இந்தியாவுக்கு பாதிப்பு தான்: மன்மோகன் வெளிப்படை

NIFTY FUTURE

Short Term Target for NF is 2500-2200 level

SENSEX

 Ultimate Target :7247–6084

 

alert31

 MARKETMOOD

VOLATILE

“Below 3013..Don’t hod Lng “

110% will crash to kiss 2913–2877-2856 ….Today or Tomorrow !!

Hourly chart indicates…Before

EXIT from all Long POSTIONS !!!* Welcome to Dystopia!

*10 economic challenges for new president

*Dow theorist sees recession ending by mid-2009

*The bears are only taking a nap?

*Comparing stock market crashes

 

Have u seen Triangle of 3066 Points or Not ??

Triangle Height indicates ..Tgt of 9087

Below 12500..Bears will kill this Mkt.

Our Target Intact ,Sensex will go below 10000 level very very soon

Our Ultimate Target :7247–6084

 

 

Two Consecutive close /Weekly close above 10044 will take Sensex to 10826—–11087.

Today …..if not crosses 10373 & trades below 10206 will take to

9868——-9704 or expect panic upto 9677 level.

 

 

NIFTY FUTURE :

 

 

 

 

Look @ 893 points triangle in Weekly Chart.

Boldly Recommended to sell and Exit at 3850 level with target of 2955 level.

(So…what u think…by spreading RumoursNF can crack ?? )

So what will happen to NATKHAT NIFTY ????

“God will also not able to save this market “

110% ,NF will crash and kiss 2955 level….very soon

 

Writing below mentioned levels..When NF was 

5200 level )

-It made low of 3762 & zoomed to kiss 4654-

But ,On Rise……Exit from Indian Stock Market.

110% No if & But.

Our Target intacts :3638—–3420

1st Target of 3800 achieved (This level we had written when NF was trading at 5200 level )

2nd Target :Ratio of 1:1 (3638 )

3rd Target :3420..(Triangle Breakout Tgt )

(Already achived and kissed low of 3216 on Friday :10th Oct )

(Made low of 3101 on Thursday :16th Oct )

Our Target Revised :2900-2950 in Next 1 Months.

( On 17th Oct ….Made a low of 3050 )

(On 23rd Oct …it kissed low of 2905 )

Our Short Term Target for NF is 2500-2200 level

(Just see on Friday (24th Oct ) it kissed low of 2513 & closed at 2559…………THINK THINK THINK !!!

(Just see on Monday (27th Oct )it kissed low of 2228 & taken U-turn……THINK THINK THINK !!

Have u gone short yesterday ??Your Answer will be NO.

Today…….If not crosses Yesterday’s High of 3065 & trades

 

 below 3013 then watch freefall upto 2913-2877 in hrs only.

 

Below 3013…Don’t hold long postion.It may even kiss 2856-2804 level in next 1-2 days.

Today …101% Go short in NF @ 3070-3130

Today…Above 3072 will kiss 3096-3100 level.

(Go short on RISE )

Now….if closes above 3072 for 2 Consecutive days…then watch

Nonstop explosive move upto 3353—3447.

(But chances are very very very remote ).

 

 

உலக பொருளாதார மந்தநிலையால் செப்டம்பரில் இறக்குமதி குறைந்தது

புதுடில்லி: உலக அளவில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலையால், செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி 10.4 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 43.3 சதவீதம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள தகவல்களில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஏற்றுமதி 27 சதவீதம் கூடியது. அதே நேரத்தில், உலக அளவில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலையால், செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி 10.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. உலக நாடுகள் இந்திய பொருட்களை குறைவாக வாங்கியதே இதற்கு காரணம். செப்டம்பர் மாதத்தில் மொத்த ஏற்றுமதி 62 ஆயிரம் கோடி ரூபாய். அதே நேரத்தில் செப்டம்பர் மாதத்தில் இறக்குமதி 43.3 சதவீதம் கூடியுள்ளது. 1.10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்ததால், எண்ணெய் இறக்குமதிக்காக 57.1 சதவீத தொகை அதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்ததால், செப்டம்பர் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 48 ஆயிரம் கோடி ரூபாய். முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 20 ஆயிரம் கோடி.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி 30.9 சதவீதம் கூடியது. அதேநேரத்தில், இறக்குமதி 38.5 சதவீதம் கூடியது

ஆந்திரா வங்கியில் புது திட்டம் அறிமுகம்

சென்னை: ஆந்திரா வங்கி, மெட்ரோவில் உள்ள தனது அனைத்துக் கிளைகளிலும் இரண்டு புதிய கணக்கு வசதிகளை அறிமுகப் படுத்தியுள்ளது. ‘கோர் வங்கி’ இணைப்பில் உள்ள தனது அனைத்து கிளைகளிலும் ‘ஏ.பி. ப்ரிவிலேஜ்’ மற்றும் ‘ஏ.பி.ப்ரீமியம்’ என இரண்டு புதிய கணக்கு திட்டங்களை ஆந்திரா வங்கி அறிமுகப்படுத்தியது.கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கான சம்பள சேமிப்புக்கணக்கில் ‘ஏ.பி. ப்ரிவிலேஜ்’ அளிக்கப்படுகிறது. இந்த வசதிப்படி, கார்ப்பரேட் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் கணக்குத் துவக்க முதலீடு தேவையில்லை.இலவச இன்டர்நெட் வங்கி பரிவர்த்தனை, ஆந்திரா வங்கி அல்லாத ஏ.டி.எம்.,களில் இலவச சேவை, இலவச கணக்கு விவர அறிக்கை, இலவச ஏ.டி.எம்., மற்றும் டெபிட் கார்டு, இலவச ‘டி மேட்’ கணக்கு போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.இந்த கணக்கை துவக்க, ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 25 ஊழியர்களும், அவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய்க்கு மேலான சம்பளமும் இருக்க வேண்டும். அடுத்ததாக, ‘ஏ.பி. ப்ரீமியம் கரன்ட் அக்கவுன்ட்’ என்ற வசதிப்படி, எந்த கிளையிலும் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். தங்களது கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருக்க வேண்டும். உடனடி நிதி பரிமாற்றம், பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தில் 50 சதவீத சலுகை, இலவச இன்டர்நெட் வங்கி பரிவர்த்தனை, இலவச ஏ.டி.எம்., மற்றும் டெபிட் கார்டு, இலவச ‘டி மேட்’ கணக்கு, இலவச கிரெடிட் கார்டு போன்ற வசதிகள் இதில் தரப்படுகின்றன

பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்தித்தார் சிதம்பரம்

புதுடில்லி : இந்திய பொதுத்துறை வங்கி தலைவர்களை இன்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சந்தித்து பேசியுள்ளார். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நடவடிக்கையால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறதா என்பது பற்றியும், தாராளமாக கடன் வழங்குவது குறித்தும் அவர் வங்கி தலைவர்களிடம் விவாதித்ததாக தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமைதான் , பொதுத்துறை வங்கிகளை வட்டியை குறைக்க சொல்லி கேட்பேன் என்று சிதம்பரம் சொல்லியிருந்தார். இன்று இது குறித்து வங்கி தலைவர்களுடன் விவாதித்த சிதம்பரம், சர்வதேச அளவில் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கலால் இந்திய வங்கிகள் எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பது பற்றியும், அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் விவாதித்திருக்கிறார். இன்று நடந்த கூட்டத்தில் ஸ்டேட் பேங்க் சேர்மன் ஓ.பி.பாத்,பஞ்சாப் நேஷனல் பேங்க் தலைவர் சக்ரபர்த்தி, பேங்க் ஆஃப் பரோடா சேர்மன் மல்யா, கனரா பேங்க் தலைவர் மஹஜன், யுகோ பேங்க் சிஎம்டி கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தவிர நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.நேற்றுதான் பிரதமர் மன்மோகன்சிங்,தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 ரேடியோ ஆப்பரேட்டரால்தான் டைட்டானிக் கடலில் மூழ்கியதா ? : புதிய தகவல்

லண்டன் : பக்கத்திலேயே வந்து கொண்டிருந்த இன்னொரு கப்பலின் ரேடியோ ஆப்பரேட்டருடன், டைட்டானிக் கப்பலின் ரேடியோ ஆப்பரேட்டர் சண்டையிடாமல் இருந்திருந்தால் டைட்டானிக் கப்பல் மூழ்காமல் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று இப்போது வெளியிட்ட ஒரு டாக்குமென்டரியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 96 ஆண்டுகளுக்கு முன் 1500க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிப்போனதற்கு, அந்த கப்பலின் ரேடியோ ஆப்பரேட்டர்தான் காரணம் என்று அது தெரிவிக்கிறது. கடந்த 1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் தேதி, பனிப்பாறை ஒன்றில் மோதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் 25 வயது ஜாக் பிலிப் என்பவர் ரேடியோ ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். அப்போது டைட்டானிக் கப்பலுக்கு சுமார் 20 மைல்களுக்கு அப்பால் எஸ்எஸ் கலிபோர்னியன் என்ற இன்னொரு கப்பலும் வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலுக்கு, எதிரே இருந்த பனிப்பாறை தெரிந்திருக்கிறது. அதனை டைட்டானிக் கப்பலுக்கு சொல்லி எச்சரிக்க செய்ய முயன்ற போது, டைட்டானிக் ரேடியோ ஆப்பரேட்டரோ, அவரது கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் அனுப்பச்சொன்ன ஏராளமான வாழ்த்து தகவல்களை கையில் வைத்துக்கொண்டு அதைத்தான் சீரியஸாக அனுப்பிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில், எஸ்எஸ் கலிபோர்னியன் கப்பலிலின் ரேடியோ ஆப்பரேட்டர் சிரில் ஈவன்ஸூடன், டைட்டானிக் ரேடியோ ஆப்பரேட்டர் பிலிப் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த சிரில் ஈவன்ஸ், ரேடியோவை ஆஃப் செய்து விட்டார். அதாவது டைட்டானிக், பனிப்பாறையில் மோதுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் தான் ரேடியோ ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அதன்பின் டைட்டானிக் கப்பலில் இருந்து வந்த அபாய அறிவிப்பு ( எஸ் ஓ எஸ் ), பக்கத்து கப்பலான எஸ் எஸ் கலிபோர்னியனுக்கு வந்து சேரவே இல்லை. இதனால் டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி, 1523 பேர் இறந்திருக்கிறார்கள். ரேடியோ ஆப்பரேட்டர் பிலிப்பும் இறந்து விட்டார். டைட்டானிக், முழுமையாக கடலில் மூழ்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கிறது. இந்த தகவல் மட்டும் 20 மைல்களுக்கு அப்பால் வந்து கொண்டிருந்த எஸ் எஸ் கலிபோர்னியனுக்கு தெரிந்திருந்தால் டைட்டானிக்கில் உள்ள அத்தனை பேரையுமே அது காப்பாற்றி இருக்குமாம். த அன்சிங்கபிள் டைட்டானிக் என்ற டாகுமென்டரியில் இந்த தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள சௌத்தாம்டன் நகரில் இருந்து நியுயார்க்கிற்கு சென்று கொண்டிருந்த டைட்டானிக், ஏப்ரல் 14, 1912 இரவில் பனிப்பாறையில் மோதியது. மோதிய பின், 2 மணி 40 நிமிடத்தில், அதாவது அடுத்த நாள் அதிகாலையில்தான் அது கடலில் முழுமையாக மூழ்கி இருக்கிறது. அந்த சமயத்தில் டைட்டானிக்தான், உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவி கப்பலாகவும், அதிக தொழில் நுட்பத்தை கொண்டிருந்த கப்பலாகவும் இருந்தது.

வட்டிவிகித மாற்றம் குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு : ஐசிஐசிஐ பேங்க்

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க், இன்னும் சில தினங்களில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் என்று தெரிகிறது. வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, சமீபத்தில் ரிசர்வ் வங்கி, சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை குறைத்தது. இதன் காரணமாக வங்கிகளும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐசிஐசிஐ பேங்க் இன்னும் சில தினங்களில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் என்று அதன் தலைமை நிர்வாகி தெரிவித்தார். எதிர்பாராதவிதமாக ரிசர்வ் வங்கி, கடந்த சனிக்கிழமை அன்று, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தில் ( சி.ஆர்.ஆர். ) ஒரு சதவீதத்தை குறைத்து 5.5 சதவீதமாக்கியது. அதே போல் ரிபோ ரேட் என்ற வங்கிகளுக்கான குறைந்த கால வட்டியையும் ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்து 7.5 சதவீதமாக்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த ஐசிஐசிஐ பேங்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.காமத், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். அதனையடுத்து இன்னும் சில தினங்களில் நாங்களும் வட்டியை குறைப்பது பற்றி முடிவு செய்வோம் என்றார்.

இந்தியாவுக்கு பாதிப்பு தான்: மன்மோகன் வெளிப்படை

2943799

புதுடில்லி: ‘சர்வதேச நிதி நெருக்கடியால், இந்தியாவிற்கு ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், வங்கிகளில் பொதுமக்கள் வைத்துள்ள டிபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளன. பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்க, அரசு மேலும் நடவடிக்கைகளை எடுக்கும்’ என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலில் இருந்து இந்தியாவை மீட்கவும், தொழில் துறையின் நம்பிக்கையை பலப்படுத்தவும், முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் பங்கேற்றனர்.அசோசெம் சார்பில் சாஜன் ஜிண்டாலும், சி.ஐ.ஐ., சார்பில் கே.வி.காமத், எப்.ஐ.சி.சி.ஐ., சார்பில் ராஜிவ் சந்திரசேகரும் பங்கேற்றனர். டி.எல்.எப்., நிறுவனத்தின் தலைவர் கே.பி.சிங், ரத்தன் டாடா, அனில் அம்பானி, முகேஷ் அம்பானி(ரிலையன்ஸ்), சுனில் மிட்டல்(பாரதி) ஆனந்த் ஜி மகேந்திரா (மகேந்திரா அண்ட் மகேந்திரா), எச்.டி.எப்.சி., சேர்மன் தீபக் பரேக், ஐ.டி.சி., சேர்மன் தேவேஷ்வர் உட்பட பல தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இந்தியாவை ஓரளவு பாதித்துள் ளது. இருப்பினும், இதன் தாக்கம் இனி வரும் காலங்களில் கடுமையாக இருக்கலாம் அல்லது நீடித்து இருக்கலாம். இதன் மூலம் நமது வங்கிகள், கம்பெனிகள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச அளவில் தற்போதுள்ள நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைக் குறைத்துள் ளன.நமது வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வங்கிகளில் போட்டுள்ள பொதுமக்களின் டிபாசிட்டுகள் பாதுகாப்பாக உள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்க, வங்கிகளுக்கு ஆதரவு அளிக்க அரசு தயாராக உள்ளது. பணப்புழக்கத்திற்காக சமீபத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும், குறுகிய கால கடன்களுக்கான ரெபோ ரேட்டும் குறைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு வங்கிகள் நியாயமான விகிதங்களில் மேலும் கடன்களை வழங்க வேண்டும்.பொருளாதார வளர்ச்சியைப் பாதுகாக்க, மேலும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. தேவைப்பட்டால், கட்டாய மற்றும் நிதிக் கொள்கைகளை கொண்டு வரவும் அரசு தயாராக உள்ளது. அன்றாடம் நிலைமைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவைப் பட்டால், மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தயங்காது. சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்க தேவையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கும் படி, சர்வதேச நிதி அமைப்புகளை இந்தியா கோரும். மற்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து, சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு பெறுவதில் முழு மூச்சாக செயல்படுவோம்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாளிக்க, தொழிற்துறையினர் மனந்தளராமல் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். இது, எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும். இக்கட்டான சூழ்நிலையை இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். நமது சேமிப்பும், மூலதன வீதமும் கடந்த காலங்களில் மிக வலுவாக இருந்துள்ளன. அதனால் தான் இந்தளவிற்கு நாம் தாக்குப் பிடித்து நிற்க முடிகிறது. அரசும், தொழிற்துறையும் முழுமையான மனதுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு சவால்களை சந்திக்க வேண்டும். இந்த நேரத்தில், நமது அனைத்து முயற்சிகளும் செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்குவதாக இருக்க வேண் டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.இக்கூட்டத்தில் தொழிற்துறையினரிடம், பணப் பற்றாக்குறை வராது என்று பிரதமர் உறுதியளித்ததாக தொழிலதிபர் சாஜன் ஜிண்டால் கூறினார். தொழிற்துறையை அரவணைக்க உயர்மட்ட அதிகார கமிட்டி: பணப்புழக்கம் உட்பட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் தொழிற்துறையினருக்கு உதவுவதற்காக அரசு, உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.பிரதமர் நேற்று கூட்டிய தொழிற்துறையினர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நிருபர்களிடம் வர்த்தகத் துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:சர்வதேச நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கவும், வேலை இழப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கில் உயர்மட்ட கமிட்டி ஒன்றை அரசு அமைத்துள்ளது.தொழிற்துறையினருக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு இக்கமிட்டி வழி காணும். குறிப்பாக அரசுக்கும், தொழிற்துறைக்கும் இக்கமிட்டி முக்கிய பாலமாகச் செயல்படும்.இக்கமிட்டிக்கு பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ தலைமை ஏற்கக் கூடும். வீடு மற்றும் கட்டுமானத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு அரசு சாதகமாக நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு பிள்ளை கூறினார்.அதே சமயம், சிகாகோ பல்கலைப் பேராசிரியர் ரகுராம் ராஜன், பிரதமரின் கவுரவ பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்

 

என்ன பாதிப்பு? என்ன தீர்வு?
   
டி.முரளீதர் (தலைவர், கர்நாடக தொழில் வர்த்தக சபை): அமெரிக்காவில் உள்ள பல்வேறு தனியார் வங் கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால், அந்த நிறுவனங்கள் திவால் ஆகிவிட்ட நிலையில், அந்த நாடு ஒரே நாளில் பெரிய பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளது
இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்தும், பலர் ஓரே நாளில் ஏழை களாகவும் ஆகிவிட்டனர்
இந்த நிலையை சமாளிக்க அமெரிக்க அரசாங் கம் எடுத்த நடவடிக்கைகளும் பலனளிக்க வில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த சரிவை இப்போது தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலைக்கு தள் ளப்பட்டுவிட்டது
இது எதில் போய் முடியும் என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதற்கு இன்னும் 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம். அமெரிக்கா வில் உள்ள இன்னும் 100-க்கும் மேற்பட்ட வங்கிகள் திவால் ஆகும் நிலையில் உள்ளன. அந்த வங்கிகளும் வெளிநாடுகளில் தாங்கள் செய் துள்ள முதலீடுகளை திரும்பப் பெற்று வருவதால் பல வெளிநாடுக ளின் பொருளாதார நிலையை இது பெரிதும் பாதித்துள்ளது
நல்ல வேளையாக இந்திய வங்கிகள் அதிக அளவில் அமெரிக்க வங் கிகளிடம் கடன் பெறவில்லை
நமது வங்கிகள் பெரும்பாலும் லண்டன் உள்பட வேறுசில வெளிநாட்டு வங்கிகளிடம் தான் கடன் பெற்றுள்ளன
இருப்பினும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதா ராப் பாதிப்பு இந்தியாவையும் பெரிதும் பாதித்து வருகிறது
பல வெளிநாட்டு நிறுவனங் கள் இந்தியாவில் தங்களது முத லீடுகளை திரும்பப் பெற்று வருகின்றன. இதனால் இந்தி யாவில் பணப்புழக்கம் குறைந்து வருகிறது
இதை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி பண கையிருப்பை குறைத் துள்ளது (சிஆர்ஆர்). ஆனாலும் நாட்டில் பணத் தட்டுப்பாடு அதிக ரித்துள்ளது. வங்கிகளிடம் போதிய இருப்பு இல்லை. இதனால் பணத் தைத் திரட்ட டெபாசிட்களுக்கான வட்டியை அதிகரித்து வருகிறது
கடன் வழங்குவதை கட்டுப்படுத்தியுள்ளது
பணத்தைத் திரட்ட வங்கிகள் பெரிய அளவில் பிரயத்தனம் செய்து வருகின்றன. இதை சமாளிப்பது மிகவும் கஷ்டமான நிலையை வங்கி கள் எதிர்நோக்கி வருகின்றன. சிஆர்ஆர் தற்போது ஒரு சதவிதம் குறைக்கப்பட்டுள்ளது
குறைந்தது 4 சதவிகிதமாவது குறைக்க வேண்டும். அப்போதுதான் பணப் புழக்கம் அதிகமாகும்
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் அதிக அளவில் முதலீட்டை எதிர்பார்க்க முடியாது. இந்த பொருளாதார நெருக்கடியால் பெரிய நிறுவனங்கள் ஆள் குறைப்பை உடனடியாகச் செய்யாது. நிலை மையை தற்போது சமாளிக்க முடிந்தாலும் இன்னும் 6 மாதங்கள் மட் டுமே தாக்குப்பிடிக்க முடியும்
வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். இதற்கு ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும்
இன்னும் 2 ஆண்டுகள் இந்தநிலை நீடிக்க வாய்ப்புள்ளது.

வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த நெருக்கடியைசமாளிக்க முடியும்.இதற்கு ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும்.

 ஏற்றுமதி வளர்ச்சி குறைந்துள்ளதால்
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.51,000 கோடியாக அதிகரிப்பு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
சென்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 10.4 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், இறக்குமதி 43.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.51,000 கோடியைத் தாண்டி உள்ளது.
அமெரிக்க பொருளாதாரம்
அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது, சர்வதேச அளவில் மக்களின் செலவிடும் வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஜவுளி, தோல் பொருள்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களுக்கான தேவைப்பாடு குறைந்து வருகிறது.
இதனையடுத்து, இவ்வாண்டு ஆகஸ்டு மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்து இருந்த நாட்டின் ஏற்றுமதி, செப்டம்பர் மாதத்தில் 10.4 சதவீதம் மட்டுமே அதிகரித்து 1,374 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம், இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு வியக்கத்தக்க அளவில் உயர்ந்து ரூ.50&ஐ எட்டி உள்ளதால், சென்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில் 24.7 சதவீதம் உயர்ந்து ரூ.62,541 கோடியாக அதிகரித்துள்ளது.
இறக்குமதி
டாலர் மதிப்பின் அடிப்படையில் ஏற்றுமதி 10.4 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி 43.3 சதவீதம் அதிகரித்து 2,438 கோடி டாலராக (ரூ.1,17,024 கோடி) உயர்ந்துள்ளது. ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகரித்ததையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (இறக்குமதி & ஏற்றுமதி = வர்த்தக பற்றாக்குறை) 1,064 கோடி டாலராக (ரூ.51,072 கோடி) உயர்ந்துள்ளது. இது, சென்ற 2007&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் வர்த்தக பற்றாக்குறையைக் காட்டிலும் (455 கோடி டாலர்) இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்
சென்ற செப்டம்பர் மாதத்தின் மொத்த இறக்குமதியில் (2,438 கோடி டாலர்), கச்சா எண்ணெயின் இறக்குமதி மதிப்பு மட்டும் 909 கோடி டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, நாட்டின் இறக்குமதி அதிகரித்து, வர்த்தக பற்றாக்குறை உயர்வதற்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதே முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி 30.9 சதவீதம் அதிகரித்து 9,497 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இறக்குமதி 38.5 சதவீதம் உயர்ந்து 15,474 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி உயர்ந்துள்ளதையடுத்து முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 5,977 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

 

 கடன்களுக்கான வட்டிச் செலவினம் அதிகரிப்பால்
இந்திய நிறுவனங்களால் ஈட்டப்பட்ட நிகர லாப வளர்ச்சி 6%&ஆக குறைந்தது
விவேக் சின்ஹா
புதுடெல்லி
நாட்டின் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளில் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் ஒன்றாகும். இந்நிலையில், வட்டிச் செலவினம் அதிகரிப்பால், நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்திய நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இந்நிறுவனங்களின் வருவாய் முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
மேலும், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய நிறுவனங்களால் ஈட்டப்படும் லாபம் நன்கு இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும்.
செயல் திறன்
இதுவரை நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களில் 1,450 நிறுவனங்களின் செயல் திறன் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர லாபம் 5.7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான நிகர லாப வளர்ச்சி (25.8 சதவீதம்) மற்றும் முந்தைய காலாண்டிற்கான நிகர லாப வளர்ச்சி (9.9 சதவீதம்) ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் குறைவானதாகும்.
சென்ற நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிறுவனங்களில், இழப்பினை கண்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆக, நடப்பு நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டுவது பெரும் சவாலாக இருந்துள்ளதாக தெரிகிறது.
வட்டிச் செலவினம்
இதற்கு வட்டிச் செலவினம் அதிகரித்து இருந்ததுதான் முக்கிய காரணமாகும். சென்ற ஜூலை மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 147 டாலராக மிகவும் உயர்ந்து இருந்தது. உருக்கு உள்ளிட்ட முக்கிய மூலப் பொருள்களின் விலையும் உயர்ந்து இருந்தது. இதனால், நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்க அளவை எட்டியது.
இதனை கட்டுக்குள் கொண்டு வர பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் மற்றும் ‘ரெப்போ ரேட்’ ஆகியவற்றை 9 சதவீதமாக உயர்த்தி இருந்தது. தற்போது இவ்விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் பலனை இனிமேல்தான் உணர முடியும். எனவே, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனங்களின் வட்டிச் செலவினம் 72 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 26 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
மேலும், மூலப் பொருள்களின் விலையும் உயர்ந்து இருந்தது. இதுபோன்ற காரணங்களால்தான் சென்ற இரண்டாவது காலாண்டில் நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வருவாய்
நிகர லாப வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆய்வுக் எடுத்துக்கொள்ளப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் 28.3 சதவீதம் வளர்ச்சி அடைந்து இருந்தது. சென்ற நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இவ்வளர்ச்சி விகிதம் 17.7 சதவீதமாக மட்டுமே இருந்தது. கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனங்களின் வருவாய் வியக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
தயாரிப்புகள்
நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நல்ல விலை கிடைத்ததே இதற்கு முக்கிய காரணமாகும். எடுத்துக்காட்டாக, மோட்டார் வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை 2.5 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் வருவாய் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதேபோன்று, அன்றாட பயன்பாட்டு நுகர்பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 22 சதவீதமாக உயர்ந்ததற்கு, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல விலை கிடைத்ததே காரணமாகும். இது, நாட்டில் தனிநபர் செலவிடும் வருவாய் நன்றாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
‘ரெப்போ ரேட்’ குறைப்பு
சென்ற இரண்டாவது காலாண்டில் 9 சதவீதமாக இருந்த வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் தற்போது 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ரெப்போ ரேட்’டும் 9 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மூன்றாவது காலாண்டில் நிறுவனங்களின் வட்டிச் செலவினம் குறைய வாய்ப்புள்ளது. மேலும், கச்சா எண்ணெயின் விலையும் இரண்டாவது காலாண்டைக் காட்டிலும் தற்போது சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், நிறுவனங்களின் உற்பத்தி செலவும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்து முன்னணி நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.3.17 லட்சம் கோடி சரிவு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு நிலையால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட 10 முன்னணி நிறவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.3.17 லட்சம் கோடி சரிவடைந்துள்ளது.
சென்ற அக்டோபர் 1&ந் தேதி அன்று ‘சென்செக்ஸ்’ 13,055.67 புள்ளிகளாக இருந்தது. சர்வதேச நிதிச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் சீர்குலைவால் அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டை அதிக அளவில் விலக்கிக் கொண்டன. இதனையடுத்து, அக்டோபர் மாதத்தில் மட்டும் ‘சென்செக்ஸ்’ 3,200 புள்ளிகளை இழந்து அம்மாத இறுதியில் 9,788.06 புள்ளிகளாக இருந்தது. இதனையடுத்து 10 முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ஒரே மாதத்தில் ரூ.3,17,510 கோடி குறைந்து ரூ.9,92,000 கோடியாக சரிவடைந்தது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு அக்டோபர் 1&ந் தேதி அன்று ரூ.2,77,266 கோடியாக இருந்தது. இது, மாத இறுதியில் ரூ.61,539 கோடி குறைந்து ரூ.2,15,727 கோடியாக சரிவடைந்துள்ளது. அக்டோபர் மாதத்தின் மத்தியில் இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2,00,000 கோடிக்கும் கீழாக சரிவடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்து வரும் பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பும் ஒரே மாதத்தில் ரூ.79,801 கோடி குறைந்துள்ளது.
பொதுத் துறை நிறுவனங்கள்
நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 10 முன்னணி நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் தனியார் துறையைச் சேர்ந்தவையாகும். ஆறு நிறுவனங்கள் பொதுத் துறையை சேர்ந்த நிறுவனங்களாகும்.

எல்.ஐ.சி. நிறுவனம்


‘கிரெடிட் கார்டு’ சந்தையில் களம் இறங்குகிறது
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வரும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்.ஐ.சி) நிறுவனம், ரூ.6 லட்சம் கோடி நிதியை நிர்வகித்து வருகிறது.
நிறுவனம் ‘கிரெடிட் கார்டு’ சந்தையில் களமிறங்க உள்ளது. கார்ப்பரேஷன் வங்கியின் கூட்டுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ஒரு துணை நிறுவனம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டீ.கே.மெகோத்ரா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “நிறுவனம் ‘கிரெடிட் கார்டு’ சந்தையில் இறங்க இருப்பதுடன், வாடிக்கையாளர்களின் காப்பீடுகள் அனைத்தும் மின்னணு வடிவிலும் மாற்றப்பட உள்ளன. அவ்வாறு மாற்றப்படும்பொழுது, காகித வடிவில் காப்பீட்டு ஆவணங்கள் இருக்காது” என்று தெரிவித்தார்.
காப்பீட்டு ஆவணங்களை மின்னணு வடிவில் மாற்றுவதன் மூலம், ஒரு வாடிக்கையாளர் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இந்தியாவில் உள்ள எந்த ஒரு கிளையிலிருந்தும் காப்பீட்டிற்கான பிரிமியத் தொகையை செலுத்த முடியும் என்பதுடன், முதிர்வடையும் காப்பீட்டுத் தொகையையும் பெற்றுக் கொள்ள முடியும் என மெகோத்ரா மேலும் தெரிவித்தார்.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: