ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன? ஜெயலலிதா அறிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் உள்ள 22 தொலைபேசி பகுதிகளில் 13 பகுதிகளுக்கான பணிகளை துவக்க ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்துக்கு ராசாவின் அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் அளித்தது. ராசாவின் தயவால் பயனடைந்த மற்றொரு நிறுவனம் யுனிடெக் டெலிகாம். ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பிக்கும்போது இந்த இரு நிறுவனங்களுக்குமே தொலைதொடர்பு துறையில் எந்தவித அடித்தளமோ, அனுபவமோ கிடையாது. ஆனாலும், ரூ.1,650 கோடி வீதம் இந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது. இந்த கட்டணமும் 2001ல் நிர்ணயம் செய்யப்பட்டது.
 
ஒதுக்கீடு செய்ததோ 2008ம் ஆண்டு.
யுனிடெக் ரூ.2,000 கோடி கடன் வாங்கி, அதிலிருந்து ரூ.1,650 கோடியை ஸ்பெக்ட்ரம் உரிமத்தொகையாக செலுத்தியது. இந்த நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை, உலகின் 7வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான நார்வே டெலினார் நிறுவனம் ரூ.6,120 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
இதன் மூலம், 22 வட்டங்களுக்கான உரிமத்தை பெற்று அதற்கான பணிகளையே இன்னமும் தொடங்காத யுனிடெக் நிறுவனத்தின் மதிப்பு ரூ.11,620 கோடியாக பெருகியுள்ளது. அதாவது, 1,650 கோடி செலுத்தி உரிமம் பெற்ற யுனிடெக் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 11,000 கோடிக்கு மேல்.
ஸ்வான் நிறுவனம் தனக்கு இந்த துறையில் அனுபவம் இல்லை என்ற உண்மையை மறைக்க, இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியது. அப்போது ஸ்வான் டெலிகாமின் 9.9 விழுக்காடு பங்குகளை ரிலையன்ஸ் வைத்திருந்தது. மீதி 90.1 விழுக்காடு பங்குகளை டைகர் டிரஸ்டீஸ் என்ற நிறுவனம் வைத்திருந்தது. ஸ்வானுக்கு ராசாவின் அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் கொடுத்ததும், ரிலையன்ஸ் தான் வைத்திருந்த 9.9 விழுக்காடு ஸ்வான் பங்குகளை ஒரு ரகசிய தொகைக்கு மொரீசியஸ் நாட்டை சேர்ந்த டெல்பி இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற கம்பெனிக்கு விற்றுவிட்டது.
இந்த டெல்பி நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. அது மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது அது திவாலாகி கொண்டிருக்கிறது.
திவாலாகும் டெல்பி நிறுவனத்தை மீட்கத்தான் இந்த பங்கு விற்பனை நடந்ததா? அப்படியானால், மொரீசியஸ் நாட்டில் இயங்கும் ஒரு நிறுவனத்துக்கு உதவும் அக்கறை இங்கு யாருக்கு ஏன் வந்தது? ஸ்வான் பங்குகளில் 99.8 விழுக்காடு வைத்துள்ள டைகர் டிரஸ்டீஸ் நிறுவனமும் தொலைத்தொடர்பு துறைக்கு சம்பந்தமே இல்லாத கம்பெனிதான். இது, மும்பையை சேர்ந்த டைனமிக்ஸ் பால்வாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் என்ற கட்டுமான நிறுவனத்தை சார்ந்தது. மீதமுள்ள 0.2 விழுக்காட்டில், 0.1 விழுக்காடு பங்கு பாரட் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. மற்றொரு 0.1 விழுக்காடு பங்கு சீப்ரா கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்திடம் இருக்கிறது.
ஸ்வான்… டைகர்… பாரட்… சீப்ரா… – எல்லாமே விலங்குகளின் பெயர்கள். இந்த பெயர்களை தாங்கியுள்ள புதிர்மயமான நிறுவனங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் யார்?
ரூ.1,650 கோடி மதிப்பில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கிடைத்ததும், காகிதத்தில் மட்டுமே முகவரி வைத்துள்ள டைனமிக்ஸ் பால்வாஸ் நிறுவனம் தன்வசம் உள்ள 45 விழுக்காடு ஸ்வான் பங்குகளை அரபு நாட்டிலுள்ள எமிரேட்ஸ் டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ற மிகப்பெரிய நிறுவனத்துக்கு ரூ.9,000 கோடிக்கு விற்றிருக்கிறது. அதாவது, 1,650 கோடியை முதலீடு செய்துவிட்டு, அதன் மூலம் தன் 45 விழுக்காடு பங்குகளை விற்றதில் அந்த கம்பெனிக்கு 9,000 கோடி பெற்றுக் கொடுத்திருக்கிறது ஸ்பெக்ட்ரம் உரிமம். ஸ்வான் நிறுவனத்தின் 9.9 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் டெல்பி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.2,000 கோடி. மீதி 45.1 விழுக்காடு பங்குகளின் மதிப்பு ரூ.9,000 கோடி. ஆக, ஸ்பெக்ட்ரம் வாங்க ரூ.1,650 கோடி கட்டிய நிறுவனத்தின் மதிப்பு ரூ.20,000 கோடியை தாண்டிவிட்டது. நார்வே நாட்டை சேர்ந்த டெலினார் நிறுவனம் யாருக்குமே தெரியாத யுனிடெக் நிறுவனத்தில் 6,000 கோடியை முதலீடு செய்யுமா?
அரபு நாட்டை சேர்ந்த எடிசாலட் நிறுவனம் யாருக்குமே தெரியாத ஸ்வான் நிறுவனத்தில் 9,000 கோடியை முதலீடு செய்ய முன்வருமா?
அப்படி செய்ய சர்வதேச நிறுவனங்கள் முன்வந்தது ஏன்? இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிட்டும் என அவை உணர்ந்திருப்பதுதான் காரணம். இந்த ஆர்வத்தை பயன்படுத்தி, ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் மூலம் அளித்து அதிகமான நிதியை மத்திய அரசு திரட்டியிருக்க முடியாதா? இந்த இழப்புக்கு யார் பொறுப்பு? இந்த துறையை கையாளும் அமைச்சர் இதற்கு பொறுப்பில்லையா?
இவருடைய நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று இவருக்கு தெரியாதா? தெரியாது என்றால் அந்த அமைச்சர் பதவியை வகிக்கவே அவர் லாயக்கற்றவர். தெரியும் என்றால், சுயலாபத்துக்காக நாட்டையே அடகு வைக்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே, எந்தக் கோணத்தில் பார்த்தாலும், ராசா மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியே ஆக வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சர்வதேச ஏல முறையை பின்பற்ற ஏன் மறுத்தார் என்று கேள்வி எழுப்பியதோடு, தற்போது பின்பற்றப்பட்டுள்ள முறை சந்தேகப்படக் கூடியதாக இருக்கிறது என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் விமர்சித்துள்ளது. உச்சபட்ச அளவான 6.2 மெகாஹர்ட்ஸ் என்ற அளவுக்கு மேல் தொலைத்தொடர்பு துறை ஏன் ஒதுக்கீடு செய்தது என்ற கேள்வியையும் ஆணையம் எழுப்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த பொதுநல வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் என்று ராசா வேடிக்கையான அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அவர் குற்றவாளி என்று யார் நிரூபிக்க வேண்டும்?
ஊடகங்களா? எதிர்க்கட்சிகளா? புலனாய்வு அமைப்புகளா? நீதிமன்றங்களா?
இந்த அமைப்புகள் அத்தனையும் அவர் குற்றவாளி என்று சொல்லிவிட்டால் அப்புறம் அவர் விலகுவது என்ற கேள்விக்கே இடம் கிடையாதே? குற்றவாளி என்று சொல்லிவிட்டால் கம்பி எண்ணுவதில் காலத்தை கழிக்க வேண்டியதுதான். ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அவருடைய தலைவர் கருணாநிதி, ராசாவின் செயலை ஆதரித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. ராசா குற்றமற்றவர் என்று கருணாநிதி சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும். மாறாக, ராசா ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர், அவரை பதவி விலக சொல்வது அந்த சமுதாயத்திற்கு எதிரான மேல்தட்டு சமுதாயத்தினரின் திட்டமிட்ட சதி என்று முதல்வர் கூறுகிறார். மூத்த அரசியல்வாதிகள், இதுபோன்ற குற்றங்களுக்கு சாதிச் சாயம் பூசுவது வெட்கப்பட வேண்டிய விஷயம். தற்போதைய மதிப்பீடுகளின்படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் ரூ.60,000 கோடிக்கு மேல் இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பணத்தை கொண்டு, ரேஷன் கடைகளில் கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கும் அரிசியை 6 கோடி தமிழக மக்களுக்கு அடுத்த 83 ஆண்டுகளுக்கு இலவசமாகவே வழங்க முடியும். இந்த ராட்சத ஊழலின் பின்னால் உள்ள சதிகாரர்கள் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் பரப்பளவும், உக்கிரமும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ராணுவ படையெடுப்புப் போன்றிருக்கிறது. தொடர் ஒளிபரப்பாக NDTV சொல்வதை விழித்திருந்து பார்க்கும் பொழுது, அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகிறது. பத்து இடங்களில் தாக்குதல் நடந்திருந்ததாக முதல்வர் தேஷ்முக் அறிவித்திருக்கிறார்.

தாஜ், ட்ரைடண்ட் போன்ற நட்சத்திர விடுதிகளைத் தேர்ந்தெடுத்தது, பரவலான பார்வையைத் தங்கள் மீது திருப்பும் – விளைவிக்கப்போகும் மரணங்கள் – இந்தியர்களாக மட்டுமே இருக்கக் கூடாது – ஆனால், உலகின் பல பாகங்களிலிருந்துமிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். அதன் மூலம் தங்களை அனைவரும் நோக்க வேண்டுமென்ற வெறியுடன் இயங்கியிருக்கிறார்கள், வெறியர்கள்.

டெக்கான் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

மும்பையின் தலை சிறந்த போலிஸ் அலுவலர்கள் இறந்திருக்கின்றனர். ATS Chief Hemant Karkere, Mumbai ACP Ashok Kamte, Cop Vijay Salaskar கொல்லப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 11 போலிஸினர் – 4 – 5 அதிகாரிகள் உட்பட கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மும்பை முழுவதும் ராணுவம் அனுப்பட்டிருக்கிறது. 5 Columns of army and 200 NSG commondos have been called. படகுகளின் மூலம் தீவிரவாதிகள் வந்திருக்கக் கூடும் – அது ஒன்றே பத்து இடங்களில் நிகழ்ந்த தாக்குதலை – geographically explaining.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தாஜ் ஹோட்டலின் உள்ளே – அனைத்து ஊடகங்களின் முழு பார்வையும் பதிந்திருக்கும் பொழுதே -ஐந்து வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். சில பாகங்களில் தீ பிடித்து எரிகின்றது. அடிபட்டு விழுந்தவர்களை தூக்கிக் கொண்டு, இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

இதுவரையிலும் குண்டுகளை ஒளித்து வைத்து விட்டு ஓடிப்போனவர்கள், இந்த முறை நேருக்கு நேராக மோதத் துணிந்திருக்கிறார்கள். அப்பாவிகள் அதிகம் கூடியிருக்கும் – அதிலும் வெளிநாட்டினர் அதிகமிருக்க வாய்ப்புள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின் தீவிரத்தை விவரித்த NDTVயின் பாசு, இது காஷ்மீரத்தில் நிகழ்ந்த யுத்தம் போலிருக்கிறது என்கிறார்.

மரணித்தவர்களின் எண்ணிக்கை 80ஐத் தாண்டி விட்டது. 9 பேர் வெளி நாட்டினர். இன்னமும் தாஜ் ஹோட்டலின் உள்ளே துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

9 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்னமும் 2 நபர்கள் உயிருடன் பிடிபடாதிருக்கின்றனர்.3 பேர் தப்பித்து ஓடியிருக்கின்றனர். அகற்றப்படாத உடல்கள் தாஜ் உள்ளே கிடப்பதாக வெளியேறியவர்கள் சொல்லியிருக்கின்றனர். இன்னமும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும்.

சிலரை பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள் – ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும். இன்னமும் நிலைமை கட்டுக்குள் வரவில்லையென்று மகாராஷ்ட்ரா முதல்வர் நிருபர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார் – ட்ரைடண்ட் ஹோட்டலிலும், காமா மருத்துவ மனையிலும்.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களைப் பிடித்து மரணங்களை விதைத்தது போன்று அவர்களையும் மரணத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த சூழலில், தீவிரவாதிகளுடன் யுத்தம் புரிந்து இறந்து போன அந்த போலிஸ் அதிகாரிகளுக்கு – A Salute to you all Officers.

No amount of words would express our gratitude.

May God give the strength to your family to bear the losses.

மொத்த இந்தியாவுமே, உங்களின் தீரம் குறித்து பெருமிதம் கொண்டிருக்கிறது.

நம்புங்க ஏ.ஐ.ஜி யின் நிர்வாக முதல்வரின் சம்பளம் 1 டாலர்

திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் ஏ.ஐ.ஜியின் நிர்வாகத்தலைவரின்2008-2009 ஆம் ஆண்டின் வருட சம்பளம் 1 டாலர் என்றும் சம்பள உயர்வு மற்றும் போனஸ் சம்பளம் எதுவும் கிடையாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் திவால் ஆன ஏ.ஐ.ஜி நிறுவனத்தை காப்பாற்ற அமெரிக்க அரசு முதலில் 80பில்லியன் டாலர்களை கடனாக தருவதாக அறிவித்தது. தற்போது மேலும் 70 பில்லியன் டாலர்களை கடனாக தர இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஏ.ஐ.ஜி நிறுவனம் பல்வேறு உயர்பதவி வகிக்கும் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சம்பளைத்தை அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இதன் நிர்வாகத் தலைவர் எட்வர்ட் லிட்டியின் சம்பளம் 2008- 2009 ஆம் ஆண்டின் சம்பளமாக 1 டாலர் என்று தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் 50 உயர் அதிகாரிகளின் சம்பளத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவித்துள்ளது. பிற நாடுகளில் இருக்கும் முக்கிய  பத்திரங்களை விற்பது பற்றியும் முடிவெடுத்திருப்பதாக அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது.  

 அரிசி வரத்து குறைவால் விலை உயர்வு!!

 தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பத்து நாளில் மூட்டைக்கு ரூ.200 முதல் 300 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து, தினமும் சுமார் ஆயிரம் லாரிகளில் அரிசி லோடு தமிழகத்துக்கு கொண்டு வரப்படும். இந்நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் லெவி என்ற புதிய விதிமுறை பின்பற்றப்படுவதாக வதந்தி கிளம்பியுள்ளதால், தினமும் 200 லாரிகளில்தான் அரிசி லோடு வருகிறது. 15 நாட்களாக இதே நிலை நீடிப்பதால், தமிழ்நாட்டில் அரிசி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த பத்து நாட்களில், ஒரு மூட்டை அரிசி ரூ.200 முதல் ரூ.300 வரை உயர்ந்துள்ளது. மின்வெட்டால் தமிழகத்தில் அரிசி ஆலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரிசி வரத்து குறைந்து விட்டது. இந்தியாவில் இருந்து தற்போது பாசுமதி ரக அரிசி மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
மற்ற ரகங்களையும் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளிக்கப்போவதாக செய்தி பரவியுள்ளது. இதனால், பெரும்பாலான வியாபாரிகள் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாகவும், விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதுபோல் ஒரு கிலோ ரூ.80க்கு விற்ற மிளகாய் ரூ.120க்கும், ரூ.90க்கு விற்ற கொத்தமல்லி ரூ.110க்கும், ரூ.40க்கு விற்ற புளி ரூ.60க்கும் விற்கப்படுகிறது. இந்த தகவல்களை தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் தெரிவித்தார்.
கம்பெனி கடன் தீர்வாளருக்கு ஆர்.டி.ஐ. சட்டம் பொருந்தும் !
உயர் நீதிமன்றங்களின் மேற்பார்வையில் பணியாற்றும் கம்பெனி கடன் தீர்வாளர்கள் (லிக்யுடேட்டர்ஸ்) ஆர்.டி.ஐ. சட்டத்தின்கீழ் கேட்கும் தகவல்களை தெரிவிக்க கடமைப்பட்டவர்கள். தாங்கள் நீதிமன்றத்துக்குத் தான் கட்டுப்பட்டவர்கள் என்று கூற முடியாது என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்து உள்ளது.
திவாலாகி மூடப்படும் கம்பெனிகளின் வர்த்தகத்தை நிறுத்தி கொடுக்கல் வாங்கல்களை நேர் செய்வதற்காக கம்பெனி சட்டத்தின்கீழ் உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்படி தீர்வாளர்கள் (லிக்யுட்டர்) நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள், சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் சொத்து, கடன், பங்குகள் நிலவரம் போன்றவற்றை கணக்கிட்டு கொடுக்கல் வாங்கலுக்கு தீர்வு காண்பார்கள். பம்பாய், கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் இவ்வாறு நியமிக்கப்பட்ட தீர்வாளர்களிடம் இருந்து தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்டத்தின்கீழ் சில கம்பெனிகள் பற்றிய தகவல்களை கேட்டு சில நபர்கள் விண்ணப்பம் செய்தனர். இதற்கு பதில் அளித்த தீர்வாளர்கள், நாங்கள் உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பணியாற்றுபவர்கள். எங்களிடம் இருக்கும் தகவல்களை கேட்பவர்கள் முதலில் நீதிமன்றத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தில் உத்தரவு இன்றி எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் சுதந்திரமாக செயல்படுபவர்கள் அல்ல என்று பதில் அளித்தனர்.
இதையடுத்து தகவல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டனர். ஆணையத்தின் முழு பெஞ்ச் இது குறித்து நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பது வருமாறு:

உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்படி அதிகாரப்பூர்வ தீர்வாளர்களை மத்திய அரசு தான் நியமிக்கிறது. எனவே அவர்கள் அரசு அதிகாரிகள் தான். அவர்களுக்கான சம்பளம், மற்றும் பிற படிகளை அரசுதான் வழங்குகிறது. எனவே பொதுமக்கள் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கேட்கும் தகவல்களை தராமல் அவர்கள் மறுக்க முடியாது. தங்களிடம் உள்ளவை நீதிமன்ற ஆவணங்கள் என்றும், நீதிமன்ற உத்தரவு இன்றி அவற்றை வெளியிட முடியாது என்றும் சொல்வதை ஏற்க முடியாது.
உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்கீழ் பணியாற்றினாலும் கூட அவர்கள் நீதிமன்றத்தின் ஒரு அங்கம் கிடையாது. அவர்களிடம் உள்ள வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் அரசின் கணக்கில் தான் சேர்க்கப்படுகிறது. எனவே ஆர்.டி.ஐ. சட்டப்படி அவர்கள் தங்களிடம் உள்ள தகவல்களை தெரிவிக்கத் தான் வேண்டும்.
இவ்வாறு மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

ஒரு லட்சம் கோடி!

அமெரிக்காவில் பெருகிவரும் நிதி நெருக்கடியில் சிக்கி திவால் நிலைக்கு சென்றுள்ள சிட்டி பாங்க்கை மீட்க, அமெரிக்க அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. மேலும் 30,600 கோடி டாலர் மதிப்புள்ள வராக் கடன் பிணையச் சொத்துகளுக்கு அரசு காப்புறுதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 22 வங்கிகள் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.
அமெரிக்காவில் அங்கு அடமான வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்ட நாளில் இருந்து சிட்டி குரூப் வங்கியும் அவதிப்பட்டு வருகிறது. மற்ற சிறிய வங்கிகளைப் போல சிட்டி குரூப் வங்கியும் திவாலாவதை அமெரிக்க அரசு விரும்பவில்லை.
சொத்துகளின் அடிப்படையில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வங்கியாக அது உள்ளது. 100 நாடுகளில் அதன் கிளைகள் உள்ளன. 2007ம் ஆண்டின் இறுதியில் அதில் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை 100 நாடுகளில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 75 ஆயிரம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விக்ரம் பண்டிட் அதன் தலைவராக உள்ளார். அதோடு சிட்டி குரூப் வங்கியின்  மதிப்பு பங்குச் சந்தையில் 60 சதவீதம் வரை குறைந்து விட்டது.
சிட்டி வங்கியை திவாலாக அனுமதிக்கும் பட்சத்தில் உலக நாடுகளில் பெரும் நிதிச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்க நிதிநிலை மீது முதலீட்டாளர்களும் பொதுமக்களும் கொண்டுள்ள அபிப்பிராயம் மிகவும் மோசமாகிவிடும். அதனால்தான் சிட்டி குரூப் வங்கியை காக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சிட்டி குரூப் வங்கியின் முன்னுரிமைப் பங்குகளில் அரசு 2000 கோடி டாலர் முதலீடு செய்யும். இதற்கு முதலாண்டில் 8 சதவீத டிவிடெண்ட் அளிக்கப்பட வேண்டும். மற்ற வங்கிகளுக்கான பங்கு முதலீட்டுக்கு முதலாண்டுக்கு 5 சதவீத டிவிடெண்ட்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு வழங்க உள்ள 30 ஆயிரத்து 600 கோடி டாலர் காப்புறுதிக்கு உட்பட்ட வராக்கடன்களில் ஏற்படக்கூடிய 2900 கோடி டாலர் இழப்பை வங்கி ஏற்கும். ஊழியர் எண்ணிக்கையை இந்த ஆண்டுக்குள் 3 லட்சமாக குறைக்க ஏற்கெனவே நிர்வாகம் நடவடிக்கைகளைத் துவக்கி உள்ளது. இதன்படி, 75 ஆயிரம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும். ஏற்கனவே 25,000 பேர் வங்கியிலிருந்து விலகிவிட்டனர்

அவுட்சோர்ஸிங் வேலைகளுக்கு இந்தியாதான் இன்னமும் முதலிடத்தில் இருக்கிறது

மும்பை : அவுட்சோர்ஸிங்/ ஆஃப்ஸோரிங் வேலைகளுக்கு உலகிலேயே இன்னமும் இந்தியாதான் சிறந்த இடமாக இருக்கிறது என்று டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் ( டி அண்ட் பி ) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. குறைவான சம்பளம் என்பதால் மட்டுமில்லாமல், மற்ற நாடுகளை விட இந்திய நிறுவனங்கள் இந்த துறையில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பதால் அவர்களால் சிறந்த சேவை அளிக்க முடிகிறது என்பதால்தான் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ‘இந்தியாவின் மிகப்பெரிய ஐடிஇஎஸ் மற்றும் பிபிஓ கம்பெனிகள் 2008’ என்ற வெளியீட்டின் நான்காவது பதிப்பை வெளியிட்ட டி அண்ட் பி நிறுவனம், சீனா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, மலேஷியா, பிரேசில், செக் குடியரசு, சிலி ஆகிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவில் தான் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை கிடைக்கிறது என்று சொல்லியிருக்கிறது. ஐடிஇஎஸ்/பிபிஓ க்கான சம்பள விஷயத்தில், இந்தியாதான் இரண்டாவது குறைந்த சம்பளம் கேட்கும் நாடாக இருக்கிறது என்கிறது. சீனாதானா உலகிலேயே குறைந்த சம்பளத்தில் ஐடிஇஎஸ்/பிபிஓ வேலைகளை செய்து கொடுக்கும் நாடாக இருக்கிறது. சீனாவில் சம்பளம் 7,00 – 8,000 டாலராக இருக்கிறது. இந்தியாவிலோ அது 7,500 – 8,500 டாலராக இருக்கிறது. பிலிப்பைன்ஸ் இல் சம்பளம் 9,000 – 10,000 டாலராக இருந்தாலும் அங்கு மற்ற நாடுகளை விட டெக்னிக்கல் பட்டதாரிகள் அதிகம் இருப்பதாக சொல்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு, இங்கு இங்கிலீஷ் பேசும் இஞ்சினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட் பட்டதாரிகள் அதிகம் இருப்பதால்தானாம். இதனால்தான் இந்திய நிறுவனங்களால் இந்த துறையில் நல்ல சேவை அளிக்க முடிகிறது என்கிறது டி அண்ட் பி.

ஒரு சர்க்கிளுக்கு 5 ஆப்பரேட்டர்களுக்குத்தான் 3ஜி லைசென்ஸ் : தொலைதொடர்புத்துறை

புதுடில்லி : மூன்றாம் தலைமுறை அலைவரிசை என்று சொல்லப்படும் 3 ஜி சர்வீஸ் எப்போது வரும் என்று மக்கள் ஆர்வத்தோடு இருக்கும் போது, சர்க்கிள் ஒன்றுக்கு 5 ஆப்பரேட்டர்களுக்குதான் 3ஜி லைசென்ஸ் வழங்குவது என்று மத்திய தொலைதொடர்பு துறை முடிவு செய்திருக்கிறது. பி.எஸ்.என்.எல்.,மற்றும் எம்.டி.என்.எல்., போன்ற அரசு நிறுவனங்களையும் சேர்த்து சர்க்கிள் ஒன்றுக்கு 5 ஆப்பரேட்டர்களுக்குதான் லைசென்ஸ் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொபைல்களில் டேட்டாக்களை ( தகவல்களை ) வேகமாக டவுண்லோட் செய்யக்கூடிய 3 ஜி சர்வீஸ், சர்க்கிள் ஒன்றுக்கு 5 முதல் 10 பேருக்குதான் கொடுக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ராஜா சொல்லியிருந்தார். இப்போது அது, ஐந்து தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது போக மொத்தம் 60 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம்தான் ஒதுக்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஆப்பரேட்டருக்கும் 5 மெகாஹெட்ஸ் ஒதுக்குவதாகவும் ராஜா தெரிவித்தார். ஏற்கனவே பி.எஸ்.என்.எல்.க்கு 3 ஜி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு விட்டது. எனவே அது, இந்த வருட கடைசிக்குள் சேவையை துவங்கும் என்று தெரிகிறது. இன்னும் நான்கு லைசென்ஸ்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட இருக்கிறது. 3 ஜி சர்வீஸூக்காக டில்லி மற்றும் குஜராத்தில் 3 ஆப்பரேட்டர்கள் இருப்பார்கள். உத்தர பிரதேசம் ( மேற்கு ) மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் 4 பேர் இருப்பார்கள். மேற்கு வங்கத்தில் இரண்டு பேரும் இருப்பார்கள். ராஜஸ்தான் மற்றும் வட கிழக்கு பிராந்தியத்தில் 3 ஜி சர்வீஸ் இருக்காது. இது தவிர இந்தியாவின் மற்ற சர்க்கிள்களில் ஒவ்வொன்றிலும் 5 ஆப்பரேட்டர்கள் இருப்பார்கள். தனியாருக்கு 3 ஜி லைசன்ஸ் ஒதுக்குவது கொஞ்சம் தாமதமாகும் என்று தெரிகிறது. அதற்கான ஏலம் ஜனவரி 15ம் தேதியில் இருந்து பிப்ரவரி 9 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. 3 ஜி ஏலம் குறித்த விளக்கம் டிசம்பர் 8 ம் தேதிதான் வெளியிடப்படுகிறது. ஏலம் கேட்பவர்கள் டிசம்பர் 31 ம் தேதி வரை அதற்காக விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு சர்க்கிளுக்கும் ஐந்து பேருக்குதான் லைசன்ஸ் என்பது ரொம்ப குறைவு என்று செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சொல்கிறது. ஏனென்றால் டில்லி போன்ற பெரும்பாலான சர்க்கிள்களில் இரண்டு ஸ்டாட்கள் தான் இருக்கிறது.இதனால் போட்டி அதிகரித்து ஏலத்தொகையும் அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக ஆப்பரேட்டர்களுக்கு செலவும் அதிகரிக்கும் என்கிறார்கள். ஒவ்வொரு 3 ஜி ஆப்பரேட்டருக்கும் 5 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ராம்தான் ஒதுக்கப்படும் என்பதையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். ஒவ்வொரு ஆப்பரேட்டருக்கும் குறைந்தது 10 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் தேவைப்படும். எனவே ஒரு ஆப்பரேட்டர் இன்னொரு ஆப்பரேட்டரின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார்கள். இதற்கு பதிலளிக்கும் தொலைதொடர்பு துறை, 3 ஜியின் லைசன்ஸ் 5 வைத்திருப்பவர்களுக்கு, ஒவ்வொரு லைசன்ஸ்க்கும் 5 மெகாஹெட்ஸ் என்ற அடிப்படையில்தான் ஏலம் கொடுக்கப்பட இருக்கிறது என்கின்றனர்

அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்ய இன்னும் ஒரு 800 பில்லியன் டாலர்களை கொடுக்கிறது அமெரிக்க அரசு

வாஷிங்டன் : சீரழிந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை சரி செய்ய இன்னும் ஒரு 800 பில்லியன் டாலர்களை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடனாக கொடுக்க முன்வந்திருக்கிறது. ஏற்கனவே 700 பில்லியன் டாலர்கள் போக இது இரண்டாவது கடன் திட்டம். இது குறித்து பேசிய அமெரிக்க நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், இதன் மூலம் மக்கள், அவர்களுக்கு வேண்டிய கடன்களை மீண்டும்எளிதாக பெற வாய்ப்பு ஏற்படும் என்றார். இதில் 600 பில்லியன் டாலர்களை அடமான கடன்களை ஏற்றுக்கொள்வதற்காகவும், 200 பில்லியன் டாலர்களை கன்சூமர் கிரிடிட் மார்க்கெட்டை எளிதாக்கி விடுவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என்றார் பால்சல். பொருளாதாரம் சீர்குழைந்திருப்பதால் நிதி நிறுவனங்கள், கடன் கொடுப்பதற்கு தயக்கம் காட்டி வந்தன. அது மேலும் மோசமாக மோசமாக கடன் கொடுப்பது இன்னும் கடினமானது. அக்டோபர் மாதத்தில் அங்கு கிரிடிட் கார்டு லோன், கார் லோன், மாணவர்களுக்கான கல்வி கடன் போன்றவைகள் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டன. இப்போது அறிவித்திருக்கும் கடன் திட்டத்தால் நிறுத்தி வைத்திருக்கும் கடன்கள் மீண்டும் கொடுக்கப்படும் என்றார் பால்சன். அமெரிக்க வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டின் ‘ மொத்த உள்நாட்டு உற்பத்தி’ ( ஜி.டி.பி ) மூன்றாவது காலாண்டில் 0.5 சதவீதமாக குறைந்திருப்பதாக தெரிவித்திருந்தது. மக்களின் வாங்கும் சக்தியும் கடந்த 28 வருடங்களில் இல்லாத அளவாக குறைந்து விட்டதாக தெரிவித்திருந்தது. இதனால்தான் அவசரமாக 800 பில்லியன் கடன் திட்டத்தை அறிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. இப்போது அறிவித்திருக்கும் 800 பில்லியன் டாலர்களை, நிதி நிறுவனங்களின் வராக்கடன்களை ஏற்றுக்கொள்வதற்கும், அடமான திட்டத்தின்படி உள்ள செக்யூரிட்டிகளை ஏற்றுக்கொள்வதற்கும் கொடுக்க இருக்கிறது.

650 மேனேஜர் லெவல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கிறது ஐ.டி.பி.ஐ பேங்க்

மும்பை : சர்வதேச அளவில் நிதித்துறையில் கடும் குழப்பம் ஏற்பட்டு, அதனால் நிறைய வங்கிகளை மூடக்கூடிய நிலைக்கு வந்திருந்தும்; இன்னும் பல வங்கிகள் செலவை குறைக்கும் விதமாக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருந்தாலும் இந்தியாவின் ஐ.டி.பி.ஐ.வங்கி புதிதாக 650 பேரை மேனேஜர் லெவல் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது. இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா ( ஐ.டி.பி.ஐ.), அதவன் ரீடெய்ல் பேங்கிங் வேலைக்காக 256 பேரை மேனேஜர் வேலைக்கும், இன்னொரு 220 பேரை அதன் நிதித்துறைக்கு மேனேஜர் வேலைக்கும் எடுக்க இருக்கிறது. இன்னொரு 176 பேரை நிதித்துறையில் உதவி ஜெனரல் மேனேஜர் வேலைக்கு எடுக்கவும் அந்த வங்கி திட்டமிட்டிருக்கிறது. மார்ச் 2008 வரை அந்த வங்கியின் அக்கவுன்டன்ஸி, மேனேஜ்மென்ட், இஞ்சினியரிங், சட்டம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பேங்கிங், மற்றும் பொருளாதாரத்துறையில் மொத்தம் 8,989 பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த எண்ணிக்கைதான் இனிமேல் கூட்டப்படுகிறது. இவர்கள் தவிர இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க், இந்த நிதி ஆண்டுக்குள் 25,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக சொல்லியிருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே இந்திய வங்கிகள் யாரையும் புதிதாக வேலைக்கு எடுக்கவில்லை. இந்த வருடத்தில் நாங்கள் கிரிக்கள் லெவலில் 20,000 பேரையும் சூப்பர்வைசர் லெவலில் 5,000 பேரையும் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று ஸ்டேட் பாங்க் கின் சேர்மன் ஓ.பி.பாத் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களின் திடீர் முற்றுகையால் பாங்காக் விமான நிலையம் மூடல் ; விமானங்கள் ரத்து

பாங்காக் : ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று அதிகாலை திடீரென்று பாங்காக் விமான நிலையத்திற்குள் நுழைந்து முற்றுகையிட்டதால், விமானங்கள் எதையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் இயங்காததால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாமல் திணறிப்போய் இருக்கிறார்கள். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பீப்பில்ஸ் அலையன்ஸ் ஃபார் டெமாகிரசி ( பிஏடி ) என்ற அமைப்பினர் இன்று அதிகாலை வேளையில் திடீரென பாங்காங் சுவர்னபூமி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டனர். விமானம் புறப்படுகிற இடம் வரை வந்து விட்ட அவர்கள் அங்கேயே அமர்ந்து விட்டனர். இதனால் நிலைகுழைந்து போன விமான நிலைய அதிகாரிகள், விமானங்களை நிறுத்த வேண்டியதாகி விட்டது. எங்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. எனவே காலை 4.00 மணியில் இருந்து ( தாய்லாந்து நேரம் ) விமானங்கள் இறங்குவதையும் புறப்படுவதையும் முற்றிலுமாக நிறுத்தி விட்டோம். இதனால் 78 விமானங்கள் நிறுத்தப்பட்டு விட்டது என்று பாங்காக் விமான நிலைய இயக்குனர் செரிராத் பிரசுதனன் தெரிவித்தார். விமான நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதால் அங்கிருந்த சுமார் 3,000 பயணிகள் அங்கேயே இருக்க வேண்டீயதாகி விட்டது. பயணிகளால் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள்ளும் போக முடியவில்லை. ஏனென்றால் அங்கேயும் போராட்டக்காரர்கள் அமர்ந்து ரோட்டை மறித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள பெரு நாட்டுக்கு சென்றிருக்கும் தாய்லாந்து பிரதமர் சொம்சாய் வோங்சவாத்தை, தாய்லாந்து திரும்ப விடாமல் தடுக்கும் நோக்கத்தில்தான் இவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பங்கு சந்தை உயர்ந்தது ; சென்செக்ஸ் 9,000 புள்ளிகளை எட்டியது 

மும்பை : மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து மாலை 3 மணி வரை சரசரி அளவில் உயர்ந்திருந்த சென்செக்ஸ், கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தில் வேகமாக உயர துவங்கியது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 2,700 புள்ளிகளுக்கு மேலும் சென்றுள்ளது. சீனாவை போலவே இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று பலமாக இருந்தது. சீனாவில் சி.ஆர்.ஆர்.,மற்றும் மற்ற வட்டி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை குறைக்கப்போவதாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா நேற்று அறிவித்திருந்ததை அடுத்து, விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த இரண்டு நல்ல செய்திகளும் இன்று சந்தையை மேலே இழுத்து சென்றது. ஆயில், பேங்கிங், பவர், கேப்பிடல் குட்ஸ், மெட்டல் மற்றும் டெலிகாம் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 331.19 புள்ளிகள் ( 3.81 சதவீதம் ) உயர்ந்து 9,026.72 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 98.25 புள்ளிகள் ( 3.7 சதவீதம் ) உயர்ந்து 2,752.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.பேங்க், பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி., என்.டி.பி.சி., ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., விப்ரோ, ரிலையன்ஸ் இன்ஃரா, இன்போசிஸ் டெக்னாலஜிஸ், பெல் ஆகிய பங்குகள் அதிகம் லாபம் பார்த்தன. ஆசிய பங்கு சந்தைகள் எல்லாவற்றிலுமே இன்று ஏற்ற நிலைதான் காணப்பட்டது. 

 

 

Infosys – ஊழியர்களை கசக்கிப்பிழிய எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க

Infosys நிறுவனம் பெங்களூரில் அதிகரித்து வரும் peak time trafficஜ கட்டுப்படுத்த ஒரு அருமையான உபாயத்தை (so called “innovative idea”) கொண்டு வந்துள்ளது. அதாவது அங்கு வேலை செய்யும் ஊழியர்களை முன்னதாகவே அலுவலகம் வர தூண்டுவதன் மூலம், காலை 9-10 மணிக்கு இடையில் ஏற்படும் traffic jamஜ மட்டுப்படுத்த போகிறார்களாம்.

இத்திட்டத்தின் மூலம் அலுவலகத்துக்கு 8 மணிக்கெல்லாம் வரும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 1.5 புள்ளியும், 8:30 மணிக்கு வரும் ஊழியருக்கு 1 புள்ளியும் வழங்குவார்களாம், மாதக்கடைசியில் 20 புள்ளி பெற்றுள்ள ஊழியர்களில் குலுக்கல் முறையில் தேர்வாகும் இரு ஊழியருக்கு தலா 12 ஆயிரமும், நான்கு ஊழியர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

விரைவாக அலுவலகம் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் அவர்கள் அந்த ஊழியர்கள் விரைவாக வீடு செல்ல ஏதாவது ஏற்பாடு செய்துள்ளார்களா என்றா அது தான் இல்லை (நாராயண மூர்த்தி ஊழியர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் அலுவலகத்தில் இருக்க கூடாது என்று பக்கம் பக்கமாக அட்வைஸ் மழை மட்டும் பொழிவார்).

8 மணிக்கு அலுவலகம் வரும் ஊழியர் எனக்கு தெரிந்து குறைந்த பட்சம் 7 – 8 மணிக்கு முன்னர் வீடு திரும்ப இயலாது. ஏனெனில் ஜடி துறையினர் பெரும்பாலோனோர் வேலை செய்வது அமெரிக்க கம்பெனிகளுக்கு. status meeting, இந்த மீட்டிங் அந்த மீட்டிங் என்று தினமும் அவர்களின் அமெரிக்க காலை நேரம் 8 மணி வரையிலாவது அவர்களின் clients அலுவலகம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இதனால் ஊழியர்கள் குறைந்த பட்சம் 12 மணி நேரமாவது அலுவகத்தில் இருக்க வேண்டும். இவர்களின் அலுவலகம் பெரும்பாலும் ஊரை விட்டு வெகு தொலைவில் இருக்கும் உ.தா. Mahindra City, Electronic city. எப்படி தான் traffic இல்லை என்றாலும் அலுவலகம் செல்ல குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஆகும். எனவே ஒருவன் அலுவலகம் செல்ல காலை 6 மணிக்கு தயார் ஆக ஆரம்பித்தால் வீடு திரும்ப இரவு 9 மணியாவது ஆகும். ஒரு சில வார இறுதி நாட்களும் வேலை செய்யும் படி இருக்கும். இப்படியே போனால் அந்த ஊழியனின் சொந்த வாழ்க்கை என்ன ஆகும்?

swipe card வேலை செய்தால் “அப்பாடா இன்னிக்கு வேலை காலியானவர்களில் என்னோட பெயர் இல்லை” என்று நினைக்கும் அளவிற்கு பணி நிரந்திரமும், cost cutting என்ற பெயரில் 10 பேர் செய்யும் வேலையை 3-4 பேரை வைத்து செய்ய வைக்கும் அவலமுமே சமீபகாலமாக கணிப்பொறியாளர்களுக்கு பெரிய அளவில் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுத்திவருகிறது.இந்த லட்சணத்தில் இவர்கள் ஊழியர்களின் மன உளைச்சலை குறைக்கும் வழிகளை யோசிக்காமல் இது போன்று மேலும் மேலும் அவர்களை கொத்தடிமைகள் போல் வேலை வாங்க நினைத்தால் என்னவென்று சொல்வது? பளபளப்பான அலுவலகம், நினைத்தால் onsite, ஆயிரங்களில் சம்பளம் என்று பேராசைப்பட்டதற்கு இன்னும் எதையெல்லாம் அனுபவிக்க போகிறோமோ?

Traffic நெரிசலை குறைக்க வீட்டில் இருந்து வேலை செய்ய தூண்டுதல், ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியே பஸ்,கார் வசதிகள் அளிப்பதை தவிர்த்து எல்லா நிறுவனங்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த போக்குவரத்தை(Integrated transportation) அளித்தல், அரசு அளிக்கும் public transportationஜ உபயோகிக்க ஊக்கப்படுத்துதல், carpooling என்று பல அருமையான யோசனைகள் இருக்கும் பொழுது ஊழியர்களை மேல் மேலும் exploit செய்ய நினைக்கும் இவர்களுக்கு எப்படியெல்லாம் யோசனை தோன்றுகிறது பாருங்க.

இந்த மொக்கை திட்டத்துக்கு stanford university, background research பஸ்களின் எண்ணிக்கை என்று டெக்னிகல் முலாம் பூசி அதை ஒரு அருமையான திட்டமாக்க முயற்சி செய்து இருக்காங்கன்னு

 

 

It pays to be early bird at Infy

TIMES NEWS NETWORK

Bangalore: Early birds get some moolah. And a way out of the jam for companies hit by commuting delays because their employees inch through Bangalore’s traffic maze. Think incentives, for those who start, and reach, early. That’s the basis of a collaborative project of Infosys Technologies and Stanford University. The INSTANT Infosys Stanford Traffic project, currently in its seventh week, is setting an example by offering monetary incentives to Infoscions who report to work before 8.30 am.
    The project launched in October works on a system of credits that could be accumulated by employees to earn monthly rewards of up to Rs 12,000 each. Apart from saving on fuel worth Rs 20,000 every day, the project has triggered more early comers at the Infosys campus in Electronic City, says Balaji Prabhakar, associate professor of electrical engineering and computer science, Stanford University.
    “The project attracted about 3,000 new early commuters. About 500 ear
ly comers have already been rewarded,” says Prabhakar, who devised the incentive mechanism presented during a talk at IIM Bangalore on Friday. The credit incentives are open to commuters on Infosys buses as well as employees who take other modes of transport to work.
    Rama N S, head of development centre, Infosys Technologies, said, “The primary objective is to help reduce traffic congestion on Bangalore roads. This programme will help our employees come to work mentally fresh without getting stuck in traffic snarls. Every month, a computerized
lottery will choose two early-comers who earned 20 points and will award Rs 12,000 each, while four others will get Rs 6,000 each.’’
LURING LATECOMERS
Background research for the project between January 2005 and June 2008 revealed that the number of early commuters (starting time before 7.15 am) in Infosys buses had come down from 29% to 16%. The buses, typically, have a seating capacity of 49. Infosys runs about 240 buses on four major routes, from 120 starting points. GPS tracking of Infosys buses plying between Jayanagar and the E-City campus revealed that the 7.15 am buses were at least 30 minutes quicker than the 8.15 am buses that were invariably caught in the choking traffic points on the route.
    In a survey done on employee response to the INSTANT project, 26% of respondents said they would start reporting to work earlier. Prabhakar says plans are on to extend the project till March 2009, with changes based on feedback. Other companies in ECity can tap into this idea.

CREDIT SYSTEM
l Employee who swipes in before 8 am gets 1.5 credits
l Those who swipe in between 8 am and 8.30 am get one credit
l Those who turn up after 8.30 get none
l Maximum of 7.5 credits to be earned through the week

 

 

இந்திய ஐ.டி. துறை நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் சீன நாட்டு வங்கிகள்

பங்கஜ் மிஷ்ரா
பெங்களூர்
அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால் அந்நாட்டு பொருளாதாரத்தில் தேக்கநிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து அந்நாட்டிலுள்ள பல முன்னணி வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அவ்வங்கிகள் தகவல் தொழில்நுட்பத்திற்காக ஒதுக்கும் நிதியை குறைத்து வருகின்றன. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் சேவை அளித்து வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.) நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
சீன வங்கிகள்
இந்நிலையில் சீன நாட்டு வங்கிகள் தகவல் தொழில்நுட்ப வசதியை அதிகரித்துக் கொள்ள வரும் 2009&ஆம் ஆண்டில் அதிக நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளன. இது இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எடுத்துக்காட்டாக சீனாவைச் சேர்ந்த சைனா கன்ஸ்ட்ரக்ஷன் பேங்க், அக்ரிகல்ச்சுரல் பேங்க் ஆஃப் சைனா போன்ற முன்னணி வங்கிகள் வரும் 2009&ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துவதற்காக 760 கோடி டாலர் (சுமார் ரூ.38,000 கோடி) செலவிட ஆயத்தமாகி வருகின்றன.
இது, நம்நாட்டில் தகவல் தொழில்நுட்ப சேவை அளிப்பதில் முதலிடத்தில் உள்ள டி.சி.எஸ். மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல நிறுவ னங்களுக்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.சி.எஸ். நிறுவனம், சீன நாட்டு வங்கிகளுக்கு ஏற்கனவே சாஃப்ட்வேர் தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் வங்கி ஒருங்கிணைப்பு சேவையை மேம்படுத்தி தருவதற்காக பேங்க் ஆஃப் சைனாவிடமிருந்து சென்ற 2007&ஆம் ஆண்டில் 10 கோடி டாலர் (ரூ.500 கோடி) மதிப்பிற்கு ஆர்டரை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி & வங்கிச் சேவை
சீன நாட்டு நிறுவனங்களுக்கு நிதி மற்றும் வங்கிச் சேவை தொடர்பான சாஃப்ட்வேர் தீர்வுகளை வழங்குவதற்காக சுமார் 300 நிறுவனங்கள் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையிலும் டி.சி.எஸ். நிறுவனத்திற்கு சீனாவில் ஆண்டுதோறும் சாஃப்ட்வேர் சேவை அளிப்பதற்கான பெரிய ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. இந்நிறுவனம் 2005&ஆம் ஆண்டில் ஹ¨வாக்சியா பேங்கிடமிருந்தும், 2006&ஆம் ஆண்டில் பேங்க் ஆஃப் சைனாவிடமிருந்தும், சென்ற ஆண்டில் ஹ¨வாங்டாங் ரூரல் கிரெடிட் யூனியன் ஆகிய வங்கிகளிடமிருந்தும் ஆர்டர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் ஆண்டுகளிலும் சீனாவிலுள்ள மிகவும் பிரபலமான நான்கு வங்கிகளிடமிருந்து அதிக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைவர் (ஆசிய வர்த்தகம்) கிரிஜா பாண்டே தெரிவித்தார். இதேபோன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கும் ஃபினாக்கிள் சைனா பேங்க் மற்றும் ஏ.பீ.என். அம்ரோ ஆகிய வங்கிகளிடமிருந்து ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏ.டி.எம். வசதி
அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது சீனாவில் உள்ள வங்கிகள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. அதாவது, அமெரிக்காவில் 735 பேருக்கு ஒரு ஏ.டி.எம். என்ற விகிதத்தில் வசதி உள்ளது. அதேசமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 9 சதவீதமாகக் கொண்டுள்ள சீனாவில் 10,400 பேருக்கு ஒரு ஏ.டி.எம். என்ற அளவில்தான் வசதி உள்ளது. சீனாவிலுள்ள வங்கிகளில் 10 சதவீத வங்கிகள் மட்டுமே ‘ஆன்லைன்’ வாயிலாக வங்கிச் சேவைகளை வழங்கி வருகின்றன.
கடன்
உலக அளவில் பொருளாதாரத்தில் தொய்வு நிலை ஏற்பட்டு வருவதால் அதன் தாக்கம் சீனாவிலும் எதிரொலித்து விடக்கூடாது என்பதற்காக சீன அரசு அந்நாட்டு வங்கிகளை அதிக அளவில் கடன் வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு ‘கோர் பேங்கிங்’ என்றழைக்கப்படும் வங்கி ஒருங்கிணைப்பு வசதி மிகவும் அவசியமானதாகும். எனவே சீன நாட்டு வங்கிகள் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது.
கடன் வழங்கும்போது ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் நவீன சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என சீன வங்கிகளுக்கான கட்டுப்பாட்டு ஆணையம் அந்நாட்டு வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற காரணங்களால் சீன நாட்டு வங்கிகளால் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சீன நாட்டைச் சேர்ந்த லாங் டாப், வான்ஸ் இன்ஃபோ போன்ற ஐ.டி நிறுவனங்களின் போட்டியை இந்திய நிறுவனங்கள் எதிர்கொண்டு சாதனை படைக்க வேண்டிய நிலையில் உள்ளன.
ரூ.2 லட்சம் கோடி
சென்ற 2007&08&ஆம் ஆண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் மற்றும் இதர சேவைகளை அளித்ததன் வாயிலாக 4,000 கோடி டாலரை (ரூ.2,00,000 கோடி) வருவாயாக ஈட்டியுள்ளன. உள்நாட்டு வர்த்தகம் வாயிலாக ஈட்டப்படும் வருவாய் 2,310 கோடி டாலர் (ரூ.1,15,500 கோடி) என்ற அளவில்தான் உள்ளது. இந்நிலையில் சீன நாட்டு வங்கிகள் மூலம் வர்த்தக வாய்ப்பு உருவாக உள்ளது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும்.

பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் வகையில்

அடிப்படை கட்டமைப்பு துறைக்கு ரூ.50,000 கோடி ஒதுக்க திட்டம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சி
ஒரு நாட்டின் தங்கு தடையற்ற பொருளாதார வளர்ச்சிக்கு சாலை போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள், மின்சாரம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் நன்றாக இருக்க வேண்டும்.
நடப்பு 2008&ஆம் ஆண்டில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் மதிப்பீடு செய்துள்ளது. இதற்கு, அந்நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருப்பதே காரணமாகும். பன்னாட்டு நிதியம் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும் என மதிப்பீடு செய்துள்ளது.
மதிப்பீடு
இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 50,000 கோடி டாலர் (ரூ.25 லட்சம் கோடி) தேவைப்படும் என மத்திய திட்டக்குழு மதிப்பீடு செய்துள்ளது. தற்போது சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகி வருவதால், இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் நிதி திரட்டுவது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
சுங்க வரி வசூல்
இந்நிலையில் தனியார் துறை நிறுவனங்களுக்கு சாலை சுங்க வரி வசூலும் மிகவும் குறைந்து வருகிறது. இதனால், சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதில் தனியார் நிறுவனங்களின் ஆர்வம் குறைந்து போயுள்ளது.
எனவே, அடிப்படை கட்டமைப்பு வசதி பணிகளில் தொய்வு நிலையை கட்டுப்படுத்தும் வகையில் இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

அக்ரிகோல்டு ஆர்கானிக்ஸ்

நீரில் கரையக் கூடிய உரங்கள் அறிமுகம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
சென்னை
அக்ரி கோல்டு குழுமத்தின் ஓர் அங்கமான அக்ரி கோல்டு ஆர்கானிக்ஸ் நிறுவனம் Ôஅக்ரிகோல்டு மகாநியூட்ரின்Õ என்ற பிராண்டில், முழுமையாக நீரில் கரையக் கூடிய, உர வகைகளை அறிமுகம் செய்துள்ளது.
கும்மிடிப்பூண்டி
அக்ரிகோல்டு ஆர்கானிக்ஸ் நிறுவனம் விஜயவாடா அருகில் கேஸ்ரா பகுதியிலும், சென்னை அருகே கும்மிடிப்பூண்டியிலும் உரத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில், கூடுதலாக ரூ.5 கோடி வருவாய் ஈட்டவும், 2009&ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3,000 டன் மகாநியூட்ரின் உரத்தினை விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.ஆர்.கே.நாயுடு கூறும்போது, Òபெருந்தோட்டப் பயிர்கள், தோட்டக் கலை மற்றும் பூ வளர்ப்பு ஆகிய துறைகளையே முக்கிய இலக்காகக் கொண்டு நிறுவனம் செயல்பட உள்ளது. நிறுவனத்தின் மொத்த விற்றுமுதலில் 2 சதவீதம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக செலவிடப்படுகிறதுÓ என்று தெரிவித்தார்.
வட மாநிலங்களில் நன்கு காலூன்றும் வகையில் இந்நிறுவனம் மேலும் இரண்டு உற்பத்திப் பிரிவுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ரெய்ப்பூரிலும், மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் இந்த தொழிற்சாலைகள் நிறுவப்பட உள்ளன. இவ்விரண்டு தொழிற்சாலைகளிலுமாக ரூ.15 கோடி முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
அக்ரிகோல்டு ஆர்கானிக்ஸ் நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் 24,000 டன் இயற்கை உரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் தற்போதைய புதிய மகாநியூட்ரின் உரம் முழுமையாக கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளது. இத்தொழிற்சாலை ஆண்டுக்கு 5,000 டன் உரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
விநியோக ஒருங்கிணைப்பு
மத்திய பிரதேசம், ஒரிசா, சத்தீஸ்கர் மற்றும் தென் மாநிலங்கள் முழுவதுமாக நிறுவனம் 600&க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் புதிய தயாரிப்பினை சந்தைப்படுத்துவதற்காக மேலும் 200 விற்பனை அதிகாரிகளை நியமித்துள்ளது. ஆறு வகைகளில் புதிய உரத்தினை அறிமுகப்படுத்தியுள்ள இந்நிறுவனம் அடுத்த சில மாதங்களில் மேலும் 10 புதிய வகைகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.
சந்தை மதிப்பு
வேளாண் இடுபொருள்கள், உணவு பொருள்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான ரசாயனப் பொருள்கள், பொது சுகாதாரத்திற்கான பொருள்கள் மற்றும் ஒப்பனைப் பொருள்கள் என பல்வேறு துறைகளிலும் அக்ரிகோல்டு ஆர்கானிக்ஸ் வலுவாக காலூன்றி உள்ளது. இந்திய உரச் சந்தையின் தற்போதைய மதிப்பு 300 கோடி டாலர் (சுமார் ரூ.15,000 கோடி) ஆகும்.

  

 800 மெகாவாட் மின் உற்பத்தி: 2 திட்டங்கள் கையெழுத்து

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 8,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் இந்த இரண்டு மின் திட்டங்களையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் முதல்வர்

கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. மின்வாரியத் தலைவர் மச்சேந்திரநாதன் மற்றும் ‘பெல்’ தலைவர் ரவிக்குமார், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உடன்குடியில் கண்டறியப்பட்டுள்ள 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் இந்தத் திட்டங்கள் அமைகின்றன. திட்டத்தின்படி, முக்கிய இயந்திரங்களை ‘பெல்’ நிறுவனம் வழங்கும். திட்டத் தைச் செயல்படுத்தி, மின் நிலையத்தை இயக்குவதற்கான பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்ளும். மின் நிலையங்களை அமைப்பதற்குத் தேவையான பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். திட்டங்களுக்கான நிலக்கரி, கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் என்பதால், கடலில் தளம் அமைப்பதற்கான ஆய்வுப் பணியை முடித்து, சென்னை ஐ.ஐ.டி., அறிக்கை வழங்கியுள்ளது. முதல் திட்டம் 2012ம் ஆண்டு மார்ச்சிலும், இரண்டாவது திட்டம் அதே ஆண்டில் செப்டம்பரிலும் இயக்கப்படும்.

மழையால் தத்தளிப்பதை போல் தத்தளிக்கிறது பங்குச் சந்தை

சந்தை 9,000 புள்ளிகளையே சுற்றி சுற்றி வருகிறது. சந்தையைக் காப்பாற்ற ஒரு நல்ல செய்தி வந்தால், இன்னொரு கெட்ட செய்தி வந்து எந்த ஏற்றமும் இல்லாமல் செய்து விடுகிறது. வரும் செய்திகளெல்லாம் நல்ல செய்திகளாக இல்லாததால் சந்தை, தமிழகம் மழையால் தத்தளிப்பது போல தத்தளிக்கிறது. புயல் கூட கரையைக் கடந்து விடும் போலிருக்கிறது; சந்தையைப் பிடித்த சனி இன்னும் கரையைக் கடக்கவில்லை.

திங்களன்று காலை சிட்டி வங்கியை காப்பாற்ற அமெரிக்க அரசு பல கோடி ரூபாய் கொடுக்கப் போவதாக செய்தி வந்துள்ளது. முக்கிய இடத்திலிருந்து சிட்டி வங்கி மூழ்குகிறது என்றால் பல இடங்களிலும் சந்தை பற்றி எரிந்திருக்கும். தற்போது வந்து கொண்டிருக்கும் செய்தி பாங்க் ஆப் அமெரிக்காவின் நிலைமையும் சரியில்லை என்பது தான். சமீப காலத்தில் தான் பாங்க் ஆப் அமெரிக்கா நலிந்த நிறுவனங்களை வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வங்கிக்கே இந்த நிலை என்றால் எங்கு போய் சொல்வது? இந்த வாரத்தில் மூன்று நாட்களுமே சந்தை ஏறி இறங்கிக் கொண்டு தான் இருந்தது. காலையில் ஒரே ஏற்றமாக இருக்கும். அப்பாடி இன்று தப்பித்தோம் என்று பல முதலீட்டாளர்கள் இருக்கும் சமயத்தில் சந்தை ஒரேயடியாக விழத்தொடங்கும். இது தான் வாடிக்கையாக இருக்கிறது. அமெரிக்காவில் கடந்த வெள்ளியன்று சந்தை மிகவும் கீழே இறங்கியே துவங்கின. அங்கு நிதி செகரட்டரியாக எல்லாரும் விரும்பிய நபர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் சந்தை யூ டேர்ன் அடித்தது. இதைத் தொடர்ந்து திங்களன்று இந்தியாவிலும் சந்தை பிரமாதமாக பரிணமிக்கப் போகின்றன என்று தான் எல்லாரும் எதிர்பார்த்திருப்பர். ஆனால் நடந்ததோ வேறு. காலை முதல் ஏறிக் கொண்டே இருந்த சந்தை முடிவாக 12 புள்ளிகள் இறங்கியே முடிவடைந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் வருமானங்கள் வருங்காலங்களில் குறைவாக இருக்கும் என்று ஜே.பி. மோர்கன் கணித்திருந்ததாக வெளிவந்த செய்திகள் அந்த வங்கியின் பங்குகளையும், மற்ற வங்கியின் பங்குகளையும் கீழே தள்ளியது. இது சந்தையை குறைத்தது.

நேற்று முன்தினமும் 207 புள்ளிகள் சரிவைத்தான் சந்தித்தது. சரிவே வாழ்க்கையாகிப் போனது. ஏன் குறைந்தது? டிரைவேட்டிவ் டிரேடிங் முடிவுத் தேதிகள் நெருங்குவதால் ப்ளூ சிப் கம்பெனிகளின் பங்குகள் அதிகம் விற்கப்பட்டதாலும், ஐரோப்பா பங்குச் சந்தைகள் அன்றைய தினம் கீழே இறங்கியே தொடங்கியதாலும் அதன் பாதிப்புகள் இங்கேயும் தெரிந்தது. ஆதலால் சந்தை இங்கும் மிகவும் இறங்கியது. சீன மத்திய வங்கி கடந்த செப்டம்பரில் இருந்து இது வரை நான்கு முறை ரேட் கட் செய்துள்ளது. இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி அது போல செய்யலாம் என்ற எண்ணத்தில், நேற்று சந்தை கடகடவென மேலே சென்றது. மும்பை பங்குச் சந்தை 331 புள்ளிகள் கூடி 9,028 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 98 புள்ளிகள் கூடி 2,752 புள்ளிகளுடன் முடிவடைந்தது. என்ன செய்யலாம்?: நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையை தொடர்ந்து கவனிக்காதீர்கள். அது உங்கள் போர்ட் போலியோவுக்கும் நல்லதல்ல, உடலுக்கும் நல்லதல்ல. வங்கியில் பிக்சட் டிபாசிடில் போட்டால் தொடர்ந்து பார்த்துக் கொண்டேவா இருப்பீர்கள். அப்படி இருந்து விடுங்கள். ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டை எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அது வந்தால் சந்தையை சிறிது உயர்த்தலாம்.

கட்டணத்தை குறைத்து விமான நிறுவனங்கள் அதிரடி

புதுடில்லி: விமான டிக்கெட்டுகள் மீதான பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் புக்கிங் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளின் மீதான பரிவர்த்தனை கட்டணத்தை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் ஆகிய நிறுவனங்கள் வாபஸ் பெற்றுள்ளன. உள்ளூர் எகனாமி டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 300 ரூபாய் வரையிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 1,200 முதல் 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலை குறைந்துள்ளதால், விமானக் கட்டணத்தைக் குறைக்கும் படி, மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல், விமான நிறுவனங்களை அறிவுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்ற விமான நிறுவனங்களும் விரைவில் விமான டிக்கெட் பரிவர்த்தனை கட்டணத்தை வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது

பொது சேமநல நிதி: வங்கிகள் புறக்கணிப்பு

மும்பை: அரசு நிர்வகித்து வரும் பொது சேமநல நிதியில், தேசிய வங்கிகளில் முதலீடு செய்யும் போது, கூடுதல் சுமையை, தவிர்ப்பதற்காக சேமிப்பு கணக்கு ஒன்றையும் துவக்கும் படி வற்புறுத்தப்படு கிறது. இது சட்டவிரோதம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பொது சேமநல நிதி கணக்கு துவக்குவோரிடம், தனியாக சேமிப்பு கணக்கையும் துவக்கும் படி வலியுறுத்துகின்றனர். ஆனால், இது சட்ட விரோதம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பொது சேமநல நிதி துவக்குவோரிடம், சேமிப்பு கணக்கும் துவக்க நிர்பந்தித்தால், இது குறித்து, வங்கியின் தலைமை அதிகாரியிடம் புகார் மனு அளிக்கலாம். அதன் பிறகும், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், ரிசர்வ் வங்கி நியமித்துள்ள வங்கிகள் மத்தியஸ்த அமைப்பிடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது

 170 இந்திய கிளைகளை மூட”ஜிஇ மணி’ முடிவு
 
  
புது தில்லி, நவ. 25: நுகர்வோர் கடன் வழங்கும் நிறுவனமான ஜிஇ மணி, இந்தியாவில் உள்ள 170 கிளை களை மூட முடிவு செய்துள்ளது
ஜெனரல் எலெக்ட்ரிக் (ஜிஇ) நிறு வனத்தின் அங்கமாக விளங்கும் இந்நிறுவனம் வீட்டுக் கடன், தனி நபர் கடன் மற்றும் நுகர்வோர் கடன் வழங்குவதில் ஈடுபட்டிருந்தது
இந்நிறுவனம் இதுவரை ரூ. 5 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார தேக்க நிலை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இம்மு டிவை ஜிஇ மணி எடுத்துள்ளது
ரியல் எஸ்டேட் துறை கடுமையான நெருக்கடியைச் சந் தித்துள்ளதாலும், வங்கி வட்டி விகிதம் உயர்ந்துள்ளதா லும் இத்தகைய முடிவை இந்நிறுவனம் எடுத்துள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று மாதங்களில் 170 கிளைகள் மூடப்படும் என்று குறிப்பிட்ட அவர் தனது பெயரைத் தெரிவிக்க மறுத்து விட்டார். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்நிறுவ னப் பங்குகளை பிற நிதி நிறுவனங்களிடம் விற்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. இவை எதிர்பார்த்த அளவுக்கு பயன் தராமல் போகவே ஜிஇ மணி நிறுவனத்துடன் ஜிஇ கமர்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது

 பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால்

 


இந்திய நிறுவனங்களின் ரூ.77,000 கோடி புதிய முதலீட்டு திட்டங்கள் ஒத்தி வைப்பு
அஸ்வின் ஜே புனேன்
மும்பை
நாட்டின் பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகியுள்ளதால், நடப்பு 2008&09&ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் இரண்டாவது காலாண்டில், இந்திய நிறுவனங்கள் ரூ.76,538 கோடி மதிப்பிற்கு மேற்கொள்ளவிருந்த புதிய முதலீட்டுத் திட்டங்களை ஒத்தி வைத்துள்ளன.
மூலதனச் சந்தை
மூலதனச் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால் பல நிறுவனங்கள் அவற்றின் பங்கு வெளியீட்டு திட்டங்களை ஒத்தி வைத்துள்ளன. பல நிறுவனங்கள் ÔசெபிÕ அமைப்பின் ஒப்புதல் பெற்ற நிலையிலும், அவற்றின் பங்கு வெளியீடுகளை ரத்து செய்துள்ளன. நிதிச் சந்தை மற்றும் கடன் சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக இந்திய நிறுவனங்களுக்கு அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியை திரட்டுவது என்பது பெரும் சவாலாக உள்ளது.
கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, தேவைப்பாடு குறைவு, ஏற்றுமதியில் பாதிப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் பல நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைப்பது, விரிவாக்க திட்டங்களை தள்ளி வைப்பது, பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும் புதிய முதலீட்டு திட்டங்களைக் கைவிடுவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. வருவாய் இழப்பினை தவிர்க்கவும், லாப வரம்பை நிலை நிறுத்தவும் நம் நாட்டு நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
ஆறு மாதங்களில்…
இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாத காலத்தில் இந்திய நிறுவனங்கள் ரூ.76,538 கோடி மதிப்பிற்கான புதிய முதலீட்டு திட்டங்களை ஒத்தி வைத்துள்ளதாக தொழில்துறை திட்டங்களுக்கான கண்காணிப்பு மையத்தின் (சி.எம்.ஐ.இ) அண்மைக் கால ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
52 திட்டங்கள்
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் ரூ.42,740 கோடி மதிப்பிற்கான 52 புதிய திட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் ரூ.33,798 கோடி மதிப்பிற்கான 45 முதலீட்டு திட்டங்களை நிறுவனங்கள் ஒத்தி வைத்துள்ளன. இவற்றுள் சில நிறுவனங்கள் புதிய திட்டங்களை முழுமையாக கைவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக ரியல் எஸ்டேட் துறைதான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் ஏராளமான கட்டுமான திட்டப் பணிகள் சுணக்கம் அடைந்துள்ளன. கடன்கள் வாயிலாக நிதியை திரட்டுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு புதிய திட்டப் பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தொடங்கப்பட்ட பல திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட முடியாமல் முடங்கிப் போயுள்ளன. சொத்துக்களின் மதிப்பில் மேலும் வீழ்ச்சி ஏற்படும் என்ற நிலைப்பாட்டால் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இத்துறை நிறுவனங்களுக்கு கடன் வழங்க தயக்கம் காட்டுகின்றன.
சர்க்கரை துறை
ரியல் எஸ்டேட் துறைக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் சர்க்கரை உற்பத்தி துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இத்துறை நிறுவனங்களின் பல புதிய திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. கடந்த 18 மாதங்களில் இத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் கூடுதல் தொழிற்பிரிவுகளை அமைத்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
எனினும் ரியல் எஸ்டேட் மற்றும் சர்க்கரை துறைகளில்தான் புதிய திட்டங்கள் முடங்கி வருவது தெளிவாக உணரப்பட்டுள்ளது. புதிய திட்டங்களை மேற்கொள்ளும் விஷயத்தில், இத்துறைகளுடன் ஒப்பிடும்போது, சிமெண்டு மற்றும் உருக்கு ஆகிய துறைகளில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்படவில்லை என சி.எம்.ஐ.இ. அமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
இது குறித்து இதன் இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறும்போது, Òஎட்டு மாதங்களுக்கு முன்பு வரை பல நிறுவனங்கள் அவற்றின் பிரமாண்ட விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும், மேற்கொள்ளவிருக்கும் மாபெரும் முதலீடுகள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன. தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் புதிய திட்டங்கள் கைவிடப்படுவது இயற்கையானதொன்றுதான்Ó என்று தெரிவித்தார்.
பெரிய திட்டங்கள்
சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டு காலாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நிறைவு பெறும் நிலையில் உள்ள சில பெரிய திட்டப் பணிகளில் கூட தடங்கல் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தனியார் துறையில் நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வர மேலும் சில மாதங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சென்ற ஆகஸ்டு மாதத்தில் மிகக் கடுமையாக சரிவடைந்து காணப்பட்டது. எனினும் செப்டம்பர் மாதத்தில் இது 4.9 சதவீதமாக ஓரளவிற்கு உயர்ந்தது. இது போன்ற இடர்பாடுகளால் நாட்டின் பல்வேறு துறைகளும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.

 

அனில் அம்பானி குழுமம்
‘ஆன்லைன்’ வர்த்தகத்தில் களம் இறங்குகிறது
‘ஆன்லைன்’ வர்த்தகம் என்றழைக்கப்படும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும் சில்லரை வர்த்தகத்திற்கு வளமான வாய்ப்பு உருவாகி வருகிறது. இத்துறை மூலம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. எனவே, இத்துறையில் களமிறங்கப் போவதாக அனில் திருபாய் அம்பானி குழுமம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் மணி என்ற பிராண்டு பெயரில் தொடங்கப்படும் மின்னணு வர்த்தகம் வாயிலாக, நிறுவனங்கள் புதிதாக பங்குகளை வெளியிடும்போது, பங்குகளை வாங்குதல், பரஸ்பர நிதி திட்டங்கள், காப்பீட்டு பாலிசிகளை வாங்குதல் மற்றும் தங்க நாணயங்கள், ஆயத்த ஆடைகள், புத்தகங்கள், சி.டீ.க்கள் மற்றும் டீ.வி.டீ.க்கள் உள்ளிட்ட (இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படும்) அனைத்து பொருள்களையும் வாங்கலாம்.
இது குறித்து ரிலையன்ஸ் மணி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுதிப் பண்டோபாத்யா கூறும்போது, “ரிலையன்ஸ் மணிமால்.காம் என்றழைக்கப்படும் மின்னணு வர்த்தக வெப் தளத்தில் ‘ஆன்லைன்’ வாயிலாக விற்பனை செய்யப்படும் அனைத்து பொருள்களையும் வாங்கலாம். இது, மின்னணு வடிவிலான ஒரு பெரிய வணிக வளாகம் போன்று செயல்படும்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “நாட்டில் இணையதளத்தை 6 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்கு அதிகரிக்கும். இந்நிலையில், இணையதளம் வாயிலாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வோர் எண்ணிக்கை தற்போது 1.08 கோடியாக உள்ளது. ரூ.20,000 கோடி சந்தை மதிப்பை கொண்டுள்ள இத்துறையில், நிறுவனத்தின் பங்களிப்பை குறைந்தபட்சம் 20 சதவீதமாக வைத்திருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

சூர்யா ஹாஸ்பிட்டல்
பஹ்ரைனில் கூட்டுத் திட்டத்தில் மருத்துவமனை அமைக்க முடிவு
ஹேமமாலினி வெங்கட்ராமன்
சென்னை
சென்னையைச் சேர்ந்த சூர்யா ஹாஸ்பிட்டல் நிறுவனம், பஹ்ரைன் நாட்டில் மருத்துவமனை அமைப்பதற்காக, அந்நாட்டைச் சேர்ந்த அல்&நமால் நிறுவனத்துடன் கூட்டு கொண்டுள்ளது. இந்த கூட்டு திட்டத்தில், இவ்விரு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருக்கும். இந்த கூட்டு திட்டத்தில் சூர்யா ஹாஸ்பிட்டல் 50 லட்சம் டாலரை முதலீடு செய்ய உள்ளது.
மக்கள்தொகை
இது குறித்து சூர்யா ஹாஸ்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சி.பி.ஸ்ரீகுமார் கூறுகையில், “பஹ்ரைன் நாட்டின் மக்கள் தொகை 15 லட்சம் என்ற அளவில் உள்ளது. அந்நாட்டில் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆய்வு நடத்திய பின்னர் இத்திட்டத்தை நிறுவனம் மேற்கொள்கிறது. பஹ்ரைன் நாட்டில் அமைக்கப்பட உள்ள சிறப்பு மருத்துவமனையில், 50 படுக்கை வசதிகளுடன், நோய் கண்டறியும் ஆய்வு மையமும் இடம் பெற்றிருக்கும்” என்று தெரிவித்தார்.
சூர்யா ஹாஸ்பிட்டல் நிறுவனத்தை ஸ்ரீகுமாரும், அவருடைய மனைவியும் தொடங்கினர். தொடக்கத்தில் ரூ.5 கோடி மூலதனத்தில் 50 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 2000&ஆம் ஆண்டில் நூறு படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சென்னை வடபழனியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் தற்போது 200 படுக்கை வசதி உள்ளது.
விற்றுமுதல்
ஆண்டுக்கு ரூ.50 கோடி விற்றுமுதலை கண்டு வரும் இந்த மருத்துவமனையில் 35 ஆலோசக நிபுணர்கள், 45 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். நடுத்தர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் உள்நாட்டு நோயாளிகள் தவிர, மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை, மலேசியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்தும் சிகிச்கைக்காக நோயாளிகள் வருகின்றனர்.
சூர்யா ஹாஸ்பிட்டல் நிறுவனம், சென்னையின் மைய பகுதியில், 300 படுக்கை வசதியுடன் கூடிய இன்னொரு மருத்துவமனையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்த மருத்துவமனையில், ரூ.6 கோடி செலவில் ரேடியாலஜி பிரிவு அமைக்கப்பட்டது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியும் இங்கு உள்ளது என ஸ்ரீகுமார் மேலும் கூறினார்.

 

உள்நாட்டு சில்லரை வர்த்தகத்தில்

 


மருந்து விற்பனை 1.2% குறைந்தது
கோம்பா சிங்
புதுடெல்லி
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மருந்து உற்பத்தி துறையையும் விட்டு வைக்கவில்லை. நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, சென்ற அக்டோபர் மாதத்தில் மருந்து பொருள்கள் சில்லரை விற்பனை 1.2 சதவீதம் சரிவடைந்துள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
ரான்பாக்சி லேபரட்டரீஸ், சிப்லா, கிளாக்சோஸ்மித்கிளைன் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் உள்ளிட்ட பல முன்னணி மருந்து நிறுவனங்கள், அக்டோபர் மாதத்தில் மருந்து பொருள்கள் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. மருந்து விற்பனை மதிப்பின் அடிப்படையில் எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது இதுவே முதன் முறையாக இருக்கலாம் என ஓ.ஆர்.ஜி. ஐ.எம்.எஸ். அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.
உள்நாட்டில் மருந்து பொருள்கள் விற்பனை வளர்ச்சி விகிதம் மாதந்தோறும் மாறுபடுகிறது. சென்ற ஆகஸ்டு மாதத்தில் மருந்து துறையின் வளர்ச்சி 4.6 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது. இது சென்ற செப்டம்பர் மாதத்தில் 14.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் மருந்துகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது எதிர்பாராதது என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மலிவான மருந்துகள்
இது குறித்து இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் தாரா பட்டேல் கூறும்போது, Òமருந்து விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது வியப்பளிப்பதாக உள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு போன்றவை பொதுமக்களை விலை மலிவான மருந்து பிராண்டுகளை வாங்கச் செய்திருக்கலாம். மேலும் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு செலுத்துவதற்கு தேவையான தொகை இல்லாததால் சில்லரை விற்பனையாளர்கள் மருந்துகளை வாங்கி கையிருப்பு வைப்பதையும் தவிர்த்திருக்கக் கூடும்Ó என்று தெரிவித்தார்.
சந்தை மதிப்பு
உள்நாட்டு மருந்து சில்லரை வர்த்தகத்தின் சந்தை மதிப்பு ரூ.33,000 கோடியாக உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, சென்ற அக்டோபர் மாதத்தில் மருந்து சில்லரை விற்பனை 1.2 சதவீதம் குறைந்து ரூ.2,877 கோடியாக சரிவடைந்துள்ளது. சர்வதேச அளவில் மருந்து பொருள்களுக்கான தேவைப்பாடு குறைந்துள்ளது. இதனையடுத்து பல இந்திய மருந்து நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சென்ற மாதத்தில் கிளாக்சோஸ்மித்கிளைன் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் விற்பனை அதிகபட்ச வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்த நிறுவனங்களின் விற்பனை முறையே 17.1 சதவீதம் மற்றும் 16.4 சதவீதம் குறைந்துள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக அலெம்பிக் மற்றும் ரான்பாக்சி ஆகிய நிறுவனங்களின் விற்பனை முறையே 8.2 சதவீதம் மற்றும் 3.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. மருந்துச் சந்தையில் முன்னணியில் உள்ள சிப்லா நிறுவனத்தின் விற்பனையும் 0.4 சதவீதம் குறைந்துள்ளது.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: