தென்றல் வாழ்க்கையில் வில்லனாக வந்த பொருளாதார நெருக்கடி!

சென்னை: சுரேஷும், மாலதியும், இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்ன நடந்து விட்டது என்று கேட்கிறீர்களா, தொடர்ந்து படியுங்கள்.

கோவையைச் சேர்ந்தவர் சுரேஷ். எம்.பி.ஏ படித்தவர். அவருக்கும் மாலதிக்கும் செப்டம்பரில் திருமணமானது.

சுரேஷ் ஒரு முன்னணி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மாலதிக்கு, எச்.டி.எப்.சி வங்கியின் ரீடெய்ல் வங்கிப் பிரிவில் கேஷியர் வேலை.

திருமணத்திற்குப் பின்னர் கணவனும், மனைவியுமாக சொந்த வீடு கட்ட ஆசைப்பட்டனர். அவர்களின் கனவும் பலித்தது, வீடும் வளர ஆரம்பித்தது.

வீடு மட்டும் கட்டினால் போதுமா, கண் கவர் பர்னிச்சர்கள், இத்யாதி, இத்யாதிகளை வாங்க வேண்டாமா. ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை செலவழித்து ஆசை ஆசையாக ஏகப்பட்ட ஐட்டங்களை வாங்கிப் போட்டார் சுரேஷ்.

அப்புறம் …?:

எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் திடீரென ‘வில்லன்’ குறுக்கிட்டான் சுரேஷ் மாலதி வாழ்க்கையில்.

ஒரு ‘நல்ல நாளாகப்’ பார்த்து சுரேஷை வேலையை விட்டு நீக்கியது அவர் வேலை பார்த்து வந்த நிதி நிறுவனம். தலையில் இடி விழுந்தது போன்ற நிலைக்கு ஆளானார் சுரேஷ்.

அது மட்டுமா, மாலதியின் வேலைக்கும் விழுந்தது அடி. அவருக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு வேலையைப் பார்க்குமாறு வங்கி பணிக்க, என்ன செய்வதென்று தெரியாமல், வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மாலதிக்கு – அவரும் ராஜினாமா செய்தார்.

ஏன் இப்படி …?:

கோபத்துடன் காணப்படும் சுரேஷ் இப்படிக் கூறுகிறார் .. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, ஆள் குறைப்பு போன்ற செய்திகள் சூடாக பரவிக் கொண்டிருந்ததால், கடந்த அக்டோபர் எனது எச்.ஆர் மேனேஜரை பார்த்து எங்களது பணி பாதுகாப்பு குறித்து கேட்டேன். அதற்கு அவர், எந்தவித ஆள் குறைப்பும் இருக்காது என்று உறுதியளித்தார்.

ஆனால் இப்போது சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நீக்கி விட்டனர். முன்பே இதுகுறித்து கூறியிருந்தால் நான் அதற்கேற்ப தயாராகியிருப்பேன். நிலைமையை சமாளிக்க ஆயத்தமாகியிருப்பேன் என்கிறார் வேதனையுடன்.

கடந்த 2 மாதங்களாகவே கடன் வழங்குதலில் தேக்க நிலை. காரணம், பொருளாதார நெருக்கடி. சுரேஷ் வேலை பார்த்த நிறுவனத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் இந்த நிலைதான்.

இந்த நிலையில், அதைக் காரணம் காட்டிய சுரேஷ் நிறுவனத்தின் தலைவர், வேறு எந்தப் பிரிவுக்கும் உங்களை மாற்ற முடியாது. எனவே வேலையை விட்டு நீக்குகிறோம் என்று காரணம் கூறியுள்ளாராம்.

எந்தவித முன்னறிவிப்போ அல்லது இழப்பீடோ இல்லாமல் சட்டென்று சுரேஷ் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் நிறுவனத்தின் பக்கம் தவறு இல்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, சுரேஷின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று காரணம் கூறி அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளனராம். அந்த நிறுவனத்தின் 60 சதவீத ஊழியர்கள் விரைவில் நீக்கப்படவுள்ளனராம்.

இது சுரேஷின் நிலை. மாலதியின் நிலையோ மகா கவலைக்கிடம்.

அவர் செஞ்சூரியன் பாங்க் ஆப் பஞ்சாபில் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்தை ஐந்து மாதங்களுக்கு முன்பு எச்.டி.எப்.சி எடுத்துக் கொண்டது.

பஞ்சாப் பேங்க்கில் கேஷியராக இருந்து வந்த மாலதியை, திடீரென சேமிப்புக் கணக்கு தொடங்குவது தொடர்பான பணிக்கு மாற்றம் செய்தது வங்கி நிர்வாகம். ஆனால் இதில் அவருக்கு சுத்தமாக பயிற்சியோ, அனுபவமோ இல்லை என்பதால் வேலையே பார்க்க முடியாத நிலை.

இதையடுத்து வேறு வழியில்லாமல் வேலையை விட நேரிட்டது மாலதிக்கு.

இப்படி நட்டாற்றில் விடப்பட்ட சுரேஷுக்கு சொந்த ஊரான கோவைக்குப் போய் தந்தையின் பிசினஸில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை.

வீட்டைக் கட்டி, லட்சக்கணக்கில் பொருட்களையும் வாங்கிக் குவித்து விட்ட நிலையில், வேலை இல்லை என்ற குழப்பமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சுரேஷும், மாலதியும் விரைவில் கோவைக்கே திரும்பிச் செல்லவிருக்கிறார்களாம்.

பொருளாதார நெருக்கடியும், ஆள் குறைப்பு நடவடிக்கைகளும் தலைக்கு மேல் தொங்கும் கத்திகளாக மாறியுள்ளதால், கைக்கு மீறி செலவு செய்வோருக்கு சுரேஷ், மாலதி ஒரு பாடமாக அமைந்துள்ளனர்.

யுஎஸ் பொருளாதாரம் தேக்கம்: 2007லிலேயே தொடங்கி விட்டது-குழு

வாஷிங்டன்: அமெரிக்க பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த சரிவு 2007ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டதாக தேசிய பொருளாதார ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் இதுவரை சந்தித்திராத சரிவு நிலைக்குப் போய் விட்டது. ஆனால் இந்த சரிவு திடீரென ஏற்பட்டதல்ல, கடந்த ஆண்டே இது தொடங்கி விட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. 2ம் உலகப் போருக்குப் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக அமெரிக்க பொருளாதாரம் பெரும் அடியை சந்தித்துள்ளதாகவும் இந்த குழு தெரிவிக்கிறது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கமிட்டி உறுப்பினர்கள் கூட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது

2001ம் ஆண்டுடன் அமெரிக்காவில் பொருளாதார விரிவாக்கம் நின்று போய் விட்டது. 2001ம் ஆண்டுக்கு முன்பு பத்து ஆண்டுகள் மட்டுமே பொருளாதார விரிவாக்கம் சிறப்பாக இருந்தது.

தற்போதைய பொருளாதார சரிவு நிலை அடுத்த ஆண்டு மத்தி வரை நீடிக்கும். இதற்கு முன்பு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை 70களில் ஒரு முறையும், 80களில் ஒருமுறையும் பொருளாதாரம் சரிந்தது. ஆனால் அவற்றை விட இப்போதுதான் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சரிவு மேலும் ஆழமாகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் இதைத் தாண்டி நாம் போயாக வேண்டும். இந்த சரிவு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதை கணிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்திக் குறைவு பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் ஜிடிபி விகிதம் சிறப்பானதாகவே இருந்தது. 2007ம் ஆண்டு டிசம்பர் வரை ஊதிய உயர்வு அதிகரித்தவண்ணம் இருந்ததாக கூறும் இந்தக் குழு, அதன் பின்னர் மாதந்தோறும் ஊதியக் குறைவு நிலவி வருவதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குப் பிறகுதான் பொருளாதார சரிவு விஸ்வரூபம் எடுத்ததாகவும் அது தெரிவிக்கிறது.

இந்தக் குழுவின் அறிக்கையை அமெரிக்க வெள்ளை மாளிகை ஏற்றுக் கொண்டுள்ளது. பொருளாதார சரிவையும் அது ஒப்புக் கொண்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி பிராட்டோ கூறுகையில், பொருளாதார சரிவு உண்மைதான். இதை ஏற்றுக் கொள்கிறோம். அதேசமயம், நிதி நிலைமை மேம்படும் என நம்புகிறோம். கடன் சந்தைகள் சகஜ நிலைக்குத் திரும்பும் என நம்புகிறோம். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம். அந்த சாதக நிலையை மனதில் கொண்டு அரசு செயல்படும் என்றார்.

இதற்கு முன்பு ரிச்சர்ட் நிக்ஸன் அதிபராக இருந்தபோதுதான் அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது புஷ்ஷுக்கு அந்தப் பெருமை கிடைத்துள்ளது

ஐடி துறைக்கு இன்போஸிஸ் அதிகம் செலவழிக்கும் ரகசியம்

பெங்களூரு: உலகின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களான பிரிட்டிஷ் டெலிகாம், பேங்க் ஆப் அமெரிக்கா போன்றவை ஐடி துறையில் தங்கள் முதலீட்டை கணிசமாகக் குறைத்துக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ் கூடுதல் முதலீடு செய்யத் தயாராகிறது.

இந்த ஆண்டு ஐடி துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி்ப் பணிகளுக்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது இன்போஸிஸ்.

இதன் மூலம் பெரிய நிறுவனங்களை தங்கள் வாடிக்கையாளராக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறது இன்போஸிஸ்.

இதற்காக கூடுதல் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளது

பெங்களூரு: உலகின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களான பிரிட்டிஷ் டெலிகாம், பேங்க் ஆப் அமெரிக்கா போன்றவை ஐடி துறையில் தங்கள் முதலீட்டை கணிசமாகக் குறைத்துக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ் கூடுதல் முதலீடு செய்யத் தயாராகிறது.

இந்த ஆண்டு ஐடி துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி்ப் பணிகளுக்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது இன்போஸிஸ்.

இதன் மூலம் பெரிய நிறுவனங்களை தங்கள் வாடிக்கையாளராக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறது இன்போஸிஸ்.

இதற்காக கூடுதல் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளது

சிறந்த சேவை, புதுமையான திட்டங்கள் மற்றும் திறமையான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு எப்போதுமே வாடிக்கையாளர்கள் முன்னுரிமை தருவார்கள். அந்த நம்பிக்கையில்தான் பல கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்துக்கு எங்கள் நிறுவனம் தயாராகி வருகிறது என்கிறார் இன்போஸிஸ் துணைத் தலைவர் சுப்பு கோபராஜூ.

சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனத்தை இதே முறையில்தான் தங்கள் வாடிக்கையாளராக்கிக் கொண்டது இன்போஸிஸ். இன்று இன்போஸிஸ் நிறுவனத்துக்கு உள்ள முக்கியமான மூன்று வாடிக்கையாளர்களில் பிரிட்டிஷ் டெலிகாம் முதலிடம் வகிக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: