சிங்கப்பூர் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக அறிவிப்பு

சிங்கப்பூர் : ஆசிய நாடுகளில் வேகமாக வளர்ந்து வந்த சிங்கப்பூர், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி அடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறது. இப்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார சிக்கலில் சிக்கி, வீழ்ச்சி அடைந்திருக்கும் முதல் ஆசிய நாடு சிங்கப்பூர்தான். சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த நாட்டின் ஜூலை – செப்டம்பர் மூன்றாவது காலாண்டு வளர்ச்சி, 6.8 சதவீத நெகட்டிவ் வளர்ச்சி என்று சொல்லப்பட்டிருக்கிறது. 6.3 சதவீத நெகட்டிவ் வளர்ச்சிதான் இருக்கும் என்று கணித்திருந்தார்கள். ஆனால் அதற்கும் மேலாக 6.8 சதவீத நெகட்டிவ் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் ஒரு நாடு நெகட்டிவ் வளர்ச்சி அடைந்து விட்டால் அந்நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லப்படும். இப்போது ஆசியாவிலேயே முதல் நாடாக சிங்கப்பூர், தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக நெகட்டிவ் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஹாங்காங் மற்றும் ஜப்பானும்கூட நெகட்டிவ் வளர்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையல், அடுத்த ஆண்டிலும் ( 2009 ) அந்நாட்டின் வளர்ச்சி ஒரு சதவீத நெகட்டிவ் வளர்ச்சியாகத்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஏற்றுமதியை மட்டுமே நம்பி சிங்கப்பூரின் வளர்ச்சி இருக்கிறது. இப்போது உலகெங்கும் நிலவும் பொருளாதார சீர்குழைவு காரணமாக சிங்கப்பூரின் பொருட்களுக்கு உலக நாடுகளிடையே டிமாண்ட் குறைந்து விட்டது. இதன் காரணமாக ஏற்றுமதி குறைந்து போய், ஒட்டு மொத்த வளர்ச்சியும் நெகட்டிவ் நிலைக்கு போய்விட்டது. வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு தவிர, பொதுவாக எல்லா நாடுகளிலுமே வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதால், வர்த்தகத்திற்காக சிங்கப்பூரின் டிரான்ஸ்போர்ட் மற்றும் அதன் சேமிப்பு கிட்டங்கியை பயன்படுத்துவதும் குறைந்து, அதனாலும் வளர்ச்சி பாதித்திருக்கிறது

அக்வாஃபினா பாட்டிலில் பனிபடர்ந்த மலை படத்தை போடக்கூடாது : டில்லி ஹைகோர்ட் உத்தரவு

புதுடில்லி : பெப்சி கம்பெனி வெளியிடும் அக்வாஃபினா மினரல் வாட்டர் பாட்டிலின் லேபிளில், இனிமேல் பனிபடர்ந்த மலை படத்தை போடக்கூடாது என்று பெப்சி நிறுவனத்திற்கு டில்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் இந்த படத்தை எடுத்து விட வேண்டும் என்று சொன்ன ஹைகோர்ட் பெஞ்ச், அந்த லேபிளில் பிரின்ட் செய்யப்படும் ‘ பி.ஐ.எஸ் ஸ்டாண்டர்ட் படி’ என்ற வாசகத்தையும் ‘ பியூரிட்டி கியாரன்டி ‘ என்ற வாசகத்தையும் எடுத்துவிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. நீதிபதிகள் முகுள் முத்கள் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய இரு நபர் பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. பனிபடர்ந்த மலையை பார்த்ததும், இந்த கம்பெனி, மலை மீதிருக்கும் அதன் தொழிற்சாலையில் இருந்துதான் இந்த மினரல் வாட்டர் பாட்டிலை தயாரிக்கிறது என்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துகிறது என்று ‘பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்’ ( பி.ஐ.எஸ். ), பெப்சி மீது தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. ஏற்கனனே இந்த வழக்கில் ஒரு நபர் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில் அந்த படத்தை எடுக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. அதை எதிர்த்து பி.ஐ.எஸ்., தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் இரு நபர் பெஞ்ச், படத்தையும் குறிப்பிட்ட வாசகத்தையும் எடுத்துவிட வேண்டும் என்று இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாலும் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்தை அடையும் : மன்மோகன்சிங்

புதுடில்லி : சர்வதேச அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வந்தாலும், இந்தியா அதன் 8 சதவீத வளர்ச்சியை அடையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். 8 சதவீத வளர்ச்சியை அடையக்கூடிய வளமும் ஆற்றலும் இந்தியாவிடம் இருக்கிறது என்றார் அவர். புதுடில்லியில் இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய லீடர்ஷிப் மீட்டிங்கில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இப்போது <உலக நாடுகளை அச்சுருத்திக்கொண்டிருக்கும் நிதி நெருக்கடியில் இந்திய நிறுவனங்களும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு அவ்வப்போது எடுத்து வருகிறது. எனவே இந்திய தொழில் துறை நம்பிக்கையுடன் இருக்கலாம். இப்போதிருக்கும் மோசமான நிலையை விட மிக மோசமான நிலை1991 ல் இருந்தது. அப்போதே நாம் அதை சமாளித்தோம். இப்போதிருக்கும் சிக்கலையும் நம்மால் சமாளிக்க முடியும். நம்மிடம் அதற்கான திறமையும், வளமும், அறிவும் இருக்கிறது. எனவே பயப்பட தேவையில்லை. இந்திய தொழில் துறைக்கு நான் சொல்வதெல்லாம் தன்னம்பிக்கையுடன் இருங்கள் என்பதே. இந்திய அரசாங்கமும் தொழில் துறையும் இணைந்து செயல்பட்டால் நாம் எல்லாவற்றையும் சமாளிக்கலாம்; சாதிக்கலாம். நமது நிதி கொள்கை, கரன்சி கொள்கை, வெளிநாட்டு பணமாற்ற கொள்கை, முதலீட்டு கொள்கை எல்லாமே சூழ்நிலைக்கு பொருந்தக்கூடியதாகவும் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செய்யக்கூடியதாகவும்தான் இருக்கிறது என்றார் அவர்

ஏழு நாள் சரிவிக்குப்பின் இன்று ஏறியது பங்கு சந்தை

மும்பை : தொடர்ந்து ஏழு வர்த்தக நாட்களாக சரிந்திருந்த பங்கு சந்தையில் இன்று ஏற்ற நிலை காணப்பட்டது. ஷார்ட் கவரிங் வர்த்தகத்தாலும், உலக அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகவும் இந்திய பங்கு சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடைசி நேர வர்த்தகத்தில் நிப்டி 2,700 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தாலும் அது அதிக நேரத்திற்கு நிலைக்கவில்லை. பவர், ஆயில் அண்ட் கேஸ், கேப்பிடல் குட்ஸ், பேங்கிங், டெலிகாம், மற்றும் டெக்னாலஜி பங்குகள் இன்று பெருமளவில் வாங்கப்பட்டன. இன்றைய வர்த்தகத்தில் 8,988.03 புள்ளிகள் வரை வந்திருந்த சென்செக்ஸ், பின்னர் வர்த்தக முடிவில் 464.20 புள்ளிகள் ( 5.49 சதவீதம் ) உயர்ந்து 8,915.21 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2,718.60 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் முடிவில் 140.30 புள்ளிகள் ( 5.50 சதவீதம் ) உயர்ந்து 2,693.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்ஃரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி., மாருதி சுசுகி, ஹெச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., நால்கோ, நிறுவன பங்குகள் 8 – 14 சதவீதம் உயர்ந்திருந்தன. இருந்தாலும் டி.எல்.எப்., யூனிடெக், ஏ.சி.சி., டாடா கம்யூனிகேஷன், மற்றும் டாடா பவர் நிறுவன பங்குகள் சரிந்திருந்தன. இன்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் வளர்ச்சி அடைந்திருந்தன. ஆசிய சந்தைகளை பொருத்தவரை, ஷாங்கை மற்றும் ஜகர்த்தா சந்தைகள் மட்டும் வீழ்ச்சி அடைந்திருந்தன. மற்ற சந்தைகளில் வளர்ச்சிதான்.

சர்வதேச அளவில் வேலையிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவின் பெரிய வங்கியான சிட்டி குரூப் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 52000 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் சர்வதேச அளவில் 7000 பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளன. இதனால் வேலையிழப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங்களான பீகட் சிட்ரான், ரோல்ஸ் ராய்ஸ், ஆஸ்ட்ரா ஜெனிக்கா, போயிங்க் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் நிறுவனமான பீகட் சிட்ரான் ஐரோப்பாவில் 2700 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2000 ஊழியர்களையும், ஆஸ்ட்ரா ஜெனிக்கா 1400 பேரையும், போயிங்க் 800 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விமான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது போயிங்க் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனங்கள் விமான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை வெளியேற்ற உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கும் எண்ணிக்கை 1லட்சத்தையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது
.
ஜப்பான் இசுசு மோட்டார்ஸ் 1,400 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது ; உற்பத்தியையும் குறைக்கிறது 

டோக்கியோ : ஜப்பானின் இசுசு மோட்டார்ஸ், அதன் ஊழியர்களில் 1,400 பேரை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது.மேலும் உள்நாட்டு வாகன தயாரிப்பில் 10 சதவீதத்தை குறைக்கவும் அது முடிவு செய்திருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் அந்த நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எங்களுக்கு இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை என்று ஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய டிரக் தயாரிப்பாளரான இசுசு மோட்டார்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 2009 மார்ச்சுக்குள் தயாரிக்க திட்டமிட்டிருந்த டிரக்குகளில் இருந்து 28,000 டிரக்குகளை குறைத்து, 2,49,000 மட்டும் தயாரித்தால் போதும் என்று அது முடிவு செய்திருக்கிறது.

நிதி நெருக்கடியால் டி.எல்.எப்., திட்டங்கள் முடக்கம்

6500056

புதுடில்லி: நிதி நெருக்கடியில், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் டி.எல்.எப்., சிக்கித் தவிக்கிறது; சில ஊழியர்களை நீக்கிய இது, தன் கட்டுமான திட்டங்களில், சிலவற்றையும் முடக்கி வைத்துள்ளது.டி.எல்.எப்., நிறுவன தலைவர் சிங் கூறுகையில்,’நிதி நெருக்கடி காரணமாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. கட்டிய கட்டடங்களை வாங்கவும் ஆளில்லாததால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சில ஊழியர்களை நீக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது’ என்றார்.’வீட்டுக்கடன் மீதான வட்டிவீதம் பலமடங்கு உயர்ந்ததும் இதற்கு காரணம். அதனால் தான், பலரும் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டுக்கடன் மீதான வட்டிவீதம் 7க்கு மேல் போகக்

கூடாது’ என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.’டி.எல்.எப்., நிறுவனம் போட்டுள்ள சில திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. நிலைமை மாறினால், மீண்டும் இந்த திட்டங்களை ஆரம்பிக்க எண்ணியுள்ளது. ‘கட்டுமான திட்டங்களில் பணம் முடக்கம் போன்றவை தொடர்ந்தால், பல பில்டர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மத்திய அரசு வட்டியை குறைக்க நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுமான திட்டங்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம்’ என்று

ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத ஊழியர்களை குறைக்கிறது அசோசியேட்டட் பிரஸ்

7039258

வாஷிங்டன் : அமெரிக்க செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் ( ஏ.பி.) அதன் ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை அடுத்த வருடத்தில் குறைக்க முடிவு செய்திருக்கிறது. நேற்று நியுயார்க்கில் நடந்த ஒரு கூட்டத்தில் ஏ.பி.,யின் தலைவர் மற்றும் தலைமை அதிகாரி டாம் கர்லி இதனை தெரிவித்தார். தற்போது அவர்களுக்கு, உலகம் முழுவதிலு ம் 3,000 செய்திப்பிரிவு ஊழியர்கள் உள்பட 4,100 ஊழியர்கள் இருக்கிறார்கள். இதில் 10 சதவீதத்தை குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். அப்படியானால் சுமார் 400 பேர் வேலை இழப்பர் என்று தெரிகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் பிரபல செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் சும் தப்பவில்லை என்கிறார்கள். அமெரிக்காவில் வெளியாகும் சுமார் 1,500 பத்திரிக்கைகள் ஏ.பி.,யின் செய்தி மற்றும் போட்டோக்களை சந்தா செலுத்தி வாங்கி பயன்படுத்துகின்றன. இப்போது ஏ.பி.,யின் சந்தா தொகை அதிகரிக்கப்படுகிறது என்ற செய்தியும் அமெரிக்க பத்திரிக்கைகளை கலக்கமடைய செய்திருக்கிறது. உலகின் மூன்று பிரபல செய்தி நிறுவனங்களில் ஒன்றாக அசோசியேட்டட் பிரஸ் இருந்து வருகிறது. மற்றவை இங்கிலாந்தின் ராய்ட்டர் மற்றும் பிரான்சின் ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ்.

 ரோல்ஸ் ராய்ஸ், போயிங் உள்பட 5 நிறுவனங்களில் 9,000 பேர் குறைப்பு!

நியூயார்க்: ரோல்ஸ்ராய்ஸ், ப்யூஜியோ, பிரிட்டிஷ் பார்மா மற்றும் அமெரிக்காவின் போயிங் உள்ளிட்ட ஐந்து பெரும் நிறுவனங்கள் 9000 ஊழியர்களை நீக்கியுள்ளன. 
அமெரிக்க – ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வேலைக் குறைப்பு, ஊழியர் நீக்கம் என கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றன.
அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான சிட்டி குரூப் 75,000 பணியாளர்களை நீக்கவிருப்பதாக அறிவித்து, முதல்கட்டமாக 26,000 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. மீதம் உள்ள 49,000பேர் இந்த மாதம் முதல் நீக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், ஐரோப்பாவின் புகழ்பெற்ற ரோல்ஸ்ராய்ஸ் (2,700) மற்றும் பியூஜியோ சிட்ரியோன் (2,000) நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. மேலும் 2,000 பேரை குறைக்கப் போவதாக ரோல்ஸ்ராய்ஸ் அறிவித்துள்ளது.

விமான தயாரிப்பு தவிர, அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்து தரும் போயிங் நிறுவனமும் 1,400 பணியாளர்களை நீக்கியுள்ளது.
 
பிரிட்டிஷ் பார்மா, அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனங்களும் ஆட்குறைப்பை அறிவித்துள்ளன.

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: