ஐசிஐசிஐ வங்கியின் பிரிட்டிஷ் கிளைக்கு ரூ.160 கோடி நஷ்டம்

லண்டன் : இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் இன் பிரிட்டிஷ் கிளை ரூ.160 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த சில காலமாகவே ஐசிஐசிஐ பேங்க், பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்திருக்கிறது. பெருமளவில் கடனை கொடுத்து அது திரும்ப வராததால் கடும் நிதி சிக்கலில் இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி, பின்னர் அந்த வங்கி கொடுத்த விளக்கத்தை அடுத்து அது சரியாகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவின் நலிவடைந்த நிதி வங்கியான லேமன் பிரதர்ஸூக்கு பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கடன் கொடுக்கப்போய், ஒரு பெரும் தொகையை இழந்தது. அதன் பின்னரும் ஒரிரு முறை சர்ச்சையில் சிக்கியது.கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக அடிக்கடி வெளிவரும் தகவலை அடுத்து,அந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் பலர் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்வது நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டின் நிதி நிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கிளை 35 மில்லியன் ( சுமார் 160 கோடி ரூபாய் ) நிகர நஷ்டமடைந்திருப்பது ( நெட் லாஸ் ) வெளியாகி இருக்கிறது.இந்த தகவலை அந்த வங்கியில் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பிரிட்டிஷ் ஐசிஐசிஐ வங்கி கிளையில் 4.9 பில்லியன் டாலர் டெபாசிட் இருப்பதாகவும் அதில் 39 சதவீதம் டர்ம் டெபாசிட் என்றும், அந்த கிளையின் கடன் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 62 டாலர்தான்

 நியுயார்க் : உலக அளவில் நிலவி வரும் கடும் பொருளாதார சரிவினால் பெட்ரோலிய பொருட்களுக்கான உபயோகம் பெருமளவில் குறைந்து விட்டது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துகொண்டே வருகிறது.நேற்று நியுயார்க் சந்தையில் அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 2.15 டாலர் குறைந்து 62 டாலராகியது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலையும் 2.35 டாலர் குறைந்து 59.70 டாலராகி விட்டது. ஆயில் விலை குறைந்து கொண்டே வருவதை அடுத்து கவலை அடைந்த எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான் ஓபக், நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது. அப்போதாவது ஆயில் விலை உயரும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் 147 டாலர் வரை விலை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் இப்போது 62 டாலர் விலைக்கு வந்து விட்டது.

புத்தகம் எழுதுகிறார் ஒசாமா பின்லாடன்

இஸ்லாமாபாத் : உலகன் மிகப்பெரிய தேடும் குற்றவாளியாக கருதப்படும் ஒசாமா பில்லேடன் அவரது நினைவுகளை புத்தகமாக எழுதுகிறார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப்பின் அமெரிக்க அரசாங்கத்தின் கடுமையான தேடுதனால் தலைமறைவு வாழ்க்கை நடத்தி, இன்று வரை பிடிபடாமல் இருக்கும் ஒசாமா பின்லாடன் புத்தகம் எழுதுகிறார் என்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அல்குவைதா என்ற அமைப்பை உலகமெங்கும் சுமார் 50 நாடுகளில் மறைமுகமாக நடந்தி வரும் ஓசாமா, அந்த அமைப்பின் நெட்வொர்க், பணபரிமாற்றம், அதற்கு கிடைத்து வரும் ஆதரவு ( சப்போர்ட் ), மற்றும் அதன் அங்கத்தினர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி பற்றி புத்தகமாக எழுதப்போவதாக ஜியோ நியூஸ் என்று சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. அல்குவைதா அமைப்புக்கு எதிராக பரப்பப்பட்டுவரும் தவரான தகவல்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக இவர் புத்தகம் எழுதுவதாக சொல்லப்படுகிறது. முதலில் அரபிக் மொழியில் எழுதப்படும் புத்தகம் பின்னர் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுமாம். மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரை உதவிக்கு வைத்துக்கொண்டு இந்த புத்தகம் எழுதப்படுகிறது என்றும் பின்னர் அவரே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுவார் என்றும் சொல்கிறார்கள். முஸ்லிம்கள் மீது மேலை நாடுகளில் நடத்தப்படும் அக்கிரமங்கள் குறித்து இந்த புத்தகத்தில் ஒசாமா எழுத இருக்கிறார் என்கிறார்கள். இடைக்காலத்தில் மேலை நாடுகள் எவ்வாறு வளர்ந்தது எனவும், முஸ்லிம் நாடுகளில் இருக்கும் எண்ணெய் வளம் மீது அமெரிக்கா எப்படி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது எனவும், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் குறித்தும் ஒசாமா எழுதுவார் என்று சொல்கிறார்கள். சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தின் செல்வாக்கான பின்லேடன் குடும்பத்தில் மார்ச்10,1957ல் ஒசாமா பிறந்தார். இவர் 1979ல் சிவில் இஞ்சினியரிங் பட்டம், அல்லது 1981ல் பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர் என்கிறார்கள். தான்சானியா மற்றும் கென்யாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டுவைத்ததாக 1998ல் முதன் முதலாக இவரது அல்குவைதா இயக்கம் மீது அமெரிக்க பெடரல் கோர்ட் குற்றம் சாட்டியது. அதன் பின் அமெரிக்க எஃப்.பி.ஐ.,யின் 10 முக்கிய தேடும் குற்றவாளிகள் லிஸ்ட்டில் ஒசாமா சேர்ந்தார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் இவர் மீது நேரடியாக அமெரிக்க கோர்ட் குற்றம் சாட்டவில்லை என்றாலும் அந்த தாக்குதலுக்கு இவர்தான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது

ரிபோ ரேட் மற்றும் சி.ஆர்.ஆர்.,ஐ ரிசர்வ் வங்கி மேலும் குறைக்கும் : சிட்டி பேங்க் கணிப்பு

மும்பை : இந்திய வங்கிகளில் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்க, ரிசர்வ் வங்கி ரிபோ ரேட் மற்றும் சி.ஆர்.ஆர்.,ஐ மேலும் குறைக்கும் என்று சிட்டி பேங்க் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட இந்தியா மார்க்கெட் வாச் ரிப்போர்ட் என்ற அறிக்கையில், ரிபோ ரேட்/சி.ஆர்<.ஆர். ஆகியவற்றில் இன்னும் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். சமீபத்தில்தான் ரிசர்வ் வங்கி சி.ஆர்.ஆர்.,ஐ 2.5 சதவீதம் குறைத்து 6.5 சதவீதமாக்கியது. இதன் மூலம் வங்கிகளில் ரூ.ஒரு லட்சம் கோடி வரை பணப்புழக்கம் அதிகமானது. ரிபோ ரேட்டையும் ரிசர்வ் வங்கி ஒரு சதவீம் குறைத்தது. இதன் மூலம் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவும் அதிக அளவில் கடன் கொடுக்கவும் வழி ஏற்பட்டது.

சீனா தயாரிப்பு பாலை தொடர்ந்து இப்போது முட்டையிலும் நச்சு ?

ஷாங்கை ( சீனா ) : கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சீனாவில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான பால் மற்றும் பால் பொருட்களில் மெலமைன் என்ற நச்சு கெமிக்கல் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டு, ஆயிரக்கணக்கான குழந்தைகள் கிட்னி ஸ்டோன் நோயால் பாதிப்படைவார்கள் என்று அஞ்சப்பட்டது. சுமார் 52 ஆயிரம் குழந்தைகள் அப்போது ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு, சோதிக்கப்பட்டார்கள். சில குழந்தைகள் இறந்தும் போயின. அந்த பாலை குடித்த பல நாய்களும் கூட இறந்து போனதாக தகவல்கள் வெளியாயின. அதனையடுத்து இந்தியா உள்பட பல கீழ்த்திசை நாடுகள் சீன பால் பொருட்களுக்கு தடை விதித்தன. இப்போது அதே பிரச்னை மீண்டும் அங்கு தலை தூக்கியுள்ளது. ஆனால் பாலில் அல்ல. முட்டையில. சீன நிறுவனமான கெகேடா தயாரித்த முட்டைகளில் அதே மெலமைன் என்ற நச்சு கெமிக்கல் கலந்திருப்பது ஹாங்காங்கில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வால்-மார்ட் என்ற பிரபல ஸ்டோர், சீனாவில் இருக்கும் அதன் எல்லா ஸ்டோர்களிலுமிருந்து சீன தயாரிப்பு முட்டைகளை வெளியில் எடுத்து விட்டன. ஷென்ஷென் நகரில் இருக்கும் வால்-மார்ட் தலைமை செய்திதொடர்பாளர் மு மிங்மிங்க் இதனை தெரிவித்தார்

தங்கம் விற்பனையில் இறங்கும் இந்தியன் வங்கி

சென்னை : இந்தியன் வங்கி விரைவில் தங்கம் விற்பனையில் இறங்கப்போகிறது. இதற்கான ஒப்புதலை அது, அதன் போர்டு மெம்பர்களிடமிருந்து பெற்று விட்டது. இது குறித்து இந்தியன் வங்கியின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்கர் எம்எஸ்.சுந்தரராஜன் தெரிவிக்கையில், நாங்கள் எல்லாவிதமான நிதி சேவையையும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக விரைவில் தங்கம் விற்பனையிலும் ஈடுபட இருக்கிறோம். அதுகுறித்து கூடிய விரைவில் வெளிநாட்டின் தங்கம் சப்ளையருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இருக்கிறோம் என்றார். ஏற்கனவே இங்கு தங்கம் விற்பனையில் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்,மற்றும் கார்பரேஷன் பேங்க் ஆகியவை ஈடுபட்டு வருகின்றன. ஆரம்பத்தில் கோயம்புத்தூர், மதுரை, மும்பை, டில்லி மற்றும் கோல்கட்டா நகரங்களில் மட்டும் இந்தியன் வங்கி தங்கம் விற்பனையில் ஈடுபட இருக்கிறது. இதன் மூலம் அதற்கு ரூ.10 கோடி மற்ற வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது. ஏற்கனவே செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் இந்தியன் வங்கியின் மற்ற வருவாய் 9 சதவீதம் அதிகரித்து ரூ.455 கோடி ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய வருடத்தில் ரூ.417 கோடியாகத்தான் இருந்தது. சந்தையில் நிலவும் தகவலின்படி இந்தியாவில் உள்ள வங்கிகள், இந்த வருடம் ஆகஸ்ட் – செப்டம்பர் ஆரம்பத்தில் மட்டும் 50 டன் தங்கத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: