பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்தில் குறைப்பு

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்துள்ளதால், ஒரு வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப் படும் என, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார். கச்சா எண்ணெய் விலை சில மாதங் களுக்கு முன், பேரல் ஒன்றுக்கு 6,600 ரூபாயாக உயர்ந்தது. தற்போது 3,000 ரூபாயாக குறைந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. லோக்சபாவில் நேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றது முதல், ஆறு மாதத்திற்கு ஒரு முறை பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது, பெட் ரோலியம் கம்பெனிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றன என்ற காரணத்தைக் கூறி விலை உயர்த்தப் பட்டது. ஆனால், கச்சா எண் ணெய் விலை தற்போது, சர்வதேச சந்தையில் 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்து விட்டது. அதனால், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உடன டியாக குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் முரளி தியோரா கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பது குறித்து பரிசீலிக்கப் பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு அறிவிக்கப்படும். பெட்ரோலிய பொருட் கள் பலவற்றுக்கு தற்போது அதிக அளவில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதனால், விவசாயிகளுக்கு இலவச டீசல் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை. சாதாரண மக்களின் செலவில், விமான நிறுவனங்களுக்கு சலுகை காட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது தவறு. விமான நிறுவனங்களுக்கு சலுகை எதுவும் காட்டப்படவில்லை. அவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்தான் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தியோரா கூறினார்

வங்கிகள் இனி தாராளமாக கடன் தரும் : சிதம்பரம் தகவல்

புதுடில்லி : ‘பணப்புழக்கம் சகஜமாகி வருவதால், கடன் கொடுப்பதில் வங்கிகள் தாராளமாக நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் உபரி நிதியை ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார். மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏழு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சமீபத்தில் சந்தித் தேன். கடன் கொடுப்பதை தீவிரமாக்க ஆலோசனை வழங்கினேன். தற்போது பணப்புழக்கம் திருப்திகரமாக உள்ளதால், கடன் கொடுப்பது தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என வங்கித் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த மாத கடன் நடவடிக்கை களில் தற்காலிகமாக தொய்வு ஏற்பட்டது. தற்போது முன்பு போல் கடன் வழங்குவதை வங்கிகள் மும்முரப்படுத்தியுள்ளன. வங்கிகள் தங்களிடம் உபரியாக உள்ள நிதியை ரிசர்வ் வங்கியில் வைப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை முழுமையாக கடன் கொடுக்க பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர் கள், இந்தியாவில் முதலீடு செய்து இருக்கும் பங்குகளை, மற்ற அன்னிய நிறுவன முதலீட்டு நிறு வனங்களுக்கு மாற்றி கொடுப்பது, ஷார்ட் செல்லிங் நடைமுறைக்கு இணையானது. இதை நிறுத்தும்படி ‘செபி’ கேட்டுக் கொண்டுள்ளது. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோல் மாற்றி கொடுத்து இருந்ததை திரும்பப் பெறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார். இதற்கிடையில், பணவீக்கம் பற்றிய புள்ளி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 11.40 சதவீதமாக இருந்தது. குறையும்: பணவீக்க விகிதம் டிசம்பர் மாதத்திற்குள் 10 சதவீதத்திற்குள்ளாக வந்துவிடும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலர் அசோக் சாவ்லா நேற்று நிருபர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘சில மாதங்களுக்கு முன்பு 13 சதவீதத்தை எட்டிய பணவீக்கம், அரசு எடுத்த நடவடிக்கையால் கட்டுப் படுத்தப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இது 9.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறையும்’ என்றார். அதேசமயம் இந்தியப் பொருளாதார சூழ்நிலை அவ்வளவு சாதகமாக இருக்காது என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் கடும் நெருக்கடி நிலவிய போதிலும், மற்ற ஆசிய நாடுகளை விட இந்தியா வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ளதாலும், வளர்ச்சிக்கு உறுதியான நிதி நிர்வாகத்தை கொண்டு இருப்பதால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை எளிதாக முறியடிக்கும் என்று உலக வங்கி நற்சான்றிதழ் கொடுத்துள்ளது

பிக்சட் டிபாசிட்களை குவிக்க அள்ளி விடுது வங்கிகள் : கெடுபிடி கட்டணம் கிடையாது

மும்பை : பொது மக்களின் டிபாசிட் பணம், தங்களிடம் இருந்து மற்ற வங்கிக்கு போகாமல் தடுக்க, சலுகைகளை அளிக்க பல வங்கிகளும் முன்வந்துள்ளன. வங்கிகளிடம் ரொக்க கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தடுமாற்றங்களால், இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. வங்கிகளின் மீதான நம்பிக்கையில் லேசான சறுக்கல் கூட வராமல் தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் பிக்சட் டிபாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓராண்டு கழிந்த நிலையில், எந்த கட்டணமும் இல்லாமல் பணத்தை திரும்பப் பெறும் சலுகையை சில வங்கிகள் அளிக்கின்றன. முன்பு கறாராக இருந்த வங்கிகள் இப்போது விதியை தளர்த்தியுள்ளன. வங்கிகளில் பொதுமக்கள் வைத்துள்ள டிபாசிட்கள் 4.06 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதே சமயம், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், பிக்சட் டிபாசிட் உட்பட டிபாசிட்களை தக்க வைக்கும் நடவடிக்கைகளை வங்கிகள் பலவும் எடுக்க ஆரம்பித்து விட்டன. எச்.டி.எப்.சி., போன்ற வீட்டுக்கடன் அளிக்கும் வங்கிகள் கூட சலுகைகளை அளித்து பிக்சட் டிபாசிட்களை பெருக்க புதிய திட்டங்களை தீட்டியுள்ளன. இது போல, பிக்சட் டிபாசிட்களுக்கு வட்டி வீதத்தையும் அதிகரிக்க வங்கிகள் ஆரம்பித்துள்ளன. போட்டா போட்டி போட்டு, பொதுமக்களிடம் இருந்து டிபாசிட்களை குவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க், 1,000 நாள் அடிப்படையில் போடப்படும் பிக்சட் டிபாசிட்களுக்கான வட்டி வீதத்தை 1 சதவீதம் உயர்த்தி, இப்போது 10.50 சதவீதமாக அறிவித்துள்ளது. கோடக் மகிந்திரா வங்கி, குறிப்பிட்ட கால அளவில் பெறப்படும் டிபாசிட்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: