ஆட்குறைப்பில் இறங்கியது ஏபிஎன் ஆம்ரோ வங்கி

லண்டன்: நிதி நெருக்கடியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஏபிஎன் ஆம்ரோ வங்கியும் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி உலகமெங்கிலும் உள்ள தனது 9000 ஊழியர்களில் 2700 பேரை நீக்குகிறது. இந்தியாவில் மட்டும் 250 பேர் வேலை இழக்கிறார்கள்.

புதிய வேலை வாய்ப்புகள் குறித்து செய்திகளை மட்டுமே தர விரும்பினாலும், உலக பொருளாதரத்தின் இன்றைய நிலை தொடர்ந்து வேலை இழப்புகள் குறித்த அறிவிப்புகளைத்தான் வெளியிட வைத்துள்ளது பல பெரிய நிறுவனங்களையும்.

இந்த வரிசையில் அடுத்து வருவது ஆர்பிஎஸ் எனப்படும் ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து. எடின்பர்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கிதான் ஏபிஎன் ஆம்ரோவின் வங்கிப் பணிகளை உலகமெங்கும் நிர்வகித்து வருகிறது.

வேலையிழக்கப்போகும் ஊழியர்கள் எத்தனைபேர் என்பதை இப்போதே சொல்லவிட முடியாது. விரைவில் அதுகுறித்து முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று இந்நிறுவன அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

ஏபிஎன் ஆம்ரோவை இணைத்துக் கொண்ட பிறகுதான் ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்துக்கு கணிசமான நஷ்டம் ஏற்படத் துவங்கியதாம். இந்த ந்டத்தின் அளவு 20 பில்லியன் பவுண்டுகள், அதாவது ரூபாய் மதிப்பில் 1.48 டிரில்லியன். அப்போதிலிருந்தே ஆட்குறைப்பில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டதாம் ஆர்பிஎஸ்.

இந்தியாவில் மட்டும் இந்த வங்கிக்குள்ள சொத்து மதிப்பு 36,617 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இந்த வங்கியின் லாபம் 27 சதவிகிதம் குறைந்துள்ளது

சரிவில் முடிந்தது இன்றைய பங்கு சந்தை

மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில், பகல் 2 மணி வரை <உயர்ந்திருந்த சென்செக்ஸ்,பின்னர் குறைய துவங்கியது. ஆசிய சந்தைகள் உயர்ந்திருந்ததை தொடர்ந்து உயர்ந்திருந்த சென்செக்ஸ், பின்னர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து சரிய துவங்கியதாக சொல்கிறார்கள். காலையில் உயர்ந்து கொண்டிருந்த சந்தையை பார்த்து உற்சாகத்தில் இருந்த வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கிய சந்தையை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 207.59 புள்ளிகள் ( 2.33 சதவீதம் ) குறைந்து 8,695.53 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 54.25 புள்ளிகள் ( 2 சதவீதம் ) குறைந்து 2,654 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி., டி.சி.எஸ்., பெல், ஐ.டி.சி., மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை இன்று சரிவை சந்தித்தன. இன்று ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் சரிவில் இருந்தாலும் ஆசிய சந்தை உயர்ந்து தான் முடிந்திருந்தது.நிக்கி 5.22 சதவீதம், ஸ்டெயிட் டைம்ஸ் மற்றும் தைவான் முறையே 2 மற்றும் 2.6 சதவீதம், ஹேங்செங் 3.38 சதவீதம், ஜகர்தா மற்றும் கோஸ்பி முறையே 1.12 மற்றும் 1.36 சதவீதம் உயர்ந்திருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிவில்தான் இருக்கின்றன.

ஒப்பந்த ஊழியர்களை குறைக்க கூகிள் நிறுவனம் முடிவு ?

வாஷிங்டன் : இன்டர்நெட் நிறுவனமான கூகிள், அதன் ஒப்பந்த ஊழியர்களை கணிசமாக குறைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.பொருளாதார சீர்குழைவு ஆரம்பித்ததற்கு முன்பிருந்தே நாங்கள் ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கையை குறிப்பிட்ட அளவு குறைத்து விடயோசித்து வருகிறோம் என்று கூகிள் நிறுவனத்தை சேர்ந்த ஜேன் பென்னர் தெரிவித்தார்.ஆனால் எத்தனை ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள் என்பதை அவர் சொல்ல மறுத்து விட்டார். கூகிள் நிறுவனத்தில் 20,123 நிரந்தர ஊழியர்களும் சுமார் 10,000 ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள்

விற்பனையை அதிகரிக்கும் வகையில்
அரசு ஊழியர்களை முக்கிய இலக்காக கொண்டு செயல்படும் நிறுவனங்கள்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் தேக்க நிலையால், நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. தனிநபர் செலவிடும் வருவாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கார்கள், நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் தேக்க நிலை உருவாகியுள்ளது.
சலுகை திட்டங்கள்
இச்சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களை முக்கிய இலக்காகக் கொண்டு விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் இத்துறை நிறுவனங்கள் தீவிரமாக களம் இறங்கி உள்ளன.
குறிப்பாக மோட்டார் வாகனங்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகை திட்டங்களை வழங்கி விற்பனையை அதிகரித்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் சென்ற 2007&ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 2,500 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம், மத்திய அரசு ஊழியர்களை இலக்காகக் கொண்டு ‘வீல்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் இவர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 4 மடங்கிற்கு மேல் அதிகரித்து 10,641&ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் செயல் அதிகாரி (விற்பனை மற்றும் சந்தைபடுத்துதல்) மயாங்க் பரேக் கூறும்போது, “அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ளோம். இதன் முதல் கட்டமாக, நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யின் ஊழியர்களை கவரும் வகையில் சிறப்பு சலுகை திட்டம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.
அணுகுமுறை
நாட்டில் விற்பனையாகும் மொத்த கார்களில் அரசு ஊழியர்கள், மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்களின் பங்களிப்பு சென்ற 2007&ஆம் ஆண்டில் 5 சதவீதமாக இருந்தது. இது, இவ்வாண்டில் 12&15 சதவீதமாக உயர்ந்துள்ளது. கார்கள் விற்பனை குறைந்து வரும் நிலையில், மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் இந்த அணுகுமுறை வரவேற்கத்தக்கது என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹ¨ண்டாய்
இந்த வாய்ப்பினை பயன்படுத்திடும் வகையில், ஹ¨ண்டாய் நிறுவனமும், அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு கார்கள் விற்பனையில் ரூ.10,000 முதல் ரூ.31,000 வரை தள்ளுபடி வழங்கியது. இதனையடுத்து, சென்ற அக்டோபர் மாதத்தில் இந்நிறுவனத்தால் அரசு ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட கார்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து 3,000&ஆக உயர்ந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு கடன் உதவி அளிக்க இந்நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் பேங்க் மற்றும் எச்.டீ.எஃப்.சி. வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது.
இதேபோன்று, சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் அரசு ஊழியர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன.
சுற்றுலா
இது குறித்து தாமஸ்குக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாதவன் மேனன் கூறும்போது, “பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு வரும் நிலையிலும் எல்லா தரப்பினரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதை குறைத்து விடுவார்கள் என்று கூற முடியாது. மத்திய அரசு ஊழியர்கள் இதுவரை கண்டிராத அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இவர்கள் வாயிலாக வர்த்தகத்தை மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொலைக்காட்சி பெட்டிகள், வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், மத்திய அரசு ஊழியர்களை இலக்காகக் கொண்டு விற்பனை அதிகரிப்பது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) வி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஆக, மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான அளவில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் சாதனங்கள் விற்பனை அதிகரித்து தொழில் துறை உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

தாபர் இந்தியா நிறுவனம்
பெம் கேர் பார்மாவை கையகப்படுத்தியது

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நுகர்பொருள் துறையில் முன்னணியில் உள்ள தாபர் இந்தியா நிறுவனம் ஃபெம் கேர் பார்மா நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
சரும பராமரிப்பு
ஃபெம் கேர் பார்மா பெண்களுக்கான சரும பராமரிப்பு பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் 72.15 சதவீத பங்குகளை, ரூ.203.70 கோடிக்கு தாபர் இந்தியா வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனினும் நம் நாட்டின், நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கான, விதிமுறைகளின்படி தாபர் இந்தியா நிறுவனம் சில்லரை முதலீட்டாளர்களிடமிருந்து, அதாவது பங்குச் சந்தையிலிருந்து, 20 சதவீத பங்குகளை வாங்க வேண்டும். இதற்கான நடைமுறைகளை விரைவில் இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து தாபர் இந்தியாவின் தலைவர் ஆனந்த் பர்மன் கூறும்போது, Òஃபெம் கேர் பார்மா நிறுவனத்தை வாங்கியுள்ளது நுகர்பொருள் துறையில் தாபர் இந்தியா செயல்பாடுகள் மற்றும் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கு பெரிதும் துணை புரியும். நன்கு நிறுவப்பட்டுள்ள பிராண்டு ஒன்றுடன் சரும பராமரிப்பு பிரிவில் நிறுவனம் கால் பதிப்பதற்கும் இது வகை செய்துள்ளது. மேலும் சரும பராமரிப்பு பிரிவில் புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தவும், இது சார்ந்த வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுÓ என்று தெரிவித்தார்.
உற்பத்தி பிரிவுகள்
ஃபெம் கேர் இந்தியா மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக்கிலும், இமாச்சல பிரதேசத்தில் பத்தி பகுதியிலும் உற்பத்திப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம், நாடு முழுவதுமாக 25,000 அழகு நிலையங்களுக்கு நேரடியாக சரும பராமரிப்பு பொருள்களை விநியோகம் செய்து வருகிறது.
ஃபெம் கேர் பார்மா நிறுவனம், நடப்பு 2008&09&ஆம் நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல்&செப்டம்பர்) ரூ.9.75 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதே காலத்தில் நிறுவனத்தின் விற்பனை ரூ.54.45 கோடியாக இருந்தது.

இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதத்திற்கு குறையாமல் இருக்கும் : மான்டேக் சிங் அலுவாலியா

புதுடில்லி : இந்த நிதி ஆண்டின் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதத்திற்கு குறையாமல் இருக்கும் என்று திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார். 7.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்திற்குள் வளர்ச்சி இருக்கும் என்று ரிசர்வ் வங்கி சொல்லியிருந்தாலும், அதிலிருந்து கொஞ்சம் குறைந்து 7 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்கும் என்று அலுவாலியா தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக பணவீக்கம் குறைந்து வருவதால், அது ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை எளிமையாக்குகிறது என்றார் அவர்.

ஜாகுவார், லேண்ட் ரோவரை காப்பாற்ற பிரிட்டனிடம் ரூ.7440 கோடி உதவி கோரும் டாடா
லண்டன்: ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களை வாங்கிய டாடா நிறுவனம் அந்த நிறுவனங்களை கடனில் மூழ்காமல் காப்பாற்ற பிரிட்டிஷ் அரசிடம் 1 பில்லியன் யூரோ (ரூ. 7,440 கோடி) கடனுதவி கேட்டு ரகசிய பேச்சு நடத்தி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் தான் இந்த இரு கார் தயாரிப்புப் பிரிவுகளையும் போர்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் பிரிட்டிஷ் கிளையிடமிருந்து டாடா மோட்டர்ஸ் நிறுவனம் 2.3 பில்லியன் யூரோவுக்கு (ரூ. 11,000 கோடி) வாங்கியது.

ஆனால், மிக அதிக விலை கொண்ட இந்த கார்களின் விற்பனை அதிகரிக்கவில்லை. மாறாக சரிந்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கார் நிறுவனங்களை வாங்க டாடா நிறுவனம் வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளும் படுத்துக் கிடப்பதால், அங்கும் டாடா நிறுவனத்தால் நிதி திரட்ட முடியவில்லை.

இப்போது சர்வதேச நிதி சிக்கலால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு நிதி, வங்கி, கார், உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு அரசு உதவிகளை அளித்து அவற்றைக் காப்பாற்றி வருகின்றன.

அமெரிக்க அரசும் தனது நாட்டில் திவாலாகிக் கொண்டிருக்கும் சில முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.

இந் நிலையில் பிரிட்டன் அரசிடம் டாடா நிறுவனமும் 1 பில்லியன் யூரோ கடனுதவி கேட்டுள்ளது. இதன் மூலம் இந்த இரு கார் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் காப்பாற்ற முடியும் என அந் நாட்டு அரசிடம் டாடா தெரிவித்துள்ளது.

டாடாவின் சார்பில் ஜாகுவார்-லேண்ட் ரோவர் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஸ்மித் பிரிட்டிஷ் அரசுடன் கடன் கோரி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

டாடாவின் இந்தக் கோரிக்கையை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் ஏற்பார் என்று கூறப்படுகிறது.

சிட்டி வங்கிக்கு 306 பில்லியன் டாலர் அரசு உதவி
நியூயார்க்: பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ள சிட்டி வங்கிக்கு அமெரிக்க அரசு வரலாறுகாணாத வகையில் 306 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன் வந்துள்ளது.

இந்த வங்கியின் பங்குகள் விலை 83 சதவீதக்குக்கு மேல் சரிந்துவிட்ட நிலையில், வங்கியை விற்றுவிடுவது அல்லது வேறு வங்கியுடன் இணைந்துவிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இந் நிலையில் அமெரிக்க அரசு இந்த உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஏற்கனவே இந்த வங்கிக்கு கடந்த மாதம் அமெரிக்க அரசு 25 பில்லியன் டாலர்கள் வழங்கியது. ஆனால், அதெல்லாம் போதவில்லை.

இதையடுத்து வரலாறு காணாத வகையில் 306 பில்லியன் டாலர் உதவியை இந்த வங்கிக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.

சுமார் 100 நாடுகளில் கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளும் சொத்துக்களும் உள்ளன.

இப்போதைய அரசு நிதியுதவி மூலம் சிட்டி வங்கியின் 90 சதவீத நஷ்டம் ஈடுகட்டப்பட்டுவிட்டது. மீதமுள்ள 10 சதவீத நஷ்டத்தை அந்த வங்கியே தனது சொத்துக்களை வைத்து சமாளிக்கவுள்ளது.

தப்பினார் வி்க்ரம் பண்டிட்:

இந்த நிதியுதவி மூலம் சிட்டி வங்கியின் தலைவர் விக்ரம் பண்டிட்டின் பதவியும் தப்பியுள்ளது. அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பண்டிட் உள்ளிட்ட டாப் சிட்டி வங்கி நிர்வாகிகளின் ஊதியம், போனஸ்களை பெருமளவில் குறைக்க அரசு உத்தரவிடும் எனத் தெரிகிறது.

தனியார் நிறுவனங்களின் போட்டியால்
விலையை குறைக்கும் கட்டாயத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்
ராஜீவ் ஜெயஸ்வால்
புதுடெல்லி
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் மற்றும் ஷெல் இந்தியா ஆகிய தனியார் துறை எண்ணெய் நிறுனங்கள், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் விலையை குறைத்தால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கண்ட எரிபொருள்களின் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும் என தெரிகிறது.
பெட்ரோல் & டீசல்
ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை வாயிலாக முறையே ரூ.9.86 மற்றும் ரூ.0.70 லாபம் கிடைத்து வரும் நிலையிலும் எந்த ஒரு எண்ணெய் நிறுவனமும் இதுவரையில் விலையை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “தனியார் துறையைச் சேர்ந்த எஸ்ஸார் நிறுவனம், சில்லரை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 400&லிருந்து 1,250&ஆக அதிகரிக்க போவதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தனியார் துறை நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், இத்துறை வர்த்தகத்தில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்களிப்பு குறைந்துவிடும். எனவே, பொதுத் துறை நிறுவனங்கள் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணெய்
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், 34,000 சில்லரை விற்பனை நிலையங்கள் வாயிலாக, பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும், இத்துறை நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனை வாயிலாக ரூ.22.40&ம், ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயு விற்பனையில் ரூ.343.50&ம் இழப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து, இத்துறை நிறுவனங்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.2,831 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதேசமயம், தனியார் துறை எண்ணெய் நிறுவனங்கள் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில் ஈடுபடவில்லை. பொதுத் துறை நிறுவனங்கள் கண்டு வரும் இழப்பை கருத்தில் கொண்டுதான், மத்திய அரசு பெட்ரோலிய பொருள்கள் விலையை குறைக்க வற்புறுத்தவில்லை என தெரிகிறது.
பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பில் பெரும் பகுதி, மத்திய அரசு வழங்கும் எண்ணெய் பத்திரங்கள் வாயிலாக ஈடு செய்யப்படுகிறது. சிறிது காலம் பொறுத்திருந்து பெட்ரோலிய பொருள்கள் விலையை குறைத்தால், மத்திய அரசுக்கு ஏற்படும் மானியச் சுமை குறையும் என பொதுத் துறை நிறுவனம் ஒன்றின் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், தனியார் துறை நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், பொதுத் துறை நிறுவனங்களும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படும்.

3 ஆண்டில் 2.5 லட்சம் அமெரிக்கருக்கு வேலை – ஒபாமா

2011 ஜனவரிக்குள் 2.5 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தர திட்டமிட்டு உள்ளார். அந்நாட்டு அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள பராக் ஒபாமா.
மேலும் சாலைகள், பாலங்களை கட்டுவது, பள்ளிகளை நவீனப்படுத்துவது, மாற்று எரிபொருள்களை உருவாக்குவது, அதிக மைலேஜ் தரும் திறனுள்ள கார்களை உருவாக்குவது என ஒபாமா திட்டத்தில் ஏராளமான விஷயங்கள் இடம்பெற்று உள்ளன.

இப்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவும் விஷயங்கள் அல்ல இவை. இவை நீண்ட கால அடிப்படையிலான முதலீடுகள். ஆனால் நீண்ட நாட்களாக இவை புறக்கணிக்கப்பட்டு வந்தன என ரேடியோவில் உரையாற்றிய போது ஒபாமா தெரிவித்தார். இப்போது அமெரிக்கா சந்தித்துக் கொண்டு இருக்கும் சிக்கல்களை சந்திக்க தமது திட்டங்கள் போதுமானவை எனத் தெரிவித்த ஒபாமா, தனது திட்டங்கள் மூலம் வேலைகள் உருவாக்கப்படுவதுடன் வலுவான, வளரும் பொருளாதாரத்துக்கு வழிகோலும் எனவும் தெரிவித்தார். அமெரிக்காவில் வீட்டு வசதி துறை, கடன், நிதி சந்தை ஆகியவை பொருளாதாரத்தை மிகவும் பாதித்து உள்ளது.

நிபுணர்கள் கருத்துப்படி, இந்த நெருக்கடி 2009ம் ஆண்டு முழுவதும் தொடரும்.
இந்நிலையில் இதை உணர்ந்துள்ளார் ஒபாமா. வரலாற்றில் குறிப்பிடும் அளவுக்கு பொருளாதார சிக்கலை அமெரிககா எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார்

அன்னியச் செலாவணி கையிருப்பு 500 கோடி டாலர் சரிவு

நம் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நவம்பர் 14-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு 500 கோடி டாலர் (சுமார் ரூ.24,000 கோடி) குறைந்து 24,635 கோடி டாலராக (சுமார் ரூ.11,82,480 கோடி) சரிவடைந்துள்ளது. இது, இதற்கும் முந்தைய வாரத்தில் 150 கோடி டாலர் குறைந்து 25,135 கோடி டாலராக இருந்தது.
இந்தியாவில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மற்றும் அன்னிய நேரடி முதலீடு குறைந்து வருவதால், டாலர் வரத்து மிகவும் குறைந்து போயுள்ளது. இந்த நிலையில், இறக்குமதிக்காக நாம் அதிக அளவில் டாலரை செலவிட வேண்டியுள்ளது. 

நடப்பு காலண்டர் ஆண்டில் இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் செய்திருந்த முதலீட்டு தொகையில் 1,300 கோடி டாலரை (சுமார் ரூ.62,400 கோடி) விலக்கிக் கொண்டுள்ளன.

மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்து வருவதை தடுத்து நிறுத்த, பாரத ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை விற்பனை செய்து வருவதாலும், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சுமார் 13 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: