ஆட்குறைப்பில் ஹச்.எஸ்.பி.சி தீவிரம்

சர்வதேச பொருளாதாரா நெருக்கடியில் சிக்கி பெரிய நிறுவனங்களும், வங்கிகளும் செலவுகளை குறைக்கும் நோக்கத்தோடு ஆட்குறைப்பில் ஈடுபட்டுவருவது அனைவரும் அறிந்ததே. சிட்டிகுரூப் வங்கி 50000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. பொதுவாக வங்கிளே இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இந்த பட்டியலில் தற்போது ஹச்.எஸ்.பி.சி வங்கியும் ஆட்குறைப்பில் ஈடுபட உள்ளது.

ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் ஆசிய நாடுகளில் உள்ள வங்கிகளில் 500க்கும் அதிகமாக ஆட்குறைப்பில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இந்த வங்கி ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் 1000க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தவிட்டிருந்தது.  இந்த ஆண்டு 4.9 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக கொடுத்த கடன் திரும்பி செலுத்தப்படாததால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வங்கி செய்திகள் தெரிவிக்கின்றன.

டயர் விற்பனை சரிந்தது: டன்லப் ஆலை உற்பத்தி நிறுத்தம்
சென்னை: விற்பனை சரிவு மற்றும் நஷ்டம் காரணமாக நாட்டின் பிரபல டயர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டன்லப் தனது அம்பத்தூர் மற்றும் கொல்கத்தா தொழிற்சாலைகளில் உற்பத்தியை காலவரையின்றி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச பொருளாதார மந்தம் பல்வேறு நிறுவனங்களைப் பாதித்து வருகிறது. குறிப்பாக கார் விற்பனை கடந்த சில மாதங்களில் கணிசமாக்க் குறைந்துவிட்டது. இதனால் டயர் விற்பனையும் 25 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இதனால் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக டன்லப் நிர்வாகம்.

இதை நேற்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது டன்லப்.

முன்னதாக, சிஐடியு தொழிற்சங்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை விரிவான பேச்சு நடத்தியது டன்லப் நிர்வாகம். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என்று தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தகவல் கொடுத்துவிட்டது. இதனால், சென்னையில் கிட்டத்தட்ட 1000 தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். கொல்கத்தா ஆலையில் 1,171 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி டன்லப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:

கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை சரிந்து வருகிறது. எனவே, தேவைக் குறைவைக் கருதி டாடா மோட்டார்ஸ், மகிந்திரா உட்பட பல நிறுவனங்கள் கார், வர்த்தக வாகன உற்பத்தியைக் குறைத்தும், நிறுத்தியும் வருகின்றன. டயர் விற்பனை 25 சதவீதம் சரிந்து விட்டது. எனவே, தற்காலிக உற்பத்தி நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி உள்ளது.

எனினும், ஆலை மூடப்படாது. தொழிலாளர்கள் வேலையைப் பறிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உற்பத்தி நிறுத்தம் அமலில் உள்ள காலத்தில் கொல்கத்தா ஆலைத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2,000 ஆதரவுத் தொகையும், அம்பத்தூர் தொழிலாளர்களுக்கு ரூ.1,500ம் நிர்வாகம் வழங்கும் என்றார் அவர்.

சென்னை, அம்பத்தூரில் ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை டன்லப் டயர் உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்டு கிடந்தது. அதை பவன் குமார் ரூயா தலைமையிலான புதிய நிர்வாகம் கையகப்படுத்தி, உற்பத்தியைத் தொடங்கியது.

எனினும், தினமும் 90 டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலையில் பாதியளவு மட்டுமே உற்பத்தி நடந்து வந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக டன்லப் பங்குகள் மீது வர்த்தகம் நடக்காதது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ்-நிப்டி: கீழே இழுத்த ஐடி பங்குகள்

மும்பை: நேற்று மீண்டும் 9,000 புள்ளிகளுக்குக் கீழே போன மும்பை பங்குச் சந்தை இன்று கொஞ்சம் ‘தம் கட்டி’ மேலே வந்து 9236.71 புள்ளிகளைத் தொட்டுவிட்டு மீண்டும் சரிந்துவிட்டது.
நேற்று 8,971 ஆக இருந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 130 புள்ளிகளைப் பெற்றது.
எச்டிஎப்சி, கிராசிம், ரிலையன்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஐடிசி, ரான்பாக்ஸி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களி்ன் பங்குகள் விலை சில சதவீதம் உயர்ந்ததால் இந்த புள்ளிகள் உயர்வு கிடைத்தது.

 இன்டெல் நிறுவனத்தின் புதிய பிராசஸர்
மும்பை: இன்டெல் நிறுவனத்தின் புதிய, நவீன டெஸ்க் டாப் பிராசஸர், இன்டெல் கோர் ஐ7 மும்பையில் வெளியிடப்பட்டது.
 நெஹேலம் பிராசஸர் வரிசையில் வெளியாகும் முதல் பிராசஸர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்டெல் நிறுவனத்தின் பிராசஸர்களிலேயே மிகவும் நவீனமானது, அதிக வசதிகளைக் கொண்ட பிராசஸர் இதுதான்.புதிய பிரசாஸரை அறிமுகப்படுத்தி பேசிய இன்டெல் ஐ7 விற்பனை மார்க்கெட்டிங் குழு இயக்குநர் ராஜேஷ் குப்தா கூறுகையில், வீடியோ எடிட்டிங், விளையாட்டு, மற்றும் பிற இன்டர்நெட் செயல்பாடுகள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை இந்த பிரசாஸர் விரைவுபடுத்தும்.
மின்சாரத்தை அதிகம் உறிஞ்சாமல் கூடுதல் வேலையை இது செய்வது முக்கியமானது.

14,000 ஊழியர்கள், 30,000 ஏஜென்டுகளை புதிதாக வேலையில் சேர்க்கிறது மேக்ஸ் நியுயார்க் லைஃப் இந்தியா
மும்பை : உலக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதை அடுத்து, பல முன்னணி நிறுவனங்கள் செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருக்கும்போது, இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான மேக்ஸ் நியுயார்க் லைஃப் இந்தியா, இந்த நிதி ஆண்டிற்குள் 14,000 புதிய ஊழியர்களையும் 30,000 புதிய ஏஜென்ட்களையும் நியமிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இன்னொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான மெட்லைஃப் இந்தியாவும், 2,000 நிர்வாகிகளையும் 30,000 ஆலோசகர்களையும் புதிதாக வேலையில் சேர்த்துக்கொள்ள இருப்பதாக நேற்று அறிவித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளான சிட்டி குரூப், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்றவைகள் செலவை குறைக்கும் விதமாக உலக அளவிலான அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருக்கும் போது, இவர்கள் புதிதாக ஊழியர்களை வேலையில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதார மந்த நிலையை முன்னிட்டு நீங்கள் செலவை குறைக்கும் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையா என்று மேக்ஸ் நியுயார்க் லைஃப் இன்சூரன்ஸ் சீனியர் டைரக்டர் அனில் மேத்தாவிடம் கேட்டபோது, ஏற்கனவே நாங்கள் வேறு வழியில் செலவை குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். எனவே ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துதான் செலவை குறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார். மேலும் அவர் இதுகுறித்து சொன்னபோது, ஐ.ஆர்.டி.ஏ.,யின் சட்டதிட்டத்தின் படி, இருக்க வேண்டிய சால்வன்ஸி மார்ஜினை விட எங்களிடம் இரட்டிப்பு அளவு மார்ஜின் இருக்கிறது. எனவே எங்களுக்கு ஜாப்கட் போன்ற பிரச்னைகள் எழுவதில்லை. நாங்கள் 2008 – 09 பிரீமியம் வசூலில் 65 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். கடந்த நிதி ஆண்டில் நாங்கள் பிரீமியம் தொகையாக ரூ.2,714 கோடி வசூல் செய்திருந்தோம். இந்த நிதி ஆண்டில் அது ரூ.3,500 கோடியாக உயர்ந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம் .இந்த நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே நாங்கள் 65 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். அது, இந்த நிதி ஆண்டு முழுவதிற்கும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இப்போது எங்களிடம் 30 லட்சம் பாலிசிதாரர்கள் இருக்கிறார்கள் என்றார் அவர்.
சிட்டி குரூப், ஹெச்.எஸ்.பி.சி., வேலை இழப்பால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை
மும்பை : உலகின் மிகப்பெரிய வங்கிகளான ஹெச்.எஸ்.பி.சி., மற்றும் சிட்டி குரூப் ஆகியவை நேற்று மிகப்பெரிய வேலை இழப்பு செய்தியை வெளியிட்டன.ஹாங்காங்கை சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி., வங்கி 500 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக நேற்று அறிவித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி குரூப்போ 52,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. அடுத்த வருடத்தில்தான் இந்த வேலை இழப்பு இருக்கும் என்றாலும் <உலகம் முழுவதும் இதன் பாதிப்பு நேற்று தெரிந்தது. இந்நிலையில் இந்த இரு வங்கிகளின் வேலைஇழப்பு திட்டத்தால் இந்தியாவில் பெரிதாக பாதிப்பு ஏதும் நிகழப்போவதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஹெச்.எஸ்.பி.சி., யின் 500 பேர் வேலை இழப்பு திட்டத்தால், ஹாங்காங்கில் இருப்பவர்கள் 450 பேர் வேலை இழப்பார்கள் என்றும் மீதி 50 பேரும் இந்தியா தவிர மற்ற ஆசிய நாடுகளில்தான் வேலை இழப்பார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் சிட்டி குரூப்பை பொருத்தவரை, 52,000 பேர் வேலை இழப்பு திட்டத்தால் இந்தியாவில் சிறிதளவே பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. சிட்டி குரூப்பை சேர்ந்த சிட்டி குரூப் குளோபல் சர்வீசஸ் லிமிடெட் ( முன்னாள் இ-சர்வீஸ் ) என்ற நிறுவனம், டி.சி.எஸ்.,க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை இந்த காலாண்டிற்குள் முடிவடைந்து விடும் என்று தெரிகிறது. அப்போது சிட்டிகுரூப்பின் இந்திய ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்து விடும். அதை தவிர இங்கு வேறு எந்த பெரிய மாற்றமும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். எனவே இந்தியாவில் வேலை பார்த்து வரும் இந்த இரு வங்கி ஊழியர்களும் பயப்பட தேவையில்லை என்று சொல்கிறார்கள்.
ரூ. 1500 கோடி முதலீட்டில் 325 கடைகள் திறக்கும் ஸ்பென்சர்
டெல்லி: ஆர்.பி.ஜி. குழுமத்தைச் சேர்ந்த ஸ்பென்சர் ரீடெய்ல் நிறுவனம் நாடு முழுவதும் 325 புதிய கிளைகளைத் திறக்கவுள்ளது. இதற்காக ரூ. 1500 கோடியை அது முதலீடு செய்யவுள்ளது.

அடுத்த 15 மாதங்களில் இந்த அதிரடிக் கிளைத் திறப்புகளை மேற்கொள்ளவுள்ளது ஸ்பென்சர் ரீடெய்ல். இதன் மூலம் தங்களது வர்த்தகம் 60 சதவீதம் உயரும் எனவும் அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் துணைத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், அடுத்த 15 மாதங்களில் அனைத்து வகையான நிறுவனங்களை – மொத்தம் 325 ஸ்டோர்கள் – திறக்கவுள்ளோம். இதற்காக ரூ. 1500 கோடியை முதலீடு செய்யப் போகிறோம்.

குழுமத்திற்குள்ளிருந்தே இதற்கான நிதியை ஒதுக்கவுள்ளோம்.

6 மாதங்களுக்கு முன்பு நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரீடெய்ல் வர்த்தகம் இல்லை. பொருளாதார மந்த நிலைதான் இதற்குக் காரணம்.

இருப்பினும் ஸ்பென்சர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எதையும் நாங்கள் மேற்கொள்ளப் போவதில்லை. தற்போது வேலையில் உள்ளவர்களின் வேலை பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் வருங்காலத்தில் ஆட்கள் எடுப்பதில் சற்று நிதானப் போக்கை கடைப்பிடிக்கவுள்ளோம் என்றார்.

ஸ்பென்சர் ரீடெய்ல் நிறுவனத்திற்கு தற்போது நாடு முழுவதும் 406 கடைகள் உள்ளன. இவற்றில் வர்த்தகம் சரியாக இல்லாததால் 56 கடைகளை கடந்த 3 மாதத்தில் மூடியுள்ளனர். இந்தக் கடைகளின் வருவாய், மொத்த வர்த்தகத்தில் 12 சதவீதமாகும்.

பொருளாதார நெருக்கடியால், ஏராளமான நிறுவனங்கள் தடுமாறிக் கொண்டிருக்கையில், ஆயிரக்கணக்கான கோடிகளை ஸ்பென்சர் நிறுவனம் கொட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பனாரசி புடவை நெசவாளர் பட்டினியில் வாடும் கொடுமை

வாரணாசி: உலகப் புகழ் பெற்ற பனாரசி புடவை நெசவாளர்கள், உலகப் பொருளாதார பின்னடைவால், வறுமையில் வாடி, பட்டினியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பனாரசி புடவைகள் தயாரிக்கும் தொழிலில், நேரடியாகவும், மறைமுகமாகவும் 15 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர். தற்போது, இவர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். சாப்பாட்டுக்கே வழியில்லை. இதனால், பலர் இத்தொழிலை கைவிட்டு, வேலை தேடி அருகிலுள்ள நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர்.சூரத்தில் தயாரிக்கப்படும் நவநாகரிகமான புடவைகள், விலை குறைவாக இருப்பதோடு மட்டுமின்றி, பனாரசி புடவைகளுக்கு போட்டியாகவும் அமைந்தன. மேலும், சரியான சந்தைப்படுத்துதல் முறை இல்லாததும், பனாரசி புடவை வீழ்ச்சிக்கு காரணம்.அதுமட்டுமின்றி, பனாரசி புடவை உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் அறியாமையை பயன்படுத்தி சில இடைத்தரகர்கள், அவர்களின் பொருளாதார தேவைகளுக்கு முன்பணமாக சிறுத் தொகைகளை கொடுத்து, அவர்களை தங்களின் பிடிகளிலேயே வைத்துக் கொள்கின்றனர்
மியான்மரில் இருந்து சீனாவுக்கு எண்ணெய், கேஸ் பைப்லைன்கள்
பெய்ஜிங் : பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனா, அதன் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மியான்மரில் இருந்து சீனாவுக்கு ஆயில் மற்றும் கேஸ் பைப்லைன்கள் போடுகிறது. இந்திய எண்ணெய் கம்பெனியை விட கூடுதல் விலை கொடுத்து மியான்மிரில் நிறைய எண்ணெய் கிணறுகளை சீனா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கியிருந்தது. அதன் எண்ணெய் தேவைக்காக அரபு நாடுகளை மட்டுமே நம்பியிருக்கும் சீனாவுக்கு, அரபு நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் மலாக்கா வளைகுடாவை கடந்துதான் சீனா வருகிறது. அவ்வாறு வரும்போது, அதற்கான செலவு கடுமையாக அதிகரித்து விடுகிறது. இந்த நிலையில் இருந்து மாறுவதற்காக அது, மியான்மரில் நிறைய எண்ணெய் கிணறுகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்திருந்தது. இப்போது அங்கிருந்து சீனாவுக்கு எண்ணெய் மற்றும் கேஸ் கொண்டுவருவதற்கு 2.9 பில்லியன் டாலர் செலவில் பைப்லைன்களை போடுகிறது. மியான்மரையும் சீனாவில் உள்ள யுன்னன் பகுதியை இணைக்க போடப்படும் இந்த பைப்லைன்கள் வேலைகள் அடுத்த வருடம் துவங்கப்படும் என்று சீன பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மரும் சீனாவும் இணைந்து இந்த பைப்லைன் வேலைகளை செய்ய இருக்கின்றன. இந்த பைப்லைன் போடப்பட்டால் சீனாவின் எரிபொருள் செலவு பெருமளவு குறைந்து விடும் என்கிறார்கள். எண்ணெய்காக 1.5 பில்லியன் டாலர் செலவில் ஒரு பைப்லைனும், கேஸ்காகற 1.4 பில்லியன் டாலர் செலவில் ஒரு பைப்லைனுமாக இரண்டு பைப்லைன் போடப்படுகிறது.
திட்டங்களை கைவிடும் டி.எல்.எப்-பணி நீக்கமும் ஆரம்பம்
டெல்லி: உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தாக்கத்தால், தனது வீடு கட்டும் திட்டங்கள் மற்றும் ஹோட்டல் திட்டங்கள் சிலவற்றை நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப். ஒத்திவைத்துள்ளது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ரியல் எஸ்டேட்டும் ஒன்று.

இதன் காரணமாக நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப். தனது வீடு கட்டும் திட்டங்கள் மற்றும் ஹோட்டல் திட்டங்கள் சிலவற்றை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

டிஎல்எப்பின் பங்குள் கடந்த ஆண்டில் மிக உச்சத்தில் இருந்தன. இதனால் இதன் உரிமையாளரான கே.பி.சிங் இந்தியாவின் மாபெரும் 5 பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

ஆனால், இப்போது பங்குகளின் விலைகள் சரிந்துவிட்ட நிலையில் இந்த நிறுவனம் பெரும் சிக்கலில் உள்ளது.

இதுகுறித்து கே.பி.சிங் கூறுகையில், சில குடியிருப்பு, வர்த்தக மற்றும் ஹோட்டல் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளோம். நிதி நெருக்கடி மற்றும் வாடிக்கையாளர்கள் ஆர்வமின்மை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம்.

வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் வீடுகளின் தேவைகள் குறைந்துள்ளன. வீட்டுக் கடன் வட்டிகள் 7 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிலைமை சகஜமாகும்.

திட்டங்களை கைவிடுவதால் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யவுள்ளோம் என்றார்.

இந்த நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. திட்டங்கள் கைவிடப்பட்டால் அதை நம்பியிருந்த லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களும் வேலை இழப்பை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

எத்தனை திட்டங்களை டி.எல்.எப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது என்பதை கே.பி.சிங் தெரிவிக்கவில்லை.

ஆறாவது நாளாக தொடர்ந்து பங்கு சந்தையில் வீழ்ச்சி

மும்பை : மும்பை பங்கு சந்தையில் தொடர்ந்து ஆறாவது வர்த்தக நாளாக வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காலை வர்தகம் ஆரம்பித்ததில் இருந்து மதியம் 2.30 வரை உயர்ந்திருந்த சந்தை, பின்னர் நடந்த ஒரு மணி நேர வர்த்தகத்தில் வீழ்ச்சியடைந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட சரிவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து உயர்ந்து கொண்டிருந்த சந்தையை பார்த்ததும், சந்தை மீண்டும் எழுந்து விட்டது என்றே எல்லோரும் எண்ணினர். மதியம் வரை நீடித்திருந்த அந்த எண்ணம், வர்த்தக முடிவு வரை நீடிக்கவில்லை. சந்தை மீண்டும் பழைய நிலைக்கே சென்று விட்டது. நிப்டி 2650 புள்ளிகளுக்கு கீழும் சென்செக்ஸ் 8800 புள்ளிகளுக்கும் கீழே சென்று விட்டது. கேப்பிடல் குட்ஸ், பவர், பேங்கிங், ஆயில், மெட்டல், டெலிகாம், மற்றும் டெக்னாலஜி பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டன. அதிகபட்டமாக 9,236.27 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 163.42 புள்ளிகள் ( 1.83 சதவீதம் ) குறைந்து 8,773.78 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிகபட்டமாக 2,772.40 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் 48.15 புள்ளிகள் ( 1.79 சதவீதம் ) குறைந்து 2,635.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் எல்லாமே வீழ்ச்சியில்தான் முடிந்திருக்கிறது. ஐரோப்பாவின் எஃப்.டி.எஸ்.ஸி., 77 புள்ளிகளும் சி.ஏ.சி. மற்றும் டி.ஏ.எக்ஸ். முறையே 52 மற்றும் 62 புள்ளிகளும் குறைந்திருந்தன. அமெரிக்க சந்தையை பொருத்தவரை டவ் ஜோன்ஸ் 119 புள்ளிகள், நாஸ்டாக் 21 புள்ளிகள் குறைந்திருந்தது. ஆசிய சந்தையில் ஹேங் செங்க் 0.77 சதவீதம், நிக்கி 0.66 சதவீதம், தைவான் 0.49 சதவீதம், ஜகர்தா 0.80 சதவீதம், ஸ்டெயிட்டைம்ஸ் மற்றும் கோஸ்பி முறையே 1.59 சதவீதம், 1.87 சதவீதம் குறைந்திருந்தது

இன்டெல்லின் ஹைபர் திரெடிங் தொழில்நுட்பத்துடன் கூடியது புதிய ஐ7 பிராசஸர். ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்யக் கூடிய திறனும் இந்த பிராசஸருக்கு உண்டு என்றார் அவர்..

 

ஆனால், சாப்ட்வேர் நிறுவனங்களான சத்யம், இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிவற்றின் பங்கு விலைகளில் இன்று காலை முதலே வீழ்ச்சி தான் காணப்பட்டது. அத்தோடு கனிம நிறுவனங்களின் பங்குகளும் படுத்துக் கொள்ள பிற்பகலில் சென்செக்ஸ் மீண்டும் 8905.66 என்ற நிலைக்கு வந்துவிட்டது.

அதே நிலை தான் தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் காணப்பட்டது. இப்போது 2672.10 என்ற புள்ளியில் தள்ளாடிக் கொண்டுள்ளது நிப்டி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: