்கிறது என்கிற ஐ.டி.சி.யின் வாதம் உண்மையானால், அந்தக் கன்டெய்னர்களை உட னடியாக அமெரிக்காவுக்கு அப்படியே திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். இவர்கள் ஏன் அஜ்மான் நாட்டுக்கு அனுப்பினார்கள்? வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது நகராட்சிக் கழிவுகளைக் கொட்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளைத் தங்களது குப்பைத் தொட்டிகளாக்க நினைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நமது நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்ப டக்கூடாது என்கிற வளர்ச்சி அடைந்த நாடுகளின் மனோநிலை ஆபத்தானது” என்று தங்களது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக் கிறார்கள் நீதிபதி தர்மராவும், நீதிபதி தமிழ்வாணனும்
ஐ.டி.சி. நிறுவனம் உடனடியாக அந்தக் கன்டெய்னர்களைத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டிருப்பதுடன், நீதிமன்றச் செலவாக ரூ
50,000-ம் அபராதம் விதித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 12 வாரத்திற்குள் இந்தச் சதியில் தொடர்புடைய அத்தனை அதிகாரிகள் மீதும் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடரவும் மத்திய அரசுக் குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்
இதுபோன்ற நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை களை மத்திய அரசு எடுத்தால்தான், ஏனைய பன்னாட்டு நிறுவனங்க ளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பார்கள்
ஐ.டி.சி.போல எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் இறக்குமதி என் கிற பெயரில் பன்னாட்டுக் குப்பைக்கூளங்களை இந்தியாவில் கொண்டுவந்து கொட்டி நமது சுற்றுச்சூழலைக் கெடுக்கிறார்களோ, யார் கண்டது? நாம் வல்லரசு நாடுகளின் குப்பைத் தொட்டி அல்ல. நம்மைக் குப் பைத் தொட்டியாக்க முயற்சிப்பவர்களைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியத் தயங்கவும் கூடாது!

இதுவா தயார் நிலை!
 
மும்பையில் கடந்த நவம்பர் மாதம் 26-ல் தொடங்கி 29 வரை யில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை யாரா லும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. சுமார் இருநூறு பேரை பலி வாங்கியவர்கள் 10 பயங்கரவாதிகள்தான் என்பது உண்மையாக இருந்தாலும், மிகப்பெரிய நகரத்தின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மையை அது நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது
அப்போதைக்கு மகாராஷ்டிர மாநிலப் போலீஸôரும், முப்படையி னரும், அதிரடிப்படை வீரர்களும், தீயணைப்புப்படையினரும் காட் டிய வீரமும் தீரமும் மெச்சத்தக்கதாகவே இருந்தாலும், பிரிட்டிஷாரின் பீரங்கிப்படைக்கு முன்னால் ஈட்டியையும் வாளையும் எடுத்துக் கொண்டு ஓடிய நம்முடைய முன்னோர்களின் பரிதாப நிலைக்கு ஒப் பாகவே அது இருந்திருக்கிறது
மும்பை நகருக்குள் இரவு நேரத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் சிறு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். முதலில் தெருக்களில் கூடியிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டு தங்களுடைய வருகையைப் பதிவு செய்துள்ளனர். அவர்களைப் பிடிக்கச் சென்ற 3 மூத்த போலீஸ் அதிகாரிகளை அருகில் இருந்து சுட்டுக்கொன்றுள்ளனர். அடுத்து “விக்டோரியா டெர்மினஸ்’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் நுழைந்து, ரயில்களுக் காகக் காத்து நின்ற அப்பாவிப் பயணிகளை வெறித்தனமாகச் சுட்டுள் ளனர்
இந்தத் தகவல்கள் உடனுக்குடன் “கன்ட்ரோல் ரூம்’ என்று அழைக் கப்படும் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட் டுள்ளன. பொதுமக்கள் மட்டுமின்றி போலீஸ்காரர்களே தகவல் அனுப்பியிருக்கின்றனர். அப்படியிருந்தும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூட அந்த அறைக்கு விரைந்து சென்று மற்ற போலீஸ் அதிகா ரிகளை அழைக்கவோ, கூடுதல் போலீஸ் படைகளைத் திரட்டவோ, அனைத்து காவல் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு பயங்கரவா திகள் நகரைவிட்டு தப்பியோடாமல் தடுக்கவோ முயலவில்லை என்று இப்போது தெரியவந்திருப்பது அதிர்ச்சியாகவும் வேதனையாக வும் இருக்கிறது
இம் மாதிரியான சூழ்நிலைகளில் பயன்படுத்தத்தான் போலீஸô ருக்கு வயர்லெஸ் தகவல் தொடர்பு வசதி செய்து தரப்பட்டிருக்கிறது
அதைக்கூட அன்றைக்கு அவர்கள் பயன்படுத்தியிருக்கவில்லை
ஒபராய் ஹோட்டல் அருகில் உள்ள தேசிய கலை மைய கட்டடம் அருகில், குண்டு துளைக்காத தன்னுடைய போலீஸ் வாகனத்தை நிறுத்திக்கொண்ட ஓர் அதிகாரி, தன்னுடைய இரண்டு உதவியாள் களை பாதுகாப்புக்கு அருகில் வைத்துக் கொண்டு அந்த வாகனத்தி லேயே பொழுதைக் கழித்திருக்கிறார். மற்றவர்கள் தன்னைத் தொடர் புகொண்டுவிடாதபடிக்கு இருந்திருக்கிறார்
போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அன்றைய பணியை, இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள 3 இளநிலைப் போலீஸ் அதிகாரிகள் தான் மேற்கொண்டனர். அவர்களுடைய அதிகார வரம்பு மிகவும் குறு கியது என்பதால் அவர்களுடைய ஆணை ஓரளவுக்கு மேல் செல்லுப டியாகவில்லை. எனவே பயங்கரவாதிகள் தப்பி ஓட முடியாதபடிக்கு நெடுஞ்சாலைகளையும் பிற வழிகளையும் அவர்களால் அடைக்க முடியவில்லை. பயங்கரவாதிகள் குறிவைக்கக்கூடிய கேந்திரமான மற்ற பகுதிகளுக்குப் போலீஸ் படைகளை அனுப்ப முடியவில்லை
அதைவிடக் கொடுமை மும்பையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிக ளில் இருந்த சிறப்புப் போலீஸ் படை மற்றும் இதர போலீஸ் படைப் பிரிவுகளை உதவிக்கு வரவழைக்க முடியவில்லை
மும்பை மாநகரக் காவல்துறையில் மட்டும் 25 துணை ஆணையர் கள் உள்ளனர். சம்பவம் நடந்த அன்றைய இரவு பணிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை வெறும் 6 தான். கன்ட்ரோல் ரூமிலிருந்தவர்கள் அழைத்தபோது ஓரிருவர் தங்களுடைய செல்போன்களின் இணைப் பைக்கூடத் துண்டித்துவிட்டார்களாம்
அன்றைக்கு வந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மட்டும் சற்று கூடுதலாக இருந்திருந்தாலோ, அல்லது பிணையாள்களை அவர்கள் வாகனங்களில் ஏற்றி மீண்டும் கடல்வழியாகவே கடத்திச்செல்ல முற் பட்டிருந்தாலோ மிகப்பெரிய ஆள் சேதமும், நாட்டுக்கே மிகப்பெரிய தலைக்குனிவும் ஏற்பட்டிருக்கும்
இதுவா தயார் நிலை? இதை நம்பித்தானா நம் நாட்டு மக்கள் இர வில் நிம்மதியாக உறங்கப்போக முடியும்? எல்லைப்புறங்களில் நமது ராணுவத்தினர் விழிப்புடன் காவல் காப்பது உண்மைதான்; அவர்க ளால் மட்டுமே நாட்டை முழுக்க காவல் காத்துவிட முடியுமா? உள் நாட்டுக் காவலை போலீஸôர்தான் வலுவாக மேற்கொள்ள முடியும்
அதற்குத்தேவையான ஆள்கள், ஆயுதங்கள், கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றை உடனடியாகக் கேட்டுப்பெற்று “”உண்மையாகவே தயாராக வேண்டும்” என்று வலியுறுத்துகிறோம்

சோமாலியாவில் சாகசம்; மன்னாரில் முடக்கம்
 
 
 
இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்க ளுக்கு அப்பால் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோமாலியா கடற்பகுதியில் இந்தியக் கடற் படை வீரசாகசம் புரிந்துள்ளது. இந்தியக் கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். தபார் எனும் போர்க்கப்பல் சோமாலியா கடற் கொள்ளையரின் தாய்க்கப்பலை சுட்டு மூழ்க டித்துள்ளது
சோமாலியாவை ஒட்டியுள்ள ஏடன் கடல் பகுதியில் கடற்கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இந்த ஆண் டில் மட்டும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன
மிகப்பெரிய தொகைகளைப் பெற்றுக் கொண்ட பிறகே பல கப்பல்களைக் கடற் கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியக் கப்பல்களும், பிற நாட்டுக் கப்பல்களில் வேலை பார்த்த இந்திய மாலுமி களும் கூட கடற்கொள்ளையரின் தாக்குத லுக்குத் தப்பவில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்திய அரசு நமது கடற்படையைச் சேர்ந்த மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்றை அந்தப் பகுதிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுத் தது. இத்துடன் நிற்கவில்லை. மேலும் ஐ.என்.எஸ். வீரட் என்னும் விமானம் தாங் கிக் கப்பலையும் அப்பகுதிக்கு அனுப்பியுள் ளது. மேலும் நான்கு போர்க்கப்பல்களை அங்கு அனுப்பவும் இந்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது
“”சோமாலியா கடற்கொள்ளையர்கள் சரக் குக் கப்பல்களைக் கடத்துவதோடு நிற்க வில்லை. அந்தக் கப்பலில் உள்ள மாலுமிக ளையும் பிற பணியாளர்களையும் அடிமைக ளாக்கிக் கொள்வது, சித்திரவதை செய்வது, இனப்படுகொலை செய்வது போன்ற அட்டூ ழியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற னர். எனவே அவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது” என இந்தியக் கடற்படைத் தளபதி களில் ஒருவர் கூறியுள்ளார்
இந்தியக் கடலோரங்களைக் காவல் காக் கும் கடற்படையாக மட்டும் விளங்காமல் ஆழ்கடலில் சென்று எதிரிகளைத் தாக்கும் அளவுக்கு நமது கடற்படை புதிய வடிவம் கொள்ள வேண்டும் எனப் பலகாலமாக கடற் படைத் தலைமை இந்திய அரசை வலியுறுத்தி வருவதன் அவசியத்தை சோமாலியா கொள் ளையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உறுதி செய்துள்ளது
ஏற்கெனவே 2006-ம் ஆண்டில் லெபனா னில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் சிக் கிக்கொண்ட இந்தியர்களைப் பத்திரமாக மீட்பதற்காக ஏவுகணைகள் பொருத்தப் பட்ட இந்தியக் கடற்படைக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டு, வெற்றிகரமாக இந்தி யர்கள் மீட்கப்பட்டனர்
சோமாலியா கடற்பகுதியில் வீரசாகசம் புரியும் இந்தியக் கடற்படை மன்னார் வளை குடா பகுதியில் ஆமையாக, ஊமை யாக அடங்கிக் கிடக்கிறது. உலகின் ஐந்தாவது வலிமை வாய்ந்த கடற்ப டையாகத் திகழும் இந்தியக் கடற் படை ஆழ்கடலில் கூட எதிரிகளை வென்றடக்கும் வலிமையும் திற மையும் படைத்தது என மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் சின்னஞ்சி றிய சிங்களக் கடற்படை கடந்த 25 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து தமிழக மீனவர்க ளைக் கொன்று குவிக்கிறது. அதைத் தடுக்க வும் நமது மீனவர்களைக் காப்பாற்றவும் கட மைப்பட்ட இந்தியக் கடற்படை செயலற்றுக் கிடக்கிறது
சோமாலியா கடற்கொள்ளையர்கள் செய் துவரும் இனப்படுகொலை, சித்திரவதை போன்றவற்றை சிங்கள வெறியர்கள் தமிழக மீனவர்கள் மீது நடத்தி வருகிறார்கள்
சோமாலியர் மீது பாயும் இந்தியக் கடற்படை சிங்களரிடம் பதுங்குகிறது
தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங்களில் 590 மீனவ கிராமங்கள் கடலை மட்டுமே தங்கள் வாழ் வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன
1000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடிய கடற்கரையில் நாகப்பட்டினத்திலிருந்து குமரி வரை 750 கிலோமீட்டர் தூரமாகும்
இந்தப் பகுதியில் 5 லட்சம் மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்
அதேபோல எதிர்க்கரையில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிலாபத்திலிருந்து பருத் தித்துறை வரை 700 கிலோமீட்டர் நீளம் உள்ள கடற்கரையோரமாகவும் அருகிலுள்ள தீவுகளிலும் 3 லட்சம் தமிழ் மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இருகரைகளி லும் சுமார் 8 லட்சம் தமிழ் மீனவர்கள் வாழ்கி றார்கள்
தமிழகக் கரையோர மீனவர்கள் ஆண்டுக் குத் தோராயமாக 3 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் கடல் உயிரினங்களையும், இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஆண்டுக்குத் தோராயமாக 2 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் கடல் உயிரினங்களையும் பிடிக்கின்ற னர்
இந்தியாவில் மொத்த மீன் உற்பத் தியில் தமிழகத்தின் பங்கு 21 சதவீத மாகும். இந்தியாவின் மொத்தக் கடற் பரப்பில் சிறுபகுதியே தமிழகத்தில் அமைந்திருந்தாலும் மீன் உற்பத்தி யில் தமிழகம் முன்நிற்பதன் காரணம் நமது மீனவரின் தளராத முயற்சியும் அயராத உழைப்புமே. தமிழக மீன்உற்பத்தியில் பெரும் பங்கை அளிப்பவர்கள் ராமே சுவரத்தை ஒட்டி வாழும் மீன வர்களே
ஆனால் கடந்த 25 ஆண்டுகாலமாக இவர்க ளின் நிலைமை என்ன? நமது மீனவர்கள் கட லில் தங்களின் தொழிலைச் செய்ய முடிய வில்லை. இலங்கையில் வாழும் தமிழ் மீனவர் கள் கடலில் மீன் பிடிக்கக்கூடாது என சிங் கள அரசு தடை விதித்துள்ளது. மொத்தத்தில் இருகரையிலும் வாழும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்
1983-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை இந்த 25 ஆண்டு காலத்தில் நமது மீன வர்கள் மீது சிங்களக் கடற்படை சுமார் 300 தடவைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளது
400-க்கு மேற்பட்ட நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1000-க்கு மேற் பட்ட மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
பல நூறு கோடி ரூபாய் பெறுமான மீனவர்க ளின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப் பட்டுள்ளன. ஆனாலும் இந்தியக் கடற்படை யும் கடலோரக் காவல்படையும் சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக் கவோ, நமது மீனவர்களைக் காப்பாற்றவோ எதுவும் செய்யவில்லை. அதேவேளையில் இலங்கையின் தென்கிழக்கு கோடியில் வாழும் 2 லட்சம் சிங்கள மீனவர்கள் எவ்வி தத் தடையும் இல்லாமல் இந்தியக் கடல் எல் லைக்குள் வந்து மீன்பிடித்துச் செல்கின்ற னர். இந்தியக் கடற்படையோ அல்லது கட லோரக் காவல்படையோ அவர்களை விரட் டியடிக்க எதுவும் செய்யவில்லை
நமது கடற்பகுதியில் நமது மீனவர்களைத் தாக்கிய சிங்களவர்கள் அத்துமீறி தனுஷ்கோ டியில் உள்ள ஓலைக்குடா என்னும் மீனவ கிராமத்தில் புகுந்து குடிசைகளையெல்லாம் கொளுத்தி மீனவர்கள் சிலரைச் சுட்டுக் கொன்றனர். அவர்களின் படகுகளும் வலை களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந் திய மண்ணுக்குள்ளேயே நுழைந்து இந்தியக் குடிமக்களையே தாக்கும் துணிவு சிங்கள ருக்கு ஏற்பட்டது
இந்தியாவின் இறையாண்மை இவ்வாறு அப்பட்டமாக மீறப்பட்டபோது, அதைத் தடுக்கும் துணிவோ அல்லது நமது குடிமக்க ளைக் காப்பாற்றும் திறமையோ இல்லாமல் இந்தியக் கடற்படை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த 25 ஆண்டுகாலத் தில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய சிங்க ளக் கடற்படை வீரர்கள் ஒருவரைக்கூட இந் தியக் கடற்படையினர் சுட்டதுமில்லை
சிறைப்பிடித்ததுமில்லை
1983-ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்க ளுக்கு எதிரான இனக்கலவரங்கள் நடைபெற் றபோது தங்களின் சொந்தப் படகுகளில் குடும்பங்களுடன் ஏறி தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான 500-க்கு மேற்பட்ட படகுகளை இந்தியக் கடற்படை பறிமுதல் செய்தது. அவைகள் எல்லாம் இப்போது சிதிலமாகி அழியும் நிலையில் உள்ளன. வீடுகளை இழந்து சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல், உயிர் களைக் காக்கத் தமிழகம் நோக்கி ஓடி வந்து தஞ்சம் புகுந்த அகதித் தமிழர்களின் படகுக ளைப் பறிமுதல் செய்வதில் வீரம் காட்டிய இந்தியக் கடற்படை அத்துமீறிய சிங்களக் கடற்படையின் ஒரு சிறு கப்பலைக்கூட இது வரை பறிமுதல் செய்ததில்லை
31-5-07 அன்று இந்தியப் பிரதமரின் பாது காப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சென்னைக்கு வந்து தமிழக முதலமைச்சர் கரு ணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தமிழக மீனவர்களை இனி சிங்களக் கடற்படை சுடாது என உறுதி கூறினார்
அதற்குப் பிறகு 14-10-08 அன்று தமிழக முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக மீனவர்களுக்குப் பாது காப்பு அளிக்க உரிய நடவடிக்கைகளை இந் திய அரசை வற்புறுத்தும் வகையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் இலங்கை அதிபருடன் பேசி இனி தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என வாக்குறுதி அளித்தார். ஆனாலும் இன்ன மும் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கின்றன
சோமாலியா கடலில் வீரசாகசம் காட்டும் இந்தியக் கடற்படை மன்னார் கடலில் முடங் கிக் கிடப்பது ஏன்? அதன் கரங்களைக் கட் டிப்போட்டது யார்? கொல்லப்படுபவர்கள் தமிழர்கள்தானே என்ற அலட்சியம் கார ணமா? இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் மன் மோகன் சிங்கும் தமிழக முதலமைச்சர் கரு ணாநிதியும் பதில்கூறக் கடமைப்பட்டவர் கள்.

Advertisements

One Response

  1. wow very good easy this problem understanding the indian government

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: