பங்குச் சந்தையை பாதிக்குமா ஒபாமா வெற்றி?

 

nfpanic6

110%…No if & But…..

  

below29641

Don’t remain long !!

 

 

bloodbar

Nonstop slide upto 2763–2696

(At these levels………square your short & will

think…What to do ?)

politics

obama

obama

Obama country!

Obama’s next quest!

Wall Street and Obama

How stock sectors could fare in an Obama administration

Just read….because everthing is not tradingIt’s not hard to see the Dow Jones Industrial Average sinking to around 4,000.” – Jon MarkmanCurrent S&P 500 P/E in historical perspectiveA nice measure of market emotionalityMorgan Stanley cancels Christmas

Have u seen Triangle of 3066 Points or Not ??

Triangle Height indicates ..Tgt of 9087

Below 12500..Bears will kill this Mkt.

Our Target Intact ,Sensex will go below 10000 level very very soon

Our Ultimate Target :7247–6084

Two Consecutive close /Weekly close above 10044 will take Sensex to 10826—–11087.

(Just see…..it kissed 10945 & crashed )

Today …..Break below 9930 will take to 9321—9118 level in hrs only.

(Any RISE……JUST EXIT & SELL )

“Fear not for the future, weep not for the past”

Look @ 893 points triangle in Weekly Chart.

Boldly Recommended to sell and Exit at 3850 level with target of 2955 level.

(So…what u think…by spreading RumoursNF can crack ?? )

So what will happen to NATKHAT NIFTY ????

(Writing below mentioned levels..When NF was

5200 level )

-It made low of 3762 & zoomed to kiss 4654-

But ,On Rise……Exit from Indian Stock Market.

110% No if & But.

Our Target intacts :3638—–3420

1st Target of 3800 achieved (This level we had written when NF was trading at 5200 level )

2nd Target :Ratio of 1:1 (3638 )

3rd Target :3420..(Triangle Breakout Tgt )

(Already achived and kissed low of 3216 on Friday :10th Oct )

(Made low of 3101 on Thursday :16th Oct )

Our Target Revised :2900-2950 in Next 1 Months.

( On 17th Oct ….Made a low of 3050 )

(On 23rd Oct …it kissed low of 2905 )

alert32

Our Short Term Target for NF is 2500-2200 level

(Just see on Friday (24th Oct ) it kissed low of 2513 & closed at 2559…………THINK THINK THINK !!!

(Just see on Monday (27th Oct )it kissed low of 2228 & taken U-turn……THINK THINK THINK !!

pg3

ந்தியாவில் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டதும், வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பதுக்கப்பட்டதுமான இந்திய கறுப்புப்பணம் உலக வங்கிகளில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 64 லட்சம் கோடி. இதயமே நின்றுவிடும்போல் இருக்கிறதா? மேலே படியுங்கள்.
உலகிலேயே கறுப்புப் பணத்திற்குப் பாதுகாப்பான இடம் `சுவிஸ் பேங்க்’ என்றழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள்தான். அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இந்த வங்கிகளின் சேவைகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. சுவிஸ்ஸில் உள்ள வங்கிகள் சுவிஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. எனவே, அந்த அரசே நினைத்தாலும் வங்கிக் கணக்குப் பற்றிய எந்த விவரத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுதான் உலகில் உள்ள கறுப்புப் பண முதலைகள் அனைவரும் சுவிஸ் வங்கிகளில் தங்களின் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கான முக்கிய காரணம். இந்த ரகசிய காப்பு விவகாரங்களை 1934 ஆம் ஆண்டு முதலே ஒரு சட்டமாக்கி பாதுகாத்து வருகிறது சுவிஸ் அரசு.
மேலும், அந்த நாட்டின் சட்டப்படி அதிகப்படியான வருமானத்தை கணக்கில் காட்டாமலிருப்பதோ, சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை மறைப்பதோ ஒரு குற்றமே இல்லை. எனவேதான் உலக நாடுகளில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம், வரிஏய்ப்பு செய்யப்பட்ட பணம் என எல்லாவிதமான கறுப்புப் பணமும் சுவிஸ் வங்கிகளில் குவிந்து வருகின்றது.
இந்த ஆண்டு கடந்த மே மாதம் புதுடெல்லியில் உள்ள இண்டியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பைனான்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுமன் அகர்வால் ஒரு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது மட்டும் 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தத் தொகை உலகப் பொருளாதாரத்தில் ஏழு சதவிகிதமாகும். அதில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பணம் இந்தியர்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகையின் இந்திய மதிப்பு சுமார் 64 லட்சம் கோடி ரூபாய். இந்தியர்களுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யர்கள் 470 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இங்கிலாந்து 390 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் கறுப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர்.
“உலகிலேயே கறுப்புப் பண பதுக்கலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியர்கள்தான். இந்தியர்களின் கறுப்புப் பணமான 64 லட்சம் கோடி ரூபாய் என்பது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் 48 சதவிகிதம் என்கின்றார் இந்திய பொருளாதார நிபுணர் அருண்குமார்.
இந்த 64 லட்சம் கோடி ரூபாய் என்பது உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் போல பதின்மூன்று மடங்கு அதிகம். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த கடனே நாலரை லட்சம் கோடிக்கும் குறைவுதான். நாம் நமது பணத்தை கறுப்புப் பணமாக வங்கிகளில் பதுக்கி வைத்துவிட்டு, உலக நாடுகளிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் பணம் இந்திய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா நடிகர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கிரிமினல்களுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.
உலக அளவில் இது போன்ற கறுப்புப் பணம் பெரும்பாலும் சர்வதேச தீவிரவாதம், போதைப் பொருள் தயாரித்தல், கடத்தல், விற்பனை, சர்வதேச அளவில் விபசாரம், புளூபிலிம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கடத்தல், சூதாட்டம் ஆகியவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக உலக நாடுகள் கருதுகின்றன. அதிலும் கறுப்புப்பணமே சர்வதேச தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக உலகநாடுகள் பலவும் அஞ்சுகின்றன.
எனவேதான் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்களை வெளியிடும்படி அமெரிக்கா, ஐ.நா. சபை உட்பட அனைத்து நாடுகளும் சுவிஸ் அரசை வலியுறுத்தி வந்தன. அதிலும் 09.11.2001-ல் அமெரிக்காவில் ட்வின் டவர் தீவிரவாதக் கும்பலால் உடைக்கப்பட்ட பிறகு இந்த நிர்ப்பந்தம் சுவிஸுக்கு அதிகமாகியது. அதுவரை இந்த வங்கிக் கணக்குகளின் ரகசிய பராமரிப்பைப் பாதுகாக்கவே ஐ.நா. சபையில் உறுப்பினராகாமல் இருந்த சுவிஸ் நாடு 2002-ல் வேறு வழியின்றி ஐ.நா. சபையில் உறுப்பினரானது. மேலும் சுவிஸ் அரசு அந்நாட்டு வங்கிகளுக்கு ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் பிரைவேட் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் விவரங்களை வங்கிகள் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். அதை அரசுக்கோ வேறு யாருக்குமோ தெரிவிக்க வேண்டியது இல்லை என்றாலும், தங்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் அறிந்திருக்க வேண்டும் என அந்த சட்டம் கூறியது.
இது ஒரு புறமிருக்க, ஆஸ்திரேலியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் உள்ள சிறிய நாடு லீச்டென்ஸ்டீன். இந்நாட்டிலுள்ள எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள எண்ணூறு வாடிக்கையாளர்களின் விவரங்களை ஜெர்மனியின் புலனாய்வுத்துறையான பி.என்.டி. அமைப்பு சேகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளான அமெரிக்கா, பின்லேண்ட், கனடா, நார்வே, சுவீடன், இத்தாலி, அயர்லாந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அந்த எல்.டி.ஜி. வங்கியில் கணக்கு வைத்துள்ள தங்களின் நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை வாங்கிவிட்டது. மேலும், அவர்கள் மூலம் அந்தப் பணத்தை மீண்டும் சொந்த நாட்டிற்கே எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்திய அரசு கேட்டுக் கொண்டால், எல்.டி.ஜி. வங்கியில் உள்ள இந்திய கறுப்புப் பண முதலீட்டாளர்களின் பெயர்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அளிக்கத்தயாராக இருப்பதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆனாலும் இந்திய அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவில்லை.
இது குறித்து `ட்ரான்ஃபரன்ஸி இன்டர்நேஷனல்’ என்ற சர்வதேச அமைப்பின் இந்தியத் தலைவரும் முன்னாள் கடற்படைத்தலைவருமான அட்மிரல் தஹிலியானி, “இந்தப் பணம் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. அதை வாங்கித் தர இந்தியா தயங்குவதும் மறுப்பதும் ஏன்?” என்று கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளருமான மோகனகிருஷ்ணன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறார். “பொதுமக்களிடம் நேர்மையானவர்களைப்போல் நாடகமாடும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள், மக்களைச்  சுரண்டி சேர்த்த பணம்தான் கறுப்புப் பணம். டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் வி.ஐ.பி.கள் மற்றும் தொழிலதிபர்களின் போர்வையில் நடமாடுபவர்கள் சிலர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அந்தப் பட்டியலைத் தர ஜெர்மன் அரசு தயாராக இருந்தும், இந்திய அரசும் நிதித்துறையும் அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றறிய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர ஏற்பாடுகள் செய்து வருகின்றார். நிச்சயம் அந்தப் பட்டியலை வெளியிட வைப்பேன்” என்றார் நம்பிக்கையோடு..
-புஷ்கின்ராஜ்குமார்
சுவீஸ் வங்கியில் கணக்குத் துவங்குவது எப்படி?
சுவிஸ்வங்கியில் கணக்குத் துவங்க ஐந்தாயிரம் சுவிஸ் பிராஸஸ் பணம் கட்டி யார் வேண்டுமானாலும் சாதாரண கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது. இதற்கு பிரைவேட் அக்கவுண்ட் எனப்படும் ஸ்பெஷல் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டும். இந்த பிரைவேட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முதல் டெபாசிட்டே இந்திய மதிப்பில் ஒன்றரைக் கோடி ரூபாயைக் கட்ட வேண்டும். இதற்கு நாம் சுவிஸ் நாட்டுக்குப் போக வேண்டுமென்பதில்லை. இமெயிலில் நமது விவரங்களை அனுப்பினாலே, அந்த வங்கியின் பிரைவேட் பேங்கர்ஸிலிருந்து ஒரு நபர் நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கே வந்து, அது சென்னையாக இருந்தாலும் வந்து உங்களின் பிரைவேட் அக்கவுண்டை தொடங்கி வைப்பார். பிரைவேட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டதும் ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதன்பிறகு எல்லாமே அந்த நம்பர்தான். அதுமட்டுமின்றி, இந்த பிரைவேட் வங்கியின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவெனில், வங்கிக் கணக்கைத் தொடங்கியவர் யாரை நாமினியாக குறிப்பிடுகிறாரோ அவரைத் தவிர வேறு யாரும் மனைவி, பிள்ளைகளாக இருந்தாலும் இந்தப் பணத்தை உரிமை கோர முடியாது.
 இப்படி பிரைவேட் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர் சுவிட்சர்லாந்து நாட்டின் தண்டனைச் சட்டப்படி அந்த நாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்தான், அந்நாட்டு அரசே அந்த நபரின் பிரைவேட் அக்கவுண்ட் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு இறுக்கமான சிக்கல்கள் இருப்பதால்தான், இந்தியர்களின் இன்வெஸ்ட்மெண்ட் சுவிஸ் வங்கிகளில் குவிந்து கொண்டிருக்கிறது.
தமிழகத் தலைவர்கள் பெயரில் எவ்வளவு?
சுவிஸ் வங்கியில் பிரைவேட் அக்கவுண்ட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள் இப்போது லேசாக கசியத் தொடங்கியுள்ளன. அதில் டெல்லி முக்கியத்தலைவர்கள் சிலரின் பெயரும் அடக்கம். மும்பை பக்கம் பவர் பாலிடிக்ஸ் செய்பவரும் அதில் இடம் பெற்றிருக்கிறாராம்.
அதேபோல் தமிழகத்தில் முக்கிய தலைவர் ஒருவருக்கு நெருக்கமானவர்களின் உறவினர்கள் பெயரும் அதில் அடங்கியிருக்கிறது. தமிழகத்தின் வாரிசு தலைவர் ஒருவர் இப்போது டில்லியில் மணியடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கணக்கில் முப்பத்தாறாயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. கேடி சகோதரர்களின் கணக்கிலும் கணக்கில்லாமல் பணம் கிடக்கிறதாம். அதேபோல் ஃபுரூட் லேங்க்வேஜ் பெயரில் இப்போது புதுக்கணக்கு துவங்கப்பட்டிருக்கிறதாம். அந்தக் கணக்கைத் துவங்கி வைத்து பூஜை போட்டது ராஜாதி ராஜாவாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் கடைசியாக கணக்குத் துவங்கியுள்ளவர் இந்த ஃப்ரூட் லேங்க்வேஜ்தானாம்.
ங்குச் சந்தையை பாதிக்குமா ஒபாமா வெற்றி?
கடந்த வாரம் பங்குச் சந்தையின் ஏற்றத்தைப் பற்றி குறிப்பிட்டு அதை விடி வெள்ளியா? அல்லது மின்னலா? என்று கேட்டிருந்தோம். அது இந்த வாரம் விடிவெள்ளியாக மாறியது ஒரு ஆச்சரியம் தான். அதற்கு காரணம் வெள்ளியைத் தொடர்ந்து வந்த சனி தான். சாதாரணமாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் சந்தை நேரத்திற்கு பிறகு வரும், குறிப்பாக வெள்ளியன்று வரும். இந்த முறை சென்ற சனியன்று வந்த அறிவிப்புகள், சந்தை இந்த வாரம் மிளிரக் காரணமாக இருந்தது.
சி.ஆர்.ஆர்., 1 சதவீதம் மற்றும் ரெப்போ ரேட் 1 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்ததை அடுத்து வங்கிகளில் 80 ஆயிரம் கோடி ரூபாய் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இது தவிர வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய செக்யூரிட்டிகள் சதவீதத்தை 25 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக குறைத்துள்ளது. வங்கிகள் 1 சதவீத அளவு செக்யூரிட்டிகளை விற்கலாம் என்ற நிலையில் வங்கிகளிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்திய பொதுத்துறை வங்கி தலைவர்களை மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சந்தித்து பேசியுள்ளார். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கையால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறதா என்பது பற்றியும், தாராளமாக கடன் வழங்குவது குறித்தும் அவர் வங்கி தலைவர்களிடம் பேசினார். வங்கிகளை வட்டியை குறைக்க சொல்லியதற்கு பலன் இருந்தது. சில வங்கிகள் குறைக்க ஆரம்பித்துள்ளன. அதே சமயம் டிபாசிட் வட்டி விகிதங்கள் குறைய வேண்டும். ஆனால், குறையவில்லை. இது பணப்புழக் கம் குறைவாக உள்ளதை உணர்த்துகிறது. இதனால், திங்களன்றும் நேற்று முன்தினமும் இந்திய பங்குச் சந்தைகள் மேலேயே இருந்தன. இரண்டு தினங்களும் 842 புள்ளிகள் மேலே சென்றன. 10 ஆயிரம் புள்ளிகளை தாண்டி நின்றது ஒரு சாதனை தான். குறிப்பாக வங்கி மற்றும் கட்டுமானத்துறை பங்குகள் மேலே சென்றன. நேற்று ஆசிய அளவில் பங்குச் சந்தைகள் மேலே சென்றிருந்தாலும், இந்தியாவில் கீழேயே இருந்தது. காரணம் ஏ.பி.என்., ஆம்ரோ இந்திய பங்குச் சந்தையின் ஜாம்பவானான ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகளை விற்று விடலாம் என்று முதலீட்டாளர்களுக்கு வெளியிட்டிருந்த அறிக்கை தான். அது, அந்தக் கம்பெனியின் பங்குகளை 13 சதவீதம் வரை கீழே கொண்டு சென்றது. பெரிய கம்பெனியின் பங்குகள் 13 சதவீதம் வரை விழும் போது சந்தையும் விழுந்து தானே ஆகவேண்டும். ஆதலால், சந்தை சரிந்தது. இது தவிர கட்டுமானத்துறை, வங்கித் துறை, மெட்டல் ஆகிய பங்குகளை லாப நோக்கில் பலரும் விற்றதால் குறைந்தது.
நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 511 புள்ளிகள் குறைந்து 10,120 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 147 புள்ளிகள் குறைந்து 2,994 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
 
ஒபாமாவும் இந்திய பங்குச் சந்தைகளும்: அமெரிக்க அதிபராக ஒபாமா வந்துள்ளார்.
 அதிபராக ஒபாமா வந்தால் இந்திய பி.பி.ஓ., கம்பெனிகளுக்கு வேலைகள் குறையும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது. பெரிய அளவு பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே கருத வேண்டும். ஏனெனில், பல வேலைகள் அவர்கள் நாட்டில் செய்வதை விட இந்தியாவில் செய்வது லாபம் தரும் செயல். ஆதலால், வேலைகள் பெரிதளவில் குறைய வாய்ப்பில்லை. நிலைமை எப்படிப் போகும் என்று தெரியாததால் சாப்ட்வேர் பங்குகள் ஒபாமாவின் வெற்றிக்கு பிறகு விலை குறைந்ததென்னவோ உண்மை தான். ரூபாயின் ரோலர் கோஸ்டர் விளையாட்டு பலருக்கு புரியாத புதிராக இருக்கலாம். இந்த வாரம் இவ்வளவு ரூபாய் வலுப்பெறுவதற்கு காரணம் வெளிநாட்டு முதலீடுகள் சிறிது சிறிதாக பங்குச் சந்தையில் வர ஆரம்பித்திருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைந் திருந்ததால் வாங்கிய கச்சா எண்ணெய்க்கு செலுத்த வேண்டிய வெளிநாட்டு பணம் குறைவாக இருந்தது ஆகியவையால், ஏற்றுமதியாளர்கள் குழம்பி உள்ளனர். 50 ரூபாயை தாண்டிய போது இன்னும் கூடும் என்று தான் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆதலால், பலர் பார்வர்ட் கான்ட்ராக்ட்கள் போடாமல் இருந்தனர். அது தவறு என்று தற்போது உணர்ந்திருப்பர்.
 
பங்குகள் வாங்கலாமா?: மறுபடி சந்தை 9,000 அளவில் செல்லுமானால் அது நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பு தான். சந்தையில் 21,000 புள்ளிகள் அளவில் வாங்கியவர்களை வைத்துப் பார்க்கும் போது தற்போது வாங்குவது 50 சதவீதத்திற்கும் மேல் தள்ளுபடியில் பழுதில்லாத கம்பெனிகளை வாங்கலாம் (சாதாரணமாக தள்ளுபடியில் வாங்கும் போது சரக்கில் ஏதேனும் பழுது உள்ளதா என்பது மனதில் இருந்து கொண்டே இருக்கும்). இல்லாவிடினும் இரண்டு, மூன்று வருடங்கள் சந்தையில் இருப்பேன் என்று நினைத்து வாங்குபவர்கள் இந்த நிலையில் வாங்குவது உசிதம் தான்.
பயப்படாதீர்கள் ; இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று விடுவேன் : பங்குதாரர்களுக்கு லட்சுமி மிட்டல் ஆறுதல்
பிரஸ்ஸல்ஸ் : ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெருமளவில் குறைந்து விட்டதை அடுத்து, அதன் பங்குதாரர்களிடம் பேசிய அதன் தலைவர் லட்சுமி மிட்டல், பங்கு மதிப்பு குறைந்தது குறித்து கலக்கமடைய வேண்டாம். இழந்ததை நான் நிச்சயம் மீட்டு விடுவேன் என்றார். ஆர்செலர் மிட்டலில் எனக்கு தான் நிறைய பங்குகள் இருக்கின்றன. எனவே பங்குதாரர்கள் இழந்ததை நான் மீண்டும் சம்பாதித்து காட்டுவேன் என்றார். உலகின் மிகப்பெரிய ஸ்டீல் கம்பெனியான ஆர்செலர் மிட்டலின் பங்கு மதிப்பு, ஐந்து மாதங்களுக்கு முன் 150 பில்லியன் டாலராக இருந்தது, இப்போது வெறும் 30 பில்லியன் டாலருக்கு வந்து விட்டது. இதனையடுத்து அதன் பங்குதாரர்கள் கூட்டத்தை கூட்டிய அதன் தலைவர், இந்தியரான லட்சுமி மிட்டல், எனக்கு தான் இந்த நிறுவனத்தில் அதிகமான பங்குகள் இருக்கின்றன. எனவே இதனால் நான்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே இழந்த செல்வத்தை நான் மீண்டும் கட்டாயம் பெற்று தருவேன் என்றார். ஆர்செலர் மிட்டலில் 45 சதவீத பங்குகளை வைத்திருக்கும் லட்சுமி மிட்டல், அதன் பங்கு மதிப்பு குறைந்ததால் 50 பில்லியன் டாலர்களை ( 5,000 கோடி டாலர் ) இழந்திருக்கிறார். இப்போது உலகமே ஒரு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. இதில் நாமும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த சோதனையான கட்டத்தை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இப்போது நமது கவனம் எல்லாம் நம் கம்பெனி மீதும் அதன் பங்குதாரர்கள் மீதும் தான் இருக்க வேண்டும் என்றார் மிட்டல். கம்பெனியின் மதிப்பை உயர்த்த நான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அதில் ஒன்றுதான் உற்பத்தியை குறைப்பது. எங்களது நிர்வாக குழு, முழு நேரமும் கம்பெனியின் மதிப்பை உயர்த்துவது எப்படி என்பது குறித்தே சிந்தித்து செயல்பட்டு வருகிறது என்றார்
ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலையை 3 நாட்களுக்கு மூடிய டாடா மோட்டார்ஸ்
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், வாகனங்களுக்கான டிமாண்ட் குறைந்து வருவதால் அதன் ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலையை 3 நாட்களுக்கு மூடி இருக்கிறது. நவம்பர் 6 ம் தேதியில் இருந்து 8 ம் தேதி வரை அது மூடப்பட்டிருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனங்களுக்கான டிமாண்ட் குறைவாக இருப்பதால், எக்கசக்கமாக வாகனங்களை தயாரித்து வைத்திருந்து, அதனால் ஏற்படும் இன்வென்டரி நஷ்டத்தை தவிர்க்கும்பொருட்டு டாடா மோட்டார்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. ஏற்கனவே இருக்கும் ஸ்டாக் களை மூன்று நாட்களுக்குள் விற்று விட்டால், அதன் பின்னர் சப்ளையும் ஸ்டாக்கும் சரிசமமாக வந்து விடும் என்று அது கருதுகிறது. டீலர்களிடம் தேங்கியிருக்கும் ஸ்டாக்களையும் மூன்று நாட்களுக்குள் விற்று விடலாம் என்று அது கருதுகிறது. கடந்த மாதம்தான் டாடா மோட்டார்ஸ், அதன் ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலையில் பணியாற்றும் 300 தற்காலிக ஊழியர்களுக்கு நோ வொர்க் நோட்டீஸ் கொடுத்தது. ஜாம்ஷெட்பூரில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் தான் அதிக அளவில் டிராக்டர்கள், டிப்பர்கள் மற்றும் பலதரப்பட்ட வாகனங்கள் தயாரிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் மட்டும் டாடாவின் டிரக்கள் ( முக்கியமாக லாரிகள் ) விற்பனை 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலை மட்டும்தான் 3 நாட்களுக்கு மூடியிருந்தாலும் நாங்கள் எங்களது கமர்சியல் வாகன விற்பனையையும் கூர்ந்து கவனித்து வருகிறோம்.ஏனென்றால் கமர்சியல் வாகனங்களில் 95 சதவீதம், ஃபைனான்ஸ் திட்டத்தின் கீழ்தான் விற்பனையாகிறது என்றார் உயர் அதிகாரி ஒருவர்.
 
பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி
வாஷிங்டன் : ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்றாலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியாலும் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையப்போகிறது என்றும் முதலீட்டாளர்களிடையே தகவல்கள் கசிந்ததை அடுத்து பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. டவ் ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் ஆவரேஜ் 486.01 புள்ளிகள் ( 5.05 சதவீதம் ) குறைந்து 9,139.27 புள்ளிகளாக இருந்தது. நாஸ்டாக் கில் 98.48 புள்ளிகள் ( 5.53 சதவீதம் ) குறைந்து 1,681.64 புள்ளிகளாக இருந்தது. எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ் 52.98 புள்ளிகள் ( 5.27 சதவீதம் ) குறைந்து 952.77 புள்ளிகளாக இருந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியை அவர் சமாளித்தாக வேண்டும். ஆனால் அவரோ ஜனவரி 20 ம் தேதிதான் அதிபராக பதவி ஏற்பார். அதுவரை பிரச்னை காத்திருக்குக்காது. அமெரிக்காவில் வேலையில்லாதேர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, வீடுகளின் மதிப்பு குறைந்திருப்பது போன்ற பிரச்னைகளை அவர் சரி செய்தாக வேண்டியிருக்கிறது.
இன்றும் பங்கு சந்தையில் கடும் சரிவுதான்
மும்பை : எதிர்பாராத விதமாக பணவீக்கம் உயர்ந்திருப்பதால், இன்றும் பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. நிப்டி 3,000 புள்ளிகளுக்கு கீழேயும், சென்செக்ஸ் 10,000 புள்ளிகளுக்குள் கீழேயும் இறங்கி இருக்கிறது. மெட்டல், ஆயில், டெலிகாம், டெக்னாலஜி, பேங்கிங் மற்றும் ஆட்டோ பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைய துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 385.79 புள்ளிகள் ( 3.81 சதவீதம் ) குறைந்து 9,734.22 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 102.30 புள்ளிகள் ( 3.42 சதவீதம் ) குறைந்து 2,892.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. அக்டோபர் 25ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 10.72 சதவீதமாக இருக்கிறது.இது, இதற்கு முந்தைய வாரத்தில் 10.68 சதவீதமாகத்தான் இருந்தது. சி.என்.பி.சி.,டி.வி.யின் கணிப்பின்படி பணவீக்கம் 10.45 சதவீதமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக அது 10.72 சதவீதமாக உயர்ந்திருக்கிறது
பிஎன்பி பரிபாஸ் வங்கியுடன் சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ் கூட்டு சேர்ந்து புதிய நிறுவனம் துவக்கம்
சென்னை : பாரீசை சேர்ந்த பி.என்.பி.,பரிபாஸ் வங்கியும் சென்னையை சேர்ந்த சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம் கூட்டு சேர்ந்து, புதிய நிறுவனம் ஒன்றை துவங்க ஒப்பந்தம் செய்திருக்கின்றன. சுந்தரம் ஃபைனான்சின் பி.பி.ஓ.,பிரிவு நிறுவனமான சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ், பாரிசை சேர்ந்த பி.என்.பி.பரிபாஸ் வங்கியுடன் சேர்ந்து சுந்தரம் பி.என்.பி.பரிபாஸ் செக்யூரிட்டி சர்வீசஸ் என்ற நிறுவனத்தை துவங்க இருக்கின்றன. இந்த கூட்டு நிறுவனத்தில் சுந்தரம் பிசினஸ் சர்வீசசுக்கு51 சதவீத பங்குகளும் பி.என்.பி.பரிபாசுக்கு மீதி பங்குகளும் இருக்கும். இதற்கான அலுவலகத்தை சென்னையில் வைத்துக்கொள்ளும் இவர்கள், ஃபண்ட் அக்கவுன்டிங் மற்றும் டிரான்ஸ்பர் போன்ற வேலைகளை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்துகொண்டு இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு செய்து கொடுக்கும். இந்திய பங்கு சந்தையை ஆராய்ந்த பி.என்.பி.பரிபாஸ் வங்கி, இந்திய சந்தை வேகமாக வளரக்கூடியது என்று கணித்திருக்கிறது. இதனையடுத்துதான் அது சுந்தரம் பிசினஸ் சர்வீசசுடன் இணைந்து இங்கு தொழில் துவங்க முன் வந்திருக்கிறது. ஃபண்ட் அக்கவுன்டிங் மற்றும் டிரான்ஸ்பர் வேலைகளுடன், ஆட்டோ ஃபைனான்ஸ்,கன்சூமர் லோன், டெபாசிட் மற்றும் இன்சூரன்ஸ் சம்பந்தமான வேலைகளையும் அது செய்யும். இந்தியா தவிர இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் அது தொழிலை அபிவிருத்தி செய்ய உத்தேசித்திருக்கிறது.
விமான கம்பெனிகளில் 8,000 பேர் வேலை இழக்கும் அபாயம்
புதுடில்லி : விமான நிலைய பணிகள் சம்பந்தமாக புதிய கொள்கையை மத்திய அரசு 2009 ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து அமல்படுத்த இருக்கிறது. அரசு புதிய கொள்கையை நடைமுறைப்படுத்தினால், ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் ஏர்லைன்ஸ் ( எஃப்.ஐ.ஏ.) என்ற அமைப்பில் இருக்கும் விமான கம்பெனிகளில் பணியாற்றும் 8,000 பேர் வரை வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக, அது மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகத்திற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இங்கிருக்கும் தனியார் விமான கம்பெனிகளில் பணியாற்றும் சுமார் 28,000 பேரில் 29 சதவீதத்தினர் விமான நிலைய பணியைத்தான் ( கிரவுண்ட் ஹேண்ட்லிங் ஜாப் ) செய்து வருகிறார்கள். செலவை குறைக்கும் விதமாக சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ், அதன் 800 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக நோட்டீஸ் கொடுத்து, பின்னர் அரசியல் எதிர்ப்பு காரணமாக மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதாகி இருந்தது. இப்போது விமான நிலைய வேலைகளை அந்தந்த விமான கம்பெனிகளே செய்து வருகின்றன. புதிய கொள்கைப்படி தனியார் விமான கம்பெனிகள் இந்த வேலையை செய்ய முடியாது. ஏர் இந்தியா மற்றும் ஏர்போர்ட் ஆப்பரேட்டர்கள் ( ஜி.எம்.ஆர்.போன்றவர்கள் ) மட்டுமே கிரவுண்ட் ஹேண்ட்லிங் ஜாப்பை செய்ய அனுமதிக்கப்படுவர். இதனால் தனியார் விமான நிறுவனங்களில் பணியாற்றி வரும் சுமார் 8,000 ஊழியர்கள், வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து வேலையை இழக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சிவில் ஏவியேஷன் அமைச்சகம், ஊழியர்கள் வேலை இழப்பது குறித்து கவனத்தில் கொண்டுள்ளோம். இதற்கு ஒரு சுமூக சூழ்நிலையை உருவாக்குவோம் என்றது. கிரவுண்ட் ஹேண்ட்லிங் வேலையில், ஜெட் ஏர்வேஸில் 4,000 ஊழியர்களும், ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டி கோ வில் 3,800 ஊழியர்களும், கோ ஏர் இல் 350 ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மீதி பேர் சர்வதேச விமான நிறுவனங்களிலும் பணியாற்றுகிறார்கள். நாங்கள் இன்னும் கூடுதலாக ஆட்களை வேலையில் சேர்க்க வேண்டும் என்று எண்ணி இருக்கும் போது, இப்போது இருக்கும் ஆட்களுக்கே வேலை இல்லை என்ற நிலை உருவாகப்போகிறது என்று ஜெட் ஏர்வேஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பெட்ரோல், டீசல் நிலையங்களை மீண்டும் திறக்க திட்டம்

பியூஷ் பாண்டே ,மும்பை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதையடுத்து, அதன் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மார்ச் மாதத்தில்…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாடு முழுவதுமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களை நிர்வகித்து வந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இந்நிறுவனம் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் அதன் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களை மூடியது.
நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 147 டாலர் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இது தற்போது சுமார் 65 டாலராக குறைந்துள்ளது. ஆக, கச்சா எண்ணெய் விலை தற்போது 60 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது. இதனையடுத்து பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் எரிபொருள் சில்லரை வணிகத்தை மீண்டும் தொடங்க ஆயத்தமாகி வருவதாக தெரிய வந்துள்ளது.
மானிய விலை
இ&மெயில் கடிதம் ஒன்றில் இது குறித்து இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், Òநடப்பு ஆண்டு மார்ச் மாதம் 15&ந் தேதி அன்று நிறுவனம் 1,400&க்கும் அதிகமான அதன் பெட்ரோலிய சில்லரை விற்பனை நிலையங்களை மூடியது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலையில் எரிபொருளை வழங்குவதால், விலையை நிர்ணயிப்பதில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இடர்பாடு காரணமாக சில்லரை விற்பனை நிலையங்களை மூட வேண்டிய நிலை உருவானதுÓ என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ்ஸார்
தனியார் துறையைச் சேர்ந்த மற்றொரு எண்ணெய் நிறுவனமான எஸ்ஸார், மூடப்பட்ட அதன் 360 எரிபொருள் சில்லரை விற்பனை நிலையங்களை மீண்டும் திறந்துள்ளது. இந்நிறுவனம் நடப்பு மாதத்தின் இறுதிக்குள் அதன் விற்பனை நிலையங்களை இரண்டு மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது. சில்லரை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை டிசம்பர் மாதத்திற்குள் 1,000&ஆகவும், ஜனவரி மாதத்திற்குள் 1,250&ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது

 
பொறியியல் நிறுவனங்களில்துவங்கியது ஆள்குறைப்பு!
 
பீ.ஜெபலின் ஜான்
கோவை, நவ. 5: கோவை மாவட் டத்தில் பொறியியல் நிறுவனங்க ளில் 4 நாட்களில் 10,000 தொழி லாளர்கள் பணியில் இருந்து விடு விக்கப்பட்டுள்ளனர்
இதேநிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு மாதத்துக்குள் 1 லட்சம் பேர் வேலையிழப்பார் கள் என்று தொழில்அமைப்பு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன
கோவை மாவட்டத்தில் பஞ் சாலைகள், வார்ப்பட ஆலை கள், பம்ப் நிறுவனங்கள், பொறி யியல் கருவிகள் உற்பத்தி நிறுவ னங்கள் மற்றும் பிற நிறுவனங் கள் என மொத்தம் சுமார் 50,000 நிறுவனங்கள் (திருப்பூர் தவிர) இயங்கி வருகின்றன
நாட்டிலேயே அதிகபட்சமாக கோவையில்தான் சுமார் 25,000 விதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய தொழில்வளத்தால் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி வருவாய் கிடைக்கிறது. கோவை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள நிறுவ னங்களில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்
நெருக்கடியில் தொழில் நிறு வனங்கள்: இந் நிலையில், மின் வெட்டு, சர்வதேச பொருளா தார நெருக்கடி, மூலப்பொருட் கள் விலையேற்றம் உள்ளிட்ட சங்கிலித் தொடர் சிக்கலில் இருந்து மீளமுடியாத நிலைக்கு கோவை தொழில் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன
கடந்த ஓராண்டில் பம்ப் நிறு வனங்களில் ரூ.2,000 கோடி உற் பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது
குறுந்தொழில் நிறுவனங்களில் சுமார் ரூ.7,000 கோடி வரையும், பெரிய நிறுவனங்களில் ரூ.10, 000 கோடிக்கு மேலும் இழப்பு ஏற்பட்டுள்ளது
இதையடுத்து, ஏற்பட்ட தொழில் நெருக்கடியால் தீபாவ ளிக்கு முன்பே பயிற்சித் தொழி லாளர்கள் நீக்கப்பட்டனர். மின் வெட்டு பிரச்னை இப்போதும் தீராததால், உற்பத்தி குறைந்து விட்டது. இதனால், தொழில் நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை துவங்கியுள்ளது
4 நாட்களில் 10 ஆயிரம் பேர் நீக்கம்: “மின்வாரியத்தின் புதிய அறிவிப்பால் தொழில் நிறுவனங்களுக்கு 58 சதவீத மின்வெட்டு ஏற்படுகிறது. இத னால், தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே செய்த உற்பத்தியில் 70 சதவீதத்தை குறைக்க வேண் டிய கட்டாய சூழல் உருவாகி யுள்ளது. ஜென்ரேட்டர் மூலம் தொழில் நிறுவனங்களை இயக்க மாநில அரசு வலியுறுத் துகிறது. ஆனால், போதுமான டீசல் கிடைப்பதில்லை. இதைத் தொடர்ந்து ஆள்குறைப்பு செய்து வருகிறோம்
கடந்த 4 நாட்களில் கோவை யில் மட்டும் 10,000 பேர் வேலை யிழந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் ஒரு மாதத்தில் 1 லட் சம் பேர் வேலையிழப்பார்கள்’ என்கிறார் கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்க (கொடி சியா) தலைவர் கே.இளங்கோ
ஆள்குறைப்பு தொடரும்: “தொழில் நெருக்கடி காரண மாக இதுவரை “3 ஷிப்டுகள்’ முறையில் இயங்கிய தொழில் நிறுவனங்களில் ஒரு “ஷிப்ட்’ குறைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்ததால் தொழிலாளர்க ளின் வேலைக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கெனவே, தொழில் நிறுவ னங்களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், இப் போது ஆள்குறைப்பு நடவ டிக்கை தவிர வேறு வழி யில்லை. இப்போது மொத்த தொழிலாளர்களில் 3 முதல் 4 சதவீதம் வரை ஆள்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த எண் ணிக்கை பல மடங்கு உயரும்’ என்கிறார் தென்னிந்திய பொறி யியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் ஜெயக்குமார் ராம்தாஸ்
சிக்கலில் குறுந்தொழில்கள்: “பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்களைப் பெற்று இயங்கும் சுமார் 25,000 குறுந் தொழில் நிறுவனங்கள் கோவை யில் உள்ளன. பெரிய நிறுவனங்க ளில் உற்பத்தி குறைந்ததால், குறுந் தொழில் நிறுவனங்களுக்கு “ஜாப் ஆர்டர்’ கிடைக்காத நிலை உரு வாகியுள்ளது
இதனால், 30 சதவீதம் தொழி லாளர்கள் ஏற்கெனவே ஆட்டோ ஓட்டுவது, கட்டட வேலை போன்ற பிற பணிக ளுக்கு மாறிவிட்டனர். தீபாவ ளிக்குப்பின் மேலும் 20 சதவீதம் தொழிலாளர்கள் தாங்களாகவே பணிக்குத் திரும்பவில்லை’ என்கி றார் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ்.
 
 
 
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: