10,000 ஊழியர்களை நீக்குகிறது சிட்டி குரூப்; மேலும் 32,000 ஊழியர்களை நீக்க முடிவு!!

10,000 ஊழியர்களை நீக்குகிறது சிட்டி குரூப்; மேலும் 32,000 ஊழியர்களை நீக்க முடிவு!!

நியூயார்க்: உலகம் முழுவதிலும் உள்ள தனது பல்வேறு கிளைகளில் பணியாற்றும் பத்தாயிரம் ஊழியர்களை இந்த மாதம் நீக்குகிறது சிட்டி வங்கி. மேலும் 32,000 ஆயிரம் பேரை நீக்கவும் முடிவு செய்துள்ளது.

சர்வதேச நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிக்கல்களைச் சமாளிக்க உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள சிட்டி குரூப்பின் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களைக் குறைக்குமாறு சிட்டி நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ சுற்றிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சிட்டி குரூப்பின் தலைமை நிர்வாகி விக்ரம் பண்டிட்.

கடந்த மாதம்தான் 13,000 ஆயிரம் பணியாளர்களை வேலைவிட்டு நீக்கியது சிட்டி குரூப்.

இந்த குழுமத்தில் மொத்தம் 3 லட்சத்து 52 ஆயிரம் ஊழியர்கள் உலகம் முழுவதும் பணியிலிருந்தனர். நிதி நெருக்கடியைத் தொடர்ந்து மொத்தம் 62,000 ஆயிரம் ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ள சிட்டி வங்கி. இதுவரை 23,00 ஆயிரம் பேரை நீக்கிவிட்டது. மேலும் 32,000 ஆயிரம் பணியாளர்களை நீக்கவிருப்பதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

6000 பேரை நீக்கிய சன் மைக்ரோசிஸ்டம்ஸ்!
நியூயார்க்: உலகமெங்கும் பல்வேறு வணிக நிறுவனங்கள் தங்கள் செலவைக் குறைக்க பணியாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகிவிட்டன.

கலிபோர்னியாவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள பெரிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களும் இப்போது ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன.

உலக அளவில் பிரபல நிறுவனமான சன் மைக்ரோசிஸ்டம்ஸ் தனது 6000 பணியாளர்களை நீக்குவதாக நேற்று அறிவித்துள்ளது. தொடர் நஷ்டம் மற்றும் பங்குகளின் விலை சரிவு போன்றவற்றின் காரணமாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு 700 முதல் 800 மில்லியன் டாலர் வரை செலவு கட்டுப்படுத்தப்படும் என சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவின் சான்டா கிளாராவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் இணையதளங்களுக்கான சர்வர் வழங்குவதில் முன்னணியில் உள்ளது.

இங்குள்ள மற்றொரு சாப்ட்வேர் நிறுவனமான அப்ளைட் மெட்டீரியல்ஸ் 1800 பேரை நீக்கியுள்ளது

பொருளாதார நெருக்கடி-உஷார் நடவடிக்கைகளில் டாடா

டெல்லி: உலகப் பொருளாதாரத்தை இறுக்கி வரும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, டாடா குழுமம் செலவுகளைக் குறைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. விரிவாக்கத் திட்டங்கள், புதிய நிறுவனங்களை வாங்கும் பணிகள் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அது முடிவு செய்துள்ளது.

உலக அளவில் பொருளாதார நெருக்கடி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த நெருக்கடியில் சிக்கி பல வங்கிகள் திவாலாகியுள்ளன.

இந்த நெருக்கடியை சமாளிக்க தொழில் நிறுவனங்கள், ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு, சிக்கண நடவடிக்கைள் என இறங்கி விட்டன.

இந்த நிலையில் டாடா குழுமமும் பல்வேறு சிக்கண நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் இறங்கியுள்ளது.

முதல் கட்டமாக செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைளில் அது இறங்கியுள்ளது.

டாடா குழுமத்தின் வசம் உள்ள 98 நிறுவனங்களின் மேலாளர்களுக்கும் நவம்பர் 6ம் தேதி டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா இ மெயில் மூலம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி நீங்கும் வரையில், விரிவாக்கத் திட்டங்களை மெதுவாக செயல்படுத்துவது, தேவையில்லாவிட்டால் நிறுத்தி வைப்பது, புதிய நிறுவனங்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, சிக்கண நடவடிக்கைளை கடைப்பிடிப்பது என்ற முக்கிய முடிவுகளை ரத்தன் டாடா பரிந்துரைத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், என்னென்ன செய்யலாம் என்ற யோசனைகளையும் தனக்கு அனுப்புமாறும் அனைத்து நிறுவன நிர்வாகிகளையும் ரத்தன் டாடா கேட்டுள்ளார்.

மேலும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவையான நிதி, வர்த்தக திட்டங்கள் ஆகியவற்றைத் தெரிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் நிறுவனத்தையும், அதில் பணியாற்றும் ஊழியர்களையும் காக்கவே. வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ரத்தன் டாடா தனது நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

டாடா நிறுவனம் இந்த ஆண்டு இரு பெரும் வெளிநாட்டு நிறுவனங்களை பெரும் விலை கொடுத்து கையகப்படுத்தியது. முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவரை 2.3 பில்லியன் டாலருக்கு டாடா நிறுவனம் கையகப்படுத்தியது.

இதையடுத்து டச்சு நிறுவனமான கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை 13.7 பில்லியன் டாலர் விலை கொடுத்து டாடா குழுமம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும்: ஐஎம்எப்
 
 வாஷிங்டன்: சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என சர்வதேச நிதி அமைப்பு (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற ஐஎம்எப் கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்டதை விட மேலும் 0.6 சதவிகிதம் குறைவாகவே இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் இருக்கும் எனப்படுகிறது.  
சர்வதேச வர்த்தகத்தின் அளவும் அடுத்த ஆண்டு 2.4 சதவிகிதமாகக் குறைந்துவிடும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இது 7.2 சதவிகிதத்திலிருந்து 4.6 சதவிகிதமாகக் குறைந்து விட்டது சர்வதேச வர்த்தக அளவு.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.9 சதவிகிதமாக இருந்தது. இப்போது 6.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது இன்னும் குறையும் என ஐஎம்எப் எச்சரித்துள்ளது.  
 100 முன்னணி டெலிகாம் அதிபர்கள் பட்டியலில் 7 இந்தியர்கள்
டெல்லி: உலகின் 100 சக்தி வாய்ந்த தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
குளோபல் டெலிகாம்ஸ் பிசினஸ் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீநாத் நரசிம்மன், பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல் உள்ளிட்ட 7 பேர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இப்பட்டியலில் கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்மித் முதலிடத்தில் இருக்கிறார்.

ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் சீனாவின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லி யிஸோங் ஆகியோர் முறையே 2 மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

ஸ்ரீநாத் நரசிம்மனுக்கு 8வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சுனில் பார்தி மிட்டலுக்கு 35வது இடம் கிடைத்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மனோஜ் கோலி 39வது இடத்தில் இருக்கிறார்.

மோட்டோராலா மொபைல் சர்வீஸ் பிரிவின் தலைமை செயலதிகாரி சஞ்சய் ஜா 41வது இடத்திலும், ஆகரே நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் அஹுஜா 45வது இடத்திலும், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் குளோபல் டேடா மற்றும் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிரிவின் தலைவர் வினோத் குமார் 68வது இடத்திலும், வோடபோன் முன்னாள் தலைமை செயலதிகாரி அருண் சரின் 71வது இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் மீடியா அதிபர் ரூபர்ட் முர்டோச் 33வது இடத்தையும், கார்லோஸ் ஸ்லிம் ஹெலு 73வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

 உற்பத்தியைக் குறைக்கும் டாடா-லேலண்ட்

 

மும்பை: பொருளாதார நெருக்கடியால் விற்பனை குறைந்து போய்விட்டதால் டாடா மோட்டர்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் குறைப்பதற்காக தொழிற்சாலைகளை சில நாட்கள் மூடவுள்ளன.

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் புனே, லக்னெள, ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் உள்ள தனது வாகன தொழிற்சாலைகளை இந்த மாதத்தி்ல் 6 நாட்கள் மூடிவிட முடிவு செய்துள்ளது.

லக்னெள தொழிற்சாலை 10ம் தேதி முதல் 15ம் தேதி ஒட்டுமொத்தமாக மூடப்படுகிறது. இங்கு தாழ்தளப் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

புனே தொழிற்சாலை 21ம் தேதி முதல் 6 நாட்கள் மூடப்படுகிறது. இங்கு தான் இன்டிகா, இன்டிகோ, சபாரி, சுமோ, மற்றும் இலகு ரக வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 12,000 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்தத் தொழிற்சாலையில் கார்கள் உற்பத்திப் பிரிவு மட்டும் வழக்கம்போல் இயங்கவுள்ளது.

அதே போல லாரிகள், கன ரக வாகனங்கள், டிராக்டர் டிரெயலர்களை தயாரிக்கும் டாடாவின் ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலையும் மொத்தமாக மூடப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு மீண்டும் டிமாண்ட் வரும் வரை மூடப்பட்டிருக்கும்.

மூடப்படும் நாட்களுக்கு உரிய ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு விடும், அந்த தினங்கள் விடுமுறை தினங்களாகக் கருதப்படும்.

கடும் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை, வங்கிகள்- நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்கள் கிடைக்காமை, வங்கிகளில் கடன் வட்டி உயர்ந்தது ஆகிய காரணங்களால் வாகனங்கள் வாங்குவதை வாடிக்கையாளர்கள் தள்ளிப் போட்டுவிட்டனர். இதனால் வாகன தயாரிப்பைக் குறைப்பதே ஒரே வழி என்பதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாரத்தில் 3 நாள் மூடும் அசோக் லேலண்ட்:

அதே போல அசோக் லேலண்ட் நிறுவனம் தனது வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளை டிசம்பர் வரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்க முடிவு செய்துள்ளது.

விற்பனை குறைந்து போனதால் இந்த நிறுவன குடவுன்களில் ஏராளமான வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. இதையடுத்து இந்த நடவடிக்கைகைய எடுத்துள்ளது நிறுவன அதிபர்களான ஹிந்துஜா சகோதரர்கள்.

இதன்மூலம் மாதம் 2,000 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என இந்த நிறுவனம் அறிவித்தாலும் ஊதியங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி பிரச்சனைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நிலவும் மின்சார பற்றாக்குறையும் இன்னொரு காரணம் என அசோக் லேலண்ட் அறிவித்துள்ளது. மின் தட்டுப்பாடு காரணம்க வாகன உதிரி பாகங்களை சப்ளை செய்யும் துணை நிறுவனங்கள் முடங்கிவிட்டதாலும் தயாரிப்பை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதத்தில் 50 சதவீதம் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தியை குறைக்கும் இரும்பு நிறுவனம்:

அதே போல இரும்பு உற்பத்தி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ தனது உற்பத்தியை 20 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்து.

கண்ணாடி தொழிற்சாலைகள் மூடல்:

லக்னெளவில் கண்ணாடியாலான பொருட்களை உற்பத்தி செய்யும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த இந்த நிறுவனங்கள் ஆர்டர்கள் குறைந்து போனதால் மூடப்பட்டுள்ளன.

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ‘சுனாமி’யால்


இங்கிலாந்தில் வேலை இழப்பு அதிகரிக்கிறது


அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட ‘சுனாமி’யால் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு நாடுகளின் தொழில் துறை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவில் மட்டுமின்றி இதர நாடுகளிலும் வேலை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2&வது காலாண்டில்…
எடுத்துக்காட்டாக, வளர்ச்சி அடைந்த நாடான இங்கிலாந்தில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இக்காலாண்டில் மட்டும் 1,40,000 பேர் வேலை இழந்துள்ளனர். இதற்கும் முந்தைய காலாண்டில் வேலை இழந்தோர் எண்ணிக்கை 0.4 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டின் புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து அந்நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் கவர்னர் மெர்வின் கிங் கூறும்போது, “இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகி உள்ளது. வரும் 2009&ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் சரிவடையும்” என்று தெரிவித்தார்.
ஜெர்மனி
இதேபோன்று, ஜெர்மனி நாட்டின் பொருளாதாரத்திலும் சரிவு ஏற்படும் என கூறப்படுகிறது. நடப்பு 2008&ஆம் ஆண்டில் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.7 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 2009&ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாமல் தேக்க நிலை உருவாகும் என அந்நாட்டின் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

செயில்’ நிறுவனம்


உருக்கிற்கான தேவைப்பாடு குறைந்ததால் விரிவாக்க நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு


சுபாஷ் நாராயண்
புதுடெல்லி
பொதுத் துறையைச் சேர்ந்த, Ôசெயில்Õ என்று சுருக்கமாக அழைக்கப்படும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, உருக்கிற்கான தேவைப்பாடு குறைந்து வருவதையடுத்து அதன் விரிவாக்க நடவடிக்கையை ஒத்தி வைத்துள்ளது.
ரூ.54,000 கோடி முதலீடு
Ôசெயில்Õ நிறுவனம் ரூ.54,000 கோடி முதலீட்டில் ஆண்டு உருக்கு உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு திட்டமிட்டிருந்தது. இதனையடுத்து வரும் 2010&ஆம் ஆண்டிற்குள் இதன் ஆண்டு உருக்கு உற்பத்தி திறனை தற்போதைய 1.50 கோடி டன் என்ற அளவிலிருந்த 2.60 கோடி டன்னிற்கும் அதிகமான அளவில் அதிகரிக்க முடிவு செய்திருந்தது. எனினும் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை காரணமாக இந்நிறுவனம் அதன் விரிவாக்க திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் Ôசெயில்Õ நிறுவனம் 2012&ஆம் ஆண்டிற்குள் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்களை நிறைவேற்ற இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. எனினும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் உலக அளவில் உருக்கிற்கான தேவைப்பாடு உச்ச நிலையை எட்டியதால், உருக்கு அமைச்சகம் விரிவாக்கப் பணிகளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது 2010&ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும்படி Ôசெயில்Õ நிறுவனத்திற்கு ஆணை பிறப்பித்தது.
விலை வீழ்ச்சி
கடந்த சில மாதங்களாக உள்நாட்டில் உருக்கிற்கான தேவைப்பாடு குறைந்து வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் Ôசெயில்Õ நிறுவனத்தைப் பாதித்துள்ளது. உள்நாட்டில் உருக்கு விலையும் மிகவும் சரிவடைந்துள்ளது. சென்ற ஆகஸ்டு மாதத்தில் ஒரு டன் உருக்கு விலை ரூ.46,000&48,000 என்ற அளவில் இருந்தது. இது தற்போது ரூ.32,000&34,000 என்ற அளவில் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.
நடப்பு மாதத்தில் Ôசெயில்Õ நிறுவனம் அதன் அனைத்து வகை தயாரிப்புகளின் விலையை ரூ.4,000 முதல் 6,000 வரை குறைத்துள்ளது. இந்த நிலையில் விற்பனையில் 37 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, Ôசெயில்Õ நிறுவனம் சில குறிப்பிட்ட உருக்கு பொருள்களின் உற்பத்தியை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று உருக்கு துறை செயலாளர் பி.கே.ரஸ்தோகி தெரிவித்தார்.
இதர நிறுவனங்கள்
இது போன்ற பல்வேறு காரணங்களால் 2010&ஆம் ஆண்டிற்குள் விரிவாக்கத்தை மேற்கொள்வது இடர்பாட்டிற்குரியதாக இருக்கும் என்றும், அவ்வாண்டிற்கு அப்பால் மேலும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் Ôசெயில்Õ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். இந்நிலையில் தேவைப்பாடு மற்றும் அளிப்பிற்கு இடையே நிலவும் இடைவெளியை அகற்றும் வகையில் முன்னணி உருக்கு நிறுவனங்களான (டாட்டா ஸ்டீல் தவிர) இஸ்பத், எஸ்ஸார் மற்றும் ஜிந்தால் ஆகியவை உருக்கு உற்பத்தியை 20 சதவீதம் வரை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளன.
இந்தியாவில் வளமான வர்த்தக வாய்ப்பு
மருத்துவ துறையில் முதலீடு செய்யும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள்
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
ஐதராபாத்
உலக அளவில் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டு வரும் நிலையிலும், இந்தியாவில் ஆரோக்கிய பராமரிப்பு துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. இதனையடுத்து, இந்தியாவில் மருத்துவம் சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ரூ.2,94,000 கோடி
இந்தியாவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆரோக்கிய பராமரிப்பு துறையில் 6,000 கோடி டாலர் (ரூ.2,94,000 கோடி) மதிப்பிற்கு முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருவாய் ஆண்டுக்கு 12 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், ஆரோக்கிய பராமரிப்பு துறைக்காக பணிகளை வெளியில் இருந்து நிறைவேற்றி தரும் பீ.பி.ஓ. சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களால் ஈட்டப்படும் வருவாயும் இவ்வாண்டு இறுதிக்குள் 450 கோடி டாலராக (ரூ.21,600 கோடி) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு வர்த்தகம்
இவ்வாறு மருத்துவம் சார்ந்த துறைகள் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருவதால், இத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனத்தில் மட்டும் நிறுவனத்தின் தன்மையை பொறுத்து 20 லட்சம் டாலர் (ரூ.960 கோடி) முதல் 5 கோடி டாலர் (ரூ.240 கோடி) வரை முதலீடு செய்ய துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
நாட்டின் பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் சரிவால் நிறுவனங்களால் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட முடியாத நிலை உருவாகி உள்ளது. உள்நாட்டிலும் கடனிற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மருத்துவம் சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும்.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்திய அரசும் ஆரோக்கிய பராமரிப்பு துறைகள் மேம்பாட்டிற்காக அதிக நிதி ஒதுக்கி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் இத்துறையின் வளர்ச்சியில் எழுச்சி ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகள்
இத்துறையில் முதலீடு செய்வது குறித்து வென்ச்சர் ஈஸ்ட் என்ற துணிகர முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரத் ராகு கூறும்போது, “நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமின்றி, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளிலும் நிறுவனம் முதலீடு செய்யும். உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் தேக்க நிலையால் பல்வேறு துறைகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அதேசமயம், மருத்துவ துறை இதற்கு விதிவிலக்கானது” என்று தெரிவித்தார்.
விழிப்புணர்வு
உடல் ஆரோக்கியத்தை பேணுவது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. மேலும், இத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் ஆதாயமும் அதிகமாக உள்ளது. எனவே இத்துறை, முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை அளித்து வருகிறது என இன்வ் அசென்ட் என்ற துணிகர முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹரி பக்கனா தெரிவித்தார்.
நிறுவனப் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்வதில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது. நிறுவனங்களின் செயல்திறன் எப்படி உள்ளது, முதலீட்டை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறதா, அந்நிறுவனம் ஈடுபட்டு வரும் துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளதா என்பது போன்ற பல்வேறு அம்சங்களையும் சீர்தூக்கி பார்த்து அதன் பிறகே இந்நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ளும். பிறகு, முதலீடு செய்த நிறுவனத்திற்கு ஆலோசனையும் வழங்கும்.
ஒன்பது மாதங்களில்…
நடப்பு 2008&ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 967 கோடி டாலர் (ரூ.46,416 கோடி) மதிப்பிற்கு முதலீடு செய்துள்ளன. இவ்வாண்டில் பங்கு வர்த்தகத்தில் சரிவு நிலை ஏற்பட்டு வருவதால் சென்ற 2007&ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது மேற்கண்ட முதலீடு 28 சதவீதம் குறைவாகும்.
இருப்பினும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடையும் என பல்வேறு அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளன. வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி அதிகமானதாகும். இதனையடுத்து, ஆரோக்கிய பராமரிப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட வளமான வாய்ப்பை வழங்கும் துறைகளில் முதலீடு செய்ய தனியார் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
 நிதி நெருக்கடி: இந்தியாவைப் பாதிக்கும் – மன்மோகன் சிங் வாஷிங்டன்: உலகளாவிய நிதி நெருக்கடியால் இந்தியாவுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பிலிருந்து இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீள உலக வங்கியும், பிராந்திய வளர்ச்சி வங்கிகளும் நிதியுதவி செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், உலகளாவிய நிதி நெருக்கயால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் என்ற அளவிலிருந்து 7 சதவீதமாக குறையும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியிலிருந்து வளரும் நாடுகளைக் காக்க உலக வங்கி மற்றும் பிராந்திய வளர்ச்சி வங்கிகள் வளரும் நாடுகளுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்க வேண்டும். அப்போதுதான் வளரும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் தேக்கம் ஏற்படாது.

நெருக்கடி நீங்கி, பொருளாதாரம் ஸ்திரமடைந்து, முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் இந்தத் திட்டங்களை தடையின்றி மேற்கொள்ள வழி பிறக்கும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படாமல் தடுக்க உலகளாவிய நிதி கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். வளர்ச்சி அடை நாடுகள் வளரும் நாடுகளுக்கு செல்லும் தனியார் முதலீடுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் மன்மோகன் சிங்

பொருளாதார நெருக்கடி தொடர்ந்தாலும் ஆளெடுப்பு தொடரும்: இன்போசிஸ்


டெல்லி: உலகப் பொருளாதார சந்தையில் பெரும் சரிவு காணப்பட்டாலும், தொடர்ந்து ஆளெடுப்புப் பணிகளை மேற்கொள்வோம் என இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இணைத் தலைவருமான நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐடி துறையில் சரிவு காணப்படுகிறது. இருப்பினும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்து விட முடியும். எனவே ஆளெடுப்பு தொடர்பான எங்களது திட்டமிட்ட பணிகளில் எந்தவித சுணக்கத்தையும் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தொடர்ந்து ஆளெடுப்பு நடைபெறும்.

ஐ.டி. துறையில், கடந்த நான்கு ஆண்டுகளில் இருந்ததைப் போன்ற வளர்ச்சியை இந்த நிதியாண்டில் நாம் காண முடியாது.

அவுட்சோர்சிங் தொடர்பாக பாரக் ஓபாமா கூறியுள்ளது குறித்து நாம் வாட்ச் அன்ட் வெயிட் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஓபாமாவின் கொள்கைகள் என்ன என்பதை அவர் அதிபரான பின்னர்தான் அறிய முடியும் என்றார் நிலகேனி.

பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் இருந்தாலும் ஆளெடுப்பு தொடரும் என இன்போசிஸ் அறிவித்துள்ள நிலையில் இன்னொரு முக்கிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், இந்த நிதியாண்டில் 30,000 முதல் 35 ஆயிரம் பேர் வரை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் 18 ஆயிரம் பேர் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக அது தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடிக்கு தீர்வு: ஐ.நா. குழுவில் ரெட்டி

ஐ.நா.: உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. அமைத்துள்ள பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி. ரெட்டி இடம் பெற்றுள்ளார்.

இதற்கான அறிவிப்பை ஐ.நா. பொதுச் சபை தலைவர் மிகுவல் எஸ்கோடா வெளியிட்டுள்ளார்.

உலக பொருளாதார நெருக்கடியை தீர்ப்பது மற்றும் உலக நிதி நிறுவனங்களின் சீரமைப்பு குறித்து இந்தக் குழு ஐ.நா.வுக்குப் பரிந்துரைக்கும்.

2001ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவரும், உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணருமான ஜோசப் ஸ்டிகிலிட்ஸ் இந்தக் குழுவின் தலைவராக செயல்படுவார்.

இந்தக் குழுவில், ஜோமோ க்வாமே சுந்தரம், ஜோஸ் அன்டோனியோ ஓகாம்போ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்

ஏற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம் : -சேதுராமன் சாத்தப்பன்-

‘உப்பு விற்கப் போனா மழை பெய்யுது; உமி விற்கப் போனா காற்று அடிக்குது’ என்ற பழமொழி, இப்போதுள்ள பங்குச் சந்தைக்கு பொருந்தும். பலத்த எதிர்பார்ப் புடன் பங்குச் சந்தைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு, இப்போது நடப்பதெல்லாம் புரியாத புதிராக உள்ளது.நாட்டின் தொழில் உற்பத்தி செப்டம்பர் மாதம் சிறப்பாக இருந்தது என்ற தகவல் வெளிவந்தும், புதன்கிழமை சந்தை அடி வாங்கியது. வியாழனன்று சந்தைக்கு விடுமுறையாக இருந்தது. அன்றைய தினம் வெளியிடப்பட்ட பணவீக்க புள்ளி விவரம் ஒற்றை இலக்கத்திற்கு வந்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்துள்ளது என்றால் சும்மாவா? ஆனால், வெள்ளியன்று சந்தை தொடக்கத்தில் சிறிது மேலே இருந்தாலும், பின்னர் கீழே இறங்கத் தொடங்கியது. பல சிறிய முதலீட்டாளர்கள் ஒன்றும் புரியாமல் முழித்தனர். ஒரு பக்கம் பணவீக்கம் குறைகிறது; கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், சந்தை கூடவில்லை. சர்வதேச நாடுகளில் சந்தை ஏற்றத்தில் உள்ளது. ஆனால், அடிப்படை வலுவாக உள்ள இந்தியாவில் மட்டும் பங்குச் சந்தை அடி வாங்குகிறது.ஆகஸ்ட் மாதத்தில் தொழில் உற்பத்தி குறைவு என்ற செய்தி வந்த போது, கடந்த மாதம் பலத்த சரிவு ஏற்பட்டது. அதேபோல், பணவீக்கம் சற்றே உயரும் போதெல்லாம், அதை சாக்காக வைத்து சந்தையை இறக்கினர். ஆனால், இப்போது நேருக்கு மாறாக இருக்கும் போது, தொடர்ந்து அடிக்கின்றனர்.இப்போது, அடுத்த பல்லவியை ஆரம்பித்து விட்டனர். அதென்ன ஐந்து மாநில தேர்தல். இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தற்போதே யூகங்களை கிளம்பி விட்டு சந்தையை கீழே இழுத்துச் செல்கின்றனர். இதனால் தான் வெள்ளிக்கிழமை சந்தை மேலும், கீழுமாகவே இருந்தது. மேலும், ஜி-20 நாடுகளின் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு எப்படி இருக்கப் போகிறது என்ற யூகங்களும், சாப்ட்வேர் பங்குகளின் இறக்கமும் சந்தையை இறக்கித் தள்ளியது. கடந்த மூன்று டிரேடிங் நாட்களிலும் உலகளவில் பல இடங்களிலும் சந்தை மேலேயே இருந்தது. ஆனால், இந்தியாவில் குறைந்து கொண்டே வந்துள்ளது. ஏற்றத்தை எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.’டாடா டெலி’ 26 சதவீத பங்குகளை ஜப்பானின் டோகோமொ 2.7 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது தான் தற்போதைய ஹைலைட். சந்தை மலிந்துள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இதுதான் சமயம் என இந்தியக் கம்பெனிகளில் பங்குகள் வாங்க முற்படலாம். அது சந்தையை மேலே கொண்டு செல்லும். டாடா டெலியின் பங்குகள் 12 சதவீதம் மேலே சென்றன. இந்த பங்கு 11 ரூபாய் வரை குறைந்து வந்த போது, பலரது பார்வை இதன் மீது திரும்பவில்லை. இப்போது கூட வாங்கலாம். ஜப்பான் நிறுவனம் ஒரு பங்கை 24.70 ரூபாய் என்று தான் வாங்கியுள்ளது. எனவே, இந்த பங்கை கண்காணித்து வாங்க முயற்சிக்கலாம்.

வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 151 புள்ளிகள் குறைந்து 9,385 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 38 புள்ளிகள் குறைந்து 2,810 புள்ளிகளுடனும் முடிவடைந்தன.

அன்னிய செலாவணி கையிருப்பு: ஒரு காலத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாமல் நாடு கஷ்டப்பட்டது; ஏற்றுமதி பெருகியது, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை அதிகமாக்கி, அன்னிய செலாவணியை கொண்டு வந்து கொட்டியது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அதிகளவில் பணங்களை கொண்டு வந்தனர். எல்லாம் சேர்ந்து நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கூடி வந்தது. ஆனால், கடந்த ஆறு மாத காலமாக டாலருக்கு எதிராக ரூபாய் தள்ளாடுவதால், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. அதாவது, 312 பில்லியன் டாலராக ஜூன் மாதம் இருந்தது, தற்போது, 250 பில்லியன் டாலர் அளவில் வந்து நிற்கிறது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் விற்று வெளியேறியதும் ஒரு காரணமாகும்.

புதிய முதலீடுகள்: கம்பெனிகள் தங்கள் விரிவாக்க பணிகளுக்கு புதிய வெளியீடுகள் தான் சிறந்த வழி. அதாவது, கடன்கள் வாங்காமல் விரிவாக்கம் செய்யலாம். ஆனால், தற்போது புதிய முதலீடுகள் கொண்டு வருவதற்கு வழிகள் இல்லாததால், கம்பெனிகள் விரிவாக்கத்திற்கு செல்ல வேண்டுமானால், வங்கிகளிடம் கடன்கள் வாங்க வேண்டும். அதற்கு வட்டி வேறு கட்ட வேண்டும்.

வட்டி சுமை கூடும் போது லாபங்கள் குறையும். அதே சமயம், புதிய வெளியீடுகள் கொண்டு வந்தால், போடுவதற்கு முதலீட்டாளர்கள் தயாராக இல்லை. கடன்கள் வாங்கி செய்வதற்கு கம்பெனிகள் தயங்குகின்றன. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சந்தை முன் எதிர்பார்த்தபடியே 9,000 அளவில் வந்து நிற்கிறது. நீண்ட கால எண்ணத்தில் வாங்க நல்ல சந்தர்ப்பம் தான். திடமான மனதும், நீண்ட கால எண்ணமும் வேண்டும். அது தான் சந்தைக் கும் தேவை; முதலீட்டாளர்களுக்கும் தேவை. பணவீக்கம் குறைந்திருப்பதால், ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கலாம்.

வரும் நாட்கள் மேலும், கீழுமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே, பங்குகளை மொத்தமாக வாங்காமல், இறங்க இறங்க வாங்கலாம். டிசம்பர் மாதம் துவங்கிவிட்டால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 

ஏர் இந்தியாவும் சிக்கனத்தில் இறங்கியது: இஷ்டத்திற்கு ஊழியர்கள் போனில் பேச தடை

மும்பை: ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள், அலுவலக போனில் இனி தாங்கள் விருப்பம் போல் பேச முடியாது. சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி உத்தரவை ஏர் இந்தியா பிறப்பித்துள்ளது.

விமான எரிபொருளின் கிடு கிடு விலை உயர்வு காரணமாக, பல தனியார் விமான நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஆட் குறைப்பு, விமான ரத்து போன்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தற்போது, ஏர் இந்தியா நிறுவனமும் சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளது.ஏர் இந்தியா ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் பேசுவதற்கு (உள்ளூர் அழைப்புகள்) அலுவலக போனை பயன்படுத்துவது வழக்கம். இதற்கு தடை எதுவும் கிடையாது. தற்போது, இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. இதன்படி, ஊழியர்கள் இனிமேல் தங்கள் விருப்பம் போல் அலுவலக போனை பயன்படுத்த முடியாது. யாருக்காவது பேச வேண்டுமெனில், அலுவலகத்தில் உள்ள டெலிபோன் ஆபரேட்டரிடம் எண்ணை கொடுத்து, அதன் மூலமாகவே பேச வேண்டும். தாங்களாகவே விரும்பிய எண்ணை சுழற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது.தகவல் தொடர்பில் இது போன்ற சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிப்பதன் மூலம், ஆண்டுக்கு 25 கோடி ரூபாயை சேமிக்க முடியும் என ஏர் இந்தியா வட்டாரங்கள் கூறுகின்றன. ஊழியர்கள் கூறுகையில், ‘போனில் சுதந்திரமாக பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெலிபோன் ஆபரேட்டருக்கு முன், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது’ என்றனர்.

அமெரிக்க நிறுவன திவால் நிலையால்இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு

புதுடில்லி: அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் பல திவாலாகி விட்டதால், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.அமெரிக்காவில் ஏற்பட் டுள்ள பொருளாதார மந்த நிலையால், நிகழ்ந்த பாதிப்புகள் குறித்து, டன் அன்ட் பிராட்ஸ்டீட் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:அமெரிக்காவில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்று விட்டன. இருந்தாலும், தங்களின் வர்த்தகத்தை மறுசீரமைத்து லாபம் பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்களின் அன்றாட வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக் கின்றன. ஆனால், முக்கியமான வர்த்தக முடிவுகளை எடுக்க வேண்டும் எனில், திவால் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டின் அனுமதி பெற்ற பின்னரே எடுக்க முடியும்.அதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் மிகவும் எச்சரிக்கையோடு செயல் பட வேண்டும். தங்களிடம் பொருட்களை வாங்கும் நிறுவனங்களின், நிதிநிலைமை நன்றாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றுமதி செய்யும் பொருட்களை இன்சூ ரன்ஸ் செய்ய வேண்டும்.இந்தியாவில் இருந்து அதிக அளவில் பொருட் களை பெறும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. 2007-08ம் ஆண்டில், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 13 சதவீதம். இருந்தாலும், அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் பல மோசமான நிதி நெருக்கடியில் இருப்பதால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 39 சதவீதம் அதாவது ஐந்து லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும்.மற்ற நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 10.4 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரத்தில், இறக்குமதி 43.3 சதவீதம் கூடியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ஒன்பது லட்சம் கோடியை எட்டும் என, முன்னர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை அடைய முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனங் கள் பல திவாலானது மட்டுமின்றி, சரக்கு கட்டண உயர்வு, சில நாட்டு அரசுகள் விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றாலும், ஏற்றுமதி பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜவுளி, ஆயத்த ஆடைகள், நகைகள், நவரத்தின கற்கள், வைரங்கள், கைவினைப் பொருட்கள், தோல் பொருட்கள், பித்தளை பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி ஏற்கனவே மந்தமான நிலையில் உள்ளது.

இவ்வாறு டன் அன்ட் பிராட்ஸ்டீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

ஒபாமாவின் பொருளாதார ஆலோசகராகஇந்தியர் நியமனம்
 
வாஷிங்டன், நவ.15: அமெரிக்க அதிப ராக தேர்வாகி உள்ள ஒபாமாவின் பொரு ளாதார ஆலோசகராக அஞ்சன் முகர்ஜி என்ற அமெரிக்கவாழ் இந்தியர் நியமிக்கப் பட்டுள்ளார்
ஒபாமாவுக்கு பல்வேறு துறைகளில் ஆலோசனைக் கூற 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு வில் ஏற்கனவே 3 இந்தியர்கள் உள்ளனர்
தற்போது 4-வது இந்தியராக அஞ்சன் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது
பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த் தகப் பிரிவு ஆலோசனைக் குழுவின் தலை வராக நியமிக்கப்பட்டுள்ள முகர்ஜி, ஹார் வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட் டம் பெற்று அங்குள்ள பிளாக்ஸ்டோன் என்ற நிதி நிறுவனத்தில் நிர்வாக இயக்குந ராக பணியாற்றி வருகிறார்
பொருளாதார விவகாரங்களில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர் முகர்ஜி என்ப தால் அவரை இப் பதவிக்கு நியமித்துள் ளார் ஒபாமா. அண்மைக்காலமாக அமெ ரிக்க வங்கிகள் சரிவை சந்தித்து வரும் வேளையில் இந்த நியமனம் முக்கியத்து வம் பெறுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: