லண்டனில் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது டாடா-கோரஸ்

லண்டனில் இருக்கும் கோரஸ் நிறுவனம் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிறுவனமாகும். அந்நிறுவனம் அங்கு 400க்கும் அதிகமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இருக்கிறது.

 பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிறுவனங்களில் கோரஸ் நிறுவனமும் தற்போது சிக்கியுள்ளது. இது 400க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அங்கு பல்வேறு கிளை நிறுவனங்களாக செயலாற்றி வருகிறது. பல்வேறு கிளைகளிலும் இருந்து 50க்கும் அதிகமான ஊழியர்களை நீக்க இருக்கிறது. சர்வதேச அளவில் ஸ்டீல் நிறுவனங்கள் பலத்த நஷ்டம் அடைந்து வருகின்றன. மிட்டல் நிறுவனத்தில் கூட இதே போக்கு நிலவுகிறது. ஆசிய மற்றும் இந்திய சந்தையில் ஸ்டீலுக்கு டிமாண்டு குறைந்துள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோரஸ் நிறுவனம் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல்வேறு கிளைகளில் 2400 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் தொழில்வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கோரஸ் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பணிநீக்கம் கூட எங்களின் இழப்பை சரி செய்ய கூடுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

‘ரெட் அலர்ட்’டில் ஐரோப்பிய பொருளாதாரம்!!

பெர்லின்: பொருளாதார மந்தச் சுழலுக்குள் ஜெர்மனியும் சிக்கிக் கொண்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

உலகம் முழுக்க பொருளாதார மந்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்கார நாடு எனப்பட்ட அமெரிக்காவில் இன்று பெருகிவரும் ஏழைகளை எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்திலும் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட, பல வங்கிகள் மூடப்பட்டு, நிதி நெருக்கடி கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடு எனப்படும் ஜெர்மனியும் சரிவைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது.

கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு நிலைமை கடும் மோசமாகிவிட்டதாக அரசே அறிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இப்படியொரு மோசமான சூழலை ஜெர்மனி சந்தித்ததில்லை. இன்னும் பல வருடங்களுக்கு மீள முடியாத அளவு நெருக்கடிகள் ஜெர்மனியைச் சூழ்ந்துள்ளதாக ஜெர்மனியின் துணை பொருளாதார அமைச்சர் வால்தர் அட்ரெம்பா கூறியுள்ளார்.

இந்த பொருளாதார மந்தத்தின் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என கணிக்க முடியவில்லை. நினைத்தாலே பயமாக இருக்கிறது என ஜெர்மனியின் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சின்ன பிளாஷ்பேக்:

ஜெர்மனிக்காரர்கள் இவ்வளவு பயத்துடன் பேசக் காரணம் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கால கட்டங்களில் ஜெர்மனி ஓட்டாண்டியாகிவிட்ட நாடாகவே பார்க்கப்பட்டது.

முதல் உலகப் போருக்கு காரணமாக இருந்த நாடு என்று கூறி, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசுகள் ஜெர்மன் வளங்களைக் பங்கு போட்டுக் கொண்டன.

ஒரு கட்டத்தில் ஜெர்மனியின் பணத்துக்கு. சாதாரண காகிதத்துக்குக் கிடைத்த மரியாதை கூட கிடைக்கவில்லை. டாய்லெட்டுகளில் டிஷ்யூ பேப்பருக்கு பதில் ஜெர்மனியின் டாயிஷ் மார்க் பணக் கட்டுக்களை அடுக்கி வைத்திருந்தார்களாம்.

அதனால்தான் இப்போது, பொருளாதார மந்தம் என்றதும் மக்கள் அலறத் தொடங்கியிருக்கிறார்கள்.

ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் 3,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறதுலண்டன் : ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் ( ஆர் பி எஸ் ) அதன் 3,000 ஊழியர்களை இன்னும் சில வாரங்களில் வேலை நீக்கம் செய்கிறது. உலக அளவில் இருக்கும் அதன் வங்கி சேவையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, அது இந்த நடவடிக்கையை எடுக்கிறது. இருந்தாலும் அதன் முக்கிய பணிகள் ஏதுவும் பாதிக்கப்படாது என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த வருடத்தில் முதல் முறையாக நஷ்டத்தை சந்தித்த அந்த வங்கி, பிரிட்டிஷ் அரசிடமிருந்து 20 பில்லியன் பவுண்டுகளை கடனாக கேட்கிறது. உலகெங்கி<லும் இருக்கும் அதன் கிளைகளில் மொத்தம் 1,70,000 பேர் பணியாற்றுகிறார்கள். அதில் 1,00,000 பேர் பிரிட்டனிலேயே பணியாற்றுகிறார்கள். பிரிட்டனின் பிரபல டெலிகாம் நிறுவனமான பி.டி.,10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்த 24 மணி நேரத்தில் பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்டில் இருந்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இவர்கள் தவிர விர்ஜின் மீடியா, யெல், கிளாஸ்கோ ஸ்மித்லைன், மற்றும் ஜேசிபி அகியோரும் மொத்தமாக 5,000 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறார்கள். இதனால் பிரிட்டனில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவாக 1.82 மில்லியனாக உயர்ந்திருக்கிறது

 முதல் நூறு நிறுவனங்களில் இந்தியா இல்லை: ‘பார்ச்சூன்’ பட்டியல் வெளியீடு

நியூயார்க்: உலகின் தலைசிறந்த பொறுப்புமிக்க 100 நிறுவனங்களில் எந்தவொரு இந்திய கம்பெனியும் இடம்பெறவில்லை. உலகின் முன்னணி பணக்காரர்கள் பட் டியலில், இந்தியாவில் தொழில் துறையில் ஜாம்பவான்களாக உள்ளவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், உலகின் தலைசிறந்து பொறுப்புமிக்க நிறுவனங்கள் எவை என பட்டியலிடப்பட்ட போது, இதில் இந்திய நிறுவனங்களை தேட வேண்டியிருந்தது. ஆம். இந்த பட்டியலில் இடம்பெறாததே உண்மை.சமூகத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் சிறப்பான முறையில் பணியாற்றியதன் அடிப்படையில் இந்த நிறுவனங்களை அமெரிக் காவின் பிரபல வர்த்தக பத்திரிகையான ‘பார்ச்சூன்’ தேர்வு செய்துள்ளது.உலகளவில் நிறுவனங்களின் விற்பனை அடிப்படையில், ‘பார்ச்சூன் குளோபல் 500’ பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதிலிருந்த தலைசிறந்த பொறுப்புள்ள நிறுவனங்கள் 100 தேர்வு செய்யப்பட்டது.இதில், எந்த நிறுவனமும் இடம்பெறவில்லை. அதே சமயம் ‘பார்ச்சூன் குளோபல் பட்டியல் 500’ல் இந்திய நிறுவனங்களான ஐ.ஓ.சி., ரிலையன்ஸ், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை இடம்பெற்று இருந்தன. ஆனால் பொறுப்புள்ள 100 நிறுவனங்கள் பட்டியலில் இவை இடம்பெறவில்லை.நூறு நிறுவன பட்டியலில் பிரிட்டனின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ‘வோடபோன்’ முதலிடம் பெற்றது. இந்நிறுவனம் இந்தியாவில் எஸ்ஸார் குரூப் இணைந்து வர்த்தகத்தை துவக்கியுள்ளது.

கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது.அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் இரண்டாவது இடமும், பிரிட்டனின் எச்.எஸ். பி.சி., ஹோல் டிங்ஸ் மூன்றாவது இடமும், பிரான்ஸ் டெலிகாம் மற்றும் பிரிட்டனின் எச்.பி.ஓ.எஸ்., பாங்க் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளன.நோக்கியா நிறுவனம் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனை விட நம் வளர்ச்சி விகிதம் அதிகம்: சிதம்பரம் தகவல்

வாஷிங்டன்: ”உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலைமை, இந்தியாவின் வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் பணப்புழக்கத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும். இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் சீரான வளர்ச்சி காணும்,” என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஜி -20 நாடுகளின் மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் சென்றுள்ளார். அவருடன் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் சென் றுள்ளார். விமானத்தில் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம் கூறியதாவது:உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, நாம் அளவிட முடியாது. ஆனாலும், இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதால், இந்தப் பாதிப்பை தாங்கிக் கொள்ளும். 2008-09ம் ஆண்டில் சீரான வளர்ச்சி காணும். நடப்பு நிதியாண்டில் நம் நாடு 7.8 சதவீத வளர்ச்சி அடையும் என, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்., ) கடந்த வாரம் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் வட்டி வீதம் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்னும் அதிகமாகவே உள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக அக்டோபர் 6, 24 மற்றும் 31ம் தேதிகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் நடவடிக்கை எடுத்துள்ளார். நிலைமை மாறும் போது, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், அவரே நடவடிக்கை எடுப்பார். இந்த கேள்விக்கு நான் பதிலளிப்பது சரியாக இருக்காது.இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என, பிரிட்டிஷ் பத்திரிகைகள் சில தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக இருக்கும் என, ஐ.எம்.எப்.,பும், 7.5 முதல் 8 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கியும், 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலும் தெரிவித்துள்ளன. இந்த வேறுபாடுகள் எல்லாம் 7 முதல் 7.8 சதவீத அளவுக்குள்ளேயே உள்ளன. மொத்தத்தில், பிரிட்டனின் வளர்ச்சி வீதத்தை விட, நம்நாட்டின் வளர்ச்சி வீதம் அதிகமாகவே இருக்கும்.உலக பொருளாதார மந்தத்தால், ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, இந்தியாவுக்கு உலக வங்கி அதிக அளவில் நிதி வழங்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்கு அதிக அளவிலான நிதி ஆதாரங்களை பரிமாற்றம் செய்ய வேண்டும். உலக வங்கி தற்போது இந்தியாவுக்கு, ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் அளவை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

ஹெச்.சி.எல்., நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மெமரி கார்டு விற்க சேன்டிக்ஸ் உடன்பாடு

மும்பை : சேன்டிஸ்க் கார்பரேஷன் இந்தியா நிறுவனம், ஹெச்.சி.எல்., இன்ஃபோசிஸ்டத்துடன் இணைந்து இந்தியாவில் மொபைல் போனுக்கான மெமரி கார்டுகளை விற்க உடன்பாடு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஹெச்.சி.எல்.,இன் இன்ஃபர்மேஷன், கம்யூனிகேஷன்ஸ், டெக்னாலஜியை ( ஐ சி டி ) சேன்டிஸ்க் பயன்படுத்திக்கொள்ளும். இந்தியாவில் மொபைல் போன் சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், அதற்கு தகுந்தபடி நாங்களும் எங்களது தயாரிப்புகளின் வினியோகத்தை வேகப்படுத்த வேண்டியதிருக்கிறது என்றார் சேன்டிஸ்க் கார்பரேஷனின் தலைவர் மற்றும் சி.இ.ஓ., சஞ்சய் மெஹ்ரோத்ரா. ஹெச்.சி.எல்.,லுடன் இணைந்திருப்பதால் எங்களால், உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய மொபைல் சந்தையில் எங்களது பலதரப்பட்ட மாடல் மெமரி கார்டுகளை வேகமாக சப்ளை செய்ய முடியும் என்றார் அவர். சேன்டிஸ்க் நிறுவனம் 2 ஜிபி முதல் 16 ஜிபி வரை உள்ள மெமரி கார்டுகளை தயாரிக்கிறது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: