பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

மும்பை : உலகம் முழுவதும் இன்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி நிலை காணப்படுகிறது. அதன் எதிரொலி இந்திய பங்கு சந்தையிலும் ஏற்பட்டுள்ளது. காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே நிப்டி 3000 புள்ளிகளுக்கும் கீழே போய் 2924.50 புள்ளிகளுக்கு வந்து விட்டது. சில நிமிடங்கள் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த சென்செக்ஸ், பின்னர் 442 புள்ளிகளை ஒரே நேரத்தில் இழந்தது. இதனால் டாடா ஸ்டீல் 7.7 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 7.5 சதவீதம், ஹிண்டல்கோ 6.5 சதவீதம், பார்தி ஏர்டெல், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் ஆகியவை 6 சதவீதம், டி சி எஸ் மற்றும் மகேந்திரா அண்ட் மகேந்திரா 5.5 சதவீதம், ஸ்டெர்லைட் மற்றும் சத்யம் 5.3 சதவீதம் ஆரம்ப வர்த்தகத்தில் குறைந்திருந்தன. 2006 ஜூலைக்குப்பின் இப்போதுதான் நிப்டி 3 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளது. இன்று ஆசிய சந்தைகள் எல்லாவற்றிலும் வீழ்ச்சிதான். ஜப்பானின் நிக்கி 479 புள்ளிகள், ஹாங்காங்கின் ஹேங் செங் 676 புள்ளிகள், தைவானின் வெயிட்டட் இன்டக்ஸ் 149 புள்ளிகள், சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 57 புள்ளிகள், சியோல் காம்போசைட் இன்டக்ஸ் 98 புள்ளிகள், சீனாவின் ஷாங்கை காம்போசைட் இன்டக்ஸ் 47 புள்ளிகள் குறைந்திருந்தன. அமெரிக்க பங்கு சந்தைகளிலும் கடும் வீழ்ச்சியேமும்பை : மும்பை பங்கு சந்தை இன்று மீண்டும் பெரும் சரிவை சந்திருக்கிறது. ஜூலை 24, 2006 க்குப்பிறகு, இன்று நிப்டி 3000 புள்ளிகளுக்கும் கீழே சென்றிருக்கிறது. சென்செக்ஸ் மீண்டும் 10000 புள்ளிகளுக்கும் கீழே சென்றுவிட்டது. கடந்த வரம் ஒரு தடவை இது 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போயிருந்தது. பின்னர் மேலே எழுந்து வந்து இன்று மீண்டும் கீழே போய் விட்டது. எஃப் ஐ ஐ களின் ஷார்ட் செல்லிங் முறைக்கு தடை விதிப்பது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை ஒன்றும் பிரயோஜனமாக இருக்கவில்லை.உலக அளவில் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மெட்டல் நிறுவன பங்குகளின் கடும் சரிவு ஆகியவையே இன்றைய வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார்கள். நிதி அமைச்சரின் அறிவிப்பால் ஒரளவு சந்தை மீண்டு வந்தாலும் பெரிதாக மீழ முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 398.20 புள்ளிகள் ( 3.92 சதவீதம் ) குறைந்து 9,771.70 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 122.00 புள்ளிகள் ( 3.98 சதவீதம் ) குறைந்து 2,943.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் பெட்ரோலியம், பார்தி ஏர்டெல், செய்ல், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹிண்டல்கோ ஆகிய நிறுவனங்கள்தான்

 

 

 

 

 

விமான நிறுவனங்கள் தவிப்புக்கு சிறு நிம்மதி

புதுடில்லி : நிதிச்சுமையால் சிக்கலில் தவிக்கும் விமான நிறுவனங்கள், எண் ணெய் நிறுவனங்களுக்கு, செலுத்த வேண்டிய விமான எரிபொருளுக் கான நிலுவைத் தொகை யை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை ஆறு தவணைகளில் செலுத்த அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். விமான எரிபொருள்களுக்கான கட்டணத்தை செலுத்தாமல், ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ளன. இந்த தொகையை செலுத் துவதற்கான கால அவகாசம் 60 நாட்கள் முடிந்துவிட்டது. இந்நிலையில், விமான நிறுவனங்கள் மேலும் கால அவகாசம் கோரியுள்ளன. இது பற்றி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விமான நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ள தொகை ரூ.2,962 கோடி. இந்த தொகையை, அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் மொத்தம் ஆறு தவணைகளில் செலுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நிதிப்பற்றாக்குறை வந்தது : சிதம்பரம் பகிரங்க ஒப்புதல்

புதுடில்லி : பட்ஜெட் இலக்கை தாண்டி, நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறை இருக்கும். இதை நடப்பு நிதியாண்டுக்குள் சமாளிக்க முடியாது. இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும் என, மத்திய அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது.

முன்பு பட்ஜெட் உரையில் நிதிப்பற்றாக்குறை வராது என்று கூறிய நிதியமைச்சர் சிதம்பரம், டில்லியில் அமெரிக்க நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசியதாவது: சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பொருளாதாரத்தில் அனைத்து பிரிவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் இலக்கை தாண்டி நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறை இருக்கும். இதன் காரணமாக இந்த நிதியாண்டில் பட்ஜெட் இலக்கை பூர்த்தி செய்வது முடியாத காரியம். அடுத்த நிதியாண்டிற்கு தள்ளிப்போகலாம். நிதி பற்றாக்குறை 3 சதவீதத்திற்குள்ளாகவும், வருவாய் பற்றக்குறை 1 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை என்பது அரசின் மொத்த வருவாயை விட அரசு செலவினம் அதிகரிப்பதாகும். இதை சமாளிக்க 2010ம் ஆண்டு மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும். பட்ஜெட் மதிப் பீட்டில் குறிப்பிட்ட இலக்கை காட்டிலும் சற்றே அதிகரித்துள்ளது. பொருளாதார மேம்பாடு அடைவதற்காக 60 ஆண்டுகள் காத்திருந்த நாம், மேலும் ஓராண்டு காத்திருப்பதில் ஒன்றும் கஷ்டமில்லை. நிதி மற்றும் வருவாய் பற்றக்குறையை குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசால் மட்டுமே செய்துவிட முடியாது. மாநில அரசுகளின் ஒத்துழைப்புடனும் தான் நிறைவேற்ற முடியும். ஆனால், நிதிப்பற்றாக்குறை விஷயத்தில் மாநில அரசு நிலைமை தேவலை. இவ்வாறு சிதம்பரம் கூறினார்

பங்குச் சந்தையில் தெரிகிறது முன்னேற்றம் : சேதுராமன் சாத்தப்பன்

சந்தை சிறிது மேலே தலை தூக்கிப் பார்க்கிறது. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் அன்று பாடினார். இன்று பாடியிருந்தால், ‘வாடிய முகத்தை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடியிருப்பார். கடந்த வாரங்களில் குறைக்கப்பட்ட ரொக்க கையிருப்பு சதவீதம் 2.5 தவிர, இந்த வாரம் ரெப்போ ரேட் 1 சதவீதமும் குறைக்கப்பட்டது. இது பணப் புழக்கத்தை இன் னும் அதிகமாக்கும் என்றும், கடன்களுக்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் குறையும் என்ற நோக்கத்தில் செய்யப் பட்டுள்ளது. பணப்புழக்கம் அவ்வளவு மோசமாகவாக இருக்கிறது? ஒன்று வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை விற்று வெளிநாட்டுப் பணத்தை கொண்டு செல்வதால் பணப் புழக்கம் குறைகிறது. மேலும், டாலரின் மதிப்பு கூடி வருகிறது. பணம் உள்ளே வந்த போதெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டோம். தற் போது போகும் போது பொறுமையாகத்தான் இருக்க வேண் டும். அவர்கள் தான் எடுத்துச் செல்கின்றனர். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு என்ன வந்தது. எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்பது போல எடுத்துச் செல்கின்றனர். பொறுமை தேவை. பங்குச் சந்தை என்பது இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி சந்திக்கும் இடம். அதில் பயணம் செய்ய பொறுமை தேவை. தற்போது அசாத்திய பொறுமை தேவை. டாலர் மதிப்பைக் குறைக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வங்கிகளில் வைக்கும் வைப்புத் தொகைகளுக்கு வட்டி விகிதங்களை கூட்டியுள்ளன.

 

 

இது வெளிநாட்டுப் பணம் உள்ளே வர ஏதுவாகும். அப்படி வரும் வரத்து கூடிவருகிறது. எங்கு வட்டி கூடுதலாகக் கிடைக்கிறதோ அங்கு தானே போவார்கள். திங்களன்று மும்பை பங்குச் சந்தை 2.5 சதவீதம் மேலே சென்று முடிவடைந்தது. அன்று 247 புள்ளிகள் கூடியது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் மேலே சென்றன. நேற்று முன்தினம், ரிலையன்ஸ், எல் அண்டு டி., எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம் கம்ப்யூட் டர்ஸ் நன்றாக மேலே சென்றது சந்தையையும் மேலே கொண்டு சென்றது. குறிப்பாக டி.சி.எஸ்., 12.9 சதவீதம் மேலே சென்றது. ஆசிய அளவில் சந்தைகள் குறைந்ததாலும், லாப நோக்குடன் விற்றதாலும் நேற்று சந்தை மிகவும் கீழே சென்றது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 513 புள்ளிகள் குறைந்து 10,169 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 169 புள்ளிகள் குறைந்து 3,065 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. மறுபடியும் மும்பை பங்குச் சந்தை 10,000க்கும் அருகில், வாய்ப்புகளா அல்லது சறுக்கல்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். திங்கள், நேற்று முன்தினம் கிடைத்த லாபத்தை நேற்று ஏற்பட்ட நஷ்டத்தால் காணாமல் போனது. இந்திய பங்குச் சந்தையில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நார்வே 9,800 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்பது சந்தையை பலப்படுத்த உதவும். காலாண்டு முடிவுகள்: செயில் சென்ற வருடம் இதே காலாண்டை விட 18 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. அதே போல ஹீரோ ஹோண்டா சென்ற வருடம் இதே காலாண்டை விட 50 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. ஜெயப்பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் சென்ற வருடம் இதே காலாண்டை விட 96 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது.

இதே போல எல்.ஐ.சி., ஹவுசிங், இந்தியா புல்ஸ் பைனான்சியல், யுனைடெட் ஸ்பிரிட், போலாரிஸ் சாப்ட்வேர், மாரிகோ, ஜீ என்டர்டெயின்மென்ட் ஆகிய கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன.

 

 

ஏன் தங்கம் விலை குறைகிறது? பங்குச் சந்தையில் 10,000க்கும் கீழே வந்திருந்தது முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாக தெரிந்ததால், தங்கத்தை விட்டு பங்குக்கு தாவ ஆரம்பித்தனர். இதனால், தங்கம் பரிதவித்துப் போய் கீழே இறங்கியது. கூடி வரும் டாலர் மதிப்பால் சிறிது விலை கூடி நிற்கிறது.

 

 

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பலரும் அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்படும் என்றும் அது நாடுகளையும், சந்தைகளையும் அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போதே நிறையப் பார்த்தாகிவிட்டது. இந்திய சந்தை பல நாடுகளின் சந்தைகளை வைத்துப் பார்க்கும் போது அதிகம் சரிந்த சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆதலால் மேலும் பெரிதாக சரிய வாய்ப்பில்லை. 10,000க்கும் கீழே செல்லும் போது வாங்குபவர்கள் அதிகம் வருவார்கள்.

ஹீரோ ஹோண்டாவின் நிகர லாபம் 50 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ், செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் 50 சதவீதம் கூடுதலாக நிகர லாபம் ஈட்டியுள்ளது. பண்டிகை காலம், விலை உயர்வு போன்ற காரணங்களால் இவ்வளவு கூடுதலான லாபத்தை அவர்களே எதிர்பார்க்கவில்லை. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.204 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த இந்த நிறுவனம், இந்த வருடத்தில் ரூ.306 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. ஹீரோ ஹோண்டாவின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை 36 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் விற்பனை 29 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பொதுவாக தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிகம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ஆவது வழக்கம். நிகர லாபம் இவ்வளவு அதிகரித்திருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, அதன் மோட்டார் சைக்கிள் <தயாரிப்பை ஹரித்துவாரில் இருக்கும் புதிய தொழிற்சாலைக்கு மாற்றியதுதான். ஏப்ரல் மாதத்தில் அங்கு ஒரு புதிய தொழிற்சாலையை அமைத்ததன் மூலம் அவர்களுக்கு எக்சைஸ் மற்றும் இன்கம் டாக்ஸ் இல் இருந்து சலுகைகள் கிடைத்திருக்கின்றன.

என்றுமில்லாத அளவாக ரூபாயின் மதிப்பு குறைந்தது

புதுடில்லி : இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்றுமில்லாத அளவாக குறைந்திருக்கிறது. டாலர் ஒன்றுக்கு ரூ.49.50 க்கும் கீழே மதிப்பு குறைந்து விட்டது. <உலகம் முழுவதும் இன்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்திய பங்கு சந்தையில் செய்யப்பட்டிருக்கும் அன்னிய முதலீடு பெருமளவில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தின் போது காலை 9 மணிக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.49.68/69 ஆக குறைந்து விட்டது. இது நேற்றைய வர்த்தக முடிவில் ரூ.49.28/29 ஆகத்தான் இருந்தது. நேற்றிலிருந்து இன்றைக்குள் 0.80 சதவீத மதிப்பை இந்திய ரூபாய் இழந்திருக்கிறது

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

மும்பை : உலகம் முழுவதும் இன்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி நிலை காணப்படுகிறது. அதன் எதிரொலி இந்திய பங்கு சந்தையிலும் ஏற்பட்டுள்ளது. காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே நிப்டி 3000 புள்ளிகளுக்கும் கீழே போய் 2924.50 புள்ளிகளுக்கு வந்து விட்டது. சில நிமிடங்கள் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த சென்செக்ஸ், பின்னர் 442 புள்ளிகளை ஒரே நேரத்தில் இழந்தது. இதனால் டாடா ஸ்டீல் 7.7 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 7.5 சதவீதம், ஹிண்டல்கோ 6.5 சதவீதம், பார்தி ஏர்டெல், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ரிலையன்ஸ் ஆகியவை 6 சதவீதம், டி சி எஸ் மற்றும் மகேந்திரா அண்ட் மகேந்திரா 5.5 சதவீதம், ஸ்டெர்லைட் மற்றும் சத்யம் 5.3 சதவீதம் ஆரம்ப வர்த்தகத்தில் குறைந்திருந்தன. 2006 ஜூலைக்குப்பின் இப்போதுதான் நிப்டி 3 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளது. இன்று ஆசிய சந்தைகள் எல்லாவற்றிலும் வீழ்ச்சிதான். ஜப்பானின் நிக்கி 479 புள்ளிகள், ஹாங்காங்கின் ஹேங் செங் 676 புள்ளிகள், தைவானின் வெயிட்டட் இன்டக்ஸ் 149 புள்ளிகள், சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 57 புள்ளிகள், சியோல் காம்போசைட் இன்டக்ஸ் 98 புள்ளிகள், சீனாவின் ஷாங்கை காம்போசைட் இன்டக்ஸ் 47 புள்ளிகள் குறைந்திருந்தன. அமெரிக்க பங்கு சந்தைகளிலும் கடும் வீழ்ச்சியே

கடந்த 16 மாதங்களாக இல்லாத அளவாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது

நியுயார்க் : உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவாக குறைந்து விட்டது. அமெரிக்காவில் வழக்கமாக சேமித்து வைக்கப்படும் கச்சா எண்ணெய் அளவும், கடந்த அக்டோபர் 17ம் தேதியுடன் முடிந்த காலத்தில் எதிர்பார்த்ததை விட 3.2 மில்லியன் பேரல்கள் கூடுதலாக இருப்பதாக வந்த தகவலும் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு காரணம் என்கிறார்கள். இதன் காரணமாக நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 5.43 டாலர் குறைந்து 66.75 டாலராகி விட்டது. இது கடந்த ஜூன் 2007க்கு பின் ஏற்பட்ட மிகக் குறைந்த அளவு.லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலையும் பேரலுக்கு 5.20 டாலர் குறைந்து 64.52 டாலராகி விட்டது. இதுவும் கடந்த 16 மாதங்களில் இல்லாத குறைந்த அளவுதான். வெள்ளி அன்று ஓபக் மாநாடு கூடி, ஆயில் உற்பத்தியை குறைக்க தீர்மாணித்திருந்தாலும் இப்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதை அடுத்து, பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை இன்னும் குறையும் என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலருக்கும் கீழே போய் விடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.கடந்த ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147 டாலருக்கும் மேலே இருந்தது.

பங்கு சந்தையில் மீண்டும் பெரும் வீழ்ச்சி

மும்பை : மும்பை பங்கு சந்தை இன்று மீண்டும் பெரும் சரிவை சந்திருக்கிறது. ஜூலை 24, 2006 க்குப்பிறகு, இன்று நிப்டி 3000 புள்ளிகளுக்கும் கீழே சென்றிருக்கிறது. சென்செக்ஸ் மீண்டும் 10000 புள்ளிகளுக்கும் கீழே சென்றுவிட்டது. கடந்த வரம் ஒரு தடவை இது 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போயிருந்தது. பின்னர் மேலே எழுந்து வந்து இன்று மீண்டும் கீழே போய் விட்டது. எஃப் ஐ ஐ களின் ஷார்ட் செல்லிங் முறைக்கு தடை விதிப்பது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை ஒன்றும் பிரயோஜனமாக இருக்கவில்லை.உலக அளவில் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மெட்டல் நிறுவன பங்குகளின் கடும் சரிவு ஆகியவையே இன்றைய வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார்கள். நிதி அமைச்சரின் அறிவிப்பால் ஒரளவு சந்தை மீண்டு வந்தாலும் பெரிதாக மீழ முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 398.20 புள்ளிகள் ( 3.92 சதவீதம் ) குறைந்து 9,771.70 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 122.00 புள்ளிகள் ( 3.98 சதவீதம் ) குறைந்து 2,943.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் பெட்ரோலியம், பார்தி ஏர்டெல், செய்ல், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹிண்டல்கோ ஆகிய நிறுவனங்கள்தான்

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், பங்குகளை மாற்றிக்கொடுக்கும் முறை நிறுத்தப்படும் : சிதம்பரம்

மும்பை : ஷார்ட் செல்லிங் முறைக்கு நிகராக சொல்லப்படும், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அவர்கள் வைத்திருக்கும் பங்குகளை வேறு அன்னிய நிறுவனங்களுக்கு கடனாக மாற்றிக்கொடுக்கும் முறை நிறுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். செபியின் அறிவுறுத்தலின் படி, கூடிய விரைவில் அது அமல் படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே அவ்வாறு மாற்றிக் கொடுத்ததையும் திரும்ப பெறுமாறு அன்னிய நிறுவன முதலீட்டாளர்களை செபி கேட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே செபி, இது குறித்த அதன் அதிருப்தியை அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு தெரிவித்திருக்கிறது. செபியின் அறிவுறுத்தலின் படி அவர்கள் நடந்துகொள்ளவில்லை என்றால் அவர்களை தீவிரமாக கண்காணித்து கடுமையாக கட்டுப்படுத்தனும் செபி முடிவு செய்திருக்கிறது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு பி.நோட்ஸ்களை வெளியிட்டிருக்கிறது என்றும் அதன் மதிப்பு எவ்வளவு என்ற விபரத்தை தெரிவிக்குமாறும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களை செபி கேட்டுக்கொண்டிருக்கிறது

சிங்கப்பூர் – சீனா இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

பெய்ஜிங் : சிங்கப்பூருக்கும் சீனாவுக்குமிடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இது குறித்து கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வந்துள்ளது. சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இன்று நடந்த விழாவில் சீன பிரதமர் வென் ஜியாபோ மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசன் லூங் முன்ணிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஜின்குவா நியூஸ் ஏஜென்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையே கடந்த 2007 ம் ஆண்டு 47.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. சீனாவை பொருத்தவரை சிங்கப்பூர்தான் சீனாவின் எட்டாவது மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக இருக்கிறது. அதேபோல சிங்கப்பூருக்கு, சீனாதான் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக இருந்து வருகிறது. மேலும் சீனாவில்தான் சிங்கப்பூரின் பெரும்பாலான முதலீடும் இருக்கிறது.

பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்தது

புதுடில்லி : அக்டோபர் 11ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 11.44 சதவீதமாக இருந்தது. மொத்த விலை அட்டவணைப்படி கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம் கடந்த வருடத்தில் இதே காலத்தில் 3.07 சதவீதமாகத்தான் இருந்தது. பழங்கள், காய்கறிகள், முட்டை போன்ற உணவுப்பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர பருத்தி, இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், புண்ணாக்கு, பாலியஸ்டர், காரீயம், துத்தநாகம் ஆகியவைகளின் விலையும் குறைந்திருக்கிறது. ஆனால் டீ, நெய், சோளம், அரிசி, புகையிலை, காட்டர் யார்ன், கடுகு விதை போன்றவைகளின் விலை உயர்ந்திருக்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் : தியோரா

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 67 டாலருக்கும் கீழே சென்ற பின்புதான் இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை குறைக்க முடியும் என்று சில காலத்திற்கு முன் மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா சொல்லி வந்தார். இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 67 டாலருக்கும் கீழே சென்று விட்டது. எனவே ஏற்கனவே சொன்னபடி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்று இன்று லோக் சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தியோரா, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 67 டாலருக்கும் கீழே போயிருப்பதுது உண்மைதான். எனினும் இன்னும் ஒரு வாரத்திற்கு அதன் விலை என்னவாகிறது என்பதை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்கும். பின்னர் ஒரு வாரத்திற்குள் விலை குறைப்பது சம்பந்தமான அறிவிப்பு வெளிவரும் என்றார் அவர்.

விமான நிறுவனங்கள் வைத்திருக்கும் கடனை அரசு ஏற்காது : பிரபுல் படேல்

புதுடில்லி : இந்தியாவில் இருக்கும் தனியார் விமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களில் வைத்திருக்கும் எரிபொருள் பில்பாக்கியை அரசு எற்காது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். லோக் சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் கடன் வைத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட காலத்தை 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக மட்டுமே அதிகரித்திருக்கிறோம் என்றார்

விஜயா பேங்க்கின் நிகர லாபம் 24 சதவீதம் குறைந்தது

சென்னை : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் விஜயா பேங்க் இன் நிகர லாபம் 24.10 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இரண்டாவது காலாண்டில் ரூ.105.25 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த அந்த வங்கி, இந்த வருடத்தில் ரூ.79.88 கோடி மட்டுமே ஈட்டியிருக்கிறது.

சிட்டி யூனியன் பேங்க் இன் நிகர லாபம் 40 சதவீதம் அதிகரிப்பு

சென்னை : தமிழ்நாட்டை சேர்ந்த சிட்டி யூனியன் பேங்க்கின் நிகர லாபம் 40.53 சதவீதம் அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் அது பெற்றிருக்கும் நிகர லாபம் ரூ.37.65 கோடி. இது இதற்கு முந்தைய வருடத்தில் ரூ.26.79 கோடியாகத்தான் இருந்தது

நியாய விலை கடைகளில் பாமாயில் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டது

சென்னை : நியாய விலை கடைகளில் விற்கப்படும் பாமாயிலின் விலை, லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இனிமேல் அங்கு பாமாயில் விலை ஒரு லிட்டர் ரூ.35 மட்டுமே

இந்தியாவில் சிறிய கார்களுக்கு தடைவிதிக்கப்போவதில்லை : மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிபுதுடில்லி :

இந்திய நகரங்களில் போக்குவரத்து ஒரு பெரும் பிரச்னையாக இருந்தாலும் சிறிய கார்களுக்கு தடை விதிக்கப்போவதில்லை என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார். அதற்கு பதிலாக போக்குவரத்து சிஸ்டம் நவீனப்படுத்தப்படும் என்றும் லோக் சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: