மும்பை ஹோட்டல்களில் நடந்த 60 மணி நேர தாக்குதல் : ரூ.4,000 கோடி நஷ்டம்

மும்பை : இந்தியாவின் பொருளாதார தலைநகர் மும்பையில், பிரதான இரு ஹோட்டல்களில் சுமார் 60 மணி நேரம் நடந்த தொடர் தீவிரவாத தாக்குதலால் ரூ.4,000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தொழில் வல்லுனர்கள் சொல்கிறார்கள். தீவிரவாதிகள் புதன் இரவு ஆரம்பித்த திடீர் தாக்குதல் சனிக்கிழமை மதியம் தான் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனால் அந்த பகுதியில் இருக்கும் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் மூடியே கிடக்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.1,000 கோடி வீதம் ரூ.4,000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ்.ரவாத் தெரிவிக்கிறார். மும்பையில் வியாழன் அன்று, மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை, மற்றும் மற்ற முக்கிய பொருட்களின் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான கார்பரேட் அலுவலகங்களில் ஊழியர்கள் வராமல் வேலை நடக்கவில்லை. நாள் ஒன்றுக்கு ரூ.32,700 கோடிக்கு வர்த்தகம் நடக்கும் மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை மற்றும் மற்ற முக்கிய பொருட்களின் சந்தை ஒரு நாள் நடக்கவில்லை. நகரிலேயே பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அதிகம் மக்கள் கூடும் அந்த பகுதி கடந்த மூன்று நாட்களாக வெறிச்சோடி கிடக்கிறது. சினிமா, டெலிவிஷன் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இந்த மாதிரி பலவகை தொழில்களும் முடங்கப்பட்டு விட்டதால் மொத்தமாக ரூ.4,000 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்கிறார் ரவாத்.

சேதமடைந்த தாஜ் ஹோட்டலை பார்வையிட்டார் ரத்தன் டாடா

மும்பை : தாஜ் குழுமத்தின் சேர்மன் ரத்தன் டாடா இன்று, அவருக்கு சொந்தமான, தீவிரவாதிகளால் கடும் தாக்குதலுக்கு உள்ளான தாஜ்பேலஸ் ஹோட்டலை பார்வையிட்டார். தீவிரவாதிகளுக்கும் தேசிய பாதுகாப்பு படையினருக்குமிடையே இன்று காலையில் நடந்த கடைசி துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு, அங்கு அமைதி திரும்பியதும் ரத்தன் டாடா அங்கு வந்து ஹோட்டலை பார்வையிட்டார். அவருடன் டாடா ஹோட்டல்ஸ் இன் வைஸ் சேர்மன் கிருஷ்ணகுமார் உள்பட உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும், 105 வருட பாரம்பரிய ஹெரிடேஜ் ஹோட்டலையும் அவர்கள் பார்வையிட்டனர். இந்தியாவின் பொருளாதார தலைநகர் மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் ஹோட்டலில், சுமார் 60 மணி நேரம் நடந்த கடும் துப்பாக்கி சண்டையால் அந்த கட்டிடம் பெருத்த சேதமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தம் 529 ரூம்களை கொண்ட அந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீயை அணைக்க மூன்று அதி நவீன தீ அணைப்பு வண்டிகள் வந்திருந்தன. இது குறித்து தாஜ் ஹோட்டல் உயர் அதிகாரி ஒருவர் சொன்னபோது, ஹோட்டலை சேர்ந்த சில முக்கிய அதிகாரிகள் மட்டும் சேதமடைந்திருக்கும் ஹோட்டலுக்குள் சென்றனர். ஆனால் ரத்தன் டாடா உள்ளே செல்லவில்லை. வெளியேயே நின்று கொண்டார் என்றார். அப்போது பத்திரிக்கையாளர்களியை பேசிய ரத்தன் டாடா, இது போன்ற சிக்கலான நேரத்தில் இந்தியர்களாகிய நாம் எல்லோரும் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக இருப்போம், இதனாலெல்லாம் நாம் சோர்ந்து வீழ்ந்து விட மாட்டோம் என்பதை அவர்களுக்கு காண்பிப்போம், இந்தமாதிரி மோசமான நடிவடிக்கைகளால் நாம் இன்னும் கொஞ்சம் வலுவானவர்களாகத்தான் ஆவோம் என்பதை அவர்களுக்கு புரிய வைப்போம் என்றார்

 

மும்பை ஹோட்டல்கள் தாக்குதல் : பெரும் தொகை கொடுக்க தயாராக வேண்டிய நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

மும்பை : தெற்கு மும்பையில் இருக்கும் தாஜ் மஹால் பேலஸ் மற்றும் ஓபராய் டிரிடென்ட் ஹோட்டல்களில் கடந்த புதன்கிழமை இரவில் இருந்து தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலால், அந்த இரு ஹோட்டல்களிலும் உயிர் சேதத்துடன் பெருமளவு பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சேதங்களுக்கெல்லாம் யுனைட்டட் இன்டியா இன்சூரன்ஸ் மற்றும் டாடா ஏ.ஐ.ஜி இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. டாடாவின் இன்டியன் ஹோட்டல்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமான தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல், டாடா ஏ.ஐ.ஜி. இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும், ஒபராய்க்கு சொந்தமான ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸின் டிரிடென்ட் ஹோட்டல், யுனைட்டட் இன்டியா இன்சூரன்ஸிடமும் இன்சூர் செய்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை, தீவிரவாத தாக்குதல் ரிஸ்க் மற்றும் தேர்ட் பார்டி இன்சூரன்ஸ் ஆகியவை கவர் ஆகும் என்று சொல்லப்படுகிறது. டிரைடன்ட் ஹோட்டலை விட தாஜ் ஹோட்டலில்தான் அதிக அளவில் தாக்குதல் நடந்திருக்கிறது. எனவே அங்கு அதிகம் கிளைம் இருக்கும் என்கிறார்கள். தீ பிடித்ததனால் ஏற்பட்ட சேதத்துடன், தீவரவாத தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதமும் இதில் கவர் ஆகும் என்கிறார்கள். ஆனால் ஹோட்டல்கள் செயல்படாமல் இருக்கும் நாட்களில் ஏற்படும் வருமான இழப்பும் இன்சூரன்ஸில் கவர் ஆகுமா என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் இந்த இரு இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பல கோடி ரூபாய்களை கொடுக்க தயாராக இருக்க வேண்டியதுதான்

இந்தியாவில் ‘ லே – ஆஃப் ‘ இல்லை : மெர்சிடஸ் இந்தியா அறிவிப்பு

கோல்கட்டா : சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா, இந்தியாவில் ஒரு நாள்கூட லே – ஆஃப் செய்யப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. பொருளாதார சீர்குழைவின் காரணமாக சர்வதேச அளவில் கார் விற்பனை குறைந்திருந்த போதும் நாங்கள் இந்தியாவில் ஒரு நாள் கூட ‘ லே – ஆஃப் ‘ செய்யப்போவதில்லை என்று அந்த கம்பெனியின் போர்டு மெம்பர் சுஹாஸ் கட்லாஸ்கர் தெரிவித்தார். எங்களது இந்திய நிறுவனத்தில் 450 – 500 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் கடந்த அக்டோபரில் இருந்தே எங்கள் நிறுவனம் பிரச்னையில்தான் இருந்து வருகிறது. இருந்தாலும் கூடிய விரைவில் பிரச்னை தீர்ந்து விடும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால் இந்திய பொருளாதாரம் பலமான அஸ்திவாரத்தை கொண்டதாக இருக்கிறது.அதனால்தான் பல நாடுகளில் பொருளாதாரம் சீர்குழைந்து இருக்கும் போது இந்தியாவில் அது அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நாங்கள் இந்த வருட இலக்கான 3,000 கார்களை முதல் 10 மாதங்களிலேயே விற்று விட்டோம் என்றார் அவர்.

ஒபராய் ஹோட்டல் தாக்குதலில் யெஸ் பேங்க் சேர்மன் கொல்லப்பட்டார்

மும்பை : மும்பை ஒபராய் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் யெஸ் பேங்க் சேர்மன் அசோக் கபூர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த புதன் கிழமை அன்று இரவில் மும்பையில் பல இடங்களில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் இரண்டு இடங்கள் பிரபல சொகுசு ஹோட்டல்களான தாஜ் மஹால் பேலஸ் மற்றும் ஓபராய் டிரைடன்ட். தீவிரவாதிகள் நுழைந்த அதே புதன் கிழமை இரவுதான் ஓபராய் ஹோட்டலுக்கு மனைவியுடன் டின்னர் சாப்பிட போயிருந்தார் யெஸ் பேங்க் சேர்மன் அசோக் கபூர். டின்னர் சாப்பிடப்போயிருந்த அசோக் கபூர், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அங்குதான் இருந்திருக்கிறார். அதன் பின்னர் நேற்று மாலை வரை அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. தீவிரடவாதிகளுடன் தாக்குதல் நடத்த ஓபராய் ஹோட்டலுக்குள் நுழைந்திருந்த கமாண்டோ படையினர், ஓபராய் ஹோட்டலில் எல்லா வேலைகளும் முடிந்து என்றும், எல்லோரையும் வெளியேற்றி விட்டேம் என்றும் அறிவித்து விட்டனர். இருந்தாலும் அசோக் கபூர் என்ன ஆனார் என்றும் அவர் உயிருடன் தப்பி விட்டாரா அல்லது இறந்து விட்டாரா என்றும் தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில் அவர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அசோக் கபூருடன் சென்றிருந்த அவரது மனைவி மது கபூர் கமாண்டோ படையினரால் காப்பாற்றப்பட்டு விட்டார். ஹோட்ட<லுக்குள் என்ன நடந்தது என்று சொன்ன மது கபூர், உள்ள நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவன் எங்களுக்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்தான். அந்த குழப்பமான சூழ்நிலையில் நாங்கள் சிலர் எப்படியோ அங்கிருந்து நகர்ந்து விட்டோம். பின்னர் ஒரு ஸ்பானிஷ் தம்பதியின் உதவியுடன் நான் ஒரு இடத்தில் பாதுகாப்பாக பதுங்கிக்கொண்டேன். அப்போதுதான் தெரிந்தது, அங்கு என் கணவர் இல்லை என்பது. நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தேன். அவர் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. பின்னர் நான் கமாண்டோ படையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். அதன்பின் நான் அவரை பார்க்கவே இல்லை என்றார்.

 டாடா கெமிக்கல்ஸின் புதிய மேலாண் இயக்குனராக முகுந்தன் நியமனம்

மும்பை : டாடா கெமிக்கல்ஸின் புதிய மேலாண் இயக்குனராக முகுந்தன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்போதிருக்கும் மேலாண் இயக்குனர் ஹோமி குஷ்ரோகான் டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதால் அடுத்த மேலாண் இயக்குனராக முகுந்தன் நியமிக்கப்பட்டிருக்கிறார்

ஹோண்டா சீல் நிறுவனத்தின் ‘ 3 வசதி ‘ அவுட்லெட் மதுரையில் துவக்கம்

மதுரை : சேல்ஸ், சர்வீஸ் மற்றும் ஸ்பேர்ஸ் ஆகிய 3 வகை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவுட்லெட்டை மதுரை தெற்கு வெளி வீதியில் இருக்கும் சுந்தரம் ஹோண்டா இடத்தில் ஹோண்டா சீல் நிறுவனம் திறந்திருக்கிறது. ஹாண்டா சீல் இந்தியாவின் தலைவர் மற்றும் சி.இ.ஓ.,மஸாஹிரோ தகதேகவா இதனை திறந்து வைத்தார்

கூடுதல் மின்சாரத்தை உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு அபராõதம் விதிக்க மின்வாரியத்திற்கு அனுமதி

சென்னை : கொடுக்கப்பட்ட அளவை விட கூடுதல் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது

மத்திய அரசுக்கு 7 சதவீத டிவிடெண்ட் கொடுக்கும் ரெயில்வே

புதுடில்லி : மத்திய அரசுக்கு 2008 – 09 நிதி ஆண்டிற்கு 7 சதவீத டிவிடெண்ட்டை ரெயில்வே துறை கொடுக்கிறது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் 6.5 சதவீதமாக இருந்தது.

மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை
அடிப்படை கட்டமைப்பு துறைக்கு கடன் வசதியை அதிகரிக்க திட்டம்
நிரஞ்சன் பாரதி
புதுடெல்லி
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பொதுத் துறை வங்கிகளின் மண்டல தலைவர்களை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளார். நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்காக பாரத ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் வங்கிக் கடன் பெறுவதில் இடர்பாடுகள் உள்ளதாக முக்கிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள அனைத்து மண்டல தலைமை அலுவலகங்களுக்கும் சென்று ப.சிதம்பரம் இது குறித்து விவாதிக்க உள்ளார்.
நடவடிக்கை
அடிப்படைக் கட்டமைப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அவற்றின் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவில் வங்கிகளிடமிருந்து கடன் பெற இயலவில்லை என்று புகார் கூறியுள்ளதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் இதற்கு உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டிசம்பர் மாதம் 5&ந் தேதி முதல் 8&ந் தேதி வரை பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளின் மண்டல தலைவர்களை சந்திக்க உள்ளார். அப்போது அவர் அடிப்படைக் கட்டமைப்பு நிறுவனங்களுக்கு தாமதமின்றியும், போதிய அளவிற்கும் கடன் வழங்க வேண்டும் என மண்டல தலைவர்களைக் கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.
முக்கியத்துவம்
இது குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, Òஅடிப்படைக் கட்டமைப்பு துறைகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இத்துறைகளில் திட்டப் பணிகள் தங்கு தடையின்றி நிறைவேற்றப்பட வேண்டுமானால் கடன் உதவிகள் தாராளமாக வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் இத்துறையினருக்கு வழங்கப்படும் கடன் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே நிதி அமைச்சரின் முக்கிய நோக்கமாகும்Ó என்று தெரிவித்தார்.
Òதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவிக்கான உத்தரவாதம் அளிக்கவும், நிறுவனங்களின் தற்போதைய விண்ணப்பங்களுக்கு உடனடியாக அங்கீகாரம் அளிக்கவும் பொதுத் துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். அதே சமயம் தனியார் துறை வங்கிகளின் சுமைகளை முழுமையாக பொதுத் துறை வங்கிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாதுÓ என்று நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, Òஏற்கனவே தொடங்கப்பட்டு, முற்றுப் பெறாத நிலையில் உள்ள திட்டங்களுக்கு கடன் வழங்குவது நிறுத்தப்படக் கூடாது என்று வங்கிகளை மத்திய அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் சில நிறுவனங்கள் கடனை திரும்பச் செலுத்தாமல் குளறுபடி செய்து, நம்பத்தன்மையை இழந்திருக்குமானால் அத்தகைய நிறுவனங்கள் குறித்து அதிகம் பரிசீலனை செய்ய இயலாதுÓ என்றார்.


பொருளாதார மந்த நிலையால்
பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை
அசிஷ் அகர்வால்
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் சிறிய நிறுவனங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளள. பெரிய நிறுவனங்களின் வருவாய் மற்றும் நிகர லாபம் பாதிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில், 2,200 நிறுவனங்கள் ஈட்டிய வருவாய், லாபம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவை வருவாய், லாபத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
சிறிய நிறுவனங்கள்
இந்தஆய்வின்படி, ஜூலை&செப்டம்பர் மாத காலத்தில் சிறிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நடுத்தர நிறுவனங்களின் வருவாய் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் நிகர லாபம் சரிவடைந்துள்ளது. அதே சமயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி. மற்றும் எஸ்.பீ.ஐ. போன்ற நிறுவனங்களின் வருவாய் 40 சதவீதமும், நிகர லாபம் 8 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஆய்வில் ஏ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களாகும். இவை, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.2,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிறுவனங்களாகும்.

பார்தி ஏர்டெல் நிறுவனம்
செல்போன் சேவை துறையில் தொடர்ந்து முதலிடம்
தீப்ஷிகா மோங்கா
புதுடெல்லி
இந்திய செல்போன் சேவை துறையில் முன்னிலையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. ஜி.எஸ்.எம். செல்போன் சேவையளித்து வரும் இந்நிறுவனம் சென்ற நான்கு மாதங்களில், புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதிலும், வருவாய் அடிப்படையிலும் சி.டீ.எம்.ஏ. செல்போன் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் விஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பம்
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5.51 கோடியாக இருந்தது. அதே சமயம் சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் சேவை வழங்கி வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ், எச்.எஃப்.சி.எல். மற்றும் ஷியாம் டெலிகாம் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த அளவில் 5.70 கோடியாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 7.20 கோடியாக உயர்ந்தது. இதே மாதத்தில் இதர நிறுவனங்களின் சி.டீ.எம்.ஏ. வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 7.18 கோடி என்ற அளவில்தான் இருந்தது.
27 லட்சம்
சென்ற அக்டோபர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 27 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துக் கொண்டது. இதனையடுத்து மொத்த எண்ணிக்கை 8.02 கோடியாக அதிகரித்தது. இதே மாதத்தில் சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் செல்போன் சேவை வழங்கி வரும் பிற நிறுவனங்கள் மொத்தம் 22.90 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. இதனையடுத்து இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 7.90 கோடியாக உள்ளது.
ஜி.எஸ்.எம். சேவை
நடப்பு ஆண்டில், இதுவரையிலான காலத்தில், ஒயர் இணைப்பு இல்லாத தொலைபேசி சேவைப் பிரிவில், பார்தி ஏர்டெல் மொத்தம் 2.50 கோடி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அதே சமயம் சி.டீ.எம்.ஏ. சேவை நிறுவனங்கள் 2.18 கோடி புதிய வாடிக்கையாளர்களைத்தான் பெற்றுள்ளன.
செல்போன் சேவையில் சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பம்தான் உயர்ந்தது என்று கருதப்பட்டாலும், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்திற்குதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து காணப்படுகிறது. சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் செல்போன் சாதனம் மற்றும் சேவையை ஒரே நிறுவனமே வழங்கும். அதாவது சி.டீ.எம்ஏ. செல்போனில் பிற நிறுவனங்களின் Ôசிம்Õ கார்டை பயன்படுத்த இயலாது. அதே சமயம் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் ஒரே செல்போன் சாதனத்தில் பல நிறுவனங்களின் Ôசிம்Õ கார்டுகளைப் பயன்படுத்த இயலும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: