War/Terror

தேசம், பட்டது போதும் – மும்பை தாக்குதல் பற்றி துக்ளக் தலையங்கம்பம்பாயில், ஓபராய் ட்ரைடன்ட், தாஜ் என்ற இரண்டு ஹோட்டல்களிலும், நாரிமன் ஹவுஸ் என்ற இடத்திலும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் 195 பேரைப் பலி
வாங்கிவிட்டது. இதில் அயல்நாட்டினரும் உண்டு. பாதுகாப்பு அதிகாரிகள், விசேஷ படையினர் போன்றவர்களும் உயிர் இழந்திருக்கிறார்கள். பெரும் நாசம்.இந்த முறை, தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தங்களுடைய தாக்குதலை நடத்தியுள்ளதால் – இனி துறைமுகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, மேலும் ஒரு சம்பிரதாய நடவடிக்கை. இம்முறை தண்ணீர் மார்க்கமாக வந்தால், அடுத்த முறையும் அப்படித்தான் வருவார்கள் என்ற உத்திரவாதம் இருப்பது போல ஒரு அசட்டு எண்ணம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களில்தான் தாக்குதல் நடத்துவோம் – என்று தீவிரவாதிகள் சத்தியம் செய்து கொடுத்திருப்பது போல, அந்த மாதிரி முக்கியமான தினங்களில், பத்திரிகைகள் வியந்து பாராட்டுகிற அளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.

ஒரு ரயில்வே ஸ்டேஷனிலோ, மார்க்கெட்டிலோ, குண்டுவெடிப்பு என்றால், பல
ரயில்வே ஸ்டேஷன்களில் சில தினங்கள் கெடுபிடி, சில சந்தைகளுக்குப் பந்தோபஸ்து என்ற சடங்கு நடைபெறும். மற்ற இடங்களுக்கு தீவிரவாதிகள் போகமாட்டார்கள் என்ற ஒரு பித்துக்குளித்தனமான நம்பிக்கை. இந்தப் பாதுகாப்பு லட்சணத்தைப் பற்றி எங்கு போய் முட்டிக்கொள்வது?

பார்லிமென்டிலிருந்து பஸ்ஸ்டாண்ட் வரை, கோவிலிலிருந்து ஹோட்டல்கள் வரை, எல்லா இடங்களும் தீவிரவாதிகளுக்கு இலக்காகக் கூடியவையே என்ற தகவலை, என்றாவது ஒரு முறையாவது நமது உளவுத்துறையினர் கூறியிருக்கின்றனரா? அவர்களுடைய இலக்கு – இந்தியா; இதில் ஹோட்டல் என்ன, துறைமுகம் என்ன… எல்லாமே அடக்கம்தான். ஒரு மிகப்பெரிய கோவிலில் நாசமோ, அல்லது ஒரு பள்ளியில் சிறுவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு கொலை வெறியாட்டமோ
– தீவிரவாதிகள் நடத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது…?

நமது ஆட்சியாளர்களின் முனைப்போ, கதிகலங்க வைக்கிறது. “பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற, பாகிஸ்தானிலிருந்து வந்த, பாகிஸ்தானியர்கள் செய்த வேலை இது’ – என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, அதே மூச்சில் “பாகிஸ்தான் உளவுத்துறை (கொடுமைக்குப் புகழ்பெற்ற ஐ.எஸ்.ஐ.) தலைவரை அழைத்திருக்கிறோம்’ என்று அரசு கூறுகிறது! எதற்காக அவர் இங்கு வர வேண்டும்? நாம் காட்டுகிற ஆதாரங்கள் பைசா பெறாது என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கவா? அல்லது நமது அரசின் வசம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு போகவா? அதுவும் இல்லையென்றால் “ஆஹா! பாகிஸ்தானை இந்தியா குற்றம் கூறியும், அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர் இங்கு வருகிறார் என்றால் – அந்நாட்டின் பெருந்தன்மைதான் என்னே!’ என்று மற்ற நாட்டினர் வியப்பதற்காகவா? எதற்கு வர வேண்டும் அந்த ஆசாமி இந்த நெருக்கடியான கட்டத்தில்? நல்லவேளை – பாகிஸ்தானிலேயே “இந்தியா கூப்பிட்டால் போய்விடுவதா?’ என்று முறைக்கவே, அந்நாட்டின் உளவுத்துறை தலைவர் இங்கு வருகிற யோசனை கைவிடப்பட்டிருக்கிறது. அசடு வழிவதற்கு ஒரு எல்லை கிடையாது என்று தீர்மானித்துக்கொண்ட நமது அரசின் அணுகுமுறைகள்,
இந்த மாதிரி தப்பித்தால்தான் உண்டு.

பாகிஸ்தான்தான் காரணம் – ஆனால், அந்நாட்டிற்கு ரயில் விடுவோம், பஸ் விடுவோம், பேச்சு வார்த்தை நடத்துவோம். என்னதான் நடக்கிறது? பாகிஸ்தான்
அரசிடம் பயிற்சி பெறுபவர்கள்தான் இந்தத் தீவிரவாத வேலைகளைச் செய்பவர்கள் என்று நமது அரசு நம்புகிறதா? அல்லது பாகிஸ்தான் அரசினரால் கட்டுப்படுத்த முடியாத குழுக்கள் பாகிஸ்தானிலிருந்து இயங்கி, இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுவதாக இந்திய அரசு நினைக்கிறதா? அதுவும் இல்லையென்றால், எதற்குப் பாகிஸ்தான் பற்றிய பேச்சு? உண்மையாகவே அந்நாட்டிலிருந்துதான் இந்தத் தீ இங்கே பரவுகிறது என்றால் – அங்கே பயிற்சி முகாம்களை அழிக்க, நமது நாடு முனைய வேண்டாமா?

நமக்காகத்தான் தெரியாது என்றால், இஸ்ரேலைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டாமா? இஸ்ரேல் என்றால் உடனே ஓட்டு பயம் வந்துவிடும். இஸ்ரேல் வழி என்றால் இஸ்லாமிய விரோதம் என்றாகி, ஓட்டுப் போய்விடுமே என்ற நடுக்கம். அதனால் இப்போது கூட, பம்பாய் நிகழ்ச்சிகளுக்குப் பின், இஸ்ரேல் தனது நிபுணர்களை அனுப்பி உதவி செய்வதாகக் கூறியபோது, அந்த உதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டது இந்திய அரசு! நமக்கேன் உதவி? நமக்கிருக்கிற அனுபவம் சாதாரணமானதா? தீவிரவாதிகளின் எத்தனை தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம்! எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாகிவிட்டது! இன்னும் எத்தனை பலி வேண்டுமானாலும் கொடுக்க நம்மால் முடியும் என்பதை அறியாத இஸ்ரேல், நமக்கு உதவுகிறதாம்!

சரி, இஸ்ரேல்தான் வேண்டாம் என்றால் அமெரிக்க உதவி கூட வேண்டாம். அந்நாடு தனது நிபுணர்களை அனுப்புவதாகக் கூறியும், இந்திய அரசு மறுத்து, அந்த மாதிரி உதவியை ஏற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, என்ன அமெரிக்கா! …ஃபூ! ஒரு தாக்குதல் நடந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது? நாம் அப்படியா? எதையும் தாங்கும் இந்தியா – என்று நிரூபிக்கிற வகையில், எத்தனை தீவிரவாதத் தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம்!

அதனால்தான், சென்ற மாதம் பிரதமருடன் அமெரிக்கா சென்ற நமது அரசின் பாதுகாப்பு ஆலோசகர், “தீவிரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசினேன். அதில் பல நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை. நம் நாட்டிற்கு அந்த மாதிரி கடுமையான நடவடிக்கைகள் சரிப்பட்டு வராது’ என்று அலட்சியமாகக் கூறிவிட்டார்.

ஏன்? ஏன் நமக்குச் சரிப்பட்டு வராது? அமெரிக்கா ஜனநாயக நாடு இல்லையா?
அங்கு மனித உரிமைக்காரர்களின் அழிச்சாட்டியம் இல்லையா? நீதிமன்றங்கள் இல்லையா? அங்கு எடுக்கப்பட்டு வருகிற கடுமையான நடவடிக்கைகள் நமக்கு ஏன் சரிப்படாது? என்ன நடவடிக்கைகள் அவை? தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் “அய்யய்யோ! இது ஆனாலும் கடுமையான அணுகுமுறை’ என்று ஒன்று உண்டா? எவ்வளவு கடுமை முடியுமோ, அவ்வளவு கடுமையைக் காட்ட வேண்டிய விஷயம் அல்லவா இது? இன்னமும் எவ்வளவு இடங்கள் தாக்கப்பட்டால் கடுமையைக் காட்டலாம்? இன்னும் எவ்வளவு பேர் செத்தால் கடுமையைக் காட்டலாம்?

இவ்வளவு கடுமை கூடாது என்று கூறுகிற இவர் என்ன – தேசியப் பாதுகாப்பு ஆலோசகரா அல்லது தேசிய சால்ஜாப்பு ஆலோசகரா? அவரைச் சொல்லியும் பயனில்லை. அவர் வேலை பார்க்கிற இடம் அப்படி. இந்த அரசுதான் “கடுமையான சட்டங்களே தேவை இல்லை. இருக்கிற சட்டம் போதுமானது’ என்று சொல்லி, “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற தத்துவம் பேசுகிறதே! இருக்கிற சட்டம் போதும்; இருக்கிற பாதுகாப்பு போதும்; இருக்கிற உள்ளூர் பயிற்சி போதும்; இருக்கிறது எல்லாமே போதும். கொடுத்த பலிதான் போதாது; அது இன்னும் கொடுக்கப்படும். எது போதுமோ, போதாதோ – இந்த மாதிரி ஒரு முனைப்பில்லாத அரசு, ஆண்டது போதும்; போதும்; போதும்!

சரி, அரசுதான் இந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்றால் – போலீஸ், உளவுத்துறை செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? “படபடவென்று மானாவாரியாகச் சுட்டுக்கொண்டே போலீஸார் முன்னேற முயன்றனர். இப்படிச் செய்யவே கூடாது’ என்று ஒரு நிபுணர் கூறியிருக்கிறார்; இது சரியான கருத்துதானா என்பது நமக்குத் தெரியவில்லை; இது முறையாக பரிசீலிக்கப்படும் என்று நம்புவோம்.

“இப்போது பம்பாயில் தீவிரவாதிகளே இல்லை. எல்லோரையும் ஒழித்தாகிவிட்டது’ என்று மஹாராஷ்டிரப் போலீஸ் கூறிவிட்டது. எப்படி இவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியும்? வந்தவர்களில், இன்னமும் எத்தனை பேர் பம்பாயில் உலாவுகிறார்களோ! அல்லது வேறு எங்கு போயிருக்கிறார்களோ! அடுத்து என்ன திட்டமோ? போலீஸாரின் இந்த மெத்தனம் கண்டனத்திற்குரியது.

போலீஸாரும், விசேஷப் பாதுகாப்புப் படையினரும், எங்கே நுழைகிறார்கள், எந்த இலக்கைக் குறிவைக்கிறார்கள் – என்பதெல்லாம் டெலிவிஷன் சேனல்களில் நேர்முக ஒளிபரப்பாக வந்துகொண்டிருந்தது. இது போதாதென்று படையினரின் பேட்டிகள் வேறு! இவை எல்லாம், தீவிரவாதிகளுக்கு உதவக்கூடியவை அல்லவா? அவர்கள் டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றாலும் வெளியே இருந்தவர்கள் அவர்களுக்குத் தகவல் அளித்துக்கொண்டு
இருந்திருக்கலாம். தீவிரவாதிகள் செல்ஃபோன்களைப்
பயன்படுத்திக்கொண்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றனவே! டெலிவிஷன்காரர்களைக் கிட்டே நெருங்கவிட்டிருக்கக்கூடாது.

“மத்தியப் பாதுகாப்புப் படையினர் வந்து சேர்வதில் பெரும் தாமதம் நிகழ்ந்திருக்கிறது. இது பெரிய பலவீனம் ஆகிவிட்டது’ என்று விவரமறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். கவனத்திற்கும், எதிர்காலத் திருத்தத்திற்கும் உரிய விஷயம் இது.

மத்திய புலனாய்வுத்துறை, “மஹாராஷ்டிரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்’ என்று எச்சரித்தும்; “தாஜ் ஹோட்டலே கூட தாக்கப்படலாம்’ என்று எச்சரித்தும்
– மாநிலப் போலீஸ் ஒரு சில நாட்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, பின்னர் அதையும் வாபஸ் வாங்கியிருக்கிறது.

எவ்வளவு பெரிய அக்கறையின்மையை இது காட்டுகிறது என்று நினைத்துப் பார்த்தால், அதிர்ச்சிதான் உண்டாகிறது. மஹாராஷ்டிரத்தின் விசேஷ “தீவிரவாத எதிர்ப்புப் போலீஸார்’ ஏன் அலட்சியமாக இருந்துவிட்டனர்?

இக்கேள்விக்கு விடைகாண பெரிய தேடுதல் அவசியம் இல்லை. பம்பாயில் தீவிரவாதிகள் அட்டூழியம் நடப்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக,
அம்மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்புப் போலீஸின் தலைவர் (இப்போது துரதிருஷ்டவசமாக உயிரிழந்து விட்டவர்) “எங்களுடைய நேரமும், முனைப்பும்
90 சதவிகிதம், மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில்தான் செலவிடப்படுகிறது’ என்று பெருமைப்பட்டுக்கொண்டார். அவ்வளவு முனைப்பை, அந்த விவகாரத்தில் காட்டியபோது, மத்திய புலனாய்வுத் துறையிடமிருந்து வந்த தகவல்களை ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுக்க ஏது நேரம்!

“ஆள் பலம் போதவில்லை’ என்கிறார்கள். போலீஸுக்குப் போதிய அளவு ஆள் பலம் சேர்க்க வேண்டாம் என்று யார் தடுத்தது? ஆளும் இல்லை; ஆயுதமும் இல்லை;
பயிற்சியும் இல்லை! அதனால் என்ன நடக்கிறது? பல போலீஸ் அதிகாரிகள், உயிரிழக்கிறார்கள்.

அவர்களுடைய தைரியம் மெச்சத்தக்கது. ஆனால், போலீஸ் உயிரிழப்பா, நாட்டிற்கு வேண்டியது? பாதுகாப்பு வீரர் சாவா, தேசத்தின் தேவை? பகையாளி உயிரை அல்லவா எடுக்க வேண்டும்! ஜெனரல் பேட்டன் என்கிற அமெரிக்க தளபதி, இரண்டாம் உலக யுத்தத்தின்போது, தன் கீழ் பணிபுரிந்த ராணுவ வீரர்களைப் பார்த்து, “தேசத்திற்காக உயிரை விடுவது அல்ல உங்கள் வேலை! உயிரை விடுவதற்காக நீங்கள் ராணுவத்தில் சேரவில்லை! உயிரை எடுக்க வேண்டும். பகையாளிகளின் உயிர்களை எடுப்பதுதான் உங்கள் கடமையே தவிர, உங்கள் உயிரை விட்டுவிடுவது அல்ல. கொல்லுங்கள்! கொல்லப்படாதீர்கள்!’ என்று அறிவுரை கூறினார்.

அப்படியல்லவா இருக்க வேண்டும் – போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மனோநிலை! “உயிரை விட்டார்கள்! ஆஹா! தியாகம்’ என்று பத்திரிகைகள் பாராட்ட, அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்ட, மக்கள் கொண்டாட, போலீஸ் உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாவது விமரிசையாக நடந்து வருகிறது. அதுவும் உயர் அதிகாரிகளே, உயிர் துறக்க நேரிடுகிறபோது, அவர்களின் கீழ் பணியாற்றுகிறவர்களின் மன உறுதி தளராதா? ஏன் இந்த நிலை?

“பயிற்சி போதாது; அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், இந்த மாதிரி நிலையைச் சந்திக்கப் போதுமானவை அல்ல’ – என்று நிபுணர்கள்
கூறியிருக்கிறார்கள். இப்படிக் கூறியுள்ளவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், “இவர்கள் என்ன சொல்வது? கைவசம் இருப்பது தீபாவளித் துப்பாக்கியே ஆனாலும், உயிரைத் துச்சமாக மதிக்கிற வீரர்களாக்கும், எங்கள் ராணுவத்தினரும் போலீஸாரும்!’ என்று தேசபக்தி சொட்டச் சொட்டப் பேசி விடுவது சுலபம். உயிரிழக்கப் போவது மேடைப் பேச்சாளர்கள் அல்லவே!

சில நேரங்களில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிரிழப்புத் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்; ஆனால் அதுவே அவர்களுடைய கடமை ஆகிவிடக் கூடாது. “உயிரை விடுவதே எங்கள் லட்சியம்’ என்றா பாதுகாப்பு வீரர்கள் செயல்பட முடியும்? ஜெனரல் பேட்டன் கூறிய மாதிரி, உயிர்களை எடுக்க வேண்டும்; பகைவர்களைக் கொல்ல வேண்டும்; இயன்றால் உயிருடன் அவர்களைப் பிடித்து, உண்மைகளைக் கறக்க வேண்டும். அதற்கு வேண்டிய பயிற்சிகளையும்,
ஆயுதங்களையும், நவீன உபகரணங்களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பது அரசு, அவர்களுக்குச் செய்கிற துரோகம்.

“அயல் நாட்டு உதவியா? தேவையே இல்லை! அதுவும் அமெரிக்காவா! ஐயோ! ஏகாதிபத்திய நாடு! அதனிடம் உதவி பெறுவதா? அவர்கள் பயிற்சி முறையை நாம் பின்பற்றுவதா? கேவலம்! நமது சத்ரபதி சிவாஜி காட்டாத வீரமா? திப்பு சுல்தான் காட்டாத மனோதிடமா?’ என்றெல்லாம் பேசுவது, டெலிவிஷன் உரையாடல்களுக்கும், பத்திரிகைகளின் கட்டுரைகளுக்கும் சரிப்பட்டு வரலாம்; ஆனால், வேலைக்கு ஆகாது.

அமெரிக்காவும், இஸ்ரேலும்தான், இன்று தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவை. அந்நாடுகளிலும் பயங்கரவாத நிகழ்ச்சிகள் நடந்துள்ளன; இன்னமும் நடக்கலாம். ஆனால், அவர்கள் வசம் உள்ள உபகரணங்கள்; அவர்கள் பெற்றுள்ள பயிற்சி; வெவ்வேறு வகை தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவர்கள் வகுத்துள்ள வழிமுறைகள் – எல்லாமே விசேஷமானவை. அவற்றை நாம் பெற வேண்டும். அந்த இரு நாடுகளுடன் இவ்விஷயத்தில் முழுமையாக ஒத்துழைத்து, அவர்கள் உதவியை நாம் பெற வேண்டும்.

“பொடாவை மீண்டும் கொண்டு வந்தால் பா.ஜ.க.விடம் பணிந்தது போல் ஆகிவிடும்; அதைவிட தீவிரவாதிகளிடம் பணிந்து போவதே மேல்’ என்ற மதச்சார்பின்மை வைராக்கியத்தைக் கைவிட மத்திய காங்கிரஸ் அரசு தயாரில்லை என்றால்
– மதச்சார்புத் தீட்டு படிந்துவிட்ட “பொடா’விற்குப் பதிலாக “கொடா, மொடா, தொடா’ என்று ஏதாவது ஒரு புதிய பெயரில் பொடா சட்டத்தையே கொண்டு வர வேண்டும். அல்லது இருக்கிற சட்டங்களையே இன்னமும் பலமடங்கு கடுமையாக்க வேண்டும்.

தேவைப்படுகிற இடங்களில் திடீர் சோதனையிடும் உரிமை; சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து சிறைப்படுத்துகிற அதிகாரம்; தன்வசமுள்ள தகவலைத் தர மறுக்கிறவர் பத்திரிகையாளரானாலும் சரி, வக்கீல் ஆனாலும் சரி – அவரைக் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்துகிற ஷரத்துக்கள்; தீவிரவாதிகளுக்கு தங்க இடம் அளித்தவர்கள் நிரபராதிகளாக இருந்தால், அதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டுமென்ற கட்டாயம்; போலீஸிடம் அளிக்கிற ஒப்புதல் வாக்குமூலம்
நீதிமன்றத்தில் ஏற்கப்படும் என்கிற பிரிவு; ஜாமீனில் வெளியே வருவதற்கே, கைதானவர் தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்கிற அவசியம்; தீவிரவாதிகளை ஆதரித்துப் பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் தண்டிக்கத் தேவையான ஷரத்துக்கள்; தீவிரவாதச் செயலுக்கு என்ன தண்டனையோ, அதே அளவு கடுமையான தண்டனையை, தீவிரவாதச் செயலுக்கு உதவியவர்களுக்கும்
நிர்ணயிக்கிற ஷரத்துக்கள்… போன்ற பல அம்சங்களை, இருக்கும் சட்டத்திலேயே புகுத்தலாம்; அல்லது புதிய சட்டம் கொண்டு வரலாம்.

இம்மாதிரிச் செய்வது, “தீவிரவாதத்தைப் பொறுத்த வரையில், அரசு தயை
– தாட்சண்யம்; ஓட்டு – பிரச்சாரம்; மனித உரிமை – மண்ணாங்கட்டி… என்பது போன்ற சுமைகளை உதறித் தள்ளிவிட்டது’ என்ற தகவல், தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டாக வேண்டும். இதனால் தீவிரவாதிகள் ஓய்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும், உதவி செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு, தீவிரவாதிகளின் திட்டங்கள் தடங்கல்களை சந்திக்கும்; தகவல்கள் அரசுக்குக் கிட்டுவதற்கான வாய்ப்புகளும் கூடும்.

இது தவிர, பங்களாதேஷ் அகதிகள் வருவதும், தடுக்கப்பட வேண்டும்;
வந்துவிட்டவர்களும், ஓட்டுரிமை அற்றவர்களாக்கப்பட வேண்டும்; தொடர்ந்த கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடனான எல்லைகள் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு உதவக்கூடிய
இந்தியா – பாகிஸ்தான் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும்.

உள்துறை அமைச்சர் ராஜினாமா, திருப்பதியில் தலைமுடியைக் காணிக்கையாக செலுத்துகிற மாதிரிதான். போனது மீண்டும் வளர்கிற மாதிரி, பழைய முனைப்பின்மை மீண்டும் வளரும். பாவம் செய்துள்ளோம் என்பதை உணர்கிறோம் என்பதற்கான அடையாளமாக அது ஆகுமே தவிர, பாவத்தை அது முழுமையாகக் கழுவிவிடாது. அதற்கு நம்மிடம் திருந்திய நடத்தை தேவை. அதை மத்திய அரசு காட்ட வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படாது; தீவிரவாதச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப்படும்; “கடுமையான சட்டம் தேவை என்று பேசுவதே கண்டனத்திற்குரிய அதீதமான, நிதானமற்ற நடவடிக்கையாகிவிடும்’ என்று உளறுவது; தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்ற நிலையில் சட்டத்தை வைத்திருப்பது; அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறிக்கொண்டு, போலீஸாரின் கைகளைக் கட்டிப் போடுவது; என்கௌன்டர் நடந்தால் உடனே போலீஸ்துறை மீது பாய்வது… போன்ற பெட்டைத்தனங்கள் நிற்க வேண்டும்.

நடப்பது யுத்தம். யுத்த தர்மம் இதற்குச் செல்லுபடியாகும். எதிரியை வீழ்த்த வேண்டும். அதுதான் இலக்கு. அதுதான் முனைப்பு. “அந்த முனைப்பின் காரணமாகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், வேறு வழியில்லை என்று அவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டியதுதான்’ என்ற நினைப்பு தோன்ற வேண்டும். தேசம், பட்டது போதும்.
( நன்றி: துக்ளக் )

  உளவுத்துறை (IB) RAW வேலைகள் என்ன?

IB – Intelligence Bureau – உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான உளவுப்பணிகளை கவனிக்கும் அமைப்பு
RAW – Research and Analysis Wing வெளிநாட்டு பாதுகாப்பு உளவுப்பிரிவு 

எனது 14 ஆண்டு பத்திரிக்கைத்துறை பணியில் எத்தனையோ உளவுப் பிரிவினரோடு பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்

எனக்குத் தெரிந்து நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறையை நான் கண்டதில்லை.

நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.

ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்.. ஆர்.எம்.வீரப்பனை முன் நிறுத்தப் போகிறார் என்று ஒரு பரபரப்பு எழுந்த நேரம் அது. ஆர்.எம். வீரப்பன் தான் அப்போது மாபெரும் அரசியல் ஹீரோ. அப்போது அவரின் வீட்டின் முன் நிருபர்கள் தவம் கிடப்போம்.

எங்களிடையே இரு பெரியவர்களும் வந்து கலந்து நிற்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு நெருக்கமானார்கள்.

வீரப்பனை யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை.

அந்த இரு பெரியவர்களும் நம் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார்.

எக்ஸ்ட்ரா ‘வரும்படி’ இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான்.

இது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை.

இன்னொரு கொடுமையும் உண்டு.

உளவுப் பிரிவின் மூத்த அதிகாரிகளிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் இன்னும் கொடுமையானவை.

பெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான்.

இவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு.

இப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள்.

இதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம்.

இந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.

இப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான்.

இவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்… இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை.

நம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்?

ஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்…

ஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள்.

நம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். (உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும் என்ற தலைப்பே கூட எனக்கு மிகுந்த வருத்தம் தருவதே, விஷயத்தை நேரடியாக சொல்ல எனக்கு வேறு ஏதும் தோன்றவில்லை)

என்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர்.

நமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம்.

நமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு.

மும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா..?. மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு.

வேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்.

முதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி.

தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சில உளவுப் பிரிவினரோடு பேசுகையில், அவர்கள் இந்த ஏஜென்சியை வரவேற்பதை உணர முடிந்தது. அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சில தகவல்களைத் தந்தனர். அவர்கள் சொன்னது இது தான்:

இந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

இதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை.

இந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும்.

இந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும்.

இவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும்.

ரா, ஐபியில் இந்தப் பயிற்சிகள் எல்லாம் தரப்படுவது தான். ஆனால், அவர்களுக்கு போதிய ஆள் பலம் இல்லை. (எதி்ர்க் கட்சியினரை உளவு பார்க்கவே இவர்களது எண்ணிக்கை நமக்குப் போதாதே)

இதனால் ஐபிக்கு போதிய ஆள் பலத்தைத் தருவதும் தீவிரவாதத்தை எதிர்க்க சீரியஸான ஒரு ஏஜென்சியை உருவாக்குவதும் தான் இந்த நவீன யுக தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி என்றனர் அந்த உளவுப் பிரிவினர்.

அரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும்.

இல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும்.

மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது.

ஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும்.

ஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்.. பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் ‘கிராண்ட் பிளானே’ இது தான் என்கிறார்கள் உளவுப் பிரிவினர்.

இதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.

 (கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

  

என்னவாகப் போகிறது மென்பொருள் வல்லுனர் சமூகம்?


சமீப ஆண்டுகளாக இந்திய மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் பெறுகிற அளவுக்கு மிஞ்சிய ஊதியம் பல பேரது வயிற்றெரிச்சலைச் சம்பாதித்தது என்னவோ உண்மைதான். இப்போது அவர்களுக்கு வேலை பறி போவதாக அங்கொன்றும் இங்கொன்றுமென தினசரிகளில் காணக் கிடைக்கும் செய்திகள் அந்த வயிற்றில் எல்லாம் பால் வார்த்திருக்கிறது. முக்குக்கு முக்கு சிலாகித்துப் பேசுகிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பல ‘வெள்ளை காலர்’ ஊழியர்களின் வேலைக்கு உலை வைத்திருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களை நம்பியிருக்கும் இந்திய மென்பொருள் நிறுவனங்களும் இந்தப் பாதிப்பை உணராமல் இல்லை. அதனால் வேலைகள் காலியாவதும் உண்மையே. அதன் காரணிகளையும், விளைவுகளையும் அலசும் முன்னர் …..

இந்தியாவின் வேலையின்மை 2007 கணிப்பின் அடிப்படையில் 7.2 விழுக்காடு. அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்ற கேள்வியும், அதன் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமும் ஒரு பக்கம் ஏற்படுகிறது. இருந்தாலும் 7.2 விழுக்காடு என்று நம்புகிறோம். அமெரிக்காவில் 2008 செப்டம்பர் மாதம் 6.1 சதவீதம் பேருக்கு வேலை இருக்கவில்லை. அக்டோபரில் இன்னும் ஓரிரு விழுக்காடு கூடியிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் தனக்கு வேலை போகாமல் மற்றவர்களுக்கு வேலை போகும் போதுதான் வேலையின்மைக்கு 6, 7, 10 சதவீதக் கணக்கெல்லாம். ஒரு வேளை தனக்கே வேலை பறி போனால் வேலையின்மை 100 சதவீதம். படித்து விட்டு வேலை தேடி அலையும் போது நாட்டின் முதன்மையான பிரச்சினையாக இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் வேலை கிடைத்த பிறகு ‘மக்களுக்கெல்லாம் போதுமான திறமை இல்லை’ என்ற நிலைப்பாடாக உருமாறுவதைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

மற்றத் துறைகளில் பணியாற்றும் திறமைசாலிகள் எவ்வளவு உழைத்தாலும் ஈட்ட முடியாத ஊதியத்தை, கல்லூரி முடித்துவிட்டு வெளியே வரும் சின்னப் பசங்க கழுத்தில் ஐ.டி கார்டைத் தொங்க விட்டபடியே சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தூக்கிக் கொடுத்தன. ஆனால் இந்த ஊதியத்தை இந்தியாவில் மற்ற வேலைகளில் உள்ளோர் வாங்கும் சம்பளத்தோடு ஒப்பிடுவது ஒரு வகையில் தவறுதான்.

மேலை நாடுகளில் உள்ள பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில். உதாரணமாக கார் தயாரிப்பு, வங்கித் தொழில், இன்சூரன்ஸ், மதுபான உற்பத்தி, ஏர்லைன்ஸ் இப்படி ஏதாவது ஒரு தொழில். இவற்றின் வரவு செலவுகளைப் பேணவும், நிர்வாகத்தைத் தங்குதடையின்றி நடத்தவும் அவை சார்ந்த தகவல் அனைத்தையும் கணினியில் உட்செலுத்தி அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவது அவசியம். அதற்குத் தக்கபடி கணிப்பொறி மென்பொருட்களை உருவாக்க வேண்டிய தேவை அந்தக் கம்பெனிகளுக்கு இருந்தது; இருக்கிறது. அந்த வேலையை அந்த மேலை நாடுகளில் செய்வதற்கு மென்பொருள் ‘வல்லுனர்கள்’ மணிக்கு இத்தனை டாலர் என்று பில் எழுதினார்கள்.

தமக்கு மென்பொருள் வேலை செய்ய வரும் இந்த ‘வல்லுனர்’ சமூகத்திற்கு ஒரு நிறுவனம் மணிக்கு சுமார் 70 டாலர் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் நம்ம ஊரு சாஃப்ட்வேர் நிறுவனங்கள், “எங்களுக்கு மணிக்கு 40 டாலர் கொடுங்கள் போதும். நாங்கள் இந்தியாவில் இருந்து அதே பணியைச் செய்து தருகிறோம்” என்று சொல்லி ஒப்பந்தத்தை வென்றெடுத்து இந்தியாவில் ஏராளமான இளைஞர்களை வேலைக்கு எடுத்து காசு பார்த்தன. அந்த 40 டாலரில் கால்வாசியைச் சம்பளமாகக் கொடுத்தாலும் ஒரு நாளைக்கு மூவாயிரத்துச் சொச்சம் சம்பளம் தரலாம். அப்படி இருக்கும் போது இந்தியாவில் இந்தியச் சம்பளம் வாங்கும் மக்களோடு இவர்களை ஒப்பிடுவது தவறு.

சாஃப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவில் 70 டாலர் வாங்கிக் கொண்டு அதில் 40 – 50 டாலர் சம்பளமாகத் தருவதைக் காட்டிலும், இந்தியாவில் 40 டாலர் வாங்கிக் கொண்டு அதில் பத்து டாலரை ஊழியருக்கு சம்பளமாகக் கொடுப்பது இலாபகரமானது. இது நிறுவனங்களின் பார்வையில். அதே நேரம் இந்தியா இருக்கிற பொருளாதாரச் சூழலில் இந்த நிறுவனங்கள் தருவது அபரிமிதமான சம்பளம். மற்றப் படிப்புகளைப் படித்துவிட்டு மாதம் ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று சம்பளம் வாங்குவதைவிட எப்படியாவது மென்பொருள் நிறுவனங்களில் சேர்வது இலாபகரமானது.

சென்ற நான்கைந்து வருடங்களில் உலகப் பொருளாதாரம் வெகுவான முன்னேற்றம் கண்டது. குறிப்பாக அமெரிக்க வாடிக்கையாளர்களின் நுகர்திறனை நம்பி சீனாவின் தொழில்துறையும், இந்தியாவின் மென்பொருள் துறையும் வாழ்ந்தன. இந்தியாவைப் பொறுத்தவரை மென்பொருள் கம்பெனிகளின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே போனது. தகுதியுள்ள ஆள் உடனடியாக வேண்டுமென்றால் பக்கத்து கம்பெனியில் வேலை செய்பவனுக்குச் சில ஆயிரங்களை அதிகமாகக் கொடுத்து இழுத்துக் கொள்வது நடந்தேறியது. “குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்” என்று கவுண்டமணி சொல்வது போல பேங்கில் வேலை செய்தவன், பேஃக்டரியில் வேலை செய்தவன் என எல்லோருமே சாஃப்ட்வேருக்குத் தாவினார்கள்.

புதிதாக இணைபவர்களுக்குச் சுளையான சம்பளம். புதிய பொறியியல் கல்லூரிகள் காளான்களாக முளைத்தன. B.E சீட் கிடைப்பதை விட C.A சீட் கிடைப்பது சிரமம். அத்தனை பொறியியல் கல்லூரிகள். இறுதியாண்டு முடிவதற்குள்ளாகக் கல்லூரி வளாகத்திற்கே வந்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைக் கொடுத்து ‘புக்’ செய்தன கம்பெனிகள். முதலில் நிலவிய B.E, M.C.A படித்தவர்கள் மட்டுமே சாஃப்ட்வேரில் நுழையலாம் என்ற நிலை மாறி என்ன படித்தாலும் வேலை கிடைக்கும் என்ற நிலை உருவானது. B.Sc முடித்தவர்கள் மேற்படிப்பு படித்துக்கொண்டே வேலை செய்யலாம் என்று சில நிறுவனங்கள் நான்கு வருடம் தாவ முடியாமல் கட்டிப் போடும் வேலையைச் செய்கின்றன. இப்படி வேலைக்குச் சேரும் ஆட்கள் சுலபமாக கம்பெனி மாற மாட்டார்கள். மேலும் சம்பளமும் குறைவு. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்தவர்களுக்குக்கூடக் கதவுகளைத் திறந்து விட்டிருப்பதாகச் செய்தி.

அதிக வருவாய் தருகிற தொழில் அல்லது துறை திறமையானவர்களை ஈர்த்துக் கொள்ளும். சமீப காலமாக எல்லோருமே ஆர்வமாக பொறியியல் படிப்பதும், பாஸ் செய்து வெளியேறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியிருப்பதும் அதற்குச் சான்றாக இருக்கின்றன. டிமாண்டை ஈடு செய்வதற்கான படிப்படியாக அதிகரித்த சப்ளை இப்போது டிமாண்டைவிட அதிகரித்துவிட்டதாகத் தெரிகிறது. ஒரு பக்கம் சப்ளை அதிகரித்திருக்கிறது. இன்னொரு பக்கம் டிமாண்ட் மந்தமடைந்திருக்கிறது.

பிரபலமான மூன்றெழுத்து சாஃப்ட்வேர் நிறுவனம் வளாகத் தேர்வில் தேர்ந்தெடுத்த மாணவர்களை இரண்டு ஆண்டுகள் கழித்துச் சேரச் சொல்லிவிட்டதாம். இன்னொரு நிறுவனத்தில் ஐயாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புகிறார்களாம். சில இடங்களில் நிரந்தர வேலைக்கு ஆள் சேர்க்காமல் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்கிறார்கள். பரவாயில்லை என்று குறைவான சம்பளத்தில் அதிலும் ஒட்டிக்கொள்ள வேண்டிய நிலைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் மென்பொருள் நிறுவனங்களில் பாதிப்பு அளவுக்கு அதிகமாக விவாதிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஒதுக்க முடியவில்லை. எண்பதாயிரம் பேர் உள்ள நிறுவனம் ஐந்தாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றும் பெரிய சங்கதியல்ல. சதவீதக் கணக்கில் பார்த்தால் குறைவே. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒரே நாளில் 1,900 பேரைப் பணிநீக்கம் செய்தது போல அதிரடியாக எதுவும் செய்யாமல் தினசரி அங்கொன்றும் இங்கொன்றுமாக சத்தமில்லாமல் ‘பிங்க் ஸ்லிப்’ கொடுப்பதால் மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் ஆட்குறைப்பின் எதிரொலி மெலிதாகவே கேட்கிறது.

உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை இந்திய மென்பொருள் நிறுவனங்களைப் பாதித்தாலும் அந்தப் பாதிப்பு தற்காலிகமானதாகவே இருக்கும். அவற்றில் இலாப விகிதம் குறையலாம். ஆனால் அவை ஒட்டு மொத்தமாக அழிந்துவிடாது. ஆட்டோமொபைல் கம்பெனிகள் சில வெறும் 5-6 சதவீத இலாபத்தில் இயங்கிய போது சாஃப்ட்வேர் கம்பெனிகள் 30 சதவீதம் இலாபத்தில் செயல்பட்ட காலமெல்லாம் மலையேறி விடும். ஆனாலும் அவை குறைவான இலாபத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவு கண்டால் அது இந்திய மென்பொருள் நிறுவனங்களைப் பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், அப்படிப்பட்ட சூழலில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே ஆட்குறைப்பு செய்து விட்டு செலவைச் சமாளிப்பதற்காக மேலும் அவுட்சோர்ஸிங் செய்யக் கூடும் என்ற வாதத்தையும் கவனிக்க வேண்டும். அதனால்கூட நமது சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு நன்மைதான்.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு முறை அந்த தேசத்தில் தேர்தல் நடக்கும் போதும் அவுட்சோர்ஸிங், ஓரினச் சேர்க்கைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் மற்றும் கருக்கலைப்பு ஆகிய மூன்று விஷயங்கள் அலசப்படும். எட்டு ஆண்டுகளாக ஜார்ஜ் புஷ் நடத்திய குடியரசுக் கட்சியின் ஆட்சி பொருளாதாரத்தை விளிம்பு நிலைக்குத் தள்ளி விட்டதால் இந்த முறை அவுட்சோர்ஸிங் மேட்டருக்குக் கூடுதலான கவனம் கிடைத்திருக்கிறது. அமோகமான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கருதப்படும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அவுட்சோர்ஸ் செய்யாமல் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு சாதகமான வரிக் கொள்கைகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.

என்னதான் கருத்துக் கணிப்புகள் ஒபாமாவுக்கு ஆதரவு இருப்பதாகச் சொன்னாலும், அமெரிக்காவும் சரி உலகமும் சரி ஒரு கறுப்பின அதிபரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனவா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!! கருத்துக் கணிப்பில் ‘நல்லவனாக’ ஒபாமாவுக்குத்தான் எனது ஓட்டு என்று சொல்லி விட்டு வாக்களிக்கும் போது அமெரிக்காவின் பெரும்பான்மை வெள்ளையர்கள் தமது இன உணர்வை வெளிப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாறாக ஒபாமா வென்றால் அது எதிர்பார்த்த ஒன்றாகவே இருக்கும்.

ஆனால் நமது சாஃப்ட்வேர் தொழிலைப் பொறுத்தவரை யார் ஆட்சிக்கும் வந்தாலும் பெரிய மாறுதல் இருக்காது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அமெரிக்காவின் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்வதெல்லாம் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் என்பதால் ஒபாமாவின் ‘அவுட்சோர்ஸிங் எதிர்ப்பு’ சவுண்ட் எந்த அளவிற்குச் சாத்தியம் என்று தெரியவில்லை.

Letter edit by Shankar
 

 உள்மனதின் ஆதங்கம்!
 
  
உலகெங்கிலும் மிக அதிகமாகக் கவனிக் கப்பட்டு, விவாதம் செய்யப்பட்டு, நடக்குமா நடக்காதா என கேள்விகள் எழுப்பப்பட்டு, அட நடந்தே விட்டதே என ஆச்சரியப்பட்டு பின் மிகுந்த எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டு நடைபோட்டுக் கொண்டிருக்கும் சமீபத்திய நிகழ்வு அமெரிக்க அதிபர் தேர் தல்
இந்தியா போன்ற பின்தங்கிய நாட்டில் கோடிக்கணக்கான ஏழை எளியவர்கள், பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வர்களெல்லாம் ஓட்டுரிமை பெற்றிருந்த கால கட்டத்தில்கூட ஓட்டுரிமை பெறாதிருந்த கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா நவம் பர் மாதம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். 1964 வரை அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது
இந்தியாவைப் பொருத்தமட்டில் ஒபாமா வின் தேர்வு நல்லதா, கெட்டதா எனும் வாதம் பல கோணங்களில் எடுத்துரைக்கப்படுகிறது
குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தில் ஒபாமா தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா வில் முதலீட்டு வருமானத்தின்மீது தற்போது விதிக்கப்படும் வரிவிகிதமான 15 சதவிகி தத்தை 20 சதவிகிதமாக அதிகரிப்பதாக கூறி னார்
முதலீட்டு வருமானம் என்பது பெரும்பா லும் அமெரிக்க தனவந்தர்களும் பெரிய நிதிநி றுவனங்களும் ஏனைய நாடுகளில் பங்குச் சந் தையில் பணத்தை முதலீடு செய்து அதிலி ருந்து பெறும் லாபம் ஆகும். அதன்மீது உட னடியாக வரி உயர்த்தப்பட்டால் நேரடியாக இந்தியப் பங்குச் சந்தைக்கு வரும் அமெரிக் கப் பண முதலீடு குறையும்
அடுத்து அமெரிக்காவில் தற்போது வேலைவாய்ப்புகள் குறைந்து வேலை யின்மை குறியீடு 5.7 சதவிகிதமாகியுள்ளதாக வும், அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கு விசா வழங்குவ தைக் குறைக்கவும், அமெரிக்கக் கம்பெனிகள் அயல்பணி ஒப்படைப்பு (ஞன்ற் ள்ர்ன்ழ்ஸ்ரீண்ய்ஞ்) எனும் முறையில் அமெரிக்காவில் இருந்துகொண்டு தாங்கள் செய்ய வேண்டிய வேலையை இந் தியா போன்ற நாட்டிற்குக் குறைந்த செலவில் மாற்றி விடுவதைத் தடுக்கவும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் எனவும் கூறியதாகத் தெரிய வருகிறது. இதனால் இந்தியா நேரடியாகப் பாதிக்கப்படலாம்
மேலும், அமெரிக்காவில் எத்தனால் எனப் படும் ஸ்பிரிட் தயாரிப்பை ஊக்கப்படுத்தி பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டினைச் சமா ளித்து சுற்றுப்புறச் சூழல் தூய்மையாக வழி செய்வதில் ஒபாமா, முழுமூச்சில் இறங்குவார் என்பது எல்லோருக்கும் தெரியும். எத்தனால் பெட்ரோல், டீசலுக்கு மாற்றுப்பொருள்
அது மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்ப டும் என்பதும், மக்காச்சோளம் பயிரிட்டால் ஏனைய உணவுப் பயிர்களைவிட அதிக லாபம் கிடைப்பதால் அமரிக்காவிலும் உண வுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படும். இந்தியா போன்ற நாடுகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகலாம்
இதுதவிர, உலக வர்த்தகத்தில், உலக வர்த் தக அமைப்பின் (ரபஞ) டோகா ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாமல், அமெரிக்க விவசாயிக ளுக்கு மானியத்தை அதிகப்படுத்தி, அதனால் இந்தியா போன்ற நாடுகளின், விவசாயப் பொருள்களில் வியாபார ஏற்றுமதி பாதிக்கப் படலாம். ரூபாயின் மதிப்பு குறையும்படி யான பல நடவடிக்கைகளைத் தொடர்வதன் மூலம் இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப் பும் குறையலாம்
இதுபோன்ற விஷயங்களில் ஓர் அதிபர் அமெரிக்க அரசின் அமைப்பு நிர்வாகத்தில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் காட்டி கொள்கைகளையும் ஆட்சிமுறைக ளிலும் மாற்றம் செய்வது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத விஷ யம் என்பதை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம்
நமது நாட்டைப்போல், ஓர் அரசு ஆட் சிக்கு வந்த உடன், இதற்கு முன் ஆட்சி செய்த அரசு நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு, வேண்டுமென்றே அத் திட்டங்களைக் கிடப்பில் போடுவது அமெரிக்காவைப் பொருத்தவரையில் கிடை யாது
இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதிக்கட் டத்தில் ஜெர்மன் படைகள் உலகெங்கிலும் அடிவாங்கித் தோற்றுப் போகும் நிலைமைக் குத் தள்ளப்பட்டன. ஜெர்மன் படைகள் தோற்கடிக்கப்பட்டு, அமெரிக்க, ரஷிய மற் றும் ஆங்கிலப் படைகள் மூன்று முனைக ளில் முன்னேறி பெர்லின் நகரத்தை நெருங் கிக் கொண்டிருந்த வேளையில் பாதாள பதுங்கு இருப்பிடத்தில் மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் இருந்தார் ஹிட்லர். அவரது நெருங்கிய சகா கோயபல்ஸ், பிரசார அமைச் சர் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சியுடன் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி, “”அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் மரணம டைந்துவிட்டார்
தலைவருக்கு என் வாழ்த்துகள்” என சந் தோஷமாக ஹிட்லரி டம் கூறினாராம்
அப்போது, அங்கே இருந்த ஒரு ஜெனரல் தனது நண்பர்களிடம் ரகசியமாக, “”தோல்வி யின் பாதிப்பால் நமது அமைச்சருக்கு ஒரு விஷயம் புரியவில்லை போலும். அமெரிக்கா போன்ற முதிர்ந்த ஜன நாயக நாட்டில் ஓர் அதிபர் மரணமடைந் தால் அடுத்தவர், அதாவது உதவி அதிபர் அவ ரது இடத்திற்கு வந்து அவர் விட்டுச் சென்ற பணியைச் சரியான வகையில் நடத்தி முடிப் பார்!” எனக் கூறினாராம்
ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்யும் நாட்டில் வேண்டுமானால் அடுத்து பதவியைக் கைப் பற்றும் சர்வாதிகாரியின் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் எனச் சொல்ல முடியாது
ஆனால், அமெரிக்க ஜனநாயக அமைப்பில் நிர்வாகக் கட்டமைப்பு, சட்டதிட்டங்கள், நடைமுறை விதிகள் மிகத் தெளிவான வகை யில் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவத னால், தனிமனிதர்களின் பதவி ஏற்பு பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வராது
மேலும், அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு அர சியல் கட்சிகள் உண்டு. நிறைய விஷயங்களில் அவற்றுக்கு இடையில் பெரிய வித்தியாசங் கள் கிடையாது. இதைப்பற்றி கிண்டலாகக் கூறும்போது, “”ஒரே மாதிரியான ஒயினை இரண்டு பாட்டில்களில் ஊற்றி ஒன்றில் குடி யரசுக் கட்சி எனவும் மற்றொன்றில் ஜனநாய கக் கட்சி எனவும் லேபிள்கள் ஒட்டியது போன்றது” என்று கூறுவார்கள்
எனவே, ஒபாமாவின் வெற்றி மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லா மல் போகலாம்
பொதுநோக்குப்படி இந்தியா விற்கு எந்த காலகட்டத்திலும் குடிய ரசுக் கட்சி இணக்கமாகவும், ஜனநாய கக் கட்சி ஓரளவு முரண்பட்டும் இருப்பது அனுபவம் தந்த பாடம்
உதாரணமாக, ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி அணுஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் எல்லா நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்பதில் தீவிர மாக இருக்கும். காஷ்மீர் விஷயத்தில் தலை யிட விரும்பும். இவை இரண்டும் நமக்கு அனு சரணையான விஷயங்கள் அல்ல
இதுபோன்ற அம்சங்களைத் தள்ளி வைத் துவிட்டு இந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதி பர் தேர்தல் நமக்கு அளித்துள்ள மிகவும் தெளிவான படிப்பினை என்ன? இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த ஒருவர் பிரதமராக வரு வது சாத்தியம். ஏனென்றால், இங்கே அப்பத விக்குத் தேர்தல் நேரடியாக நடப்பதில்லை
ஆனால் அமெரிக்க அதிபரை மக்கள் நேரடி யாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். எனவே, அமெரிக்க மக்கள் ஒபாமா மிகச்சிறந்த அரசி யல் தலைவர் எனக் கருதியதனால்தான் அவ ரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவர் கறுப்பர் இனத்தவர் என்பதால் இந்தத் தேர்தலின் மூலம் அமெரிக்கா தன் மீது படிந்துள்ள இன வெறி என்ற சாயத்தை அழித்தொழித்துள் ளது என்பது இன்னொரு சாதனை
அமெரிக்க மக்க ளின் முன் உள்ள மிகச் சிக்கலான ஒரு பிரச்னை மருத்துவம் பற்றியது. அங்கே தனி யார் இன்சூரன்ஸ் மூலம்தான் மருத்துவச் செலவுகளை சாதா ரண மக்கள் சமாளிக்க முடியும். ஆனால் லாப நோக்கில் நடைபெ றும் காப்பீட்டு கம்பெ னிகள் மருத்துவச் செலவு செய்த பின்னர் செலவுத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக் கும்போது ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி தட்டிக்கழிப்பது, குறைந்த தொகையை வழங்குவது, காலம் தாழ்த்துவது என பல ஆண்டுகள் நடந்து இந்த நடைமுறை களில் மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர்
அரசு ஏதேனும் செய்து மருத்துவத்துறையை சீர்செய்ய வேண்டும் எனப் பலரும் எதிர் பார்க்கிறார்கள்
இரண்டு அதிபர் வேட்பாளர்களும் கலந்து கொண்ட ஒரு விவாதத்தின்போது ஒரு வாக் காளர், மருத்துவம், பொதுச் சுகாதாரம் ஆகி யவற்றை மக்களுக்கு அளிப்பது, ஓர் அரசின் கடமையா அல்லது பெரிய சன்மானமா எனக் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த ஒபாமா, “”ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அரசி டம் மருத்துவ வசதியை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. எனது அன்னை அவரது 53-வது வயதில் புற்றுநோயால் இறந்தார்
அவரது மருத்துவச் செலவுக்காக மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனிகளை அணுகியபோது, இந்த வியாதி இன்சூரன்ஸ் செய்வதற்கு முன் னரேயே உங்களுக்கு இருந்ததா, இல்லையா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு ஏற் கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த அவரை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார் கள். மருத்துவக் காப்பீட்டு கம்பெனிகளின் ஏமாற்று வேலைகளிலிருந்து அமெரிக்க மக்க ளைக் காப்பாற்ற கடுமையான நடவடிக்கை கள் தேவை” என்றார். இந்த தெளிவான பதில் இப் பிரச்னையில் சிக்கியிருந்த மக்களை மிக வும் கவர்ந்தது
அதேபோல், “”பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உள்ளனர். நான் பதவிக்கு வந்தால் பின்லேட னைக் கொல்வேன், அல் கொய்தாவை அழிப் பேன், அதுவே நமது நாட்டிற்கான மிகச்சி றந்த பாதுகாப்பு’ எனவும் ஒபாமா கூறினார்
ஆக, இரண்டு வேட்பாளர்களில் திறமை யும் உறுதியும் மிக்கவர் என தனது பேச்சாற் றல், சிந்தனைத் தெளிவு ஆகியவற்றால் மக்கள் மன்றத்தில் நிரூபித்தவர் ஒபாமா. அவரது மனைவி மிச்சல் ஒபாமா ஆகஸ்ட் 26-ம் தேதி நிகழ்த்திய சொற்பொழிவு ஒவ்வோர் இந்திய னும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று: “”எனது அண்ணன், 6 அடி 6 அங்குல உயரமா னவர். என்னை அன்புடன் நேசித்து குழந் தைப்பருவம் முதல் வளர்த்தவர்
19 மாதங்களாக இந்தத் தேர்தலில் என் கண வர் தீவிரமாக ஈடுபட எனக்கும் அவருக்கும் உதவினார். என்னை ஆசீர்வதிக்கும் அன்பும் பாசமுமுடைய அண்ணன் இங்கே என்னு டன் இருக்கின்றார். நான் என் கணவரை நேசிக்கும் ஒரு நல்ல மனைவியாக உங்கள் முன் நின்று, அவர் ஒரு தலைசிறந்த அதிபராக இருப்பார் என உறுதியளிக்கிறேன்
என் தனி உலகத்தின் மையமாக, என் இத யத்தின் இதயமாக இரண்டு மகள்கள் இருக்கி றார்கள். இரவில் படுக்கப்போகும்போதும், காலை கண்விழிக்கும்போதும் எனது எண் ணத்தில் இந்தக் குழந்தைகள் இருப்பதுபோ லத்தான் எல்லா அமெரிக்கத் தாய்மார்களின் குழந்தைகளும் என்பது நமது பாரம்பரியப் பெருமை. அவர்களது எதிர்காலம் இந்தத் தேர்தல் முடிவில் உன்னதமாக வேண்டும்
சிகாகோ நகரின் தென்பகுதியில் வளர்ந்தவள் நான். என் தந்தை ஒரு தொழிலாளி, என் தாய் என்னையும் என் அண்ணனையும் பாதுகாப் பாக அன்புடன் வளர்த்த ஒரு குடும்பத்தாய்
என் தந்தை தனது 30-வது வயது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதை எங்களிடமிருந்து மறைத்துக்கொண்டு அன் பையும் பாசத்தையும் பொழிந்து எங்களை வளர்த்து ஆளாக்கிவிட்டார். எனவேதான், நான் நல்ல தாயாக, மனைவியாக சரியான ஓர் அமெரிக்கப் பெண்மணியாக உங்கள் முன் நிற்கிறேன்”! மேலே கூறிய கருத்துகளை கூர்ந்து கவனி யுங்கள். நல்ல குடும்பம் நல்லவர்களை உரு வாக்கும். நல்லவர்கள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியுடன் இருந்தால்தான் பொதுவாழ் வில் நேர்மையைக் கடைப்பிடிக்க முடியும்
இதனுடன் சேர்த்து திறமையுடன் சட்டக்கல் லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றய ஒரு நபர் தன் நேர்மையான நிர்வாகத்தை அமெரிக்க மக்களுக்கு அளிக்கத் தயாராகி வந் திருப்பதுதான் ஒபாமா பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்
கறுப்பு இனத்தவராக இருந்தாலும் திறமை யானவர் ஒபாமா. தனிமனிதனின் ஆசாபா சங்கள், விருப்பு வெறுப்புகள் அரசின் நடவ டிக்கைகளையும் திட்டங்களையும் அமெரிக் காவில் கட்டுப்படுத்த முடியாது. “”எனதருமை தாயகமே! நீ எப்போது இப்படி ஆவாய்?” எனது உள் மனது ஆதங்கப்படுகிறதே, என் செய்ய?

சாத்தியம்தானா?
 
ஆண்டுகள் 61 கடந்தும், சுதந்திர இந்தியாவில் இன்னும் அடிப் படை சுகாதார வசதியான, கழிப்பறை வசதியைக்கூட நம் மால் கொடுக்க முடியவில்லை என்பது இந்தியா விரைவிலேயே பொருளாதார வல்லரசாக வலம் வரப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு வெறும் கனவாகத்தான் இருக்குமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகி றது
ஐக்கிய நாடுகள் சபையின் “மில்லினியம் வளர்ச்சி இலக்கு’ என்று கி.பி. 2001-ல் புதிய ஆயிரம் ஆண்டின் இலக்குகள் இன்னன்ன என்று உலக நாடுகள் ஒன்றுகூடித் தீர்மானித்தன. அந்த சபதங்களை அடுத்த நூறே ஆண்டுகளில் நிறைவேற்றுவது என்று ஐ.நா. சபை யில் உறுதிபூண்டன. உலகில் வாழும் அத்தனை மனிதர்களுக்கும் குடிக்கத் தண்ணீர், இருக்க இடம், கழிவுநீர் வசதி மற்றும் கழிவறை கள் என்று பல லட்சியங்கள் பட்டியலிடப்பட்டன. அந்த லட்சியங்க ளில் ஒன்றான வீடுதோறும் கழிவறை வசதி என்பது இந்தியாவைப் பொருத்தவரை, அடுத்த ஒரு நூறாண்டு காலத்தில் சாத்தியம்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது
2008 ஜனவரி நிலவரப்படி, இந்தியக் கிராமங்களில் வசிப்பவர்க ளில் சரிபாதியினர்கூட கழிவறை வசதிகள் என்னவென்றே தெரியாத வர்கள். ஐ.நா. சபையின் லட்சியத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடைவது என்றால், நாம் இப்போதுமுதல் ஒரு நிமிடத்துக்கு 78 கழி வறைகள் என்கிற கணக்கில் தொடர்ந்து கழிவறை வசதிகளை ஏற்ப டுத்தியாக வேண்டும்
குடியிருக்க முறையான வீடுகளே இல்லாமல் குடிசைப்பகுதிகளி லும், சாலையோரங்களிலும் வாழ்பவர்களை விட்டுவிடுவோம். பெய ரளவில் மேலே கூரையும், சுற்றுச்சுவரும், வாசற்கதவுமாக வீடுகளில் வசிப்பவர்கள் உள்பட, இந்தியாவில் உள்ள வீடுகளில் கழிவறை வச திகள் இல்லாத வீடுகள் எத்தனை தெரியுமா? 12 கோடியே 20 லட் சத்து 78 ஆயிரத்து 136. இன்னும் மின்சார வசதி இல்லாத வீடுகளின் எண்ணிக்கை 8 கோடியே 47 லட்சத்து 54 ஆயிரத்து 881
மின்வசதியும், கழிவறை வசதியும் மட்டும்தானா இல்லை? இந்தக் குடும்பங்களில் பலர் கழிவுநீரை வெளியேற்றும் வடிகால் வசதிகூட இல்லாமல்தான் வாழ்கின்றனர். மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றின்படி, கழிப்பிட வசதிக் குறைவால் ஏற்படும் தொற்றுநோய் மற்றும் சுகாதாரக் கேடுகள் இந்தியாவுக்கு ஏற் படுத்தும் பாதிப்பு ஆண்டொன்றுக்கு ரூ. 1,200 கோடி. கழிவறைகள் இல்லாததால், சுமார் 60 கோடிப்பேர், திறந்தவெளிகளில் தங்களது இயற்கை அழைப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந் தம் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது
இன்னும் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் இருக்கின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2006-ல் வெளியிட்டிருக் கும் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் உள்ள பள்ளிகளில் வெறும் 37.42 சதவிகிதம் பள்ளிகளில்தான் பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறைகள் இருப்பதாகத் தெரிகிறது. சுமார் 13 மாநிலங்களில் 25 சதவிகிதத்திற்கும் குறைவான பள்ளிக்கூடங்களில்தான் பெண் குழந் தைகளுக்குத் தனி கழிப்பறைகள் காணப்படுகின்றன. சற்று ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால், 2003-ல் 28.24 சதவிகிதம் இருந்த நிலைமை 2006-ல் 37.42 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என் பது
2012 என்கிற இலக்கிற்குள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுக ளிலும் கழிவறை மற்றும் கழிவுநீர் வெளியேற்ற வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பது உண்மை. மத்திய அரசு 60 சதவி கிதம், மாநில அரசு 20 சதவிகிதம் என்கிறவகையில் இதற்காக மானி யம் வழங்கவும் வழிகோலியுள்ளது. இந்தியாவிலுள்ள 578 மாவட்டங் களில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சுமார் ரூ. 13,424 கோடி ஒதுக் கியும் இருக்கிறது. அதனால்மட்டும் இலக்கை எட்டிவிட முடியுமா என்றால் சந்தேகம்தான்
மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் கூறியிருப்ப துபோல, இந்தியாவிலுள்ள அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கழிவறைகள் கட்டுவதற்கும் கழிவுநீர் வடிகால் வசதியை மேம்படுத்தவும் மட்டுமே செலவு செய்வது என்று தீர்மானித்தால் ஒருவேளை இலக்கு 2012-ல் இல்லாவிட்டாலும் 2022-லாவது எட்டுவது சாத்தியம்
நல்லதொரு ஆலோசனை. மக்கள் பிரதிநிதிகள் மனது வைத்தால், உலக நாடுகள் நம்மைப் பார்த்து கண்ணையும் மூக்கையும் பொத்தா மல் இருக்கும்படி செய்ய முடியும்!

அணுவாயுதம்

 ஈரான் செய்துள்ளது உண்மையில் அணுவாயுதத்தையும் விட கொடியதாகி விட்டது. எப்படி?
தி வாய்ஸ்( வெளியீடு 264)ல் ஒரு கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது. ஈரான் கடைசியில் அதைச் செய்தே விட்டது. அது பாரசீக வளைகுடாவில் தன் முதல் அணு ஆயுதம் எதையும் பரிசோதிக்கவில்லை. ஆனால் அதை விடக் கொடுமையான ஒன்றை உலகில் ஏவப் போகின்றனர். அதற்கடுத்த வாரம் ஈரான் எண்ணெய் விற்கும் சந்தையை (Iran Bourse) நிறுவியது. அதன் வரவு செலவுகள் யூரோவில்தான், அமெரிக்க டாலரில் நடைபெறாது. ஒரு முக்கியத்துவமற்ற நிகழ்ச்சியாக நமக்குத் தோன்றும் இது, அமெரிக்க மக்களுக்கு பேரபாயத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சியாகும். உண்மையில் அது நம் கற்பனைக்கு எட்டாத விளைவை உள்ளடக்கியது.

தற்போதைய நிலையில் எண்ணெய் வரவு செலவுகள் அனைத்தும் நியூயார்க், லண்டன் நகரங்களிலுள்ள இரு எக்ஸ்சேன்ஜ் வாயிலாகத்தான் நடைபெறுகின்றன. அவ்விரண்டு எக்ஸ்சேன்ஜ்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானவை என்பது தற்செயலானதல்ல என்பதை நீங்கள் யூகித்திருக்கலாம்.

உலகமெங்கும் ஏற்பட்ட வியாபார மந்த நிலையினாலும், இரண்டாம் உலகப் போரின் விளைவாலும் 1929ம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் பெரும் சரிவையடைந்தது. அந்தப் போரின் போது தம் கூட்டுப் படைகளுக்குத் தேவையான பொருட்களையும் தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி, அதற்கு ஈடாக பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து, தங்கமாகத் தர வற்புறுத்திப் பெற்றுக் கொண்டது.

1945ம் ஆண்டில் உலகத் தங்கத்தின் 80 சதவிகிதம் அமெரிக்கப் பெட்டகத்தில் அடைபட்டது. அதன் விளைவாக எந்த மாற்றுமில்லாமல் டாலர் தாள்களே உலக சேமிப்புக்கான பணமானது. உலகம் முழுதும் தங்கத்தை விட டாலர் கட்டுகளே பாதுகாப்பானது என ஆனது. ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் உருவானது.

அதற்கடுத்து வந்த சில பத்தாண்டுகளில் இனி மற்றொரு நாள் வராது என்ற வேகத்தில் அமெரிக்கா தன் டாலர் தாள்களை அடித்துக் கொண்டே இருந்தது. அமெரிக்கா, அந்த மலையளவு காகிதங்களை, வெளிநாட்டுச் சரக்குகளை பெருமளவில் வாங்கிக் குவிக்கவும், பணக்காரர்களுக்கு வரி விலக்கு அளிக்கவும், அப்போது உலகில் நடந்த போர்களுக்காகவும், வெளி நாட்டிலுள்ள தம் கூலிப்படைகளுக்காகவும், வெளி நாடுகளுக்கு அனுப்பியுள்ள தம் மத போதகர்களுக்கும், அரசியல் வாதிகளுக்குமென வெளிநாடுகளில் வீசி இறைத்து ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி உள்நாட்டு பணவீக்கத்தை அதிகப் படுத்தவில்லை. ஏனெனில் வெறும் தாள்களை அச்சிட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அமெரிக்கா வெளியிலிருந்து இலவசமாகவே பெற்றது. அதற்காக அமெரிக்காவின் இழப்பு தாள் உற்பத்திக்காக ஓரிரண்டு காடுகள்தான்!.

அதற்கடுத்த பத்தாண்டுகளில் உலக நாடுகளின் பெட்டகங்களில் பல அமெரிக்க டாலர்களால் நிரம்பி வழிந்தது. அமெரிக்க டாலர்களுக்காக உலக நாடுகளில் புதுப்புது பெட்டகங்களும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், அமெரிக்கா தன் டாலர் தாள்களை உள் நாட்டை விடவும் கூடுதலாக வெளி நாடுகளிலேயே செலவிட்டது. அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளில் சேமிப்புகளாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பணத்தின் மதிப்பில் 66 சதவிகிதம் எனும் பெரும் பகுதி வெறும் டாலர் தாள்களாகவே சேமிக்கப் பட்டிருந்தது என்பதை அநேகமாக எல்லா வல்லுநர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

1971ம் ஆண்டில் பல நாடுகள் தம் சேமிப்பிலிருந்த டாலர் தாள்களின் சிறு பகுதியை விற்று தங்கமாக மாற்ற விரும்பியது. ஓஹியோ பல்கலை கழகத்திலிருந்து வணிகவியலில் டாக்டர் பட்டம் பெற்ற க்ராஸ்ஸிமிர் பெட்ரோவ் (Dr. Krassimir Petrov) சமீபத்தில் இதைப் பற்றி எழுதும் போது, ‘அமெரிக்க அரசு ஆகஸ்ட் 15, 1971ல், டாலருக்கும் தங்கத்துக்குமான இணைப்பை துண்டிப்பதாகச் சொல்லி தன் நாட்டுக் காகிதங்களை திரும்பப் பெற மறுத்தது. உண்மையில் தன் டாலர் காகிதங்களைப் பெற்று தங்கத்தை தர மறுத்த செயல் அமெரிக்க அரசின் திவாலான நிலைமையை அப்பட்டமாக்கியது’ எனக் குறிப்பிடுகிறார். 1945ல் உருவாக்கப்பட்ட ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் தன்னிச்சையாக குப்பைக்கு எறியப்பட்டது.

டாலரும் அமெரிக்க பொருளாதாரமும் ஒரு வகையில் 1929ன் ஜெர்மனியை ஒத்ததாக இருக்கிறது. மற்ற உலக நாடுகள் டாலர் தாள்களை நம்பவும் அதிலே உறுதி கொள்ளவும் அமெரிக்கா வேறு வழிகளைத் தேடும் நிர்ப்பந்தத்திற்கு இப்போது தள்ளப் பட்டது. அதற்கான விடைதான் எண்ணெய் அதாவது பெட்ரோ டாலர். அமெரிக்கா, பெட்ரோலை டாலரில் மட்டும் விற்க, விஷமத் தனமாக முதலில் சவூதி அரேபியாவையும் பின்னர் OPEC எனப்படும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பையும் இணங்க வைத்தது. அது டாலரின் மதிப்பைக் காப்பாற்ற உதவியது. இப்போது அத்தியாவசியத் தேவையான பெட்ரோலைப் பெற மற்ற நாடுகள் டாலர் தாள்களை திரும்பவும் இருப்பில் வைத்தன. ஆனால் அந்த அவசியமான பெட்ரோலை அமெரிக்காவோ இலவசமாகப் பெறுகிறது. டாலர் தாள்களை மூழ்காமல் காக்க தங்கத்துக்குப் பதில் இப்போது பெட்ரோல்.

1971லிருந்து வெளிநாடுகளில் விநியோகிக்கவும் செலவழிக்கவும் அமெரிக்கா மென்மேலும் டாலர் தாள்களை மலை மலைகளாக உற்பத்தி செய்யத் துவங்கியது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையும் (trade deficit) மளமளவென வளர்ந்தது. வெறும் டாலர் தாள்களை அச்சடித்துக் கொடுத்து உலகின் எல்லாப் பொருட்களையும் அமெரிக்கா விழுங்கியது. மேலும் பல பெட்டகங்களும் உருவாகின.

சில்லின் நுனான் (Cillinn Nunan) என்ற நிபுணர் 2003ல் எழுதியதாவது, ‘உண்மையில் டாலர்தான் உலகின் சேமிப்புப் பணமாக உள்ளது. உலகின் அதிகார பூர்வ சேமிப்பு மாற்றுகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க பணக் கணக்குதான் உபயோகிக்கப் படுகிறது. வெளி நாட்டுப் பண மாற்றத்தில் ஐந்தில் நான்கு பங்கும், உலக ஏற்றுமதிகளில் பாதியும் டாலர்களில்தான் செய்யப் படுகிறது. அது மட்டுமின்றி உலக வங்கியின் கடன்களும் (IMF Loans) டாலர்களில்தான் தரப் படுகிறது.

புலன்ட் கூகே (Dr. Bulent Gukay of Keele University) சமீபத்தில், ‘எண்ணெய் வர்த்தகத்தில் உலக இருப்பின் டாலர்கள் செலவழிக்கப் படுவதால் செயற்கையாக டாலரின் தேவை அதிகமாக்கப் பட்டுள்ளது. இதனால்தான் ஏறக்குறைய ஒரு செலவுமேயில்லாமல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களை அச்சிட்டு அதிகப் படியான இராணுவத் தேவைகளுக்கு உபயோகிக்கவும், நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியில் செலவழிக்கவும் முடிகிறது. எவ்வளவு டாலர் தாள்கள்தான் அச்சிடலாமென்பதற்கு எந்த அளவீடுகளோ கட்டுப்பாடுகளோ அமெரிக்காவுக்கு இல்லை. அமெரிக்காவுக்குச் சமமான போட்டியாளர்கள் யாரும் இல்லாத நிலையில், மற்ற நாடுகள் டாலரின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கும் வரையில் எந்த செலவுமின்றி வெறும் டாலர் தாள்களை அமெரிக்கா அச்சிட்டே வாழ்ந்து கொண்டிருக்கும்’ என எழுதியுள்ளார்.

சமீப காலம் வரை அமெரிக்க டாலர் பாதுகாப்பானதாகத்தான் இருந்தது. எனினும் 1990 முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் வளரத் தொடங்கி மத்திய ஐரோப்பாவையும் கிழக்கு ஐரோப்பாவையும் விழுங்கத் துவங்கியுள்ளது.

அமெரிக்கா ஒரு செலவுமில்லாமல் உலகப் பொருள்களையும் மக்களையும் வாங்கும் பலத்தை பார்த்து, பிரான்சு மற்றும் ஜெர்மானியத் தலைவர்கள் பொறாமைப் படத் துவங்கி விட்டனர். இலவசமாக் கிடைக்கும் அதில் தாமும் ஒரு பகுதியைப் பெற விரும்புகின்றனர்.

அவர்கள் 1999ன் இறுதியில் யூரோ எனும் பண பலத்தை, அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பலத்த எதிர்ப்புகளுக்கிpடையே, குறிப்பாக அமெரிக்க டாலர் பெற்று பிரிட்டன் உண்டாக்கிய எதிர்ப்புக்கிடையிலும் உருவாக்கி விட்டனர். யூரோ இப்போது வெற்றி நடை போடுகிறது.

யூரோ வெளியிடப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள் சதாம் உசேன், OPEC எனும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்று வந்த பெட்ரோல் இனி யூரோவில் மட்டுமே ஈராக்கில் விற்கப்படும் என அறிவித்தார். ஈரான், ரஷ்யா, வெனிசுலா, லிபியா முதலிய நாடுகள் தாங்களும் அவ்வாறே மாற நினைப்பதாக வெளிப்படையாக அறிவிக்கத் துவங்கின – வெள்ளம் அமெரிக்காவின் தலையில் ஓடத் தலைப்பட்டது

செப்டம்பர் 2001ல் ஆகாய விமானங்கள் இரட்டைக் கோபுரத்தினுள் பறந்தன. அமெரிக்க வரலாற்றில் அது சந்திக்கவிருந்த பெரும் பொருளாதாரச் சரிவைத் தடுக்க அமெரிக்கா இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தத் துவங்கியது. (இச்சந்தர்ப்பத்தை அது தானாக உருவாக்கிக் கொண்டதென்று ஒரு சித்தாந்தம் அமெரிக்காவிலேயே உலவிக் கொண்டிருக்கிறது என்பதொரு தனி விடயம்) அமெரிக்க பெட்ரோ டாலரைக் காக்க போர் தயாரிப்புகள் துவங்கின. அதில் முதன் முதலில் பறிக்கப் பட்டது உண்மையுடைய உயிர்தான். மற்ற பெட்ரோல் உற்பத்தி நாடுகள் வேடிக்கைப் பார்த்தன.

ஈராக் 2000ம் ஆண்டில் பெட்ரோலை யூரோவில் விற்கத் துவங்கியது. 2002ல் ஈராக் தன் கருவூலத்திலிருந்த முழு பெட்ரோ டாலர்களையும் யூரோவுக்கு மாற்றி விட்டிருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்க துவங்கியது.

முழு உலகமும் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் வெகு சிலருக்கே அது பெட்ரோ டாலருக்கான போர் எனப் புரிந்திருந்தது. ஈராக்கை மார்ச் 2003ல் ஆக்கிரமித்தவுடன், அமெரிக்கா முதலில் அங்குள்ள எண்ணெய் வளங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது நினைவிருக்கட்டும். ஆகஸ்ட் மாதத்தில் முதல் விற்பனையை மீண்டும் டாலரில்தான் துவங்கியது. ஈராக்கிலிருந்த எல்லா அரச மாளிகைகளும் இலாக்காகளும் குண்டு மழை பொழிந்து தகர்க்கப்பட்டது. பாக்தாதில் தகர்க்கப்படாத ஒரே அரச மாளிகை பெட்ரோல் இலாகா. எத்தனை இலட்சங்களில் மனித உயிர்கள் மலினப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது காவு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் அமெரிக்காவுடைய கவலையில்லை. அமெரிக்கா பெட்ரோ டாலர்களை காப்பாற்ற பெட்ரோல் வர்த்தகம் டாலரில் நடக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்க பொருளாதாரம் மண்ணைக் கவ்வும் – அதன் பின் என்னென்னவோ நடந்து விடும்.

2003ன் தொடக்கத்தில் வெனிசுலா அதிபர் ஹியூகோ சவாஸ் அந்நாட்டின் பாதி பெட்ரோலை யூரோவில் விற்பதாக (முன்னமே பாதியை அமெரிக்கா டாலரில் வாங்கி விட்டது) வெளிப்படையாக அறிவித்தார். 2003 ஏப்ரல் 12ல் அமெரிக்க உதவியிலுள்ள சில வியாபாரத் தலைமைகளும், சில தளபதிகளும் சேர்ந்து சவாஸைக் கடத்தி, புரட்சி செய்து நாட்டைப் பிடிக்க முயன்றனர். மக்களே அதற்கெதிராக களமிறங்கவும் இராணுவமே அந்தப் புரட்சியை முறியடித்து தோல்வியடையச் செய்தது. உண்மையில் அமெரிக்காவின் முகத்தில் கரி படிந்தது.

நவம்பர் 2000ல் ஒரு யூரோவின் மதிப்பு 0.82 டாலர்தான். இதுதான் யூரோவின் ஆகக் குறைந்த மதிப்பு. மேலும் சரிவை நோக்கித்தான் இருந்தது.
ஆனால் ஈராக் யூரோவில் பெட்ரோல் விற்கத் தொடங்கியதும் அதன் சரிவு நின்றது.
ஏப்ரல் 2002ல் OPECன் மேல் மட்ட பிரதிநிதிகள் யூரோவில் பெட்ரோல் விற்கும் யோசனையைப் பற்றிப் பேசத் துவங்கியவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
ஜூன் 2003ல் ஈராக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் திரும்ப டாலருக்கு ஈராக்கிய பெட்ரோல் விற்பனையைப் பற்றி பேசத் துவங்கியதும் டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு குறைந்தது.
ஆகஸ்ட் 2003ல் ஈரான் சில ஐரோப்பிய நாடுகளுக்கு யூரோவில் பெட்ரோல் விற்ற போது யூரோவின் மதிப்பில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் உண்டானது.
2003-04 OPEC நாடுகளின் தலைவர்களும் ரஷிய தலைமையும்; எண்ணெயையும் எரிவாயுவையும் யூரோவில் விற்பதைப் பற்றி உளப்பூர்வமாக பேசத் துவங்கியதும் யூரோவின் மதிப்பு உயர்ந்தது.
2004ன் OPEC மாநாட்டில் எண்ணெய் விற்பனையை யூரோவில் மாற்றுவதைப் பற்றி எந்த முடிவுமெடுக்காமல் கலைந்தது – ஆம் அப்போதும் யூரோவின் மதிப்பு தாழ்ந்தது.
இலண்டனிலும் நியூயார்க்கிலும் உள்ளதைப் போன்ற எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Bourse) தனது நாட்டிலும் நிறுவப் போவதாக ஜூன் 2004ல் ஈரான் அறிவித்தவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
கடைசியில் யூரோவின் மதிப்பு 1.27 அமெரிக்க டாலர்களில் உயர்ந்து நிற்கிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பை வெகு தூரம் தாழ்த்த, கடந்த மாதங்களில் இந்நிகழ்வுகள் வெகு தூரம் வந்து விட்டது. மே 5ம் நாள் ஈரான் தன் நாட்டில் சொந்த எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Oil Bourse) பதிவு செய்து விட்டது. இலண்டனையும் நியூயார்க்கையும் விட்டு விட்டு வேறொரு நாட்டில் எண்ணெய் விற்பனையைச் செய்வதோடல்லாமல் உண்மையில் உலக நாடுகள் விற்கவும் வாங்கவுமான ஒரு எண்ணெய் விற்பனை சந்தையை அமைத்து விட்டது.

சவாஸின் சமீபத்திய இலண்டன் வருகையில் அவர் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையை ஆதரிக்கப் போவதாகவும் யூரோவில் எண்ணெய் விற்கப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள ஆயுத தடையைப் பற்றி இலண்டனில் கேட்கப் பட்ட போது சவாஸ், ‘அமெரிக்கா வெறும் காகிதப்புலிதான்’ என முன்னறிவிப்பாக பதிலிறுத்தார்.

தற்போதைய உலக எண்ணெய் வளத்தின் பெரும்பகுதி NYMEX (New York Mercantile Exchange) அல்லது IPE (International Peroleum Exchange at London)ஆகிய இரு இடங்களிலிருந்துதான் விற்கப் படுகிறது. இவையிரண்டும் அமெரிக்கர்களின் நிறுவனங்கள். அவை எண்ணெயை டாலரில்தான் வாங்கவோ விற்கவோ செய்கிறது. ஈரானிய எண்ணெய் விற்பனையின் வெற்றி ஈரானிய எண்ணெயின் 70 விழுக்காட்டை வாங்கும் ஐரோப்பியர்களை உணர்வு பெறச் செய்துள்ளது. தமது எண்ணெய் உற்பத்தியின் 66 விழுக்காட்டை ஐரோப்பாவுக்கு விற்கும் ரஷ்யாவையும் அது உணர்வு பெறச் செய்துள்ளது. அமெரிக்காவுக்கு மேலும் பாதகமாக இந்தியாவும் சீனாவும் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையிலிருந்து எண்ணெய் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இப்போதும் அதே Weapons of Mass Destruction என்றோ அல்லது அணுகுண்டு தயாரிப்பு என்றோ சொல்லிக் கொண்டு ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த எண்ணெய் சந்தை அழிக்கப்படாது என்று யாராவது ஒருவர் நம்புவீர்களா?

மேலும் புஷ்ஷூக்கு வீழ்ச்சி. உணர்வு பெற்ற ஐரோப்பா, சீனா, இந்தியா, ஜப்பான் முதலிய நாடுகளும் மேற்குறிப்பிடப்பட்ட மற்ற நாடுகளும் எண்ணெயை வாங்கவும் விற்கவும் யூரோவைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்நாடுகள் யூரோவை சேமிக்கத் துவங்கும். தம்மிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களை விற்கத் துவங்கும். கடனில் வீழ்ந்துள்ள டாலரை விட யூரோ நிலையாகவே உள்ளது. உலக வங்கியும் (IMF) அமெரிக்கா பொருளாதார பிரச்னைகளையும் வர்த்தகப் பற்றாக்குறையையும் பற்றி சமீபத்தில் அறிவித்து விட்டதால் கழுத்து நெறிபடும் அமெரிக்காவுக்கு வேறு போக்கிடமில்லை.

தற்போது உலக நாடுகளின் முன்னுள்ள மிகப்பெரிய கவலை, ‘அமெரிக்க டாலர் கடுமையாக வீழ்ச்சி அடைவதற்குள் தம் கருவூலத்திலுள்ள டாலர்களை எப்படி மாற்றுவது?’ என்பதுதான். ஆண்டாண்டு காலமாக எத்தனையோ உலக நாடுகளை டாலரில் திணித்து வைத்துள்ள அமெரிக்காவிடமே அதைத் திருப்பித் தர வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கின்றன பல நாடுகள். ஆனால் உலகிலுள்ள டாலர்களில் வெறும் 5 விழுக்காட்டைக் கூட அமெரிக்காவால் ஏற்க முடியாது. அமெரிக்கா தன் பொருளாதாரத்தை நாசப்படுத்திக் கொள்வதோடு உலக நாடுகளில் பலவற்றின் பொருளாதாரத்தையும் கூடவே நாசப்படுத்தி விடும். அதிலும் குறிப்பாக பிரிட்டன் கடுமையாக நாசமாகும்.

Scottish Socialist Voice என்ற ஏட்டின் ஒரு கட்டுரை குறிப்படுவது போல, அமெரிக்கா பிழைக்க வேண்டுமானால், அந்நாடு வர்த்தகத்தில் ஒரு பெரும் புரட்சி செய்து, அதிக வர்த்தக நிலைமைக்கு (trade surplus) வர வேண்டும். அந்நாட்டினரால் இது முடியவே முடியாது. ஏனெனில் அதைச் செய்ய அமெரிக்கர்களை அந்நாடு அடிமைகளைப் போல வேலை வாங்க வேண்டும். அவ்வேலைக்கு சீனர்களையும் இந்தியர்களையும் விட குறைவாக சம்பளம் தர வேண்டும். நாமனைவரும் அறிந்ததைப் போலவே, இது அங்கு நடப்பதற்கு சாத்தியமே இல்லை.

இப்போது அமெரிக்காவில் என்னவாகும்? கண்டிப்பாக பெரும் குழப்பங்கள்தான் உண்டாகும். ஒரு வேளை ஏதும் தொழிலாளர் புரட்சி, தற்போதைய நிலைமையில் 1929க்குப்பின் ஜெர்மனியில் நடந்தது திரும்பலாம். தீவிர வலது சாரிச் சிந்தனைகள் தோன்றலாம்… …

இந்த அமெரிக்காவுடனான மற்ற நாடுகளின் பொருளாதார நாசத்தை ஐரோப்பிய, சீன, ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தால் ஓரளவு தடுத்து நிறுத்த இயலுமா? இந்நாடுகளின் கருவூலங்களும் கழுத்து வரை அமெரிக்க டாலரால்தான் நிரம்பியுள்ளது.

1945 முதல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களால் செய்து வந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு பகரமாக ஏதாவதொரு வழியைக் கண்டு பிடித்தேயாக வேண்டும். ஒவ்வொரு நாட்டுக் கருவூலத்திலும் குவித்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டாலர் தாள்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஈரானில் அமெரிக்கா குண்டு போட்டால் அது பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஈராக்கிலுள்ள ஷியா மக்களின் பக்க பலத்தோடு ஈரான் வெளிப்படையாக ஈராக்கோடு போர் தொடுக்கும். ஈராக்கில் தற்போது மிகச் சிலரால் உண்டாகும் உள்நாட்டு கிளர்ச்சியையே தடுத்து நிறுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த சுன்னி ஷியா மக்களுக்கிடையே பெரும் வெறுப்பை உண்டாக்கி, அதை ஊதி விட்டு மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் உள் நாட்டுப் போரை உருவாக்கி விடக் கூடும்.

ஆனால் இது உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக ஆபத்தான பின்னடைவை ஏற்படுத்தி விடும். இந்த ஈரானிய சந்தை சிறிது காலமே தனித்து இயங்கும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அதன் பின் யூரோவில் எண்ணெய் விற்க சந்தைகள் வேறிடங்களிலும் (குறிப்பாக புரூஸ்ஸல்) துவக்கப்பட்டு விடும்.

ஒரு தீர்வு என்னவென்றால், டாலரை அழித்து விட்டு அமெரிக்காவின் புழக்கத்துக்காக புதுப் பணத்தை அது அறிமுகப் படுத்தலாம். இதன் மூலம் மற்ற நாடுகளிலுள்ள 66 விழுக்காட்டு டாலர் தாள்களை ஒரேயடியாக பயனற்றதாக்கலாம். என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?. இது போன்ற அடாவடியான, ஆபத்தை பொருட்படுத்தாத சிந்தனைகள்தாம் வெள்ளை மாளிகை, வால் ஸ்ட்ரீட், பென்டகனிலுள்ள சிலரது தலைகளில் தற்போது நீந்துவதாகத் தெரிகிறது.

அல்லது 1938ல் போலந்து நாட்டுக்குள் நுழைய ஜெர்மனி செய்ததைப் போல எதையாவது செய்ய வேண்டும். அதாவது போலந்து நாட்டினர் ஜெர்மனிக்குள் படை நடத்தி வந்து விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை படம் பிடித்து நாஜிகள் மக்களிடம் காட்டி உள்நாட்டிலுள்ள மக்களின் எண்ணங்களையும் இதயங்களையும் வென்றெடுத்தனர். எனினும் அமெரிக்கா இந்த முறையில் வெற்றி பெறுவதென்பது தற்போதைய நிலையில் மிகக் கடினமானதே. ஆக, அமெரிக்கா எப்படித்தான் தப்பும்? உலக அரங்கில் அமெரிக்காவின் உயர்வு அதன் ஆயுத பலம்தான். என்னென்ன கொடுமைகளை இன்னும் உலகம் சந்திக்கவிருக்கின்றதோ யார் கண்டது?. ஒரு புது உலகப் போர் மூலம் அமெரிக்கா தன் சார்பு நாடுகளை ஒழுங்கு படுத்தி அதன் கருவூலங்களில் டாலர்களை வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தப் போகிறதோ என்னவோ?

இனி வரப் போகிற ஆபத்து முதலாளித் துவத்துக்கும் (டாலர்) ஏகாதிபத்தியத்துக்கும்தான். கலாச்சார மாற்றங்களோ, இஸ்லாமோ, axis of evil நாடுகளோ, அமெரிக்கா சொல்லும் பேரழிவு ஆயுதங்களோ ஆபத்தானவைகளல்ல. அமெரிக்கா இதுவரை கடை பிடித்து வந்த அந்நாட்டின் கொள்கைகளும் செயல்முறைகளும்தான் அடிப்படையில் தவறானவை, ஆபத்தானவை.

ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள கிஷ் தீவின் free trade zoneல் தனது புதிய எண்ணெய் விற்பனை சந்தையை (Iranian Oil Bourse) அமைத்துள்ளது. கணிணியும் மென்பொருட்களும் நிறுவப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடந்த மார்ச் மாதமே IOB தனது பணியைத் துவங்கி இருக்க வேண்டும் ஆனால் சில அழுத்தங்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கும் என்பது சொல்லித்தான் அறிய முடியுமா என்ன?. மே 5ந்தேதி IOB பதிவு செய்யப்பட்டு விட்டது. சந்தை துவங்கும் நாள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் மாபியா கும்பல்களின் ஊடுருவலும் உலக நாடுகளின் அழுத்தமும் … … காரணம் என சிலரால் சொல்லப் படுகிறது,

2007ல் எண்ணெய் 60 டாலர்களுக்கு கொள்வரவு செய்யப்பட்டது. டாலரின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைவதை அனைவரும் அறிவோம். தனது NYMEX, IPE மூலம் வெறும் யூகங்களை (speculation) முன்னிறுத்தி எண்ணெயின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. 60 டாலர்களுக்கு விற்ற எண்ணெயை 140 டாலருக்கு விற்றால் டாலரின் தேவை 230விழுக்காடுகள் அதிகரிக்கும்.

OPEC கூட சமீபத்தில் எண்ணெய் விலையேற்றத்திற்கு 60சத காரணம் வெறும் யூகங்களைக் கொண்டு செய்யும் முன் வியாபாரம்தான் (Future Trade) எனக் கூறியுள்ளது.

முடிவாகச் சொல்வதென்றால் அமெரிக்கா தனது டாலரை அழிவிலிருந்து காக்க, உலகில் டாலருடைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்திக் கொள்ள எந்த நாட்டையும் அழிக்கத் தயங்காது.


ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…
  
கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பைப் பெற் றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளிவி வரமாக முடிந்துவிடுமா அல்லது அமெரிக் காவுக்கும் உலகுக்கும்கூட தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா? பராக் ஒபாமாவினுடைய தேர்தல் வெற் றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்திரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடி மைத்தனம், பாரபட்சம், இனத்தைத் “தூய் மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வரலாற்றின் பின்னணியில் பார்த் தால் ஒபாமாவின் வெற்றி சிறப்புமிக்கது தான்
அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமு றைக்கு முன்னர்தான். இன்றும்கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அள வில் அமெரிக்காவில்தான் அதிகம் (23 லட் சம்). அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர் கள்
ஆனால், ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்க்கத்தின் ஆசைகள், விழைவுகள் ஆகியவற்றின் பிரதிப லிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மைய மாகக் கொண்ட அமெரிக்க அரசியல் அமைப்பு பெருமளவிற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருள் உதவியைச் சார்ந்த அரசியல் அமைப்பு என்பது உலகறிந்த ரகசி யம். இந்தப் பின்னணியில் மத்தியதர வர்க்கத் தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக் கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவால் களைவிடக் கடுமையானவை. அவரே அவ ரது பிரசாரத்தின்போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜனநாய கக் கட்சி வேட்பாளரை அமர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது
“”உலகமயமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதேவேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெ ரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது”. இவை அயோவா மாநி லத்தில் பிரசாரத்தின்போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்
ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடைய முடியாமல் பல ஆண்டுகளா கத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத் தின் இந்த யதார்த்தத்தை ஒபாமா நன் றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந் தித்திருக்கிறார்: “”முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தர கர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை
மக்கள் எதைக் கேட்க விரும்புகின் றார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்துகொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந் தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” என்றார் ஒபாமா
இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஒபாமாவால் முன்னேற் றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக எவ்வளவு தூரம் செயல்பட முடியும்? அப்படிச் செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக் குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட பொரு ளாதார அமைப்பில் “கார்ப்ப ரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட வேண்டாம், புறக்கணித்து விட்டு – செயல்படுவது சாத்தி யமா? சாத்தியமில்லை என்றால், “கை நழுவிப் போன கனவை’ மீட் டெடுப்பது எப்படி? இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிரசாரத்தைத் தொடங்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது. இன்று பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப் போதும் கனன்று கொண்டிருக்கிறது
ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண் டித்துப் பேசி வந்தார். “இந்த யுத்தத்தை முத லில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்’ என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந் தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது
“தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் விலக்கிக் கொள் ளப்படும்’ என்று சொல்லும் அவர் அதே மூச் சில், “எனினும் பயங்கரவாதத்திற்கு எதிரான பாசறைகள்’ அங்கே தொடர்ந்து நீடிக்கும் என்றும் சொல்கிறார். அதைவிடத் திடுக்கிட வைக்கும் விஷயம் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் யுத்தத்தை அதிகரிப்பேன்
அவை “பயங்கரவாதத்திற்கு எதிரான மைய மான புள்ளியாக’ விளங்கும் என்கிறார். இவற் றைக் கொண்டு பார்க்கும்போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புகளை அதாவது குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவார். ஆனால் அவை வெறும் அடையாள அறிவிப்புகளா கவே இருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். உல கில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண் டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது
ஒபாமா தனது ஆரம்ப நாள்களின் அடை யாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதா ரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார்
வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சிக ளில் ஆர்வம் காட்டுவார். வசதி படைத்தவர்க ளுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கும் மருத்துவக் காப் பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்க லாம்
ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற் புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்க வில்லை. அடி ஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் அரசியல் அற்புதங்கள் நிகழ்த்த இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப்போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சமன்பாட்டைக் காணுவதி லேயே தனது ஆற்றல்களைச் செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்
(கட்டுரையாளர்: தினமணி முன்னாள் ஆசிரியர்)இன்று அமெரிக்கப்பொருளாதாரம்இருக்கும்
ஒபாமாவால்முன்னேற்றத்திற்குக்குறுக்கே நிற்கும்வணிக நிறுவனத்தரகர்களுக்கு எதிராக
எவ்வளவு தூரம்செயல்பட முடியும்?அப்படிச் செயல்படஆரம்பித்தால்அவரால் எத்தனை
நாளைக்குத் தாக்குப்பிடிக்க முடியும்?
புதிய அதிபராக பராக் ஒபாமா தேர்வு
இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் வளமான வாய்ப்பு
நீனா மேத்தா &ராஜேஷ் உன்னிகிருஷ்ணன்
மும்பை
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் அந்நாட்டின் புதிய அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். அவரது வெற்றி அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் புதிய ஆட்சி மலர உள்ளதையடுத்து, பல்வேறு துறைகளிலும் புதிய கொள்கைகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அந்நாட்டின் மருந்து துறையில் புதிதாக பல விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இதனால் பொதுப் பண்பு அடிப்படையிலான மருந்து பொருள்களின் விற்பனை அங்கு சூடு பிடிக்கும் என்றும், இது இந்திய மருந்து நிறுவனங்களுக்கு அந்நாட்டில் வளமான வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இத்துறையைச் சேர்ந்தவர்கள் தொவித்தனர்.
மருத்துவ செலவு
சர்வதேச அளவில் பல்வேறு வர்த்தக துறைகளுக்கும் அமெரிக்காவே மிகப் பெரிய சந்தையாக உள்ளது. குறிப்பாக அந்நாட்டின் மருந்து சந்தை மதிப்பு ஆண்டுதோறும் வியத்தகு அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் உடல் நலனுக்காக பொதுமக்கள் செலவிடும் தொகை அதிகரித்த நிலையில் உள்ளது. கடந்த 1980&ஆம் ஆண்டில் அந்நாட்டு மக்களின் மருத்துவ செலவு 25,300 கோடி டாலராக (சுமார் ரூ.12,14,400 கோடி) இருந்தது. இது 1990&ஆம் ஆண்டில் 71,400 கோடி டாலராக (சுமார் ரூ.34,27,200 கோடி) உயர்ந்து, சென்ற 2006&ஆம் ஆண்டில் 2 லட்சம் கோடி டாலராக (சுமார் ரூ.96 லட்சம் கோடி) விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகரித்துள்ளது. பொதுப் பண்பு அடிப்படையிலான மருந்து பொருள்களை அமெரிக்காவிற்கு அதிகம் வழங்கும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும்.
இது குறித்து பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குனர் சுஜய் ஷெட்டி கூறும்போது, Òபுதிய அதிபர் பொறுப்பேற்க உள்ளதையடுத்து அமெரிக்காவின் சுகாதாரத் துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அனைத்து தரப்பினருக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவை என்ற நிலை உருவாக வேண்டும். இதனையடுத்து அரசு நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் சுகாதார திட்டங்களில் பொதுப் பண்பு அடிப்படையிலான மருந்து பொருள்களின் பயன்பாடு அதிகரிக்கும். இது இந்தியாவில் இவ்வகை மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக அமையும்சீ என்று தெரிவித்தார்.
இந்தியாவின் பங்களிப்பு
அவர் மேலும் கூறும்போது, Òஉலகில் இவ்வகை மருந்துகளின் மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு ஐந்தில் ஒரு பங்காக உள்ளது. இத்துறையினர் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தி பிரிவுகளை 100&க்கும் அதிகமான அளவில் கொண்டுள்ளனர். எனினும் சர்வதேச நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலையால், குறைந்த கால அடிப்படையில் மருந்து பொருள்களின் விலை சற்று உயர்ந்த அளவில்தான் இருக்கும்சீ என்று குறிப்பிட்டார்
 
ஆளுக்கேற்ற வேடம்!
 
உலகச் சந்தையில் பெட்ரோலிய எரிபொருளின் விலை ஒரு பேரல் 147 டாலர் வரை உயர்ந்து, இப்போது 50 டாலர் எனக் குறைந்துள்ளது. விலை உயர்ந்தபோது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்திய மத்திய அரசு, இப் போது உலகச் சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என் பது மக்களின் எதிர்பார்ப்பு
இதை எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்குப் பதில் அளிக்கும் விதமாக பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா, “ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி அறிவிக்கப்படும்’ என்று சொல்கிறார். ஆனால், விமானங்களுக்கான பெட்ரோல் விலை மட் டும் குறைந்துகொண்டே வருகிறது
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ. 71,000 வரை இருந்தது. இப்போது ரூ. 39,500 ஆக குறைந்துவிட் டது. இதுபோதாதென்று, விமானங்கள் 750 கிமீ வரை பறக்கும் தூரத் துக்கான உபரி வரியை ரூ. 2,750-லிருந்து ரூ. 400 என குறைத்துவிட் டார்கள்
இதற்கெல்லாம் காரணம், விமான நிறுவனங்கள் தங்களுக்கு லாபமே இல்லை என்று புலம்புவதும், அதை நியாயப்படுத்தும் வகை யில் ஆள்குறைப்பு மற்றும் விமான சேவைகள் குறைப்புக்கு மாறுவ தும்தான். மேலும், இவர்கள் ஆட்சியாளர்களுக்கு மிக மிக நெருக்கமா னவர்கள். அளவுக்கு அதிகமாக உள்நாட்டு விமானங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதே இதற்குச் சான்று
இந்திய விமான நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது 2007-2008 நிதி யாண்டு கணக்கெடுப்பின்படி, இந்திய வானில் விமானங்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைக்காட்டிலும் 33 சதவீதம் அதிகம். எந்தக் கணிப்பும் இல்லாமல் உரிமங்களை அள்ளி வழங்கியி ருப்பதால் விமான எரிபொருள் வீணாகிக்கொண்டிருக்கிறது. எப்படி? 6 பெருநகர் விமான நிலையங்களில் நாளொன்றுக்கு தரை-இறங்கி, வான்-எழும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 1748. விமா னங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓடுதளம் இல்லாததால், ஒவ் வொரு விமானமும் 20 நிமிடம் தாமதப்படுத்தப்படுகிறது. தரையிறங் கும் விமானங்கள் அனுமதி கிடைக்கும்வரை வானிலேயே வட்டமிடு வதால் கணிசமான அளவு பெட்ரோல் வீணடிக்கப்படுகிறது
விமான எரிபொருள் விலையைக் குறைத்துவிட்டு விமானக் கட்ட ணங்களைக் குறைக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள் ளது. ஆனால், இந்த “விலை குறைப்பு தாற்காலிகமானது; இப்போது ஒரு பயணிக்கு ரூ. 100 கட்டணக் குறைப்பு செய்தாலும் விமான நிறு வனங்கள் ஆண்டுக்கு ரூ. 120 கோடி இழப்பைச் சந்திக்க வேண்டியி ருக்கும்’ என்று கண்ணீர் சிந்துகின்றன விமான நிறுவனங்கள்
விமானத்தில் பயணம் செய்வோர் ஏழைகள் அல்லர். அவர்கள் வச திபடைத்தவர்கள் அல்லது நிறைய சம்பாதிப்பவர்கள். அலுவலகத் தின் பொருட்டு பயணம் செய்வோர் என்றால், அவர்தம் கட்டணங் களை அவரவர் அலுவலகமே ஏற்கிறது. ஆனாலும் அவர்களது குரல் அரசின் கவனத்தை ஈர்க்கிறது
சாதாரண மக்களும், நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் தங்கள் குடும்பச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு, தங்கள் இருசக்கர வாகனங்களின் பெட்ரோலுக்காக கூடுதல் பணத்தைச் செலவழித் துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விலை குறைப்பைக் கேட்டால் அதைப்பற்றி மத்திய அரசு கவலைப்படுவதில்லை
நியாயமாகப் பார்த்தால், விமானங்களுக்கு பெட்ரோல் விலை குறைப்பு, வரிச்சலுகை அளிப்பதைக் காட்டிலும் பயணியர் பேருந்து களுக்கு இத்தகைய சலுகைகள் அளித்து ஊக்கப்படுத்தினால், கூடுத லாக பேருந்துகளை இயக்கவும், பேருந்துக் கட்டணங்கள் உயராமல் பார்த்துக்கொள்ளவும் முடியும். இரு சக்கர வாகனம் வைத்திருப்போ ரும்கூட பயணியர் பேருந்தைப் பயன்படுத்தும் சூழல் உருவாகி, மக் கள் பயன் பெறுவதுடன், எரிபொருள் சிக்கனமும் ஏற்படும்
ஆனால்… மிகஉயர் வருவாய்ப் பிரிவினர் தும்மினாலும் தானே ஓடிப்போய் கைக்குட்டையை நீட்டுகின்ற அரசு, சாதாரண மக்கள் விழுந்து காயம் பட்டாலும், “சின்ன அடிதான், பொறுத்துக்கணும், இதுக்குப்போய் அழலாமா’ என்று நியாயம் பேசுகிறது. 
 
 
 
 
 
 
 

மும்பையில் நிகழ்ந்திருக்கும் தாக்குதல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு நாளுக்கு நாள் எத்தனை சீர்கெட்டுப் போகிறது என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

பொடா, தடா சட்டங்களைப் போன்ற கெட்டிப்பட்ட சட்டங்களைத் திரும்பக் கொண்டுவரும்படி இப்போதும் அரசியல்வாதிகள் கூச்சலிடுகிறார்கள். ஒரே பாட்டு. ஒரே பல்லவி. ஒரே ராகம். ஒரே தாளம்.

ஒரு தீவிரவாதச் செயலை நடக்கவிடாமல் தடுக்க என்ன செய்யவேண்டும்? அதற்கு யாரும் எந்த உபயோகமான யோசனைகளையும் தெரிவிப்பதில்லை. உளவுத்துறை என்ன செய்கிறது என்று ஒருவார்த்தை கேட்பதில்லை. உளவுத்துறையின் வேலை என்னவென்பதே பலருக்குச் சரிவரத் தெரிவதில்லை. வெற்றுக்கூச்சல்கள், இந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கி வெடிப்புச் சத்தங்களைக் காட்டிலும் நாராசமாக இருக்கிறது.

கடந்த பெங்களூரு, அஹமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போதும் டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்தின்போதும் முன்னதாக ஜெய்ப்பூர் சம்பவத்தின்போதும் இந்தியன் முஜாஹிதீன் குறித்துச் சில செய்திகள் வந்தன. இப்போது டெக்கன் முஜாஹிதீன் என்று இன்னொரு பெயர். இதெல்லாமும் அவர்களே மின்னஞ்சல் அனுப்பி, தங்களைப் பற்றித் தெரிவித்துக்கொள்வதால் கிடைக்கும் பெயர்களே தவிர, நம்மவர்கள் தேடிக் கண்டுபிடிப்பவையல்ல.

டிசம்பர் 13, 2001ல் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து இன்றுவரை இதுதான் நிலைமை. முஹம்மது அஃப்சல் மாதிரி யாராவது முன்னாள் போராளி கிடைத்தால் பிடித்துப் போட்டு, கேசை முடித்துவிடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, உருப்படியாக ஒன்றுமில்லை.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான உளவுப்பணிகளை கவனிக்கும் அமைப்பான ஐ.பி. என்கிற இண்டலிஜென்ஸ் ப்யூரோவின் அதிகாரிகள் அனைவருக்கும் அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக வேலை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது போலிருக்கிறது. சில மாதங்கள் முன்பு தலைநகரில் நடைபெற்ற குதிரை பேரத் திருவிழாவின் சமயம் இவர்களுக்கெல்லாம் இரவு பகல் பாராத டியூட்டி இருந்தது நினைவுக்கு வருகிறது.

செய்யட்டும், தப்பில்லை. தேசப் பாதுகாப்புக்காகவும் கொஞ்சம் வேலை பார்க்கலாம். அதுவும் தப்பில்லை.

ஐ.பியின் பணிகள் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டவை. ஹாம் ரேடியோ என்று அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணிப்பது இவர்களின் மிக முக்கியமான பணி. குறிப்பாக எல்லைப்புற மாகாணங்களில் இந்த ரேடியோ அலைவரிசைக் கண்காணிப்பு எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும்.

அடுத்தபடியாக புதிதாக உள்நாட்டில் யார் எங்கே பதவியேற்றாலும் அவர்களுக்கான செக்யூரிடி க்ளியரன்ஸ் வழங்குவதும் ஐ.பியின் பணிதான். பதவிக்கு வருபவரின் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வதில் தொடங்கி, அவரது பின்னணி, முன்னணி விவரங்கள், ஆதரவாளர்கள், எதிரிகள் பற்றிய விவரங்கள், அவர் எத்தனை பர்செண்ட் அபாயகரமானவர், அல்லது நம்பக்கூடியவர், கட்சிமாறியா, கேப்மாரியா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து, அன்னார் பதவியேற்பதற்கு உரிய சூழல்தானா, தாக்குப்பிடிப்பாரா, என்ன ஆவார், ஏது ஆவார் என்றெல்லாம் ரிப்போர்ட் எழுதுவார்கள். ஒன்றும் பிரச்னையில்லை, பதவி ஏற்கலாம் என்று ஐ.பி. சொன்னால்தான் காரியம் நடக்கும். அமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என்று இந்தக் கண்காணிப்பு வட்டத்துக்குள் வருபவர்கள் ஆயிரக்கணக்கானோர்.

அடுத்த பணி, தாம் பேசுவது தெரியாமல் மீடியாவுடன் பேசுவது. இன்ன தகவல் போய்ச் சேரவேண்டும் மக்களுக்கு என்று மத்திய அரசு சொல்லும் தகவல்களை உரிய முறையில் மீடியா வழியே மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஐ.பி.தான். சிக்கல் மிகுந்த, கலவரம் நிறைந்த தருணங்களில் வெளிப்படையாகவும் பேசுவார்கள்.

இதெல்லாம் தவிர ஒரு நாளைக்குச் சுமார் ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் கடிதங்களை உடைத்துப் படித்துப் பார்ப்பதும் இவர்களுடைய முக்கியப் பணிகளுள் ஒன்று. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதல்ல. தேசம் முழுதும் அனைத்து மாநிலங்களிலும் உண்டு. இதன் தொடர்ச்சிதான் டெலிபோன் ஒட்டுக்கேட்பு வைபவங்களும். அதற்கெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் திரட்டும் தகவல்களைத் தொகுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த தெளிவான அறிக்கைகள் தயாரிப்பது, அதை உள்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வைப்பது என்பதுதான் ஐ.பிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி. இந்திய – சீன யுத்தத்துக்குப் பிறகு RAW என்று வெளிநாட்டுப் புலனாய்வு ஏஜென்சி தனியே பிரிக்கப்பட்டபின் ஐ.பிக்கு இருக்கும் பணி இதுதான்.

மாநில போலீஸ், பிராந்திய ராணுவ முகாம்களுடன் ரெகுலரான தொடர்பு வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிலவரங்களை ஆராய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, மாநில போலீசுடன் எப்போதும் சுமூக உறவு பேணுவது, சந்தேக கேஸ்களைத் தொடர்ந்து கண்காணிப்பது, இயக்கங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், ரகசியக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்களை கவனிப்பது, கூடப்போய் பேச்சுக்கொடுத்து உண்மையறிவது என்று பல ஜோலிகள் இவர்களுக்கு உண்டு.

நமது கெட்ட நேரம், உள்நாட்டில் குழப்பம் விளைவிக்கும் பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் வெளிநாட்டு இயக்கங்களாகவோ, அவர்களது பினாமிகளாகவோ இருப்பதனால் ஐ.பி., ‘ரா’வுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றவேண்டியது அவசியமாகிறது.

இன்றைய தேதியில் ‘ரா’ எனப்படும் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்கின் தலைபோகிற வேலை என்பது காஷ்மீர் இயக்கங்களைக் கண்காணிப்பதுதான். அதாவது பாகிஸ்தானை கவனிப்பது. எப்போதெல்லாம் குட்டை குழப்ப விருப்பமோ, அப்போதெல்லாம் இலங்கை. போரடித்தால் அருணாசல பிரதேசத்துப் பக்கம் கொஞ்சம் சீனாவை முன்வைத்து வேலை பார்ப்பார்கள். அப்புறம் பங்களாதேஷைக் கவனிப்பது. அவர்களுக்கு வேறு பெரிய ஜோலி கிடையாது.

ஆனால் இதற்கே மூக்கால் அழுதுகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய தகவல் சேகரிப்பது, பின் தொடர்வது, சுற்றி வளைப்பது போன்ற காரியங்களை ‘ரா’வின் ஒத்துழைப்பில்லாமல் ஐ.பியால் செய்துவிட முடியாது. ஏனெனில் இங்கு நிகழ்த்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் உள்ளூரில் தீர்மானிக்கப்படுவதே இல்லை. பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் சிந்தனையில் உதிக்கிற திட்டங்கள் இவை. சில சமயம் பங்களாதேஷ் உளவு அமைப்பான டி.ஜி.எஃப்.ஐ [Directorate General of Forces Intelligence] தீர்மானிக்கும். பங்களாதேஷை நாம் நமது தோழமை தேசம் என்று சொல்லிவந்தாலும் டிஜிஎஃப்ஐயைப் பொறுத்தவரை அவர்கள் அல் காயிதாவின் தோழர்களாகவே பல சமயம் செயல்பட்டு வருபவர்கள். பங்களாதேஷில் அதன் உளவுத்துறை தனியொரு அரசாங்கமே நடத்திக்கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இயங்கும் உல்ஃபா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு இந்த உளவு அமைப்பில் நல்ல செல்வாக்கும் நட்பும் புரிந்துணர்வும் உண்டு. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை மிகுதியாக உள்ள மாநிலங்களையும் பெரு நகரங்களையும் தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஏதேனுமொரு மசூதியை மையமாக வைத்து முஸ்லிம் இளைஞர்களை இழுத்து மூளைச் சலவை செய்து நாசகாரியங்களில் பயன்படுத்தும் பணியை ஆத்மசுத்தியுடன் செய்துவரும் அமைப்பு இது.

2007 ஆகஸ்ட் 26 அன்று ஹைதராபாத் லும்பினி பார்க்கில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல்களும் அங்கே நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதுமான சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தது பங்களாதேஷ் உளவு அமைப்புதான்.

எதற்கு இதெல்லாம்?

நமது உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டிய ஐ.பி., அந்தப் பணியில் பெரும்பாலும் ‘ரா’வின் உதவியைக் கோரியிருக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா போன்ற தேசங்களிலிருந்து நமக்கு வரக்கூடிய அபாயங்களையும் ஆபத்துகளையும் கணித்து, தடுத்து நிறுத்தவேண்டிய ‘ரா’வே சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஐ.பியால் என்ன செய்யமுடியும்?

அதனால்தான் குண்டு வெடிக்கிறது. கராச்சியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் போலக் கப்பலில் வந்து இறங்கி நகரெங்கும் சுட்டுவிட்டுப் போகிறார்கள். நூற்றுக்கணக்கான பலிகளுக்கும் பொருள் இழப்புக்கும் ஆளாகவேண்டி வருகிறது.

மன்மோகன் சிங் நல்லவராக இருப்பதால் பெரிய நன்மைகள் ஏதுமில்லை. அடுத்தடுத்து நடைபெறும் இம்மாதிரியான தீவிரவாதச் செயல்கள் மத்திய அரசின்மீது அழுத்தமான அவநம்பிக்கையையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

நன்றி –பா.ராகவன்  

தீவிரவாதத்தை முறியடிப்பதில் தன்னுடைய அரசுக்கு இருக்கிற மன உறுதியைப் பிரதமர் தெரிவித்துவிட்டார். தீவிரவாதிகளின், ஒவ்வொரு படுபாதகத்திற்குப் பிறகும், செய்ய வேண்டிய சடங்கு அத்துடன் முடிந்தது. தீவிரவாதிகளினால் பலமுறை தாக்கப்பட்டுள்ள பெருமையைக் கொண்ட நமது நாட்டில், அரசு கற்றுக்கொண்ட ஒரே பாடம், “தாக்குதல் நடந்து, பல சடலங்கள் விழுந்த பிறகு – தீவிரவாதத்தை ஒடுக்குகிற உறுதியைத் தெரிவித்து, பிரதமர் பேசிவிட வேண்டும்’ என்பதுதான். “அரசியல் வித்தியாசங்களை மறந்து, எல்லோரும் ஒரே குரலில் பேசி, இந்தக் கொடூரத்தை எதிர்க்க வேண்டும்’ என்ற மந்திரமும் ஓதப்பட்டாகிவிட்டது.

ஊடக விபசாரர்கள் – மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்

பம்பாயில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது ஊடக விபசாரர்களின் கூத்து தாங்க முடியாத அளவிற்கு வக்கிரமாக இருந்தது. இதைப் பற்றி வனமாலி என்பவர் தமிழ்ஹிந்து.காமில் அருமையான பதிவொன்றை எழுதியுள்ளார்.

‘Butch Cassidy and the Sundance Kid’ என்ற பிரபலமான திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் திரைப்படத்தின் நாயகர்கள் இருவரும் ஒரு பாழடைந்த கட்டடத்துக்குள் மாட்டிக் கொள்வார்கள். சிறு திருடர்களான அவர்களை எப்போதும் போலிஸ் துரத்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பித்து விடும் அவர்களை இந்தமுறை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று ஒரு பெரிய பட்டாளமே அந்த கட்டடத்தைச் சுற்றிவளைக்கும். வெளியே ஒவ்வொரு அங்குலத்துக்கும் போலிஸ் நிற்பது தெரியாமல் எப்போதும் போல் தப்பித்துவிடலாம் என்று கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வெளியே வருவார்கள் நாயகர்கள் இருவரும். அந்த ஃப்ரேம் அப்படியே உறைந்துபோய், இன்று உலக சினிமாவின் ஒரு முக்கியக் காட்சியாகப் பதிந்துவிட்டது.

ஆனால் Butch Cassidy-யும், Sundance Kid-உம் பாவப்பட்டவர்கள்! அவர்கள் காலத்தில் கட்டடத்தைச் சுற்றி வெளியே என்ன நடக்கிறது என்று லைவ் அப்டேட் கொடுக்க செய்திச் சேனல்கள் இல்லை. ‘இதோ சூழ்ந்துவிட்டார்கள், இந்த போலிஸ்காரர்கள் இப்போது பின்வாசல் வழியே நுழையலாமா என்று நினைக்கிறார்கள்’ என்றெல்லாம் உயிரைக் கொடுத்துக் கத்த அந்தக் காலத்தில் ஒரு பர்க்கா தத் இல்லை. அந்த கட்டடத்தின் வரைபடமோ, அதனைச் சுற்றி எங்கெங்கு போலிஸ் நிற்கிறார்கள் என்பதைக் குறித்து விளக்கும் ஒரு கிராஃபிக்ஸ் வரைபடமோ இருந்திருக்கவில்லை என்பது இன்னும் துரதிர்ஷ்டவசமான விஷயம்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு போலிஸ், NSG-யின் நடமாட்டம் உடனுக்குடன் செல்ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாதிகளிடம் பத்து இந்திய சிம்கார்டுகள் இருந்தன; அவை புதுதில்லியில் வாங்கப்பட்டு பங்களாதேஷ் வழியாக பாகிஸ்தானுக்குக் கடத்தப் பட்டிருக்கின்றன; தீவிரவாதிகள் வசமிருந்த செல்ஃபோன்களின் பேட்டரி தீர்ந்து போனபோது, தாங்கள் சுட்டுக்கொன்றவர்களிடமிருந்த செல்ஃபோன்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை அத்தனையும் போலிஸிடம் உயிருடன் சிக்கிய ஒரே தீவிரவாதி சொன்ன தகவல்கள்! தீவிரவாதிகளுக்கு இத்தனை தகவல்கள் நம் ஊடகங்களின் உடனடிச் செய்திகளால் கிடைத்ததில் ஒரு கட்டத்தில் அரசே, இந்த ஊடகங்களை சற்று நேரம் அமைதி காக்கும்படி வேண்டிக்கொள்ளுமாறு ஆனது. ஆனாலும் நம் செய்தி ஊடகங்களைப் போர்வீரர்கள் என்றும், பொறுப்பான மகாத்மாக்கள் என்றும் சிலாகித்துக் கட்டுரை எழுதுபவர்கள் இருக்கிறார்கள்!

நாளை இதுபோன்ற புல்லரிப்புக் கட்டுரைகள் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படிக்கும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெறும். ஏன், சென்சேஷலிசப் பத்திரிகைகளில் ஒன்றான ஜூனியர் விகடன், தீவிரவாதிகள் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தங்கள் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப் பட்டும், அதுவும் ஏன், பிடிபட்ட தீவிரவாதியே தான் ஒரு பாகிஸ்தானி என்று வாக்குமூலம் கொடுத்தும், கூசாமல் மும்பையில் தாக்குதல் நடத்தியது இந்துக்கள் எனக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களே இப்படிப் பொறுப்பில்லாமல், விஷமத்தனத்துடன் நடந்து கொள்ளும்போது, உலக ஊடகங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

பிரபலமான பத்திரிகையான ‘டைம்’, முஸ்லிம்கள் இப்படி அடிக்கடி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக் காரணம் இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதலபாதாளமான பொருளாதார வேறுபாடு இருப்பதுதான் என்றும், கடும் வறுமையில் இருக்கும் முஸ்லிம்கள் பயங்கரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள், பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என திட்டமிட்ட பிரச்சாரம் சர்வதேச ஊடகங்களில் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வருகிறது.

இது எவ்வளவு பெரிய பொய் என்று இந்தியாவின் கிராமங்களை ஒருமுறை சுற்றிப்பார்க்கும் எவராலும் சுட்டமுடியும். முஸ்லிம்கள் உண்மையில் தங்கள் சவக்குழியைத் தாங்களே வெட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மிகப் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தித் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். ஆண்களிலும் கல்லூரியைத் தாண்டுபவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். இதற்குப் பொருளாதாரக் காரணங்கள் இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தில், ஏன், உலகப் பொருளாதாரம் இருக்கும் நிலையில், வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதித்துக் குடும்ப வண்டியை இழுப்பது எவ்வளவு சிரமம் என்பது மத்திய தரத்தினருக்கு நன்றாகத் தெரியும். இதில் அடிப்படை வாதத்தால் உந்தப்பட்டுப் பெண்களைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்தபின், வெகு சிரமப்பட்டுக் கல்லூரியை முடிக்கும் இளைஞர்களைக் கொண்டு பொருளாதாரத்தை எப்படி முன்னேற்ற முடியும்? அதே நேரத்தில், பொருளாதார முன்னேற்றத்துக்கு, கல்விக்கு முக்கியத்துவம் அளித்த எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள், பொறியியல், வணிகம், மருத்துவத் துறைகளில் நுழைந்து வெகுசிறப்பான நிலைகளுக்கு வந்திருக்கின்றன.

ஒரு வாதத்துக்காக முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதால் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இந்தியாவில் தாழ்நிலையில் இருக்கும் ஏழை இந்துக்கள் எத்தனை அரசு அலுவலகங்களைத் தகர்த்திருக்க வேண்டும்! பல்லாயிரக் கணக்கான ஏழைத் தமிழர்கள் வாழும் மும்பைச் சேரிகள் இந்நேரம் எத்தனை தீவிரவாதிகளை உருவாக்கியிருக்க வேண்டும்?

இவர்கள் சொல்லும் இன்னொரு வாதம் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளும், ஊக்கமும் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பது. ராமேஸ்வரத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு முஸ்லிம் விஞ்ஞானியை ஜனாதிபதியாக்கிப் பார்த்த நாட்டைப் பார்த்துக் கூசாமல் இவர்களால் எப்படிப் பொய் சொல்ல முடிகிறது? இந்திய தேசம் முழுதும் கொண்டாடும் விளையாட்டான கிரிக்கெட்டில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? இந்திய அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் முஸ்லிம் இளைஞர்தானே! சானியா மிர்ஸாவுக்குத் தொடர்ந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் வருவது இந்திய அரசாங்கத்திடமிருந்தா, இல்லை இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தா?

அபூர்வமாக பதிலுக்கு இந்துக்களிடமிருந்து வன்முறை கிளம்பினால் தேசமெங்கும் கண்டிக்கப்படுகிறது. ‘நான் ஒரு இந்துவாக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன்’ என்ற கூக்குரல்கள் கூட அவ்வப்போது எழும்புகின்றன. நம் பத்திரிகைகளும் மை தீரும் வரை கண்டித்துத் தலையங்கங்கள் எழுதிக்கொண்டே இருக்கும். இது போன்ற அறக்கோபம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களில் நூறில் ஒரு பங்கு கூட, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வெறித்தனத்தின் போது இஸ்லாமிய சமூகங்களிலிருந்தோ, நம் ‘செக்யூலர்’ ஊடகங்களிலிருந்தோ எழுவதில்லை.

ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும் தவறாமல் பாபர் மசூதி இடிப்பையும், குஜராத் கலவரங்களையும் ஒரு சமநிலைக்காக முன்னணியில் வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அப்படியானால் 64 முறை இடிக்கப்பட்ட சோமநாதபுரம் (மற்றும் எண்ணற்ற கோவில்களை) இந்துக்கள் காட்டி நியாயம் கற்பிக்கலாமே. பாமினி புத்தர் சிலைகளைத் தகர்த்ததை பௌத்தர்கள் சுட்டிக் காட்டலாம். இதெல்லாம் வாதமே அல்ல. ஆனாலும், ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் நம் ஊடகங்கள் ஏதாவது ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டேயிருக்கின்றன.

நேற்று ஒரு செய்திச் சேனலில் மும்பை குண்டுவெடிப்பைப் பற்றிய ஒரு தொகுப்பு வெளியானது. அதில் பேசிய ஒருவர் சொன்னது: “BJP உண்மையிலேயே தலைகுனிய வேண்டிய நேரமிது. ஏனென்றால் பாபர் மசூதியை இடித்து இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்ததே அந்தக் கட்சிதான்!” தொழுகைக்குப் பயன்படாத பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியாவில் முஸ்லிம் தாக்குதல்களே நடைபெற்றது கிடையாதா?

இதோ இப்போது மும்பை தாக்குதல்களை நியாயப்படுத்தி, நம் சிறுபத்திரிகைகள் மெல்ல, மெல்லத் தம் ஆஸ்தான எழுத்தாளர்களை வைத்துக் கட்டுரைகள் எழுதிக் குவிக்கும். தவறாமல் அக்கட்டுரைகளில் மோடி, குஜராத், மலேகான் போன்ற வார்த்தைகள் இடம்பெறும். ஒருவேளை இக்கட்டுரைகள் இவர்களைத் துகிலுரித்துக் காட்டிவிடுமோ என்ற அச்சம் இருந்தால், மொத்த குண்டுவெடிப்பையும் மறந்துவிட்டு ஏதாவது மேற்கத்திய எழுத்தாளரின் கதைகளை மொழிபெயர்த்து இப்பத்திரிகைகள் வெளியிடும். இவர்களுக்குத்தான் கட்டமைப்பை விடக் கட்டுடைப்பு அதிகம் பிடித்ததாயிற்றே.

மொத்தத்தில் பொறுப்பில்லாத, கைக்கூலித்தனம் இந்திய ஊடகங்களின் அடையாளமாகிவிட்டது. இருந்திருந்தால், பந்துக்குப் பந்து கிரிக்கெட் விமர்சனம் போல, பயங்கரவாதத் தாக்குதலைக் காண்பித்து விவரித்து, ISI முன்னாள் அதிகாரி ஒருவர் இங்கே செயல்பட்ட வன்முறைக் கும்பலுக்குச் சரியான அழிவுக்கு வழிகாட்ட உதவியிருக்க மாட்டார்கள். இருந்திருந்தால், மத்திய அரசுக் கட்டில் மிக நெடுங்காலமாக உட்கார்ந்திருக்கும் காங்கிரஸ் அரசின் கையாலாகத் தனத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை ‘அரசியல்வாதிகளின் மீதான கோபம்’ என்று திசைதிருப்பிக் காட்ட மாட்டார்கள்.

இனிமேலாவது பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்.

உலக உளவுநிறுவனங்களின் செயல்பாடுகள்

உளவு நிறுவனங்களின் செயல்பாடுகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது.

பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள்.

இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியின் பொழுது இஸ்ரேலிய அத்லட்டிக் வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலின் மொசாட், இதற்கு காரணமானவர்களை உலகின் பல மூலைகளில் இருந்தவர்களை தேடிச் சென்று கொன்று தீர்த்த கதை ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களை விட மிக சுவாரசியமானது. ஆனால் இந் நிகழ்வு உளவு நிறுவனங்களின் கோர முகத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. இதற்கு அந் நாட்டின் பிரதமர் போன்ற தலைவர்களும் ஆதரவு கொடுத்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.

உலகின் அனைத்து உளவு நிறுவனங்களுமே நாசகார செயல்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள். நமக்கு பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தெரியும். காஷ்மீர் தொடங்கி கன்யாகுமரி வரை பாக்கிஸ்தானின் உளவாளிகள் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். காஷ்மீர், பஞ்சாப், அசாம், ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா என்று இவர்கள் இல்லாத இடமே இல்லை. ஆண்கள் மட்டும் தான் உளவாளிகள் என்பது கிடையாது. பெண்களும் உண்டு. உளவாளியாக இருப்பவர்களுக்கு பணம் கொட்டி கொடுக்கப்படும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு சர்வசக்தி படைத்த ஒரு அதிகார மையம். பாக்கிஸ்தானின் அரசுக்கோ, இராணுவத்திற்கோ கூட கட்டுப்படாமல் ஒரு நிழல் அரசாங்கம் போலவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம். தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்க முக்கிய காரணமே ஐ.எஸ்.ஐ தான். அது போல பஞ்சாப், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு தீவிரவாதிகளையும் நுழைத்தது ஐ.எஸ்.ஐ தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் நடக்கும் பல குண்டுவெடிப்புகளுக்கு பிண்ணணியில் இருப்பதும் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் தான். இது தவிர இந்திய இராணுவ இரகசியங்களைப் பெறுவது, தொழில்நுட்பங்களை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து திருடுவது போன்றவையும் இவர்களின் முக்கியமான வேலை.

அது போலவே நம்முடைய இந்திய உளவு அமைப்பான ராவும் பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலும் நுழைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போல ஒரு நிழல் அரசாங்கமாகவோ, சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாகவோ இல்லாமல் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் அதிகபட்ச அதிகாரத்துடனே ரா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரா உளவு அமைப்பை தொடங்கி அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் ராவின் அறிக்கைகளையே பெரும்பாலும் நம்பி இருந்தனர். இராணுவ அதிகாரிகளின் அறிவுரைகளை விட ராவின் அறிவுரைகளையே இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அதிகம் நம்பினர். இதனாலேயே இலங்கை விஷயத்தில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது என இந்தியப் பாதுகாப்பு படையின் பின்னடைவு குறித்து எழுதிய பல இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் – ரா சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இந்தியப் பிரதமர்களின் நம்பிக்கையை பெற்ற அமைப்பாக இருந்திருக்கிறது. தொடர்ந்து அதே நிலையிலேயே இருந்தும் வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் ராவின் பங்களிப்பு முக்கியமானது.

ரா அமைப்பு 1968ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது தொடங்கப்பட்டது. அப்போதைய ஐ.பி – Intelligence Bureau அதிகாரி. ஆர். என். காவ் ரா அமைப்பு தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். Research and Analysis Wing என்பதன் சுருக்கம் தான் RAW. ஆரம்ப காலங்களில் ரா அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய தூதரகங்களில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது பல இடங்களில் அவர்கள் பரவி இருக்கின்றனர். இந்திய மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருப்பது இவ்வாறான உளவு வேலைகளுக்கு வசதியாக இருக்கிறது. இவர்கள் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே உளவு வேலைகளையும் செய்வார்கள். ரா தொடங்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் அண்டை நாடுகளை இந்தியாவிடம் பணிய வைப்பது. இந்தியாவை இப் பிரதேசத்தின் வல்லரசாக, “பிரதேச பெரியண்ணண்” போல உருவாக்குவது தான் ராவின் முக்கிய குறிக்கோள். தெற்காசிய பிரந்தியத்தில் தான் வல்லரசாக வேண்டும், அதற்காக என்றால் பிற நாடுகள் இந்தியாவுடன் அணுசரணையாக இருக்க வேண்டும் என்பதாக இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைந்து இருந்தது.

தெற்காசியாவில் ராவின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ஆரம்ப காலத்தில் பாக்கிஸ்தான், சீனா இவற்றை குறி வைத்து தான் ரா செயல்பட தொடங்கியது. ஆரம்பத்தில் சுமார் 250 பேருடன் தொடங்கப்பட்ட ரா பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. ஒரு கட்டத்தில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட ரா உளவாளிகள் பாக்கிஸ்தானில் இருப்பதாக பாக்கிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது.

ராவின் வெற்றிகளில் முக்கியமானது பங்களாதேஷ் உருவானது தான். கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கிஸ்தானை பிளக்கும் ராவின் நோக்கத்திற்கு சரியான இடமாக இருந்தது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். “முக்தி பாகினி” என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது.

ராவின் மற்றொரு முக்கியமான வெற்றி, சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. 1973ல் சிக்கிம்மில் நடந்த உள்நாட்டு பிரச்சனையை பயன்படுத்தி சிக்கிமை ரா இந்தியாவுடன் இணைய வைத்தது. 1975ம் ஆண்டு, சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.

நேபாளம், பூட்டான், மாலத்தீவு போன்ற அனைத்து தெற்காசிய நாடுகளிலும் ராவின் செயல்பாடுகள் இருந்தது.

ராவின் தோல்விகளில் முக்கியமானது இலங்கை பிரச்சனை தான். ஆரம்ப காலங்களில் புலிகள் மற்றும் பிற போராளி குழுக்களுக்கு பயிற்சி அளித்தது தொடங்கி, இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அனைத்தும் ரா இந்தியப் பிரதமர்களுக்கு அளித்த அறிவுரையின் காரணமாகவே நிகழ்ந்தது.

ரா அமைப்பின் பல நடவடிக்கைகள் ரகசியமானவை. அதிகம் வெளிவருவதில்லை. அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தான் ராவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யுடன் ஒப்பிடும் பொழுது ரா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கிறது. பங்ளாதேஷ் உருவானது, சிக்கிம் விவகாரம், பூட்டான், மாலத்தீவு போன்ற நாடுகளை இந்தியாவின் மாநிலங்கள் போல பல விஷயங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க வைத்தது போன்றவை ராவின் வெற்றிகள். இலங்கையில் ராவின் நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கருணா விவகாரம் கூட இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் ராவின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம்.

ஆனால் பாக்கிஸ்தானால் இந்தியாவில் நாசவேலைகளையும், தீவிரவாதத்தையும் மட்டுமே வளர்க்க முடிந்தது, இந்தியாவை தூண்டாட முடியவில்லை.

பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் மற்றும் பிற உளவு நிறுவனங்கள் அனைத்துமே பிற நாடுகளில் நாச செயல்களை விளைவித்து அந் நாடுகளை சீர்குலைப்பதை முக்கியமான செயலாக செய்திருக்கின்றன. இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: