பங்குச் சந்தை சாண் ஏறி முழம் வழுக்குகிறது

வெள்ளியன்று மறுபடி சந்தை 9,000க்கும் கீழே சென்று முடிவடைந்திருக்கிறது. முழம் ஏறி சாண் வழுக்கினால் பரவாயில்லை. சந்தையில் இப்போதெல்லாம் சாண் ஏறி முழம் வழுக்குகிறது. வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 482 புள்ளிகள் வரை மேலே சென்றது. வெள்ளியன்று அதற்கு நேர்மாறாக அதற்கு பாதியளவு சரிந்தது. மும்பை பங்குச் சந்தை 265 புள்ளிகள் குறைந்து 9,000க்கும் கீழே வந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,965 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,714 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பணவீக்கம் இந்த வாரம் 8.4 சதவீதமாக முடிவடைந்திருக்கிறது. சென்ற வாரம் 8.84 சதவீதமாக இருந்தது. நல்ல இறக்கம் தான். ஆனால், சந்தையில் வெள்ளியன்றும் அது பரிணமிக்கவில்லை. வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு வந்த நல்ல செய்தி, பெட்ரோல் விலை ஐந்து ரூபாயும், டீசல் விலை மூன்று ரூபாயும் குறையவுள்ளது. பெட்ரோல் விலை 10 ரூபாய் அளவு குறையும் என்று எதிர்பார்த்தன. குறைவு குறைவாக இருக்கிறது. ஆதலால், சந்தை எப்படி பரிணமிக்கப் போகின்றன என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 147 டாலராக உச்ச பட்சமாக இருந்தது, தற்போது 44 டாலர் அளவில் வந்துள்ளது. கிட்டத்தட்ட 66 சதவீத தள்ளுபடியில் வந்து நிற்கிறது. ஆனால், தற்போது பெட்ரோல் விலையோ 10 சதவீதம் அளவு தான் குறைக்கப் பட்டிருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்போசிஸ் வரும் ஆண்டில் ஆள் எடுப்பதைக் குறைக்கும் என்று செய்தி வந்தவுடன், அது சந்தையில் சாப்ட்வேர் பங்குகளை ஒரு இறக்கு இறக்கிப் பார்த்தது வெள்ளியன்று. ஏனெனில், இன்போசிஸ் இந்த முடிவை எடுத்தால், மற்ற கம்பெனிகளுக்கும் அதே போலத்தானே இருக்கும் என்ற முடிவுக்கு சந்தை வந்தது. அது, சந்தையை அசைத்துப் பார்த்தது. இது தவிர, வெள்ளியன்று வங்கிப் பங்குகளும், கட்டுமானத்துறை பங்குகளும் குறைந்தன. மும்பையில் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாதது ஒரு பெரிய நிம்மதி. வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள் இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் எப்படி இருக்கும்? எல்லாரும் தற்போது எதிர்பார்ப்பது சனியன்று ரிசர்வ் வங்கி ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ சதவீதத்தை முறையே 200 புள்ளிகளும், 125 புள்ளிகளும் குறைக்கலாம் என்பது தான். அப்படி குறைக்கப்பட்டால், சந்தையில் குறைந்து வரும் பணவீக்கம், பெட்ரோல் விலை குறைப்பு ஆகியவைகளை வைத்து திங்களன்று மேலே செல்லும். வரும் 12ம் தேதி இண்டஸ்டிரியல் டேட்டா புள்ளிவிவரம் வரவுள்ளது. அது ஒரு முக்கிய நிகழ்வாகும். அதைப் பொறுத்தும் சந்தையில் மாற்றங்கள் இருக்கும்.

ஊழியர்களை கட்டாய விடுப்பு எடுக்க சொல்கிறது ஜெட்ஏர்வேஸ்

செலவினங்களை குறைக்கும் நோக்கமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது ஊழியர்களை கட்டாய விடுப்பில் செல்ல நிர்பந்தம் செய்கிறது. இதன் மூலம் சம்பளம் குறைத்து கொடுக்கும் முறையை கையாள்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
கட்டாய விடுப்பில் செல்ல நிர்பந்திப்பதால் ஊழியர்கள் செய்வதரியாமல் உள்ளனர். ஊழியர்கள் தங்களது முடிவை தெரிவிக்க டிசம்பர் 15ம் தேதி வரை கெடு அளித்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். இந்த அறிவுப்பு பற்றி ஜெட் ஏர்வேஸ் உயர் அதிகாரியிடம் கேட்ட பொழுது பதில் தர மறுத்து விட்டார். தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் தனது ஊழியர்கள் பல வழிகளில் நெருக்கடியை கொடுத்து வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அக்டோபர் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது 1900 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அறிவித்து பின்னர் பல்வேறு நெருக்கடி காரணமாக அந்த முடிவை பின்வாங்கியது நினைவிருக்கலாம்.
தமிழில் ஒர் புதிய அத்தியாயம் : தமிழ் SPELL CHECK மென்பொருள்

இன்று தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் (இ-கலப்பை, NHM , மற்றும் கீமேன்)  போன்ற மென்பொருட்கள் இருந்தாலும் அச்சுத்துறைக்கு ஏற்ற ஒரு மென்பொருளாக இதுவரை ஸ்ரீலிபி மற்றும் அனு போன்ற மென்பொருட்களை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் புதிய மென்பொருளை சர்மா ப்ராடக்ஸ் மற்றும் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள விசைத்தமிழ் எனும் மென்பொருள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு மென்பொருளாகவே இருக்கிறது. அந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை!

விசைத்தமிழ்
எந்த ஃபான்ட் லும், எல்லா தட்டச்சு முறைகளிலும்  தமிழில் தட்டச்சு செய்ய என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள்

விசைத்தமிழ் என்ற மென்பொருள் மூலம் நமது கணினியில் தமிழில் தட்டச்சு செய்யலாம் உங்களுக்கு தெரிந்த உள்ளீட்டு முறையில், உதாரணத்திற்கு நீங்கள் செந்தமிழ் பாண்ட்களை பயன்படுத்தினால் அந்த செந்திமிழ் பாண்ட் ஐ பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த டைப்-ரேட்டர் , தமிலிங்கிஸ் முறை போன்று 12 வகையான முறையில் பேஜ்மேக்கர், வேர்டு, அடோப் இன்டிசைன், உட்பட எல்லா மென்பொருள்களிலும் தட்டச்சு செய்யமுடியும்.

அதோடு விண்டோஸ் XP,  முதல் விண்டோஸ்  விஸ்டா  வரை windows – ன் எல்லா ஆபரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கும்.

தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், 10-ற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் உள்ளன.இவை எல்லாவற்றிலும் இயங்கூடிய வகையில் இந்த மெனபொருட்கள் வந்துள்ளது குறிப்பிட்டத் தக்கது

இந்த மென்பொருட்களோடு உடன் வரும் துணை மென்பொருட்கள்


ஸ்பெல் செக் : தமிழில் முதன்முறையாக 23 இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழ் Sell Checker , விசைத்தமிழ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் எந்த மென்பொருளில் டைப் செய்தாலும் ஒவ்வொரு வார்த்தையினையும் சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை கண்டறிந்து அதற்கான சரியான வார்த்தையை உடனே காண்பிக்கும் அதிவேக Sell Checker இம் மென்பொருளில் உள்ளது.

ஆட்டோ கரெக்ட் : தமிழில் இதுவரை  வந்துள்ள எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கபட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. Ms-Word ன் Spell check போன்று

“ஃபான்ட் சாம்ப்ளர்” : ஒரே நேரத்தில் பல்வேறு ஃபான்ட்களில் வரும் எழுத்துருவை ஃப்ரிவீயூ காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.

தமிழ் – ஆங்கிலம் அகராதி (டிக்ச்னரி) : இதில் ஏறத்தாழ 60,000 ஆங்கில வார்த்தைகளுக்கு 2,30,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலுருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். யுனிக்கோடிலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விசைத்தமிழ் கொண்டுள்ளது.

Font Analyzer : ஃபான்ட் பகுப்பாய்வு மென்பொருள்

இந்த மென்பொருளின் மூலம் நமக்கு வந்திருக்கும் ஃபான்ட் எந்த முறையில் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் முறைக்கு மாற்றிவிடலாம்.
உதாரணத்திற்கு  வானவில் ஃபான்ட் பயன்படுத்துபவர்கள் பாமினி ஃபான்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி 117 வகையான ஃபான்ட்களிலிருந்து நமக்கு வேண்டும் ஃபான்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
(உம்) இளங்கோ <-> வானவில், இளங்கோ <-> யுனிகோடு , டாம்  <-> யுனிகோடு, போன்று எந்த ஃபான்ட் முறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

Tamil Sorting : அகர வரிசைப்படுத்துதல்

ஆங்கில மென்பொருட்களில் உள்ள அகர வரிசைப்படுத்துதல் போன்று தமிழில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முறைகளிலும் நீங்கள் அகர வரிசைப்படுத்தி வைக்கலாம்.

இந்த மென்பொருளை தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற ட்ரான்ஸ்லிட்ரேஷன் விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், யுனிக்கோடிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு www.tamil.sarma.co.in

மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை தமிழில் அறிமுகப்படுத்த தமிழ்வணிகம் இன் தளத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: