ஏடி & டி, அடோப் ஊழியர்கள் 12,600 பேர் பணி நீக்கம்

அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் பணிநீக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெலிகாம் நிறுவனமான ஏடி & டி மற்றும் அடோப் நிறுவனங்கள் தங்களது 12,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவித்துள்ளது

அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் பணிநீக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெலிகாம் நிறுவனமான ஏடி & டி மற்றும் அடோப் நிறுவனங்கள் தங்களது 12,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவித்துள்ளது

. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் பல நிறுவனங்கள் சிக்கி திண்டாடி வருகின்றன. சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும். வங்கி, ஏர்லைன்ஸ், ஸ்டீல், ஐடி போன்ற பல்வேறு பிரிவு நிறுவனங்களில் தொடர்ந்து ஆட்குறைப்பு நடந்தேறி வருகிறது. தற்போது டெலிகாம் துறையில் சிறந்து விளங்கும் ஏடி & டி நிறுவனம் தனது 12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஆட்குறைப்பின் மூலம் செலவினங்களை குறைக்க முடியும் என்று அந்நிறுவன செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தாண்டின் நான்காவது காலாண்டில் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. இதே போல அடோப் நிறுவனமும் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தி அறிவித்துள்ளது

 

.
அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களில் மட்டும் இதுவரை 2,50,000க்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையிலப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்தபடி உள்ளது. இந்த நிலை இப்படியே நீடிக்கும் போது ஒபாமா நிச்சயம் அவுட்சோர்சிங்கில் கைவைப்பார் என்பதிலும் சந்தேகமில்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: