ஐந்து வருடங்கள் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

நியுயார்க் : அமெரிக்க பங்கு சந்தையில் நேற்று புதன்கிழமை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவாக வால்ஸ்டிரீட்டில் 5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. டவ் ஜோன்ஸ் இன்டக்ஸ் 427 புள்ளிகள் குறைந்து 7,997.28 புள்ளிகளுக்கு வந்து விட்டது. 2003 க்குப்பிறகு நேற்று தான் டவ்ஜோன்ஸ் இன்டக்ஸ் 8,000 புள்ளிகளுக்கும் கீழே போயிருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவை முன்னிட்டு அமெரிக்க பங்கு சந்தையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் அங்கு கன்சூமர் பிரைஸ் ஒரு சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த 61 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு குறைந்திருக்கிறது. இது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவையே காண்பிக்கிறது. இதனால் அங்குள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை டிசம்பரில் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே அங்கு வட்டி ஒரு சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. அது இனிமேல் 0.5 சதவீதமாக குறைக்கப்படும் என்கிறார்கள். கன்சூமர் பிரைஸ் குறைந்திருப்பதால் பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டியை மேலும் குறைக்க வேண்டியதாகிறது. கன்சூமர் பிரைஸ் குறைந்திருப்பதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து விட்டது. அது பேரலுக்கு 54 டாலருக்கும் குறைவான விலைக்கு போய் விட்டது. அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய கார் கம்பெனிகளான ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் கிரைஸ்லர் ஆகியவை அமெரிக்க அரசாங்கத்திடம 2500 கோடி டாலர் கடன் கேட்டு நின்று கொண்டிருக்கின்றன. 2500 கோடி டாலர் கடன் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் கம்பெனியை மூட வேண்டியதுதான் என்கின்றன அவைகள். அதன் பின் அதில் வேலைபார்த்து வந்தவர்களுக்கெல்லாம் வேலை இல்லாமல் போய்விடும் என்கின்றனர்.
இனிமேல் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் சிகரெட் பாக்கெட்களை வைத்திருக்க தடை வரும் ?
புதுடில்லி : இனிமேல் பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ், டன்ஹில் போன்ற வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் கிடைக்காது என்று தெரிகிறது. சிகரட் பிடிப்பதை இந்தியா முழுவதும் தடை செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இப்போது மேலும் ஒரு முயற்சியாக டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் வெளிநாட்டு சிகரெட்களை வைத்திருக்க தடை விதிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் லிஸ்டில் இருந்து சிகரெட்டை எடுத்துவிட அவர் முயற்சிப்பதாக தெரிகிறது. நாடுகளிடையே ஏற்படுத்தப்படும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் ( எஃப்.டி.ஏ ) பெரும்பாலான நாடுகள், சிகரெட் பாக்கெட்டை லிஸ்டில் இருந்து எடுத்து விட்டன. ஆனால் இலங்கை போன்ற சில நாடுகள் இன்னும் எடுக்கவில்லை. எனவே இனிமேல் இலங்கையுடன் எஃப்.டி.ஏ., செய்யும்போது சிகரெட் பாக்கெட்டை லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிட அன்புமணி ராமதாஸ் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு சிகரெட்கள் குறைந்த விலையில் இந்தியாவில் கிடைப்பது தடை செய்யப்படும். அதன் பின் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் சிகரெட் பாக்கெட் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்
தொடர்ந்து ஏழாவது நாளாக பங்கு சந்தையில் வீழ்ச்சி
மும்பை : தொடர்ந்து ஏழாவது வர்த்தக நாளாக பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளும் சரிவிலேயே முடிந்திருக்கிறது. அதன் பாதிப்பு இந்திய பங்கு சந்தையையும் விட்டு வைக்கவில்லை. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சரிந்துகொண்டிருந்த சென்செக்ஸ் , வர்த்தக முடிவில் 322.77 புள்ளிகள் ( 3.68 சதவீதம் ) குறைந்து 8,451.01 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 81.85 புள்ளிகள் ( 3.11 சதவீதம் ) குறைந்து 2,553.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டி.எல்.எஃப்., ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஹெச்.டி.எஃப்.சி.பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., பெல், யூனிடெக், கெய்ர்ன் இன்டியா, டி.சி.எஸ்., எல் அண்ட் டி, மாருதி சுசுகி, டாடா பவர் மற்றும் ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அமெரிக்க சந்தையை பொருத்தவரை, டவ் ஜோன்ஸ் ப்யூச்சர்ஸ் 107 புள்ளிகளும், நாஸ்டாக் 22.25 புள்ளிகளும் குறைந்திருந்தன. ஐரோப்பிய சந்தையில் எஃப்.டி.எஸ்.இ., 86.55 புள்ளிகள், சி.ஏ.சி., மற்றும் டி.ஏ.எக்ஸ்., முறையே 104 மற்றும் 130 புள்ளிகளை இழந்திருந்தது. ஆசிய சந்தையில் ஜப்பானின் நிக்கி 6.89 சதவீதம், கொரியாவின் கோஸ்பி 6.7 சதவீதம், ஹாங்காங்கின் ஹேங்செங் 4.04 சதவீதம், தைவான் 4.53 சதவீதம், ஷாங்கை , ஸ்டெயிட் டைம்ஸ், ஜகர்தா ஆகியவைற 1.67 சதவீதத்தில் இருந்து 3.10 சதவீதம் வரை குறைந்திருந்தது.
மாருதி சுசூகி உற்பத்தி குறைப்பா?
புதுடில்லி: ‘கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசூகி நிறுவனம், தங்களது குர்கான் தொழிற் சாலையில் எவ்வித உற்பத்தி குறைப்பும் செய்யப்படவில்லை’ என அறிவித்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் டில்லி அருகே உள்ள தனது குர்கான் தொழிற்சாலையில் உற்பத்தியை குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த தகவலை மாருதி சுசூகி நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக, மாருதி சுசூகி நிறுவனத்தின் செயல் அதிகாரி மயனக் பரேக் கூறியதாவது: எங்களது குர்கான் தொழிற்சாலையில் எவ் வித உற்பத்தி குறைப்பும் செய்யப்படவில்லை. தொழிற்சாலையில் உற்பத்தி பிரிவில் உள்ள விரிவுப்படுத்தப்பட்ட வசதியை பயன்படுத்தாமல் இருந்தோம். தற்போது உற்பத்திக்காக சில மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளோம். ஷிப்ட் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். தற்போது பொருளாதார நெருக்கடியால் நிதி பிரச்னை காரணமாக ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உற்பத்தி யை குறைத்து வருகின்றனர். ஆனால் எங்களை பொறுத்தவரை விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எங்களுக்கு புது வாடிக்கையாளர்களாக கிடைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் முதல் ஏழு மாதத்தில் 30 ஆயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இவ்வாறு மயனக் பரேக் கூறினார்
முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து விழுகிறது அடி
சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கூட்டப்பட்ட, ‘ஜி-20’ மாநாடு முடிந்ததும், பங்குச் சந்தைகள், ‘ஜிங்குஜா… ஜிங்குஜா…’ என்று மேலே போகும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது என்ன? சங்கு ஊதிக் கொண்டு சந்தை கீழேயே போகிறது. எவ்வளவு கீழே போகும் என்று யாருக்கும் தெரியவில்லை. ‘ஜி-20’ மாநாடு எவ்விதமான தீர்க்கமான முடிவுகளையும் தராததால், சந்தை பரவலாக எல்லா நாடுகளிலுமே கீழேயே இருந்தது. இது தவிர, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையாலும் சந்தையில் எவ்விதமான உயர்வையையும் திங்களன்று ஏற்படுத்தவில்லை. ஒரு சமயத்தில் 400 புள்ளிகளுக்கும் மேல், கீழே இறங்கியிருந்தது. சந்தை 9,000 புள்ளிகளுக்கு கீழேயும் சென்றது. ஆனால், 300 புள்ளிகள் அளவு மீண்டதால் சந்தை தப்பித்தது என்றே கூறவேண்டும். நேற்று முன்தினம் இறக்கத்திலேயே இருந்தது. 353 புள்ளிகள் சரிந்தது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் இறக்கத்திற்கு வழி வகுத்தன. சந்தை எவ்விதமான பிடிமானமும் இல்லாமல் விழுந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஹெட்ஜ் பண்டுகள் அதிகம் விற்றதால் சந்தை மிகவும் கீழே இறங்கியது. உள்நாட்டில் சிறிய முதலீட்டாளர்களும், மியூச்சுவல் பண்டுகளும் வாங்கிக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் விற்பதால் சந்தை கீழேயே சென்று கொண்டிருக்கிறது. நேற்று சந்தை மேலேயே துவங்கியது. பலரும் ஆறு நாட்களுக்கு பின் சந்தை மேலே செல்கிறது என்று தான் நினைத்தனர். அதுபோல சந்தையும் 250 புள்ளிகளுக்கு மேலே சென்றது. முடிவாக நடந்ததே வேறு. 163 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தை 8,773 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,638 புள்ளிகளுடனும் நேற்று முடிவடைந்தது. சந்தை ஏன் இந்த அளவு விழுகிறது? கம்பெனிகள் பலவற்றில் வாரத்தில் பல ஷிப்டுகள் குறைக்கப்படுகின்றன என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் சந்தையை இறக்கத்திற்கு மேலும் ஒரு காரணமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் பேரல் 50 முதல் 60 டாலர் வரை உழன்று கொண்டிருக்கிறது. யாருமே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள் இவ்வளவு குறைவாக வருமென. மேலும் பல பொருட்களும், ‘கமாடிட்டி சந்தை’யில் குறைந்து வருகிறது. இது, சந்தையை பலப்படுத்துவதற்கு பதில் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது. அதாவது, உலகளவில் கமாடிட்டி டிரேடிங்கில் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளது பங்குச் சந்தையையும் பாதிக்கிறது. என்ன செய்யலாம்? சந்தை 9,000க்கும் கீழே வந்திருக்கிறது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தான் கருதவேண்டும். ஆவரேஜ் செய்ய விரும்புபவர்களோ அல்லது புதிதாக நீண்டகாலத்திற்கு வாங்க விரும்புபவர்களுக்கோ ஏற்ற சந்தை. இருந்தாலும், முதலீட்டாளர்களின் மனநிலையும் முக்கியம். இது ஆபத்தானது என்ற எச்சரிக்கை உணர்வுடன் சந்தைக்கு வரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே பணத்தை போடாமல் சந்தையின் ஏற்றம் இறக்கத்தையும், உலக நடப்புகளையும் கவனித்து செயல்படுவது நல்லது. – சேதுராமன் சாத்தப்பன்மும்பை : இந்தியாவில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பதில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் பணப்புழக்கமும் அதிகரித்திருக்கிறது; மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதும் அதிகரித்திருக்கிறது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இன்டியாவின் சேர்மன் குரியன் தெரிவித்தார். பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் வேலை செய்திருக்கிறது என்றார் அவர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிப்பதற்கும் அது உதவியிருக்கிறது. அக்டோபரில் கடும் சிக்கலில் இருந்த மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரி, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் இந்த மாதத்தில் மீண்டு வந்துவிட்டது. அக்டோபருக்குப்பின் கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (சி.ஆர்.ஆர்.,) 3.5 சதவீதமும், ரிபோ ரேட்டை 1.5 சதவீதமும் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதற்குப்பின் இந்த இன்டஸ்டிரியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரிக்கு இதுவரை 14 – 18 சதவீத வட்டிக்கு நிதி அளித்துக்கொண்டிருந்த இந்திய வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தலையீட்டுக்குப்பின் இப்போது 10.5 – 11 சதவீத வட்டிக்கு தாராளமாக நிதி அளிக்கின்றன என்றார் அவர்.
 

தங்கம் உபயோகிப்பதில் தொடர்ந்து இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது

மதுரை :உலகில் அதிகம் தங்கம் உபயோகிப்பதில் தொடர்ந்து இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல் இதனை உறுதி செய்கிறது. வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் ( டபிள்யூ.ஜி.சி.) சமீபத்தில் வெளியிட்ட கோல்ட் டிமாண்ட் டிரன்ட்ஸ் என்ற அறிக்கையில், கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் இந்தியாவில் வாங்கப்பட்ட தங்க நகைகளின் அளவு 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்திருந்தாலும், இந்தியாவில் தங்கம் அல்லது தங்க நகை விற்பனை அதிகரித்துதான் இருக்கிறது. கடந்த வருடத்தில் ரூ.12,300 கோடிக்கு விற்பனை ஆகி இருந்த தங்கம் இந்த வருடத்தில், செப்டம்பர் வரை ரூ.21,900 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. இந்த வருடம் 178 டன் தங்கம் விற்பனை ஆகி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் இது 29 சதவீதம் அதிகள். பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்திருப்பதால் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு என்று கருதுவதாலும் தங்கம் விற்பனை அதிகரித்ததற்கு காரணம் என்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது

மும்பை : இந்தியாவில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பதில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் பணப்புழக்கமும் அதிகரித்திருக்கிறது; மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதும் அதிகரித்திருக்கிறது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இன்டியாவின் சேர்மன் குரியன் தெரிவித்தார். பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் வேலை செய்திருக்கிறது என்றார் அவர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிப்பதற்கும் அது உதவியிருக்கிறது. அக்டோபரில் கடும் சிக்கலில் இருந்த மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரி, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் இந்த மாதத்தில் மீண்டு வந்துவிட்டது. அக்டோபருக்குப்பின் கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (சி.ஆர்.ஆர்.,) 3.5 சதவீதமும், ரிபோ ரேட்டை 1.5 சதவீதமும் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதற்குப்பின் இந்த இன்டஸ்டிரியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரிக்கு இதுவரை 14 – 18 சதவீத வட்டிக்கு நிதி அளித்துக்கொண்டிருந்த இந்திய வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தலையீட்டுக்குப்பின் இப்போது 10.5 – 11 சதவீத வட்டிக்கு தாராளமாக நிதி அளிக்கின்றன என்றார் அவர்

  
மூடப்படும் நிலை ஏற்பட்டதால்
அம்பத்தூர் டன்லப் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு
6 மாதத்துக்குள் வெளியேற கெடு
சென்னை, நவ.20&
அம்பத்தூரில் இயங்கி வரும் டன்லப் ஆலை மீண்டும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியே அனுப்ப பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பொருளாதார மந்தநிலை
டயர் தயாரிப்பில் நூற்றாண்டுக்கும் மேலாக கொடி கட்டி பறந்தது டன்லப் நிறுவனம். இந்த நிறுவனம், 1896&ம் ஆண்டில் இந்தியாவில் சைக்கிள் டயர் உற்பத்தியில் இறங்கியது. இந்தியாவின் முதல் டயர் தயாரிப்பு ஆலையான டன்லப் நிறுவனம், ஆசியாவிலேயே டயர் தயாரிப்பில் பெரிய ஆலையை 1936&ம் ஆண்டில் கொல்கத்தாவில் சஹர்கஞ்ச் என்ற இடத்தில் தொடங்கியது. அதன்பிறகு, 2&வது ஆலையை சென்னை அருகில் உள்ள அம்பத்தூரில் 1959&ல் ஆரம்பித்தது. பிரசித்தி பெற்ற இந்நிறுவனம், பொருளாதார பிரச்சினை காரணமாக மூடப்படும் நிலையை தற்போது எட்டியுள்ளது.
உலகமெங்கும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக டன்லப் ஆலையும் பாதிக்கப்பட்டுள்ளது. டயர்கள் தேவைப்பாடு குறைந்துள்ளதால், இந்நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
அம்பத்தூர், கொல்கத்தா ஆலைகளில் பல மாதங்களாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உற்பத்தியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களிடம் டன்லப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அம்பத்தூர் மற்றும் சஹர்கஞ்ச் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை செவ்வாய்க்கிழமை (நேற்று) முதல் வேலைக்கு வர வேண்டாம் என்று டன்லப் ஆலை நிர்வாகம் நேற்று முன்தினம் கேட்டுக் கொண்டது.
விருப்ப ஓய்வு திட்டம்
கடந்த 2005&ம் ஆண்டுக்கு முன்பு 8 ஆண்டுகளாக டன்லப் ஆலை மூடிக்கிடந்தது. ஆனால், டிசம்பர் 20&ல் ஜம்போ நிறுவனத்திடமிருந்து, கொல்கத்தாவை சேர்ந்த ருவையா குழுமம், டன்லப் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. புதிய நிறுவனம் வாங்கி டன்லப் ஆலையை நடத்தி வந்த நேரத்தில் தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், உலகில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் அந்நிறுவனம் மீண்டும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பத்தூரில் உற்பத்தி தொடங்காதபட்சத்தில், 6 மாதங்களுக்குள் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேறுவதற்கு, டன்லப் ஆலை தொழிலாளர்கள் யூனியன் மற்றும் டன்லப் நிர்வாகமும் இணைந்து முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து 6 மாதங்களுக்கு, மாதம் ரூ.2,700 வீதம் தொழிலாளர்களுக்கு அலவன்ஸ் வழங்குவதற்கும் நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதற்கான, ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் யூனியனும், நிர்வாகமும் கையெழுத்திடவுள்ளன. தமிழக தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
மீண்டும் திறக்கப்படுமா?
அம்பத்தூரில் டன்லப் ஆலையில் 734 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். உற்பத்தி நின்றுவிட்டதால், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு 50 சதவீதம் ஊதியம்தான் கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அக்டோபர் மாதத்தில் இருந்து உற்பத்தியை தொடங்க டன்லப் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. ஆனால், அவர்களால் நினைத்தபடி அக்டோபர் மாதத்தில் ஆலையில் உற்பத்தியை தொடங்க முடியவில்லை.
எனினும், அம்பத்தூர் ஆலை மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதனையும் டன்லப் நிர்வாகம் மறுக்கவில்லை. நிதி பிரச்சினை சமாளிக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகள் ஆராய்ந்து பார்க்கப்படும் என்று டன்லப் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், அப்போது புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படாது என்றும் தெரிகிறது.
பங்கு வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால்
சிறிய மற்றும் நடுத்தர பரஸ்பர நிதி நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்பு
கவுரவ் பய்
மும்பை
பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால் நாட்டின் பரஸ்பர நிதி துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இத்துறையில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் இந்த பாதிப்பினை எதிர்கொள்ளும் வலிமை பெற்றவையாக உள்ளன. ஆனால் சிறிய மற்றும் நடுத்தர பரஸ்பர நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைக் கால ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
பங்கு வர்த்தகம்
நடப்பு 2008&ஆம் ஆண்டு பங்கு வர்த்தகத்திற்கு சாதகமான ஆண்டாக இல்லை. இவ்வாண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து பங்கு வியாபாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் அடைந்துள்ளதால் பல நிறுவனப் பங்குகளின் மதிப்பு மிகவும் குறைந்து போயுள்ளது. இதனால் நிறுவனப் பங்குகளில் முதலீடு மேற்கொள்வதையே வர்த்தகத்தின் பிரதான அங்கமாகக் கொண்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் சரிவினைக் கண்டு வருகின்றன.
பங்கு சார்ந்த முதலீடு
பல சிறிய மற்றும் நடுத்தர பரஸ்பர நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களையே பெரிதும் சார்ந்துள்ளதாலும், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில் முதலீட்டாளர்களின் ஆர்வம் மிகவும் குறைந்து போயுள்ளதாலும், நாள்தோறும் கணிசமான அளவில் இழப்பினைக் கண்டு வருவதாக தெரிகிறது. நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமே இந்தியாவின் மிகப் பெரிய பரஸ்பர நிதி நிறுவனமாக உள்ளது. ரிலையன்ஸ், யூ.டி.ஐ. ஏ.எம்.சி. போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ள நிலையில் பிரின்சிபல், கோட்டக் போன்ற நடுத்தர பரஸ்பர நிதி நிறுவனங்களின் லாப வரம்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு
தற்போதைய சூழ்நிலையில் பங்குச் சந்தைகள் எழுச்சி அடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பதால், மேலும் சில மாதங்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர பரஸ்பர நிதி நிறுவனங்களின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்று வல்லுனர்கள் தெரிவித்தனர். பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் பரஸ்பர நிதி துறையில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் உத்வேகம் பெறும் என்றும் அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். இதற்கு உதாரணமாக, ரெலிகேர் நிறுவனம் அண்மையில் லோட்டஸ் ஏ.எம்.சி.யைக் கையகப்படுத்தியதைக் கூறலாம்.
கரடியின் பிடியில் பங்கு வர்த்தகம் சிக்கியுள்ளதால், பரஸ்பர நிதி துறையில் புதிதாக களமிறங்கிய நிறுவனங்களே கடுமையான இடர்பாட்டிற்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக மிர்ரே அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் (2007&08) ரூ.47 கோடி இழப்பு (வரிக்கு முந்தைய மதிப்பீடு) ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
57 சதவீதம்
இந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, சென்ற அக்டோபர் மாதத்தில், 57 சதவீத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதே மாதத்தில் வேறு பல பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. பல நிதி நிறுவனங்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொண்டிருந்த முதலீடுகளை விலக்கிக் கொண்டு, வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்களுக்கு மாறிக் கொண்டுள்ளன.
இந்நிலையில் மிர்ரே நிறுவனம் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம் சென்ற ஆண்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் திட்ட விநியோகஸ்தர்கள் அடங்கிய குழு ஒன்றை தென் கொரியா நாட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்று பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள செலவினம்
பரஸ்பர நிதி துறையில் பணியாளர்களுக்கான சம்பளச் செலவினம் அதிகரித்து வருவதும் மற்றொரு எதிர்மறையான அம்சமாகும். பிடிலிட்டி ஏ.எம்.சி. நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகின்றன. இந்நிறுவனம் நிர்வாக கட்டணமாக ரூ.80 கோடி ஈட்டியுள்ளது. எனினும் இந்நிறுவனம், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கிய வகையில் ரூ.50 கோடி செலவிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் மொத்த இழப்பு ரூ.160 கோடியாக உள்ளது. இதர பல சிறிய மற்றும் நடுத்தர பரஸ்பர நிதி நிறுவனங்களும் சென்ற சில ஆண்டுகளாக இழப்பினையே கண்டு வருகின்றன.
ரூ.16 கோடி
ஏ.ஐ.ஜி. நிறுவனம் அதன் பணியாளர்களுக்கு ரூ.16 கோடியை சம்பளமாக வழங்கியுள்ளது. அதே வேளையில் இந்நிறுவனத்தின் கட்டண வருவாய் ரூ.12 கோடி என்ற அளவிலேயே இருந்தது.
இது குறித்து எச்.டீ.எஃப்.சி. பேங்கைச் சேர்ந்த உயர் அதிகாரியான அபய் அய்மா கூறும்போது, Òபிற துறைகளுடன் ஒப்பிடும்போது பரஸ்பர நிதி துறையானது கடந்த சில ஆண்டுகளாகத்தான் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே இத்துறையில் உள்ள நிறுவனங்களுக்கு சம்பள செலவினம் அதிகமாக உள்ளது தவிர்க்க இயலாததுÓ என்று தெரிவித்தார்.
உலக நிதி சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால்
நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் மந்த நிலை
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக நிதி சந்தைகள்
இதனை வெளிப்படுத்தும் வகையில், சென்ற 2007&ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்திய ஒப்பந்தங்களின் மதிப்பு 2,250 கோடி டாலராக (ரூ.1,10,250 கோடி) இருந்தது. இது நடப்பு ஆண்டின் இதுவரையிலான காலத்தில் 34 சதவீதம் குறைந்து 1,480 கோடி டாலராக (ரூ.72,520 கோடி) சரிவடைந்துள்ளது.
இந்திய நிறுவனங்களால் வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியாததால் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உலக நிதி சந்தைகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவால் இந்திய நிறுவனங்களால் வெளிநாடுகளிலும் நிதி திரட்ட முடியவில்லை.
எடுத்துக்காட்டாக இவ்வாண்டு தொடக்கத்தில் டாட்டா நிறுவனம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜகுவார் மற்றும் லேண்டு ரோவர் பிராண்டுகளை 230 கோடி டாலர் (ரூ.11,270 கோடி) மதிப்பிற்கு வாங்கி இருந்தது. இதற்கு தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக சென்ற மாதத்தில் 85 கோடி டாலர் (ரூ.4,165 கோடி) மதிப்பிற்கு உரிமை பங்குகளை வெளியிட்டது. இந்த பங்கு வெளியீட்டிற்கு போதிய ஆதரவு கிடைக்காததால் நிறுவனர்களே உரிமை பங்குகளை வாங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த ஆண்டுகளில் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டி வந்த டாட்டா குழுமம் தற்போது இந்த நடவடிக்கைகளை ஒத்தி வைத்துள்ளது.
அலுமினியம்
இதேபோன்று அலுமினியம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ண்டால்கோ நிறுவனம், சென்ற ஆண்டில் கனடாவைச் சேர்ந்த நாவலிஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக 300 கோடி டாலர் (ரூ.14,700 கோடி) கடன் வாங்கி இருந்தது. இதனை திரும்ப செலுத்துவதற்காக 110 கோடி டாலர் மதிப்பிற்கு உரிமை பங்குகளை வெளியிட்டது. இந்த உரிமை பங்கு வெளியீட்டிற்கும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
 

 

இன்போசிஸ், ஐபிஎம் சிறந்த நிறுவனங்களாக தேர்வு – நாஸ்காம்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களை சிறந்த நிறுவனமாக நாஸ்காம் அறிவித்துள்ளது. இன்போசிஸ் ஐடி சர்வீஸ் பிரிவிலும் மற்றும் ஐபிஎம் புதுமையான ஃப்ராஜெக்ட் செய்த முடித்தற்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 
நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல் இந்த தகவலை நேற்று 2008 சர்வதேச பெண்கள் தலைமை மாநாட்டில் தெரிவித்தார். அஜூபா சொலுசன்ஸ் மற்றும் ஏடிபி லிமிட் கம்பெனி சிறந்த வளர்ந்து வரும் நிறுவனங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்திய ஐடி நிறுவனங்களில் பெண்கள் 28 சதவீதம் பேர் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு இது 24% மாக இருந்தது. இதே போல BPO பிரிவில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் பெண்கள் 48 சதவீதமும் கடந்த ஆண்டு இது 26 சதவீதமாகவும் இருந்தது. இந்த விகிதம் மேலும் அதிகரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் இது 55% வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான பேர் கல்லூரி படிப்பை முடித்து வெளிவருகின்றனர். இவர்களில் திறமை வாய்ந்தவர்களை தேர்வு செய்து அதில் 40- 50% வரை பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் பணியில் இடம்பெற வேண்டும் என்று மிட்டல் தெரிவித்தார்.
ஆட்குறைப்பில் ஹச்.எஸ்.பி.சி தீவிரம்
சர்வதேச பொருளாதாரா நெருக்கடியில் சிக்கி பெரிய நிறுவனங்களும், வங்கிகளும் செலவுகளை குறைக்கும் நோக்கத்தோடு ஆட்குறைப்பில் ஈடுபட்டுவருவது அனைவரும் அறிந்ததே. சிட்டிகுரூப் வங்கி 50000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. பொதுவாக வங்கிளே இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இந்த பட்டியலில் தற்போது ஹச்.எஸ்.பி.சி வங்கியும் ஆட்குறைப்பில் ஈடுபட உள்ளது. 

ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் ஆசிய நாடுகளில் உள்ள வங்கிகளில் 500க்கும் அதிகமாக ஆட்குறைப்பில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இந்த வங்கி ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் 1000க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தவிட்டிருந்தது.  இந்த ஆண்டு 4.9 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக கொடுத்த கடன் திரும்பி செலுத்தப்படாததால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வங்கி செய்திகள் தெரிவிக்கின்றன.

 பிபிஓவில் பெரும் பெண்களின் பங்களிப்பு: நாஸ்காம்

பெங்களூரு: பிபிஓக்களில் பெண் ஊழியர்களின் பங்களிப்பு பெருகி வருவதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.

2008-ஐடி துறையில் பெண்களின் தலைமை என்ற கருத்தரங்கில் இத்தகவலைத் தெரிவித்தார் மித்தல்.

மேலும் அவர் கூறுகையில், ஐடி துறையில் வேலை ஊக்குவிப்புக்கு முக்கிய சக்தியாகத் திகழ்வது பெண்கள்தான். தற்போதுள்ள பணிச் சூழலை இன்னும் மேம்படுத்தி மேலும் அதிக பெண் ஊழியர்களை ஈர்க்கும் திட்டமுள்ளது, என்றார்.

இந்த கருத்தரங்கில் பெண்களை அதிகம் ஊக்குவிக்கும் சிறந்த ஐடி நிறுவனங்களுக்கு விருதுகளும் அறிவிக்கப்பட்டன.

பெண் தலைமையை சிறப்பாக ஊக்குவிக்கும் நிறுவனமாக இன்போஸிஸ் தெரிவு செய்யப்பட்டது. நாஸ்காம் கார்ப்பரேட் அவார்ட் பார் எக்ஸெலன்ஸ் விருது இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

புதுமையான முறையில் ஆண்-பெண் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் நிறுவனமாக ஐபிஎம்-அஜுபா சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்தியா: இன்சூரன்ஸ், ஐடி, மருந்து தயாரிப்பு துறைகளில் 3 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்

மும்பை: சர்வதேச நிதி குளறுபடிகளால் உற்பத்தித் துறைகளில் தேக்கம் ஏற்பட்டு உலக அளவில் வேலைவாய்ப்புகள் பறி போய்க் கொண்டிருந்தாலும் கூட இன்னொரு பக்கம் இந்தியாவில் இன்சூரன்ஸ், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சில ஐடி நிறுவனங்களும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இதன் மூலம் இந்தத் துறைகளில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.

மெட்லைப், மேக்ஸ் நியூயார்க் லைப், டாடா ஏஐஜி, பாரதி ஏஎஸ்ஏ, அவிவா ஆகிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அடு்த்த சில மாதங்களில் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

இதன்மூலம் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை எல்ஐசி மட்டுமே கொடி கட்டிப் பறந்து வந்த இந்தத் துறையில் தனியார் நிறுவனங்கள் மிக வலுவாகவே காலூன்றி வருகின்றன. இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் 42 சதவீதத்தை எட்டியுள்ளது.

நிதி நெருக்கடியான சூழலிலும் எதிர்கால பாதுகாப்பு கருதி காப்பீட்டில் முதலீடு செய்வது குறையாது என இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. மாறாக எதிர்காலம் குறித்த ஸ்திரமற்ற சூழலால் காப்பீடுகளில் மக்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மேலும் கோடிக்கணக்கான மக்களை காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் கொண்டு வர இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக தங்களது நிறுவனங்களை விரிவாக்கவுள்ளன.

இந்த வகையில் தான் இந்தத் துறையில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.

அதே போல இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் சேர்ப்பதைக் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளன. குறி்ப்பாக டாடா கன்சன்டல்சி நிறுவனம் இந்த ஆண்டு 48,000 பேரை சேர்க்கவுள்ளதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதில் 35,000 பேரை நேரடியாகவும், 12,500 பேரை சிட்டி பேங்கின் சிட்டி குரூப் குளோபல் சர்வீஸஸ் பிரிவில் இருந்தும் சேர்க்கவுள்ளது. இந்தப் பிரிவை சமீபத்தில் டிசிஎஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்போசி்ஸ் நிறுவனமும் மேலும் 18,700 பேரை சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சத்யம் சாப்ட்வேர் நிறுவனம் முன்பு திட்டமிட்டபடி 15,000 பேருக்குப் பதிலாக 8,000 பேரை மட்டும் புதியாக பணியில் சேர்க்கவுள்ளது.

கேப் ஜெமினி நிறுவனம் தனது ஊழியர் எண்ணிக்கை இந்த நிதியாண்டில் ஊழியர்களின் எண்ணிக்கையை 21,000 ஆக உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதி்ல் 25 முதல் 35 சதவீதம் வரை புதிதாக சேர்க்கப்படவுள்ள ஊழியர்கள் ஆவர்.

இதற்கிடையே வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது இந்தியக் கிளைகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் மருந்துத் தயாரிப்புப் பணிகளில் அதிக அளவில் பணம் மிச்சமாவதாலும் மிகச் சிறந்த நிபுணர்கள், ஊழியர்கள் கிடைப்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளன.

அமெரிக்காவின் மெர்க், பிஷர், கிளாஸ்கோ ஸ்மித்கிளைன், பிரிட்டனின் ஜிஎஸ்கே பார்மா, ஸ்விஸ் நாட்டின் நோவார்டிஸ் ஆகியவை புதிய மருந்துகளைத் தயாரிக்கும் திட்டங்களுடன் உள்ளன. இதன்மூலம் இந்த நிறுவனங்கள் சுமார் 3,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளன.

இத்தனைக்கும் பிஷர் நிறுவனம் உலகம் முழுவதும் தனது 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டுமே புதிதாக ஊழியர்களை சேர்க்கவுள்ளது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: