சோதனை மேல் சோதனை…

சோதனை மேல் சோதனை…

அமெரிக்காவில் மேலும் இரண்டு வங்கிகள் திவால்
அமெரிக்காவில், ஹ¨ஸ்டன் நகரைச் சேர்ந்த ஃப்ராங்க்ளின் பேங்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள செக்யூரிட்டி பசிஃபிக் பேங்க் ஆகியவை சென்ற வெள்ளிக்கிழமை அன்று திவால் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, இவ்வாண்டில் இதுவரையிலான காலத்தில் திவாலான அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை 19&ஆக உயர்ந்துள்ளது. சென்ற 2007&ஆம் ஆண்டில் மூன்று வங்கிகள் மட்டுமே திவால் ஆகி இருந்தன.
அமெரிக்காவில் வீட்டு வசதி கடன் வழங்கும் வங்கிகள், அவை வழங்கிய வீட்டு வசதி கடன் அடிப்படையில் பத்திரங்களை வெளியிட்டு, முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டின. அமெரிக்க வீட்டு வசதிக் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சீர்குலைவிற்கு இதுதான் முக்கிய காரணமாகும். இத்தகைய கடன்பத்திரங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியவர், திவாலான ஃப்ராங்க்ளின் வங்கியின் தாய் நிறுவனமான ஃப்ராங்க்ளின் பேங்க் கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் இணை நிறுவனரான லிவிஸ் ரனீரி ஆவார். இவரால், அவரது வங்கியை காப்பாற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் மேலும் சில வங்கிகள் திவால் ஆகும் என்று கூறப்படுகிறது.

பங்குச் சந்தை தள்ளாட்டம்: முதலீட்டை குறைத்தது எல்.ஐ.சி.,

மும்பை: பங்குச் சந்தை நிலவரம் தள்ளாட்டம் கண்டு வருவதால், அதில் முதலீடு செய்வதை, நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., குறைத்துக் கொண்டுள்ளது. அதற்கு மாறாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.எல்.ஐ.சி.,க்கு ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் உட்பட பல வகையான பாலிசிகள் மூலம் கிடைக்கும் வருவாய் தற்போது 1.15 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், 13 ஆயிரம் கோடி முதல் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதியம் மற்றும் குரூப் பண்ட்கள் மூலம் கிடைப்பது.நாட்டிலுள்ள முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி., பங்குச் சந்தையிலும் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளது. ஆனால், சமீப காலமாக பங்குச் சந்தை நிலவரங்கள் திருப்திகரமாக இல்லை. நிறுவன பங்குகளின் விலைகள் பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளன.அமெரிக்கா உட்பட சில நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைமை, இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த காரணங்களால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை எல்.ஐ.சி., நிறுவனம் கணிசமாகக் குறைத்துக் கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதை அதிகரித்துள்ளது.இது தொடர்பாக எல்.ஐ.சி., நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:தற்போது, கம்பெனி கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது, கவர்ச்சிகரமானதாக உள்ளது. 12 சதவீதம் வரை வருவாய் கிடைக்கும். கடந்த ஏழு மாதங்களாக இதுபோன்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதை எல்.ஐ.சி., அதிகரித்துள்ளது.மேலும், கம்பெனி கடன் பத்திரங்களில் கடந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு அந்த அளவு 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும்.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்கு கம்பெனிகளின் எளிதில் மாற்ற இயலாத கடன் பத்திரங்களில் மட்டும் எல்.ஐ.சி., 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அத்துடன் என்.டி.பி.சி., – என்.எச்.பி.சி.,- ஆர்.இ.சி., பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்றவற்றிலும் முதலீடு செய்துள் ளது.ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மூலம் கிடைத்த பிரிமியம் தொகையில் 35 சதவீதத்தை இந்த ஆண்டு உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்துள்ளோம். இதுதவிர அரசு பத்திரங்கள் அல்லாத இதர கடன் பத்திரங்கள் மற்றும் மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் 20 சதவீதம் முதலீடு செய்துள்ளோம். இவ்வாறு எல்.ஐ.சி., அதிகாரிகள் கூறினர்

மேலும் கீழுமாக போய்க் கொண்டிருக்கிறது பங்குச் சந்தை சேதுராமன் சாத்தப்பன்

சந்தை மேலும், கீழுமாக இருக்கிறது. அப்படித்தான் இருக்கும். ஏனெனில், ஆர்வமாக பலர் வாங்கச் சென்றால் சந்தை கூடுகிறது. சந்தை கூடுவது தான் விற்பதற்கு நல்ல சமயம் என்று பலர் இருக்கின்றனர். அதனால் மேலும், கீழுமாக இருக்கிறது.வியாழன் அதற்கு விதிவிலக்கல்ல. ஏபிஎன் ஆம்ரோ ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் வைத்திருப்பவர்கள் அவற்றை விற்று விடலாம் என்று விடுத்த அறிக்கை புதனன்று சந்தை கலக்கியது. அந்தக் கம்பெனியின் பங்குகள் 13 சதவீதம் வரை கீழே சென் றது. வியாழனன்றும் அதன் வீழ்ச்சி தொடர்ந்தது. கிட்டத் தட்ட 8 சதவீதம் வரை கீழே விழுந்தது. இரண்டு நாட்களில் 21 சதவீதம் விழுந்தது. ஏன் ஏபிஎன் ஆம்ரோ, ரிலையன்ஸ் பங்குகளை விற்கக் கூறியது? ரிலையன்சின் முக்கிய பணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தான். வருங்காலங்களில் தற்போது கிடைத்து வரும் லாபம் கிடைக் காது, அதனால் லாபம் குறையும் என்று கூறியிருந்தது. இது தான் காரணம். உலகளவில் ஸ்டீல் உபயோகங்கள் குறைந்து வருவதால் ஆர்சிலர் மிட்டல் கம்பெனி தனது உற்பத்தியை குறைக்கப் போவதாக அறிவித்திருந்தது, இந்தியாவில் ஸ்டீல் கம்பெனிகளின் விலைகளை கீழே தள்ளியது.அன்றைய தினம் வங்கிப் பங்குகளும் குறைந்தன. ஏன் ? அமைச்சர் சிதம்பரம் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறையுங்கள் என்று கட்டளை இட்டிருந்தார் அல்லவா? அதைத் தொடர்ந்து பல வங்கிகள் 0.75 சதவீதம் வட்டி விகிதங்களை குறைத்தன. இதனால், வருங்காலங்களில் அவர்களின் வருமானம் குறையும் என்பதால் வங்கிப் பங்குகளும் சேர்ந்து வியாழனன்று விழுந்தன. மொத்தமாக 385 புள்ளிகள் விழுந்து சந்தை 10,000க்கும் கீழே வந்தது.புதன், வியாழன் சரிவைத் தொடர்ந்து வெள்ளி சந்தை தொடக்கத்தில் கீழேயே தொடங்கியது. ஆனால், சந்தையில் இரண்டு தினங்களில் 21 சதவீதத்தை இழந்து நின்ற ஜாம்பவான் ரிலையன்ஸ் பங்குகள் தான் எல்லார் கண்களுக்கும் உறுத்தியது. பலர் வாங்கினர் என்றே சொல்ல வேண்டும். அந்தக் கம்பெனியின் பங்குகள் 4 சதவீதம் அதிகமாகி முடிவடைந்தது. சாப்ட்வேர் பங்குகளும் மேலே சென்றன. ஆதலால், மும்பை சந்தை வெள்ளியன்று 230 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது.முடிவாக மும்பை பங்குச் சந்தை 9964 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2973 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.கடந்த சில மாதங்களாக ஜொலித்து வந்த கொல்ட் ஈ.டி. எப்., பண்டுகள் அக்டோபர் மாதம் களையிழந்து காணப்பட் டன. பங்குச் சந்தை போலவே அந்த பண்டுகளிலும் இறக்கம் தான். 9.6 சதவீதம் மதிப்பில் இறங்கியது. எல்லாமே இறக்கம் தான்.கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்து வருவதால், டிபாசிட்டுக்கான வட்டி விகிதங்களும் குறையும். ஆதலால், பணம் உள்ளவர்கள் பத்திரமாக வைக்க விரும்புபவர்கள் காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்ளலாம்.வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவில் ஈர்ப்பதற்காக அரசாங்கம் சில தளர்வுகளை வரும் வாரங்களில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில் சந் தையை அது மேலே கொண்டு போக வாய்ப்பு உள்ளது.கட்டுமானம் இல்லாமல் விழுந்து கொண்டிருந்தது கட்டுமானத்துறை. கட்டுமானத்துறை சரிவுகள் பழகிப்போன விஷயம் தான். தற்போது புதிய வீடுகள் 20 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைப்பதாக செய்திகள் வருகிறது. ஆனால், வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.இன்னும் சிறிது தள்ளுபடி கூடும் பட்சத்தில் முதலீட்டாளர் கள் இது தான் சந்தர்ப்பம் என்று வருவர். அப்போது அத்துறை கூடும் வாய்ப்புக்கள் நிறைய உள்ளது. முதலீட்டாளர் கள் நிறைய பேர் சந்தர்ப்பத் திற்காக காத்திருக்கின்றனர், அதனால் தான் அந்த துறையில் அத்தனை தேக்கம்.

இந்திய ஏற்றுமதியில் 20 சதவீதம் குறைந்து விடும் : அசோசெம் கருத்து

புதுடில்லி : இந்த நிதி ஆண்டில் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற அரசின் இலக்கை அடைய முடியாது என்று தொழில்துறை அமைப்பான அசோசெம் ( அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்டிரி ) தெரிவித்திருக்கிறது. அரசின் இலக்கில் இருந்து 20 சதவீத ஏற்றுமதி குறைந்து விடும் என்று அது தெரிவிக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி, இந்திய ஏற்றுமதியை பாதித்திருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், இன்னொரு காரணத்தையும் அது தெரிவிக்கிறது. சரக்கு கப்பலுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதும், ஏற்றுமதி மீதான மத்திய அரசின் சில கட்டுப்பாடுகளும் ஏற்றுமதியை பாதித்திருக்கிறது என்று அசோசெம் சொல்கிறது. ஏற்றுமதிக்கான இலக்கிற்கும் <உண்மை நிலவரத்திற்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்பது குறித்து நடந்த கருத்தரங்கில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டெக்ஸ்டைல்ஸ், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, டயமண்ட்ஸ், ஹேண்டிகிராப்ட், தோல் பொருட்கள் போன்றவைகளில் ஏற்றுமதி ஏற்கனவே குறைந்து விட்டது என்றும் அது தெரிவித்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதி குறைந்து விடும் என்று சொன்ன அது, ஆகஸ்ட்டில் 26.9 சதவீதமாக இருந்த ஏற்றுமதி செப்டம்பரில் வெறும் 10.4 சதவீதமாக குறைந்திருக்கிறது.

மோட்டராலோவின் மலேஷிய யூனிட்டை சத்யம் வாங்குகிறது

மும்பை : மலேஷியாவில் இருக்கும் மோட்டராலோவின் சாப்ட்வேர் டெவலெப்மென்ட் யூனிட்டை. சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் வாங்குகிறது. ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைப்பதை பொருத்து, அனேகமாக 2008 முடிவிற்குள் இந்த விற்பனை நடந்து விடும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி கம்பெனியான, நியுயார்க் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ், இந்த ஒப்பந்தத்தின் படி, மோட்டராலோவின் 129 ஊழியர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளும். இந்த தகவலை சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் மும்பை பங்கு சந்தைக்கு தெரிவித்திருக்கிறது. என்ன விலைக்கு மோட்டாரோலோ வாங்கப்படுகிறது என்று சொல்லப்படவில்லை. கடும் நிதி சிக்கலில் இருந்து வரும் மோட்டராலோ நிறுவனம், கடந்த மாதம்தான், 2009 க்குள் 800 மில்லியன் டாலர் செலவை குறைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டு, 3000 ஊழியர்களை ( அல்லது 4.5 சதவீதம் ) வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தது.

கச்சா எண்ணெய் விலை உயரவில்லை என்றால் மேலும் உற்பத்தி குறைக்கப்படும் : ஓபக்

சிங்கப்பூர் : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் உயர்ந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 2.80 டாலர் அதிகரித்து 63.84 டாலராகி இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 2.72 டாலர் அதிகரித்து 60.07 டாலராகி இருக்கிறது. இதற்கிடையில் கச்சா எண்ணெய்கான விலை, ஓபக் எதிர்பார்க்கும் 70 டாலரில் இருந்து 90 டாலருக்குள் வரவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் உற்பத்தியை குறைக்க வேண்டியதுதான் என்று ஓபக் அமைப்பின் தலைவர் சாகிப் கேலில் தெரிவித்திருக்கிறார். அல்ஜீரியாவின் எனர்ஜி அமைச்சராகவும் ஓபக்கின் தலைவராகவும் இருக்கும் கேலில், அல்ஜீரியா தலைநகர் அல்ஜியர்ஸில் நடந்த எனர்ஜி இன்டஸ்டிரி செமினாரில் பேசியபோது, நாங்கள் எதிர்பார்க்கும் 70 டாலரில் இருந்து 90 டாலருக்கு விலை வரவில்லை என்றால், இன்னொரு முறை எண்ணெய் உற்பத்தியை குறைக்கவேண்டியதுதான் என்றார். இருந்தா<லும் இதில் எல்லா நாடுகளிடேயும் கருத்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் ; ஏனென்றால் ஒவ்வொரு நாட்டுக்கும் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கிறது என்றார். உலக எண்ணெய் ஏற்றுமதியில் 40 சதவீதத்தை கொண்டிருக்கும் ஓபக் நாடுகள், நவம்பரில் இருந்து எண்ணெய் உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பேரல்களை குறைத்து. 27.3 மில்லியன் பேரல்களை மட்டும் உற்பத்தி செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்

செலுத்தியது ரூ.9.60 கோடி; ரசீது வந்ததோ ரூ.1.70 கோடிக்கு : பஞ்சாப் நேஷனல் பேங்க் மீது எஃப்.ஐ.ஆர்.

பாட்னா : ஒரு பேங்க் இல் இருந்து இன்னொரு பேங்க்கில் கட்டிய பணத்திற்கு சரியான ரசீது அனுப்பப்படாததால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் எக்ஸிபிஷன் ரோட்டில் இருப்பது பஞ்சாப் நேஷனல் பேங்க். அதில் தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி.வங்கி, செப்டம்பர் 19ம் தேதி ரூ.4.70 கோடியும் அக்டோபர் 21ம் தேதி ரூ.4.90 கோடியுமாக மொத்தம் ரூ.9.60 கோடி டெபாசிட் செய்திருந்தது. அனால் பஞ்சாப் நேஷனல் பேங்க்கில் இருந்து ரூ.1.70 கோடிக்கு மட்டுமே ரசீது வந்திருக்கிறது. இது குறித்து பஞ்சாப் நேஷனல் பேங்க்கில் புகார் செய்தபோது, அங்கிருந்து சரியான பதில் வரவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து ஹெச்.டி.எஃப்.சி., பேங்க் போலீசில் புகார் செய்தது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பஞ்சாப் நேஷனல் பேங்க் மீது எஃப்.ஐ.ஆர்.,பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து பதிலளித்த போலீஸ் அதிகாரி சஞ்சய் சிங், பஞ்சாப் நேஷனல் பேங்க்கில் ஆர்.கே.நாராயணன் என்ற ஊழியர்தான் பணத்தை பெற்றிருக்கிறார். ஆனால் அவரை அக்டோபர் 22 ம் தேதிக்கு பிறகு காணவில்லை என்றார். பஞ்சாப் நேஷனல் பேங்க் மீது செக்ஷன் 120பி மற்றும் 420 படி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது

சர்வதேச முதலீட்டு வங்கிகள் இந்தியாவிலும் டிஸ்மிஸ் அதிரடி

மும்பை: இந்தியாவில் உள்ள சர்வதேச முதலீட்டு வங்கிகளும், அதை சார்ந்த நிதி நிறுவனங்களும்,

ஆள் குறைப்பு நடவடிக் கையை ஓசைப்படாமல் நடத்தி வருகின்றன.அமெரிக்காவில் உள்ள பிரபல முதலீட்டு வங்கி கோல்டுமென் சாச்ஸ், இந்திய அலுவலகங்களில் 2,300 பேர் வேலை செய்கின்றனர்.

இதில் 10 சதவீதம் பேரை வேலையில் இருந்து நிறுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதைப்போலவே, ஏற்கனவே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, மெரில் லிஞ்ச் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள் ளன.’சர்வதேச அளவில் எங்கள் நிறுவனத்தில் 10 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் 10 சதவீத ஊழியர்களுக்கு வேலை நீக்க கடிதம் அளிக்கப்படும்’ என்று அதன் இந்திய அதிகாரி கூறினார்.கோல்டுமென் சாச்ஸ் நிறுவனத்துக்கு இந்தி யாவில், பெங்களூரு நகரில் பி.பி.ஓ.,மற்றும் கே.பி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் 2,000 பேர் வேலை செய்கின்றனர். அவர்களில் 200 பேர் நீக்கப்படுகின்றனர்.அமெரிக்காவில் உள்ள மார்கன் ஸ்டான்லி நிறுவனம், அங்கு ஆட்குறைப்பு செய்தாலும், இந்தியாவில் ஆட் குறைப்பு இல்லை என்று கூறிவருகிறது. அதுவும், ஓசைப்படாமல் ஆட்களை குறைத்து வருவதாக தெரிகிறது.அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தலை மையகத்தை கொண்டுள்ள பிடிலிட்டி முதலீட்டு நிறுவனம், இந்த மாதம் 1,300 பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. மியூச்சுவல் பண்ட் சந்தை தொடர்ந்து பலவீனமாக உள்ளதால் அடுத்தாண்டு இன்னும் அதிக அளவில் ஆட்குறைப்பு இருக்கும் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.இந்தியாவிலும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் உள்ள அலுவலகங்களிலும் ஆட்குறைப்பு இருக்கும் என்று உறுதியாக தெரிகிறது.கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 2,642 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டின் இதே காலத்தில் 2,019 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருந்தது. இதே நிலை தொடர்ந்தால், இந்த நிதி ஆண்டில் மொத்த விற்பனை 4,700 கோடியை தாண்டும்.கேரளாவில் ரம் ரக மதுபானம் தான் அதிகம் விரும்பி குடிக்கப்படுகிறது. மொத்த சரக்கு விற்பனையில் இதன் பங்கு 62 சதவீதம். பண்டிகை காலங்களில் மது விற்பனை வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கேரளாவிலேயே எர்ணாகுளத்தில் தான் அதிகமான மது விற்பனையாகிறது. இதற்கு அடுத்த இடங்களை திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் ஆகிய இடங்கள் பிடித்துள்ளது.இவ்வாறு ரெட்டி கூறினார்.இந்த தகவலின் மூலம் உலகிலேயே அதிகமாக மது குடிக்கப்படும் இடங்களில் ஒன்றாக கேரளா உருவெடுத்துள்ளது. கல்வியறிவில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் கேரளா, மது குடிப்பதிலும் முதலிடத்தை பிடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயர உயர பறக்கும் முட்டை விலை

நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை 2.22 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.என்.இ.சி.சி., (தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு) நாமக்கல் மண்டல முட்டை நிர்ணயக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதன் முடிவில், முட்டை விலை நான்கு காசு உயர்த்தி 222 காசாக நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம்: ஹைதராபாத் 216 காசு, விஜயவாடா, தனுகு 210 காசு, நெல்லூர், சித்தூர் 223 காசு, நாமக்கல் 222 காசு, சென்னை 230 காசு, மைசூரு 218 காசு, பெங்களூரு 226 காசு, மும்பை 236 காசு, டில்லி 240 காசு, கோல்கட்டா 235 காசு.

நாமக்கலில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி கிலோ ரூ.36 எனவும், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.44 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

பொன்னி அரிசி விலை தாறுமாறாக உயர்வு

ஈரோடு: கர்நாடக அரிசி வரத்து குறைவு காரணமாக, கடந்த மூன்று மாதங்களில், பொன்னி அரிசி 75 கிலோ மூட்டைக்கு 650 ரூபாய் விலை உயர்ந் துள்ளது.ஈரோடு அக்ரஹாரத்தில் வாரந்தோறும் அரிசி சந்தை கூடுகிறது. இங்கு, ஐ.ஆர்.20, அதிசய பொன்னி, டீலக்ஸ் பொன்னி, டி.பி.டி., ரகம், கல்முத்தான் இட்லி அரிசி, சி.ஆர்.1009 இட்லி உள்ளிட்ட ரக அரிசி விற்கப்படுகிறது.கள்ளக்குறிச்சி, ஆத் தூர், திருச்சி, வெள்ளக் கோவில், காங்கேயம் மற்றும் கர்நாடக மாநிலத் தில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் இருந்து டீலக்ஸ் பொன்னி, பொன்னி அரிசி வருகிறது.

மூன்று மாதங்களுக்கு முன், 75 கிலோ மூட்டை ஐ.ஆர்.20 930 ரூபாய், பொன்னி 1,500, அதிசய பொன்னி 1,050, இட்லி அரிசி (கல்முத்தான்) 950 மற்றும் டீலக்ஸ் பொன்னி 1,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியதால், அரிசி விலை மேலும் அதிகரிக் கத் துவங்கியது. கர்நாடக மாநிலத்தில் ‘லெவி’ அமல்படுத்தப்பட்டுள் ளது. இதனாலும், சந்தைக்கு அரிசி வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. அனைத்து ரக அரிசியும் 75 கிலோ மூட்டை 250 முதல் 650 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்ற பொன்னி 2,150 ரூபாய்க்கும், 1,350 விற்ற அதிசய பொன்னி 1,550 ரூபாய்க் கும், 1,600க்கு விற்ற டி.பி.டி., ரகம் 1,950 ரூபாய்க்கும், 1,250க்கு விற்ற கோ-36 ரகம் 1,350 ரூபாய்க்கும், 1,250க்கு விற்ற ஐ.ஆர்.20 ரகம் 1,350 ரூபாய்க்கும், 1,200க்கு விற்ற இட்லி அரிசி 1,250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதனால், அரிசி வியாபாரம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. சந்தை அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகம் கூறுகையில், ‘நெல் கொள்முதல் விலை உயர் வாலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து அரிசி வரத்து குறைவாலும், அரிசி விலை உயர்ந் துள்ளது. ‘சென்ற மூன்று மாதத்தில் பொன்னி அரிசி மூட்டைக்கு 650 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.’பொன்னி ரக அரிசி கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. சமீபத்தில் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து பொன்னி அரிசி வரத்து குறைந்து விட்டதால், பொன்னி அரிசி விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது’ என்றார்

வர்த்தக விரிவாக்கத்திற்காக பிரான்சில் கம்பெனிகளை வாங்க சத்யம் கம்ப்யூட்டர்ஸ் திட்டம்

மும்பை : ஐரோப்பாவில் பெரிய அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய, இந்தியாவின் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முடிவு செய்திருக்கிறது. இதற்காக பிரான்சில் கம்பெனிகளை வாங்கிப்போட அது திட்டமிட்டிருக்கிறது. ஜெர்மனியில் ஃபிராங்ஃபர்ட் நகருக்கு அருகில் வைஸ்பாடன் என்ற இடத்தில் இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடையே பேசிய சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ஐரோப்பிய தலைவர் பீட்டர் ஹெஜ் இதனை தெரிவித்தார். நாங்கள் பிரான்சில் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார் அவர். ஐரோப்பாவில் பொருளாதாரத்தில் அதிகம் வளர்ந்த நாடாக இருக்கும் ஜெர்மனியிலும் நாங்கள் வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய எண்ணியுள்ளோம் என்றார் பீட்டர். சமீபத்தில்தான் இங்கிலாந்தை சேர்ந்த நிடோர் குளோபல் சொலுஷன்ஸ் மற்றும் சிட்டிஷாப்ட் ஆகிய நிறுவனங்களையும், பெல்ஜியத்தை சேர்ந்த எஸ் அண்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் நிறுவனத்தையும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வாங்கியிருந்தது. வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதத்தை ஐரோப்பாவில் இருந்து பெற வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். ஐரோப்பாவின் சில நாடுகளில் நாங்கள் நுழையும்போது, அங்குள்ள லோக்கல் ஆட்களையே வேலைக்கு வைத்துக்கொள்கிறோம். அந்தந்த நாடுகளில் நாங்கள் கம்பெனிகளையும் வாங்கிக்கொள்கிறோம் என்றார். இப்போதுள்ள நிலையில் சாப்ட்வேர் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது ஐரோப்பாதான். ஐரோப்பாவிலும் குறிப்பாக பிரான்ஸில் நல்ல வளர்ச்சி இருக்கிறது. பிரான்சில் உள்ளவர்கள் அவர்களது சொந்த மொழியிலேயே சாப்ட்வேர் வேலைகளை செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் நாட்டினரையே வேலைக்கு வைத்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள். பிரபல சர்வதேச சாப்ட்வேர் நிறுவனங்களான ஆடோஸ் ஆர்ஜின், சோப்ரா, சோகடி அண்ட் தாலஸ் ஆகியவைகளுக்கு பிரான்சில் கம்பெனிகள் இருக்கின்றன என்றார் பீட்டர் ஹெஜ்

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : நிப்டி 2500 புள்ளிகளுக்கும் கீழே போனது

மும்பை : கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் முன்னேறிய சென்செக்ஸ், இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி, நேற்று அடைந்த புள்ளிகளை இன்று இழந்தன. நிப்டி 2950 புள்ளிகளுக்கும் கீழும் சென்செக்ஸ் 9900 புள்ளிகளுக்கும் கீழும் போய்விட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து கொண்டே வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 696.47 புள்ளிகள் ( 6.61 சதவீதம் ) குறைந்து 9,839.69 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 209.60 புள்ளிகள் ( 6.66 சதவீதம் ) குறைந்து 2938.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி.,பார்தி ஏர்டெல், பெல், டி.எல்.எஃப், இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.,எல் அண்ட் டி, செய்ல் ஆகியவை கடும் சரிவை சந்தித்துள்ள நிறுவனங்கள். இருந்தாலும் ஐ.டி.சி.,மற்றும் சிப்லா பங்குகள் உயர்ந்திருந்தன.செய்ல், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஹின்டல்கோ பங்குகள் 10 – 18 சதவீதம் குறைந்திருந்தது. மெட்டல் இன்டக்ஸ் 8.42 சதவீதத்தை இழந்திருந்தது. உலக அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இங்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மன்மோகன் நிபந்தனை

புதுடில்லி: ”பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை,” என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.வளைகுடா நாடுகளுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நாடு திரும்பினார். திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:கச்சா எண்ணெய் விலை முன் பேரல் ஒன்றுக்கு 147 டாலராக இருந்தது தற்போது, 60 டாலராகக் குறைந்திருக்கிறது. ஆனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டீசல், கெரசின் மற்றும் சமையல் காஸ் விற்பனையில் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், எரிபொருள் விற்பனையில் நஷ்டத்தைச் சந்திக்காத சூழ்நிலை உருவாகும் வரை பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படாது.எண்ணெய் நிறுவனங்கள் விலை குறைப்பை தாங்கிக் கொள்ளும் நிலைமை வந்தால், அதுவே பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க சரியான தருணம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லாபம் பார்த்தாலும், கெரசின், டீசல் மற்றும் சமையல் காஸ் விற்பனையில் தினமும் 155 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

அரசு ஓரளவிற்குத் தான் மானியம் வழங்க முடியும் என்பதால், சுமை உருவாகும் போது அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் தான் தாங்க வேண்டும்.குறைந்த விலையில் பெட்ரோலியப் பொருட்களை வழங்குவதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் பாதியை, எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் அரசு சமாளிக்கிறது. மேலும், இழப்பில் மூன்றில் ஒரு பங்கு ஓ.என்.ஜி.சி., போன்ற நிதிவளம் மிக்க நிறுவனங்களின் உதவியால் சரி செய்யப்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.எண்ணெய் நிறுவனங்கள் பெட் ரோல் விற்பனையில், லிட்டர் ஒன்றுக்கு 4.12 ரூபாய் லாபம் அடைகின்றன. அதே நேரத்தில், டீசல் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 0.96 பைசாவும், கெரசின் விற்பனையில் ரூ.22.40ம், சமையல் காஸ் விற்பனையில் ரூ.343.49ம் நஷ்டத்தைச் சந்திக்கின்றன.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 7,047 கோடி ரூபாயும், பாரத் பெட்ரோலியம் 2,625 கோடி ரூபாயும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 3,218 கோடி ரூபாயும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

ஆள்குறைப்பு நடவடிக்கையில்
எல் & டி இன்போடெக் நிறுவனம்
பொறியியல் துறையில் நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் துணை நிறுவனம் எல் & டி இன்ஃபோடெக் ஆகும். சாஃப்ட்வேர் சேவையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், அதன் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, இதுவரையில்100 ஊழியர்களை தானாக முன்வந்து பதவி விலகும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் மொத்தம் 10,000 பேர் பணிபுரிகிறார்கள். இதில், பதவி விலகுபவர்களின் எண்ணிக்கை 5 சதவீதமாக (500 பேர்) உயரும் என கூறப்படுகிறது. இந்த ஆள் குறைப்பு நடவடிக்கைகள் சென்னை, மும்பை மற்றும் பூனா உள்ள இதன் மையங்களில் நடைபெற உள்ளது.
நாட்டிலுள்ள ஐ.டி. நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் சேவையை வழங்கி வருகின்றன. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் தேக்க நிலையால், இத்துறை நிறுவனங்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்டு வந்தது. அதேசமயம், தயாரிப்புத் துறை நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் சேவை அளித்து வரும் எல் & டி இன்போடெக் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் நாட்டின் பத்தாவது மிகப் பெரிய நிறுவனமாக எல் & டி இன்ஃபோடெக் நிறுவனம் திகழ்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில்
முன்னணி இந்திய நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சி மிகவும் சரிவு
ராமகிருஷ்ண கசேல்கர்
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்திய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லை. சென்ற 2007&ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி&மார்ச்) நிறுவனங்கள் சிறப்பான அளவில் நிகர லாபம் ஈட்டியிருந்தன. ஆனால் அதற்கு பின்னர், தற்போது வரை, அனைத்து காலாண்டுகளிலும் இந்திய நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
பொறியியல் சாதனங்கள், ரசாயனம், உலோகம், தகவல் தொழில்நுட்பம், சிமெண்டு, மோட்டார் வாகனம், வாகன பாகங்கள் மற்றும் சேவை அளிப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலை உடனடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும், இன்னும் சிறிது காலத்திற்கு இதே நிலைதான் நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க பொருளாதாரம்
சர்வதேச நிதிச் சந்தைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரத்தில் தேக்க நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவில் தனிநபர் செலவிடும் வருவாய் குறைந்துள்ளது. இதனையடுத்து சென்ற அக்டோபர் மாதத்தில் அந்நாட்டில் சில்லரை வர்த்தக துறையின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேலையின்மை, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை சீர் செய்யும் வகையில், உலகின் அனைத்து மத்திய வங்கிகளும் பணப்புழக்கத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் இந்த நடவடிக்கைகள் இதுவரை போதிய அளவு பலன்களை அளிக்கவில்லை.
விரிவாக்க நடவடிக்கை
சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால் இந்திய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வந்தது. நிறுவனங்கள் குறைந்த வட்டியில் அதிக அளவு நிதியை திரட்டிக் கொள்ள முடிந்தது. இதனால் நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக பெரிய அளவில் மூலதன செலவினை மேற்கொண்டன. சர்வதேச அளவில் வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளையும் அதிக எண்ணிக்கையில் மேற்கொண்டன.
முன்னணி நிறுவனங்கள்
உதாரணமாக நாட்டின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், ண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டீ.எல்.எஃப்., சுஸ்லான் எனர்ஜி மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ ஆகியவை கணிசமான அளவில் மூலதன செலவை மேற்கொண்டன. தற்போது நிதி திரட்டுவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க திட்டங்களை ஒத்தி வைத்தும், கைவிட்டும் வருகின்றன.
இதன் பாதிப்புகளை நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டிற்கான (ஜூலை&செப்டம்பர்) நிதி நிலை முடிவுகள் நன்கு வெளிப்படுத்துகின்றன. 1,214 இந்திய நிறுவனங்களின் நிகர லாபம் சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 3 சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 10 காலாண்டுகளின் நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சி இந்த அளவிற்கு சரிவினைக் கண்டுள்ளது இதுவே முதன் முறையாகும். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களுள் வங்கி, நிதிச் சேவை மற்றும் எண்ணெய் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
செயல்பாட்டு லாபம்
1,214 நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வரம்பு, கடந்த 20 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 15.6 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, மூலப்பொருள்களுக்கான செலவினம் உயர்வதுடன் நிறுவனங்களின் விற்றுமுதல் வளர்ச்சியும் குறைந்து விடுகிறது. எனவே நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வரம்பு தற்போது சரிவடைந்துள்ளது என்பது இயற்கையானதொன்றுதான்.
சென்ற 2007&ஆம் ஆண்டின் இறுதி வரையில், இந்திய நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சிக்கு இதர வருவாய் பெரிதும் துணை புரிந்தது. ஆனால் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனங்களின் இதர வருவாய் மிகவும் குறைந்து போயுள்ளது. இதனையடுத்து, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்&ஜூன்) 16 சதவீதமாக இருந்த நிறுவனங்களின் மொத்த லாபம் இரண்டாவது காலாண்டில் 10 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
கடன் சந்தை
உலக அளவில் கடன் சந்தையிலும் கடும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து காணப்படுகிறது. அதே சமயம் அன்னிய நிதி நிறுவனங்களின் இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொண்டுள்ள முதலீடுகளை பெருமளவில் விலக்கிக் கொண்டு வருகின்றன. இதனால் டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்து வருகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய நிறுவனங்களுக்கு வட்டிச் சுமை 86 சதவீத அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது.
இரண்டாவது காலாண்டில் சிமெண்டு, மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள், மருந்து மற்றும் ரசாயனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் லாப வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் தொலைத் தொடர்பு, விருந்தோம்பல், மருத்துவம் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவை துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் லாப வளர்ச்சி நன்கு இருந்தது. இந்த நிறுவனங்களும், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அவற்றின் நிகர லாப வளர்ச்சியில் சரிவினைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: