25 சதவீதம் பேரை ‘வீட்டுக்கு அனுப்ப’ ஜரூர்: எக்கச்சக்க சம்பளம் கொடுத்த கம்பெனிகள்

Two Consecutive close above 3072…then Nonstop Rally upto 3353—–3447 level.

*Every 2nd person on Street will be Trapped at Higher level.

*Today Go short at 3070–3100……in TRUCK LOAD !!

Today it will create 3rd GAP

Just think …then who will fill Gap of 2760 & 2572

caution from icici

Just click the link & read more…..
With Rs 630K cr debt, MFs and NBFCs need bailout : Kamath

Everything You Need To Know

 

In Last 2 Days…I had Read these about International Market.

*Five signs of a market bottom

http://seekingalpha.com/article/102632-five-signs-of-a-market-bottom?source=feed

*Yen carry trade could inflate next bubble

http://www.ft.com/cms/s/0/0df30044-a5f4-11dd-9d26-000077b07658.html?nclick_check=1

“Short sellers aren’t jackals, they’re bears.” – Bill Fleckenstein

http://www.bloomberg.com/apps/news?pid=20601109&sid=a758oOpYTQrE&refer=home

As a trader – are you simply chasing success?

http://traderx.blogspot.com/2008/10/fibonacci-lines-indicators-and-holy.html

In the stock market, nothing beats experience

http://online.wsj.com/article/SB122523644863577999.html?mod=djemTMB

Have u seen Triangle of 3066 Points or Not ??

Triangle Height indicates ..Tgt of 9087

Below 12500..Bears will kill this Mkt.

Our Target Intact ,Sensex will go below 10000 level very very soon

Our Ultimate Target :7247–6084

Today …..Last Hurdle is 10044.Crossover /Close will create another round of buying.

(Once crosses 10044….will take to 10826–11087 )

Support levels :

9734…….Decisive break will take to 9327—9191 level.

Look @ 893 points triangle in Weekly Chart.

Boldly Recommended to sell and Exit at 3850 level with target of 2955 level.

(So…what u think…by spreading RumoursNF can crack ?? )

So what will happen to NATKHAT NIFTY ????

“God will also not able to save this market “

110% ,NF will crash and kiss 2955 level….very soon.

(Writing below mentioned levels..When NF was

5200 level )

-It made low of 3762 & zoomed to kiss 4654-

But ,On Rise……Exit from Indian Stock Market.

110% No if & But.

Our Target intacts :3638—–3420

1st Target of 3800 achieved (This level we had written when NF was trading at 5200 level )

2nd Target :Ratio of 1:1 (3638 )

3rd Target :3420..(Triangle Breakout Tgt )

(Already achived and kissed low of 3216 on Friday :10th Oct )

(Made low of 3101 on Thursday :16th Oct )

Our Target Revised :2900-2950 in Next 1 Months.

( On 17th Oct ….Made a low of 3050 )

(On 23rd Oct …it kissed low of 2905 )

Our Short Term Target for NF is 2500-2200 level

(Just see on Friday (24th Oct ) it kissed low of 2513 & closed at 2559…………THINK THINK THINK !!!

(Just see on Monday (27th Oct )it kissed low of 2228 & taken U-turn……THINK THINK THINK !!

Today…….will face Hurdle at 2950–2961-2978.

Crossover will take to 3072

Today …101% Go short in NF @ 3070-3130

(Above mentioned levels we were writing from last 3 days…it looks….Today all Jokers are writing it will touch this level and that level )

Support :2627–2594

Now….if closes above 3072 for 2 Consecutive days…then watch

Nonstop explosive move upto 3353—3447.

தேவை மறுபரிசீலனை
 
இந்திய இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டுக் கான வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய் துள்ளது. இன்றைக்கு அமெரிக்க நிதிச்சந்தையின் வீழ்ச்சி உலகளாவிய நிதிச்சந்தை நெருக்கடியை ஏற்படுத்தியுள் ளது
உலகமயப் பொருளாதாரத்தில் சந்தையே சர்வவல் லமை படைத்தது என்றும் அரசு சற்றே விலகியிருக்க வேண்டும் என்று கோரியவர்கள் எல்லாம் அமெரிக்க அரசு தனது நாட்டு நிதிநிறுவனங்களின் திவால் நிலைமை யைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளைப் பார்த்து வாய டைத்துப் போயிருக்கிறார்கள்
பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனமான ஏஜி நிறுவ னமோ 80 மில்லியன் டாலர்களை 24 மணி நேரத்திற்குள் திரட்டாவிட்டால் கதவை மூடும் நிலையில் இருந்தது
இப்போது அமெரிக்க அரசின் தலையீட்டால் தலை தப்பி யுள்ளது. அந்த நிறுவனத்தின் இந்தியப் பங்காளியான டாடாவோ அதிக அளவு பங்குகள் தனது வசம் இருப்ப தால் கவலைப்படத் தேவையில்லை என்று விளம்பரம் செய்தார். நிதியமைச்சர் இன்னும் ஒரு படி மேலே போய் தேவைப்பட்டால் ஏஜியின் பங்குகளைக் கூட டாடாவே வாங்க முடியும் என்றார்
பன்னாட்டு நிறுவனங்களை வாங்கும் அளவுக்கு நிதி மூலதனம் இந்திய முதலாளிகளிடம் இருக்கும்போது இன் சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீடு வருவதற் கான எந்த அவசியமும் இல்லை. இந்த உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்துவது தவறான நேரத்தில் எடுத்த தவ றான முடிவுதான்
சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியின் அதிர்வுகள் உலகெங்கும் ஒலிக்கிறது. ஆனால் நமது நிதியமைச்ச ருக்கு மட்டும் அது கேட்கவில்லை என்பது வருத்தமானது தான். அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண் டும்
 

ஆள்குறைப்பு செய்யாதீர்கள்: பிரேம்சந்த் குப்தா
 
  
புது தில்லி, நவ. 2: பொருளாதார, நிதி நெருக்கடி நிலவுவதால் ஆள் குறைப்பு செய்துவிடாதீர்கள் என்று தொழில், வணிகத்துறையி னருக்கு மத்திய கம்பெனிகள் விவ காரத்துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா வேண்டுகோள் விடுத் திருக்கிறார்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பு குறைந்து வருவதாலும், வெளி நாடுகளிலிருந்து இந்தியப் பொருள்களுக்கு கிராக்கி குறைந்து வருவதாலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆள்குறைப்புதான் ஒரே வழி என்று “அசோ-சேம்’ அமைப்பு தயாரித்த ஓர் அறிக்கை தெரிவித் தது
இதையடுத்து 10 முக்கியத் துறைகளில் 25% முதல் 30% வரை ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டது. அத்துடன் ஊழியர்களு டைய இதர படிகளும் குறைக்கப் படும், சலுகைகள், மானியங்கள் நிறுத்தப்படும், ஆடம்பரமான கம்பெனி விழாக்கள் குறைக்கப்ப டும், ஊழியர்களை அலுவலகத் துக்கும் வெளியூர்களுக்கும் வாடகை வாகனங்க ளில் ஏற்றிச்செல்லும் போக்கு கைவிடப்படும் என்று இதர சிக்கன நட வடிக்கைகள் குறித்தும் கூறப்பட்டது
இது தொழில், வர்த்த கம், சேவை ஆகிய துறைகளில் பணிபுரி வோரிடையே மிகப்பெ ரிய கலக்கத்தை ஏற்ப டுத்தியது. ஏற்கெனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வரு கிறது. விலைவாசியைக் கட்டுப்ப டுத்தவில்லை, வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டி கடுமை யாக உயர்ந்துவருகிறது, சேமிப்பு களுக்குத் தந்துவந்த வட்டியும் குறைக்கப்பட்டுவிட்டது என்று மக்கள் கோபத்துடன் தங்களுக் குள் விவாதித்துக் கொண்டிருக் கும் வேளையில், வேலையிழப்பும் ஏற்படும் என்ற தகவல் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல ஆகிவிட்டது
இப்போது 5 மாநிலங்களுக்கு சட்டப் பேரவை பொதுத் தேர் தல் நடைபெறவிருக்கிறது. ஆள் குறைப்பு என்பது தனியார் நிறுவ னங்களே எடுக்கும் நிர் வாக நடவடிக்கை, அதை எப்போது வேண்டுமானாலும் அவை மேற்கொள்ளத் தடை ஏதும் இல்லை என்றாலும் இந்த நேரத்தில் அப்படி ஏதும் நடந்தால் அது ஆளும் கூட்டணியின் படுதோல்விக்கே வழி வகுக்கும்
எனவேதான் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடனே தலையிட்டு அசோ-சேமின் சர்ச்சைக்குரிய அந்த அறிக்கையைத் திரும்பப் பெறச் செய்தார். நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தி 7% வளர்ச்சி பெறும் என்று நாம் கூறிவரும் வேளையில், வேலையி ழப்புக்கு எங்கிருந்து அவசியம் வரும் என்று கோபமுடன் அவர் கேட்டார். “அசோ-சேமும்’ தன் னுடைய சுற்றறிக்கையைத் திரும் பப் பெற்றுவிட்டது
ஆனாலும், லாபத்தையும் விற் றுமுதலையும் பராமரிக்க விரும் பும் தனியார் நிறுவனங்கள் செல வுகளைக் குறைக்கும் நடவடிக் கையின் ஒருபகுதியாக பணியா ளர்களைக் குறைப்பது நிச்சயம் என்று தெரிகிறது
அக்டோபர் மாத முதல் வாரத் தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1,900 ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது. மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரஃபுல் படேல், மகா ராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட் டவர்கள் விடுத்த வேண்டு கோளை அடுத்து அவர்கள் மீண் டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
கிங் ஃபிஷர் விமான நிறுவனம் 300 பேரை வீட்டுக்கு அனுப்பி யது, அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளவே இல்லை
மேலும் பலரை வேலையிலிருந்து நீக்க அது பட்டியல் தயாரித்து வருகிறது. மோட்டரோலா நிறு வனம் 3,000 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது
இனி பிற நிறுவனங்களும் இந் நடவடிக்கையில் இறங்கப் போவது நிச்சயம். ஆனால் அமைச்சர் என்னவோ அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தொழில்முகவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 

 25 சதவீதம் பேரை ‘வீட்டுக்கு அனுப்ப’ ஜரூர்: எக்கச்சக்க சம்பளம் கொடுத்த கம்பெனிகள்

 மும்பை: கைநிறைய சம்பளம் தந்து ஆட்களை இழுத்த பல தனியார் கம்பெனிகள் ஆட் குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளன; உருக்கு, கட்டுமானம், விமானத்துறை, சாப்ட்வேர், பிபிஓ.,க்கள், கால் சென்டர்கள் உட்பட பல நிறுவனங்கள், 25 சதவீத ஊழியர்களை குறைக்க தயாராகி விட்டன.அமெரிக்காவை தாக்கிய ‘நிதி நெருக்கடி’ புயல், இந்தியாவை அதிகமாக தாக்கவில்லை என்றாலும், ஓரளவு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது மட்டும் உண்மை.பல தொழில்களில் முதலீடுகளை முடக்கிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நிறுவனங்கள் ‘பின் வாங்கி’ விட்டதால் நிலைமை மோசமாகி விட்டது. அதுபோல, அமெரிக்க நிறுவனங்களில் இந்திய கம்பெனிகள் போட்ட பணமும் ‘முடங்கி’ உள்ளதால் சில கம்பெனிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.இதுபோக, அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகளில் உள்ள பெரிய கம்பெனிகளின் பணிகளை செய்து வந்த சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் அடி விழுந்துள்ளது. அந்த கம்பெனிகளே திவால் ஆகி விட்டதால், இந்த இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு பணிகளை செய்வதற்கான ஆர்டரும் வருவதில்லை; ஏற்கனவே செய்த பணிகளுக்கான வருவாயும் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.இப்படி பல காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கிய இந்திய சாப்ட்வேர், கட்டுமான, நிதி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக் கையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள் ளது. உருக்கு, சாப்ட்வேர், பி.பி. ஓ.,க்கள், கால் சென்டர்கள், சிமென்ட், ரியல் எஸ்டேட் உட்பட பல துறை கம்பெனிகளில் 25 சதவீதம் வரை ஆட் களை குறைக்க திட்டமிடப் பட்டுள்ளன.தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் குறைப்பு குறித்து மனித வள மேம்பாட்டு ஆய்வாளர்கள் கூறுகையில், ‘சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு முன்பே, சில கம்பெனிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தாமதம் ஆனாலும், இப்போது அடுத்த இரண்டு மாதங்களில் குறைந்த அளவு ஊழியர்களை வெளியேற்ற பட்டியல் எடுக்கும் பணி ஆரம்பித்து விட்டது’ என்று தெரிவித்தனர்.திறமைக் குறைவு, பணியில் சுணக்கம், அடிக்கடி விடுப்பு எடுப்பது போன்ற காரணங்களை காட்டி, ஊழியர்களை பட்டியலிட்டு வேலையில் இருந்து நீக்க கம்பெனிகள் முடிவு செய் துள்ளன. அதற்கேற்ப, பத்தாண்டு பணியில் இருக்கும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் அடிக்கடி விடுப்பு எடுப்பது, திறமை குறைவாக வேலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கம்பெனியும் அதிருப்தி அடைந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ளது போல, ஊழியர்களை நீக்கும் அதிரடி போக்கு இந்தியாவில் ஏற்படுத்தாமல் தடுக்க , தொழில், வர்த்தக கூட்டமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. வேலையில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் காக்க உரிய நிவாரண நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன

புற்று நோய் ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ்: அலட்சியப்படுத்தி தொடர்ந்து இறக்குமதி

புதுடில்லி: புற்று நோய் ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ்களை, பல்வேறு நாடுகள் தடை செய்திருந்தாலும், இந்தியா மட்டும் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.ஆஸ்பெஸ்டாஸ் என்று அழைக்கப்படும் கல்நார்களில் உள்ள அபாயகரமான ரசாயனங்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இந்தியாவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட, உள்நாட்டில் இவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ஆஸ்பெஸ்டாஸ்களை தொடர்ந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை, ரோம் நகரில் நடந்த மாநாட்டில் 126 நாடுகள் கலந்து கொண்டு, வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ், அபாயகரமான ரசாயனப் பொருட்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டு, அதை கண்காணிப்பு பட்டியலில் வைக்க முடிவு எடுத்துள்ளன.கனடாவும், ரஷ்யாவும் தான், உலகிலேயே அதிகளவில் ஆஸ்பெஸ்டாஸ்களை ஏற்றுமதி செய்கின்றன. அதிகளவில் இவற்றை இறக்குமதி செய்யும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. இதனால், இந்த மூன்று நாடுகளும், இவ்விஷயத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றுமதி செய்யப்படும் போதும், அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடுகள், அவற்றின் மீது அபாயகரமான ரசாயனம் என்ற முத்திரை குத்தியே அனுப்புகின்றன.மத்திய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஆஸ்பெஸ் டாஸ் இறக்குமதிக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு தடை விதிக்கும் அதிகாரம் கொண்ட ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம், தொடர்ந்து இறக்குமதி செய்வதற்கு ஆதரவாக உள்ளது.

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : சென்செக்ஸ் 10,000 புள்ளிகளை தாண்டியது

மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. வர்த்தகம் ஆரம்பமான 9.55 க்கே சென்செக்ஸ் 421 புள்ளிகள் உயர்ந்திருந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 134 புள்ளிகள் உயர்ந்திருந்தது. காலை 10 மணிக்கு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 536.34 புள்ளிகள் உயர்ந்து 10,324.40 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் 142.15 புள்ளிகள் <உயர்ந்து 3,027.75 புள்ளிகளாக இருந்தது. சனிக்கிழமை அன்று ரிசர்வ் வங்கி, ரிபோ ரேட்டை ஒரு சதவீதமும் ரிபோரேட்டை 0.5 சதவீதமும் குறைத்திருந்தது. இதன் மூலம் வங்கிகளில் கூடுதலாக பண புழக்கம் இருக்கும் என்று சொல்லப்பட்டது. மேலும் இன்று அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளிலும் ஏற்ற நிலை தான் காணப்படுகிறது. இதன் பாதிப்பு இந்திய சந்தையிலும் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. சென்செக்ஸ் மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளையும் நிப்டி மீண்டும் 3 ஆயிரம் புள்ளிகளையும் தொட்டது, வர்த்தகர்களிடையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சாப்பாட்டுக்கே இல்லாத போது பொம்மையை வாங்குவார்களா? -டாக்டர் பாரத் ஜுன்ஜுன்வாலா

தற்போதைய நிதிச் சுழலில் இந்தியா, சீனாவிலுள்ள பங்குச் சந்தை மற்றும் சொத்து மதிப்புகளும் குறைந்திருக்கிறது. எல்லாரும் இந்தப் பிரச்னையில் சீனா தப்பிவிடும் என்கின்றனர். ஆனால், இச்சூழலை உருவாக்கியதில் சீனாவுக்குப் பங்கு உண்டு.அமெரிக்காவில், ‘டாட்காம்’ குமிழி உடைந்த பின், அமெரிக்கப் பொருளாதாரம் தேக்கம் அடைய ஆரம்பித்தது. அமெரிக்க நிதித்துறை வீட்டுவசதிக் கடன் வட்டி சதவீதத்தைக் குறைத்தது. மேலும் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, வங்கிகள் தாராளமாகக் கடன் அளித்தன.அமெரிக்கர்களோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் காலணிகள், பொம்மைகள் போன்றவற்றிற்கு செலவு செய்தனர். எப்படி பெரிய கார் நிறுவனங்கள், தங்களுடைய நிதி நிறுவனங்களை வைத்துக் கொண்டு செயல்படுமோ அதுபோல சீனா செயல்பட்டது. தங்கள் கார்கள் அதிக விற்பனைக்காக கடன் வசதியும் தந்தனர். அதேமாதிரி தங்கள் பொம்மைகளை வாங்க அமெரிக்க நுகர்வோருக்குப் பணம் தந்தது சீனா.அதாவது, அமெரிக்க கஜானாவின் நிதிப் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டு செயல்பட்டது. அப் பத்திரங்கள் வீட்டுக்கடன் வசதி நிதியாகவும், நுகர்வோர் செலவுக்கான கடன் வசதிகளாகவும் மாறின. இதில் சீனாவுக்கு அன்னியச் செலாவணிக் கையிருப்பாக 1.8 லட்சம் டிரில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்பு பத்திரங்களாக கிடைத்தன. அதிநவீனத் தொழில்நுட்பம் மூலம் ஏற்றுமதி அதிகரிப்பிற்காக, கடந்த 25 ஆண்டுகளாக பாடுபடுகிறது சீனா. குறைந்த விலையில் பொருட்கள், குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள் ஆகிய இரண்டும் சீனத்தயாரிப்பு அதிகரிக்க காரணம். ஆகவே, சீனப்பொருட்கள் அமெரிக்காவில் அதிகமாகக் குவிந்தன.சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொருளாதார நெருக்கம் அதிகம். அமெரிக்காவில் வீட்டுக்கடன் திவாலா விவகாரத்தில் சீனா பணம் தந்து பங்கேற்றது. சீனாவில் இருந்து மலிவான இறக்குமதி காரணமாக, அமெரிக்காவில் அப்பொருட்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது; அத்தொழில்கள் மூடப்பட்டன; அதற்கான வேலைவாய்ப்பும் பறிபோனது. அங்கு, ‘சப்பிரைம்’ திட்டத்தில் கடன் வாங்கியவர்கள் கட்டத்தவறியதால் ஏற்பட்ட ஆபத்து தான் இப்போது நாம் காண்பது. ஆனால், இந்தியா ‘கார்-லோன்’ என்ற இந்த அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் நம் அன்னியச் செலாவணி 300 பில்லியன் டாலராக அதிகரித்தது. அமெரிக்க பிரதம வங்கிக்கு நம் ரிசர்வ் வங்கி அனுப்பிய பணத்தில் இருந்து நம் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படவில்லை. ஆகவே, உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி எந்த அளவு சீனாவையும், இந்தியாவையும் வித்யாசமாக பாதிக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.இந்தியாவின் கடையில் உள்ள ஒரு பொருளை விற்கும் போது, அதை தன் சொந்தப் பணத்தில் இருந்து வாங்கும் நுகர்வோர் இங்கு அதிகம். சீனாவில் தயாரிக்கும் பொருட்களை வாங்கும் அமெரிக்கர்கள் கையில் பணம் இல்லை. இதனால் சீனாவுக்குப் பாதிப்பு ஏற்படும், அன்னியச் செலாவணிக்கையிருப்பு குறையும். இன்றைக்கு அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்த நிலை நீண்டகாலத்திற்கு நீடிக்காது.சீனாவின் ஏற்றுமதிப் பட்டியலில், ‘டிவி’க்கள், ஐபாட்கள், பொம்மைகள், காலணிகள் உள்ளவை. அமெரிக்கப் பொருளாதாரம் அடிவாங்கும் போது இவற்றின் விற்பனை அதிகரிக்காது. சாப்பாட்டுக்கே இல்லாத போது யார் பொம்மையை வாங்குவார்கள்? எங்கிருந்து இரவு டின்னர் வரும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சீனாவில் இருந்து வரும் ‘பார்பி டால்’ விலை 10 டாலரில் இருந்து ஒன்பது டாலராகக் குறைந்தால் யாருக்கு என்ன லாபம்? எப்படி வாங்க முடியும்? இந்தியாவும் சாப்ட்வேர் மற்றும் ‘பிபிஓ’ சர்வீஸ்களை ஏற்றுமதி செய்கிறது. இவை உற்பத்தித் திறன் கொண்டவை. சில நிபுணர்கள் கருத்துப்படி இந்த ‘சர்வீஸ் வகை ஏற்றுமதி’ அதிகரிக்கும். சொல்லப்போனால், அங்கு செலவினத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளால் இவை ஏற்கனவே குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் இடங்களுக்குத் தானே வரும். இப்போது சந்திக்கப்படும் நெருக்கடிகளை சீனாவை விட இந்தியா நன்றாகச் சமாளிக்கும். ஆனால், வருமான வரியில் சில சலுகைகளைத் தந்து மக்கள் கையில் பணம்புழங்க சீனா முடிவு எடுத்திருக்கிறது. நாமும் வருமான வரிச்சலுகைகளை அதிகப்படுத்த வேண்டும். எக்சைஸ் வரிகளைக் குறைப்பதுடன், இறக்குமதி வரியை அதிகரிக்கவேண்டும். வேலையில்லாப் பட்டதாரிகளுக்குத் தரப்படும் மானியம் அதிகரித்தால் அது அடிப்படை செலவினத்தை ஊக்குவிக்கும். அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பதால், அவர்கள் அதை அடிப்படை நுகர்விற்குப் பயன்படுத்த மாட்டார்கள்.இன்றைக்கு சொத்து மதிப்பு சரிந்து விட்டதே, பங்குச்சந்தை சரிந்ததே என்று கவலைப்பட வேண்டாம். இது நிஜ பொருளாதாரத்தைப் பிரதிபலிப்பதில்லை, மொத்த வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் இருக்கும் என்பதே நல்ல தகவல். அன்னிய மூலதன முதலீட்டாளர் பணத்தை திரும்ப எடுத்ததே பங்குச்சந்தை வீழக் காரணம். இந்த அலையில் இருந்து இந்தியா மீண்டுவிடும்.

ஆள் எடுக்க இந்தியா வருது லேமென்

புதுடில்லி: அமெரிக்க நிதி நெருக்கடி சிக்கலில் சிக்கிய முதலீட்டு வங்கி, நிதித்துறையில் வர்த்தகம் செய்யும் ‘லேமென் பிரதர்ஸ்’ நிறுவனம், இந்தியாவில் வழக்கம் போல, எம்.பி.ஏ., மாணவர்களை வேலைக்கு எடுக்க வர உள்ளது. அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் லேமென் வங்கி பாதிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதன் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை; ஊழியர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படவில்லை. ஆசிய, ஐரோப்பிய கிளை நிறுவனங்களின் பங்குகளை, ஜப்பானின் ‘நோமுரா’ கம்பெனியிடம் விற்றதை அடுத்து, இந்த நிறுவனங்கள் தலை தப்பியது. இந்திய கிளையும் இதில் உள்ளதால், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

ஜப்பான் நிறுவனத்திடம் இந்த நிறுவனங்கள் கைமாறுவது குறித்த சட்ட நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதன்பின், லேமென் இந்திய மற்றும் ஆசிய கிளை நிறுவனங்கள் வழக்கம்போல வர்த்தகத்தை நடத்தும். இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.ஏ., மாணவர்களை வேலைக்கு எடுக்கும் ‘பிளேஸ்மென்ட்’ முகாமில் பங்கேற்கும் சர்வதேச நிறுவனங்களில் லேமென் முன்னணியில் இருக்கும். கடந்தாண்டு கூட, ஆமதாபாத் உட்பட சில நகரங்களில் உள்ள ஐ.ஐ.எம்.,களில் இருந்து எம்.பி.ஏ., மாணவர்களுக்கு பல லட்சம் ஆண்டு சம்பளம் நிர்ணயித்து வேலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்தாண்டு வருவது சந்தேகம் தான் என்று சொல்லப்பட்ட நிலையில், லேமென் அதை மறுத்துள்ளது. இதன் இந்திய அதிகாரிகள் கூறுகையில், ‘லேமென் தன் நிதி நெருக்கடி சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது. தன் ஊழியர்களுக்கு 50 சதவீத கூடுதல் போனஸ் தந்துள்ளது. இந்திய நிறுவனத்தில் பணியாற்றும் மூவாயிரம் பேரில் யாரும் வெளியேற்றப்படவில்லை’ என்று தெரிவித்தார். அமெரிக்காவில் பல நிறுவனங்கள், வங்கிகளில் இருந்து இதுவரை ஒன்றரை லட்சம் பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். லேமென் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால், பல நிறுவனங்களுக்கு தெம்பு ஏற்பட்டுள்ளது. ஆட்குறைப்பை குறைத்து கொள்ள திட்டமிட்டுள்ளன.

வங்கி டெபாசிட் பற்றி யாரும் பயப்பட தேவையில்லை : மன்மோகன் சிங் உறுதி

புதுடில்லி : வங்கிகளில் செய்யப்பட்டிருக்கும் டெபாசிட் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அவைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. மத்திய அரசு எப்போதுமே வங்கித்துறைக்கு பக்கபலமாகவே இருந்து வருகிறது. மேலும் அவைகளின் வளர்ச்சிக்காக, இன்னும் சில நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றார் அவர். இன்று புதுடில்லியில் தொழில் அதிபர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், அவர்களிடையே பேசும்போது இவ்வாறு தெரிவித்தார். உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு நாள்தோறும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. தேவைப்பட்டால் மேலு<ம் கூடுதலான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கும் என்றார் அவர்

 ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்

மும்பை : சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை ரிசர்வ் வங்கி குறைத்ததை அடுத்து வங்கிகளில் ரூ.40,000 கோடி பணபுழக்கம் அதிகரித்தது, உலக அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற நிலை, போன்றவற்றால் இந்திய பங்கு சந்தையில் வாரத்தின் முதல்நாளான இன்று வர்த்தகம் நல்ல முன்னேற்றத்துடன் முடிந்திருக்கிறது. நிப்டி 3,000 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 10,300 புள்ளிகளுக்கு மேலும் வந்து முடிந்திருக்கிறது. கேப்பிட்டல் குட்ஸ், ரியல் எஸ்டேட், பேங்கிங், ஆயில் மற்றும் மெட்டல் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. இன்றைய உயர்வுக்கு பெரிதும் காரணமாக இருந்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எல் அண்ட் டி, எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., மற்றும் என்.டி.பி.சி., நிறுவனங்கள் தான். இன்றைய வர்த்தகத்தில் 10,373.17 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், முடிவில் 549.62 புள்ளிகள் ( 5.62 சதவீதம் ) உயர்ந்து 10,337.68 புள்ளிகளில் முடிந்தது. 3,062.05 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த நிப்டி, பின்னர் 158.25 புள்ளிகள் ( 5.48 சதவீதம் ) உயர்ந்து 3,043.85 புள்ளிகளில் முடிந்தது

வட்டி விகிதத்தை குறைப்பது இந்த வார கடைசியில் முடிவு : ஸ்டேட் பேங்க் ஆஃப்

மும்பை : கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பது சம்பந்தமாக இந்த வார கடைசியில் முடிவு செய்யப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சேர்மன் ஓ.பி.பாத் தெரிவித்தார். இது தவிர ரூ.5,000 கோடி கடனை, மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு ஏற்கனவே எஸ்.பி.ஐ., கொடுத்திருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் பேங்கிங் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ( நான் – பேங்கிங் ஃபைனான்சியல் இன்ஸ்டிடியூஷன்கள் – என்.பி.எஃப்.சி ) இந்த தொகை உதவும். ஏனென்றால் கடந்த 45 நாட்களாகவே அவைகள் கடும் நிதி சிக்கலில் இருந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை அன்று ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை குறைத்தது. இதன் தொடர்ச்சியாக எஸ்.பி. ஐ., இந்த முடிவுக்கு வந்துள்ளது.மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு எஸ்.பி.ஐ.,தான் அதிக அளவில் கடன் கொடுக்கின்றது. காரணம் எங்களிடம்தான் அதிக அளவில் நிதி இருக்கிறது என்று சொன்ன பாத், கவர்மென்ட் பாண்ட் களில் வங்கிகள் செய்திருக்க வேண்டிய டெபாசிட்டும் எஸ்.பி.ஐ.,க்கு 29 சதவீதம் வரை இருக்கிறது என்றார். இருந்தாலும் கடந்த சில காலமாக வீட்டு கடன், மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களுக்கான கடனுக்கான டிமாண்ட் குறைந்திருக்கிறது என்றார் பாத்.

ஆஸ்திரேலியாவில் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஐபாட்

மெல்போர்ன் ( ஆஸ்திரேலியா ) : கடந்த பல மாதங்களாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக உலகிலேயே மிகக்குறைந்த விலையில் ஐபாட் கிடைக்கும் நாடாக ஆஸ்திரேலியா மாறி விட்டது. சுமார் 62 நாடுகளில் விற்கப்படும் ஆப்பிள் 8ஜிபி நானோ ஐபாட் விலை இப்போது ஆஸ்திரேலியாவில் 131.95 அமெரிக்க டாலர்தான். ஆனால் இதுவே தென்கொரியாவில் 139.72 அமெரிக்க டாலராகவும், கனடாவில் 138.73 டாலராகவும், இந்தோனேஷியாவில் 138.47 டாலராகவும் இருக்கிறது. ஒரு பிரிட்டிஷ்காரர், இங்கிலாந்தை விட 25 சதவீதம் குறைந்த விலையில் ஐபாட்டை ஆஸ்திரேலியாவில் வாங்கலாம் என்கிறார்கள். அமெரிக்க டாலருக்கு நிகரான ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு பெருமளவில் குறைந்து போனதே இதற்கு காரணம் என்கிறார்கள். பொதுவாக அமெரிக்க டாலருக்கு நிகராக பெரும்பாலான நாட்டு கரன்சி மதிப்பு குறைந்திருந்தாலும் அதிகமாக ஆஸ்திரேலிய டாலர்தான் 45 சதவீதம் குறைந்திருக்கிறது.

தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பாததால் 400 கோடி ரூபாய் பனியன் உற்பத்தி பாதிப்பு

திருப்பூர்: பனியன் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், திருப்பூர் திரும்பாததால் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் 2,000க்கும் அதிகமான ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்களும், 1,500க்கும் அதிகமான உள்நாட்டு வர்த்தகத்துக்கான பனியன் உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இவற்றின் துணை நிறுவனங்களான சாய, சலவை ஆலைகள் ஸ்கிரீன் பிரின்டிங், பவர் டேபிள் நிறுவனங்கள், செக்கிங் சென்டர்கள், எம்ப்ராய்டரிங் உள்ளிட்ட 2,000க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சாய, சலவை ஆலைகளில் பணியாற்றும் 90 சதவீத தொழிலாளர்கள் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.வெளியூர் தொழிலாளர்கள் அனைவரும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று 10 நாட்களுக்கு மேல் தங்கி இருந்து வருவார்கள். இதில், 20 சதவீதம் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு சென்று விட்டு திரும்பி வருவதில்லை. சொந்த ஊர்களிலேயே விவசாயம் உள்ளிட்ட பிறதொழில்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆண்டுதோறும் பனியன் நிறுவனங்களுக்கு தீபாவளி முடிந்தவுடன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் போனஸ் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கடந்த மாதம் 24ம் தேதியில் சென்றவர்கள் நேற்று வரை திரும்பவில்லை.கடந்த ஒருவார காலமாக 3,000க்கும் அதிகமான பனியன் நிறுவனங்களிலும் உற்பத்தியை துவங்க முடியாமல், மூடியிருந்தன. பல நிறுவனங்களின் முன் பல்வேறு பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவையென விளம்பர அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.பெரும்பாலான நிறுவனங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. தொழிலாளர்கள் வெளியூர்களில் இருந்து இன்று திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் பனியன் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.ஒரு வாரத்தில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்றுமதி வர்த்தகத்துக்கான பனியன் உற்பத்தி நிறுவனங்களில் அதிகமாக வெளியூர் தொழிலாளர்கள் பணியாற்றுவதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள் செயல்படாததால், அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் வியாபாரம் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களில் கூட ரசிர்கள் கூட்டம் இல்லாததால் பெரும்பாலான தியேட்டர்களில் புதுப்படம் திரையிடப்பட்டும் வசூல் இல்லையென தியேட்டர் உரிமையாளர் ரேவதி ராஜா தெரிவித்தார்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அடைந்த நிகர நஷ்டம் ரூ.483 கோடி

பெங்களுரு : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில், பெங்களுருவை சேர்ந்த தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷரின் நிகர நஷ்டம், கடந்த வருடத்தை விட இரட்டிப்பாகி இருக்கிறது.கடந்த வருடம் இரண்டாவது காலாண்டில் ரூ.253.1 கோடியாக இருந்த நிகர நஷ்டம், இந்த வருடத்தில் ரூ.483.2 கோடியாக அதிகரித்திருக்கிறது. விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்திருந்ததாலும், பயணிகள் எண்ணிக்கை குறைந்திருந்ததாலும் நஷ்டம் அதிகரித்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த காலாண்டின் நிகர விற்பனை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம், கிங்ஃபிஷருடன் டெக்கான் ஏவியேஷனை இணைத்ததால் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த வருடம் ரூ.266 கோடியாக இருந்த நிர்வாக நஷ்டம், இந்த வருடத்தில் ரூ.620 கோடியாக அதிகரித்திருக்கிறது.சர்வதேச அளவில் விமான நிறுவனங்கள் எல்லாம் இப்போது கடுமையான சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது. இதற்கு காரணம் விமான எரிபொருளின் கடுமையான விலை உயர்வுதான் என்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இன் தலைவர் விஜய் மல்லையா தெரிவித்தார். ஜூலை 2008ல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147 டாலராக இருந்தபோது, விமான எரிபொருளின் விலையும் அதிகமாக உயர்த்தப்பட்டுவிட்டது என்றார் அவர். இந்தியாவை பொருத்தவரை, விமான எரிபொருளுக்கு விதிக்கப்படும் கஸ்டம்ஸ் டூட்டி மற்றும் சேல்ஸ் டாக்ஸ் போன்றவற்றால் இங்குள்ள விமான நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஏப்ரலில் இருந்து செப்டம்பருக்குள் மட்டும் விமான எரிபொருளுக்கான விலை 60 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார் மல்லையா

தாராளமயம் தந்த “பரிசு’
 
அனைத்து கெட்ட காரியங்களுக்கும் பணம்தான் மூல காரணம் என்கிறது பைபிள்
போதுமான பணமின்மைதான் கெட்ட காரி யங்களின் ஆணி வேர் என்கிறார் தத்துவ மேதை பெர்னார்ட் ஷா
இந்த இரண்டு விஷயங்களும் பொருந்துமி டம் ஒன்று உள்ளது என்றால் அது பங்குச் சந் தைதான்
பங்குச் சந்தையில் சிறிய முதலீட்டாளராக இருந்தாலும் சரி, அல்லது அதிக அளவில் முதலீடு செய்பவராக இருந்தாலும் சரி வான வில்லின் அழகிய தோற்றம் போன்ற பங்குச் சந்தை ஏற்றத்தால் ஈர்க்கப்படுவர். வானம் மட்டுமல்ல வானவில்லும் தொட்டுவிடும் தூரம்தான் என பங்குச் சந்தையில் உயரே பறப்பவர் அதிகம். பணத்தின் மீதான தேட லைப்பொருத்து மனிதனுக்கு மனிதன் இது மாறுபடும்
கடைசியில் வானவில்லை பிடிக்கப் போன மனிதனுக்கு என்ன கதி ஏற்படுமோ அந்த கதி யைத்தான் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அனுபவித்து வரு கின்றனர்
ஒரு காலத்தில் 21 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் இன்று 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழாகச் சரிந்து விட்டது
இதற்குக் காரணம் என்ன? இந்தியப் பங்குச் சந்தை என்ற சிறிய வட்டத்திலிருந்து, உலக பங்குச் சந்தையாக மாறியதுதான் முக்கியக் காரணம். ஆம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய கத வுகள் திறந்து விட்டதிலிருந்தே இப்பிரச்னை தொடங்கிவிட்டது
இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், சர்வதேச அள வில் சரிவைச் சந்திக்கும்போது அதன் தாக்கத் தையும் இந்திய முதலீட்டாளர்கள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது
தற்போது உலக அளவில் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்கடிதான் பல்வேறு பிரச்னைக ளுக்கும் காரணம். அமெரிக்காவில் தொடங்கி இன்று உலகம் முழுவதை யும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது
பங்குச் சந்தையை மட்டுமல்ல, தொடர்ச்சி யாக பல்வேறு துறைகளையும் இது பாதிக் கும். இதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் பல நாடுகளும் திணறிக் கொண் டிருக்கின்றன
1930-களில் இதுபோல அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு அது பிற நாடு களை பாதித்தது. இந்தியாவில் அதன் தாக்கம் தெரிந்ததா? என்பதை உணர முடியாத நிலை
அதற்குக் காரணம் அப்போது இந்தியா பிரிட் டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததுதான்
ஆனால் “பெரு மந்தம்’ எனப்படும் தேக்க நிலை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உரு வாகி அது பல நாடுகளையும் பாதிப்புக்குள் ளாக்கியது என்பதுதான் உண்மை. ஆனால் ஒவ்வொரு முறையும் சரிவுக்கான காரணம் மாறிக் கொண்டிருப்பதுதான் இதன் சிறப்புத் தன்மை
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக மயமாக்கலை அமெரிக்கா தொடங்கி, பிற நாடுகள் தம்மை சார்ந்திருக்கும் சூழலை உரு வாக்கியது. அதனால்தான் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க் கப்பட்டாலும், கத்தரீனா சூறா வளி வீசினாலும் இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது
இதனால்தான் தற்போதைய சிக்கலுக்கு உலக நாடுகளுடன் சேர்ந்து தீர்வு காண அமெரிக்கா முயல்கிறது. அதற்காகத்தான் தனி மாநாட்டை கூட்டியிருக்கிறார் அதிபர் புஷ்
1991-களில் பொருளாதார தாராளமயம் என்ற கடிவாளம் இல்லாத காட்டுக் குதிரை யில் சவாரி செய்ய அப்போதைய பிரதமர் நர சிம்ம ராவுக்கு வழிகாட்டியவர் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்தான்
கட்டுப்பாடற்ற வர்த்தக முறையால் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற மாயையில் அடுத்து வந்த பாஜக அரசும் இதே பாணியைத் தொடர்ந்தது. தற்போது சோனியா தயவால் பிரதமர் பதவியில் உள்ள பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையில் அவரை அடியொற்றி பொருளாதார சீர்திருத்தங்களை மேற் கொண்டு வரும் ப. சிதம்பரமும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊதுகுழலாகவே மாறிவிட் டார்
பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபட்டுள்ள வர்களின் சதவிகிதம் வெகு சொற்பமே
ஆனால் அவர்களின் நலன் காக்க ஏறக்கு றைய ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயை பல்வேறு இனங்களில் ரிசர்வ் வங்கி மூலம் விடுவித்துள்ளார் சிதம்பரம்
ஆனால் பங்குச் சந்தை பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது ஓராண்டுக்கு மேலாகும் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் வங்கிகளை வலுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு என்பதே சாதாரண ஏழை முதலீட்டாளர்களின் எதிர் பார்ப்பு. இதன் தாக்கம் பல்வேறு துறைகளி லும் எதிரொலிக்கும் என்ற நிலையில் அதைக் காக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிர்
தாராளமயத்தைக் கடைப்பிடித்த போதி லும் சுயச் சார்பு நிலையைக் கைவிடாததால், சர்வதேச தாக்கம் சீனாவில் அதிக அதிர்வ லையை ஏற்படுத்தவில்லை. இதை நமது ஆட் சியாளர்கள் உணர்ந்தால் மட்டுமே நமக்கு விமோசனம்
சுதந்திரத்துக்கு முன்னரே சுயச் சார்புக் கொள்கையை வகுத்தவர் மகாத்மா. பொரு ளாதார வளர்ச்சிக்கு அரசுத் துறை நிறுவனங் களை உருவாக்கியவர் ஜவாஹர்லால் நேரு
ஆனால் தாராளமய கொள்கையைக் கைக் கொண்ட பிறகு அரசுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தப்படவில்லை. நாட்டின் பிரதான மான வேளாண்துறை பின்னுக்குத் தள்ளப் பட்டது. சேவைத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால் இருக்கும் நிறுவ னங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா வின் தனியார்மயக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இந்தியா பாடம் கற்றுத் திருந்த வேண்டும். அப்போதுதான் இது போன்ற சர்வதேச தாக்குதல்கள் இந்தியாவை பாதிக்காமலிருக்கும். ஏழை இந்தியனின் நலன் காக்கப்படும்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: