விமான எரிபொருள் விலை குறையுமா?: பிரபுல் படேலுடன் இன்று தியோரா பேச்சு

புதுடில்லி: விமான எரிபொருளுக்கான தொகையை செலுத்தாமல், விமான நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ளது குறித்து, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, இன்று பெட்ரோலியத்துறை அமைச்சர் பிரபுல் படேலுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இன்று அகலும் வாய்ப்புள்ளது. இது குறித்து முரளி தியோரா, நிருபர்களிடம் கூறியதாவது: விமான எரிபொருள்களுக்கான கட்டணத்தை செலுத்தாமல் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ளன. பொதுவாக ஏர்லைன்ஸ் நிறுவனங்களும், எண் ணெய் நிறுவனங்களுக்கும் கடும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விமான சேவையை நிறுத் துவதை நாங்கள் விரும்பவில்லை. இரு தரப்புக்கும் பணப்புழக்கம் தொய்வின்றி இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்படும். ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் மற்றும் ஏர்இந்தியா நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை இரண்டாயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் 60 நாட்கள் முடிந்துவிட்டது. இந்த பிரச்னை குறித்து பெட் ரோலிய அமைச்சருடன் நாளை பேச இருக்கிறேன் இவ்வாறு முரளி தியோரா கூறினார். தற்போதுள்ள இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில், இந்திய சிவில் விமானத்துறை, விமான எரிபொருளுக்கான கட்டணத்திற்கு வரிச்சலுகை கோருகிறது. ஏற்கனவே இந்த விஷயத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேலுக்கும், அமைச்சர் தியோராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கி ஒரு முடிவு ஏற்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. அதையடுத்து, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் பாதிக்கப்படாமல் இருக்க இன்று அமைச்சர்கள் இருவரும் சந்திக்கும் போது முடிவு ஏற்படும் என்றும் தெரிகிறது. நேற்று முன்தினம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து விமானத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்.

பெட்ரோல் விலை குறையுமா? பிடி கொடுக்கவில்லை சிதம்பரம்

புதுடில்லி: ‘இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை இப்போது பேரல் ஒன்று 64 டாலருக்குத்தான் வந்திருக்கிறது. இது 61 டாலராகும் போது, பெட்ரோல், டீசல், ‘காஸ்’ விலையை குறைப்பது பற்றி முடிவு செய்யப்படும். அதுவரை பொறுத்திருங்கள்’ என்கிறார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பேரல் 147 டாலர் வரை சென்றது. தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்று 64 டாலருக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என எதிர்பார்ப்பு உள்ளது. இது குறித்து டில்லியில் நேற்று நிருபர்கள் மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவை சந்தித்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி சற்றே பொறுத்திருங்கள். இந்தியா வாங்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை இப்போதுதான் 64 டாலருக்கு இறங்கி வந்து இருக்கிறது. 61க்கு வரட்டும். அப்போது பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்படும். இப்போதைக்கு அது பற்றி பரிசீலிக்கப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைவதன் மூலம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவருவதால், கச்சா எண்ணெய் விலை குறைவால் ஏற்படும் சாதகமும் பாதகமாகிறது. இவ்வாறு முரளி தியோரா கூறினார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உடனடியாக இருக்காது என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரமும் நேற்று உறுதிபட தெரிவித்தார்

புதிய காலர் டியூன்: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

சென்னை: சென்னை பி.எஸ்.என். எல்., நிறுவனம், தனது லேண்ட் லைன் வாடிக் கையாளர்களுக்கு, 15 நாட்களுக்கு இலவச காலர் டியூன் சேவையை வழங்கி வருகிறது. சென்னையில், இ.டபிள்யூ. எஸ்.டி., மற்றும் 5 இ.எஸ்.எஸ்., பயன்படுத்தும் லேண்ட் லைன் வாடிக்கையாளர்களுக்கு, 21ம் தேதி முதல், 15 நாட்களுக்கு இலவசமாக, பி.எஸ்.என்.எல்., காலர் டியூன் சேவையை வழங்கி வருகிறது. இந்த பாடல்களை மாற்ற விரும்பினால், 56700 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதற்காக, மாத கட்டணமாக இரண்டு பாடல்களுக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த இரண்டு பாடல்களும், ஒவ்வொரு போன் கால் வரும் போதும், மாறி மாறி ஒலிக்கும். இந்த பாடல்களை டவுண் லோடு செய்வதற்கு பிரபலமான பாடல்களுக்கு 12 ரூபாயும் குறைந்த பிரபல பாடல்களுக்கு 9 ரூபாயும் கட்டணமாக, வசூலிக்கப்படும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: