ஒரு வாரத்தில் ஒரு லட்சம் கோடி இழப்பு

மும்பை: மிகப்பெரிய சரிவை கண்டு இருக்கும் இந்திய பங்குச்சந்தையில், முதலீட் டாளர்கள், புரோக்கர்கள், கதிகலங்கி போய் இருக்கின்றனர். சந்தையில் கோலோச்சிய முன்னணி பத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுவரை சிறப்பாக இருந்த பங்குச்சந்தைக்கு இந்தாண்டு போதாத காலம். ஜனவரியில் ஆரம்பித்த சரிவு, கடந்த வெள்ளிக்கிழமை பெரும்சரிவுடன் முடிந்துவிட்டது. ‘சென்செக்ஸ்’ ஐந்து இலக்கத்தில் இருந்து நான்கு இலக்கத்திற்கு வந்துவிட்டது. ‘சென்செக்ஸ்’ பத்தாயிரத்தில் இருந்து 21 ஆயிரம் புள்ளிகளை எட்டுவதற்கு இரண்டு ஆண்டுகளை எட்டியது. ஏறுவதற்கு மட்டும் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்ட சந்தை, 21 ஆயிரத்தில் இருந்து 9,000 புள்ளிகள் சரிவதற்கு மட்டும் பத்து மாதங்கள் எடுத்துக் கொண்டது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை எடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால், சந்தையில் கோலோச்சிய முன்னணி நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு நாளுக்குநாள் சரிந்து கொண்டு இருக்கிறது. கடந்த 10ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் முன்னணி பத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 734 கோடியாக இருந்தது. இது 17ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் ரூ.10 லட்சத்து 44 ஆயிரத்து 245 கோடியாக குறைந்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் ரூ.94ஆயிரம் கோடியை இழந்துள்ளது. இந்த சரிவிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், மொத்த சந்தை மூலதனம் ரூ.4,000 கோடி அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வங்கித்துறை பங்குகள் ஏற்றம், இறக்கம் கண்டு இறுதியில் சரிவில் முடிந்தது. இருப்பினும், ஸ்டேட் பாங்க் ஏற்றம் கண்டு இருப்பதற்கு காரணம் வலுவான அடிப்படையை கொண்டு இருப்பதே காரணம். ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது, அதன் மொத்த பங்குகளை, அன்றைய அதன் விலையை கொண்டு பெருக்கினால் கிடைப்பது.

* சந்தையின் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் சந்தை மூலதனம் கடந்த வாரத்தில் மட்டும் 34 ஆயிரத்து 898 கோடி ரூபாய் சரிந்துள்ளது.

* பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை மூலதனம் 29ஆயிரத்து 933 கோடி ரூபாய் இழந்துள்ளது. கடந்த 17ம் தேதியன்று இதன் மொத்த சந்தை மூலதனம் 1,65,954 கோடியாக ரூபாயாக இருந்தது.

*தனியார் வங்கிகளில் முன்னணி வகிக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சந்தை மூலதனம் முந்தையை வாரத்தை ஒப்பிடுகையில் 3,000 கோடி அதிகரித்து, 43 ஆயிரத்து 606 கோடியாகியுள்ளது

ரிலையன்ஸ் மணி நிறுவனம் அதிரடி திட்ட தபால் நிலையங்களில் தங்க காசு விற்பனைம்

புதுடில்லி: தபால் துறையுடன் ரிலையன்ஸ் மணி நிறுவனம் இணைந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் தங்க காசுகள் விற்பனையை துவக்கி உள்ளது. இந்திய தபால் துறை, ரிலையன்ஸ் மணி, உலக தங்க கவுன்சில் ஆகியவை இணைந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில், சான்றிதழுடன் கூடிய, 99.99 சதவீத சுத்த தங்க காசுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன. முதல் கட்டமாக, டில்லி, மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள 100 தபால் நிலையங்களில் இத்திட் டம் துவக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கிகளும் தங்க காசுகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால், இதில் போட்டி உருவாகி, விலை போர் ஏற்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஐந்து கிராம் எடை கொண்ட தங்க காசை, 8,015 ரூபாய்க்கு விற் பனை செய்கிறது. எச்.டி.எப்.சி., வங்கியில் இதன் விலை 7,825 ரூபாய். தபால் நிலையங்களில் 0.5 கிராம், ஒரு கிராம், ஐந்து கிராம், எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்க காசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐந்து கிராம் தங்க காசு விலை 7,644 ரூபாய். இந்த விலை அனைத்தும், வரிகள் உள்ளிட்டவை. நாடு முழுவதும் விற்பனையாகும் தங்கத்தில், 10 சதவீதம் தங்க காசுகளாகவே விற்பனை செய் யப்படுகின்றன. இருப்பினும், பெரிய நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தங்க காசுகள் 3 சதவீதம் மட்டுமே. குறைந்த லாபத்தில் தங்க காசுகளை அதிகளவில் விற்பனை செய்வதன் மூலம், அதிக லாபம் ஈட்ட முடியும் என்று வங்கிகள் கருதுகின்றன. புதிய முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதற்கே பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். தங்கத்தில் செய்யப்படும் முதலீடு, லாபத்தை மட்டுமே ஏற்படுத்துமே தவிர, நஷ்டத்தை ஏற்படுத்தாது என்பது இவர்களின் கணக்கு. இதனால், தங்க காசுகள் விற்பனை பெரிதும் அதிகரிக்கும் என்று பல்வேறு வங்கிகள், சில்லரை விற்பனை நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால், புதிய திட்டங்களை துவக்கி வருகின்றன. இந்தியாவில் மக்களின் நம்பிக்கையை பெற்றவை தபால் நிலையங்கள் என்பதாலும், நாட்டிலேயே அதிகளவில் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் கொண்ட மிகப்பெரிய சில்லரை விற்பனை இணைப்பு சங்கிலி என்பதாலும், இத்துறையை ரிலையன்ஸ் மணி தேர்வு செய்துள்ளது. விரைவில் அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க காசுகள் விற்பனை செய்யப்பட உள்ளன

தீபாவளி சுவீட் கிடையாது: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ‘பெப்பே’

பெங்களூரு: சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பல தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கும், சாக்லேட் உள் ளிட்ட இனிப்பு பண்டங் களை இந்த ஆண்டு வழங்குவது இல்லை என முடிவு செய்துள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, அந்த நாட்டை மட்டுமல்லாமல் ஆசிய, ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல நிறுவனங்கள் குறிப்பாக விமான மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதை ஒத்தி வைத்துள்ளன. பணவீக்க உயர்வு காரணமாக திணறி வரும் பல நிறுவனங்கள், சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி பரிசாக இனிப்பு பண்டங்களை பரிசாக வழங்குவது வழக்கம். இந்தாண்டு அதை வழங்குவது இல்லை என முடிவு செய்துள்ளன. பல நிறுவனங்கள் குறைந்த அளவு இனிப்பு பண்டங்களை கடைகளில் ஆர்டர் செய்துள்ளன. இதனால், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமல்லாமல், சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் தயாரிப்பாளர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரியங்கா சிங்கானியா கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின்போதும், நிறுவனங்களால் மட்டும் 50 முதல் 80 சதவீதம் வரை சாக்லேட் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது. போதிய அளவில் ஆர்டர்கள் வரவில்லை. கடந்தாண்டில் அதிகமான சுவீட் வாங்கிய நிறுவனங்கள், இந்தாண்டு இதுவரை ஆர்டர் தரவில்லை’ என்றார். பெங்களூரில் சாக்லேட் ஜங்ஷன் என்ற கடையை நடத்தும் அனுபாமா கூறுகையில், ‘ஒரு நிறுவனம் எங்கள் கடையில் தீபாவளிக்காக 80 ஆயிரம் சுவீட் பாக்ஸ்கள் ஆர்டர் செய்திருந்தது. சில நாட்களில் அந்த ஆர்டரை 40 ஆயிரமாக குறைத்து விட்டது’ என்றார்

ஐந்து ஆண்டு ஊதியமில்லா விடுப்பு; திரும்பி வந்தால் வேலை: சர்ச்சைக்கு ஏர் இந்தியா முற்றுப்புள்ளி

புதுடில்லி: ஐந்தாண்டுக்கு நீண்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்; ஆனால், சம்பளம் கிடைக்காது; ஐந்தாண்டுக்கு பின் மீண்டும் திரும்பி வந்தால் வேலையில் சேர்த்துக்கொள்ளப்படுவர்!- இப்படி ஒரு நூதனமான தற்காலிக ‘வி.ஆர். எஸ்.,’ திட்டத்தை, மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா, 2002 ல் அறிமுகம் செய்தது. இந்த சலுகை திட்டத்தை ஏற்று, அப்போது 500 ஊழியர்கள் விடுப்பு எடுத்தனர். இதனால், ஏர் இந்தியாவுக்கு சில நூறு கோடிகள் செலவு மிஞ்சியது. இந்த சிக்கன நடவடிக்கையால் விமான நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த ஊழியர்களில் சிலர், மீண்டும் வந்து வேலையில் சேர்ந்தனர். இந்த திட்டத்தை தான் மீண்டும் ஏர் இந்தியா இப்போது அமல்படுத்த உள்ளது. ஆனால், ஏர் இந்தியா செயல் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா கூறியதை தவறாக அர்த்தம் புரிந்து கொண்ட சில பத்திரிகைகளும், ‘டிவி’க்களும் ‘ஏர் இந்தியா தன் ஊழியர்கள் சிலரை ‘வீட்டுக்கு’ அனுப்ப திட்டமிட்டுள் ளது’ என்று வெளியிட்டு விட்டன. இதனால், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் கடுப்பாகி விட்டார். பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார். ‘ஏர் இந்தியா எல்லா வகையிலும் நிதி நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்க இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் அமல்படுத்த மாட்டோம். மாறாக, ஏற்கனவே 2002ல் அமல்படுத்த நீண்ட விடுப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்’ என்று தெரிவித்தார். ‘சுய விருப்ப ஓய்வு திட் டம் அல்ல; சுய விடுப்பு திட்டத்தை தான் நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இதனால், நிர்வாகத்துக்கும் சரி, ஊழியர்களுக்கும் சரி நல்லது. நிதி இழப்பை தடுக்க இது நிர்வாகத்துக்கு உதவுகிறது. அதுபோல, ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வதையும் தடுக்கிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு இது தொடர்பாக பல பரிந்துரைகளை செய்துள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது’ என்று பார்கவா கூறினார். ஏர் இந்தியா மற்றும் பல தனியார் நிறுவனங்கள், விமானங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நீண்ட நாள் குத்தகைக்கு வாங்கித்தான் இயக்கி வருகின்றன. பயணிகள் இல்லாமல், ஒரு விமானம் நின்று விட்டாலும், அதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். இப்படிப்பட்ட நிலை இப்போது ஏற்பட்டு வருகிறது. அதனால், விமானங்களை மீண்டும் குத்தகைக்கு எடுப்பதை சில நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளன. விமானம் ஓடாத போது, அதன் ஊழியர்களுக்கும் வேலையில்லாமல் தான் இருக்க வேண்டியிருக்கும். அதனால், இதுபோன்ற நிலையை தவிர்க்கவும், இழப்பை முடிந்தவரை தடுக்கவும் ஏர் இந்தியா இந்த புதுமை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இ – பேமென்ட்’ முறை உருக்காலையில் அமல்

புதுடில்லி: தன் ஊழியர்களுக்கும், உதிரி சாதனங்களை விற்பனை செய்யும் சிறிய நிறுவனங்களுக்கும் இதுவரை காசோலை மூலம் பணம் பட்டுவாடா செய்து வந்த ரூர்கேலா உருக்கு நிறுவனம், ‘இ – பேமென்ட்’ முறையை இப்போது அமல்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலம், சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ளது ரூர்கேலா. இந்திய உருக்கு ஆணையம் சார்பில் ரூர்கேலா உருக்கு நிறுவனம் இங்கு துவங்கப்பட்டது. இது மிகவும் பழமையான உருக்காலை. உருக்கு உற்பத்தியில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு, உதிரி சாதனங்களை தயாரித்து தரும் எண்ணற்ற சிறிய நிறுவனங்கள் உள்ளன. அவற்றுக்கு கான்ட்ராக்ட் அளித்து, பொருட்களை வாங்கி வருகிறது உருக்காலை. இந்த நிறுவனங்களுக்கு இதுவரை காசோலை மூலம் தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது; அதுபோல, ஊழியர்களுக்கும் காசோலை மூலம் தான் சம்பள பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. ஆண்டுதோறும் இந்த வகையில், 50 ஆயிரம் காசோலைகள் அளிக்கப்படுகின்றன. இதன் மொத்த மதிப்பு மூவாயிரம் கோடி ரூபாய். காசோலைகளை தபாலில் அனுப்பும் போது சில சமயம் தொலைந்து விடுகின்றன. சில சமயம், தவறானவர்கள் கையில் சிக்கி விடுகின்றன. அப்படியே காசோலை கிடைத்தாலும், அது ‘கிளியர்’ ஆகி பணம் கிடைக்க தாமதம் ஆகிறது. இப்படி எல்லாம் சிக்கல்கள் இருப்பதை அறிந்த உருக்காலை நிர்வாகம், இப்போது தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன்படி, காசோலை மூலம் பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக, கம்ப்யூட்டர் இன்டர்நெட் மூலம், ‘இ – பேமென்ட்’ முறையில் பணத்தை பட்டுவாடா செய்ய முடிவு செய்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆன்-லைன் தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, தன் ஊழியர்களின் சம்பளத்தையும், கான்ட்ராக்ட் நிறுவனங்களுக்கு தொகையையும் ‘இ- பேமென்ட்’ முறையில் பட்டுவாடா செய்யும் திட்டத்தை சமீபத்தில் ஆரம்பித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் பணத்தை கையாளும் போது, எல்லாவற்றையும் வங்கி மூலம் செயல்படுத்த வேண்டும்; அப்போது தான் தவறுகள், குளறுபடிகள் நடக்காமல் தடுக்க முடியும் என்று மத்திய விஜிலென்ஸ் கமிஷன் கூறியிருக்கிறது. இதையடுத்து, ரூர்கேலா உருக்காலை தன் பணப்பட்டுவாடா, நிர்வாகத்தை இன்டர்நெட் வழியில் சீர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லாவற்றையும் ‘நெட்’ வழியில் செய்தால், கண்காணிக்கவும் முடியும்; பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று உருக்காலை நிர்வாகம் நம்புகிறது. உருக்காலையில் இருந்து யாருக்கு பணம் அனுப்புவதாக இருந்தாலும், ‘இ – பேமென்ட்’ மூலம் தான் செயல்படுத்த முழுமையாக நடைமுறைப்படுத்த நிர்வாகம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

300 பேருக்கு டாடா நிறுவனம் ‘டாடா’

ஜாம்ஷெட்பூர்: பொருளாதார மந்தநிலை காரணமாக, சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் செலவை குறைக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சேர்ந்துள்ளது. ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவில் வேலை பார்த்து வந்த தற்காலிக ஊழியர்கள் 300 பேரை, ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள் மொத்தம் 3,500 பேர் இருந்தனர். பருவமழை சீசனையொட்டி, உற்பத்தி குறைக்கப்பட்ட போது, ஏற்கனவே 1,500 பேர் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பொருளாதார நெருக்கடியால் செலவை குறைக்கும் நடவடிக்கையாக, மேலும் உற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால், மேலும் 300 பேர் வேலை இழந்துள்ளனர். இதற்கு தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது வழக்கமான ஒன்று தான். மீண்டும் உற்பத்தி சீரடையும்போது, இவர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்து கொள்ளப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளன.

பயிற்சி விமானிகளுக்கான சம்பளத்தை குறைத்தது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்

பெங்களுரு : தனியார் விமான நிறுவனமான கிங்ஃபிஷர், பயிற்சி விமானிகளுக்கு கொடுத்து வந்த சம்பளத்தை கணசமான அளவு குறைத்திருப்பதாக சனிக்கிழமை அன்று அறிவித்தது.செலவை குறைக்கும் நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

nanri

by dinamalar

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: