மாபெரும் சிக்கலில் சிட்டி பேங்க்

நியூயார்க்: சிட்டி வங்கியின் பங்குகள் விலை ஒரே நாளில் 26 சதவீதம் அளவுக்கு சரிந்து போய் அந்த வங்கியின் எதிர்காலத்தையே கேள்விக்குரியாக்கியுள்ளது.

இவ்வளவு பெரிய வீ்ழ்ச்சியை அந்த வங்கி சந்தித்திருப்பது கடந்த 15 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க நிதி சி்க்கலுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே வீழ்ந்துவிட்டது சிட்டி வங்கி. வங்கியின் வராக் கடன்கள் மூச்சு முட்டும் அளவுக்குப் போய்விட்டதால் திணறிக் கொண்டிருந்தது. இந் நிலையில் பொருளாதார மந்தமும் சேர்ந்து கொள்ள வங்கி வாழ்வா சாவா நிலையில் உள்ளது.

இத்தனைக்கும் அமெரிக்க அரசு இந்த வங்கிக்கு 25 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்தும் மக்களிடையே இந்த வங்கி குறித்த நம்பிக்கை போய்விட்டதால் பங்குகள் விலை போகவில்லை.

இந்த வங்கியில் செளதி இளவரசர் அல் வலீத் பின் தலாலுக்கு 4 சதவீத பங்குகள் உள்ளன. வங்கிக்கு உதவும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்தார்.

இதனால் வங்கியின் அவரது பங்குகளின் அளவு தான் 5 சதவீதமாக உயர்ந்ததே தவிர வேறு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. வங்கியின் பங்குகளின் விலை சரிவது நிற்கவில்லை.

நேற்று மட்டும் ஒரே நாளில் வங்கியின் பங்குகள் விலை 26 சதவீதம் அளவுக்கு வீழ்ந்துவிட்டது. இதையும் சேர்த்து இந்த ஒரே நிதியாண்டில் மட்டும் அந்த வங்கியின் பங்குகள் விலை 83 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டுவிட்டன.

இதையடுத்து வங்கியின் சில பிரிவுகளை வி்ற்று விட அதன் தலைமை செயல் அதிகாரி விக்ரம் பண்டிட் உள்ளிட்ட அதன் உயர் மட்ட நி்ர்வாகம் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் வேறு வங்கியுடனோ அல்லது நிதி அமைப்புடனோ சிட்டி பேங்கை இணைத்துவிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை இந்த வங்கி உலகம் முழுவதும் 52,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சுமார் 23,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

37 இந்திய அதிகாரிகள் நீக்கம்:

இதற்கிடையே இந்தியாவில் சிட்டி பேங்க்கின் 37 முக்கிய அதிகாரிகளை வங்கி பணி நீக்கம் செய்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் துணைத் தலைவர் பதவிக்கு இணையாக பதவிகளில் உள்ளவர்கள் ஆவர்.

 நாட்களுக்கு ஜாம்ஷெட்பூர் ஆலையை மூடுகிறது டாடா
ஜாம்ஷெட்பூர்: பொருளாதார நெருக்கடியின் விளைவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாம்ஷெட்பூரில் உள்ள வணிக வாகன உற்பத்திப் பிரிவை நவம்பர் 25ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு மூடுகிறது.

இந்தியாவின் பிற வர்த்தக நிறுவனங்களைப் போலவே நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸும் பொருளாதார நெருக்கடியால் பாதிப்புககுள்ளாகியுள்ளது.

நிலைமையை சமாளிக்க பல்வேறு சிக்கண நடவடிக்கைகளில் அது இறங்கியுள்ளது.

ஜாம்ஷெட்பூரில் உள்ள தனது வணிக வாகன உற்பத்திப் பிரிவை அது ஐந்து நாட்களுக்கு மூடவுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை இந்த உற்பத்திப் பிரிவு மூடப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் ஐந்து நாட்களுக்கு இப்பிரிவு மூடப்படவுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஜாம்ஷெட்பூர் பிரிவு மூடப்படுவது இது நான்காவது முறையாகும். ஒரே மாதத்தில் 2வது முறையாகும்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் பி.ஜே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாம்ஷெட்பூரில் உள்ள வணிக வாகன உற்பத்திப் பிரிவு நவம்பர் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

தொழில்துறையில் நிலவம் நிதி நெருக்கடி, உயர்ந்து விட்ட கடன் வட்டி விகிதங்கள் காரணமாக வாடிக்கையாளர்களின் வாகன விருப்பம் குறைந்துள்ளது. இதனால் வர்த்தகமும் குறைந்துள்ளது.

அக்டோபர் மாதம் முதலே இந்த நிலைதான். எனவே நிலைமைக்கு ஏற்ப அவ்வப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொருத்தமான முடிவுகளை எடுத்து வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கும், டீலர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையிலேயே இந்த 5 நாள் மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஜாம்ஷெட்பூர் பிரிவில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தினசரி வாகன உற்பத்தி 500 ஆக இருந்தது. தற்போது அது 150 ஆக குறைந்துள்ளதாம்.

ஏற்கனவே 3000 தற்காலிக ஊழியர்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வேலையிலிருந்து எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பணி ஷிப்டுகளையும் அது 3 என்பதிலிருந்து ஒன்றாக குறைத்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.

சிட்டி பேங்க் தலைமை பதவியில் இருந்து விக்ரம் பண்டிட் விலக்கப்படுவாரா ?

நியுயார்க் : அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி பேங்க்கின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதால், அதன் பங்கு மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று மோசமான நிலைக்கு சென்று விட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்தபோது உயர்ந்திருந்த அதன் பங்கு மதிப்பு மாலை வர்த்தக முடிவில் 20 சதவீதம் குறைந்து 3.77 டாலருக்கு வந்து விட்டது. இப்போத அதன் போர்டு மீட்டிங் நடந்து வருகிறது. அதில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ என்று அதன் முதலீட்டாளர்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள். சிட்டி குரூப்பின் சில தொழில்கள் விற்கப்படும் ; அல்லது சிட்டி பேங்க்கே இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து விடும் வாய்ப்பு இருப்பதாக வால்ஸ்டிரீட் ஜர்னல் தெரிவிக்கிறது. இந்த வார துவக்கத்தில்தான் இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள அதன் ஊழியர்களில் 52,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. ஏற்கனவே வேலை நீக்கம்செய்யப்பட்ட 23,000 பேரையும் சேர்த்தால் மொத்தம் 75,000 பேரை அது வேலையில் இருந்து நீக்குகிறது. அது, அதன் மொத்த ஊழியர்களில் 20 சதவீதம் பேர். இந்த மோசமான நிலையால் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 80 சதவீத பங்கு மதிப்பை அது இழந்திருக்கிறது. அதன் 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை சவுதி அரேபிய இளவரசர் அல்-வாலீட் பின் தலால் வாங்கிக்கொள்வதாக அறிவித்திருந்தும் கூட, அதன் பங்கு மதிப்பு உயரவில்லை. சிட்டி பேங்க்கின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விக்ரம் பண்டிட்டின் மோசமான நடவடிக்கைகளால்தான் இவ்வளவு குழப்பமும் ஏற்படகிறது என்று அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, பேங்க்கை காப்பாற்ற பல வழிகளை யோசித்த அதன் போர்டு மெம்பர்கள், விக்ரம் பண்டிட்டை சி.இ.ஓ.,பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு நபரை அதில் நியமிக்கலாமா என்றும் ஆலோசித்து வருவதாக நியுயார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது.

இன்னும் 5 மாதங்களில் டெக்ஸ்டைல் தொழிலில் 5 லட்சம் பேர் வேலை இழப்பர் : மத்திய அரசு

புதுடில்லி : ஏற்றுமதி தொழில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, இன்னும் ஐந்து மாதங்களில் இந்திய டெக்ஸ்டைல் தொழிலில் 5 லட்சம் பேர் வேலை இழப்பர் என்று மத்திய வர்த்தகத்துறை செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார். டெக்ஸ்டைல் அமைச்சகத்தின் கணிப்பின்படி, இன்னும் ஐந்து மாதங்களில் 5 லட்சம் பேர் வேலை இழப்பர் என்று எஃப்.ஐ.சி.சி.ஐ., நடத்திய நிகழ்ச்சியில் கலந்த கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலையில், நலிவடைந்திருக்கும் ஏற்றுமதி தொழிலை சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. வட்டி விகிதத்தை குறைப்பது மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான கடன் வழங்குவது போன்றவைகள் அவற்றில் சில யோசனைகள். இதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அடுத்த வாரம் கூட இருக்கிறது. இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி 10 சதவீதம் குறைந்து விட வாய்ப்பு இருக்கிறது. 200 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று வைத்திருக்கும் இலக்கில், குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதியில் சரிவு ஏற்படுவதற்கு முன், இந்த நிதி ஆண்டின் ( 2008 – 09 ) முதல் அரையாண்டில் ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரித்திருந்தது.

இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி : நான்கு தொழிலதிபர்கள் இழந்தது ரூ.1,50,000 கோடி

புதுடில்லி : இந்திய பங்கு சந்தை சரிந்ததை அடுத்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, நான்கு பணக்கார ரியல் எஸ்டேட் அதிபர்கள், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை ரூ.1,50,000 கோடியை ( 33 பில்லியன் டாலர்கள் ) இழந்திருப்பதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது. இதில் டி.எல்.எஃப்., நிறுவன அதிபர் கே.பி.சிங் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு தொகையை இழந்திருப்பதாக அது தெரிவிக்கிறது. சமீப காலமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடும் சரிவின் காரணமாக, ஆசிய ரியல் எஸ்டேட் அதிபர்கள் 8 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 4 பேர் இந்தியாவில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் டி.எல்.எஃப்., அதிபர் கே.பி.சிங்., யூனிடெக் ரமேஷ் சந்திரா, ரெஹேஜா குரூப் சந்துரு ரஹேஜா, மற்றும் ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்ப்ஃராஸ்டக்சர் ராகேஷ் வதாவன் ஆகியோர் மொத்தமாக ரூ.1,50,000 கோடியை ( 33 பில்லியன் டாலர்கள் ) இழந்திருப்பதாக தெரிவிக்கிறது. இந்த நால்வரில் கே.பி.சிங் 22.2 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறார். ரமேஷ் சந்திரா 8.6 பில்லியன் டாலர்களையும், ரஹேஜா 1.5 பில்லியன் டாலர்களையும், வதாவன் 500 மில்லியன் டாலர்களையும் இழந்திருக்கிறார்கள். இந்த மாத துவக்கத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் மிகப்பெரிய 40 பணக்காரர்கள் லிஸ்ட்டில், கே.பி.சிங் 8 வது இடத்திலும், சந்துரு ரஹேஜா மற்றும் ரமேஷ் சந்திரா முறையே 20 மற்றும் 27 வது இடங்களில் இருந்தார்கள். இந்திய பங்கு சந்தை சரிந்தபோது மற்ற நிறுவனங்களை விட அதிகம் பாதிக்கப்பட்டது ரியல் எஸ்டேட் துறைதான். நேற்று பங்கு சந்தையில் சென்செக்ஸ் உயரந்தபோதும் கூட ரியல் எஸ்டேட் துறை அப்படி ஒன்றும் எழுந்திருக்கவில்லை. சென்செக்ஸ் 5.5 சதவீதம் உயர்ந்திருந்தபோதும் ரியாலிட்டி இன்டக்ஸ் 2 சதவீதம் குறைந்துதான் போனது. யூனிடெக் பங்குகள் 9.4 சதவீதம்,ஹெச்.டி.ஐ.எல்., 4 சதவீதத்திற்கு மேல், டி.எல்.எஃப்., 3.4 சதவீதம் குறைந்துதான் இருந்தது. இதன் காரணமாக மார்ச் மாதத்தில் 30 பில்லியன் டாலர்களாக இருந்த கே.பி.சிங் கின் சொத்து மதிப்பு இப்போது வெறும் 7.8 பில்லியன் டாலர்களாக த்தான் இருக்கிறது. 3 பில்லியன் டாலர்களாக இருந்த சந்துரு ரஹேஜாவின் சொத்து மதிப்பு பாதியாகி விட்டது. 9.6 பில்லியன் டாலர்களாக இருந்த ரமேஷ் சந்திராவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலராகி விட்டது. ஒரு பில்லியனுக்கு மேல் இருந்த ராகேஷ் வதாவனின் சொத்து மதிப்பு 530 மில்லியன் டாலராகி விட்டது என்கிறது போர்ப்ஸ் பத்திரிக்கை.

அடுக்கு மாடி குடியிருப்புகள் விலை கடும் சரிவு: கூவி, கூவி விற்கின்றனர் குர்கான் பில்டர்கள்

குர்கான்: வட்டி வீதம் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் குர்கானில் ஒரு கோடி ரூபாய்க்கு விலை கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்கு கூவி, கூவி விற்கப்படுகின்றன.டில்லி அருகே குர்கானில், செக்டார் 37 பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன், மூன்று படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், சர்வதேச அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் உருவாகியுள்ள மந்தநிலை போன்ற காரணங்களால், தற்போது அதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 38 முதல் 40 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன.அதேபோல், முன்னர் ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட, நான்கு படுக்கை அறை மற்றும் வேலையாட்கள் தங்கும் வசதியுடன் கூடிய குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன. அதுவும் கூவி, கூவி விற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.’சில மாதங்களுக்கு முன், நான்கு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை எல்லாம் பில்டர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்று வந்தனர். தற்போது, அவற்றை வாங்குவோரும் இல்லை. அவற்றில் முதலீடு செய்வோரும் இல்லை. ‘ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கான கமிஷன் இரு மடங்காக அதிகரிக்கப் பட்டும் பயனில்லை. அவர்களால் ஆட் களை கொண்டு வர முடியவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க, பில்டர்கள் படாதபாடு படுகின்றனர்’ என்கிறார் கவுரவ் மோசஸ் என்ற ரியல் எஸ்டேட் டீலர்.

‘கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க பில்டர்கள் ஆர்வமாக உள்ளனர். வீட்டை வாங்க நினைப்பவர், அவற்றைப் பார்த்த உடனேயே, பில்டர்கள் எங்களை பல முறை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். ஏராளமான பில்டர்கள் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், பல பில்டர்களின் நிலைமை கேள்விக் குறியாகி விடும்.’புதிதாக வீடு கட்டும் திட்டத்தை, பல பில்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த ஜூலை மாதங்களில் வீடு கட்டும் திட்டங்களை துவக்கிய பலர், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கின்றனர். அடுத்த சில மாதங்களிலாவது நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் சதுர அடி விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது’ என்கிறார் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: