பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றது

மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளது. காலை வர்த்தகம் துவங்கி சில நிமிடங்கள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் பின்னர் குறைய துவங்கியது.மதியத்திற்கு மேல் அதிக அளவில் விற்பனை நடந்ததால் சென்செக்ஸ் மளமளவென்று வீழ துவங்கியது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 606.14 புள்ளிகள் குறைந்து 9,975.35 புள்ளிகளில் முடிந்தது.கடந்த 2006 ஜூலைக்குப்பின் இப்போதுதான் சென்செக்ஸ் இந்த அளவுக்கு வீழ்ச்சியை கண்டிருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 194.95 புள்ளிகள் குறைந்து 3,074.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டியும் 2006 ஜூலைக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு குறைந்திருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தை அடுத்து காலை வர்த்தகத்தின் போது 205 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், பின்னர் நடந்த அதிக அளவிலான விற்பனையால் விழ துவங்கியது.இன்று அதிகம் பாதிக்கப்பட்டது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி எர்டெல், இன்போசிஸ், எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பெல், என்,டி.பி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃராஸ்டெக்சர், டிசிஎஸ் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள்தான். இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 5.8 சதவீதமும் நிப்டி 6 சதவீதமும் குறைந்திருக்கிறது. முன்பு 10,000 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் அதிகபட்சமாக 21,207 புள்ளிகள் வரை உயர்வதற்கு, அதற்கு 384 வர்த்தக நாட்கள் தேவைப்பட்டிருந்தது. ஆனால் 21,207 புள்ளிகளில் இருந்து 10,000 புள்ளிகளாக குறைந்ததற்கு அதற்கு 192 வர்த்தக நாட்கள் மட்டும் போதுமானதாக இருந்திருக்கிறது. 21 ஆயிரம் புள்ளிகளில் இருந்து சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளாக குறைந்ததற்கு அதிகம் காரணமாக இருந்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம், ஐசிஐசிஐ பேங்க்கும்தான். இந்த இரு நிறுவனங்களால் மட்டுமே சென்செக்ஸ் 30 சதவீதம் குறைந்திருக்கிறது.அதற்கு அடுத்தாற்போல் அதிகம் வீழ்ச்சி அடைந்திருந்தது எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி.,தான்.

 

ரான்பாக்ஸியின் 20 சதவீத பங்குகளை வாங்கியது டெய்ச்சி சான்கியோ

மும்பை : இந்திய பார்மாசூடிகல் கம்பெனியான ரான்பாக்ஸியின் 20 சதவீத பங்குகளை வாங்கி விட்டதாக ஜப்பானின் டெய்ச்சி சான்கியோ அறிவித்திருக்கிறது. ரான்பாக்ஸியின் பெரும்பான்மை பங்குகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற டெய்ச்சியின் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த 20 சதவீத பங்குகள் வாங்கப்பட்டிருக்கின்றன. 20 சதவீத பங்குகளை வாங்குவதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைப்பதற்கு தாமதமாவதால் அதற்கான பணம் இன்னும் கொடுக்கப்படவில்லை. ரான்பாக்ஸியின் 50.1 சதவீத பங்குகளை 4.6 பில்லியன் டாலருக்கு ( சுமார் 22,000 கோடி ரூபாய் ) வாங்கிக்கொள்ளும் டெய்ச்சியின் திட்டத்தில் ஒரு பகுதியாகத்தான் இப்போது 20 சதவீத பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது. இது தவிர ரான்பாக்ஸியின் நிறுவனர் குடும்பத்தினரிடம் இருக்கும் 34.8 சதவீத பங்குகளையும் டெய்ச்சி வாங்க இருக்கிறது. 20 சதவீத பங்குகளை பங்கு ஒன்றுக்கு ரூ.737 என்ற விலையில் டெய்ச்சி வாங்கியிருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைகிறது : முன்கூட்டியே கூட்டப்படும் ஓபக் விஷேச கூட்டம்

 

வியன்னா : சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வருகிறது. நமக்கெல்லாம் எண்ணெய் விலை குறைந்து வருவது சந்தோஷத்தை கொடுத்தாலும் ஒரு பிரிவினருக்கு மட்டும் அது வருத்தத்தை கொடுக்கிறது. அதுதான் ஓபக் என்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு. உலக நாடுகள் அனைத்தும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகத்தான் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதாலும், அதனையடுத்து கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருவதால் கவலை அடைந்துள்ள ஓபக் அமைப்பு நாடுகள் இது குறித்து விவாதிக்க அவசர கூட்டத்தை நவம்பர் 18 ம் தேதி அன்று கூட்டியிருந்தது. இப்போது நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே போவதால், நவம்பர் கூட்டுவதாக இருந்த கூட்டத்தை அக்டோபர் 24ம் தேதியே கூட்டுவது என்று முடிவு செய்திருக்கிறது. நேற்றை ய சந்தையில் லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 67 டாலராகத்தான் இருந்தது. இது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக குறைந்த விலை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: