கடுமையான நிதி நெருக்கடியால் உலக அளவில் முதலீட்டாளர்கள் இழந்தது 16.22 லட்சம் கோடி டாலர்

nf5

NIFTY FUTURE

EXIT & GO SHORT

trap

MAXIMUM …it can flare upto

3353–3447

Today …Why to Sell ?

NF WILL CREARE HISTORY

 

 gap1

U all will be trapped in NF & Sensex

stocks……watch it crashing upto 2500

level….in next 5-7-11 sessions !!

4th GAP ……..on card

 

110%…Expect MAJOR

Selloff..Anytime -Anymoment!!

 

Short Term Target for NF is 2500-2200 level

SENSEX

 Ultimate Target :7247–6084

  

alert31

 MARKETMOOD

VOLATILE

“Below 3013..Don’t hod Lng “

110% will crash to kiss 2913–2877-2856 ….Today or Tomorrow !!

 

Hourly chart indicates…Before

 

EXIT from all Long POSTIONS !!!* Welcome to Dystopia!

*10 economic challenges for new president

*Dow theorist sees recession ending by mid-2009

*The bears are only taking a nap?

*Comparing stock market crashes

 

Have u seen Triangle of 3066 Points or Not ??

Triangle Height indicates ..Tgt of 9087

Below 12500..Bears will kill this Mkt.

Our Target Intact ,Sensex will go below 10000 level very very soon

Our Ultimate Target :7247–6084

Two Consecutive close /Weekly close above 10044 will take Sensex to 10826—–11087.

Today …..Support at 10249 & 7DEMA at 9916.

Hurdle at 10826–11087.

Will try to Fill GAP of 11410 ?????

(If it fill up the gap it will be good for BEARS only )

 

 

NIFTY FUTURE :

 

Look @ 893 points triangle in Weekly Chart.

Boldly Recommended to sell and Exit at 3850 level with target of 2955 level.

(So…what u think…by spreading RumoursNF can crack ?? )

So what will happen to NATKHAT NIFTY ????

“God will also not able to save this market “

110% ,NF will crash and kiss 2955 level….very soon

 

Writing below mentioned levels..When NF was 

5200 level )

-It made low of 3762 & zoomed to kiss 4654-

But ,On Rise……Exit from Indian Stock Market.

110% No if & But.

Our Target intacts :3638—–3420

1st Target of 3800 achieved (This level we had written when NF was trading at 5200 level )

2nd Target :Ratio of 1:1 (3638 )

3rd Target :3420..(Triangle Breakout Tgt )

(Already achived and kissed low of 3216 on Friday :10th Oct )

(Made low of 3101 on Thursday :16th Oct )

Our Target Revised :2900-2950 in Next 1 Months.

( On 17th Oct ….Made a low of 3050 )

(On 23rd Oct …it kissed low of 2905 )

Our Short Term Target for NF is 2500-2200 level

(Just see on Friday (24th Oct ) it kissed low of 2513 & closed at 2559…………THINK THINK THINK !!!

(Just see on Monday (27th Oct )it kissed low of 2228 & taken U-turn……THINK THINK THINK !!

Have u gone short yesterday ??Your Answer will be NO.

Today…….If not crosses Yesterday’s High of 3065 & trades

 

 below 3013 then watch freefall upto 2913-2877 in hrs only.

 

Below 3013…Don’t hold long postion.It may even kiss 2856-2804 level in next 1-2 days.

Today …101% Go short in NF @ 3070-3130

Today…Above 3072 will kiss 3096-3100 level.

(Go short on RISE )

Now….if closes above 3072 for 2 Consecutive days…then watch

Nonstop explosive move upto 3353—3447.

(But chances are very very very remote

கோலாலம்பூர் : உலக அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால், உலக அளவிலான பங்கு சந்தைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் அக்டோபர் மாதத்தில் தான் பங்கு சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. அக்டோபர் மாதத்தில் மட்டும் உலக அளவிலான பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் 5.79 லட்சம் டாலர்களை இழந்திருக்கிறார்கள் என்கிறது ஸ்டாண்டர்டு அண்ட் பூர்ஸ் என்ற சர்வதேச ரேட்டிங் ஏஜென்ஸி. உலக அளவில் இருக்கும் பிரபல 52 பங்கு சந்தைகளில் செப்டம்பர் மாதத்தில் முதலீட்டாளர்கள் இழந்தது 4 லட்சம் கோடி டாலர்கள். இதைவிட அதிகமாக செப்டம்பரில் 45 சதவீதம் கூடுதலாக 5.79 லட்சம் டாலர்களை அவர்கள் இழந்திருக்கிறார்கள். ஸ்டாண்டர்டு அண்ட் பூர்ஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, இந்த வருடம் ஜனவரியில் இருந்து அக்டோபருக்குள் முதலீட்டாளர்கள் 16.22 லட்சம் கோடி டாலர்களை இழந்திருப்பார்கள் என்கிறது.

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : 500 புள்ளிகளை இழந்தது


மும்பை : மும்பை பங்கு சந்தை மீண்டும் ஒரு சோதனையான நாளை சந்தித்திருக்கிறது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி 5 சதவீதத்தை இழந்திருக்கிறது. சர்வதேச பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்திய பங்கு சந்தையையும் பாதித்தது. இன்றும் அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டன. ஆயில், மெட்டல், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ், டெலிகாம் துறை அதிகம் பாதிக்கப்பட்டன. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், செய்ல், டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் அதிகம் வீழ்ச்சி அடைந்திருந்தன. காலை வர்த்தக ஆரம்பத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகளும் நிப்டி 90 புள்ளிகளும் உயர்ந்திருந்தாலும், காலை 10.40 க்குப்பின் குறைய துவங்கியது. அது அப்படியே தொடர்ந்து மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 511.11 புள்ளிகள் ( 4.81 சதவீதம் ) குறைந்து 10,120.01 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 147.15 புள்ளிகள் ( 4.68 சதவீதம் ) குறைந்து 2,994.95 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

சிங்கூரில் டாடாவுக்கு பதில் சீன ஆட்டோ நிறுவனம்

கோல்கட்டா : மேற்கு வங்கம் சிங்கூரில் இருந்து டாடா வெளியேறி விட்டதால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. அதில் வேறு ஏதாவது தொழிற்சாலையை துவங்க வைக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் இடது சாரி கட்சி ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் நேற்று சீன வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் வொர்க்ஸ் என்ற நிறுவனம் கோல்கட்டா வந்து அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த நிறுவனம், உலகில் 19 நாடுகளில் தொழிற்சாலை வைத்திருக்கும் உரால் இந்தியா லிமிடெட் என்ற இன்னொரு பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து, சிங்கூரில் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ முயற்சி செய்வதாக தெரிகிறது. எனவே நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது உரால் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ஷராப்பும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்திற்குப்பின் ஷராப், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, நாங்கள் ஃபர்ஸ்ட் ஆட்டோமொபைல் வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிங்கூரில் தொழிற்சாலை அமைக்க அதிக ஆவலுடன் இருக்கிறோம். அவர்களுக்கும் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து துவங்குவதாக இருக்கும் தொழிற்சாலைக்காக கல்யாணி, கராக்பூர், ஹால்டியா போன்ற இடங்களை பார்வையிட இருக்கிறோம் என்றார். இது குறித்து அரசு அதிகாரிகள் பேசியபோது, மேலே குறிப்பிட்ட இடங்களை அவர்கள் பார்வையிட இருந்தாலும் எங்கள் மனதில் சிங்கூர்தான் இருந்துகொண்டிருக்கிறது. சீன நிறுவனம் ஆரம்பத்தில் பெரிய டிரக் மற்றும் மினி பஸ்களை மட்டுமே தயாரிக்கும். இந்த கூட்டு நிறுவனத்திற்கு 600 ஏக்கர் நிலம் மட்டுமே தேவையானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வெள்ளை மாளிகைக்கு ஒரு கருப்பு அதிபர்

வாஷிங்டன் : அமெரிக்க வரலாற்றில் முதன் முதலாக கருப்பு இனத்தவர் ஒருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 231 வருட கால சுதந்திர அமெரிக்காவில், இதுவரை ஒரு கருப்பு இனத்தவர் கூட அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. இப்போது முதன் முதலாக, கென்யாவை சேர்ந்த கருப்பு இன தந்தைக்கும், அமெரிக்காவில் கான்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அமெரிக்க தாய்க்கும் மகனாக பிறந்த பாரக் ஓபாமா, 44 வது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சிவில் உரிமைக்காக மார்ட்டின் லூதர் கிங் என்ற கருப்பு இனத்தவர் போராட்டம் துவங்கி சரியாக 45 வருடங்களுக்குப்பின், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வழக்கறிஞரான 47 வயது கருப்பர் இன பாரக் ஒபாமா, உலகின் மிக அதிகாரமுள்ள அமெரிக்க அதிபராகிறார். கடந்த 8 வருடங்களாக நடந்து வந்த குடியரசு கட்சியை சேர்ந்த ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரக் ஒபாமா ஆட்சி செய்ய வருகிறார். புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாரக் ஒபாமா, அங்குள்ள வழக்கப்படி, வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்பார். பாரக் ஒபாமா, 1961 ஆகஸ்ட் 4 ம்தேதி ஹவாயில் பிறந்தவர். அமெரிக்காவின் மிக வயதான அதிபராக ஜான் மிக்கெய்ன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், முதல் பெண் துணை அதிபராக ஒரு பெண்மணி ( சாரா பாலின் ) தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கி உயர் அதிகாரிகளுடன் நிதி செயலர் சந்திப்பு

புதுடில்லி : இந்தியாவில் இருக்கும் தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் மத்திய நிதி செயலர் அருண் ராமநாதன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சமீபத்தில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறதா என்பது பற்றியும், வட்டியை குறைப்பது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று நிதி அமைச்சர் சிதம்பரம், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, வங்கிகள், வட்டியை 0.75 சதவீதம் வரை குறைக்க ஒத்துக் கொண்டிருந்தன.அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று தனியார் வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் நிதி செயலர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இன்றைய பேச்சுவார்த்தையில் ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர் லீலாதர், ஐசிஐசிஐ பேங்க் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சர், ஜே அண்ட் கே.பேங்க்கின் தலைவர் ஹசீப் திரபு, ஹெச்.டி.எஃப்.சி.பேங்க் மேனேஜிங் டைரக்டர் ஆதித்யா பூரி, மற்றும் ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.எஸ்.பி.சி., சிட்டி குரூப், டாய்ச் பேங்க் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்

இந்தியாவில் சிமென்டிற்கான டிமாண்ட் குறைந்தது

மும்பை : அக்டோபர் மாதத்தில் சிமென்டிற்கான டிமாண்ட் குறைந்திருக்கிறது. இதனால் பெரும்பாலான சிமென்ட் கம்பெனிகள் உற்பத்தியை குறைத்திருக்கின்றன. இது, இந்தியாவில் உற்பத்தி துறையில் சரிவு ஏற்பட்டு வருவதை காட்டுவதாக சொல்லப்படுகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1.51 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்திருந்த ஹோல்சியம் குரூப் கம்பெனியை சேர்ந்த அம்புஜா சிமென்ட்ஸ், இந்த வருடம் அக்டோபரில் 1.45 மில்லியன் டன் சிமென்ட் தான் உற்பத்தி செய்திருக்கிறது. அதன் சப்ளையும் குறைந்திருக்கிறது. ஹோல்சியம் குரூப்பை சேர்ந்த இன்னொரு பிரபல சிமென்ட் கம்பெனியான ஏ.சி.சி., யின் உற்பத்தியும் 1.13 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த அக்டோபரில் 1.76 மில்லியன் டன்களாக இருந்த சிமென்ட் உற்பத்தி, இந்த அக்டோபரில் 1.74 மில்லியன் டன்களாக குறைந்திருக்கிறது. சப்ளையும் 3.4 சதவீதம் குறைந்து, 1.75 மில்லியன் டன்களில் இருந்து 1.70 மில்லியன் டன்களாகி இருக்கிறது. ஆனால் இன்னொரு பிரபல சிமென்ட் கம்பெனியான ஆதித்ய பிர்லா குரூப்பை சேர்ந்த கிராஸிம் இன்டஸ்டிரீஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், 1.93 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்தியாவில் சிமென்ட் துறையில் 55 சதவீத மார்க்கெட் ஷேர், ஹோல்சியம் குரூப் மற்றும் பிர்லா குரூப் கம்பெனிகளிடம் தான் இருக்கிறது
 
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

நியுயார்க் : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அல்ல. சவுதி அரேபியா, எண்ணெய் ஏற்றுமதியின் அளவை குறைத்திருப்பதுதான் காரணம் என்கிறார்கள்.லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை, கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவாக நேற்று பேரலுக்கு 5.43 டாலர் உயர்ந்து 65.91 டாலராகி விட்டது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 69.88 டாலராக உயர்ந்து விட்டது. உலகில் அதிகம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா, அது ஏற்றுமதி செய்யும் எண்ணெய்யின் அளவில், நாள் ஒன்றுக்கு 9,00,000 பேரல்களை குறைத்திருக்கிறது. யூரோவுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருப்பதும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததற்கு காரணம் என்கிறார்கள். கடந்த மாதம் கூடிய ஓபக் மாநாட்டில், நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேரல்கள் <உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகளை அது கேட்டுக்கொண்டது. அது எப்போதிருந்து முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரியவில்லை. இருந்தாலும் கடந்த ஜூலை மாதத்தில் பேரலுக்கு 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை அதன் பின் மளமளவென குறைய துவங்கி, 60 டாலர்களை ஒட்டி வந்திருந்தது. இப்போது கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.

நெல், அரிசி ஏற்றுமதிக்கு ‘லெவி’ அமல் : கர்நாடக உத்தரவால் தமிழகத்தில் விலை எகிறும்

பெங்களூரு: நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு ‘லெவி’ உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு அரிசி வரத்து குறைந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய உணவு கழக சட்டப்படி இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மத்திய தொகுப்பிற்கு குறிப்பிட்ட அளவு அரிசி வழங்கி வருகிறது.
குறிப்பிட்டபடி அரிசியை மத்திய அரசுக்கு வழங்காவிட்டால் பொது வினியோகத்துறைக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய உத்தரவுபடி கர்நாடக மாநிலத்தில் நெல் விளையும் முக்கிய மாவட்டங்களான பெல்லாரி, ஹெப்பால், ராய்ச்சூர், சிமோகா, தாவணகரே, மாண்டியா, தும்கூர் ஆகிய மாவட்டங்களில் லெவி சட்டம் அமல்படுத்தப்படுகிறது. லெவி அரிசியை தடையின்றி பெறுவதற்கு வசதியாக, கர்நாடகாவின் அண்டை மாநிலங்களுக்கு நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. நெல் விளைவிப்போர், அரிசி ஆலை உரிமையாளர்கள், கமிஷன் ஏஜென்டுகள், மொத்த வியாபாரிகள் ஆகியோர் மற்ற மாநிலங்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால், குறிப்பிட்ட மாவட்டங்களில், கலெக்டர்களிடம் அனுமதி பெற வேண்டும். லெவி அளவை முறைப்படி செலுத்தியிருந்தால் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும். நெல், அரிசி ஏற்றுமதிக்கு லெவி உத்தரவால், அரிசி விலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் மத்திய அரசுக்கு குறைந்த தரமான அரிசியே வழங்கப்படுகிறது. லெவி திட்டத்துக்காக கர்நாடக மாநில அரசு 2.5 லட்சம் டன் அரிசி என நிர்ணயித்துள்ளது. இவ்விஷயத்தில் கொள்முதல் செய்வதில் மாநில அரசுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. ஏனெனில், மாநில அரசு ஆண்டுக்கு 40 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்து வருகிறது. லெவி அரிசி கொள்முதல் செய்யும் போது அளவு மட்டும் தான் கவனிக்கப்படும், தரம் குறித்து கவனிக்கப்படமாட்டாது. மத்திய தொகுப்பிற்கு கர்நாடகாவில் இருந்து அதிக அளவு அரிசி ஒதுக்க வேண்டியிருப்பதால் தமிழகத்துக்கு வரும் அரிசின் அளவு குறையும். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு கர்நாடகாவில் இருந்துதான் அதிக அளவு அரிசி வரத்து உள்ளது. இனி வரத்து குறையும் என்பதால் பற்றாக்குறை அதிகரித்து, அரிசி விலை மேலும் உயரும் என அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

சாம்சங் விற்பனை அதிகரிக்க அதிரடி திட்டம்

சென்னை: இந்தியாவின் மொத்த ‘டிவி’ விற்பனை சந்தையில், நடப்பாண்டு இறுதிக்குள் 45 சதவீதத்தை எட்டுவதற்கு சாம்சங் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குனர் ஜூட்ஷி (எலக்ட்ரானிக்ஸ்) கூறியிருப்பதாவது: எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகள் முன்னணி இடத்தில் இருந்து வருகின்றன. நிறுவனத்தின் விளம்பர தூதுவராக ஒலிம்பிக் நாயகன் அபினவ் பிந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உற்பத்திக்கான விளம்பரங்கள் மற்றும் உற்பத்திப் பொருள் விளம்பரங்களில் அவரை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதனால், சந்தையில் எங்களின் நிலை மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறோம். புதிய விளம்பரங்கள், விரைவில் ‘டிவி’க்களில் ஒளிபரப்பாகும். ‘டிவி’ விற்பனையில் நடப்பாண்டு இறுதிக்குள் 45 சதவீத சந்தை மதிப்பை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது 16 வகையான எல்.சி.டி., ‘டிவி’ மாடல்கள் விற்பனையில் உள்ளன. இதன் விலைகள் 25 ஆயிரம் ரூபாய் முதல் 24 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அபினவ் தெரிவித்துள்ளார். சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் சுனில்தத் கூறுகையில், ‘8 மெகாபிக்சல் கேமராவுடன் கூடிய, ‘இன்னோவ்-8’ என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளோம். ‘மொபைல் போட்டோகிராபி மற்றும் மல்டிமீடியா அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த மொபைல் போனை உருவாக்கியுள்ளோம். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் எல்லா நவீன வசதிகளும் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 
வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி குறையும்: ஸ்டேட் பாங்க் முதல் நடவடிக்கை

புதுடில்லி: வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வங்கிகள் முன்வந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இது தொடர்பான அறிவிப்பை இன்னும் சில தினங்களில் வெளியிடுகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அதிரடி நடவடிக்கையால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறதா, தாராளமாக கடன் வழங்குவது குறித்தும் பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உட்பட அனைத்து வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ஓ.பி.பட் கூறியதாவது: வட்டி விகிதங்களை குறைப்பது கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருந் தது. அனைத்து வங்கிகளும் பிரதான கடனுக்கான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் உட்பட அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை பொறுத்தமட்டில், எமது வங்கியின் சொத்து மற்றும் பொறுப்பு கமிட்டி நாளை (இன்று) கூடி பிரதான கடனுக்கான வட்டியை குறைப்பது பற்றி முடிவு செய்யும். வட்டி குறைப்பு அடுத்த வாரத்தில் இருந்து அமலுக்கு வரும். பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி ஆகியவை ஏற்கனவே வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இவ்வாறு பட் கூறினார். பாங்க் ஆப் இந்தியா சேர்மன் டி.எஸ். நாராயணசாமி கூறுகையில், ‘எங்கள் வங்கி வட்டி விகிதங்களை விரைவில் குறைக்கும்’ என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாக இயக்குனர் கே.வி.காமத் கூறுகையில், ‘பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கையின் தாக்கத்தை கவனித்து வருகிறோம். வட்டி விகிதங்களை ஆய்வு செய்து விரைவில் அறிவிக்க இருக்கிறோம்’ என்றார்.

அதிக வட்டி டிபாசிட் வாபஸ்

மும்பை: யூனியன் வங்கி தனது 900 நாட்கள் டிபாசிட் திட்டத்தை வரும் 9ம் தேதி முதல் திரும்ப பெறுகிறது.
யூனியன் வங்கி ஆண்டுக்கு 10.5 சதவீதம் வட்டியுடன் கூடிய 900 நாட்கள் டிபாசிட் திட்டத் தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் வரும் 9ம் தேதி முதல் திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதுவரை 4,000 கோடி ரூபாய் இதில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இனி, அதிக பட்ச வட்டி 10 சதவீதமாக இருக்கும். இவ்வாறு யூனியன் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

அதிக சத்தம் வருகிறது : டில்லி விமான நிலையத்திற்கு எதிராக கோர்ட் செல்ல முடிவு

புதுடில்லி : டில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிக சத்தம் வருகிறது என்றும் அதவனால் அமைதியாக குடியிருக்க வேண்டியதில்லை என்றும் அந்த விமான நிலையத்தை சுற்றிலும் குடியிருக்கும் மக்கள் டில்லி ஐகோர்ட்டை அணுக இருக்கிறார்கள். பகல் நேரங்களில் 55 டெசிபலும் இரவு நேரத்தில் 45 டெசிபலும்தான் சத்தம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு 90 டெசிபல் சத்தம் இருக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பங்கு வர்த்தகத்தின் சரிவு நிலையால்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 18 சதவீதம் குறைந்தது

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 18 சதவீதம் சரிவடைந்துள்ளது. பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை மற்றும் வாடிக்கையாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டை அதிக அளவில் விலக்கிக் கொண்டது உள்ளிட்ட காரணங்களால் முன்னணி பரஸ்பர நிறுவனங்களின் சொத்து மதிப்பிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
35 நிறுவனங்கள்
சென்ற செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், 35 பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.5,29,102.92 கோடியாக இருந்தது. இது ஒரே மாதத்தில் அதாவது அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.97,201.50 கோடி குறைந்து மாத இறுதியில் ரூ.4,31,901.42 கோடியாக சரிவடைந்துள்ளது. ரிலையன்ஸ் எம்.எஃப், எச்.டீ.எஃப்.சி. எம்.எஃப், ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல், யூ.டி.ஐ. எம்.எஃப் மற்றும் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ஆகிய ஐந்து முன்னணி பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் மொத்தம் ரூ.45,000 கோடி குறைந்துள்ளது.
நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அடிப்படையில் நாட்டின் மிகப் பெரிய பரஸ்பர நிதி நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் சுமார் 18 சதவீதம் (ரூ.15,400.75 கோடி) சரிவடைந்து ரூ.71,093.70 கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற 2007&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பிற்கு சமமானதாகும். இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.ஒரு லட்சம்கோடியை எட்டிஇருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று இரண்டாவது இடத்தில் உள்ள எச்.டீ.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் சொத்து மதிப்பும் 12.5 சதவீதம் சரிவடைந்து ரூ.45,479.37 கோடியாக குறைந்துள்ளது. மூன்றாவது மிகப் பெரிய பரஸ்பர நிதி நிறுவனமாகத் திகழும் ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் ரூ.10,590 கோடி குறைந்து ரூ.39,182.45 கோடியாக சரிவடைந்துள்ளது. இதேபோன்று யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் சொத்து மதிப்பும் 14.21 சதவீதம் சரிவடைந்துள்ளது. ரூ.38,283.63 கோடியாக குறைந்துள்ளது.
மேலும் ஐ.டீ.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்டு (ரூ.1,616 கோடி), எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்டு (ரூ.2,982 கோடி), கனரா ரொபேக்கா (ரூ.2,021 கோடி) மற்றும் ஃபிடலிட்டி மியூச்சுவல் ஃபண்டு (ரூ.1,218 கோடி) ஆகிய பரஸ்பர நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் சொத்து மதிப்பும் ரூ.4,500 கோடி குறைந்து ரூ.24,727 கோடியாக சரிவடைந்துள்ளது.
பணப்புழக்கம்
சென்ற அக்டோபர் மாதத்தில் நாட்டில் பணப்புழக்கம் மிகவும் குறைவாக இருந்தால் முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி சில்லரை முதலீட்டாளர்களும் பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொண்ட முதலீட்டை வரலாறு காணாத அளவில் திரும்ப பெற்று வந்தனர். இதனால் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகளுக்கு குறுகிய கால அடிப்படையில் ரூ.20,000 கோடி கடனாக வழங்க சென்ற அக்டோபர் மாதத்தில் பாரத ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்தது என்பது கவனிக்கத்தக்கது. கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளான பரஸ்பர நிதி நிறுவனங்கள் சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும் கடன் பத்திரங்களில் மேற்கொண்ட முதலீட்டில் ரூ.26,081 கோடியை விலக்கி கொண்டுள்ளன.
பங்கு வர்த்தகம்
இந்நிலையில், சென்ற அக்டோபர் மாதத்தில் நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது. சென்ற அக்டோபர் 1&ந் தேதி அன்று ‘சென்செக்ஸ்’ 13,055.67 புள்ளிகளாக இருந்தது. இம்மாதத்தில் மட்டும் ‘சென்செக்ஸ்’ 3,200 புள்ளிகளை இழந்து மாத இறுதியில் 9,788.06 புள்ளிகளாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால்தான் அக்டோபர் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் பலத்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களின் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை திரட்டுகின்றன. இத்தொகை நிறுவனப் பங்குகள், நிதிச் சந்தை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன. இத்தொகையே பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து என்று அழைக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொண்ட முதலீட்டை அதிக அளவில் விலக்கிக் கொள்ளும்போதும் பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்து பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனப் பங்குகளின் விலையில் வீழ்ச்சி ஏற்படும்போதும் பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு குறைந்து விடுகிறது.

பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையிலும்

டீமேட் கணக்கு தொடங்குவது அதிகரிப்பு

பங்கு வர்த்தகம் சுணக்கமாக உள்ள நிலையிலும், பங்குகளில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்களின் ஆர்வம் குறையவில்லை. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான மின்னணு கணக்குகள் (டீமேட் அக்கவுண்ட்ஸ்) வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சென்ற 10 மாதங்களில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
21.6 லட்சம் பேர்
நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி நிறுவனம், வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நிறுவனப் பங்குகளை மின்னணு வடிவில் பராமரித்துத் தரும் சேவையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தில், சென்ற 10 மாதங்களில் மொத்தம் 21.6 லட்சம் பேர் புதிதாக மின்னணு கணக்குகளை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம், அக்டோபர் 25&ந் தேதி வரையிலான காலத்தில் 95.48 லட்சம் டீமேட் கணக்குகளை நிர்வகித்து வருகிறது.
இதேபோன்று, சென்ட்ரல் டெபாசிட்டரி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில் மின்னணு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் 21.08 லட்சம் அதிகரித்துள்ளது. சென்ற 10 மாதங்களில் மேற்கண்ட இரு நிறுவனங்களிலுமாக மொத்தம் 50 லட்சம் பேர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான மின்னணு கணக்குகளை (டீமேட் அக்கவுண்ட்ஸ்) தொடங்கி உள்ளனர். அதேசமயம், இதே காலத்தில் மொத்தம் 12 லட்சம் பேர் மின்னணு கணக்குகளை ரத்து செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் 21,000 புள்ளிகளை தாண்டி இருந்த ‘சென்செக்ஸ்’ இதுவரை சுமார் 12,000 புள்ளிகளை இழந்திருந்தது. ஆக, நடப்பு 2008&ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பங்கு வியாபாரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சிறந்த முறையில் செயல்பாடுகளை கொண்டுள்ள நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்துள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, இத்தகைய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
முதலீட்டாளர்கள்
இது குறித்து பங்கு வர்த்தக நிபுணர் ஒருவர் கூறும்போது, “சென்ற 2007&ஆம் ஆண்டில் நாட்டின் பங்கு வர்த்தகத்தில் எழுச்சி ஏற்பட்டிருந்தபோது அதனை பயன்படுத்தி கொள்ள தவறிய சில்லரை முதலீட்டாளர்கள் தற்போது பங்குகளின் விலை குறைந்துள்ளதால் பங்குகளில் முதலீடு செய்வதை சிறந்த வாய்ப்பாக கருதுகின்றனர்” என்று தெரிவித்தார்.

 

எல்.ஐ.சி. நிறுவனம்

நிறுவன கடன் பத்திரங்களில் ரூ.15,000 கோடி முதலீடு

ரீனா சகரியா
மும்பை
பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் டாட்டா குழுமம், லார்சன் & டூப்ரோ, மகிந்திரா & மகிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களில் (என்.சி.டீ.) ரூ.15,000 கோடி முதலீடு செய்துள்ளது. வங்கிகள் நிறுவனங்களுக்கு கடன் வழங்க தயக்கம் காட்டி வரும் நிலையில், எல்.ஐ.சி.யின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
11 சதவீதம்
பங்குகளாக மாறக்கூடிய கடன் பத்திரங்களைக் காட்டிலும், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களில் செய்யப்படும் முதலீட்டிற்கு அதிக வட்டி கிடைக்கிறது. தற்போதுள்ள நிலவரப்படி 5&10 ஆண்டுகள் முதிர்வு காலத்தை கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் ஆண்டிற்கு 11 சதவீத வட்டி கிடைக்கும். அதேசமயம் இந்த கடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் “ஏஏ” என்ற தர நிர்ணயத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
எல்.ஐ.சி. நிறுவனம் சென்ற மாதத்தில் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா சன்ஸ் உள்ளிட்ட டாட்டா குழும நிறுவனங்களால் வெளியிடப்பட்ட என்.சி.டீ. கடன் பத்திரங்களில் ரூ.2,200 கோடி முதலீடு செய்து இருந்தது. பொதுவாக நிறுவனங்கள் அவற்றின் நடைமுறை செயல்பாட்டு செலவினத்திற்காகவும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் இவ்வகையான கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன.
பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகத்தின் தேக்கநிலையால், நிறுவனங்களுக்கு பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட முடியவில்லை. தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகின்றன. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடியால் இந்திய நிறுவனங்களால் வெளிநாட்டு வணிகக் கடன் வாயிலாக நிதி திரட்டுவதும் பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் டாட்டா குழுமம் மற்றும் ண்டால்கோ நிறுவனங்கள் வெளியிட்ட உரிமை பங்குகளுக்கும் அவற்றின் பங்குதாரர்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் பல இந்திய நிறுவனங்கள் பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை (என்.சி.டீ.) வெளியிட்டு நிதி திரட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், எல்.ஐ.சி. நிறுவனம் மொத்தம் ரூ.15,000 கோடி முதலீடு செய்துள்ளது.

 

நோக்கியாவில்600 பேர்வேலையிழப்பு
 
  
ஹெல்சிங்கி, நவ. 3: செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் 600 ஊழியர் களை ஆள்குறைப்பு செய்துள்ளது
இந்நிறுவனத்தின் விற்பனைப் பிரி வில் பணியாற்றிய ஊழியர்கள் தற் போது ஆள்குறைப்பு செய்யப்பட்ட னர்
விற்பனை மற்றும் சந்தை பிரிவு களை மறு சீரமைப்பு செய்யும் நட வடிக்கையை நோக்கியா மேற் கொண்டுள்ளது. இதனால் பின் லாந்து ஆலையில் மட்டும் விற்ப னைப் பிரிவில் பணியாற்றிய 100 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இது தவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் 130 பேர் வேலையிழந் துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந் நிறுவனத்தின் பல்வேறு ஆலைக ளில் 600 பேர் வேலையிழந்துள்ள தாக இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம் கடந்த ஞானம்
 
 
20-ம் நூற்றாண்டில் மகத்தான அறிவியல் சாதனைகளின் காரணமாக உணவுப்பொ ருள் உற்பத்தி பன்மடங்கு பெருகியபோதி லும் உலகின் பல பகுதிகளில் மக்கள் கால் வயிறு, அரை வயிறு உணவு மட்டுமே பெற முடிவது மனித இனத்துக்கே தலைகுனிவை உண்டாக்கும் விஷயம்
இயற்கையைப் பாதுகாக்கிறதாகச் சொல் லிக்கொண்டு வதந்திகளையும் புரளிகளையும் பரப்புகிற ஒரு கூட்டம்தான் இந்த விஷயத் தில் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள்
உதாரணமாக மரபு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறைந்த செலவில் அதிக விளைச்ச லைத் தருவதாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவற்றை எதிர்த்துக் கூச்சல் போட எல்லா நாடுகளிலும் ஒரு கூட்டம் இருக்கிறது
இளவரசர் சார்லஸ் போன்ற பிரமுகர்கள் மரபு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்துக் குர லெழுப்பும்போது குறிப்பாக மேலைநாட்டு ஊடகங்கள் அவர்களுக்குப் பெரும் விளம்ப ரத்தை அளிக்கின்றன. மரபு மாற்றம் செய்த பருத்தியைச் சரியான முறையில் சாகுபடி செய்து லாபம் சம்பாதித்த விவசாயிகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. மாறாக, போலி விதைகளையும் தவறான உத்திகளை யும் கையாண்டு சீரழிந்த விவசாயிகளைத் தான் அவை பிரபலப்படுத்துகின்றன. இத்த கைய விஷமங்களுக்கு மேலை நாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நிகழும் அதர் மப் போட்டியே காரணம்
1960-களில் இயற்கையைப் பாதுகாப்பதா கக் கூறிக் கொண்டு அணுமின் நிலையங்கள் நிறுவப்படுவதை இக்கூட்டம் தடுத்தது
அதன் காரணமாகவே இன்று பெட்ரோல், டீசல் விலையேற்றமும் ஆற்றல் பற்றாக்குறை யும் ஏற்பட்டுள்ளன. இன்று அதே கூட்டம் எத்தனால் பெட்ரோலை உற்பத்தி செய்வதற் காக சோளம், கரும்பு போன்ற பயிர்களைப் பயிரிட உதவித்தொகை தரும்படி அரசுக ளைக் கட்டாயப்படுத்துகிறது. அதன் காரண மாக உணவுப் பயிர்களின் உற்பத்தி பாதிக்கப் பட்டு உலகம் முழுவதும் உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டிருக்கிறது
அடுத்து இயற்கைக் காவலர்கள் மனிதச் செயல்களால் உலகின் சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டிருப்பதாகவும், துருவப் பகு திகளிலுள்ள பனியாறுகள் உருகிக் கடல் மட் டம் உயர்ந்து பல கடற்கரையோர ஊர்களை யும், சிறு தீவுகளையும் இன்னும் பத்தாண்டுக ளில் மூழ்கடித்துவிடும் என்று மக்களைப் பய முறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலை நாடுகளின் அரசுகளும் தொழிலதிபர் களும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளிலுள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்களே இதற்குப் பொறுப்பு எனப் பழி போடுகின்றனர்
அதன் மூலம் வளரும் நாடுகளின் தொழில் வளப் பெருக்க வேகத்தை முடக்குவதே அவற் றின் இலக்கு என்பது தெளிவு
ரஷிய விஞ்ஞானிகள் தென் துருவத்தில் 3.5 கிலோமீட்டர் ஆழத்திலி ருந்து பனிக்கட்டி மாதிரிகளை எடுத்துச் சோதித்துக் கடந்த நான்கு லட்சம் ஆண்டுக ளில் வாயு மண்டலத்தின் கூட்டமைப்பிலும் உலகளாவிய வெப்பநிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்
அவற்றின் மூலம் உலக வெப்ப நிலை உயர்வுக் குக் கரியமில வாயுச்செறிவு அதிகரித்தது கார ணமில்லை எனவும் அதற்கு மாறாக வெப்ப நிலை உயர்ந்தது தான் கரியமில வாயுச்செ றிவு அதிகரித்ததற்குக் காரணம் என்று அவர் கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். வாயு மண்டல வெப்பநிலை உயர்ந்து 500, 600 ஆண்டுகளுக்குப் பின்னரே கரியமில வாயுச் செறிவு உயரத் தொடங்குகிறது. அதாவது இன்று வாயு மண்டலத்தில் கரியமில வாயு வின் செறிவு உயர்வதற்கு 300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மேலைநாட்டுத் தொழிற்புரட் சிச் சம்பவங்களே கூடக் காரணமாயிருக்க லாம்
அத்துடன் கரியமில வாயுவைவிட 5 முதல் 10 மடங்கு அதிகமான செறிவில் நீராவி வாயு மண்டலத்தில் பரவியிருக்கிறது. வாயு மண்ட லத்தின் வெப்பநிலை உயர்வுக்குக் கரியமில வாயுவைவிட நீராவியன் பங்குப்பணி பன்ம டங்கு அதிகம் என ரஷிய விஞ்ஞானிகள் சுட் டிக்காட்டுகிறார்கள்
சூரியப்புள்ளிக் கதிர்வீச்சு, பூமி யின் அச்சுத் தலையாட்டம் கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங் கள், கடலின் மேற்பரப்பில் உப்பின் செறிவு அதிகரிப்பு போன்ற பல் வேறு காரணங்களாலும் உலகளா விய வெப்பநிலை உயரும். எனவே கரியமில வாயுவை மட்டும் அதற்குப் பொறுப்பாக்கக் கூடாது. உண்மையில் வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகமாகிறபோது கடல்களிலும் நிலங் களிலும் தாவரங்களும், பயிர்களும் காடுக ளும் பெருகியிருக்கின்றன என்று ரஷிய விஞ் ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்
இன்றிருப்பதைவிடப் பத்து லட்சம் மடங்கு அதிகமான செறிவில் கரியமிலவாயு பரவியிருந்த காலகட்டங்களில் கூட உயிரி னப் பரிணாமம் குலைந்து விடவில்லை என அருட்யுனாவ் என்ற ரஷிய விஞ்ஞானி கூறுகி றார். உலகின் சமன்செய்யும் அமைப்புகள் வானிலையில் ஏற்படும் தீவிர மாற்றங்களின் கடுமையைக் குறைத்து விடுகின்றன. உதாரண மாக வெப்பநிலை உயர்ந்தால் கடல் நீர் அதிக அளவில் ஆவியாகிக் கனத்த மேகங்கள் தோன்றிச் சூரியக்கதிர்களைத் தடுத்துப் பூமிப் பரப்பின் வெப்பத்தைக் குறைக்கும்
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வளிமண் டல வெப்பநிலை உயர்வைத் தடுப்பதற்கான கியோட்டோ விதிமுறைகள் மேலைநாடுக ளின் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்க ளும் வளர்ந்து வரும் நாடுகளை முடக்கி விடச் செய்த சதி என கபிட்சா என்ற ரஷிய அறிஞர் கூறுகிறார். அவற்றுக்கு எதிரான கருத்துகளைக் கூறுகிறவர்களுக்குச் சர்வதேச அரங்குகளில் பேச அனுமதி கிடைப்ப தில்லை. மேலைநாட்டு ஊடகங்கள் அவர் களை இருட்டடிப்புச் செய்கின்றன. அவர்க ளுடைய ஆய்வுக்கட்டுரைகள் மர்மமாகக் காணாமல் போக்கப்படுகின்றன
ஆற்றல் செலவைக் குறைக்கவும், அதிகச் செயல்திறனுள்ள தொழில் உத்திகளை உரு வாக்கவும் கியோட்டோ விதிமுறைகள் செய் யும் முயற்சிகளை வரவேற்கலாம். ஆனால் அது நிஜமான சுற்றுச்சூழல் பிரச்னைகளை யும், நிலமும் நீரும் தொழில் துறையினரால் மாசுபடுத்தப்படுவதையும் கண்டுகொள்வ தில்லை. அது கரியமில வாயுவில் மட்டுமே அளவுக்கு அதிகமான கவனத்தைச் செலுத்து கிறது
சில ஆண்டுகளுக்கு முன் குளிர்சாதனங்க ளில் பயன்படுத்தப்படும் இஊஇ வாயுக்கள் வளி மண்டல மேற்பரப்பில் உள்ள ஓசோன் பட லத்தை அழித்து ஓட்டையாக்குவதாகவும் அதன் மூலம் மக்களுக்குத் தோல் புற்றுநோய் உண்டாகும் எனவும் பெரிதாகப் பிரசாரம் செய்யப்பட்டது. 1982-ல் மான்ட்ரியால் விதி முறைகள் அந்த வாயுக்களின் பயன்பாட் டைத் தடை செய்தது. அதற்கு மாற்றாக பிரி யான் என்ற வாயுவைப் பயன்படுத்த உலக நாடுகள் வற்புறுத்தப்பட்டன. அதற்கு ஏக போகக் காப்புரிமை பெற்றிருந்து டூபான்ட் என்ற அமெரிக்க நிறுவனம் பல்லாயிரம் கோடி டாலர் லாபமடைய அந்தத் தடை உத வியது. ஆனால் இஊஇ வாயுக்கள் ஓசோன் பட லத்துக்கு அருகில் கூடப் போவதில்லை என் பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. பிரி யான் வாயு நச்சுத்தன்மையும், வெடிக்கும் தன் மையும் கொண்டது என்று தெரிய வந்ததும் பிரியான் விற்பனை படுத்துவிட்டது
1970-களில் உலக வெப்பநிலை சற்றுக்கு றைந்தபோது இதே மேலை நாட்டு அறிஞர் கள் பனியுகம் வரப்போவதாயும் உலகம் முழு வதும் உறைந்து விடப் போவதாயும் பெருங்கு ரல் எழுப்பினார்கள். அதற்கு வளரும் நாடுக ளின் தொழில் துறைகள் வெளியிடும் புகை யும் தூசுகளும் சூரியக் கதிர்களைத் தடுப்பதா கக் காரணம் சொன்னார்கள்
உண்மையில் சூரியப்புள்ளி விளைவு கார ணமாக 30 ஆண்டுகளுக்கு வாயுமண்டல வெப்பநிலை படிப்படியாகக் குறைவதும் அடுத்த 30 ஆண்டுகளுக்குப் படிப்படியாக அதிகரிப்பதாயும் தான் இருக்கிறது என்று ரஷிய ஆய்வுகள் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அன்டார்டிக்காவில் சராசரி வெப்பநிலை குறைந்து வருவதாயும் அங் குள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்து வருவதாயும் அவர்கள் கண்டுபிடித்திருக்கி றார்கள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: