7,000 பேரை வீட்டுக்கு அனுப்ப அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் திட்டம்

நியுயார்க் : பிரபல அமெரிக்க கிரிடிட் கார்டு நிறுவனமான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், உலகம் முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 7,000 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறது. அதாவது அவர்களின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை குறைக்கிறது. இதன் மூலம் அது, 2009ல் 1.8 பில்லியன் டாலர்கள் செலவை குறைத்து விட முடிவு செய்திருக்கிறது. மே<லும் அதன் நிர்வாகிகளின் சம்பள உயர்வை நிறுத்தவும், புது ஊழியர்களை சேர்ப்பதை நிறுத்தவும், புது முதலீட்டை நிறுத்தவும், கன்சல்டில் டிராவல் மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஏற்படும் செலவினங்களை நிறுத்தவும் முடிவு செய்திருக்கிறது. இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இன் லாபம் 24 சதவீதம் குறைந்திருந்தது. மேலும் கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இதுவரை கொடுத்து வந்த கிரிடிட் லிமிட்டையும் அது குறைத்திருக்கிறது

அமெரிக்காவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை, கடந்த 14 வருடங்களில் இல்லாத அளவு உயர்ந்தது

வாஷிங்டன் : உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நாடாக இருக்கும் அமெரிக்காவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 14 வருடங்களில் இல்லாத அளவு அதிகம். மார்ச் 1994 க்குப்பின் இப்போதுதான் இந்த அளவுக்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அக்டோபரில் மட்டும் அங்கு 2,40,000 பேர் வேலை இழந்திருப்பதாக அமெரிக்க தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் தொடர் சரிவு நிலையால், அங்கு கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வேலை இழப்பு நடந்துகொண்டே இருக்கிறது. மொத்தமாக கடந்த 10 மாதங்களில், அதாவது 2009 ஜனவரியில் இருந்து அக்டோபருக்குள் 12 லட்சம் பேர் வேலையை இழந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கருத்து தெரிவிக்கையில்,பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை நாம் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம். உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் மையமாக நாம் இருக்கிறோம். நாடு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் தொழில் அதிபர்களால் எளிதாக பணத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ, புதிய முதலீடு செய்யவோ, புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை ஃபெடரல் அரசு எடுத்து வருகிறது. இருந்தாலும் உடனடியாக இதனை சரிசெய்து விட முடியாது; கொஞ்ச காலம் ஆகலாம் என்றார் புஷ்

25 பைலட்களை வீட்டுக்கு அனுப்பியது ஜெட் ஏர்வேஸ்

மும்பை : தொடர்ந்து கடும் நஷ்டத்தில் மிதந்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான கம்பெனியான ஜெட் ஏர்வேஸ், வெளிநாடுகளில் இருந்து வந்து அவர்களிடம் பைலட்டாக பணியாற்றி வந்த 25 பேரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. இதில் போயிங் 737 விமானத்தை ஓட்டி வந்த பைலட்டும் அடங்குவார். அவர்களுக்கு ஏற்பட்டு வரும் கடும் நஷ்டத்தை ஓரளவு குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். வெளிநாட்டில் இருந்து வந்து இவர்களிடம் வேலை பார்த்து வந்த பைலட்கள், மாதம் 15,000 டாலரில் இருந்து 18,000 டாலர் வரை ( சுமார் ரூ.7,05,000 இலிருந்து ரூ. 8,46,000 வரை ) சம்பளம் பெற்று வந்தனர். இது தவிர ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, சொந்த நாட்டுக்கு சென்று வர பிசினஸ் கிளாசில் பயண டிக்கெட் போன்ற பல வசதிகளையும் பெற்று வந்தனர். ஏற்கனவே தீபாவளியை ஒட்டிய நாட்களில் ஜெட் ஏர்வேஸ், 400 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு, பின்னர் வந்த கடும் எதிர்ப்பினால் அவர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது.ஜெட் ஏர்வேஸ் தவிர இன்னொரு தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கடந்த மாதத்தில் பயிற்சி விமானிகளுக்கான சம்பளத்தை குறைத்தது. செலவை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கையை அது எடுத்ததாக அப்போது சொல்லப்பட்டது.

2010 – 11 க்குள் 10 கோடி மொபைல் சந்தாதாரர்களை சேர்க்க பி.எஸ்.என்.எல்.,திட்டம்

கோல்கட்டா : தற்போது இருக்கும் 39.17 மில்லியன் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கையை, 2010 – 11 ( ஏப்ரல் – மார்ச் ) க்குள் 100 மில்லியனாக உயர்த்த பி.எஸ்.என்.எல்.,திட்டமிட்டிருக்கிறது என்று அதன் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் குல்தீப் கோயல் தெரிவித்தார். வரும் மார்ச் முடிவிற்குள் 7 – 8 மில்லியன் சந்தாதாரர்களை சேர்க்கவும் 2009 – 10 க்குள் மேலும் 25 மில்லியன் சந்தாதாரர்களை சேர்க்கவும் பி.எஸ்.என்.எல்.,திட்டமிட்டிருக்கிறது. கோல்கட்டாவில் நடந்த பி.எஸ்.என்.எல்.,லின் சி.டி.எம்.ஏ.,டேட்டா கார்டு அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய கோயல் இதனை தெரிவித்தார். 1000 க்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட கிராமங்களில், குளோபல் சிஷ்டத்தை கொண்ட மொபைல் கம்யூனிகேஷன் சர்வீஸை கொடுக்க, அது 93 மில்லியன் லைன்களை பெற இருக்கிறது. குளோபல் சிஸ்டத்திற்காக எரிக்ஸன், நோக்கியா சீமன்ஸ் நெட்வொர்க்ஸ், அல்காடெல் – லூசென்ட், நார்டெல் நெட்வொர்க்ஸ், ஹூவாவி டெக்னாலஜி, மற்றும் இசட்.டி.இ போன்ற நிறுவனங்கள் சாதனங்களை சப்ளை செய்ய முன்வந்துள்ளன. இருந்தாலும் அதன் டெக்னாலஜி குறித்த பரிசீலனை இப்போது நடந்து வருகிறது. 3 ஜி சர்வீஸ் குறித்து அவர் சொன்னபோது, அது முதலில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசாவில் கொடுக்கப்படும். ஜனவரியில் கொடுக்க இருக்கும் 3 ஜி சர்வீஸ்காக, நாட்டின் மொத்த மொபைல் சந்தாதாரர்களில் 2 சதவீதத்தினர் முதலில் மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எஜூகாம்ப், இன்டெல் இணைந்து மாணவர்களுக்கான பயிற்று முறை கம்ப்யூட்டர் வெளியீடு

புதுடில்லி : எஜூகாம்ப் சொலுஷன் லிமிடெட், ஐ.டி.கம்பெனியான இன்டலுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான பயிற்று முறை கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இதை படிப்படியாக அறிமுகப்படுத்த எஜூகாம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளது. எஜூகாம்ப் அறிமுகப்படுத்திய இந்த புதிய எஜூகாம்ப் ஓ3 புரோகிராம்படி, ஒவ்வொரு மாணவரும், இன்டல் புராஸசர் பொருத்தப்பட்ட ஒரு கம்ப்யூட்டருடன் தொடர்பு படுத்தப்பட்டிருப்பார். அதனுடன் சேர்ந்து ஒவ்வொரு மாணவரும் பாடம் படிக்க முடியும் என்று எஜூகாம்ப் மேலாண் இயக்குநர் சாந்தனு பிரகாஷ் தெரிவித்தார். இந்த ஓ3 புரோகிராம் இப்போது இந்தியாவில் 8 பள்ளிகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வருடத்திற்குள் 50 முதல் 75 பள்ளிகளில் இதை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்

ரூ.1.17 கோடி விலையுள்ள ஜெர்மன் ஆடி கார் இந்தியாவில் அறிமுகம்

புதுடில்லி : ஜெர்மனியின் ஆடம்பர கார் தயாரிப்பாளரான ஆடி, ஆர் 8 என்ற அதன் புது மாடல் சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை புதுடில்லியில் நேற்று அறிமுகப்படுத்தியது. 4,163 சிசி, 420 பிபி இஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார், மணிக்கு 301 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடியது. புறப்பட்ட 4.6 வினாடியில் 100 கி.மீ.வேகத்திற்கு வந்து விட முடியும். அலுமினிய பாடியை கொண்டிருக்கும் இந்த கார், ஒரு ஃபோர் வீல் டிரைவ் கார். மேனுவல் சிக்ஸ் ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது. இதன் விலையை கேட்டால்தான் தலை சுற்றும். ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் ( எக்ஸ் – ஷோரூம், டில்லி ). இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சூப்பர் ஸ்பேர்ட்ஸ் கார், 2015 ம் வருடவாக்கில் மிகப்பிரபலமான மாடலாக இருக்கும் என்று ஆடி நிறுவனம் கூறுகிறது. இது இந்திய வாகன சந்தையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது; வாடிக்கையாளர்கள் அப்போது அதை தெளிவாக உணர்வார்கள் என்று ஆடி இந்தியாவின் மேலாண் இயக்குனர் பெனாய்ட் டயர்ஸ் தெரிவித்தார். இந்த காரை பற்றி இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு வந்த ஏராளமான ஆர்வமான விசாரணைகளால் தான் நாங்கள் இதை இங்கு அறிமுகப்படுத்துகிறோம் என்றார் அவர். ஆடிக்கு, இந்திய மார்க்கெட் ஒரு சிக்கலான மார்க்கெட்தான். இருந்தாலும் நாங்கள் இங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்துக்கொள்ள முயற்சி செய்வோம். இதனையடுத்து எங்களது டீலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறோம். சர்வதேச அளவில் நாங்கள் வெளியிடும் எங்களது புத்தம்புது மாடல்களை இந்தியாவில் உடனுக்குடன் அறிமுகப்படுத்துவோம் என்றார் அவர். ஆடி க்கு இப்போது டில்லி, குர்காவ்ன், சண்டிகர், மும்பை, பூனே, பெங்களுரு, ஐதராபாத், அகமதாபாத், லூதியானா, சென்னை, கொச்சி மற்றும் கோல்கட்டாவில் டீலர்கள் இருக்கிறார்கள்

இந்திய ஆட்டோமொபைல் தொழிலில் கடும் பாதிப்பு : உற்பத்தி குறைப்பு

புதுடில்லி : உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் தேக்க நிலையால், இந்திய தொழில்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் மற்றும் கமர்சியல் வாகன விற்பனை கடந்த சில மாதங்களில் அதிகம் சரிந்திருக்கிறது. உள்நாட்டு விற்பனையிலும் ஏற்றுமதியிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான எல்லா வாகன உற்பத்தி கூடங்களிலும் நிறைய வாகனங்கள் விற்பனைக்கு அனுப்பப்படாமல் தேக்கமடைந்திருக்கின்றன. டீலர்களிடமும் வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த நிறுவனங்களுக்கு இன்வென்ட்ரி லாஸ் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இந்திய வாகன உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஜாம்ஷெட்பூரில் இருக்கும் அதன் பெரிய வாகன உற்பத்தி கூடத்தை 3 நாட்களுக்கு மூடி விட்டது. நவம்பர் 6 ம் தேதியில் இருந்து 8 ம் தேதி வரை அது மூடப்பட்டிருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்து விட்டது. அதே போல் பூனே யில் இருக்கும் அதன் கமர்சியல் வாகன உற்பத்தி கூடமும் ஆறு நாட்களுக்கு மூடப்படுகிறது. நவம்பர் 21 ம் தேதியில் இருந்து 26 ம் தேதி வரை அது மூடப்பட்டிருக்கும். லக்னோவில் இருக்கும் அதன் உற்பத்தி கூடமும் நவம்பர் 10 ம் தேதியில் இருந்து 15 ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்திருக்கிறது. இருந்தாலும் அதன் பயணிகள் வாகன தயாரிப்பு குறைக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபரில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியாலும், அதிக வட்டியாலும் வாகனங்களை வாங்க இருந்தவர்கள், வாங்கும் முடிவை தள்ளி வைத்திருக்க வேண்டும். எனவே விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது. டாடாவின் வாகன விற்பனை அக்டோபரில் 20 சதவீதம் குறைந்திருக்கிறது. ஏற்றுமதியும் 16 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன தயாரிப்பாளரான அசோக் லேலாண்டும் வாரத்திற்கு 3 மட்டுமே வேலை திட்டத்தை அறிவித்திருக்கிறது.மகிந்திரா அண்ட் மகிந்திராவின் விற்பனையும் 17.81 சதவீதம் குறைந்திருக்கிறது. மாருதி சுசுகி விற்பனை 8 சதவீதமும், பஜாஜ் ஆட்டோவின் விற்பனை 34.01 சதவீதமும் குறைந்திருக்கிறது.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.7 வரை உயர்த்த உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்

சேலம்: ‘கலப்பு தீவனம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பசும்பால் லிட்டருக்கு நான்கு ரூபாய், எருமைப் பாலுக்கு ஏழு ரூபாய் வரை உயர்த்தி கொடுக்க வேண்டும்’ என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல், பொதுச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் கூறினர்.அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 20 மாதத்தில் மாடுகளுக்கு வழங்கப்படும் தனியார் கலப்பு தீவனம் விலை, 46 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் கலப்பு தீவனம், 28 சதவீதம் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும், தேவைக்கேற்ப வழங்கப்படுவதில்லை.தற்போது, உயர்த்தப்பட்ட பிறகு பசும்பால் லிட்டருக்கு ரூ.13.54 ஆக கிடைத்தது. கலப்பு தீவன விலை 46 சதவீதம் உயர்ந்த நிலையில், அரசு கொடுத்துள்ள பால் விலை உயர்வோ 17 சதவீதம் மட்டுமே. உலர் பசுந்தீவன விலை உயர்வு, ஆட்கள் கூலி, அதிகரிக்கப்பட்ட செலவினங்கள் ஆகியவற்றால் பால் உற்பத்தித் தொழிலை, உற்பத்தியாளர்கள் புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பசும்பால் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தி ரூ.17.54 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு 18 ரூபாயிலிருந்து ஏழு ரூபாய் உயர்த்தி 25 ரூபாயாகவும் வழங்க வேண்டும்.தீவன விலையேற்றத்தால், ஒரு லிட்டருக்கு, இரண்டு ரூபாய் வீதம் உற்பத்தியாளருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. பால் கூட்டுறவு மாநில இணையம், உற்பத்தியாளர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து, தற்போது வரை, வழங்க வேண்டிய பாக்கிக் தொகை ரூ.16 கோடியை தாண்டியுள்ளது.பால் பவுடர், வெண்ணெய், நெய் போன்றவற்றுக்கு, வெளிமாவட்ட மார்க்கெட் விலையில் இருந்து, கூடுதலாக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால், மாநில இணையம் பல கோடி ரூபாயை ஈட்டலாம்.பால் உற்பத்தியாளர்களை வாழவைக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பால் உற்பத்தியில் இரண்டாமிடம் வகித்து வந்த தமிழகம், தற்போது, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. கர்நாடகா இரண்டாவது இடத்தை பிடித் துள்ளது. எப்போதும் போல் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு பால் உற்பத்தியா ளர் சங்க நிர்வாகிகள் கூறினர்.

அதிகாரிகள் சுருட்டல்?: சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல் கூறுகையில், ‘டாப்செட்கோ திட்டத்தின் கீழ், கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 500 மாடுகள் வாங்க கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி பகுதியில் மட்டும் ஆயிரம் மாடுகள் வாங்க விவசாயிக்கு 4 சதவீத வட்டியில், ஒரு மாடுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் கடன் வழங்கப்பட்டது. முன் பணமாக விவசாயிகளிடம் இரண்டாயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. ரசீது ஏதும் வழங்காமல் ரூ.750ஐ மட்டும் கணக்கில் காட்டி விட்டு, ஆயிரம் மாடுக்கு கடன் வழங்கியதில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் வரை சில அதிகாரிகள் சுருட்டி விட்டனர்’ என்றார்.

தமிழகத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்கீடு: மத்திய அரசு நிபந்தனை

சென்னை: ‘தமிழகத்துக்கு ஆண் டுக்கு 36 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கொள்முதல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு மேல் கொள் முதல் செய்தால், தேவைப்படும் அரிசியை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கும்’ என, மத்திய அமைச்சர் சரத்பவார்

உறுதியளித்துள்ளார்.உணவுத் துறை அமைச்சர் வேலு, மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ராஜா, டில்லியில் நேற்று காலை மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவாரை சந்தித்துப் பேசினர். மத்திய உணவுத் துறை செயலர் அல்கா சிரோஹி, தமிழக உணவுத் துறை செயலர் சண்முகம் உடனிருந்தனர்.அப்போது, தமிழகத் தில் அரிசி விலை வெளிச்சந்தையில் அதிகரித்து வருவதால் பொது வினியோகத் திட்டத்திலும் அரிசியின் நுகர்வு அதிகரித்துள்ளதால், மத்திய தொகுப்பில் இருந்து அரிசி ஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டுமென அமைச்சர் வேலு வலியுறுத்தினார்.

மத்திய அரசின் உத்தரவை எதிர்நோக்கி 20 சதவீத ஈரப்பதமுடைய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.நெல் கொள்முதலில் மத்திய அரசின் ஆதார விலையை விட மாநில அரசு கூடுதல் கொள்முதல் விலை வழங்குவதால் இதுவரை 2.50 லட்சம் டன் நெல் குறுவை பருவத்திலேயே கொள்முதல் செய்யப் பட்டுள்ளதால், கூடுதல் அரிசியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் கோரினர்.மத்திய அமைச்சர் சரத்பவார், ‘தமிழகத்துக்கு 36 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் கொள்முதல் செய்ய 13 லட்சம் டன் அரிசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கூடுதலாக தமிழகம் கொள்முதல் செய்தால், கூடுதலாக தேவைப்படும் அரிசியை ஈடு செய்ய மத்திய அரசு அனுமதிக்கும். தற்போது, கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 20 சதவீத ஈரப்பதம் வரை மத்திய அரசு அனுமதிக்கும்’ என்று உறுதியளித்தார்.

முதல்வரிடம் ரூ.14 கோடி சிப்காட் ஒப்படைப்பு

சென்னை: சிப்காட் நிறுவனம், தனது ஆதாயப் பங்குத் தொகையான, 14 கோடியே 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் நேற்று வழங்கியது.இதுதொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு:சிப்காட் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய தொழில் வளாகங்கள், தொழிற் பூங்காக்கள், தொழில் மையங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் பல பெரிய தொழிற்சாலைகள் ஏற்பட உதவி வருகிறது. சிப்காட் நிறுவனம், 2007-08ம் நிதியாண்டில், முந்தைய ஆண்டை விட அதிகமாக 364 கோடியே 93 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி, நிகர லாபமாகிய 96 கோடியே 66 லட்சம் ரூபாயில், 25 சதவீத ஆதாய பங்குத் தொகையை தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்தது.

அதன்படி, 14 கோடியே 48 லட்சம் ரூபாய்க்குரிய காசோலையை முதல்வரிடம் சிப்காட் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கோவிந்தன் நேற்று வழங்கினார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில்
முக்கிய ஆறு துறைகளின் வளர்ச்சி 5.1%&ஆக அதிகரிப்பு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
சென்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டின் முக்கிய ஆறு துறைகளின் உற்பத்தி 5.1 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறைகளின் வளர்ச்சி ஆகஸ்டு மாதத்தில் 2.3 சதவீதமாக இருந்தது.
ஆறு முக்கிய துறைகளில் நிலக்கரி மற்றும் சிமெண்டு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி முறையே 10.7 சதவீதம் மற்றும் 7.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இவ்விரு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி சென்ற ஆண்டின் இதே மாதத்தில் முறையே 6.3 சதவீதம் மற்றும் 5.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருள்கள், நிலக்கரி, மின்சாரம், சிமெண்டு மற்றும் உருக்கு ஆகியவை முக்கிய ஆறு துறைகளாகும்.
சென்ற செப்டம்பர் மாதத்தில், மேற்கண்ட ஆறு துறைகளுள், மின்சார துறையின் உற்பத்தி 4.4 சதவீதமாக (4.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. அதேசமயம், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருள்கள் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி 6.9 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், உருக்குத் துறையின் வளர்ச்சி 9.5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது.

வாகனங்கள் விற்பனை குறைந்து வருவதால்
மோட்டார் வாகன பாகங்கள் உற்பத்தி 30 சதவீதம் குறைந்தது
லிஜி பிலிப்
மும்பை
கார்கள், வர்த்தக வாகனங்கள், டிரக்குகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை சரிவடைந்து வருவதால், மோட்டார் வாகன நிறுவனங்கள் தயாரிப்பை குறைத்து வருகின்றன. இதனையடுத்து, மோட்டார் வாகன பாகங்களை தயாரித்து வழங்கி வரும் நிறுவனங்களும் அவற்றின் உற்பத்தியை 25&30 சதவீதத்திற்கு மேல் குறைத்துள்ளன. இதனால், வரும் காலாண்டுகளில் இத்துறை நிறுவனங்களால் ஈட்டப்படும் லாபம் குறைந்து விடலாம் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது. இதனால், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி வேகம் குறைய வாய்ப்புள்ளது. இத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக உற்பத்தியை அதிகரித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதாரம்
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டு வருவதால், அதன் தாக்கம் இந்திய வர்த்தகத்திலும் எதிரொலித்துள்ளது. இதனையடுத்து, சென்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 10 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டிலும் கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் வாங்குவதற்கான கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. நாட்டில் பணவீக்க விகிதமும் இரட்டை இலக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், தனிநபர் செலவிடும் வருவாய் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் சென்ற அக்டோபர் மாதத்தில் கார்கள், பயன்பாட்டு வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனை 9 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இரண்டாவது காலாண்டில்…
நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் கார்கள், டிரக்குகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்த மோட்டார் வாகனங்கள் விற்பனையில் இரு சக்கர வாகனங்களின் பங்களிப்பு 77 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டிலும் இவற்றின் விற்பனை இதனையும் விட அதிகமாக குறையும் என்றும் நவம்பர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனையில் மேலும் சரிவு ஏற்படும் எனவும் மும்பையைச் சேர்ந்த மோட்டார் வாகன நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னணி நிறுவனங்கள்
இதுபோன்ற காரணங்களால் தான் இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனமும் அதன் தொழிற்சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு (நவம்பர் & டிசம்பர்) வாரத்திற்கு மூன்று தினங்கள் மட்டுமே செயல்படும் என அறிவித்துள்ளது. சென்ற ஆண்டின் அக்டோபர் மாதத்தை காட்டிலும் இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை மொத்தத்தில் 50 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோன்று, மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகித்து வரும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலையின் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேவைப்பாடு
இதனையடுத்து, மேற்கண்ட நிறுவனங்களுக்கு மோட்டார் வாகன பாகங்களை தயாரித்து வழங்கி வரும் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நாட்டின் மிகப் பெரிய மோட்டார் வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஆம்டெக் ஆட்டோ நிறுவனமும் அதன் மொத்த உற்பத்தி திறனில் 50&55 சதவீத அளவிற்கே உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.
மோட்டார் வாகனங்களுக்கு ஸ்டீயரிங் தயாரித்தளித்து வரும் டெல்லியைச் சேர்ந்த சோனாகோயா நிறுவனமும் தேவைப்பாட்டில் ஏற்படும் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுரிந்தர் கபூர் கூறும்போது, “தற்போதுள்ள நிலையில் நிறுவனம் அதன் உற்பத்தியை குறைக்கவில்லை. அதேசமயம், தேவைப்பாட்டின் அடிப்படையில் உற்பத்தியை குறைப்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். இதேபோன்று ரிக்கோ ஆட்டோ நிறுவனமும் சென்ற மாதத்தில் அதன் உற்பத்தியை குறைத்துள்ளது.
பாதிப்பு
மோட்டார் வாகன பாகங்கள் தயாரிப்பில் இந்தியாவில் மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை. உலக நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவால் பணப்புழக்கம் குறைந்ததையடுத்து சர்வதேச அளவில் வாகனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது என பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் தலைவர் பாபா கல்யாணி தெரிவித்தார்.
கார்கள் தயாரிக்க உருக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. உருக்கு தேவைப்பாடு குறைந்து வருவதையடுத்து, உருக்கு உற்பத்தியின் உலக அளவில் முதலிடத்தில் உள்ள ஆர்செலர் மிட்டல் நிறுவனமும் அதன் உருக்கு உற்பத்தியை குறைக்க போவதாக சென்ற புதன்கிழமை அன்று அறிவித்துள்ளது. ஆக, மோட்டார் வாகனங்கள் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெரிந்தே செய்யும் தவறு!
 
கடந்த 17 ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்ட எச்சரிக்கைகள் அனைத்தும் இப்போது உண்மையாகி வருகின் றன. புதிய பொருளாதாரக் கொள்கை அறிவிக்கப்பட்ட நேரத்தில் எழுப்பப்பட்ட முதலாவது எச்சரிக்கை, அரசின் தலையீடுகளை முழு மையாகத் தளர்த்துவதும், உலகமயம் என்கிற பெயரில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் நமது பொருளாதாரத்தை இணைப்பதும், நம்மைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதுதான்
வளர்ச்சி அடைந்த நாடுகள் பொருளாதாரச் சரிவுகளை நேரிடுவது போல, வளரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு அதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சக்தி கிடையாது என்பதுதான் அந்த எச்சரிக்கைக்குக் காரணம்
அமெரிக்காவில் அரசின் தலையீடு இல்லாததால் ஒரு சில தனி யார் வீட்டுவசதி நிறுவனங்களும், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்த தவறுகளுக்கும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் சம் பந்தா சம்பந்தம் இல்லாமல் இந்தியாவும் பலியாக்கப்பட்டிருக்கிறது
இதுதான் உலகமயமாக்கலின் வேதனை தரும் தாக்கம். அமெரிக்கா வின் தோளைப் பிடித்துக் கொண்டிருக்க நாம் முடிவு செய்ததால், அந்த நாடு ஆட்டம் காணும்போது நாமும் ஆட்டம் காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது
தன்னுடைய நாட்டு வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் திவாலாகத் தொடங்கி, அந்த வங்கிகளுக்குக் கடன் கொடுத்திருந்த நிதிநிறுவ னங்கள் மூழ்கத் தொடங்கி, அந்த நிதிநிறுவனங்களில் முதலீடு செய் திருந்த அப்பாவிப் பொதுமக்கள் தங்களது சேமிப்புகளை இழக்க நேரிட்ட நிலையில், தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் அமெரிக்க அரசு தலையிட்டு, அந்த நிதி நிறுவனங்களுக்குப் பண உதவி அளித்து மக்கள் மத்தியில் எழுந்த பீதியையும், பொருளாதாரத் தேக்கத்தையும் களைய முற்பட்டது. அப் படி எதுவுமே நடக்காமல், இந்தியாவில் திடீரென்று விலைவாசி உயர் கிறது, பங்குச் சந்தை சரிகிறது, ஏற்றுமதி குறைகிறது, அரசு தவிக்கி றது
வரைமுறை இல்லாமல் அன்னிய முதலீடுகளைப் பங்குச்சந்தை யில் அனுமதித்தால், எப்போதுமே நாம் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் முப்பெ ரும் பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங் – சிதம்பரம் – அலுவாலியா குழுவினர் கேட்க மறுத்தனர். அவரவர் நாட்டில் பிரச் னைகள் வரும்போதோ, நமது நாட்டின்மீது அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழக்கும்போதோ அல்லது வேண்டுமென்றே நமது நாட் டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று நினைத் தாலோ, குறுகிய காலத்தில் அன்னிய முதலீடுகளைத் திருப்பி எடுப்ப தன் மூலம் நமது பொருளாதாரம் சிதைக்கப்படும் ஆபத்து இருப்ப தைத் தெரிந்தும் தெரியாததுபோல மன்மோகன்சிங்கும் சகாக்களும் இருந்தது ஏன்? புரியவில்லை
பங்குச்சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரங்கள் எல்லாமே, சூதாட்ட மனப்போக்குள்ள பங்குத்தரகர்களின் கையில் அகப்பட்டுத் தவிக்கும் போக்கை உடையவை. அதனால்தான் நமது பழைய பொருளாதாரக் கொள்கை சேமிப்பின் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது. மக்கள் ஊதாரித்தனமாகச் செலவிடுவதை ஆதரிக்காமல், தனிநபர் சேமிப்பு, அரசுத் தரப்பில் ஆஸ்தி அதிகரிப்பு, பொதுச் சொத்துகளை அதிகப்படுத்தும் முதலீடுகள் என்று முந்தைய பொருளாதார நிபுணர்கள் திட்டமிட்டனர்
மக்கள், அரசு வங்கிகளிலும், அரசின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தி லும், அரசு நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும், தங்கத்தி லும் முதலீடு செய்தனர். இந்த முதலீடுகள் அரசின் வளர்ச்சித் திட்டங் களுக்குப் பயன்பட்டன. இப்போது, தனியார் காப்பீட்டு நிறுவனங் கள், பங்குச்சந்தை என்று மக்களின் முதலீடுகள் தனியார் நிறுவனங்க ளின் லாபத்தைப் பெருக்க வழி வகுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான், உலகளாவிய தாக்கங்கள் நம்மைத் தள்ளாட வைக்கின்றன
வங்கிகள் அதிகமாகக் கடன் வசதி அளித்துப் பொருளாதாரம் தேக் கமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நிதியமைச்சகத் தின் இப்போதைய முடிவு. இதற்காக, மத்திய ரிசர்வ் வங்கி ரூ
3,00,000 கோடியை அரசு வங்கிகளுக்கு அளிக்கப் போகிறது. அந்த வங்கிகள் குறைந்த வட்டிக்குக் கடன்களை வாரி வழங்கப் போகின் றன. விளைவு? பணப்புழக்கம் அதிகரிக்கும். விலைவாசியும் அதிக ரிக்கும். வாராக் கடன்களும் அதிகரிக்கும். முதலில் பிரகாசமாகத் தெரியும் பொருளாதாரம் விரைவில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரும்
தெரிந்தே தவறு செய்கிறார்கள். கேட்டால் உலகம் போற்றும் பொருளாதார மேதைகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிக்கனத் தையும் சேமிப்பையும் வற்புறுத்தாமல், கடனை வாரி வழங்கி அகலக் கால் வைக்க வழிகாட்டுகிறார்கள். வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தனா, துந்தனா, துந்தனா!

சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை
 
மும்பை, நவ. 7: மும்பை பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை சரிவிலிருந்து மீண்டது
குறியீட்டெண் 10 ஆயிரம் புள்ளிகளை எட் டியவுடன் வர்த்தகம் முடிக்கப்பட்டது
தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங் குச் சந்தையில் வெள்ளிக்கிழமையும் ஸ்திர மற்ற நிலை நிலவியது
இருப்பினும் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் நம் பிக்கை ஏற்பட்டது. இதனால் வர்த்தகம் சூடு பிடித்தது. 230 புள்ளிகள் அதிகரித்து குறி யீட்டெண் 9,964 புள்ளிகளை எட்டியவுடன் வர்த்தகம் முடிக்கப்பட்டது
கடந்த இரண்டு நாள்களில் மட்டும் மும்பை பங்குச் சந்தையில் 869 புள்ளிகள் சரிந்தன
இதனால் 10 ஆயிரம் புள்ளிகளை எட்டியவு டன், வழக்கமான வர்த்தக நேரத்துக்கு முன் பாகவே வர்த்தகம் முடிந்ததாக அறிவிக்கப் பட்டது
தேசிய பங்குச் சந்தையிலும் 80 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 2,973 புள்ளிக ளைத் தொட்டது
சர்வதேச அளவில் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வருவதால் குறியீட்டெண் மேலும் வீழ்ச்சியடையும் என்று முதலீட்டாளர்களி டையே அச்சம் நிலவியதாக தரகர்கள் தெரி வித்தனர்
கடந்த இரண்டு நாள்களாக கடும் இழப் பைச் சந்தித்து வந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட் ரீஸ் நிறுவனப் பங்குகள் விலை 4 சதவீதம் அதிகரித்தது. இக்குழுமத்தின் ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் நிறுவனப் பங்குகள் மிக அதிகமாக 10 சதவீதம் வரை உயர்ந்தது
ஹின்டால்கோ பங்குகள் 6 சதவீதம், ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 5 சதவீதம், டிசி எஸ் 4 சதவீதம், என்டிபிசி 4 சதம், டிஎல்எ ஃப் 3 சதம், ஐடிசி 3 சதம், சத்யம் பங்குகள் 3 சதம் அதிக விலைக்கு விற்பனையாயின
வெள்ளிக்கிழமை ரூ. 3,458 கோடிக்கு பங் குகள் விற்பனையாயின. வியாழக்கிழக்கிமை ரூ. 4,010 கோடிக்கு விற்பனையானது
ரிலையன்ஸ் பங்குகள் ரூ. 292.85 கோடி, சுஸ்லான் ரூ. 183.77 கோடி, எஸ்பிஐ ரூ
159.91 கோடி, ரிலையன்ஸ் கேபிடல் ரூ
151.72 கோடி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் ரூ
123.53 கோடிக்கு விற்பனையாயின.

ரான்பாக்ஸியின் 63.92 சதவீத பங்குகளை பெற்றது டெய்ச்சி சான்க்யோ

புதுடில்லி : இந்திய பார்மாசூடிக்கல் கம்பெனியான ரான்பாக்ஸியின் 63.92 சதவீத பங்குகளை ஜப்பானின் டெய்ச்சி சான்க்யோ நிறுவனம் முறையாக வாங்கிக்கொண்டது. ரான்பாக்ஸியில் மல்விந்தர்மோகன் சிங் குடும்பத்திற்கு இருந்த 34.8 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் டெய்ச்சி கைக்கு மொத்தம் 63.92 சதவீத பங்குகள் வந்துள்ளன. நாங்கள் வாங்க திட்டமிட்டிருந்த பங்குகளை எல்லாம் வாங்கி விட்டோம் என்று டெய்ச்சி சான்க்யோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தகாஸி ஷோடா தெரிவித்தார். இதனை ரான்பாக்ஸியின் தலைமை செயல் அதிகாரி மல்விந்தர் மோகன் சிங்கும் ஒத்துக்கொண்டார். கடந்த ஜூன் மாதத்தில் ரான்பாக்ஸியில் மல்விந்தர் சிங் குடும்பத்திற்கு இருக்கும் பங்குகளில் 34.8 சதவீத பங்குகளை வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் செய்திருந்தது. மேலும் வெளி சந்தையில் பங்கு ஒன்றுக்கு ரூ.737 என்ற விலை வைத்து 20 சதவீத பங்குகளையும் ரூ.22,000 கோடிக்கு அது வாங்கியது. இதன் மூலம் டெய்ச்சிக்கு மொத்தம் 63.92 சதவீத பங்குகள் வந்து விட்டன. மேலும் ரான்பாக்ஸியுடன் கூட்டு வைத்திருக்கும் இன்னொரு நிறுவனமான ஜெனோடெக்கின் பங்குகளையும் வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்திருக்கிறது

விற்பனையை அதிகரிக்க ஃபைனான்ஸ் கம்பெனி துவங்க அசோக் லேலாண்டு திட்டம்

சென்னை : ஹிந்துஜா குரூப்பை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான அசோகக் லேலாண்ட், குறைந்து வரும் அதன் விற்பனையை அதிகரிக்க செய்ய, வாகன ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றை துவங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. ஹிந்துஜா குரூப்பிற்கு சொந்தமான, சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அமாஸ் பேங்க் இதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே இங்கிருக்கும் ஏதாவது ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியை வாங்கியோ, அல்லது புதிதாக ஒரு கம்பெனியை துவங்கவோ அது திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அசோக் லேலாண்டின் மேலாண் இயக்குநர் சேஷசாயி இது குறித்து ஏதும் வெளியில் சொல்லவில்லை என்றாலும் நம்பகமான தகவல்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. புதிதாக கம்பெனி ஆரம்பித்தால் காலவிரயம் ஆகும் என்பதால் சென்னையை சேர்ந்த ஒரு வாகன ஃபைனான்ஸ் கம்பெனியை தான் அமாஸ் பேங்க் வாங்கும் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டில் ஒரு முறை அசோக் லேலாண்ட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் ஒரு கம்பெனியை அது துவக்கியது. இண்டுஸ் இண்ட் பேங்க் உடன் இணைந்து அது செயல்படுவதாக இருந்தது. இண்டுஸ் இண்ட் பேங்க்கும் ஹிந்துஜா குரூப்பிற்கு சொந்தமானதுதான். ஆனால் அது ஆரம்ப கட்டத்திலேயே நின்று விட்டது. இப்போது மீண்டும் அந்தமாதிரியான முயற்சியில் அசோக்லேலாண்ட் ஈடுபட இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: