இந்தியாவில் கார் டெர்மினலை அமைக்க ஜப்பானின் டொயோஃபுஜி ஷிப்பிங் நிறுவனம் விருப்பம்

சென்னை : ஜப்பானை சேர்ந்த பிரபல ஷிப்பிங் நிறுவனமான டொயோஃபுஜி ஷிப்பிங் நிறுவனம், இந்தியாவில் கார் டெர்மினல் ஒன்றை அமைக்க விரும்புகிறது. அதற்காக இந்தியாவில் சென்னை, எண்ணூர், மும்பை மற்றும் தூத்துக்குடி துறைமுக கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜப்பானில் தயாராகும் கார்களை கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அல்லது வெளிநாடுகளில் இருந்து ஜப்பான் வரும் கார்களை இறக்குமதி செய்வது, மற்றும் அது சம்பந்தமான அனைத்து துறைமுக வேலைகளையும் செய்வதில் புகழ்பெற்ற நிறுவனமாக இருந்து வருகிறது டொயோஃபுஜி ஷிப்பிங் நிறுவனம். கடந்த 44 வருடங்களாக இயங்கி வரும் இந்த நிறுவனத்திற்கு ஜப்பானின் பிரபல துறைமுகங்கள் தவிர சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, புருனி, பிலிப்பைன்ஸ், கொரியா மற்றும் ரஷ்யாவில் நிறுவனங்கள் இருக்கின்றன. இப்போது அதன் பார்வை இந்தியா மீது விழுந்துள்ளது. இந்தியா இப்போது அதிகம் கார்கள் தயாரிக்கும் நாடாக மாறி வருவதால் இங்கும் அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்த அது விரும்புகிறது. இதற்காக இந்தியா வந்திருக்கும் அதன் <உயர் அதிகாரிகளை கொண்ட குழு, முதலில் சென்னை துறைமுக கழக அதிகாரிகளுடன் அதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. விரைவில் எண்ணூர், மும்பை மற்றும் தூத்துக்குடி துறைமுக கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.

வீடு, கார் கடன் வட்டி எளிதாகும்: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

மும்பை: வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மத்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இது வீட்டுக் கடன் வசதி, கார் வாங்க கடனுதவி, பெர்சனல் லோன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதம் குறைய வழிவகுக்கும். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால், இந்தியாவில் நிதிச்சந்தைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும், பணப் புழக்கத்திலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைந்தது. இவற்றின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் கடன் பெற்று, அதை வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வந்தன. இந்த கடனுக்கு (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி 9 சதவீதம் வசூலித்து வந்தது. தற்போது, இதில் 100 புள்ளிகளை குறைத்து, 8 சதவீத வட்டி ஆக்கியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் பயனாக முதலீட்டாளர்கள் கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. வீடு கட்டுபவர்கள், தனிநபர் கடன் பெறுவோர், வாகன கடன் பெறுபவர்களுக்கு இதனால் பயன் கிடைக்கும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை குறைத்துள்ளது. சிதம்பரம் வரவேற்பு: டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் கூறுகையில், ‘ரெபோ ரேட்டை குறைத்துள்ளதன் மூலம், பொருளாதார வளர்ச்சி மேம்படும், பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்படும். கடன் பெறுவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும்’ என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இணை நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சார் கூறுகையில், ‘ரிசர்வ் வங்கியின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் போதிய பணப்புழக்கம் இருக்கும். நிதிச்சந்தைகள் சுமுக செயல்பாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்’ என்றார். இனி வங்கிகள் டிபாசிட் மற்றும் கடன் மீதான வட்டி குறித்து மறுபரிசீலனை செய்து எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் நிதி நிறுவனங்கள் சந்தித்த பாதிப்பால் ஏற்பட்ட நிதிச்சுனாமிக்கு இது ஓரளவு ஆறுதலாக இருப்பதுடன், மக்களிடம் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

உங்கள் வங்கி டிபாசிட்டிற்கு ஆபத்தில்லை: மன்மோகன் உறுதி

புதுடில்லி: ‘சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு, நம் நாட்டையும் சற்றே பாதித்துள்ளது. இந்த தற்காலிக பின்னடைவை சந்திக்க நாம் தயாராகி வருகிறோம். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள டிபாசிட்டுகள் முழுவதும் மிகவும் பாதுகாப்பாக உள்ளன’ என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பார்லிமென்டில் தெரிவித்தார். சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, விளக்கம் அளித்து நேற்று பார்லிமென்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நம்மை நேரடியாக இல்லாமல் மறைமுகமாக பாதித்துள்ளது. அதுவும், பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால், நமது இந்திய வங்கிகளை தாக்கியுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம், நமது நிதிச்சந்தைகள் மீதான நம்பிக்கையையே ஆட்டம் காணச் செய்துவிட்டது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட படுவீழ்ச்சி நமது பொருளாதார நடவடிக்கையையே பின்னடைய செய்துவிட்டது. தொழில்மயமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நம்மை பொறுத்தமட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்டு இருப்பதால், இது தற்காலிகமானதே. நமது வங்கிகள், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் நிதி ஆதாரத்தில் நல்ல வலுவான நிலையைக் கொண்டுள்ளன. நல்ல மூலதனம், சிறந்த கட்டுப்பாடுடன் உள்ளது. எனவே எந்த வங்கியும் மோசமடைந்து விடுமோ என்ற பயம் தேவையில்லை. நமது வங்கிகளில் பணத்தை போட்டுள்ள டிபாசிட்தாரர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் டிபாசிட் முழுவதும் பாதுகாப்பாக உள்ளது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பணப்புழக்கத்தில் எவ்வித தொய்வும் ஏற்படாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. நமது வங்கிகளில் மூலதன விகிதம் போதுமானதாக உள்ளது. ரிசர்வ் வங்கி வகுத் துள்ள அடிப்படை மற்றும் வரன்முறைக்கு மேலாகவே வங்கிகளில் மூலதன விகிதம் உள்ளது. வங்கிகளுக்கு தேவையான உதவிகளை அளிப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. அடுத்த இரண்டு மாதத்தில் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம். நடப்பாண்டில் நமது உள்நாட்டு மொத்த உற்பத்தி 7.5 சதவீதத்திற்கு செல்லும் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன. 9 சதவீதத்தை நோக்கி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாம் மேற் கொண்ட முயற்சிகள், சர்வதேச பொருளாதார நெருக்கடியால் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து, இன்று காலை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடு அதிகரிக்க ஆதரவாக அமையும். இந்த நடவடிக்கையை அரசு வரவேற்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த நமது நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. இதற்கு இது உதவியாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நிதியமைச்சருடன் ஜெட் ஏர்வேஸ் கோயல் சந்திப்பு

புதுடில்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேர்மன் நரேஷ் கோயல், நேற்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். விமான எரிபொருள் கட்டண உயர்வு காரணமாக வரிச்சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பொருளாதார மந்த நிலை காரணமாக, விமானத்துறையில் ஈடுபட்டுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உடன் இணைய இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக செலவைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கையாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தன்னிடம் வேலை பார்க்கும் 1,900 தற்காலிக ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதன் சேர்மன் நரேஷ் கோயல், நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஒப்புக் கொண்டார். இந்நிலையில், நேற்று டில்லியில் உள்ள நார்த் பிளாக்கில், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை நரேஷ் கோயல் சந்தித்துப் பேசினார். விமான எரிபொருள் கட்டண உயர்வு காரணமாக, விமான நிறுவனங்களுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதில் இருந்து தப்பிக்க, தனியார் விமான நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டுமென நரேஷ் கோயல் கூறினார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான எரிபொருள் கட்டணமாகச் செலுத்த வேண்டிய தொகை 859 கோடி ரூபாய் உள்ளது. கடந்த செப்டம்பர் 25ம் தேதியும், அக்டோபர் 5ம் தேதியும் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டும் செலுத்தவில்லை. கிங் பிஷர் நிறுவனம், இந்திய எண்ணெய் கழகத்திற்கு 110 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 60 கோடி ரூபாய் கடனுக்கா ன காலம் முடிந்தும் செலுத்தப்படாமல் உள்ளது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: