இந்திய பங்கு சந்தையின் எழுச்சியும் வீழ்ச்சியும் அன்னிய முதலீட்டாளர் கையில்

மும்பை : இந்திய பங்கு சந்தையில் ஒரு காலத்தில் 20 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டிச்சென்ற சென்செக்ஸ், இப்போது 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போய்விட்டது. 10,000 புள்ளிகளை ஒட்டியே இருந்த சென்செக்ஸ் 20,582 புள்ளிகளை எட்டுவதற்கு 23 மாதங்கள் வரை தேவைப்பட்டிருந்த நிலையில், அது மீண்டும் 10,000 புள்ளிகளுக்கும் கீழே போய் 9,975 புள்ளிகளாக ஆனதற்கு 9 மாதங்கள் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கிறது. சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளாக <உயர்ந்ததற்கும், மீண்டும் அது 10 ஆயிரம் புள்ளிகளாக குறைந்ததற்கும் பெரும் காரணமாக இருந்தது எஃப்.ஐ.ஐ. என்று சொல்லப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்தான். பிப்ரவரி 7,2006 அன்று 10,082 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் ஜனவரி 10,2008 அன்று 20,582 புள்ளிகளாக உயர்ந்த போது அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,00,951 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். இதன் காரணமாக அந்த காலகட்டத்தில் இந்தியாவின் பணபுழக்கம் நல்லவிதமாக இருந்தது. சென்செக்ஸ் 20,582 புள்ளிகளில் இருந்து 9,975 புள்ளிகளாக இறங்கியபோது, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் இருந்து ரூ.47,299 கோடியை எடுத்திருந்தார்கள். இது இந்தியாவின் பணப்புழக்கத்தை வெகுவாக பாதிக்க ஆரம்பித்தது. அதாவது சென்செக்ஸ் உயர்ந்து கொண்டிருந்த போது, ஒவ்வொரு புள்ளி உயர்வதற்கும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதற்காக ரூ.9.61 கோடியை செலவு செய்திருந்தனர். ஆனால் சென்செக்ஸ் இறங்கிக் கொண்டிருந்தபோது, ஒவ்வொரு புள்ளி இறங்கும்போதும் அவர்கள் ரூ.4.46 கோடியை எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் இருந்த போது அன்னிய நிறுவன முதலீட்டாளர்களில் முதலீடு பங்கு சந்தையில் ரூ.12 லட்சம் கோடியாக இருந்தது. அது இப்போது வெறும் ரூ.4 லட்சம் கோடியாகத்தான் இருக்கிறது. ரூ.8 லட்சம் கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே திரும்ப எடுத்திருந்தாலும் பங்கு சந்தையில் சென்செக்ஸ் 50 சதவீதம் குறைந்து போனது. by dinamalar.

 

எண்ணூர் துறைமுக கழகத்துடன் நிஸன் மோட்டார் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை : இந்தியாவில் தயாராகும் கார்களை எண்ணூர் துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு, எண்ணூர் துறைமுக கழகத்துடன் ஜப்பானின் நிஸன் மோட்டார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது. 2010 ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் 1,10,000 கார்களை இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிஸன் மோட்டார் திட்டமிட்டிருக்கிறது . இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மத்திய கடல்வழி மற்றும் தரைவழி போக்குவரத்துதுறை அமைச்சர் டி.ஆர்.பாலு முன்ணிலையில் கையெழத்தானது. அதில் கையெழுத்திட்ட நிஸன் மேட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குனர் சௌகி கிமுரா, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, ஆரம்பத்தில் 1,10,00 வாகனங்கள் ஏற்றுமதி செய்ய இருக்கும் நாங்கள் அதை படிப்படியாக 1,80,000 கார்களாக உயர்த்தி விடுவோம் என்றார். சென்னைக்கு வெளியே 45 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரகடத்தல் இருக்கும் அவர்களது தொழிற்சாலையில் ஒன்பது புது மாடல்கள் தயாராகும் என்றும் சொன்னார். இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த எண்ணூர் துறைமுக கழகத்தில் மேலாண் இயக்குனர் வேலுமணி, இந்த துறைமுகம் 2001 ம் ஆண்டில் இருந்து 12 வது பெரிய துறைமுகமாக இருந்து வருகிறது. பொதுவாக நிலக்கரி மற்றும் இரும்பு தாது மட்டுமே இங்கிருந்து எற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது நிஸன் மோட்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பது எங்களுக்கு மேலும் ஒரு பெரிய வளர்ச்சி என்றார்.

திவாலாகும் நிலையில் பாக்.: வெளிநாடுகளில் நிதியை எதிர்பார்க்கிறது

இஸ்லாமாபாத் : திவாலாகும் நிலைக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி அமைப்புகள், 400 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன. பாகிஸ்தானில் முஷாரப் தலைமையிலான ராணுவ ஆட்சி முடிந்து, அது ஜனநாயக பாதைக்கு திரும்பி விட்டது. இருப்பினும், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. விரைவில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு, சர்வதேச நாடுகளிடம் நிதியை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 82 ஆக குறைந்து விட்டது. இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் தோழமை நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு முக்கிய பங்காற்றுவது அமெரிக்கா தான். வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், தற்போது முழுக்க முழுக்க இந்த பணிகளைத் தான் கவனித்து வருகிறது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 10 முறை வாஷிங்டனுக்கு பறந்து, அமெரிக்காவின் உதவியைக் கோரியுள்ளனர். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, இஸ்லாமிக் வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் குறுகிய மற்றும் நடுத்தர கால பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு நிதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் பயனாக சர்வதேச நிதி நிறுவனங்கள், 400 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.

 

10 ஆயிரத்திற்கும் கீழே போனது பங்குச்சந்தை : இதுவரை 10 லட்சம் கோடி ரூபாய் அவுட்

மும்பை : கடந்த ஜனவரியில் உச்சத்தில் இருந்த பங்குச் சந்தை, பல்வேறு காரணிகளால் தொடர்ந்து சரிந்து, 10வது மாதத்தில் நேற்று 10 ஆயிரத்திற்கும் கீழே சரிந்துள்ளது. முதலீட்டாளர்களின் அதிர்ச்சி தொடருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடும் நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்குப் பலன் கிடைக்கவில்லை. அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கள் முதலீடுகளை எடுத்துவருவது குறைந்த பாடில்லை. இந்த வாரத்தில், கடந்த இரண்டு நாட்களாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தையில் பலத்த சரிவு ஏற்பட்டது. நேற்று காலை சந்தை துவங்கியதும் சென்செக்ஸ் 199 புள்ளிகளும், நிப்டி 66 புள்ளிகளும் ஏற்றத்துடன் துவங்கியது. ஆனால், ஏறுவதும் இறங்குவதுமாக இதன் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.

இந்திய நேரப்படி பிற்பகலில் துவங்கிய ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இது போன்ற சூழ்நிலைகளில் இங்கு ஏற்றம் இருக்கும். ஆனால், நேருக்கு மாறாக சரிவைச் சந்தித்தன. அதுவும் சொல்லி வைத்த மாதிரி பங்குகள் சடசடவென சரிந்தன. இதற்கு புரோக்கர்கள் சொன்ன காரணம் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்பது தான். கடந்த சில நாட்களாக, 10 ஆயிரத்திற்கும் கீழே சென்செக்ஸ் சென்று விடும் என புரோக்கர்கள் பரப்பி வந்த தகவல் நேற்று நிரூபனமானது. நேற்று வர்த்தகம் முடிவதற்கு சில நிமிடங்களே இருக்கும்போது எங்கே 9,000கும் கீழே புள்ளிகள் சென்றுவிடுமோ என்ற நிலை இருந்தது. 2006ம் ஆண்டு ஜூனிற்குப் பிறகு, நேற்று சென்செக்ஸ் 9,911.32 என்ற கீழ் நிலையை தொட்டது. பின், வர்த்தக முடிவில் 606 புள்ளிகள் சரிவுடன் 9,975.35 என்று சென்செக்ஸ் நிலை பெற்றது. நிப்டி 194.95 புள்ளிகள் சரிந்து 3,074 என்ற நிலையை தொட்டது. முன்னதாக, 3,046 வரை சென்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 6.58 சதவீதம் குறைந்தது. டி.எல்.எப்., பங்கு விலை 10.34 சதவீதமும், பாரதி ஏர்டெல் 7.47 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., பங்கு விலை 5.61 சதவீதமும் குறைந்தது. துவக்கத்தில் ஏற்றத்தில் இருந்த ஸ்டேட் பாங்க் பங்கு முடிவில் 8.42 சதவீதம் சரிந்தது. துறை வாரியாக பெரும் அடி வாங்கியது ரியல் எஸ்டேட் துறை. இதற்கு அடுத்தபடியாக பவர் செக்டர் விழுந்தது. கடந்த ஜனவரி 8ம் தேதி 21 ஆயிரத்திற்கு மேல் இருந்த பங்குச் சந்தை, நேற்று 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. 10 மாதத்தில் மட்டும் இழந்த புள்ளிகள், 11 ஆயிரம். இதனால், முதலீட்டாளர் களுக்கு போனது 10 லட்சம் கோடி ரூபாய்.  by Dinamalar .business

புத்தக பதிப்பக துறையில் இந்தியா ஒரு மையமாக மாறி வருகிறது

ஃபிராங்பர்ட் ( ஜெர்மனி ) : திறமையான பிரின்டர்கள், குறைந்த உற்பத்தி செலவு,உலக தரமான எடிட்டோரியல் மற்றும் உற்பத்தி அமைப்பு ஆகியவை இந்தியாவில் ஏராளமாக இருப்பதால், இந்தியா புத்தக பதிப்பக துறையில் ஒரு மையமாக மாறி வருகிறது. இதன் காரணமாகத்தான் கடந்த சில வருடங்களாக, உலக அளவிலான பல பதிப்பகத்தினர், அவர்களது சிறந்த புத்தகங்களை இந்தியாவில் இருந்துதான் வெளியிட்டிருக்கிறார்கள்

எல்.ஐ.சி.,யிடமிருந்த ரான்பாக்ஸி பங்குகள் விற்கப்பட்டன

மும்பை : எல்.ஐ.சி.,யிடமிருந்த ரான்பாக்ஸியின் பங்குகள் 2,58,40,113 விற்கப்பட்டன. பங்கு ஒன்றுக்கு ரூ.737 என்ற விலையில் இந்த பங்குகள் விற்கப்பட்டிருக்கின்றன.எல்.ஐ.சி., வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது

ஐதராபாத், செகந்தராபாத்தில் குடியிருப்பு பகுதிக்கான டிமாண்ட் குறைந்தது

ஐதராபாத் : இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படும் ஐதராபாத் மற்றும் செகந்தராபாத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கான டிமாண்ட் 11 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் வரை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் இன்ஃராஸ்டெரக்சர் நிகர லாபம் குறைந்திருக்கிறது

மும்பை : செப்டம்பர் 30ம் தேதியுடன் முட்ந்த இரண்டாவது காலண்டில், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் இன்ஃராஸ்டெரக்சர் லிமிடெட்டின் நிகர லாபம் 3.27 சதவீதம் குறைந்திருக்கிறது

ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூரின் நிகர லாபம் 70 சதவீதம் அதிகரிப்பு

திருவனந்தபுரம் : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூரின் நிகர லாபம் 70.37 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.66.81 கோடியாக இருந்த நிகர லாபம் இந்த ஆண்டில் ரூ.113.83 கோடியாக உயர்ந்திருக்கிறது

சீனாவில் பால் பொருட்களுக்கு தடை விதித்தது தைவான்
அக்டோபர் 18,2008,14:54
 
 
 
தைபே : சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்பொருட்களில் மெலமைன் என்ற நச்சுப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை அடுத்து சீன பால் பொருட்களுக்கு தைவான் தடை விதித்திருக்கிறது.

 

விரைவில் வருகிறது “ரிலையன்ஸ் வெல்னஸ்’

சுத்தமான சுகாதாரமான வாழ்விற்கு உத்தரவாதம் தரும் பல சிறப்பான பொருட்கள் எங்கே, என்ன விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் திணறிக் கொண்டு இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் உலகப்புகழ் ரிலையன்ஸ் நிறுவனம் புதுமையான “ரிலையன்ஸ் வெல்னஸ்’ என்ற ஷோரூமை இந்தியா முழுவதும் 31 நகரங்களில் திறக்க உள்ளது.

இதில் வைட்டமின் சத்து மாத்திரைகள் முதல் உயர்தர புரத சத்து உணவுகள் வரை, நவநாகரீக பெண்களுக்கான ஆயுர்வேத அழகு பொருட்கள் முதல் கலர் கலரான மூக்கு கண்ணாடிகள் வரை அனைத்தும் கிடைக்கும்.

“கனவிலும் நினைத்து பார்க்க முடியாதவற்றையும் நினைத்துப் பார்; அதை அமுலாக்க வியர்வை சிந்த வேலை செய்; அந்தகனவு மெய்ப்படும்” இது ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் உபதேசமாகும். அந்த வழியில் திருபாய் அம்பானியின் அடிச்சுவட்டில் அவரது மூத்த மகன் மூகேஷ் அம்பானி பொது மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக பயன்படும் விதத்தில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் “ரிலையன்ஸ் ரீடைல்’ நிறுவனம் துவக்கி முக்கிய நகரங்களில் ரிலையன்ஸ் பிரஷ் கடைகளை திறந்தார். அங்கு வீட்டு உபயோக மளிகை பொருட்கள் தரமான தரத்தில் நியாயமான விலையில் விற்பனை செய்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

அதன் வெற்றி மகத்தான ஒன்றாக அமையவே மின்சார, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்ய டெல்லியில் பிரத்யேக மையம் ஒன்றை நிறுவினார்.

பல பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஸ்பென்சர்ஸ் போன்ற பழமையான நிறுவனங்கள் நடத்தி வந்த “ஷாப்பிங் மால்கள்’ பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தபோதிலும் அவை முழுமையாக இல்லாதிருப்பதை கண்டு உலகப்புகழ் ஷாப்பிங் மால்களுக்கு சவால் விடும் வகையில் மிகப் பிரம்மாண்டமான “ரிலையன்ஸ் ஹைப்பர் மார்ட்’ ஷாப்பிங் உலகை ஆமதாபாத்தில் நிறுவினார்.

இதுபோன்ற பெரிய ஷாப்பிங் கடைகளுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் குறை நிறைகளை கேட்டறிந்த பின் சுகாதார வாழ்விற்கு உறுதி தரும் பல பொருட்கள் வெவ்வேறு இடங்களில் மட்டுமே கிடைப்பதை கண்டு மக்களுக்கு உதவிடும் வகையில் அனைத்து மருத்துவ நலன்கள் கொண்ட பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க பிரத்யேகமாக ஷோரூம் ஒன்றை நிறுவ திட்டமிட்டார்.

டாக்டர் சீட்டு மருந்து விற்பனை இல்லை
அந்த கனவு நிறைவேற மேற்கொண்ட முயற்சிகள் இன்று வெற்றி பெற்று விட்டது. இந்த வரிசையில் முதல் கடையை சுமார் 15,000 சதுர அடியில் ஐதராபாத்தில் “ரிலையன்ஸ் வெல்னஸ்’ என்ற பெயரில் துவக்கினார்.

இந்த கடையின் சிறப்பு என்னவென்றால், இங்கு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட பல்வேறு எண்ணைகள், களிம்புகள், உணவு பதார்த்தங்கள், போஷாக்கு மாவுகள், ஜூஸ் வகைகள், ஊக்க சத்து பானங்கள், விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக உணவு மற்றும் பான வகைகள், மருந்து மாத்திரைகள் என பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனையில் உள்ளது. மருந்து பொருட்கள் விற்பனையில் இருந்தாலும், டாக்டர்கள் தரும் மருந்து சீட்டு கொண்டு சென்று வாங்கப்படும் மருந்துகள் இங்கு விற்பனையில் இல்லை.

இந்த கடையில் குறிப்பிட்ட நேரத்தில் வல்லுநர்கள் வந்து பொது மக்களிடம் உரையாடி அவர்களின் பல சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.

இலவச கண் பரிசோதனை
கண் பரிசோதனை மையமும், விதவிதமான கண்ணாடிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கம்ப்யூட்டர் மூலம் கண் பரிசோதனை இலவசமாகவும் செய்யப்பட்டு, எந்தவித கண்ணாடி வேண்டுமோ அதை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று இந்நிறுவன தலைமை செயல் இயக்குனர் மற்றும் பிரசிடெண்ட் நினு கன்னா தெரிவித்தார்.

6 மாதத்தில் சென்னையில் அண்ணாநகரில் திறக்கப்படும்
முதல் கடையை வெற்றிகரமாக விற்பனைக்கு திறக்கப்பட்ட பின் பத்திரிகை யாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் 6 மாதத்தில் இதுபோன்ற கடையை சென்னையிலும் திறக்க இருப்பதாக தெரிவித்தார்.

அண்ணா நகர் அருகாமையில் கட்டப்படும் இந்த கடை உலக தரத்தில் மக்களுக்கு வேண்டிய பொருட்கள் எங்கே உள்ளது என்பதை கண்டறிந்து எடுத்துக் கொள்ளும் வகையில் அமைத்து வருகிறார்கள்.

3 ஆண்டுகளில் 31 நகரங்களில் 1300 மருந்து ஷோரூம்கள்
இதுபோன்ற “வெல்னஸ்’ கடைகள் இந்தியா முழுவதும் 31 நகரங்களில் 1300 கடைகளை அடுத்த மூன்று ஆண்டுகளில் துவக்க இருப்பதாக தெரிவித்தார்.

எங்கும், எதிலும் பிரம்மாண்டம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனம், பொது மக்களின் சுகாதார வாழ்விற்கு அச்சாணியாக திகழ இந்த கடைகளை உலகில் யாரும் செய்யாத வகையில் வடிவமைத்து நிர்மாணிக்க உள்ளது.

சிறுவர், சிறுமிகளை கவரும் நோக்குடன் இக்கடையில் பல வகையான ஸ்கிப்பிங் கயிறுகள், இனிப்பு பதார்த்தங்கள், பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளது. இக்கடையின் இன்னொரு சிறப்பு மலிவு விலையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

விலையில் தள்ளுபடி ரிலையன்ஸ் சிறப்பு
குளுகுளு வசதி, நிபுணர்களின் ஆலோசனை எல்லாம் தரும் அதே நேரத்தில் அவை இலவசம் என்று சொல்லி விட்டு விற்பனை செய்யும் பொருட்களை அதிக விலையில் விற்பார்களோ என்று விலை பட்டியலை பார்த்தால், இன்ப அதிர்ச்சி தரும். அனைத்து பொருட்களும் எம்ஆர்பி விலையிலோ அல்லது விசேஷ தள்ளுபடி விலையிலே தான் விற்கப்படுகிறது.

கரும்பு தின்ன கூலி தரும் ரிலையன்ஸ்
தரமான பொருட்களை நியாய விலையில் மிக நவநாகரீக சூழலில் வாங்கி மகிழலாம். அவை பல நேரங்களில் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. “கரும்பு தின்ன கூலியா?’ என்று கேட்டபடி அந்த கடையை நோக்கி இல்லத்தரசிகள் படை எடுக்காமலா போய் விடுவார்கள்?

மக்களுக்காக உயர்தரம், மலிவு விலையில் என்ற கொள்கை அடிப்படையில் இக்கடைகளை நிறுவி வரும் முகேஷ் அம்பானி நுகர்வோரின் கனவையும், நினைவாக்கி விட்டார் என்பது உண்மையே.

உடல் எடையை குறைக்க கூட்ட ஆலோசனை

“ரிலையன்ஸ் வெல்னஸ்’ உடல் அழகு, ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளுக்கு தேவையான பல்வேறு பொருட்கள், சாதனங்களை ஒரு இடத்தில் கொண்டுள்ளது. உலகப்புகழ் மற்றும் இந்திய புகழ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை, சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருந்துகளும் கிடைக்கும்.

உடல் எடை குறைந்தவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்க சத்துணவு இங்கு கிடைக்கும். உடல் எடையை குறைப்பவர் களுக்கு ஆரோச்கிய ஆலோசனைகளுடன் “டயட்’ உணவு, மாத்திரைகள் உண்டு. உடல் எடை குறைக்க உடற்பயிற்சி சாதனங்களும் விற்பனைக்கு உண்டு.

விளையாட்டு வீரர்கள், உடல் அழகு கொண்டவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி சாதனங்கள் இங்கு உண்டு.

அழகு பொருள், மூக்கு கண்ணாடி
இத்தாலிய உணவு வகையான தால்கோ “எச்’23’ புளரன்ட் கிங்டம், சர்கோ பார்மா, நியூட்டிரிசன், நியூட்ரோ, ஜீரோ, மஜில்டெக், விளையாட்டு சத்துணவு போன்றவை பல்வேறு ரகங்களில் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம், அழகு, மூக்கு, கண்ணாடி, மருந்துகள் போன்றவைகளும் கிடைக்கும். வழக்கமான மருந்துகளுக்கு மாற்று எளிமையான மருந்துகளும் இங்கு உண்டு.

ரிலையன்ஸ் வெல்னஸ் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்குகிறது. இது டாக்டர் எழுதும் மருந்து சாப்பிட ஆலோசனைகளை சொல்லி இருப்பார். ஒரு மாதம் மருந்து வாங்கி விட்டால், அடுத்த மாதம் மருந்து வாங்கலையா? என்று நினைவூட்டும் வசதியை ரிலையன்ஸ் வெல்னஸ் மார்ட் வழங்கும்.

உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள், கருத்தரங்குகள், ஆலோசனை முகாம், மருத்துவ முகாம் போன்றவை நடத்தப்படும்

Sensex long-term outlook review

 

Lokeshwarri S.K.

 

If 2007 was the year of the raging bull market, 2008 will go down in history as the year in which the bear charged out from its lair rejuvenated after four years in hibernation.

We had expected a benign correction between 13700 and 21000 at the turn of 2008. This was revised to a more sombre move between 12000 and 16500 in our review on July 6.

In our review in July, we had stated that, “The decline below 13700 brings the next long-term supports for the Sensex at 11,900 (50 per cent retracement of the up-move from 2001) and then 9703 (61.8 per cent retracement) in to focus. We stay with our long-term count that the current down-move is the fourth part of the long-term cycle that began in 1980. The fifth leg (upward) would then take the index beyond 25,000 again. Caveat – decline below 9,703 would need recasting of the counts.

The more difficult question is, how long would this down-trend last? As per Elliott Wave theory, corrections can extend from anywhere between 0.33 to 1.618 times the time consumed by the previous up-move.

The previous up-move lasted four years. That gives us the range between 16 to 77 months. Since the previous long-term correction from 1994 to 2003 was a long-drawn one, applying rules of alteration, the correction this time can be a sharp and swift one that ends in one to one- and- a- half years.”

The above view need not be altered since the Sensex has not yet breached 9700. However, a move below 9700 would mean that the down-move from 21,206 belongs to a correction of larger degree and the downward targets would then get deeper.

Let us consider how far the Sensex can go if it penetrates 9700. The Immediate support below 9700 is the June 2006 trough at 8800.

A 60-percent decline from the 21,206 peak also gives us another support close by, at 8482. If we consider the count from the January peak, one leg of the long-term down trend ended at 12,514 in July and the Sensex was in a corrective up-move between 12,514 and 15,579. The third leg of the down-move that began at 15,579 has the first target at 10207 and the second target at 6887.

Can things get dire enough to take the Sensex to the second target? If the current decline was caused by domestic factors alone, we could have said with reasonable certainty that decline would not extend beyond 8,500. But this fall is a part of a global sell-off in equities.

Many of the Asian markets have retraced more than 60 per cent of their four-year up-moves. Indices in developed markets in US and Europe are close to their 2003 lows.

Viewed against this back-drop, it is extremely difficult to tell how far the current decline can take us.

The good news is that third waves are extremely swift and end in a very short time (after devastating the markets).

So the Sensex should halt this vertical descent soon and there can be a pull back rally or at least a period of sideways movement.

We need to see the end of this October decline before we can form an opinion about the next move of the index.

Business Daily from THE HINDU group of publications
Sunday, Oct 12, 2008

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: