உலக பொருளாதார சீர்குலைவால் 2 கோடி பேர் கூடுதலாக வேலை இழப்பர் : ஐ.எல்.ஓ., கவலை

.நா : உலக அளவில் இப்போது இருந்து வரும் பொருளாதார சீர்குலைவால், உலகம் முழுவதும் 2 கோடி பேர் வரை கூடுதலாக வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் லேபர் ஏஜென்சி கவலை தெரிவித்திருக்கிறது. இப்போதுள்ள நிலையில் கணக்கெடுத்தால், 1997ம் ஆண்டு 19 கோடியாக இருந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2010 ம் ஆண்டு வாக்கில் 21 கோடியாக உயர்ந்து விடும் என்று ஐ.எல்.ஓ.,வின் இயக்குனர் ஜூவன் சோமாவியா தெரிவித்துள்ளார். இது தவிர, நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 4 கோடி அதிகரிக்கும் என்றும் 2 டாலருக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 10 கோடி அதிகரிக்கும் என்றும் ஐ.எல்.ஓ., தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்னையை சமாளிக்க உலக நாடுகள் உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மே<லும் அதிகரிக்கும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. இது வெறும் வால்ஸ்டிரீட் பிரச்னை மட்டும் அல்ல. எல்லா நாடுகளுமே இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சோமாவியா தெரிவித்தார்

இரண்டாவது நாளாக பங்கு சந்தையில் முன்னேற்றம்

மும்பை : தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 460.30 புள்ளிகள் ( அதாவது 4.5 சதவீதம் ) <உயர்ந்து 10,683.39 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.அதே போல தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 112.10 புள்ளிகள் ( 3.59 சதவீதம் ) உயர்ந்து 3,234.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. காலை நேரத்தில் சந்தை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் மதியத்திற்கு மேல் ஸ்டெடியாக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெரும் லாபமடைந்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல், இன்போசிஸ், எல் அண்ட் டி, ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்.,மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவைதான். ஆசிய சந்தை இன்று கலப்பு நிலையில் முடிந்திருந்தாலும் ஐரோப்பிய சந்தை ஏற்றத்தில்தான் முடிந்திருந்தது. ஆனால் இன்று மாலை 3.50 மணி நிலவரப்படி அமெரிக்காவில் டவ் ஜோன்ஸ் ஃபியூச்சர் இன்டக்ஸ் 62 புள்ளிகள் குறைந்திருந்தது. நாஸ்டாக் ஃபியூச்சர் இன்டக்ஸ் 17 புள்ளிகள் குறைந்திருந்தது. வங்கிகளில் நிலவும் நிதி பிரச்னையை சமாளிக்க எல்லா நாடுகளுமே தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் காரணமாகத்தான் இன்று பங்கு சந்தைகளில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். பிரான்சில், பிஎன்பி பரிபாஸ் மற்றும் சோசியேட் ஜெனரல் அண்டு கிரிடிட் அக்ரிகோல் நிறுவனங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் 14 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்திருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியா அரசாங்கங்கள் நிதி சிக்கலை தீர்க்க மொத்தமாக றகொடுப்பதாக இருக்கும் தொகை 1.3 டிரில்லியன் யூரோக்கள்.

60 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா – பாகிஸ்தான் சாலை வழி வர்த்தக போக்குவரத்து துவக்கம்

சலாமாபாத் ( காஷ்மீர் ) : கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் சாலை வழி வர்த்தகம் இன்று மீண்டும் துவங்கப்பட்டது. ஸ்ரீநகரில் இருந்து பாகிஸ்தான் நகரான முசாபராபாத்துக்கு செல்லும் ரோடு, வர்த்தகத்திற்காக இன்று திறக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக போக்குவரத்தை ஜம்மு – காஷ்மீர் கவர்னர் வோரா இன்று துவக்கிவைத்தார். இன்று 13 டிரக்குகள் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவில் இருந்து காஷ்மீருக்கு சென்றன.இன்று முதல் நாளாக இருப்பதால் பழங்கள், வால்நட், தேன் மற்றும் வாசனை திரவியங்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன. எல்லை பிரச்னை காரணமாக 60 வருடங்களாக மூடப்பட்டிருந்த இந்த பாதையில் 2005ம் ஆண்டு பயணிகள் போக்குவரத்து துவங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா இதனை அப்போது துவக்கி வைத்தனர். இப்போது வர்த்தகத்திற்காகவும் இந்த ரோடு திறக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்து அனுப்பப்படும் பொருட்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் சாகோடி என்ற நகரில் இறக்கப்படும். அங்கிருந்து அனுப்பப்படும் பொருட்கள் இந்திய எல்லையில் இருக்கும் சலாமாபாத்தில் இறக்கப்படும்

எண்ணெய் நிறுவனங்களுக்கு பில்பாக்கி வைத்திருக்கும் ஏர்லைன்ஸ்கள் : தியோரா – பிரபுல் படேல் நாளை சந்திப்பு
புதுடில்லி : இந்திய விமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் வாங்கிய எரிபொருளுக்கான பில்தொகையை செலுத்தாமல் இழுத்தடிப்பது தொடர்பாக நாளை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேலை பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து பேசுகிறார். விமான நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளும் அந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் இந்திய விமான நிறுவனங்கள், அவர்கள் வாங்கிய விமானஎரிபொருள் பில்தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கின்றன. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட 60 நாட்கள் கிரிடிட் பீரியடுக்கும் மேலாக பாக்கி வைத்திருக்கின்றன. ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் மற்றும் ஏர் – இந்தியா போன்ற பிரபல விமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு வைத்திருக்கும் பாக்கி ரூ.2000 கோடிக்கும் மேல் தாண்டி விட்டன. கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் இந்த பில்தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியவில்லை என்று அவைகள் சொல்கின்றன. இதனையடுத்துதான் நாளை படேல் மற்றும் தியோரா சந்தித்து விவாதிக்க இருக்கிறார்கள். இதனால் விமான நிறுவனங்கள் செயல்படாமல் இருந்து விடுவதை நாங்கள் விரும்பவில்லை. இதனால்தான் அது குறித்து பேசி முடிவு எடுக்க இருக்கிறோம் என்றார் தியோரா. மேலும் இந்திய விமான நிறுவனங்கள், விமானங்களுக்கான எரிபொருள் விற்பனைக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று கோருகின்றன. நேற்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்த ஜெட் ஏர்வேஸ் அதிபர் நரேஷ்கோயலும் இதையேதான் கோரிக்கையாக வைத்தார்.

பிக் டி.வி.,க்கு இப்போது 5 லட்சம் வாடிக்கையாளர்கள்
மும்பை : சமீபத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிமுகப்படுத்திய பிக் டி.வி., க்கு இப்போது 5 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாக பிக் டி.வி., நிறுவனத்தின் தலைவர் அருண் கபூர் தெரிவித்தார். டி டி ஹெச் என்று சொல்லப்படும் டைரக்ட் – டு – ஹோம் பிசினஸில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நுழைந்த இரண்டு மாத காலத்திலேயே இவ்வளவு வாடிக்கையாளர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று கபூர் தெரிவித்தார். இதன் மூலம், நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் டி டி ஹெச் சேவை நிறுவனம் என்ற பெருமையை பிக் டி.வி., அடைந்துள்ளது. அதன் குவாலிட்டியால்தான் இந்த அளவு வேகமான வளர்ச்சியை அடைய முடிந்தது என்று தெரிவித்த கபூர், இது டி டி ஹெச்., சேவைக்கு இந்தியாவில் வரவேற்பு கூடி வருகிறது என்பதையும் காட்டுகிறது என்றார். எங்களின் இந்த வளர்ச்சியால் நாங்கள் இன்னும் அதிகமான சேவையை டி.வி., பார்ப்பவர்களுக்கு கொடுப்போம் என்றார் அவர். மாதத்திற்கு 4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிக் டி.வி., க்கு சேர்க்க திட்டமிட்டிருப்பதாகவும், இந்தியாவில் 6,500 நகரங்களில் இது கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

உற்பத்தி குறைக்கப்படும் என்ற வதந்தியால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது
நியுயார்க் : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் கொஞ்சம் உயர்ந்திருக்கிறது. இந்த வார கடைசியில் நடக்க இருக்கும் ஓபக் அமைப்பு கூட்டத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று வந்த வதந்தியால் இன்று விலை <உயர்ந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் நேற்று 74.25 டாலரில் முடிந்திருந்த யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை இன்று 1.36 டாலர் உயர்ந்து பேரலுக்கு 75.61 டாலராக இருக்கிறது. அதே போல நேற்று 72.03 டாலராக இருந்த லண்டனின் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை இன்று 1.18 டாலர் உயர்ந்து பேரலுக்கு 73.21 டாலராக இருக்கிறது. வரும் வெள்ளி அன்று வியன்னாவில் நடக்க இருக்கும் ஓபக் அமைப்பின் கூட்டத்தில், சமீப காலமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து வருவதால் உற்பத்தியையும் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நாள் ஒன்றுக்கு எத்தனை பேரல்கள் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்பதில் ஓபக் நாடுகளிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முப்பது லட்சம் பேரல்களை குறைத்தால்தான் சரியாக இருக்கும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால் ஆரம்பத்திலேயே இவ்வளவு அதிகமாக குறைக்காமல் முதலில் 10 லட்சம் பேரல்களை குறைத்து விட்டு பின்னர் தேவைக்கு தக்கபடி கூடுதலாக குறைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது

சென்னை விமான நிலைய விரிவாக்கத்தால் இன்னும் அதிகமான தொழில்கள் இங்கு வரும் : கருணாநிதி

சென்னை : சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதை அடுத்து, இன்னும் அதிகமான தொழில்கள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று தெரிவித்தார். ரூ.1,808 கோடி செலவில் நடத்தப்படும் சென்னை விமான விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சென்னை விமான நிலையவ வளாகத்தில் நடந்தது.அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி இதனை தெரிவித்தார். இந்த விரிவாக்க பணிக்காக நிலம் கொடுக்க மறுக்கப்பட்டாலும் அதையெல்லாம் தாண்டி இந்த பணி துவங்கப்படுகிறது என்றார். அப்போது அவர், 40 ஆண்டுகளுக்கு முன் விமான சேவை எவ்வாறு இருந்தது என்பதை பற்றி நினைவு கூர்ந்தார். அப்போது மரத்தால் செய்யப்பட்ட டகோடா விமானங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. மெலும் சென்னை – திருச்சிக்கான விமான கட்டணம் அப்போது ரூ.35 ஆகத்தான் இருந்தது. அது இப்போது ரூ.3500 – 7000 ஆக இருக்கிறது என்றார். பணவீக்கம் அதிகரித்திருப்பதற்கு கவலை தெரிவித்த அவர் அது குறைக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் விலை குறைய வேண்டும் என்றும் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என்றும் சொன்னார்

மருத்துவ உபகரண தொழிழை தொடர்ந்து நடத்த எல் அண்ட் டி முடிவு
மும்பை : இந்தியாவில் கட்டுமான தொழிலில் புகழ்பெற்று இருக்கும் எல் அண்ட் டி நிறுவனம், மைசூரை சேர்ந்த மெடிக்கல் எக்யூப்மென்ட் சிஸ்டம் தொழிலை தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறது. முன்னதாக அது, அதற்கு சம்பந்தம் இல்லாத தொழில் என்று அதிலிருந்து விலகிக்கொள்ள திட்டமிட்டிருந்தது. இப்போது அதை தொடரலாம் என்று முடிவு செய்திருக்கிறது. அந்த நிறுவனத்தன் வருடாந்திர ஜெனரல் மீட்டிங்கில் அதனை தெரிவித்த அதன் தலைவர் ஆர்.என்.முகிஜா, வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஆர்டர்களையும், இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற அவர்களது விருப்பத்தையும் அடுத்து இதை தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்ததாக தெரிவித்தார். ஹெல்த்கேர் துறையில் இன்னும் அதிகமான ஈடுபாடுடன் இறங்குவது என்றும் எல் அண்ட் டி முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். மருத்துவ <உபகரணங்களை எல் அண்ட் டி., யின் மெடிக்கல் எக்யூப்மென்ட் கிஸ்டம் நிறுவனம் தயாரித்து இந்தியா முழுவதும் சப்ளை செய்து வருகிறது. இதற்கான ஆர்டர் அதிகரித்து வருவதை அடுத்து சமீபத்தில்தான் அது, மைசூரில் இருக்கும் அதன் தொழிற்சாலைக்கு அருகிலேயே இன்னொரு தயாரிப்பு கூடத்தையும் அமைத்து வருகிறது. இதன் வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டு அடுத்த நிதி ஆண்டின் துவக்கத்தில் இங்கிருந்தும் உற்பத்தியை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் நச்சு கலந்த பாலை சாப்பிட்ட 1,500 நாய்கள் பலி
பெய்ஜிங்: சீனாவில் விற்கப்பட்ட குழந்தைகளுக்கான பால் மற்றும் பால் பொருட்களில் மெலமைன் என்ற நச்சு கெமிக்கல் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை சாப்பிட்ட 50 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்படுவார்கள் என்று கருதுப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்த நச்சு பாலை சாப்பிட்ட 1,500 நாய்களும் அங்கு இறந்திருப்பதாக இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மாஸ் லீவு : பணிகள் பாதிப்பு

மும்பை : ஊழியர்களுக்கான பென்சன் திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு மற்றும் அது சம்பந்தமான பிரச்னை தொடர்பாக இன்று ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் பெருமாபாலானவர்கள் மொத்தமாக லீவு ( மாஸ் லீவு ) எடுத்துக்கொண்டனர். இதனால் இன்று அங்கு வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

ஜீ டிவி யின் நிகர லாபம் 84 சதவீதம் அதிகரிப்பு
மும்பை : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ டிவி.,ரூ.178.15 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. இது, இதற்கு முந்தைய வருட லாபம் ரூ.97.06 கோடியை விட 83.55 சதவீதம் கூடுதல்

பொருளாதார மந்த நிலை நீடித்தால் இந்திய இன்சூரன்ஸ் துறை பாதிக்கும் : ஓரியன்டல் இன்சூரன்ஸ்

புதுடில்லி : உலக அளவில் இப்போது பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இது வரை இந்திய இன்சூரன்ஸ் துறை பாதிக்காமல் இருந்தாலும் இதே நிலை தொடர்ந்தால் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்று ஓரியன்டல் இன்சூரன்ஸ் சி.எம்.டி.ராமதாஸ் தெரிவித்தார்

இந்தியாபுல்ஸ் பைனான்சியல் சர்வீஸசின் நிகர லாபம் 21 சதவீதம் அதிகரிப்பு

மும்பை : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் இந்தியாபுல்ஸ் பைனான்சியல் சர்வீஸசின் நிகர லாபம் 21.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.111.8 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அது இந்த வருடம் ரூ.135.7 கோடியாக அதிகரித்திருக்கிறது

by
dinamalar

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: