சம்பள குறைப்புக்கு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஒப்புதல்

ம்பள குறைப்புக்கு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஒப்பு தல்

 வீட்டு வசதி மற்றும் நுகர்வுக் கடன்கள் வழங்கி வந்தவை இந்த வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்ட ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முடிவெடுத்தது. அதற்கு ஊழியர்களிடம் ஒப்புதல் கிடைத்துள்ளது. ஊழியர்களின் பல்வேறு வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்றவாறு சதவீத அடிப்படையில் சம்பள குறைப்பு இருக்கும்.

 வேலையில் இருந்தால் போதும், சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை என்று ஊழியர்கள் ஜெட் ஏர்வேஸின் கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதன் படி துணைத்தலைவர் பொருப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு 25% சம்பள குறைவு நிகழும். அதாவது துணைத்தலைவரின் ஆண்டு சம்பளம் 20 லட்சம் என்றால் இனி அவருக்கு 15 லட்சம் தான் சம்பளம். இதே போல 5 லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் வாங்குபவர்களுக்கு 20% சம்பள குறைப்பு விதிக்கப்படும். 2 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் வாங்குபவர்களுக்கு 10% சம்பள குறைப்பும், அதற்கும் கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு 5% சம்பள குறைப்பும் விதிக்கபடுவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சிறிது நெருக்கடி குறைய வாய்ப்பு இருப்பதாகவும், ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதை விட இது சிறந்த யோசனையாக இருக்கும் என்று ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பளம் கொஞ்சம் கிடைத்தாலும் போதும், வேலையில் தொடர்ந்து இருப்பதுதான் நல்லது என்று ஊழியர்களின் நிலை உருவாகியுள்ளது. சம்பளம் குறைக்கப்பட்டாலும் இதனால் பாதிக்கப்படும் ஊழியர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

விலை குறையுது; கஸ்டமர்களைத் தேடும் ரியல் எஸ்டேட்காரர்கள்!!

சென்னை: ‘வீடு வாங்கி கடனில் சாவதை விட, வாடகைக் கொடுத்துக் கொண்டே நிம்மதியாகக் காலத்தைத் தள்ளலாம், நிலைமை சரியாகும்வரை!’ என்ற எண்ணம் கிட்டத்தட்ட அனைத்து நடுத்தர மக்களுக்குமே வந்துவிட்டது.
தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையில் ரியல் எஸ்டேட் எப்படி உச்சாணிக் கொம்புக்குப் போனது?
சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவாக இருந்தாலும் பரவாயில்லை. நமக்கென்று ஒரு வீடு, கடன் வாங்கியாவது வாங்கி வைத்துவிடலாம் என்று நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு பக்கம் கடன் தொகையோடு அலைய, ஐடி நிறுவனங்களில் அள்ளித் தந்த சம்பளத்தை என்ன செய்வது என்று திக்குமுக்காடிப்போய் சின்னப் பசங்களெல்லாம், ஃபிளாட், தனி வீடு என்று தேடித் தேடி, ரியல் எஸ்டேட் முதலைகள் கேட்ட பணத்தைக் கொட்ட, 50 ஆயிரம் கூட பெறாத ஒரு மனைக்கு 50 லட்சம் வரை விலை ஏற்றிவிட்டார்கள்.
 இந்தப் போக்கை நிலையென நம்பிய பல நிறுவனங்களின் பார்வை ரியல் எஸ்டேட் துறை மீதே அழுத்தமாக விழுந்தது. 

 

சென்னையில் தொற்றிய இந்த ‘விஷ ஜூரம்’ ஐடி நகரங்கள் என புதிய அந்தஸ்து பெற்ற அத்தனை நகரங்களிலும் தொற்றிக் கொள்ள, ஆகாசத்தைத் தொட்டது வீடுகள் மற்றும் மனைகளின் விலை. வங்கிகள் திருவிழாக் கொண்டாட்டத்துடன் கடன் கொடுத்து மகிழ்ந்தன.

ஆனால் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறை மற்றும் அதை நம்பியிருந்த வங்கிகள் வீழ்ந்த கதை அம்பலமானதும் விழி பிதுங்கிப் போயின, அவர்களைப் பார்த்து காப்பியடித்த இந்திய நிறுவனங்களும் வங்கிகளும்.

வீட்டுக் கடனுக்கு வட்டி உயர்வு, புதிய கடன் தருவதில் சுணக்கம் என பல நடவடிக்கைகளில் இறங்க, ரூ.20 லட்சம் வங்கிக் கடன் பெற்ற சொந்த வீடு வாங்கியவர்கள் வங்கிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் இப்படி கடன் வாங்கியவர்களின் வேலையும் கேள்விக்குறியாகிவிட்டது. பல ஐடி நிறுவனங்களில் தொடர் ஆட்குறைப்புகள். வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் ஒரே நாளில் 300 பேர் வரை ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதில் ஆடிப்போயுள்ளனர், அவர்களை நம்பி புதுப்புது ஃபிளாட்களைக் கட்டிய பில்டர்கள். 

இந்த நிலை தொடர்ந்தால், டெட்ராய்ட்டில் கடனுக்கு வாங்கிய வீடுகளை அம்போவென விட்டுவிட்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலைதான் இங்கும்.

அமெரிக்கா, பிரிட்டனில் இந்த வீழ்ச்சியை எதிர்பார்த்து அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர் மக்கள். அப்படியும் கூட அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

கடன் வாங்குவதிலும், கொடுப்பதிலும் அவர்களைப் பார்த்துக் காப்பியடித்த நம்மவர்களோ, இந்த வீழ்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை.

இன்னும் ஓரிரு மாதங்கள்தான்… மீண்டும் பழைய விலைக்கே போகப்போகிறது வீட்டு மனைகளின் விலை என்கிறார்கள், அரசு வங்கிகளின் அதிகாரிகள்.

இதற்குக் கட்டியம் கூறுவதுபோல, இப்போது செய்தித்தாள்களில் கூவிக்கூவி அழைக்கிறார்கள் மலிவு விலையில் வீட்டு மனை வாங்கிக் கொள்ள.

ரூ.1 லட்சம் என்று விற்பனை செய்த இடத்தை இப்போது ரூ.50 சதவிகித தள்ளுபடி விலையில் தருவதாக பக்கம் பக்கமாக விளம்பரம் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.

வேளச்சேரி, மடிப்பாக்கம், ஊரப்பாக்கம், மறைமலைநகர் போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பல வீடுகள் மாதக்கணக்கில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

வாங்க…. வாங்க!!

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களான டிஎல்எப், யுனிடெக், பர்ஸ்வந்த், ஓமெக்ஸ் உட்பட 4,000 நிறுவனங்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் மனை அல்லது வீட்டின் விலையில் குறைந்தது 15 சதவிகிதம் வரைக் கட்டாயம் குறைக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக, அவரவர் வசதி மற்றும் இடத்தின் தன்மையைப் பொருத்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், முதலீடு செய்யப்பட்டு விற்காமல் இருந்த மனை, வீடுகளை விற்க பரிசுகளை அளிக்கும் திட்டத்தை டெல்லி, மும்பை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. விலை உயர்ந்த பிளாட்டை முன்பதிவு செய்வோருக்கு கார், லேப்டாப், பிளாஸ்மா டிவி எல்லாம் கூடத் தருவதாக தமுக்கடித்து வருகின்றனர்.

ஒரு சொகுசு வீடு வாங்கினால் ஒரு படுக்கையறை வீடு இலவசம் என்று கூட இந்த வாரம் ஒரு முன்னணி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் சில பில்டர்கள், தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொண்டு வீடு, மனை விலையை சதுர அடிக்கு 10 முதல் 25 சதவீதம் வரை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஆனாலும் சிக்கல் தீர்வதாகத் தெரியவில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்தப் போக்குதான் நீடிக்கும் என வங்கிகள் கணித்துள்ளதால், மனைகளுக்கு கடன் தரும் திட்டத்தை அறிவிக்கப்படாமல் நிறுத்தியுள்ளன பல வங்கிகள்.

 திவாலை நோக்கி சிட்டி பாங்க் !? பங்கு விலை 60% சரிவு

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியால் மிகப்பெரிய நிறுவனங்களும், பாரம்பரியம் மிக்க நிறுவனங்களம் திவால் நோட்டீகளை கொடுத்த வருகின்றன. அதோடு தனி நபர்களும் திவால் நோட்டீஸ்களை கொடுத்த வருகின்றனர். இந்நிலையில் உலகின் மிகப் பெரிய நிதி நிறுவனமான சிட்டி குழுமம், திவாலை நோக்கிச் செல்வதால், அதை மீட்க அமெரிக்க அரசு தலையிடும் என்று தெரிகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரிய நிதிக் குழுமம் சிட்டி. அதில் சிட்டி பாங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு அதன் பங்கு மதிப்பு ரூ.13.5 லட்சம் கோடியாக இருந்தது. உலகம் முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் சிட்டி பாங்க் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

அமெரிக்க நிதி நெருக்கடி தொடங்குவதற்கு முன்பிருந்தே சிட்டி குழுமம் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டது. அதை சீரமைக்கும் திட்டத்துடன் இந்தியரான விக்ரம் பண்டிட்டை இந்த ஆண்டு தொடக்கத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக சிட்டி குழும இயக்குனர் வாரியம் நியமித்தது.

எனினும், அமெரிக்க நிதி நெருக்கடியில் சிட்டி பாங்க்கும் பாதிக்கப்பட்டு வந்தது. பங்குச் சந்தையில் அதன் பங்கு விலை தொடர் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், அமெரிக்க நிதி மற்றும் வங்கி நிறுவனங்களைக் காக்கும் வகையில் அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் சிட்டி குழுமத்துக்கு 1.25 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், பங்கு விலை தொடர் சரிவால் சிட்டி பாங்க்கின் சந்தை மதிப்பு, கடந்த வெள்ளியன்று ரூ.1 லட்சம் கோடியாகி விட்டது. கடந்த வாரத்தில் அதன் பங்கு விலை 60 சதவீதம் சரிந்து ரூ.188 ஆகி, 1992 டிசம்பரில் இருந்த நிலைக்குச் சென்றது.

 இது வங்கியின் முதலீட்டாளர்களிடம் பெரும் பீதியைக் கிளப்பியது. எனினும், நிலைமை சீராகி விடும். அதற்கான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றன என வங்கியின் தலைமை அதிகாரி விக்ரம் பண்டிட் தெரிவித்தார். இதற்கிடையே, சிட்டி குழுமத்தின் இயக்குனர் வாரியக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது.
அதில், விக்ரம் பண்டிட்டை மாற்றுவது, வேறு நிறுவனங்களின் முதலீட்டைக் கோருவது, தேவைப்பட்டால் கூட்டணி சேர வரும் நிறுவனத்துக்கு சிட்டி குழுமப் பங்குகளை விற்று ஒன்றிணைப்பது என பல வழிகளின் ஆலோசனை நடந்ததாக நியூயார்க்கில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், மார்கன் ஸ்டான்லி திவாலானது போல, மிகப் பெரிய சிட்டி பாங்க்கும் ஆகி விடாமல் தடுக்க, அமெரிக்க அரசு தலையிடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

சலுகைகளை அள்ளி விடும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

 பெங்களூரு: ‘ஓசூர் ரோட்டில், ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 10 லட்சம் ரூபாய். இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 15 லட்சம் ரூபாய். வரிகள், பதிவு கட்டணம் இலவசம். 100 சதவீத வீட்டுக் கடன் வாங்கித் தரப்படும்!”பேனர் ஹட்டா ரோட்டில், இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 25 லட்சம் ரூபாய். முழுவதும் பர்னிஷிங் செய்யப் பட்டது. அத்துடன் 30க்கு40 அளவுள்ள வீட்டு மனையும் இலவசம்!’இப்படிப்பட்ட அறிவிப்புகள் சமீப நாட்களாக பெங்களூரில் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன. வீடு வாங்க நினைப்போர், விலை குறையட்டும், கொஞ்ச காலம் பொறுத்திருப்போம் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்கும் நிறுவனங்களும், ஏற்கனவே ஒருவர் குடியிருந்த வீட்டை, இரண்டாவது முறையாக விற்க நினைப்பவர்களும், வாங்குவோரை கவர்ந்திழுக்கும் வகையில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை நாள்தோறும் வெளியிட்டபடி உள்ளனர்.இதற்கெல்லாம் காரணம், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்த நிலைமையே. கட்டி வைத்த வீடுகள் விலை போகாததால், பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு, வீடு வாங்குவோரை கவர நினைக்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இருந்தாலும், எதிர்பார்த்த பலன் இல்லை.இது தொடர்பாக, ‘சில்வர் லைன்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரூக் முகமது கூறுகையில், ‘வீடு வாங்குவோருக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் குறிப்பிட்ட அளவு தருவதாகக் கூறி கூட வீடுகளை விற்க தயாராக உள்ளோம். ஆனாலும், விற்பனை சரிவர இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், குடியிருப்புகளின் விற்பனை 30 முதல் 60 சதவீதம் குறைந்துள்ளது’ என்றார். இதேபோன்ற நிலைமை மும்பை, டில்லி, குர்கான் என, பல நகரங்களிலும் காணப்படுகிறது.

 

அமெரிக்காவில் மேலும் 2 வங்கிகள் திவால்!
நியூயார்க்: லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் வங்கிகள் திவால் நோட்டீஸ் கொடுப்பது வாராந்திர நிகழ்வாகி வருகிறது.
தாளமுடியாத வராக்கடன் மற்றும் நஷ்டத்தால் இதுவரை 20 வங்கிகள் மஞ்சள் கடுதாசி கொடுத்து இயக்கத்தை முடக்கிக் கொண்டன.

இப்போது இந்தப் பட்டியலில் மேலும் இரு வங்கிகள் சேர்ந்துள்ளன.

கலிபோர்னியாவைச் சேர்ந்த டவ்னி சேவிங்ஸ் அண்டு லோன் அசோசியேஷன் மற்றும் பி.எஃப்.எஃப். பேங்க் அண்ட்  டிரஸ்ட் ஆகிய இரண்டு வங்கிகள் திவாலாகிவிட்டதாக வெள்ளிக்கிழமை நோட்டீஸ் கொடுத்துள்ளன.

 

 சான்யோவை வாங்குகிறது: பானாசோனிக் நிறுவனம்டோக்கியோ: ஜப்பானின் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனம் பானாசோனிக், கார் பேட் டரி தயாரிப்பில் பிரபல சான்யோ எலக்ட்ரிக் நிறுவனத்தை வாங்க உள்ளது.இந்த இரு நிறுவனங்களும் அதனதன் தயாரிப்பில் பிரபலமாக உள்ளன. ஆனால், சர்வதேச அள வில் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நெருக்கடியில், ஒன்றாக இணைந்துவிட் டால், சந்தையில் கொடிகட்டிப்பறக்கலாம் என்று பானாசோனிக் நினைக்கிறது.இதற்காக, சான்யோ நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக உள்ள மூன்று நிதி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.’டிவி’, டிஜிட்டல் கேமரா உட்பட பல எலக்ட்ரானிக் பொருட் களை தயாரிக்கும் பானாசோனிக் நிறுவனம், சான் யோவின் பங்குகளை கூடுதல் விலைக்கு வாங்கி அந்த நிறுவனத்தை நடத்த தீவிரமாக உள்ளது.டொயோடா கார் தயாரிப்பு நிறுவனத்துடன் பானாசோனிக் நிறுவனம் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துள்ளது. டொயோடா கார் களுக்கு ரேடியோக்களை பானாசோனிக் நிறுவனம் தான் சப்ளை செய்து வருகிறது; அது மட்டுமின்றி, கார் பேட்டரிகளையும் அது சப்ளை செய்து வருகிறது.போர்டு, ஹோண்டா, வோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களின் கார் களுக்கு கார் பேட்டரிகளை சான்யோ நிறுவனம் சப்ளை செய்து வருகிறது.இதனால், சான்யோ நிறுவனத்தை வாங்கி விட் டால், டொயோடா நிறுவன கார்களுக்கு மட்டுமின்றி, மற்ற பிரபல கார் நிறுவனங்களுக்கும் கார் பேட்டரி சப்ளை செய்யும் ஆர்டரும் தனக்கு கிடைக் கும் என்று பானாசோனிக் எதிர்பார்க்கிறது.அதுபோல, சான்யோ தயாரிக்கும் பேட்டரிகளை தான் பல மொபைல் போன் நிறுவனங்கள் தங் கள் போன்களுக்கு பயன் படுத்துகின்றன. அந்த வகையிலும் தனக்கு வர்த்தகம் அதிகரிக்கும் என்று பானாசோனிக் எதிர்பார்க் கிறது.

 

திவால் நோட்டீஸ் விட பரிசீலிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்
உலகப் பொருளாதார நெருக்கடியால் பல பிரபல நிறுவனங்கள், வங்கிகள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் அடுத்து சேரப் போவது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமாக இருக்கும் எனத் தெரிகிறது.  
நிலைமையை சமாளிக்க திவால் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன இயக்குநர்கள் குழு அறிவித்துள்ளது. 
அதேசமயம், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரியான ரிக் வேகனர், திவால் அறிவிப்பை வெளியிட தேவையில்லை. அது பிரச்சினைக்குத் தீர்வல்ல என்ற கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் அவருக்கும், இயக்குநர்கள் குழுவுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி நிலைமையை சமாளிப்பது குறித்து ஆலோசித்தது. அப்போது திவால் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.

இருப்பினும் திவால் அறிவிப்பு தீர்வுக்கு பொருத்தமானதல்ல என்ற கருத்தை தலைமை செயலதிகாரி வேகனர் வெளிப்படுத்தியுள்ளார்.

திவால் நிலைமையை தவிர்க்கும் வகையிலான பிற சாத்தியக் கூறுகள் குறித்து தற்போது நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகனரும்,போர்ட் மோட்டார் கம்பெனி மற்றும் கிரைஸ்லர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரிகள் சமீபத்தில் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தனர். அங்கு அமெரிக்க எம்.பிக்களை சந்தித்தனர். அப்போது, சரிவிலிருந்து மீள 25 பில்லியன் டாலர் நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து விட்டு வந்துள்ளனர்.

நிதியுதவி செய்வதற்கு வசதியாக அதுகுறித்த விரிவான திட்டத்துடன் வருமாறு மூன்று தலைமை செயலதிகாரிகளிடமும் எம்.பிக்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில்தான் திவால் அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்கப்படுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிடமிருந்து செய்தி வெளியாகியுள்ளது.

 அதிக வட்டியால் அரசு வங்கிகளில் டெபாசிட் குவிகிறது!

பங்குச் சந்தை தொடர் சரிவு மற்றும் சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக அரசு வங்கிகளையே இப்போது பாதுகாப்புக்கு மக்கள் நம்புகின்றனர். அதிக வட்டி, பாதுகாப்பான முதலீடு என்பதால் வங்கிக் கவுன்டர்களில் பிக்சட் டெபாசிட் செய்வதற்கு கூட்டம் அதிகமாகி வருகிறது. இதனால் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் முதலீடு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக நிதி நெருக்கடியின் தொடர்ச்சியாக பங்குச் சந்தை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. அதனுடன் தொடர்புடைய மியூச்சுவல் பண்ட் திட்டங்களும் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாதுகாப்பான முதலீடு செய்ய வங்கிகள் மீது மக்கள் பார்வை மீண்டும் திரும்பியுள்ளது. அதிலும் அரசு வங்கிகளில் பிக்சட் டெபாசிட் செய்வது அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக வங்கிகளில் டெபாசிட் செய்வோர் பல மடங்கு அதிகரித்துள்ளனர். 1,000 நாட்கள் வரையான டெபாசிட்டுக்கு வங்கிகள் அதிகபட்ச வட்டியை அறிவித்துள்ளன. சில வங்கிகளில் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. எனவேதான் டெபாசிட் செய்யக் கூட்டம் அலைமோதுகிறது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ குறைப்புக்குப் பிறகும் டெபாசிட் குவிக்கும் பொருட்டு வங்கிகள் இன்னும் வட்டியை குறைக்காமல் உள்ளன.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 3 மாதங்களில் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பாங்க் ஆகியவற்றின் டெபாசிட்களில் பெரும்பாலானவை குறுகிய கால பிக்சட் டெபாசிட்களே.

கடந்த ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான 2வது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அரசு வங்கிகளின் பிக்சட் டெபாசிட் வளர்ச்சி 25 சதவீதம் அதிகரித்துள்ளது. சேமிப்பு, நடப்பு மற்றும் ஆர்டி கணக்குகள் உட்பட ஒட்டுமொத்த டெபாசிட் வளர்ச்சி 28 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது
 

 கடன் வழங்குவதைக் குறைத்துக் கொண்ட பார்க்லேஸ்

ும்பை: பார்க்லேஸ் வங்கி தனிநபர் கடன் வழங்குவதைக் குறைத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு 400 கோடி ரூபாயாக இருந்த தனிநபர் கடன் வழங்கல், இந்த ஆண்டு வெறும் ரூ.100 கோடியாகக் குறைந்துவிட்டது.

சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கடன் வழங்கும் நடவடிக்கைகளில் எச்சரிக்கைப் போக்கைக் கடைப்பிடிக்கவிருப்பதாக பார்க்லேஸ் வங்கியின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநர் சமீர் பாட்டியா அறிவித்துள்ளார்.

மேலும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன கடன்கள் வழங்குவதை இந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

மற்றொரு நிதி நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி தனது இந்தியப் பிரிவை மூடிவிடும் முடிவுக்கு வந்துள்ளது. கடன் வழங்குவதை ஏற்கெனவே நிறுத்திவிட்ட இந்த நிறுவனம், தனது ஊழியர்களையும் படிப்படியாக நிறுத்திவருகிறது.

உலகிலேயே இந்திய பொதுத்துறை வங்கிகள் மிகவும் வலுவானவை: ப.சிதம்பரம்
 
 
 
சென்னை, நவ. 22: உலகில் மற்ற எந்த நாட்டைக் காட்டி லும் இந்திய பொதுத்துறை வங்கிகள் மிகவும் வலுவாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உறு திபட தெரிவித்தார்
ù த ô ழி ல தி ப ர் எம்.சிடி.எம். சிதம்பரம் செட்டியார் நூற்றாண்டு விழா சென்னையில் சனிக்கி ழமை நடைபெற்றது. சிதம்ப ரம் செட்டியார் அறக்கட் டளை தலைவர் எம்.சிடி
பெத்தாச்சி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்
அந்நிகழ்ச்சியில், சிதம்ப ரம் செட்டியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த “நிறைவு பெறாத பயணங் கள்’ என்ற நூலை வெளி யிட்டு ப. சிதம்பரம் பேசி யது: சர்வதேச பொருளாதார நெருக்கடி அமெரிக்க நிதி நிறுவனங்களை சாய்த்து விட்டது. அமெரிக்க வங்கி கள் லாபத்தைக் குவிக்கும் பேராசையுடன் செயல்பட் டன. மேலும் வங்கி செயல் பாடுகளை கண்காணித்து, கட்டுப்பாட்டுடன் செயல்ப டுத்துவதற்கான வழிமுறை கள் எதுவும் அங்கு இல்லா ததே தற்போதைய சரிவுக்குக் காரணம்
ஆனால் இந்திய பொதுத் துறை வங்கிகளில் மிகச்சி றந்த கட்டுப்பாட்டு முறைக ளும், கண்காணிப்பு முறைக ளும் உள்ளன. அதனால் தான் தற்போதைய நெருக்க டிகளால் இந்திய வங்கிக ளுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப டவில்லை
இன்றைய சூழலில் உலகி லேயே மிகவும் பாதுகாப் பான மற்றும் வலிமையான அடிப்படையைக் கொண்ட வையாக இந்திய பொதுத் துறை வங்கிகள் மட்டுமே திகழ்கின்றன
இந்த அடிப்படைக்கெல் லாம் காரணமானவர்களில் ஒருவர் எம்.சிடி.எம். சிதம்ப ரம் செட்டியார். நாட்டின் வளர்ச்சிக்கு வங்கித் துறை யும், காப்பீட்டுத் துறையும் இரு முக்கிய தூண்களைப் போன்றவை. அந்த இரு துறைகளிலும் நாட்டுக்காக சிதம்பரம் செட்டியாரின் பங்களிப்பு மிக அதிகம்
1930-1940ம் ஆண்டுகளில் அந்நிய செலவாணி பரிமாற் றம் என்பது மிகவும் கடின மான ஒன்றாக இருந்தது
அந்த காலகட்டத்தில் வங்கி மற்றும் அந்நியச் செல வாணி சேவையை அளிக்கும் இந்திய ஓவர்சீஸ் வங்கி என்ற மிகச்சிறந்த வங்கியை உருவாக்கினார்
யுனைடெட் இந்தியா இன் சூரன்ஸ் என்ற பொது இன் சூரன்ஸ் நிறுவனத்தையும் உருவாக்கியவர் அவர். சென் னையின் அடையாளச் சின் னங்களில் ஒன்றாகத் திகழும் எல்.ஐ.சி. அடுக்குமாடி அலு வலகம் உருவாகக் காரணமா னவர் என்றார் சிதம்பரம்
விழாவில் சிதம்பரம் செட் டியார் நூற்றாண்டு சிறப்பு தபால் உறை வெளியிடப்பட் டது. சென்னை மண்டல போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் எம்.எஸ். ராமானுஜம் வெளி யிட, நிதியமைச்சர் ப. சிதம்ப ரம் பெற்றுக் கொண்டார்
நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவர் எஸ்.ஏ. பட், ஐ.ஓ.பி. ஊழி யர் சங்கத் தலைவர் எல்
பாலசுப்ரமணியன், ஐ.ஓ.பி
அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் ஆனந்தகுமார், தேவகி முத்தையா, உண்ணா மலை சுப்ரமணியன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.தொழிலதிபர் எம்.சிடி.எம். சிதம்பரம் செட்டியார் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் சனிக்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது சிலையைத் திறந்து வைக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: